கந்த கந்த கந்த கந்த நொந்தசாமி
விக்ரம் படம் எல்லாம் நல்லாவே இருக்காது என்பதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. விஜய் படங்கள் மட்டும் தான் நல்லா இருக்கும். வேணும்னா எங்க க்ளாஸ் பசங்க கிட்ட வந்து கேட்டுப் பாருங்க என்றான் என் சின்னத் தம்பி ஆதி. முதல் பாதி ஓகெ. இரண்டாவது பாதியை சொன்னதுக்காகவே உன்னையும் தூக்கிட்டுப் போறேண்டா என வம்படியாக கந்தசாமி பார்க்க முடிவு செய்தோம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பதிவர் நண்பர் ஹீம்@சதிஷ் போன் பண்ணார். விஷயத்தை சொன்னேன். அய்யய்யோ போகாதிங்க என்றார். என்னய்யா இது.. எதோ சுனாமி எச்சரிக்கையைவிட பலமா இருக்குதேன்னு நெனைச்சி மாமா, சித்தப்பா, தம்பி கிட்ட எல்லாம் சொன்னேன். அதெல்லாம் முடியாது, போகனும்னு முடிவு பண்ணியாச்சில்ல. போறோம்னான் என் ஒடன் பொறப்பு. அகராதிப் புடிச்ச பயலுகளா இருக்காய்ங்களேன்னு கிளம்பியாச்சி.
ஓபனிங் சீனே படத்தின் ரேஞ்ச் என்ன என்பதை புரிய வைத்துவிட்டது. விட்றா.. விட்றா சூனா பானான்னு மனச தேத்தியாச்சி. நாலு வரி டயலாக் பேசறாங்க. பாட்டு வருது. அடுத்த கொஞ்ச நேரம் பேசிக்கிறாங்க. பாட்டு வருது. அடுத்து இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கிறாங்க. பாட்டு வருது. இப்படியே மாத்தி மாத்தி அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாட்டும் வசனமும் போட்டு மூன்ற மணி நேரம் படத்தை ஓட்டினாங்க. இதுல எதோ சேட்டிலைட் டெக்னாலஜியாம்.. ஸ்ட்ரெய்ட்டா மெட்ராஸ்ல இருந்து தியேட்டருக்கு கனெக்ஷனாம்.. நேரடி ஒளிபரப்பாம். பக்கத்துல பொதுஜனம் பேசிக்கிச்சி. டேய் எங்க ஊர் தியேட்டர்( சினிமா கொட்டகை தான் சரி) எல்லாம் அவ்ளோ வொர்த் இல்லைடான்னு சொல்ல கவுரவம் ஒத்துக்கலை.
விக்ரம் ஒரு சிபிஐ ஆபிசர். கந்தசாமி கோயில்ல மக்கள் ஒரு சீட்ல தங்களோட கஷ்டங்களை எல்லாம் பேப்பர்ல எழுதி ஒரு மரத்துல கட்டிவிட்டுப் போறாங்க. அதை கொண்டுவந்து அதுல இருக்கிற குறைகளுக்கேத்த மாதிரி பண முடிப்புகளை அவங்களுக்கு கந்தசாமி வேஷத்துல விக்ரம் அண்ட் கோ கொடுக்கிறாங்க. இந்தப் பணத்தை எல்லாம் பெரும் பணக்காரர்களிடம் கொள்ளை அடிக்கிறாங்க. இதுக்கு விக்ரம் பின்னாடி பெரிய டீமே செயல்படுது. சண்டைக் காட்சிகளில் இவர்கள் அபத்தம் தாங்கலை. லாஜிக் மெய்ண்டெய்ன் பண்றாங்களாமாம். இந்த நண்பர்கள் குழு எல்லாம் ஒரு காலத்துல ஒண்ணா படிச்சவங்களாம். எல்லாரும் நாடகம் போடறதுல எக்ஸ்பர்ட்டுங்களாம். அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி தான் கந்தசாமி ட்ராமா பண்றாங்களாம். ரைட்டு இருக்கட்டும். இவர்கள் அனைவருக்கும் தலைவர் சிபிஐ உயரதிகாரி.
ரமணாவும் அந்நியனும் கலந்துகட்டி அடிச்சிருக்காங்க. கடைசியா கோர்ட் விக்ரமுக்கு தண்டனை கொடுக்கும். எப்டின்னா, இவர் இனி தமிழ்நாட்ல வேலை பார்க்காம வேற மாநிலத்துல வேலை செய்யனும்னு. ராஜஸ்தானுக்கு மாற்றலாகிப் போய்டுவார். அங்க ஒரு கோயிலுக்குப் போவார். அங்கயும் ஒரு மரத்துல மக்கள் குறைகளை எழுதி கட்டி இருப்பாங்க. அதுல ஒரு பேப்பரைப் படித்து மடித்து பாக்கெட்டில் போட்டுக் கொள்வார். அங்க ’கந்து’சாமி அவதாரம் எடுப்பார் போல. இதெல்லாம் நாங்க அந்நியன்லயே பார்த்துட்டோம் தண்ணியக் குடி தண்ணியக் குடின்னு நம்மளப் பார்த்தே சொல்லிக்க வேண்டி இருக்கு.
வடிவேலுகிட்ட கைநீட்டி சம்பளம் கொடுத்த பாவத்துக்காக ரெண்டு சீன்ல காட்றாங்க. வழக்கம் போல அடிவாங்கறார். பிரபு இவரை ரொம்ப சீரியசா விஜாரிக்கிறதெல்லாம் டூ மச்.. அதாவது ரொம்ப அதிகம்.. டைரடக்கர் தான் காப்பி அடிக்கிறார்னா இவருமா?. ஒருத்தர் மேல ஏறி உட்கார்ந்துட்டு அவரை அடிக்கப் பார்ப்பார். கீழ இருக்கிறவர் எங்கயோ ஏடாகூடமா பிடிச்சிப்பார். உடனே வடிவேலு அலறுவார். இந்தக் கர்மத்தை தான் முன்னாடியே “ ஒரு ஆம்பள இன்னொரு ஆம்ப்ளைய டச்சு பண்ணலாம்.. டிச்சுப் பண்ணப் படாது”ன்னு ஒரு படத்துல காமெடி( அப்டியா?) பண்ணி இருப்பார்.
இதுல தேவி சிரி பிரசாத் தன் பங்குக்கு எவ்ளோ காப்பி அடிச்சார்னு வடகரைவேலன் அண்ணாச்சி வூட்டுக்கு போன் பண்ணி என் சின்ன அக்கா கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கனும். காப்பி அடிக்கிறவங்கள கண்டுபிடிக்கிறதுல அவங்க தான் எக்ஸ்பர்ட்.
ஐயா சுசி கணேசன் அவர்களே,
படத்துல எதோ மெசேஜ் சொல்றிங்கன்னு தெரியுது. ஆனா அது என்னன்னு தான் மிகச் சரியா புரிஞ்சித் தொலைய மாட்டேங்குது. காசு வீணாக்காம புள்ளகுட்டிங்களை அல்லது கிராமங்களை தத்தெடுங்கன்னு சொல்ல வரீங்கன்னு நெனைக்கிறேன். சரிதானுங்களே. ஏஞ்சாமி ஊருக்கு மட்டுமே உபதேசம் பண்றதுக்கு தான் அரசியல் இருக்கே. எதுக்கு சினிமாவுக்கு வந்தீய?. 20 லட்சம் குடுத்து ஒருத்தன் கையை வெட்ட சொல்றது பணத்திமிர் தான். அதுக்கு பதில் 200 குழந்தைகளை படிக்க வைக்கலாம் என்பதும் சரி தான். ஒரு பொண்ணுக் கூட ஒருநாள் கூத்தடிக்க 30 லட்சம் செலவு பண்றதும் அதே பணக் கொழுப்பு தான். இதை எல்லாம் விக்ரமை வைச்சி பச்சத் தண்ணிப் பல்லுல படவிடாம வேர்க்க விறுவிறுக்க வசனம் பேச வைக்கிறதும் சரிதானுங்க.
அதிக பட்சம் 3 கோடி ரூவாய்ல எடுக்க வேண்டிய படத்தை 50 கோடி(70 கோடின்னும் சொல்றாங்க) ரூவாய் செலவழிச்சி எடுத்திங்களாமே. 47 கோடி வச்சி எத்தனை ஆயிரம் குழந்தைகள் எத்தனை கிராமங்களை தத்தெடுத்திருக்கலாம்?
ஒரு பாட்டுல ஸ்ரேயா போடறதுக்கு ( கவனமாகப் படிக்கவும் ) 15 லட்ச ரூவாய்க்கு துணி தெச்சிக் குடுத்திங்களாமே( அது தச்சி குடுத்ததா பிச்சிக் குடுத்ததா). பத்தாயிரம் ரூபாய்ல தெச்சிருந்தாலே மொத்த ஒடம்பையும் மூடற அளவுக்கு இருந்திருக்குமே. 15 லட்சம் செலவழிச்சும் பாதி தானே மூட முடிஞ்சி இருக்கு. ஊர்ல எம்புட்டோ பேரு மானத்தை காப்பாத்திக்கவே துணி போட முடியாம கஷ்டப் படும் போது இந்த புள்ளைக்கு பாதியை மறைக்கவே 15 லட்சம் செலவு தேவையா? அதை வச்சி ஒரு 150 குழந்தைகளை படிக்க வச்சிருக்கலாம் இல்லையா?
இது ஒரு மெசேஜ்( இப்டி தானே சொல்வீங்க) சொல்ற படம் தானே. இதுக்கு எதுக்கு பாட்டு. அட போட்டதும் போட்டிங்க. இவ்ளோ பாட்டுத் தேவையா? ஒரு பாட்டு முடிஞ்சி அடுத்த சீன் வரும் போது முந்தைய சீன் மறந்துப் போய்டுது. ( அதுக்கு ஸ்ரேயா தான் காரணம்னு நீங்களா புரிஞ்சிகிட்டா நான் என்ன செய்றது? ) . அவ்ளோ குறைந்த இடைவெளிகள்ல பாட்டு போட்டுக் கொல்றிங்க. இதுக்கு ஒலகம் பூரா சுத்தி சுத்தி படம் புடிச்சி இருக்கிங்க. இந்த வகைல சில பல கோடிகள் வீண். இதை வச்சி எவ்ளோ பேரை தத்தெடுத்திருக்கலாம்?
இப்போலாம் புதுப் பசங்க நடிக்கிற படங்கள் தான் சக்கைப் போடு போடுது. இதுமாதிரி கருத்து கந்தசாமி படத்துக்கு பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமா? இந்த பந்தம் எல்லாம் கொளுத்திக்கக் கூடாதா? புதுசா யாரையாச்சும் நடிக்க வச்சிருக்கலாம்.முதல்வன் படம் ரஜினி நடிக்காம அர்ஜுன் நடிச்சும் ஹிட்டாச்சிங்க்ணா. விக்ரமுக்கு 5, 6 கோடியாச்சும் குடுத்திருப்பிங்க.
இப்டி படத்துக்கு/துல நீங்க பண்ணி இருக்கும் வெட்டி செலவே பல கோடிகள். இதுக்கு என்னப் பேரு? பணக் கொழுப்பா? இல்லை ..பக்கத்து வீட்டுக்காரன் நெய்யே.. என் பொண்டாட்டிக் கைய்யே என்று பூந்து விளையாடினிங்களா?. அடுத்தவன் காசுதானே.. உங்களுக்கென்ன?. நஷ்டம் வந்து சமாளிக்க முடியாம போச்சினா அவங்க தானே தற்கொலை பண்ணி சாவப் போறாங்க.
சமுதாயத்துல தொழிலதிபர்கள் மட்டும் தான் இப்டி அநியாயமா சம்பாதிச்சி , செலவு செஞ்சி, வெளிநாட்ல பணத்தை பதுக்கறாங்களா?அதிக பட்சம் 60 நாள் கால்சீட்டுக்கு கோடிகோடியா ( 25 கோடி வரைக்கும் கூட) வாங்கற நடிகனும், பாட்டுக்கு மட்டும் வந்து பாதி துணில குத்தாட்டம் போட்டு பல லட்சங்கள் முதல் சில கோடிகள் வரை வாங்கும் நடிகையும் புனித பிம்பங்களா? அது ஏன் எந்த சினிமாவுலையும் இந்த கும்பலைக் கண்டுக்கறதே இல்ல?
கொய்யாலே.. கேக்கறவன் கேணப் பயலா இருந்தா கருணாநிதியும் ஜெயலலிதாவும் குட் ஃப்ரண்ட்ஸ்னு சொல்விங்க போல இருக்கே. சத்தமே இல்லாம தங்களோட மாத வருமானத்தை வச்சி முடிஞ்ச அளவு சேவை செய்ற நடுத்தர வர்க்கத்தை பத்தி யாராச்சும் எடுத்து சொல்லி இருக்கிங்களா?.. மெசேஜ் சொல்றாங்களாமா மெசேஜ்.
வெளிய வரும்போது படத்தோட டைட்டில் சாங் கேட்டுச்சி.. நொந்த நொந்த நொந்த நொந்த நொந்தசாமி....
:)
வெசம் குடிக்காதீங்கன்னு சொன்னத சூனா பானா கணக்கா குடிச்சுப்புட்டு வந்து குத்துதே கொடையுதேன்னா முதல்ல தூக்குங்கப்பா! :))
/இரண்டாவது பாதியை சொன்னதுக்காகவே உன்னையும் தூக்கிட்டுப் போறேண்டா என வம்படியாக கந்தசாமி பார்க்க முடிவு செய்தோம்./
படம் நல்லா இருக்காதுன்னு தெரிஞ்சும் ஸ்ரேயாவ பார்க்கிறதுக்காக படத்துக்கு போயிட்டு பழியை தூக்கி உங்க தம்பி மேல போட்டுட்டீங்களே:))))
இதிலை இன்னொரு கொடுமை இந்தப் படம் குழந்தைகளுக்கான படமாம் விக்ரம் சன் டிவியில் பேட்டியில் கூறுகின்றார். ஸ்ரேயாவும் முமைத் கானும் அவிழ்த்துப்போட்டு ஆடுவதுதான் குழந்தைகளுக்கான படம் என்ற புதிய கண்டுபிடித்த விக்ரம், சுசி கணேசன், தாணு கோஷ்டியை என்ன செய்வது?
சஞ்சேய் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தைச் சும்மா விட்டுவிட்டீர்கள் அவரையும் கிழிகிழி என கிழிச்சிருக்கவேண்டும் ஒரே ப்ரேம் கூட உருப்படியாக இல்லை. இதற்க்குள் உலகத்தரத்திலான ஒளிப்பதிவு என பீட்டர் விடுகின்றார்கள்.
செம நக்கலான விமர்சனம்.. ப்ளாக்ல நண்பர்கள் விமர்சனம் எழுதுறதப் பத்தி இந்த இடுகையைப் படிங்க நண்பா..
http://rajkanss.blogspot.com/2009/08/blog-post_28.html
போடுங்க.. போட்டு தாக்குங்க..
உங்க பங்குக்கு இது கூட செய்யலைன்னா எப்ப்பூடி??? ;-)
வாங்குன காசுக்கு கொஞ்சமாவது கூவணும்ல. ;-)
//.:: மை ஃபிரண்ட் ::. said...
போடுங்க.. போட்டு தாக்குங்க..
உங்க பங்குக்கு இது கூட செய்யலைன்னா எப்ப்பூடி??? ;-)
வாங்குன காசுக்கு கொஞ்சமாவது கூவணும்ல. ;-)//
மைடியர் தங்காச்சி.. இந்த பதிவுக்கும் , விஜய்( நம்ம விஜய் இல்லை.. நடிகர் விஜய்:) ) காங்கிரஸ்ல சேரப் போறதா சொல்றதுக்கும் சம்பந்தம் இல்லை.. :)
கலக்கலான விமர்சனம்
ஆனால் பாவம் தயாரிப்பாளர்
உங்கள் விமர்சனங்களால் பாதிக்ககூடும்
எனவே ரொம்ப திட்டாதீங்க சஞ்சய்
அண்ணா
ஏண்ணே!! விஜய் காங்கிரஸில சேர போறாராமே? இனிமே வில்லு தூளு!! குருவி தேனருவி!!! அப்படீன்னு மருபடி விமர்சனத்த மாத்திடுங்க!!
hee hee hee.... Sanjai.... This is the best Film Review I've ever read... Amazing da....
My Travelogue, Thozhi-Mitr-Friend, Savoir-Faire
கிழி கிழின்னு கிழுச்சுட்டிங்க..
சேதாரம் அதிகமோ..??!!
நன்றி ஸ்மைலியாரே :)
ஆமாம் ஆயில்யன். கேட்காம போனது தப்பு தான்னு சொல்ல மாட்டேன்.. அதான் நெறைய பாட்டு இருந்துச்சில்ல.. அதுல ஸ்ரேயா ஆடினாங்க இல்ல.. ;))
நிஜம்ஸ்.. பப்ளிக்.. பப்ளிக்.. ;))
சிரியா படத்த போடறக்கு முன்னாடி நம்ம விக்கி கையில கேட்டியளா?
ஏன்னா காப்பி ரைட் அங்க இருக்கு!
=)).. lol.. appaadaa.. ungala mathiri nallavanga periyavanga irukka poyee.. naama thappichchom.. ! appeettu.. ! kandasamikkum nondasamikkum! =))
;-) உங்களுக்கு நான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கேன் பாஸ்
உங்க விமர்சனம் டைட்டில்+விமர்சனம் படிக்கும் போதே தெரியுது நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப நொந்து போயிருக்கிங்கன்னு.
தமிழ் சினிமாவின் எழுதபடாத விதி எந்த படத்துக்கு அதிக செலவும்+விமர்சனமும் வருதோ அப்போவே நாம புரிஞ்சிக்க வேண்டியது படம் டப்பான்னு..
ஏதோ உங்க புண்ணியத்துல நான் தப்பித்துவிட்டேன் அதனால் உங்களுக்கு ஒரு சல்யூட் சகோதரரே!!
நல்லா கிழிக்கிறாங்கடா சாமி கந்த கந்தலா.:))
என்ன சொல்வதென்றே தெரியலை சஞ்சூ.
மனம் மகிழ்ச்சியில் மிதக்கிறது.
இதே போல வாரம் ஒரு அய்ந்தாறு படங்களை அதுவும் சுத்த டமில் படங்களை பார்க்க கடவீராக.
வேலில போகிற ஓணான் பழமொழிதான் நினைவிற்க்கு வருகிறது.
(கொசுறு-- ஜூனியர் தொல்லை தாங்க முடியாமல் இப்போது காதில் வைக்க பஞ்சு சகிதம் நொந்தசாமிக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறோம்)
=)) ஐயா சாமி... படம் பார்த்தா என்னதான் சொல்லுறீங்கன்னு புரிஞ்சுக்கலாம்னு நெட்ல சுட்டு வச்ச படத்த அரை மணி நேரத்ல பார்த்தேன்... இப்போதான் புரியுது... ரொம்ப நியாயமான கேள்விங்னா..!
படக்குழு ரெண்டு கிராமம் தத்தெடுத்திருக்காங்களாம்ல (எம்பூட்டு பெரிய சொல்லு..).. ஆனாலும் நீங்க சொல்ற செலவு எல்லாம் கம்மி பண்ணி இன்னும் கொஞ்சம் கிராமம் தத்து எடுத்து இருக்கலாம்தான்..! எனக்கென்னமோ.. படம் எடுக்கிற மாதிரி எடுத்து... தத்தும் எடுத்து... கொள்ளை அடிக்க இப்டியும் ஒரு வழின்னு symbolic-ஆ சொல்றாங்களோன்னு தோணுறது..!
அடப் பாவிங்களா.. தயாரிப்பாளர வில்லன் ஆக்கிட்டாங்களே..!
/இதெல்லாம் நாங்க அந்நியன்லயே பார்த்துட்டோம் தண்ணியக் குடி தண்ணியக் குடின்னு நம்மளப் பார்த்தே சொல்லிக்க வேண்டி இருக்கு.//
அதென்னாங்க தண்ணியக் குடி தண்ணியக்குடின்னு சொல்லிக்கிட்டது. விளங்காமலே பேச்சிரிப்பு சிரிச்சாச்சி. கொஞ்சம் விளங்கிக்கலாம்னு.
//என் சின்னத் தம்பி ஆதி. //
என்னது, தங்கமணி தாமிரா ஆதிமூலகிருஷ்ணன் உங்களுக்கு சின்னத்தம்பியா, அப்ப பெரிய தம்பி பரிசலா :)
:))))))))))))))))))
படம் பார்த்து நொந்தசாமியாகிட்டேன் சஞ்சூ.
அதுசரி தொழிலதிபர்களை போட்டு இப்படி வாட்டி வதைக்கியிருக்க வேண்டாம்.
ஜாக்கிச்சா படத்தை ஸ்பீடுமோஷனில் பாத்தா மாதிரியிருந்தது.
அது சரி...
நம்ம அக்கவுண்டும் மெக்ஸிக்கோவிலா இருக்கு?
சொன்ன பேச்ச கேட்டாதானே?? :@
சஞ்சய் என் ப்ளாக்கில் தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..டெம்ப்ளேட் நானே மாத்தணும்னு நினைச்சுட்டு இருந்தேன்..இப்போ மாத்திட்டேன்..
என் ப்ளாக்கில் உங்களின் வருகைக்கு நன்றி அடிக்கடி வாங்க..
அன்புடன்,
அம்மு.
ஐயோ நியாபகபடுத்திட்டீன்களே...விக்ரம் படம்னு என் கணவரை நச்சரித்து கூட்டிப்போக சொன்னால் மூணரை மணி நேரம் கொன்னுட்டாங்க..வீட்டுக்கு வருவதற்கு முன் முதுவளியை தான் பரிசாக கொடுக்கிறார்கள்..கொடும..கொடும..கொடும..
அன்புடன்,
அம்மு.
கந்தசாமி படத்துக்கு எதிப்பாக இவ்வளவு கமெண்டுகளா?
என் கருத்துப்படி கந்தசாமி படம் சூப்பர்..
கிளைமாக்ஸ் சப்பென முடிந்ததாக நினைக்கிறேன்.
நீங்களாம் மூன்றாம் தலைமுறை திரைப்படங்களை ரசிக்குமளவுக்கு வளரல...
100 ரூபா தரேன் ஆர்லிக்ஸ், போர்ன்வீட்டானு வாங்கி சாப்பிட்டு வளர பாருங்க...
வந்தியத்தேவன்,
படத்தின் ஆரம்பக் காட்சிகளே அனைத்தையும் சொல்லிவிட்டது. நீங்கள் சொல்லி இருக்கும் அனைத்தும் சரிதான். தொப்புள்களும் தொடைகளும் காட்டுவது தான் குழந்தைகள் படம் போல. :) நல்லா சொல்றாங்கய்யா விளக்கம். அந்த ஒளிப்பதிவாளர் பேட்டியை நானும் டிவில் பார்த்தேன். அண்டப் புளுகு ஆகாசப் புளுகு.
கார்த்திகைப் பாண்டியன்,
நன்றி. விரைவில் அந்த பதிவைப் படிக்கிறேன்.
குறை,
இனியும் இன்னும் அதிகம் விமர்சிப்பேன். ஆனால் அவர் சேர மாட்டார். அரசியல் விஷயத்தில் அவர் இரண்டாம் ரஜினி. :)
Mitr
மிக்க நன்றி மேடம். என்ன இருந்தாலும் உங்க பயணப் பதிவுகள் மாதிரி வருமா குருவே?. :)
பட்டிக்காட்டான்,
நன்றிங்க. 3.30 மணி நேரம் வீட்ல நல்லா தூங்கி இருக்கலாம். :)
ஜோதிசார்,
விக்கி சின்ன பையன்னு தானே நினைச்சேன். அப்டி இல்லையா? :)
லகலகப்ரியா,
ஆஹா.. மிஸ் ஆய்டிச்சே.. அபப்டியும் அரைமணி நேரம் பார்த்தது மிக்க சந்தோஷம். :)) வேட்டைக்காரன் முதல்காட்சிப் பார்க்க கடவதாக. :))
கானாபிரபா,
ப்ரியாவுக்கு விட்ட சாபமே உங்களுக்கும். :))
மேனகா,
ஆமாம் சகோதரி. ரொம்ப நொந்தசாமி ஆய்ட்டேன்.
//தமிழ் சினிமாவின் எழுதபடாத விதி எந்த படத்துக்கு அதிக செலவும்+விமர்சனமும் வருதோ அப்போவே நாம புரிஞ்சிக்க வேண்டியது படம் டப்பான்னு..//
இதென்னவோ நிஜம் தான். இப்போல்லாம் இப்டி தான் நடக்குது. ந்
நீங்களும் வேட்டைக்காரன் 2 முறை பார்க்கவும். :)
வானம்பாடிகள் நன்றி. :)
கும்கி,
உங்கள் ஜூனியருக்கு என் நன்றிகளை தெரிவிக்கவும். இதுல என்ன ஆச்சர்யம்னா, இந்தப் படத்துக்கு வரவே மாட்டேன்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல வரேன்னு சொன்ன என் சின்ன தம்பி ஆதிக்கு இந்த படம் புடிச்சிப் போச்சி. :))
வானம்பாடிகள்,
//அதென்னாங்க தண்ணியக் குடி தண்ணியக்குடின்னு சொல்லிக்கிட்டது. விளங்காமலே பேச்சிரிப்பு சிரிச்சாச்சி. கொஞ்சம் விளங்கிக்கலாம்னு.//
அது ஒன்னுமில்லீங்க. ஒரு படத்துல விவேக் அப்பாவா நடிக்கிறவர் எதோ டயலாக் விட, அதுக்கு விவேக் அவர் அப்பா நடிகரைப் பார்த்து இந்த மாதிரி சொல்வார்.:)
சின்ன அம்மிணி அக்கா
ஆதிமூலக்கிருஷ்ணன் என் அங்கிள். பரிசல் என் சின்ன தாத்தா. :)
மங்களூராரே,
இன்னா சிரிப்பு?
கும்கி,
//அது சரி...
நம்ம அக்கவுண்டும் மெக்ஸிக்கோவிலா இருக்கு?//
நம்ம ஜாயிண்ட் அக்கவுண்ட் டீட்டெய்ல் எதுக்கு பப்ளிக்ல கேக்கறிங்க ? ;)
ஸ்ரீமதி,
உனக்கு அண்ணனாச்சே. உன்ன மாதிரி தானே இருப்பேன். :)
அம்மு,
உங்க டெம்ப்ளெட் இப்போ சூப்பரு.. நானும் செய்ற மாதிரி எளிமையா இன்னும் ரெசிபி போடுங்க. நிச்சயம் வருவேன். :)
ஹைய்யா.. நீங்களும் பார்த்துட்டிங்களா? :))
நொண்டிசாமியார்,
உங்க கமெண்ட் சீரியசா நக்கலான்னு புரிஞ்சிக்க முடியலை. ஆனா ரொம்ப ரசிச்சேன். நன்றிங்க. :)
சக்தி,
தயாரிப்பாளர் நஷ்டம் ஆகக் கூடாது என்பதற்காக நாம் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை வீணாக்கனுமா? நமக்கு காசு தெருவிலா கிடைக்கிறது? இப்போ தியேட்டர்ல படம் பார்க்க ஒருவருக்கு குறைந்தது 100 ரூபாய் செலவாகிறது. குறைந்த செலவில் தயாரிக்க முடியும் என்றாலும் கோடிகளை கொட்டுவது யார் தவறு? இந்தப் படத்தில் ஒரு புது நடிகையை நடிக்க வைத்திருந்தால் 2 லட்சம் சம்பளம் கொடுத்திருந்தாலே போதும். 1 கோடி கொடுத்து ஸ்ரேயாவைத்தான் நடிக்க வைக்க வேண்டுமா?
சினிமாவிற்கு ஆகும் செலவில் பாதிக்கு மேல் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகனின் தனிப்பட்ட சுக போகங்களுக்கே செலவிடப் படுகிறது. வெளிநாட்டிற்கு குடும்பத்துடனும் பிடித்தவர்களுடனும் கதாநாயகிகளுடனும் செலவிடவே பாதி செலவு செய்கிறார்கள். இதுக்கெல்லாம் நாம் தான் காசு குடுக்கனுமா? சரி விடுங்க. இந்த மாதிரி தயாரிப்பாளர்கள் எல்லாம் இல்லாமல் போவது தான் சினிமாவிற்கு நல்லது.
மேலும் , தயாரிப்பாளர் தாணு கம்போடியநாட்டின் கலாச்சார தூதராக இருப்பதாகவும் அதனால் இந்தப் படத்தை அங்கே படமாக்க சலுகைகளும் படத்திற்கு நிதி உதவியும் அந்த அரசாங்கம் அளித்திருப்பதாகவும் நம்பத் தகுந்த தகவல்கள் இருக்கிறது. இதனால் அந்த நாட்டின் சுற்றுலாவும் மேம்படும். கருப்பு பண முதலீடும் அதிகமாகும்.
ஆகவே நஷ்டம் நமக்கு மட்டும் தான். கவலை வேண்டாம். :)
இந்தப் படத்தில் ஒரு புது நடிகையை நடிக்க வைத்திருந்தால் 2 லட்சம் சம்பளம் கொடுத்திருந்தாலே போதும். 1 கோடி கொடுத்து ஸ்ரேயாவைத்தான் நடிக்க வைக்க வேண்டுமா?
புது நடிகை இம்புட்டு நல்லா மியாவ் பன்னுவாய்ங்களா......
// சமுதாயத்துல தொழிலதிபர்கள் மட்டும் தான் இப்டி அநியாயமா சம்பாதிச்சி , செலவு செஞ்சி, வெளிநாட்ல பணத்தை பதுக்கறாங்களா? //
தொழிலதிபர்கள பத்தி பேசுனால ரொம்ப சூடாய்ரீங்க தல :-))
கும்மிட்டீங்க
I dunno bout others bt I enjoyed the movie.. nalla time pass :-))
கும்கி, ஹிஹி.. வயசானாலும்... :)
கார்த்திக்,
பின்ன.. நீங்க எல்லாம் என் நண்பராச்சே.. :)
நன்றி ஞானசேகரன்.. எதோ என்னால முடிஞ்சது.. :)
புனிதா,
உங்களை எல்லாம் உடனே நாடு கடத்தனும்.. :)
>>