இஞ்சினியரிங் படிப்பு உச்ச (அ)நீதி மன்றம் மாணிக்கத்தாகூர் மின்மரணம் தவிர்ப்பு பிஎட் படிப்பு தடை

இந்த வருஷம் இஞ்சினியரிங் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் சேர்வதற்கு ஆள் இல்லாம காலியா இருக்காம். எல்லாத் துறைகளிலும் இந்த நிலை என்றாலும் கணிப்பொறித் துறையில் மிக மோசம். அதில் தான் அதிக காலி இடங்கள். பொருளாதார மந்த நிலையினால் பல நிறுவங்கள் மூடப் படுவதாலும் ஆயிரக்கணக்கில் வேலை இழப்புகள் ஏற்படுவதாலும் பொறியியல் மீதான மோகம் குறைந்துவிட்டது. அது மட்டுமில்லாம எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதில் மந்திரியாக இருப்பவர்கள், விசிட்டிங் கார்ட் அடிக்கிறதுக்கு முன்னாடியே இஞ்சினியரிங் காலேஜ் ஆரம்பிச்சிடறாங்க. எற்கனவே காலேஜ் வச்சிருக்கிறவங்க மாவட்டத்துக்கு ஒன்னு ஆரம்பிச்சிடறாங்க. எம்ஜியாரின் பெரும் சாதனைகளில் இதுவும் ஒன்று. அந்த புண்ணியவான் ஆரம்பித்த கலாச்சாரம் தான் இதெல்லாம். கல்லூரிகள் பெட்டிக் கடை மாதிரி பெருகிட்டே போகுது. அப்புறம் காலி இடம் இல்லாம என்ன செய்யுமாம். ”சாராயம் காய்ச்சினவன் எல்லாம் கல்வி வள்ளல். கல்வி பயின்றவர்கள் எலலாம் அரசு சாராயக் கடையில் வேலை” என்று யாரோ சொன்னாங்க. படிக்காதவனுக்கெல்லாம் டாக்டர் பட்டம் தர மாதிரி கட்சி தொண்டர்களுக்கெல்லாம் ஒரு சீட் குடுத்து இஞ்சினியரிங் காலேஜ்ல அட்மிஷன் போட்டா காலி இடம் இருக்காது.
- பெட்ரோல் ஊத்தி கொளுத்தினா தான் தப்பு, மண்ணெண்ணெய் ஊத்திக் கொளுத்தினா தப்பில்லை.
- கிலோ கணக்கில் நகை கேட்டால் தான் தப்பு. சவரன் கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு மிரட்டலாம்.
- பங்களா என்று கேட்டால் தான் தப்பு. வீடு என்று கேட்டு சித்ரவதை செய்யலாம்.
- மச்சினன், நார்த்தனார் எல்லாம் மிரட்டினாலோ அடித்தாலோ அதை குற்றம் என்று சொல்ல முடியாது.
சமீபத்தில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலர் உயிரிழந்தனர். பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்க விருதுநகர் எம்பி மாணிக்கதாகூர், பிரதமர் அலுவலகத்தில் வேண்டுகோள் விடுத்தார். இது போன்ற நிவாரணங்கள் மாநில அரசின் மூலம் தான் நடைபெறும், மத்திய அரசு நிதி ஒதுக்க வழி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். உடனே காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாகாந்தியிடன் மாணிக்கதாகூர் முறையிட்டார். கேட்டதும் , எவ்வளவு தொகை வேண்டும் என சோனியாகாந்தி கேட்டிருக்கிறார். எவ்வளவு அதிகம் கொடுத்தாலும் மகிழ்ச்சியே என்று எம்பி சொல்லி இருக்கிறார். உடனே 16 லட்ச ரூபாய் கட்சி நிதியிலிருந்து கொடுக்கும்படி சோனியா உத்தரவிட்டிருக்கிறார். அதை பெற்று வந்து சென்ற வார இறுதியில் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு எம்பி கொடுத்துவிட்டார். ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பராகவும் இளைஞர் காங்கிரசின் தேர்தல் குழு தலைவராகவும் இருப்பதால் மாணிக்கத்தாகூர் எம்பியால் இதை செய்ய முடிந்திருக்கிறது. ( ராகுலின் நம்பிக்கைகுரிய இன்னொருவர் மீனாட்சி நடராஜன். தமிழர். இப்போது அவரும் எம்பி) மேலும் பல நன்மைகள் செய்ய வாழ்த்துகள். சென்ற வாரம் நான் தலைநகரத்தில் இருந்த போதே அறிந்துகொண்டேன். நேற்று பத்திரிக்கையிலும் வந்தது. இதைக் கூட அதிகாரப் பூர்வ செய்தியாக போடாமல் புரளிபேசும் பகுதியில் போட்ட தினமலர் வாழ்க. அந்த விபத்தில் காயமடைந்தவர்களை பார்க்க எம்பி சென்றிருந்த போது எடுத்த புகைப் படங்களை காண நேர்ந்தது. பட்டாசுத் தொழிலையே ஒழிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அதை நம்பி இருப்பவர்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்யலாம். மிகக் கொடுமை அவர்கள் வாழ்க்கை.
மாணிக்கதாகூர், சிவகங்கையை சேர்ந்தவர். பிறந்து வளர்ந்தது இங்கு தான். அவர் தந்தை , பள்ளி ஆசிரியர். ரவீந்திரநாத் தாகூர் மீது அதிக பிரியம் கொண்டவர். அதனால், தன் தந்தையின் பெயரான மாணிக்கத்தையும் தாகூரின் பெயரையும் இணைத்து மகனுக்கு மாணிக்கத் தாகூர் என பெயர் வைத்துவிட்டார். பலரும் நினைப்பது போல் அவர் பெயர் மாணிக்தாகூரோ டெல்லியில் இருப்பதால் அரசியலுக்காக தாகூர் என்று சேர்த்துக்கொள்ளவோ வட இந்தியாவை சேர்ந்தவரோ இல்லை. சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர் தான். தேசிய மாணவர் கங்கிரஸ் துணைத் தலைவர் போன்ற பதவிகளின் அனுபவம் மூலமாக இப்போது தேசிய பொது செயலாளர் மற்றும் தேர்தல் குழு தலைவர். வழக்கறிஞரும் கூட.
2 நாட்களுக்கு முன் கோவையில் மேட்டுபாளையும் சாலையில் ஒரு மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் விழுந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக அது சாலையில் விழாமல் எதிர்புறமாக( அல்லது பின்புறமாக) கவிழ்ந்துவிட்டது. அதனுடன் சேர்ந்து சில மின் கம்பகளும். இவைகள் எல்லாம் சாலையில் விழுந்திருந்தால் எவ்வளவு உயிர்பலி ஆகி இருக்கும் என நினைத்தாலே நடுங்குகிறது. இதுக்கெல்லாம் ஆற்காட்டார்ரை நொந்துக்க முடியாது. அவருக்கு கருணாநிதி வீட்டில் எவ்வளவு வேலை பாவம். இல்லைனாலும் இதை எல்லாமா பார்த்துட்டு இருக்க முடியும்?.. இங்கிருக்கும் மின்வாரிய அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. இந்த லட்சனத்தில் மாதம் ஒரு நாள் பராமரிப்புப் பணிக்கான மின் விடுமுறை வேறு. இம்சை அரசன் படத்தில் வடிவேலு பேசும் வசனம் தான் ஞாபகம் வருகிறது. ( காலை 9 மணிக்கு வருவது. இடையில் 1 மணி நேரம் உணவு விடுமுறை. மாலை 6 மணிக்கு சென்று விடுவது. கேட்டால் அரசாங்க உத்தியோகம் என பீற்றிக் கொள்வது. )
ஒரு சந்தோஷ செய்தி.. அடுத்த கல்வி ஆண்டு பிஎட் படிப்புக்கான சேர்க்கைக்கு தடை விதிக்கப் படுகிறதாம். கேட்கவே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.. வாழும் வள்ளல் கருணாநிதி வாத்தியாருங்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கினாலும் வழங்கினார், இவங்க அழிச்சாட்டியம் தாங்கலை.. ஊர்ல இருக்கிறவன் எல்லாம் பிஎட் படிச்சிடறாங்க. சரி நல்லா படிக்கட்டும். வாத்தியார் வேலைக்கும் போகட்டும். வழக்கம் போல வெட்டியா சம்பளமும் வாங்கி குவிக்கட்டும். அதில்லை பிரச்சனை. கல்யாணம்னு வரும் போது இவங்க பந்தா இருக்கு பாருங்க. அட அட.. தாங்கல.. டீச்சரக்கா வாதியார் மாமாவத்தான் கட்டிப்பாங்களாம். வாத்தியார் மாமா டீச்சர் அக்காவத்தான் கட்டிப்பாராம். குலத் தொழில் மாதிரி இது குலக்கல்யாணம் போல. அப்போ மத்த அக்காக்களும் மத்த மாமாக்களும் எங்க தான் போவாங்க அல்லது போவோம்?.. ஹ்ம்ம்.. இதெல்லாம் சொந்த வாழ்க்கை சோகம்.. உங்க கிட்ட பொலம்பி என்ன ஆகப் போகுது? :)) ஆனாலும் அடுத்து வரவங்களாவது நல்லா இருக்கனும்னா இந்த வாத்தியார் படிப்பை தடை பண்ணியே ஆகனும். ஏற்கனவே படிச்சி கிழிச்சவங்களுக்கு வேலை குடுத்தாலே இன்னும் சில பல நூற்றாண்டுகளுக்கான தேவை தீர்ந்துடும்.
டில்லி போகும் மகா ஜனங்கள் மறவாமல் அடையாள அட்டை கொண்டு செல்லவும். அதில்லைனா தண்ணிக் கூட குடிக்க முடியாது போல. நம் நாட்டில் நம் மீதே சந்தேக நிழல் படியவைத்து வெற்றிக் கண்ட தீவிரவாத பெருமக்கள் வாழ்க.
nice
உச்ச நீதி மன்றம் செய்வது
உச்சகட்டம் :(
// சென்ற வாரம் நான் தலைநகரத்தில் இருந்த போதே அறிந்துகொண்டேன். //
ஓகோ!
// மாணிக்கதாகூர், சிவகங்கையை சேர்ந்தவர். பிறந்து வளர்ந்தது இங்கு தான். அவர் தந்தை , பள்ளி ஆசிரியர். ரவீந்திரநாத் தாகூர் மீது அதிக பிரியம் கொண்டவர். அதனால், தன் தந்தையின் பெயரான மாணிக்கத்தையும் தாகூரின் பெயரையும் இணைத்து மகனுக்கு மாணிக்கத் தாகூர் என பெயர் வைத்துவிட்டார். பலரும் நினைப்பது போல் அவர் பெயர் மாணிக்தாகூரோ டெல்லியில் இருப்பதால் அரசியலுக்காக தாகூர் என்று சேர்த்துக்கொள்ளவோ வட இந்தியாவை சேர்ந்தவரோ இல்லை. //
எல்லாஞ்சரி! தமிழ் பேசத் தெரியுமா?
நல்ல பகிர்வு!
ஆனால் ஆசிரியர்கள கண்டால் அவ்ளோ கேவலமா போச்சாப்பா?
//அப்போ மத்த அக்காக்களும் மத்த மாமாக்களும் எங்க தான் போவாங்க அல்லது போவோம்?.. ஹ்ம்ம்.. இதெல்லாம் சொந்த வாழ்க்கை சோகம்.. //
aiyo..aiyoo:-))))))
//ஆனால் ஆசிரியர்கள கண்டால் அவ்ளோ கேவலமா போச்சாப்பா?//
அதானே சுபா
அனைத்துச் செய்திகளும் ச்ச்சூபர்
மாணிக்க தாகூர் சுதர்சன நாச்சியப்பனோட அண்ணண் பையன், பச்சைத் தமிழர். நல்லா தமிழும் பேசுவார் . ஆனா அவர வடநாட்டுக்காரர்னு சொல்லி பிரச்சாரம் செஞ்சாங்க எதிர்கட்சியில.
மாப்பி, மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 498ஏ இருக்கே. அது அணு சக்தி மாதிரி . சரியான காரணங்களுக்கு உபயோகிச்சா மின் சக்தி மாதிரி ஆக்கப்பூர்வமா பயன்படுத்தலாம். இல்லன்னா ஹிரோஷிமா தான். ஆனா உச்சநீதிமன்றம் ஒன்னும் சும்மா அப்டி சொல்லலை. இதுவரைக்கும் 498ஏ சட்டப்பிரிவுல இதுவரை பதிவான வழக்குகளில் 90%க்கும் மேல் பழிவாங்கும் நோக்கத்தில் பதிவான வழக்குகள் தான் என்பது தெரியுமா? மிக அதிகளவிலான மேல் முறையீடுகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தால் தான் இப்படி ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது பெரும்பான்மையானோர் உபயோகிப்பது போல் அந்த சட்டப்பிரிவு உபயோகிக்கப் பட்டால் விரைவில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அமைத்து 844 சட்டம் ஒன்று வரும் நிலை ஏற்படலாம் . புகார் அளித்தவுடன் கைது அதுவும் பிணையில் வெளிவர இயலாத பிரிவுகளின் கீழ் கைது. குறைந்தது ஒரு மாதம் ஆகும் பிணையில் எடுப்பதற்கே.
பெண்கள் முன்னேற்றம், பெண் சம உரிமை, பெண் விடுதலை இதற்கெல்லாம் சரியான விளக்கம் இல்லாமல் போனது தான் மிகப் பெரிய சமூகக் கொடுமை. பெண் சம உரிமை என்பது ஆண்களுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்ணுக்கு இருக்க வேண்டும் என்பது தானே? ஆனால் இவர்கள் ஆணிண் உரிமையையும் பறித்து பெண்ணுக்கு அளிக்க வேண்டும் என கேட்பது எந்த விதத்தில் நியாயம்?
பகிர்தலுக்கு நன்றி. அருமையான தகவல்கள்.
ஆசிரியர் குலத்தால் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பீர்கள் போல இருக்கிறதே?
ஆசிரியர்களை கேவலமா பேசாதீங்க. ஒரு சமுதாயத்தை உருவாக்குபவர்கள். எனக்கு ஓரே கோவம் அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பது.
மற்றபடி அனைத்துச் செய்திகளும் நல்லாயிருக்கு
நன்றி யாசவி.. :)
நன்றி ஜமால்..
ரொம்ப மோசம் தான்.
வெயிலான்,
31, லக்ஷ்மி காலனி
மதுரை ரோடு
விருதுநகர்
என்ற முகவரிக்கு வார இறுதி நாட்களில் நேரில் சென்று அவரின் தமிழ்திறமையை சோதிக்கலாம்.
அல்லது 04562-242544 என்ற எண்ணிற்கு அழைத்தும் சோதிக்கலாம்.. :)
சுபா,
நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லி இருக்கேனா? இப்போ உருவாகும் ஆஸ்ரீயர்களை தான் சொன்னேன். அந்தக் காலத்து ஆசிரியர்கள் டீச்சர் மனைவி தான் வேண்டும்னு அடம் புடிச்சாங்களா என்ன?
இயற்கை
ரொம்ப சிரிக்க வேண்டாம்.. அடி வாங்குவீங்க. :)
நன்றி சீனா சார். நான் இந்த காலத்து மைனர் வாத்தியார்களைத் தான் சொல்லி இருக்கிறேன்.
சோசப்பு
கொஞ்சம் சோடாக் குடி. அந்த தீர்ப்பில், மருமகள் தரும் புகார்களை நிரூபிக்க மெலும் சில வழிமுறைகளை சொல்லி இருந்தால் நாம் ஏன் கவலைப் படப் போறோம். ஆனால் எட்டி உதைத்தால் தப்பே இல்லைன்னா என்ன அர்த்தம் ராசா? உன் சகோதரியை அவர் மாமியார் எட்டி உதைத்தால் நீ சந்தோஷப் படுவியா? நீ பேசி இருக்கிறதுக்கும் இந்த தீர்ப்புக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக எனக்குத் தெரியலை மச்சி. உணர்ச்சியைக் கட்டுபடுத்து.
நன்றி எவனோ ஒருவன்.
இன்றைய அரசாங்க மைனர் ஆசிரியர் ஆசிரியையகளைக் கண்டாலே எரிச்சலாய் தான் வருது. :(
நாஞ்சில்நாதம்
சுபாவிற்கு சொல்லி இருக்கும் பதிலை படிக்கவும். நன்றி.
/
டீச்சரக்கா வாதியார் மாமாவத்தான் கட்டிப்பாங்களாம். வாத்தியார் மாமா டீச்சர் அக்காவத்தான் கட்டிப்பாராம். குலத் தொழில் மாதிரி இது குலக்கல்யாணம் போல. அப்போ மத்த அக்காக்களும் மத்த மாமாக்களும் எங்க தான் போவாங்க அல்லது போவோம்?.. ஹ்ம்ம்.. இதெல்லாம் சொந்த வாழ்க்கை சோகம்.. உங்க கிட்ட பொலம்பி என்ன ஆகப் போகுது? :))
/
மச்சி உன் ஃபீலிங் புரியுது!
:)))))))))))))))
ஹி ஹி எங்க காலேஜ்ல எல்லாம் எல்லாம் சீட்டும் நிரம்பிடுச்சே.
கொசுறு செய்தி : மந்திரிங்க காலேஜ்ல சேரதுக்கு மாணவர்கள் (பெற்றோர்கள்) ஆர்வமே காட்டலை :).
என்ன படிச்சு வேலைக்கு போய் பெரிய ஆள் ஆனாலும் இது எல்லாம் இந்த தலைமுறையில குறைய வாய்ப்பு ரொம்ப குறைவுதான். நாம வளர்க்க போகிற அடுத்த தலைமுறை குழந்தைகளை நல்ல படியா வளர்த்தறதை தவிர வேற வழி இல்லை :(
நீங்க தொழிலதிபர் பொண்ணா பார்த்து கட்டிக்க வேண்டியதுதானே. இங்க வந்து ஏன் புலம்பிக்கிட்டு இருக்கிங்க.
(பிரிட்னி கூட ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சு தொழிலதிபர் ஆகிட்டாங்களாமே தம்பி:)
//இங்கிருக்கும் மின்வாரிய அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. இந்த லட்சனத்தில் மாதம் ஒரு நாள் பராமரிப்புப் பணிக்கான மின் விடுமுறை வேறு. //
மின் வாரிய அதிகாரிகளுக்கு பக்கத்துல லட்சனம்,லட்சம் எதைப் போட்டாலும் லஞ்சம்னு பழக்க தோசத்துல படிச்சுடுறன்.
ஜோசப் பால்ராஜ் said...
மாணிக்க தாகூர் சுதர்சன நாச்சியப்பனோட அண்ணண் பையன், பச்சைத் தமிழர். நல்லா தமிழும் பேசுவார் . ஆனா அவர வடநாட்டுக்காரர்னு சொல்லி பிரச்சாரம் செஞ்சாங்க எதிர்கட்சியில. //
வாரிசுதானா? சஞ்சய என்னமோ ராகுல்,சாகுல்னு பேசிட்டுருக்காரு?
அப்போ மத்த அக்காக்களும் மத்த மாமாக்களும் எங்க தான் போவாங்க அல்லது போவோம்?.. ஹ்ம்ம்.. இதெல்லாம் சொந்த வாழ்க்கை சோகம்.. //
நோட் பண்ணுங்க... சீக்கரம் சோகம் விலக ப்ரப்திரஸ்த்து!!!
அப்பறம் டெல்லி மேட்டர் .. ரொம்ப தேங்க்ஸ் .. முன்னாடியே சொன்னதுக்கு..
நன்றி மங்களூராரே.. :(
அக்காங்க எல்லாம் இப்டி வெட்டி வாய் பேசிட்டிருந்தா பொலம்பாம என்ன செய்ய? ஒரு பொண்ணு பார்த்து கட்டி வச்சா தானே.. :)
நன்றி ஜோதி சார்.. ;)
குடுகுடுப்பை,
ஒரு தலைவரின் அண்ணன் பையன் என்பதாலே சும்மா போற போக்குல வாரிசு என்று சொல்லிடக் கூடாது. மாணிக்கத் தாகூரின் தற்போதைய நிலைக்கும் அவரது பெரியப்பாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் சிவகங்கை மாவட்ட மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் போன்ற அமைப்புகளில் பணிபுரிந்து பின் தேசிய மாணவரணி துணைத் தலைவர், தேசிய இளைஞர் அணி பொது செயலாளர், தேசிய இளைஞர் காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் என படிப்படியாக உயர்ந்து தான் இன்று எம்பி ஆகி இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக பணியாற்றி தன்னை நிரூபித்த பின் தான் எம்பி ஆகி இருக்கிறார்.
நன்றி மயில். :)
டில்லி போறிங்களா?
செய்திகள் அனைத்தும் சூடாத்தான் இருக்கு.
என்னதான் கல்லூரிகள் தொறந்தாலும் இந்த டொனேஷன் மட்டும் ஏன் குறையவே மாட்டேங்குதுன்னு தெரியலெயே....
கேரளாவிலிருந்து தான் அதிகமாக டொனேஷன் குவியுதாம்.
/பட்டாசுத் தொழிலையே ஒழிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அதை நம்பி இருப்பவர்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்யலாம்./
எந்த அரசாங்கம் வந்தாலும் செய்ய முன் வராது. குறைந்த பட்ச பாதுகாப்புக்காவது உத்திரவாதம் இருக்கும் வகையில் வேலையிட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பல நேரங்களில் சின்ன சின்ன தவறுகளால் கூட பெரிய விபத்துக்கள் ஏற்படுகின்றன.
மாணிக்கதாகூர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தினமலர் பச்.:(
/இதுக்கெல்லாம் ஆற்காட்டார்ரை நொந்துக்க முடியாது. அவருக்கு கருணாநிதி வீட்டில் எவ்வளவு வேலை பாவம். /
அவரும் எவ்ளோ தாங்க தாங்குவாரு...விடாம அடிக்கிறாங்கப்பா:)))
/மங்களூர் சிவா said...
/
டீச்சரக்கா வாதியார் மாமாவத்தான் கட்டிப்பாங்களாம். வாத்தியார் மாமா டீச்சர் அக்காவத்தான் கட்டிப்பாராம். குலத் தொழில் மாதிரி இது குலக்கல்யாணம் போல. அப்போ மத்த அக்காக்களும் மத்த மாமாக்களும் எங்க தான் போவாங்க அல்லது போவோம்?.. ஹ்ம்ம்.. இதெல்லாம் சொந்த வாழ்க்கை சோகம்.. உங்க கிட்ட பொலம்பி என்ன ஆகப் போகுது? :))
/
மச்சி உன் ஃபீலிங் புரியுது!
:)))))))))))))))/
யோவ் மங்களூரு சஞ்சய் பீலிங் உனக்கு சிரிப்பா இருக்கா???
மாணிக் தாகூர் அவர்களைப் பற்றி இப்பதிவின் மூலம் தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டோம்,ஆனால் ஆசிரியர்களைப் பற்றி நீங்க சொல்லியிருப்பது நிங்க சொல்லியிருக்கும் போகிற போக்கில் டைப்பான பதிலாகவே நான் பார்க்கிறேன் சஞ்சய்.எத்தனையோ ஆசிரியர்கள் சிறப்பான முறையில் செயல்படுகிறார்கள்.நான் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது,நான் பணிபுரிந்த பள்ளியிலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற ஆசிரியர்களும் உண்டு,ஆனால் எண்ணிக்கையில் மிகக் குறைவு.இந்த மாதிரி ஆசாமிகள் எல்லாத் துறையிலும் உண்டு.அதற்காக ஒட்டு மொத்தமாக சொல்வது ஏற்றுக் கொள்ளமுடியாது.
அதே மாதிரி எத்தனையோ அப்பாவி குடும்பங்கள் " விவகாரத்து செய்வேன் என மிரட்டினார்","வரதட்சனைக் கேட்டு கொடுமைப்படுத்தினார்" என பொய்யான குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகி சிதைந்து போன குடும்பங்களும் நிறைய இருக்கிறது சஞ்சய்.அதை மனதில் வைத்தே அந்த தீர்ப்பு வந்திருக்கும்,ஏனெனில் சென்ற வருடம் பெருகிவரும் விவகாரத்துக்கான காரணங்களில் எதற்கெடுத்தாலும் வரதட்சனை கொடுமை கேஸ் போட்டுவிடுவேன் என பெண்கள்தான்(படித்த) ஆண்களை மிரட்டுவது அதிகரித்திருப்பதாகவும், அதில் வ்ரதட்சனை கொடுமை வழக்கில் 80% பொய்யான குற்றச்சாட்டுகளே என்று வழக்கறிஞர்கள்,சட்ட ஆலோசகர்கள் என நீதிதுறை சார்ந்த பலரிடமும் கருத்துக் கேட்டு தினமலர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.ஆனால் உண்மையில் பாதிக்கப்படும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள்.சமுதாயத்தின் பார்வை பெண்கள் என்றதும் இறக்கப்படுவதால் இப்படியான பொய்யான குற்றச்சாட்டுகளை அவர்கள் தங்களுக்கு சாதகமாப் பயன்படுத்திவிடுகிறார்கள் என்றும் அச்செய்திதாளில் வெளிவந்திருந்தது.
மாற்றுக் கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.
சஞ்சய் எதோ ஒரு அக்காவ கண்ணாலம் கட்டிகினு அந்தக்காவை டீச்சர் ஆக்கீடுப்பா இதுதான் டெக்னிக்கு. இப்ப நான் இல்ல
:)))))))))))
மங்களூர் சிவா
சஞ்சய் நீங்க ஏன் படிச்சி ஒரு டாக்டராவோ ஒரு என்ஜினியராவோ இல்ல டீச்சராவோ ஆவக்கூடாது..
இதை அப்படியே உஙக் ஊர்காரர் சத்தியராஜ் மாதிரி பேசிப்பாருங்க..
// சந்தோஷ் = Santhosh said...
சஞ்சய் நீங்க ஏன் படிச்சி ஒரு டாக்டராவோ ஒரு என்ஜினியராவோ இல்ல டீச்சராவோ ஆவக்கூடாது..
இதை அப்படியே உஙக் ஊர்காரர் சத்தியராஜ் மாதிரி பேசிப்பாருங்க..//
:)))))))))))
good news.
enga vetla eppavum b.ed padi b.ed padinu thollai.
eni antha thollai erukkathu.
jolly.
பதிவின் இரண்டாவது பிரிவு குறித்து...
புழக்கத்தில் இருக்கிற சட்டங்களின்படி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. அவற்றை விமர்சிப்பது குற்றம்.
ஆளும் வர்க்கமே சட்டத்தின் ஆட்சியை மீறலாமா :)
பதிவின் இரண்டாவது பிரிவு குறித்து...
புழக்கத்தில் இருக்கிற சட்டங்களின்படி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. அவற்றை விமர்சிப்பது குற்றம்.
ஆளும் வர்க்கமே சட்டத்தின் ஆட்சியை மீறலாமா :)
அடடே!
ஒரு நல்ல , அடுத்த தலைமுறைக்கான அரசியல்வாதியா இல்ல இருக்காரு திரு.மாணிக்க தாகூர் ! அப்படியே இருக்க வாழ்த்துக்கள்!
கல்யாணத்துக்கு இவய்ங்க படுத்துறபாடு கரெக்டுதான்!
:)
என்ன காரணத்தால், பழைய ப்ளாகை விட்டு விட்டு புது ப்ளாகில் எழுதுகிறீர் என்று தெரிந்து கொள்ளலாமா? சஞ்சய்? நீங்கள் விரும்பினால், அந்த ப்ளாக் போஸ்ட்டை கமெண்ட்ஸோடு சுலபமாக இதில் இணைக்கலாம்.
நன்றி மஞ்சூர் அண்ணா..
நன்றி நல்லவரே..
நன்றி நாடோடி இலக்கியன்..
நன்றி மங்களூர் மாம்ஸ்
நன்றி சந்தோஷ்
நன்றி ஸ்ரீமா..
நன்றி மஹா
நன்றி செல்வா
நன்றி சுரேகா
நன்றி சுமஜ்லா
>>