July 24, 2009

அமெரிக்க ஆதரவு ஊடகங்களின் தில்லுமுல்லுகள்

சன் குழும தலைவர் கலாநிதி மாறனிடம் கேட்டால் ராபர்ட் முர்டோக் தான் தன் குரு என சொல்வார். ஏனெனில் முர்டோக் தான் தன் நாட்டின் அரசியலை தான் நினைத்த படி ஆட்டிவைப்பவர். இங்கே கலாநிதிக்கும் அதே நோக்கம் தானே. இவர்களாவது பரவாயில்லை. தங்கள் நாட்டின் அரசியலில் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனால் அமெரிக்க ஊடகங்களின் அரசியல் ஆதிக்க தில்லுமுல்லுக்ள எல்லைக் கடந்து விரிவடைந்திருக்கின்றன. சமீபத்தில உதாரணம் ஈரான் தேர்தல்.

சமீபத்தில் நடந்த ஈரான் அதிபர் தேர்தலில் முகமது அகமதினிஜாத் மற்றும் ஹுசெய்ன் மவ்சாவி ஆகியோர் போட்டியிட்டனர். அகமதினிஜாத் அமெரிக்காவின் பரம எதிரி. மவ்சாவி அமெரிக்க ஆதரவாளர். வாக்கு எண்ணிக்கை அன்று ஃபேஸ்புக், ட்விட்ட்ர் மற்றும் யூட்யூப் ஆகியவை தங்கள் ஆதரவு வேட்பாளர் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவித்து, பின் அதிகாரப் பூர்வ முடிவுகள் வெளியாக தாமதானவுடன் , முறைகேடுகள் நடப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்திருக்கின்றன. அவைகளை அப்படியே காப்பி அடித்து உலகம் முழுதும் உள்ள அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன்.

பிபிசி
தேர்தல் முடியும் வரை மவ்சாவியின் பேரணி மற்றும் பொதுக்கூட்ட செய்திகளை மட்டுமே ஒளிபரப்பிய பிபிசி அஹமதினிஜாத் செய்திகளை இருட்டடிப்பு செய்திருக்கிறது. இதன் உச்சகட்டமாக, ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற அஹமதினிஜாதின் பேரணி படத்தை மவ்சாவியின் பேரணி என்று தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறது. அதில் அஹமதியின் படத்தை வெட்டிவிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். பின்னர் இதன் முழுமையான படத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வெளியிட்டுவிட, பிபிசி மன்னிப்புக் கேட்டு “ இரண்டு தரப்பும் பேரணி நடத்தினார்கள்” என தலைப்பை மாற்றி இருக்கிறது.


[எல் ஏ டைம்சின் முழுமையான படம்]

இதோட விடாம, ட்விட்டர்ல பொழுதுபோகாம மக்கள் போடற செய்தியை வைத்து மவ்சாவி பேரணிக்கு 3 லட்சம் பேர் கலந்துக் கொண்டதாக எழுதி இருக்கிறது ( இதைத் தான் நம்பத்தகுந்த சோர்ஸ்னு ஊடக மக்கள் சொல்றாங்களோ? ) . அதில் சில ஆயிரம் பேர் மட்டுமே கலந்துக் கொண்டார்களாம்.

சிஎன்என்
ஜூன் 24ஆம் தேதி பாஹரெஸ்தான் சதுக்கத்தில் நடந்த பேரணியின் போது பாதுகாவல் படையினரால் தாக்கப் பட்டு படுகொலைகள் நடந்ததாக சி என் என் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், அதே பேரணியின் விடியோ காட்சிகளை மற்றொரு சேனல் ஒளிபரப்பியதில் ஒரு சிறு தடியடி சம்பவம் கூட நடைபெறவில்லை என்று தெரிந்திருக்கிறது. பின் சி என் என் , அந்த செய்திக்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறது. சி என் என் அந்த செய்தி வெளியிட காரணம் யார் தெரியுமா? ட்விட்டெரில் வெளியான செய்தி. :))

ஈரானைப் பற்றிய செய்திகளை பரப்பிக் கொண்டிருந்தது குறிப்பிட்ட 3 ஐடிகளில் இருந்து தான். அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் ஈரானுக்கு எதிராகவும். அந்த 3 ஐடிகளை பற்றி ஆராய்ந்ததில் அதில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ மற்றும் இஸ்ரேல் உளவு நிறுவங்களுக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. stopahmadi@twitter.com , iranriggedelect@twitter.com, change_for_iran@twitter.com ஆகிய 3 ஐடிக்களில் இருந்து தான் செய்திகள் பரப்பப் பட்டுக் கொண்டிருந்திருக்கின்றன். இந்த மூன்றும் இஸ்ரேலில் இருந்து வெளியாகும் ஜெருசலேம் போஸ்ட் இதழுக்கு சொந்தமானவை. முதலில் இந்த 3 ஐடிகளையும் தங்கள் ப்ளாகில் வெளியிட்டுவிட்டு பின் அம்பலமானதும் அதை அழித்திருக்கிறார்கள். இந்த 3 அடிகளும் ஒரே நாளில் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது.
ட்விட்டர் முகவரிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதை அதன் தலைவர் இவான் வில்லியம்சும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

எப்படி எல்லாம் சித்து வேலை பண்றாய்ங்கய்யா.. அவ்வ்வ்வ்வ்...
இந்த சதி வேலைகள் அனைத்தையும் மீறி அஹமதினிஜாத் வெற்றிபெற்றுவிட்டார். தனக்கு அடங்கிப் போகாத ஒருத்தருக்கு எதிரா அமெரிக்கா சகல தில்லுமுல்லுகளையும் கூச்சமே இல்லாம அறங்கேற்றி இருக்கு. பிபிசி சி என் என் போன்ற செய்தி நிறுவங்களின் மீது உலகம் முழுவதும் பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பிரத்யேக செய்தி என்ற பெயரில் தகவல்களை திரித்து சொல்வதென்பது உலகம் முழுதும் உள்ள செய்தி நிறுவனங்கள் செய்யும் வேலை தான். தமிழில் “ நமது சிறப்பு நிருபர்” என்ற பெயரில் எழுதுவது போல். ஆனால் அனைவரும் கவனிக்கும் அனைவரும் கவர் செய்யும் ஒரு பொதுவான நிகழ்வுகளில் தில்லுமுல்லு செய்வதென்பது அறவே கூச்சமற்ற செயல். பிபிசி வெளியிட்ட புகப் படம் அலல்து அந்த பேரணியின் செய்தி அனைவரிடமும் இருக்கும். அதிலும் தில்லுமுல்லு செய்கிறார்கள் என்றால் அவர்கள் தரும் பிற செய்தியில் என்ன நம்பகத் தன்மை இருக்கும்?.

நன்றி : திசண்டேஇண்டியன் & கூகுள்.

19 comments:

Venky said...

ஒன்னும் புரியல...

Venky said...

ஆனா நான் தான் பர்ஸ்ட்... அது மட்டும் புரியுது...

தமிழ் பிரியன் said...

இது வழக்கமா நடப்பது தான்...:(

உடன்பிறப்பு said...

எல்லாமே மாயை செய்தியும் மாயை தானா

இய‌ற்கை said...

:-) postah padichiten..nambunga:-)

சுபா said...

Neenga solvathu unmaithan Sanjay.

வால்பையன் said...

என்ன இது?

alif said...

தமிழ் பிரியன் said...

இது வழக்கமா நடப்பது தான்...:(
//


ரிப்பீட்டேய்

ஊர்சுற்றி said...

இப்படித்தாங்க... தொழில்நுட்பம் பெருகப் பெருக, செய்திக் குப்பைகள் அதிலும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் அதிகம் பெருத்துவிட்டன. இன்னும் இவை வேண்டுமென்றே செய்யப்பட்டும் வருகின்றன.

நாம் ஊடகங்கள் பற்றி மிக மிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது.

ஜோசப் பால்ராஜ் said...

ஈரான்ல அவங்க பருப்பு வேகல. ஆனா இந்தியால காங்கிரஸ செயிக்க வைச்சுட்டாய்ங்க மாப்பி.

வெண்பூ said...

அட அரசியல்ல இதெல்லாம் ஜகஜம் சஞ்சய்... இதுகூடவா உங்களுக்குத் தெரியாது? :))))))

குசும்பன் said...

மாமா சக்தியை ஒரு முறை பேட்டி எடுத்ததுக்கே நீ இவ்வளோ மாறிபோய் பல தில்லுமுல்லுகளை வெளி உலகத்துக்கு கொண்டு வருகிறாயே, ஏன் நீ வாரம் ஒரு முறை அவரை பேட்டி எடுக்கக்கூடாது!

இதுக்கு பேருதான் பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பதா?

The Rebel said...

The selection of american presidents is in fact a media game played by the super rich.

Watch the documentary Obama deception for more info.(Available on You tube also)

sakthi said...

குசும்பன் said...

மாமா சக்தியை ஒரு முறை பேட்டி எடுத்ததுக்கே நீ இவ்வளோ மாறிபோய் பல தில்லுமுல்லுகளை வெளி உலகத்துக்கு கொண்டு வருகிறாயே, ஏன் நீ வாரம் ஒரு முறை அவரை பேட்டி எடுக்கக்கூடாது!

இதுக்கு பேருதான் பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பதா?

appadiya sanjai anna

தாரணி பிரியா said...

விருது வாங்க வாங்க.
http://tharanipriyacbe.blogspot.com/2009/07/blog-post_26.html

Mitr - Friend said...

Hey Sanjai,
Hope u like my blog. Pls vote for me at this link. It requires signing up with your mail id. Hope u'll vote for me. Thanks in advance.. :)

கும்க்கி said...

ஜோசப் பால்ராஜ் said...

ஈரான்ல அவங்க பருப்பு வேகல. ஆனா இந்தியால காங்கிரஸ செயிக்க வைச்சுட்டாய்ங்க......

நம்ம கருத்தும் அதானுங்கோவ்.

SanjaiGandhi said...

நன்றி வெங்கி அண்ணா.. :)

தமிழ்பிரியன்,
அப்படித்தான் போல.. என்ன கொடுமை இது?

நன்றி உடன்பிறப்பு.

இயற்கை
நம்பறேன்.. நீங்க நல்லவஙக தான். :)

நன்றி சுபா

வால்பையன்
உடன்பிறப்பு சொன்னமாதிரி.. இதுவும் மாயை.. ;)

SanjaiGandhi said...

நன்றி அலிஃப்

நன்றி ஊர் சுற்றி

ஜோசப்
அப்டியா மச்சி? அமெரிக்கா அவ்ளோ நல்ல நாடா? இந்தியர்கள் நலன் பார்த்து ஜெயிக்க வச்சிருக்காங்க போல. அப்போ நாங்க போட்ட ஓட்டுகளால காங்கிரஸ் ஜெயிக்கலையா?

நன்றி வெண்பூ
தெரியும்ம்ம்ம்.. ஆனா தெரியாது... :)

நன்றி குசும்பா..
ஹிஹி.. :)

நன்றி ரெபல்.
அவங்க நாட்ல என்ன கர்மம வேணாலும் பண்ணட்டும். அடுத்த நாட்ல ஏன் என்பது தான் கேள்வி.

நன்றி சக்தி மாமி.. :)

ரொம்ப நன்றி தாரணி அக்கா

Mitr - வோட்டு போட்டாச்சிங்க. வாழ்த்துகள்.

கும்கி,
அமெரிக்கா அவ்ளோ நல்ல நாடா? :))

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget