July 18, 2009

சில்லுனு ஒரு சுற்றுலா - பதிவர்களுடன் நெல்லியம்பதி - 1

சில அவசர/தவிர்க்க முடியாத ஆணி புடுங்கல்களுக்காக வெளியே சென்றுவிட்டு வந்து பார்த்தால் வடகரை வேலன் அண்ணாச்சியின் கார் என் வீட்டின் முன் நின்றிருந்தது. நான் வருவதாக சொல்லி இருந்த இடத்திற்கு எனக்கு முன்பே சென்று காத்திருந்திருக்கிறார்கள். வழக்கமாக வண்டியை நிறுத்தும் பேருந்துநிலைய இருசக்கர வாகனம் நிறுத்தும் முதல் தளத்தில் நிறுத்திவிட்டு தமிழ்நாடு ஹோட்டல் முன் சென்றால் ஒருவரையும் காணோம். இம்சை விட்டது என்று எஸ்கேப் ஆகிட்டாங்க போல என்று நினைத்துக் கொண்டே அண்ணாச்சிக்கு போன் பண்ணேன். எடுக்கவே இல்லை. சரி.. நம்மள வச்சி இங்கயே காமெடியா ஆரம்பிச்சிட்டாங்கன்னு புரிஞ்சிடிச்சி. சுத்தி சுத்தி பார்க்கிறேன். எங்கும் அவர்களை காணோம். சில நிமிட தேடலுக்குப் பிறகு தொட்டுவிடும் அருகில் ஒரு காரில் நால்வர் சிரிப்பு விண்ணை முட்டியது.

அண்ணாச்சிக் காராக இருந்தால் கண்டு பிடிச்சி இருப்பேன். இது வேறு ஒருவருடையது. அதனால் தான் கண்டுபிடிக்க முடியலை. இதுக்குப் போய் இப்டியா சிரிப்பாங்க.. ( எப்புடீஈஈ)

நால்வர்: வடகரை வேலன் அண்ணாச்சி, வெயிலான், சிவக்குமரன் மற்றும் நாடோடி இலக்கியன். நாடோடி இலக்கியனை இப்போ தான் முதலில் சந்திக்கிறேன். என்னை வச்சி காமெடி செய்து முடிந்தவுடன் நாடோடி இலக்கியனிடம் நானே அறிமுகப் படுத்திக் கொள்கிறேன். பின்ன.. எவ்ளோ நேரம் தான் அவரும் குத்துமதிப்பாவே என்கிட்ட பேசுவார்? :)
[நாடோடி இலக்கியன் , சிவக்குமரன்]
பிறகு எதோ பேசும் போது சிவக்குமரன் எதோ சொன்னார். அதன் பிறகு ரொம்ப நேரம் அவர் தான் கைப்புள்ள. உக்கடம் தாண்டி கண்ணனில் வெயிலான் பல சரக்குகள் வாங்கிக் கொண்டார். கோவை நகர் எல்லையில் காருக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டோம். அதன் அருகில் இருந்த குன்றின் மீது மேகம் சூழ்ந்திருந்த அழகை ரசித்துக் கொண்டோம்.
[6 மணிக்கு கோவை நகர எல்லையில் கண் கொள்ளாக் காட்சி]
அப்போ நர்சிம் அண்ணாச்சிக்கு போன் பண்ணார். சிறிது நேரம் பேசிவிட்டு போனை என்னிடம் கொடுத்தார். நானும் எதார்த்தமா பேசினேன். பிறகு தான் தெரிந்தது. நர்சிம், நாடோடி இலக்கியனிடம் போனைக் கொடுக்க சொன்னாராம்.

அண்ணாச்சி இந்த தருணத்திற்கு எத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தாரோ.. நர்சிமிடம் பேசப் போய் அவர் எனக்கு ஒரு புது பட்டம் சூட்டியது தான் மிச்சம். எங்கும் அரசியல்.. எதிலும் அரசியல்... ஆளவிடுங்கய்யா சாமிகளா..

பின்னர் பயணம் தொடர்ந்தது. சிறிது நேரம் வலையுலக் அரசியல். சிறிது நேரம் மட்டுமே. பின் வலையுலமே மறக்கப் பட்டது. காரில் பன்பலைவரிசை பாடல்கள் சிலவற்றைக் கேட்டு ரசித்தோம். அடடா.. பாடல் சிடிக்கள் எடுத்து வைத்து மறந்துட்டேனே என்றேன். அண்ணாச்சி அர்த்தத்துடம் முறைத்தார். வழக்கமாக அவர் ”நல்ல” மலையாளப் படங்கள் பார்த்தால் அதை சொல்லி டிவிடி தரேன் பாருடா என்பார். பின்னர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவர் கொண்டுவருவதை ஆவலுடன் பிரித்துப் பார்ப்பேன். அதில் சிவவிலாசின் மசால் போண்டா, நேந்திரம் பழம் பஜ்ஜி , பக்கோடா போன்றவை தான் இருக்கும். அதை மனதில் வைத்து தான் முறைத்தார் போலும். நான் உனக்கு அல்வா குடுத்தா நீ சாப்டாம வச்சிருந்து எனக்கே கொடுக்கறையா என்று நினைத்திருப்பார். :)

இரு வழிப்பாதையில் ஒருவழியாய் கேரள எல்லையில் நுழைந்தோம்.( எத்தனை ழ, ல, ள ). அட அட.. கடவுளின் சொந்த தேசம் என்று அவர்கள் பொய் எதுவும் சொல்வதில்லை போலும். கடவுள் அங்க இருக்காரான்னு கேக்காதிங்க. நாக்கு தல்லேது. இது 4 அலல்து 5வது கேரளப் பயணம் என்றாலும் ஒவ்வொரு முறையும் புதிதாய் வருவது போன்ற உணர்வு. அவ்வளவு பசுமை. அவ்வளவு குளிர்ச்சி. பச்சை விரிப்புகளுக்கிடயே கருப்புக் கோடாய் தான் சாலைகள் தெரிந்தன. கேரளத்தில் வீட்டின் அழகுகள் பிரமிக்க வைக்கின்றன. நம்ம ஊர் மாதிரி தீப்பெட்டி வீடிகளாய் இல்லாமல் நேர்த்தியாய் ரசித்து தனித்தன்மையுடன் கட்டி இருக்கிறார்கள். பெரும்பாலும் தனி வீடுகள் தான். வீட்டைச் சுற்றிலும் ஏராளமான தென்னை மரங்கள் , மலர் செடிகள், காய் கனி மரங்கள் என சொக்க வைக்கும் பேரழகு.

எங்கள் பயணம் முழுதும் பெருநகரங்களைத் தொடாமல் கிராமங்களின் ஊடாகவே சென்றோம். வழியில் குழப்பமான வழித்தடங்களில் கேரளவாசிகளிடம் வழியை விசாரித்துக் கொண்டோம். வெயிலான் அல்லது அண்ணாச்சி தெளிவான(?) மலையாளத்தில் விசாரிப்பதும் அவர்கள் தெளிவான தமிழில் பதில் சொல்வதும் வாடிக்கையாக இருந்தது. குளிருக்கு இதமாக எதாவது சூடாக சாப்பிட வேண்டும் போல் இருந்தது. எங்காவது வழியில் அவ்வாறு கடைகள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டே வந்ததில் ,பாலக்காட்டைத் தாண்டி ஒரு ஊரில் சாலை ஓரத்தில் சூடான பலகாரங்கள் தயாரித்துக் கொண்டிருந்தார் ஒருவர். அங்கே வண்டியை நிறுத்தி பக்கோடா சாப்பிட்டோம். பெப்பர் போட்டு நல்ல சுவையுடன் கொடுத்தார். ரசித்து சாப்பிட்டோம். லேசான மழையும் பெய்துக் கொண்டிருந்தது.

வாழைப்பழம், தண்ணீர் பாட்டில்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு பின்னர் பயணம் தொடர்ந்தது. கும்மிருட்டு ,அடர்கானக வழித்தடம், கொண்டை ஊசி வளைவு மலைப் பாதைகள் என எல்லாம் கலந்துக் கட்டி பயணம் தொடர்ந்தது. வழி எங்கும் அருவிகளின் சத்தம். தாமதமாய் கிளம்பியதர்காக நொந்துக் கொண்டோம். அந்த அழகை எல்லாம் ரசிக்காமலே பயணம் தொடர்ந்தது. ஏற்காட்டில் ஏற்றிக் கொண்டிருந்த... சாரி.. ஏறிக் கொண்டிருந்த கும்கி போன் செய்தார். பரிசலும் உடன் இருக்கிறார் என்று சொன்னதை நம்பும் அளவுக்கு மூச்சு முட்ட.. ச்ச.. மூச்சு வாங்க மலை ஏறிக் கொண்டிருந்தார் போல..

வலது ஓரத்தில் அமர்ந்து வந்த நாடோடி இலக்கியன் திடீரென்று குல தெய்வத்தை எல்லாம் வேண்டிக் கொண்டார். பின்ன, அருவி சத்தம் எல்லாம் அவர் பக்கம் தானே கேட்டுக் கொண்டிருந்தது. மழை பெய்தாலும் மேக மூட்டமும் கடுமையாக இருந்தது. 5 அடி தூரத்திற்கு கூட சரியாக வழி தெரியவில்லை. மலைச் சரிவில் அவருக்கு மண்சரிவு பயம் வந்துவிட்டது. ”இன்னைக்கு சனிக்கிழைமை வேற” அப்டின்னு ஒரு பிட்டப் போட்டார். அடப்பாவி நல்லவரே “ சனிப் பொணம் தனியாப் போகாதுன்னு சொல்வாங்கய்யா” என்றதும், அதுக்குத் தான் அப்டி சொன்னாராம். இதுல என்ன பெரிய கூத்துண்ணா 3 பேர் எதுமே பேசாம வந்தாங்க. அவங்க பயத்துல நடுங்கிட்டே பேசி பயத்தைக் காட்டிக்க விரும்பலையாம். :)

சரி, நாம வாழறதே மத்தவங்களுக்காகத் தானே என்று என் மொபைலில் இருந்து இளையாராஜா பாடல்களை ஒலிபரப்பினேன்( இங்கே இறுதியில் சென்று கேட்கலாம்) . அனைவருக்கும் ரொம்பவே ரசித்தார்கள்/தோம். பின்னர் நெல்லியம்பதியை அடைந்து ஒரு கடையில் சீட்டுக் கட்டுகள் வாங்கிக் கொண்டு சரியாக 9 மணிக்கு விடுதியை அடைந்தோம்.


[பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் வீடு மாதிரி இருக்கா? ]
விடுதியில் நுழைந்து உடைமாற்றிக் கொண்டு சாப்பிடத் தயாரானோம்.. இங்கே பல சுவாரஸ்மான உரையாடல்கள் கேலிகள் கிடல்கள் தொடர்ந்தது.. நாடோடி இலக்கியனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் பயணம் மேலும் சில்லுனு தொடரும்....

(ஒரு வாட்டி எழுதிட்டா என் பதிவை நானே படிக்க மாட்டேன் என்பதால் எழுத்துப் பிழைகளை வழக்கம் போல் பொருத்தருள்க)

26 comments:

Mrunalini said...

Malayalam Figures pathi jasthi ethuvum sollalaye? Thirunthiteengala enna??? Guess u guys had major fun, keep rocking :)

கும்க்கி said...

மெய் ஞானியையும் கல்விக்கடவுளையும் வுட்டுபோட்டு நான் மட்டுந்தான் சிக்கினேனா?

सुREஷ் कुMAர் said...

//
எதோ பேசும் போது சிவக்குமரன் எதோ சொன்னார்
//
நல்லா டீட்டேலா வெளக்குரிங்க..

सुREஷ் कुMAர் said...

//
அதன் அருகில் இருந்த குன்றின் மீது மேகம் சூழ்ந்திருந்த அழகை ரசித்துக் கொண்டோம்.
//
அந்த குன்றுக்கு மிக அருகில்தான் எங்க காலேஜுங்ணோவ்..

மங்களூர் சிவா said...

nice maamaa!

நாடோடி இலக்கியன் said...

அடுத்த பதிவிற்கு வெயிட்டிங்,இறுதி பதிவில் விரிவான பின்னூட்டம்.
டீலிங் ஓக்கேவா?

முரளிகுமார் பத்மநாபன் said...

சஞ்ஜெய் நல்ல பதிவு. அடுத்தபதிவிற்க்கு காத்திருக்கிறேன்

SanjaiGandhi said...

Thanks Mini. மலையாள ஃபிகர்ஸ் பத்தி நான் சொல்லி தெரிஞ்சிக்கிற அளவுக்கா இந்த உலகம் இருக்கு? :)

நான் திருந்திட்டேனோ இல்லையோ.. நீ இன்னும் திருந்தவே இல்லை. என்னடா சான்ஸ் கிடைக்கும் இவனை அசிங்கப் படுத்தலாம்னு காத்துட்டு இருக்க பாரு. பிக்கி.. :))

SanjaiGandhi said...

கும்கி
நீங்க மட்டும் தானே போன் பண்ணிங்க. அந்தப் பாசம் தான். :)

சுரேஷ்
தெரியும் தம்பி. அதைப் பத்தியும் பேசிட்டிருந்தோமே.

மங்களூர் சிவா மாம்ஸ்
நன்றி

நாடோடி இலக்கியன்
என் சோம்பேறித் தனம் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை போலும்.. :)

முரளி
நன்றிங்க.. விரைவில் முயற்சிக்கிறேன்.

கயல்விழி நடனம் said...

Nalla irunkkunga .....

கயல்விழி நடனம் said...

web page nalla irukku...puthu design..and that foto...

SanjaiGandhi said...

நன்றி கயல்விழி.. :)
இன்னைக்கு வேற போடோ மாத்திட்டேன்.. சின்னத்தம்பி பெரியதம்பி போட்டோ. .:)

sundarnb said...

என்னையும் கூட்டி போய் இருக்கலாம்.

தொரத்திவிட்டுதான் போவோம் என திட்டம் போட்டிருக்கீங்க போல. ம்ம். நடக்கட்டும் நடக்கட்டும்.

ராஜா | KVR said...

நண்பர்களுடன் சுற்றுவதே ஒரு அருமையான அனுபவம். நல்லா இருக்கு, பயணத்தைத் தொடருங்க.

வெயிலான் said...

புது தளம்
புது பதிவு
கலக்குறீங்க சஞ்சய்!

தாரணி பிரியா said...

இத்தனை நாள் ப்ளாக் பேரைத்தான் மாத்திகிட்டே இருந்திங்க, இப்போ ப்ளாக்கையே மாத்த ஆரம்பிச்சுட்டிங்களா

தாரணி பிரியா said...

//சுவாரஸ்யமான தகவல்களுடன் பயணம் மேலும் சில்லுனு தொடரும்....//

குறைஞ்சது ஒரு நாலு மாசத்துக்கு அப்புறம் :).

SanjaiGandhi said...

ஆஹா மஞ்சூர் அண்ணா.. அப்டி எல்லாம் எதும் இல்லை.. நீங்க வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.. அடுத்தவாட்டி போகலாம். :)

நன்றி ராஜா.. இரண்டாம் பாகமும் போட்டாச்சி..

நன்றி வெயிலான்..

தாரணி அக்கா..
எல்லாராலும் புதுமையா யோசிச்சி பதிவு போட முடியுது,, உங்களுக்கு தம்பியா இருக்கிறதால என்னால் ப்ளாக் தான் மாத்த முடியுது.. எப்புடீஈஈ... :)

//குறைஞ்சது ஒரு நாலு மாசத்துக்கு அப்புறம் :)//
அய்ய.. அறிவு.. ரெண்டாம் பாகம் வந்தாச்சி.. பாருங்க.

Heam said...

அடடா வடை போச்சே ! ஹ்ம்ம் ., நல்லா என்சாய் பண்ணி இருக்கீங்க ...

ஸ்ரீமதி said...

//(ஒரு வாட்டி எழுதிட்டா என் பதிவை நானே படிக்க மாட்டேன் என்பதால் எழுத்துப் பிழைகளை வழக்கம் போல் பொருத்தருள்க)//

Pisaasu.. :))

வெயிலான் said...

// அண்ணாச்சிக் காராக இருந்தால் கண்டு பிடிச்சி இருப்பேன். இது வேறு ஒருவருடையது. அதனால் தான் கண்டுபிடிக்க முடியலை. //

அண்ணாச்சி ஒரு கார் தான் வச்சிருக்கார். அந்தக் கார் தான் அங்க நின்னுட்டிருந்தது.

காரைக் கண்டுபிடிக்க முடியலனு ஒத்துக்கறத விட்டுட்டு..... வேறு ஒருவருடையதுனு என்ன ஒரு சமாளிப்பு.

அன்புடன் அருணா said...

ம்ம்ம்ம்....சுத்துங்க...சுத்துங்க....

SanjaiGandhi said...

Heam
நன்றிங்க.:) நீங்க தான் “ ஆத்தா வையும் ஊருக்குப் போறேன்னு” கிளம்பிட்டிங்களே.. :)

ஸ்ரீமதி
நன்றி திருமதி.. :)
( நான் உன் அண்ணன்.. நான் பிசாசுன்னா நீ..? :)

வெயிலான்
அது சமாளிப்பு இல்ல.. அரசியல்.. விளக்கம், அண்ணாச்சிகிட்ட கேளுங்க. :)

அருணாக்கா
நன்றிங்க்கா..:)

Ramesh said...

அடுத்த பார்ட் எப்போ வரும் என நான் வெயிடிங்.

SanjaiGandhi said...

2வது பார்ட் வந்து அதுக்கப்புறம் 2 போஸ்ட் வந்தாச்சி ரமேஷ்.. :)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நாங்கள் அங்கு சுற்றுலா செல்ல உள்ளோம்... ஆங்கிலத்தில் அந்த பகுதியைப் பற்றித் தேடி அலுத்து விட்டது.. அப்புறம் தான் யோசித்தேன், நமது தமிழ் பதிவுலகில் இல்லாத தகவலா.. வந்து பார்த்தால் தான் தெரிந்தது.. எத்தனை பேர் இது பற்றி எழுதி இருக்கிறார்கள்.. உங்களது கொஞ்சம் பெரிது. நல்ல உபயோகமான தகவல். உங்களை எப்படி தொடர்பு கொள்வது..? எனக்கு இன்னும் கொஞ்சம் தகவல் தேவைப் படுகிறது.. நன்றி.. successprakash@gmail.com ல் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.. நன்றி..

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget