சில்லுனு ஒரு சுற்றுலா - பதிவர்களுடன் நெல்லியம்பதி - 2

சில்லுனு ஒரு பயணம் தொடர்கிறது....

சென்ற பதிவில் விடுதிக்கு சென்று இரவு உணவிற்கு செல்வது வரை சொன்னேன்.. திரும்பவும் கொஞ்சம் பின்னோக்கி போவோம்..

கொஞ்ச நேரம் சிவக்குமரன் தன் மகனின் சேட்டைகளையும் குழைந்தைகளுக்கே உரிய செயல்பாடுகளையும் விவரித்துக் கொண்டிருந்தார். ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தோம். காரில் பன்பலைவரிசையில் பழய இளையராஜா பாடல் ஒன்றைக் கேட்டதும் என்னைத் தவிர்த்த நால்வருக்கும் உள்ள கவிதை ரசிகர்கள் உறக்கம் கலைத்தனர். ஆளுக்கொரு தகவல்கள் சொல்லி கலக்கினார்கள். அம்மாடி.. எவ்ளோ விவரம் தெரிஞ்சி வச்சிருக்காங்க. குறிப்பாக நாடோடி இலக்கியனுக்கு பாடல்வர்களில் பெரும் புலமை இருக்கிறது. பாடல்களில் சிறந்த வரிகளை எளிமையாக கவிதையாக வாசித்துக் கொண்டிருந்தார். சில புரியாத வார்த்தைகளுக்கு வேலன் அண்ணாச்சியிடம் அர்த்தம் கேட்டுக் கொண்டார்.

பின்னர் வெயிலான், சிவக்குமரன் மற்றும் அண்ணாச்சி ஆகியோர் பல பாடல்களில் இருந்தும் பல மிகச் சிறந்த வரிகளை வாசித்துக் காட்டினார்கள். திரை இசைப் பாடல்களை இசைக்காகவும் மெட்டுகளுக்காகவும் மட்டுமே ரசிக்கும் எனக்கு இவர்களின் பேச்சுகள் எதையோ இழந்ததைப் போன்ற உணர்வைத் தந்தது. என்னால் எந்த வரிகளையும் வாசித்துக் காட்ட முடியவில்லை. எனக்கு பாடல் வரிகள் புரிவதும் இல்லை.. அவற்றைக் கேட்டுக் கொள்ள நான் ஆர்வம் காட்டுவதுமில்லை. இனி வரிகளை கவனிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

கவிதைகளை நாம் வாசிப்பதை விட அதில் ஆர்வம் கொண்ட மற்றவர் வாசித்துக் காட்டும் போது அதன் மீதான ஈர்ப்பும் அந்த கவிதையின் அழகும் அதிகமாகிறது. நாடோடி இலக்கியன் மற்றும் வேலன் அண்ணாச்சி இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நா.முத்துகுமார், வைரமுத்து , வாலி ஆகியோரின் வரிகளை வாசித்துக் காட்டினார்கள். பாடல்களை கேட்ட மாத்திரத்தில் அதை எழுதியவர், பாடியவர்கள், வெளிவந்த ஆண்டு என அனைத்து விவரங்களையும் விரல் இடுக்கில் வைத்திருக்கிறார்கள். சபாஷ்.

இப்போது இரவு உணவுக்கு வருவோம். உணவை விடுதி அறைக்கே கொண்டுவந்து கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் எங்களுக்கு வெளியே அமர்ந்து சாப்பிடுவதிலே விருப்பம் இருந்தது. அதற்கும் அழகாக ஏற்பாடு செய்து தந்தார்கள். அடர் மேக மூட்டங்களுக்கு இடையில் லேசான மழையில் நனைந்துக் கொண்டும் சாப்பிடத் தயாரானோம். சூடான சப்பாத்தியும் ,மீன் குழம்பும் ,சைவக் குருமாவும்( எனக்காக) ,காளிபிளவர் சில்லியும் ,மாமிச வருவலும், நறுக்கிய தக்காளி, வெள்ளரி, வெங்காயத் துண்டுகளும் அந்த நேர குளிருக்கு இதமாக இருந்தது.

எங்களுக்குப் பரிமாறிய அந்த நண்பர் ரித்தேஷுக்கு( இப்போவாச்சும் கரெக்டா சொல்றேனா அண்ணாச்சி?) நன்றி. நாங்கள் கேட்டதை எல்லாம் அழகான புன்னைகையுடன் கொண்டுவந்து கொடுத்தார். முடிந்த அளவு நல்ல தமிழில் பேசினார். சாப்பிட்டுக் கொண்டே கேலியும் கிண்டலுமாய் பேசிக் கொண்டிருந்தோம். பழங்காலத் தமிழுக்கும் தற்காலத் தமிழுக்கும் இருக்கும் இடைவெளி பற்றி கேட்ட போது ஆளாளுக்கு ஒரு விளக்கம் கொடுத்தார்கள். நாடோடி இலக்கியன் அவர் பதிவில் சொன்னது போல் எனக்கு எவர் பதிலிலும் திருப்தி ஏற்படவில்லை. இதற்காக சேர சோழ பாண்டியர்கள் , திருமலை நாயக்கரெல்லாம் வந்து போனார்கள். பின் தன் எழுத்துப் பிழை மற்றும் சந்திப் பிழை பற்றியெல்லாம் நாடோடி வருத்தப் பட அதற்கு தீர்வாய் தன் வலைப்பக்கத்தில் இருக்கும் ஒரு தமிழ் அகராதியை பயன்படுத்திக் கொள்ளும்படி சொன்னார்.

நாடோடி இலக்கியன் பற்றிய சுவாரஸ்யமான தகவல் சொல்வதாக சொல்லி இருந்தேனே.. இவருடைய அண்ணனும் பிரபலப் பதிவர் தான். ஆனால் இவருக்கே சில மாதங்கள் முன்பு தான் தெரியுமாம். அதற்கு முன் வரை தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களைப் போன்றே இவரும் எழுதி வருகிறாரே என்று சக பதிவர் என்ற வகையில் இவரும் கும்மி அடித்திருக்கிறார். பல மாதங்களுக்கு பின் சில மாதங்களுக்கு முன் தான் ஒரு இனிமையான நாளில் அந்தப் பிரபலப் பதிவரிடம் அவரைப் பற்றிக் கேட்க, அவர் தன் அண்ணன் எனத் தெரிய வந்ததாம். பிறகு கும்மியை நிறுத்தி இருக்கிறார்.

இவருக்குக் குடிப் பழக்கம் கிடையாது. என்னை மாதிரியே ரொம்ப நல்லவர். சில நாட்களுக்கு முன் திருப்பூர் வலைப் பதிவர்கள் சந்திப்பில்( ஒன்னா சேர்ந்து டீ குடிச்சாலும் சந்திப்புன்னா, நானும், அண்ணாச்சியும், செல்வேந்திரனும் 125468 முறையாக சமீபத்தில் கூட கிருஷ்ணா மெஸ்ஸில் பெசரட்டு தோசையும் வடகறியும் கம்பங்கூழும் சாப்பிட்டோம்) இவர் தண்ணி அடித்தார் என்பது போல் நம்ம குணச்சித்திரம் பரிசலார் பதிவில் எழுதிவைக்க ... ஆஹா தம்பிக்கே இந்தப் பழக்கம் இருக்கா?.. அப்போ நாமளும் புத்தகத்தை திறந்து பொதுவில் வைத்துவிட வேண்டியது தான் உண்மைக் கதைகளை அண்ணன் பதிவர் எழுதிக் கொண்டிருக்கிறாராம்.சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் மேலும் மழையில் நனைந்தவாறே திண்ணது செறிக்க என்னதென்றே தெரியாமல் எதெதோ பேசிக் கொண்டிருந்தோம். பின் அறைக்கு சென்றோம்.

அறைக்கு சென்றதும் படுக்கையில் பொத்தென விழுந்தேன். உறக்கம் உச்சந்தலைக்கு ஏறியது. மற்றவர்களுக்கு வரவில்லை போலும். அண்ணாச்சியும் சிவக்குமரனும் வெயிலானும் உறக்கத்திற்கு பதில் சீட்டுக் கட்டை துணைக்கு அழைத்துக் கொண்டார்கள். ஆளுக்கு 100 ரூபாய் பந்தயம் கட்டி விளையாட்டைத் துவக்கினார்கள். டிவியில் டாம் & ஜெர்ரியை ரசித்துக் கொண்டிருந்த நாடோடியிடம் நன்றாக எழுத வருமா என்று அந்த மூவர் கும்பலிடமிருந்து ஒரு குரல் வந்தது. மனிதர் ஆர்வமாய் நன்றாக எழுதுவேனே என குதூகலித்தார். அந்தப் பக்கமிருந்து அவசரமாய் ஒரு பதில் “ அப்போ, பாயிண்டு எழுத நீங்க தான் வேண்டும் வாங்க”. நான் அரைத் தூக்கத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். என் மொபைலில் மிச்சமிருந்த சார்ஜ் தீரும்வரை பாடல்கள் கேட்டுக் கொண்டே கச்சேரியை களைகட்டிக் கொண்டிருந்தார்கள். சிவக்குமரன் தோல்வியில் வெளியேறி பின் ரீஜாய்ன் முறையில் இணைந்து வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார் என்பது அவர்களின் தெளிவான பேச்சுகளில் எனக்கு அறைகுறையாகக் கேட்டது. பின்னர் அவர்களும் ஆட்டத்தை முடித்துக் கொண்டார்கள்.அனைவரும் உறங்கிவிட்டோம்... காலைல எழுந்து மற்றவற்றை சொல்கிறேன்.. குட் நைட்..

அடுத்து.. திகில் பயணம் ஆரம்பம்...

வடகரை வேலன்  – (July 20, 2009 10:50 AM)  

சஞ்சய்,

அவரு பேரு ஜித்தேஷ்.

மறுபடியும் தப்பாச் சொல்லாதப்பா.

வெயிலான்  – (July 20, 2009 10:59 AM)  

போட்டுக் குடுத்திட்டியே பரட்டை!

நாடோடி இலக்கியன் உங்களை கொலை வெறியோட தேடிட்டிருக்கார் சஞ்சய்!

மங்களூர் சிவா  – (July 20, 2009 11:19 AM)  

ஒரு போட்டோகூட இல்ல என்னய்யா பயணக்கட்டுரை??

மங்களூர் சிவா  – (July 20, 2009 11:19 AM)  

நாலு போட்டோ போட்டா பாத்துட்டு போயிகிட்டே இருப்பம்ல
:))

கார்த்திக்  – (July 20, 2009 11:45 AM)  

புது வீடு நல்லாவே இருக்கு.
வாழ்துக்கள் தல

சின்ன அம்மிணி  – (July 20, 2009 1:19 PM)  

புது வீடு பளிச்சுன்னு இருக்கு.

முரளிகுமார் பத்மநாபன்  – (July 20, 2009 4:50 PM)  

அடப்பாவிகளா? ஏதோ நாலு போட்டோவையாவது போட்டு வயித்தெறிச்சலை கம்மி பன்ணுங்கப்பா..........உஸ்ஸ்ஸ்ஸ்.
:-)

நாடோடி இலக்கியன்  – (July 20, 2009 9:12 PM)  

//சிவக்குமரன் தோல்வியில் வெளியேறி//
வெயிலான் என்றிருக்க வேண்டும்.

நல்லா போயிட்டிருக்கு,அடுத்தப் பதிவிற்கு வெட்யிடிங்.

ஜோசப் பால்ராஜ்  – (July 21, 2009 8:44 AM)  

எலே இன்னுமா நீ தூங்கி எழுந்திரிக்கல? சீக்கிரம் வந்து சட்டுபுட்டுன்னு சொல்லி. திகில் பயணம் போனப்ப சேத்துல மாட்டிக்கிட்ட ஜீப்பு மாதிரி சும்மா இழு இழுன்னு இழுத்துக்கிட்டேயிருக்க?

மங்களூராரு கேட்கிறாருல்ல. 4 படத்த போடுறது.

ஜோசப் பால்ராஜ்  – (July 21, 2009 8:47 AM)  

ஒழுங்கா சாப்பாடு போட்ட ஒருத்தரு பேர நினைப்பு வைச்சுக்க துப்புல்ல. இவுரு பயணக் கட்டுறை எழுதுறாராம்.

ஜோசப் பால்ராஜ்  – (July 21, 2009 8:50 AM)  

//எனக்கு இவர்களின் பேச்சுகள் எதையோ இழந்ததைப் போன்ற உணர்வைத் தந்தது. என்னால் எந்த வரிகளையும் வாசித்துக் காட்ட முடியவில்லை. எனக்கு பாடல் வரிகள் புரிவதும் இல்லை.. அவற்றைக் கேட்டுக் கொள்ள நான் ஆர்வம் காட்டுவதுமில்லை. இனி வரிகளை கவனிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.//

அறிவாளிங்க பேசிக்கிட்டு இருக்கப்ப எல்லாம் இப்டி உனக்கு ஃபீலிங்ஸ் வர்றது சகஜம் தானே மச்சி. லூசுல விடு.

Mitr - Friend  – (July 21, 2009 3:20 PM)  

@Sanjay,
Done... Appo neenga ennoda innoru blog'ayum follow pannanume... Idhuvum Marketing technique... :D
Eppadiiiii... :P

SanjaiGandhi  – (July 21, 2009 7:38 PM)  

அண்ணாச்சி
அவ்வ்வ்வ்வ்வ்.. மறுபடியும் பல்பா? :(

மஞ்சூர் அண்ணா
நன்றிங்க..

வெயிலான்
ஹிஹி.. எதோ நம்மாள முடிஞ்சது.. :)

நிஜமா நல்லவரே..
ஸ்மைலி மட்டும் இருக்கும் கமெண்டை தடுக்க வழியே இல்லையா? :(

மங்களூராரே
இதெல்லாம் ராத்திரில பேசினது.. அப்போ போட்டோ புடிக்கலை.. ;)

கார்த்திக்
நன்றிங்க எளிக்கியவாதி. ;)

Cable Sankar  – (July 21, 2009 10:08 PM)  

பயண கட்டுரை நன்றாக உள்ளது.. சஞ்செய்..

SanjaiGandhi  – (July 25, 2009 8:35 PM)  

சின்ன அம்மிணி அக்கா நன்றி.. இப்டியே பளிச்சின்னு மெய்ண்டைன் பண்ணிடறேன். :)

நன்றி ரவி மாம்ஸ். :)

முரளி,
ஹிஹி.. அடுத்த பதிவுல பண்ணிடறேன்.. :)

நாடோடி,
மன்னிக்க, நான் அரை தூக்கத்தில் இருந்தேன். அதான் தவறா புரிஞ்சிகிட்டேன் போல.. :(

ஜோசப்,
விரைவில் எழுதிடறேன் மச்சி.. :)

SanjaiGandhi  – (July 25, 2009 8:41 PM)  

Mitr,
அப்டின்னா நீங்க என் ப்ளாக் 2 வாட்டி பாலோ பண்ணனும்.. பரவால்லையா? இதெப்புடீஈஈஈ..:))

நன்றி கேபிளாரே.. :)

திருமதி ஸ்ரீமதி,
என்ன சிரிப்பு.. சின்னப் புள்ளத் தனமா? ? :)

தஞ்சாவூரான்  – (August 8, 2009 9:56 AM)  

//“ அப்போ, பாயிண்டு எழுத நீங்க தான் வேண்டும் வாங்க”.//

அடப் பாவமே :) நாடோடி ஒரு பச்ச மண்ணுப்பா!

தென்னை மர ஜூஸ் குடிச்சீங்களா இல்லையா அத்தச் சொல்லுங்கப்பூ :))

SanjaiGandhi  – (August 8, 2009 4:28 PM)  

நன்றி தஞ்சாவூராரே. நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க.. :)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி  – (July 9, 2010 9:02 PM)  

ஆஹா.. இந்தப் பதிவில எனக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கவில்லை.. வேகமாக அடுத்த பகுதிக்குள் நுழைகிறேன். நெல்லியாம்பதியைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்..

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP