Join Youth Congress


இரண்டு கோடி இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வரும் நோக்கத்துடன் , காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தியின் தலைமையிலும் முன்னாள் தேர்தல் ஆணையர்கள் சிலரின் வழிகாட்டுதலிலும் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையும் தேர்தலும் நடைபெறுகிறது. அரசியலை இளைஞர் மயமாக்குவதே இதன் நோக்கம். 18 முதல் 35 வயதிற்குள் இருக்கும் யார் வேண்டுமானாலும் இளைஞர் காங்கிரஸில் இணையலாம்.

குஜராத், பஞ்சாப், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பே பஞ்சாபில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற்று முடிந்ததால், அங்கே மாநில தலைவர் மற்றும் துணைத்தலைவராக வெற்றிபெற்றவர்களுக்கு பாராளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இது தான் இளைஞர் காங்கிரசின் நோக்கமும். முதியோர் இல்லம் என அழைக்கப் படும் இந்திய பாராளுமன்றத்தை இளைஞர்கள் நிரம்பிய பல்கலைக் கழகமாக மாற்றுவது தான் நோக்கம்.

தற்போது தமிழகத்தில் இளைஞர் காங்கிரசிற்கான உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெறுகிறது. நவம்பரில் தேர்தல் நடக்கும். அரசியலை சாக்கடை என்று சொல்லி எத்தனைக் காலத்துக்கு ஒதுங்கியே இருப்போம்? வாருங்கள் சாக்கடையை சுத்தம் செய்வோம். இணையுங்கள் இளைஞர் காங்கிரசில்.

தேர்தல் நடைபெறும் முறை:

  • உறுப்பினர்கள் வாக்களித்து பஞ்சாயத்துக்களுக்கான 5 நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள். ஒரு உறுப்பினருக்கு ஒரு வாக்கு மட்டுமே. இதில் பொறுப்பு/பதவிகளுக்கு போட்டியிடுபவர்களில் அதிக வாக்கு பெற்றவர் தலைவராகவும் அதற்கடுத்த வாக்குகள் பெறுபவர் துணைத்தலைவராகவும் மற்ற மூவர் செயலர்களாகவும் இருப்பார்கள்.
  • பஞ்சாயத்து நிலையில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒவ்வொருவருக்கும் 2 வாக்குகள் அளிக்கும் உரிமை உண்டு. இவர்கள் வாக்களித்து சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். சட்டமன்ற தொகுதிக்கு 10 நிர்வாகிகளும் 10 செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். பஞ்சாயத்து நிலையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் நிர்வாகிக்கு ஒரு வாக்கும் செயற்குழு உறுப்பினருக்கு ஒரு வாக்கும் அளிக்க வேண்டும். இதில் அதிக வாக்குகள் பெறுபவர் தலைவர். அடுத்தவர் துணைத் தலைவர். அடுத்தடுத்த எண்ணிக்கை பெறுபவர்கள் பொதுச்செயலாளர்கள் மற்றும் செயலாளர்களாக சேர்வு செய்யப் படுவார்கள். பொதுச்செயலாளர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. ஒரு பிற்படுத்த்ப் பட்ட வகுப்பை சேர்ந்தவர், ஒரு பெண், ஒரு தாழ்த்தப்ப்பட வகுப்பைச் சேர்ந்தவர் மற்றும் சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர்.
  • சட்டமன்ற தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு 4 வாக்குகள் அளிக்க உரிமை உண்டு. ஒரு வாக்கு மாவட்ட நிர்வாகிக்கு, 2வது மாவட்ட செயற்குழு உறுப்பினருக்கு, 3வது மாநில நிர்வாகிக்கு, 4வது மாநில செயற்குழு உறுப்பினருக்கு. இதிலும் அதே இட ஒதுக்கீடு முறை தான். வாக்கு எண்ணிக்கை அடிப்படையிலேயே நிர்வாகிகள் தேர்வு.
இளைஞர் காங்கிரசில் சேரத் தகுதிகள்,
வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எந்தக் குற்றப் பின்னணியும் இருக்கக் கூடாது.
வயது மற்றும் இருப்பிட சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். மேலும்..

தவறான தகவல்களுடன் சேர்ந்து, அது கண்டுபிடிக்கப் பட்டால், 7 ஆண்டுகள் வரை கட்சியிலிருந்து நீக்கப் படுவார்கள்.

இளைஞர் காங்கிரசில் இணைய விருப்பம் உள்ளவர்கள் இந்தப் படிவத்தை நிரப்பி உங்கள் பகுதி தேர்தல் பொறுப்பாளரிடம் அளித்துவிடுங்கள். அவர்களுக்கு தொலைபேசினால் கூட போதும். வீடு தேடி வந்து படிவம் வாங்கிச் செல்வார்கள். தமிழகம் மொத்தம் 5 மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டு 5 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களுக்கு கீழ் பாராளுமன்றத் தொகுதிகளுக்கு தனி பொறுப்பாளர்கள். அனைவரும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

வாருங்கள் .. அரசியலை மாற்றுவோம்... மேலும் விவரங்களுக்கு : sanjaigandhi@msn.com க்கு மெயில் அனுப்புங்க.

முழு விவரங்களுக்கு: http://iyc.in
தமிழக தேர்தல் விவரங்களுக்கு :
http://iyc.in/sns/pg/pages/view/67343/


For any concerns/queries regarding membership, please contact the IYC help desk -

mail : support@iyc.in

phone : 1860 425 4357

Our six drivers of Transformation



ஜோசப் பால்ராஜ்  – (August 27, 2009 7:40 PM)  

குட் வொர்க் மாப்பி.
ராகுலாச்சும் மாற்றத்த கொண்டு வரட்டும்.

ஆயில்யன்  – (August 27, 2009 7:45 PM)  

ஜாயின் யூத் காங்கிரஸ்!
ஜாயின் யூத் காங்கிரஸ்!
ஜாயின் யூத் காங்கிரஸ்!


என்று கூவிக்கொண்டே நான் கும்மி காங்கிரஸ்ல சேர்ந்துக்கிடலாமா பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :))

இய‌ற்கை  – (August 27, 2009 7:54 PM)  

:-)ஒரு பிரதமர் வேட்பாளரின் பதிவில் இன்னொரு பிரதமர் வேட்பாளரின் கமெண்ட்...:‍))))) நல்லது...இதுவே ஒரு மாற்றம் தான்:-)))))))))

ஆயில்யன்  – (August 27, 2009 7:55 PM)  

அண்ணன் சஞ்சய் ஆலோசனையின் படி தம்பி ராகுல் வழி நடப்போம்! வலிமையான பாரதம்
வளமான தமிழகம்!

ஆயில்யன்  – (August 27, 2009 7:56 PM)  

//இய‌ற்கை said...

:-)ஒரு பிரதமர் வேட்பாளரின் பதிவில் இன்னொரு பிரதமர் வேட்பாளரின் கமெண்ட்...:‍))))) நல்லது...இதுவே ஒரு மாற்றம் தான்:-)))))))))//

ஐ திங்க் இவுங்க பிஜேபி போல இருக்கு! நம்ம கூட்டத்துல பிட்டை போட்டு சண்டைக்கு சான்ஸ் கொடுக்க வந்திருக்காங்க பாஸ்!!!

gnani  – (August 27, 2009 8:05 PM)  

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

இய‌ற்கை  – (August 27, 2009 8:06 PM)  

ஐயா சாமி..ஆயில்யரே.. நான் கலாய்கரவங்கள கலாய்க்க சப்போர்ட் பண்ணுவீருன்னு பார்த்தா..இப்பிடி என்னை வம்புல மாட்டிவிடப் பாக்குறீரே..இது நியாயமா..

வருங்கால பிரதமர்களே.. கொஞ்சம் என்னான்னு கேளுங்க‌:-)))

ஜோசப் பால்ராஜ்  – (August 27, 2009 8:11 PM)  

// இய‌ற்கை said...
:-)ஒரு பிரதமர் வேட்பாளரின் பதிவில் இன்னொரு பிரதமர் வேட்பாளரின் கமெண்ட்...:‍))))) நல்லது...இதுவே ஒரு மாற்றம் தான்:-))))))))) //

மன்னிக்கவும் இயற்கை.

எதிர்கட்சி தலைவருக்கான வேட்பாளரோட பதிவுல பிரதமர் வேட்பாளர் பின்னூட்டம் போட்டுருக்காரு- அப்டின்னு தான் நீங்க சொல்லனும்.
2013ல ஒரே ஒரு பிரதமர் வேட்பாளர் தான்.

ஆயில்யன்  – (August 27, 2009 8:16 PM)  

//குறை ஒன்றும் இல்லை !!! said...

May I come in????//

யூத் காங்கிரஸ்க்கா

அது வயசு மினிமம் 30க்குமேல இருக்கணும் அதன் அடிப்படையான கண்டிஷன் - இதுக்கு ஒ.கேன்னா வாங்க !

ஆயில்யன்  – (August 27, 2009 8:17 PM)  

// ஜோசப் பால்ராஜ் said...

// இய‌ற்கை said...
:-)ஒரு பிரதமர் வேட்பாளரின் பதிவில் இன்னொரு பிரதமர் வேட்பாளரின் கமெண்ட்...:‍))))) நல்லது...இதுவே ஒரு மாற்றம் தான்:-))))))))) //

மன்னிக்கவும் இயற்கை.

எதிர்கட்சி தலைவருக்கான வேட்பாளரோட பதிவுல பிரதமர் வேட்பாளர் பின்னூட்டம் போட்டுருக்காரு- அப்டின்னு தான் நீங்க சொல்லனும்.
2013ல ஒரே ஒரு பிரதமர் வேட்பாளர் தான்.//

பிரதமர் பிரதமர் அப்படிங்கறாங்களே அது எந்த காலேஜ்ல விக்கிறாங்க எனக்கு ஒண்ணு வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!

குறை ஒன்றும் இல்லை !!!  – (August 27, 2009 8:19 PM)  

ஏங்க .. இது எல்லா கோஷ்டிக்குமா இல்லே ஒவ்வொரு கோஷ்டிக்கும் தனித்தனி விண்ணப்பம் வாங்கனுமா??

ஆயில்யன்  – (August 27, 2009 8:21 PM)  

//குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏங்க .. இது எல்லா கோஷ்டிக்குமா இல்லே ஒவ்வொரு கோஷ்டிக்கும் தனித்தனி விண்ணப்பம் வாங்கனுமா??/

குட் கொஸ்டீன் பை தி ஸேம் டைம் நீங்க எண்ட்ரீ போடறதுக்கு முந்தியே இம்புட்டு கொஸ்டீன் போட்டா அப்புறம் நீங்க எண்ட்ரீ லெவல்லயே ஒரு கோஷ்டியோடத்தானே வருவீக போல இருக்கே!

குறை ஒன்றும் இல்லை !!!  – (August 27, 2009 8:24 PM)  

//இரண்டு கோடி இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வரும் நோக்கத்துடன்///

ஹா ஹா ஹா.. ஏங்க ஆசை படலாம் ஆனா இது பேராசை....

நிஜமா நல்லவன்  – (August 27, 2009 8:24 PM)  

/ஆயில்யன் said...

ஜாயின் யூத் காங்கிரஸ்!
ஜாயின் யூத் காங்கிரஸ்!
ஜாயின் யூத் காங்கிரஸ்!


என்று கூவிக்கொண்டே நான் கும்மி காங்கிரஸ்ல சேர்ந்துக்கிடலாமா பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :))/

பாஸ்....கும்மி காங்கிரஸ்ல எனக்கும் ஏதாவது பதவி கிடைக்குமா????

இய‌ற்கை  – (August 27, 2009 8:26 PM)  

காங்கிரஸ கிண்டல்பண்ணி சஞ்சய் பிளாக்லயே கமெண்ட் போடறீங்களா? ரெண்டு பேருக்கும் என்ன ஒரு தைரியம்..சஞ்செய் வர்ரதுக்குள்ள ஓடிப்போயிடுங்க..... இல்லன்னா.......??!!!!*%$@#@$

குறை ஒன்றும் இல்லை !!!  – (August 27, 2009 8:27 PM)  

கவுண்டர் : வர வர இந்த நாட்டில இளைஞர்கள் தொல்ல தாங்கலப்பா... பல்லு போனவன் , பாடையில போரவன் எல்லாம் இளைஞனாம்!!!

நிஜமா நல்லவன்  – (August 27, 2009 8:28 PM)  

/ இய‌ற்கை said...

:-)ஒரு பிரதமர் வேட்பாளரின் பதிவில் இன்னொரு பிரதமர் வேட்பாளரின் கமெண்ட்...:‍))))) நல்லது...இதுவே ஒரு மாற்றம் தான்:-)))))))))/


அட...இதை ஒரு வருங்கால பிரசிடன்ட் சொல்லுறாங்களே....குட்....குட்...:)

ஆயில்யன்  – (August 27, 2009 8:29 PM)  

/இய‌ற்கை said...

காங்கிரஸ கிண்டல்பண்ணி சஞ்சய் பிளாக்லயே கமெண்ட் போடறீங்களா? ரெண்டு பேருக்கும் என்ன ஒரு தைரியம்..சஞ்செய் வர்ரதுக்குள்ள ஓடிப்போயிடுங்க..... இல்லன்னா.......??!!!!*%$@#@$///

சஞ்சய் ஓடி வர்றதுக்குள்ள அப்படின்னு எழுதாத உங்களின் நுண்ணரசியல் எம்மை வெகுவாக ரசிக்க வைத்தது! :))

ஆயில்யன்  – (August 27, 2009 8:29 PM)  

/இய‌ற்கை said...

காங்கிரஸ கிண்டல்பண்ணி சஞ்சய் பிளாக்லயே கமெண்ட் போடறீங்களா? ரெண்டு பேருக்கும் என்ன ஒரு தைரியம்..சஞ்செய் வர்ரதுக்குள்ள ஓடிப்போயிடுங்க..... இல்லன்னா.......??!!!!*%$@#@$///

சஞ்சய் ஓடி வர்றதுக்குள்ள அப்படின்னு எழுதாத உங்களின் நுண்ணரசியல் எம்மை வெகுவாக ரசிக்க வைத்தது! :))

நிஜமா நல்லவன்  – (August 27, 2009 8:29 PM)  

/ஆயில்யன் said...

அண்ணன் சஞ்சய் ஆலோசனையின் படி தம்பி ராகுல் வழி நடப்போம்! வலிமையான பாரதம்
வளமான தமிழகம்!/


அண்ணே...உனக்கு இம்புட்டு குசும்பு ஆகாதுண்ணே....:))

நிஜமா நல்லவன்  – (August 27, 2009 8:30 PM)  

ஞானி இங்கயும் வந்துட்டாரா??????

ஆயில்யன்  – (August 27, 2009 8:31 PM)  

//நிஜமா நல்லவன் said...

/ இய‌ற்கை said...

:-)ஒரு பிரதமர் வேட்பாளரின் பதிவில் இன்னொரு பிரதமர் வேட்பாளரின் கமெண்ட்...:‍))))) நல்லது...இதுவே ஒரு மாற்றம் தான்:-)))))))))/


அட...இதை ஒரு வருங்கால பிரசிடன்ட் சொல்லுறாங்களே....குட்....குட்...:)//

ஒழுங்கா சொல்லுய்யா பிரசிடெண்டா பிரின்சிபாலா - என்ன மன்னாரு & கம்பெனியா பிரசிடெண்டாகறதுக்கு பிரின்சியா வேணும்னா ஆகலாம் ! :)

குறை ஒன்றும் இல்லை !!!  – (August 27, 2009 8:31 PM)  

அண்ணே அறிக்கையில ஒரு வரி விட்டு போச்சு..


மேற்கண்ட அனைத்தும் கற்பனையே.. யார் மனதையும் குசிபடுத்த அல்லன்னு!!!

நிஜமா நல்லவன்  – (August 27, 2009 8:31 PM)  

/இய‌ற்கை said...

ஐயா சாமி..ஆயில்யரே.. நான் கலாய்கரவங்கள கலாய்க்க சப்போர்ட் பண்ணுவீருன்னு பார்த்தா..இப்பிடி என்னை வம்புல மாட்டிவிடப் பாக்குறீரே..இது நியாயமா..

வருங்கால பிரதமர்களே.. கொஞ்சம் என்னான்னு கேளுங்க‌:-)))/


க்கும்...அரசியல் தெரியாத ஆளா இருக்கீங்களே.....பிரதமர்கள் என்னைக்கு வாய் திறந்து கேட்டு இருக்காங்க:))))))

ஆயில்யன்  – (August 27, 2009 8:32 PM)  

//குறை ஒன்றும் இல்லை !!! said...

அண்ணே அறிக்கையில ஒரு வரி விட்டு போச்சு..


மேற்கண்ட அனைத்தும் கற்பனையே.. யார் மனதையும் குசிபடுத்த அல்லன்னு!!!//


அட ஏங்க அறிக்கையில போட சொல்லுறீங்க அதெல்லாம் வேணாம் யூத் காங்கிரஸே ஒரு கற்பனையிலதான் போய்க்கிட்டிருக்கு!!!

இய‌ற்கை  – (August 27, 2009 8:34 PM)  

நிஜமா நல்லவன் said...

//இய‌ற்கை said...

ஐயா சாமி..ஆயில்யரே.. நான் கலாய்கரவங்கள கலாய்க்க சப்போர்ட் பண்ணுவீருன்னு பார்த்தா..இப்பிடி என்னை வம்புல மாட்டிவிடப் பாக்குறீரே..இது நியாயமா..

வருங்கால பிரதமர்களே.. கொஞ்சம் என்னான்னு கேளுங்க‌:-)))/


க்கும்...அரசியல் தெரியாத ஆளா இருக்கீங்களே.....பிரதமர்கள் என்னைக்கு வாய் திறந்து கேட்டு இருக்காங்க:))))))//


நல்லவரே....
இவங்க வருங்கால பிரதமர்கள்.. கேள்வி கேப்பாங்கன்னு நம்பறேன்

நிஜமா நல்லவன்  – (August 27, 2009 8:34 PM)  

/ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...

/ இய‌ற்கை said...

:-)ஒரு பிரதமர் வேட்பாளரின் பதிவில் இன்னொரு பிரதமர் வேட்பாளரின் கமெண்ட்...:‍))))) நல்லது...இதுவே ஒரு மாற்றம் தான்:-)))))))))/


அட...இதை ஒரு வருங்கால பிரசிடன்ட் சொல்லுறாங்களே....குட்....குட்...:)//

ஒழுங்கா சொல்லுய்யா பிரசிடெண்டா பிரின்சிபாலா - என்ன மன்னாரு & கம்பெனியா பிரசிடெண்டாகறதுக்கு பிரின்சியா வேணும்னா ஆகலாம் ! :)/

கம்பெனி ரகசியத்தை சொன்னது தப்பா போச்சே....:))

நிஜமா நல்லவன்  – (August 27, 2009 8:35 PM)  

/ ஆயில்யன் said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...

அண்ணே அறிக்கையில ஒரு வரி விட்டு போச்சு..


மேற்கண்ட அனைத்தும் கற்பனையே.. யார் மனதையும் குசிபடுத்த அல்லன்னு!!!//


அட ஏங்க அறிக்கையில போட சொல்லுறீங்க அதெல்லாம் வேணாம் யூத் காங்கிரஸே ஒரு கற்பனையிலதான் போய்க்கிட்டிருக்கு!!!/


யோவ்...ஆயிலு....சஞ்சய் போட்டோ பார்த்திட்டு இந்த கமென்ட் போட்டீங்களா:))))

நிஜமா நல்லவன்  – (August 27, 2009 8:37 PM)  

/ஆயில்யன் said...

/இய‌ற்கை said...

காங்கிரஸ கிண்டல்பண்ணி சஞ்சய் பிளாக்லயே கமெண்ட் போடறீங்களா? ரெண்டு பேருக்கும் என்ன ஒரு தைரியம்..சஞ்செய் வர்ரதுக்குள்ள ஓடிப்போயிடுங்க..... இல்லன்னா.......??!!!!*%$@#@$///

சஞ்சய் ஓடி வர்றதுக்குள்ள அப்படின்னு எழுதாத உங்களின் நுண்ணரசியல் எம்மை வெகுவாக ரசிக்க வைத்தது! :))/


ஹா...ஹா...ஹா....ரிப்பீட்டேய்...

நிஜமா நல்லவன்  – (August 27, 2009 8:38 PM)  

/இய‌ற்கை said...

நிஜமா நல்லவன் said...

//இய‌ற்கை said...

ஐயா சாமி..ஆயில்யரே.. நான் கலாய்கரவங்கள கலாய்க்க சப்போர்ட் பண்ணுவீருன்னு பார்த்தா..இப்பிடி என்னை வம்புல மாட்டிவிடப் பாக்குறீரே..இது நியாயமா..

வருங்கால பிரதமர்களே.. கொஞ்சம் என்னான்னு கேளுங்க‌:-)))/


க்கும்...அரசியல் தெரியாத ஆளா இருக்கீங்களே.....பிரதமர்கள் என்னைக்கு வாய் திறந்து கேட்டு இருக்காங்க:))))))//


நல்லவரே....
இவங்க வருங்கால பிரதமர்கள்.. கேள்வி கேப்பாங்கன்னு நம்பறேன்/

ஆனாலும் உங்க அசாத்திய நம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு:)

அபி அப்பா  – (August 27, 2009 8:39 PM)  

அய்யா சாமீ எங்க கட்சில இளைஞர் திமுக வுக்கு வயது நிர்னயம் 100!!!!! உங்க கட்சில ரொம்ப கம்மியா இருக்கேப்பா சஞ்சய்! கொஞ்சம் 60 வயதுன்னாவது உயர்த்த கூடாதா?????????????

அத்திவெட்டி ஜோதிபாரதி  – (August 27, 2009 8:41 PM)  

:)))

விசை வந்தா சேர்த்துகிட்டு பதவி கொடுங்க...

அவர் பாண்ட் போடுவார்...!

ஓகே தான்...!

SanjaiGandhi  – (August 27, 2009 8:41 PM)  

மிஸ்டர். குறை. இரண்டு கோடி என்பது இந்தியா முழுதும். தமிழகம் மட்டுமில்லை. நீங்கள் முடியாது என்று சொல்லிக் கொண்டே வேடிக்கை பாருங்க. நாங்க செய்து காட்றோம்.மேலும் பல்லு போனவர்களுக்கு இடமே இல்லை. 18 முதல் 35 வயது வரை இருப்பவர்கள் மட்டுமே இதில் சேர முடியும். உங்கள் மற்ற கருத்துகளுக்கும் நன்றிகள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி  – (August 27, 2009 8:42 PM)  

மிஸ்டர். குறை. இரண்டு கோடி என்பது இந்தியா முழுதும். தமிழகம் மட்டுமில்லை. நீங்கள் முடியாது என்று சொல்லிக் கொண்டே வேடிக்கை பாருங்க. நாங்க செய்து காட்றோம்.மேலும் பல்லு போனவர்களுக்கு இடமே இல்லை. 18 முதல் 35 வயது வரை இருப்பவர்கள் மட்டுமே இதில் சேர முடியும். உங்கள் மற்ற கருத்துகளுக்கும் நன்றிகள்.//

அப்ப உங்களூக்கு இடம் கிடைக்காதா?

குறை ஒன்றும் இல்லை !!!  – (August 27, 2009 8:43 PM)  

நிஜமா நல்லவன் Said
//பாஸ்....கும்மி காங்கிரஸ்ல எனக்கும் ஏதாவது பதவி கிடைக்குமா????//

பேர் தாங்க காங்கிரஸ் ஆனா எல்லாம் கம்யூனிசம் தான்..இங்கே எல்லாரும் தலைவர் தான்... அதனால நீங்க தைரியமா வரலாம்..

குறை ஒன்றும் இல்லை !!!  – (August 27, 2009 8:45 PM)  

//ஜோசப் பால்ராஜ் said...
குட் வொர்க் மாப்பி.
ராகுலாச்சும் மாற்றத்த கொண்டு வரட்டும்.//

அப்போ இன்னும் 1,9999998 பேர் தான் வேணும்!!

SanjaiGandhi  – (August 27, 2009 8:47 PM)  

அவ்வ்வ்வ்வ்வ்வ்.. ஜோதி சார் .. யூ டூ? :))

நிஜமா நல்லவன்  – (August 27, 2009 8:47 PM)  

/அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மிஸ்டர். குறை. இரண்டு கோடி என்பது இந்தியா முழுதும். தமிழகம் மட்டுமில்லை. நீங்கள் முடியாது என்று சொல்லிக் கொண்டே வேடிக்கை பாருங்க. நாங்க செய்து காட்றோம்.மேலும் பல்லு போனவர்களுக்கு இடமே இல்லை. 18 முதல் 35 வயது வரை இருப்பவர்கள் மட்டுமே இதில் சேர முடியும். உங்கள் மற்ற கருத்துகளுக்கும் நன்றிகள்.//

அப்ப உங்களூக்கு இடம் கிடைக்காதா?/


ஹா...ஹா...ஹா...

நிஜமா நல்லவன்  – (August 27, 2009 8:50 PM)  

பின்னூட்ட லிங்க் மட்டுமே கொடுத்திட்டு போன ஒருத்தரை தேடிட்டு இருக்கேன்....ஆளையே காணும்:))

குறை ஒன்றும் இல்லை !!!  – (August 27, 2009 8:53 PM)  

// நிஜமா நல்லவன் said...

பின்னூட்ட லிங்க் மட்டுமே கொடுத்திட்டு போன ஒருத்தரை தேடிட்டு இருக்கேன்....ஆளையே காணும்:))//

இந்த பூனையும் பால் குடிக்ககுமான்னு பால் குடிக்க போயாச்ச்சு!!

குடுகுடுப்பை  – (August 27, 2009 9:00 PM)  

எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்துக்கு தேவை என்பதால் நான் கு.ஜ்.மு.க விலேயே இருக்கிறேன்.

தாரணி பிரியா  – (August 28, 2009 9:30 AM)  

நல்ல முயற்சி வெற்றி பெறட்டும். வெளியில இருந்து குறை சொல்லிக்கிட்டு இருக்காம நமக்கான மாற்றங்களை நாமே ஆரம்பிக்கலாம்

தமிழ் பிரியன்  – (August 28, 2009 11:59 AM)  

நல்ல முயற்சி! அரசியலில் இளைஞர்களுக்கு, சம்பிரதாய முறையில் இல்லாமல் ஆக்கபூர்வமான முறையில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் இந்தியா நிச்சயம் ஒளிரும்.

SanjaiGandhi  – (August 29, 2009 2:57 PM)  

நன்றி ஜோசப்.. நிச்சயம் ராகுல் மாற்றத்தை உண்டாக்குவார்.

நன்றி ஆயில்ஸ்.. திருப்தியா கும்மியாச்சா பெரிய அண்ணா. :)

இயற்கை.. ஒடம்பு எப்டி இருக்கு? :)

ஞாநி சார் எல்லாப் பதிவுகளுக்குமா இந்தப் பின்னூட்டம்? ;)

நன்றிங்க மெய்யாலுமே நல்லவரே..

அபியப்பா.. நன்றி..
ஸ்டாலின் காங்கிரஸ்ல சேரப் போறாரா என்ன? எதுக்கு வயச உயர்த்தனும்? :)

SanjaiGandhi  – (August 29, 2009 3:01 PM)  

நன்றி ஜோதி சார்.. விசை வரதுக்கு டவுட்டு தான்.. அதெல்லாம் மதில்மேல் பூனை கும்பல்.. :)

நன்றி குடுகுடுப்பை..
கடைசி வரை எதிர்கட்சி தான் போல.. :)

நன்றி தாரணி அக்கா

நன்றி தமிழ்பிரியன்

என்னாச்சி மங்களூராரே? முத்தாலிக்கிடம் இருந்து உங்களை நாங்க தான் காப்பாத்தனும்.. மனசுல இருக்கட்டும். :)

மங்களூர் சிவா  – (August 29, 2009 3:07 PM)  

/

என்னாச்சி மங்களூராரே? முத்தாலிக்கிடம் இருந்து உங்களை நாங்க தான் காப்பாத்தனும்.. மனசுல இருக்கட்டும். :)
/

முத்தாலிக் சார்பா கோயமுத்தூர் பார்ல வெச்சி உன்னைய நாலு சாத்து சாத்தினாதான் அடங்குவியா மாமா??

வந்துகிட்டே இருக்கேன் :))

SanjaiGandhi  – (August 31, 2009 9:47 PM)  

முத்தாலிக் தமிழ்நாட்டுப் ப்க்கம் வந்தாலே கை கால் எடுத்துடுவோம். அவனை வச்சி என்னை அடிக்கிறிங்களா? :))

மங்களூர் சிவா  – (August 31, 2009 9:53 PM)  

மாமா காங்கிரஸ் தேசிய கட்சிதானே கர்னாடகால வெச்சி எடுங்களேன் பாப்போம்.

ஆனாலும் ஓவரா ஜவுண்டு குடுக்குறய்யா! அரசியல்வாதி ஆகணும்னா தேவைதான் இதெல்லாம் :)))))

உண்மைத் தமிழன்(15270788164745573644)  – (September 3, 2009 1:11 PM)  

அதுதான் ஒட்டு மொத்தமா விஜய் ரசிகர்கள் உள்ள வரப் போறாங்களாம்ல.. அப்புறம் எதுக்கு ஆள் தேடுறீங்க..?

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP