August 20, 2009

குசும்பன் 5 ஸ்டார் சக்தி அம்மா தமிழ் கையெழுத்து கோவைப் பதிவர்கள் ஃபேஸ்புக் நண்பர்கள்தின நட்பு

[ஹிஹி.. நாந்தேன்]

சென்ற வாரத்தில் ஒரு நாள் என் அண்ணன் அழைத்து “ யார்டா குசும்பன். இப்டி எழுதி இருக்கார். போலிஸ் சுற்றிவளைத்த சென்னைப் பதிவர்கள் படிக்கிறேன். சிரிச்சி சிரிச்சி கண்ல தண்ணி வருதுடா” என்றார். என் நண்பர் தான் என்றேன். பெருமை இருக்காதா பின்ன? :). பதில் பின்னூட்டம் எதிர்பார்க்காத நிஜமான பாராட்டு. வாழ்த்துகள் குசும்பன்.
***

சமீபமா 5 ஸ்டார் சாக்லேட்க்கு ஒரு விளம்பரம் வருது. அந்த சாக்லெட் சாப்ட்டு மெய்மறந்து அமர்ந்திருக்கும் ஒருவரிடம் ஒருவர் திருட முயற்சிப்பார். அதை கவனித்து வரும் இன்னொரு திருடனார், ” 5 ஸ்டார் சாப்ட்டா மெய்மறந்து போய்டுவாங்க. நம்மள மாதிரி திருடர்களுக்கு மனசாட்சி வேணாமா? இவர் கிட்ட எப்டி திருடறது” எனக் கூறி முன்னவரை அழைத்து சென்றுவிடுவார். அடப்பாவிகளா. 5 ஸ்டார் சாப்டற பணக்காரன் கிட்ட தான் மனசாட்சி பார்ப்பாங்களா?. அப்போ அன்றாடங்காய்சிக் கிட்ட திருடினா பரவால்லையா? நல்லா யோசிக்கிறாய்ங்கப்பு.
***

சில நாட்களுக்கு முன் வேலூர் சக்தி அம்மா?! தங்கக் கோயிலுக்கு சென்றேன். கோவிலுக்கு செல்ல மொத்தம் 3 வழி. ஒன்று இலவச வழி. அது வழியாக காலையில் சென்றால் மாலையில் தான் திரும்பி வர முடியுமாம். இரண்டாவது 100 ரூபாய்க் கட்டணம். இந்த வழியில் 2 நிமிடத்தில் 3 சோதனைகளை முடித்துக் கொண்டு கோவிலை அடையலாம். மூன்றாவது வழியில் செல்ல 250 ரூபாய்க் கட்டணம். 45 வினாடிகளில் கோவிலை சென்றடையலாம். இந்த நுழைவாயில்களில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் கோவில் இருக்கு. இதுக்கு 3 வழிகள். பெரும் புல்வெளிகளையும் பூந்தோட்டங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு கடைசியாக கோவிலுக்கு செல்வது போல் பாதை அமைத்திருக்கிறார்கள். உள்ளே கேமரா, செல் போன் எடுத்து செல்ல தடை. ஆனால் வழி எங்கும் சக்தி அம்மா( ஆண் தான் )வின் புகைப் படம் அச்சடித்த (அதிக)பிரசங்க பலகைகள். அங்கே பணி புரிபவர்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். 3 இடங்களில் சோதிப்பதெல்லாம் ஓவராக இருக்கிறது. அப்படி ஒன்றும் பெரிய பொக்கிஷம் எதுவும் அங்கே இல்லை.

கோவிலுக்கு சற்று முன் சக்தி அம்மா எனப் படுபவரின் 2 மிகப் பெரிய புகைப் படங்களை வைத்து அதற்கும் ஒருவரை காவலுக்கு வைத்திருக்கிறார்கள். கோவிலை சுற்றியுள்ள குளத்தில் க்ரெடிட் கார்ட், தங்க , வெள்ளி நாணயங்கள், 1000, 500, 100 ரூபாய் நோட்டுகள் எல்லாம் பக்த கோடிகளால் வீசப் பட்டிருக்கு. யாருக்கு என்ன பயனோ?. போகும் போது பூஜை சாமான்கள் வாங்கி செல்ல சொல்கிறார்கள். உள்ளே அதை வைத்து பூஜிப்பதில்ல்லை. எதோ ஒன்றைக் காட்டி அம்மா பாதம் என்று சொல்லி அதில் வைத்துத் தருகிறார்கள். சிலர் அதையும் எடுத்து செல்வதில்லை. அவைகள் அடுத்த நாள் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளப் படுமாம். எங்கு வாங்கினோமோ அதே ஸ்டோருக்கு திருப்பி அனுப்பப் பட்டிருக்கும். :) எரிச்சல் படுத்தும் ஒரு வியாபார தலத்திற்கு சென்று வந்த உணர்வு. நல்லா இருங்க சாமிகளா.
***

சமீபத்தில் தமிழில் ஒரு அலுவல் கடிதம் எழுத வேண்டியதாகிவிட்டது. சில எழுத்துகளை எப்படி எழுதுவதென்றே தெரியாமல் விழித்தேன். நான் எதோ நினைத்து எழுத வேறு எழுத்துகள் வந்தன. கையெழுத்து மிக மிக கேவலமாய் இருந்தது. அசிங்கமாய் உணர்ந்தேன். அன்று முதல் தினமும் நளிதழைப் பார்த்து சில வரிகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போ தேறிவிட்டேன். வாழ்க கணிப்பொறியும் விசைப் பலகையும் மொபைல் போனும்.

மேற்சொன்ன கூத்தெல்லாம் நடந்தது கேபிஎன் அலுவலக வளாகத்தில் தான். அப்போது ஒருவர் , ரசீது இல்லாததால் தன் பொருட்கள் விற்பனை வரி அலுவலர்களால் கைப்பற்றப் பட்டதாக சொன்னார். சிறிது நேரத்தில் அந்த அலுவலர்களுடன் அந்தப் பொருட்களைப் பார்க்கச் சென்றோம். எங்கள் நிறுவனப் பொருட்களுக்கும் அதே நிலை தான். எங்க ஆளுங்க விற்பனை ரசீது தனியாகவும் பொருள் தனியாகவும் அனுப்பி இருந்தார்கள். இன்னொருவரின் பொருட்களாக ஒரு அட்டைப் பெட்டிக்குள் பழய ப்ளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றும் சிறிய பழைய மின்விசிறி ஒன்றும் இருந்தது. உபயோகித்தப் பொருட்கள். அத்ற்கெல்லாம் ரசீதுக்கு எங்கே செல்வது? என்னக் கன்றாவி சட்டமோ?. உபயோகித்தப் பொருட்கள் என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பொருளை எடுத்து செல்ல சொன்னார்கள்.

அந்த அலுவலர் சொன்னது “ உபயோகப் படுத்திய பொருட்களை அனுப்பும் போது பெட்டியில் அதைக் குறிப்பிடுங்கள். தேவை இல்லாமல் அதற்கெல்லாம் ரசீது கேட்டு சோதிக்க வேண்டி இருக்காது”. பார்சல் அனுப்புபவர்கள் கவனிக்கவும்.

***

கோவையில் ஆயிரக் கணக்கான பதிவர்கள் இருக்கிறார்கள். தமிழில் எழுதுபவர்கள் பதிவுகளை மட்டும் திரட்டி பலத்தைக் காட்டலாம் என நினைத்து கோவைப் பதிவர்கள் என்ற சிறு திரட்டி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. படித்து மகிழவும்.

***

ஃபேஸ்புக்கில் குறுஞ்செய்தி சேவை ஆரம்பித்திருக்கிறார்கள். யாராவது நமக்கு மெயில் அனுப்பினால் மொபைலுக்கு செய்தியாக வந்துவிடுகிறது. இலவச சேவை தான். பயன்படுத்திப் பாருங்கள்.

***

நண்பர்கள் தினத்தில் அதிக பட்சமாக வாழ்த்தும் பரிசும் கிடைக்கலாம். எனக்கு அன்றைய ரயில் பயணத்தில் புதிய நண்பரே கிடைத்தார். கோயம்புத்தூர் தான். அப்போது ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். தியாகு லைப்ரரியில் எடுத்தாராம். அதில் உறுப்பினராம். நான், அண்ணாச்சி , செல்வேந்திரன் மூவரும் அடிக்கடி சந்திக்கும் இடம் தான் தியாகு லைப்ரரி. :) மிக நல்ல நண்பர். ஆனால் என்ன... அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு மேல் படிப்பு படிக்க செல்கிறார். வாழ்த்துகள் தோழி. உங்கள் ஆசைப் படியே திரும்பி வந்து கோவையில் இண்டஸ்ட்ரி ஆரம்பிக்க வாழ்த்துகிறேன்.

***

இணையதளங்களுக்கு தனி அடையாளமாக விளங்கும் favicon பற்றி சிலருக்காவது தெரிந்திருக்கும். ஃபயர்ஃபாக்ஸ் அல்லது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரில் வலைதளங்கள் பார்க்கும் போது அட்ரஸ் பாரில் ஒரு படம் தெரியும். அதே போல் நம் வலைப்பதிவுகளுக்கும் செய்ய முடியும். உங்கள் வலைப்பூவில் edit html பக்கம் சென்று <data:blog.pagetitle/> <data:blog.pagetitle/9(((title)(data:blog.pageTitle/)(/title)என்பதற்கு அடுத்த வரியில் (link href='image url' rel='shortcut icon' type='image/vnd.microsoft.icon'/)என்று டைப் செய்யுங்க. இதுல image url என்பதற்கு பதில் உங்கள் படத்திற்கான முழு முகவரியையை தரவும்.

( ) = <>

படம் பற்றிய விவரம்.
முதலில் 16x16 அளவில் ஒரு படத்தை உருவாக்கி அதை image_name.png என்று சேமிக்கவும். பின் http://www.convertico.com/ என்ற இணையதளம் சென்று .png ஃபைலை .ico ஃபைலாக மாற்றிக் கொள்ளவும். பின் அந்த படத்தை உங்கள் கணினியில் சேமித்து அதை இனையத்தில் எதாவது இமேஜ் ஹோஸ்ட் தளத்தில் சேமித்து அதன் முகவரியை (ie: http://sanjaigandhi.com/sanjai.ico) மேலே உள்ள umage url என்ற இடத்தில் அளித்துவிடவும். இப்போது உங்கள் படம் ரெடி. படம் காட்ட வாழ்த்துகள்.

***

42 comments:

ஆயில்யன் said...

//அந்த அலுவலர் சொன்னது “ உபயோகப் படுத்திய பொருட்களை அனுப்பும் போது பெட்டியில் அதைக் குறிப்பிடுங்கள். தேவை இல்லாமல் அதற்கெல்லாம் ரசீது கேட்டு சோதிக்க வேண்டி இருக்காது”. பார்சல் அனுப்புபவர்கள் கவனிக்கவும். //

மெசேஜ்க்கு நன்றி

பலரும் அவ்வளவாக அறிந்திராத அதிகம் அவஸ்தை உண்டாக்கும் நடைமுறைகளில் இதுவும் உண்டு:

ஆயில்யன் said...

//சென்ற வாரத்தில் ஒரு நாள் என் அண்ணன் அழைத்து “ யார்டா குசும்பன். இப்டி எழுதி இருக்கார். போலிஸ் சுற்றிவளைத்த சென்னைப் பதிவர்கள் படிக்கிறேன். சிரிச்சி சிரிச்சி கண்ல தண்ணி வருதுடா” என்றார். என் நண்பர் தான் என்றேன். பெருமை இருக்காதா பின்ன? :). பதில் பின்னூட்டம் எதிர்பார்க்காத நிஜமான பாராட்டு. வாழ்த்துகள் குசும்பன்.///

இப்பொழுதும் அந்த பதிவினை நினைத்தாலே சிரிக்க வைக்கும் :))

வெயிலான் said...

// நளிதழைப் //

நாளிதழ் - தேறிட்டீங்கனு நாங்க சொல்லணும்.

ஆமா. நானே கேட்கணும்னு நினைச்சேன். அதென்ன எங்களச் சேர்க்காம கோவைப் பதிவர்கள்னு தனி வலைத்தளம்.

அடுத்து.. திகில் பயணம் ஆரம்பம்... - அப்படியே நிக்குது.

Cable Sankar said...

ஏதோ ஜேம்ஸ்பாண்ட் படத்தின் லாங் ஷாட்டை எடுத்துபோட்டுவிட்டு ஹி.ஹி.நாந்தேன் என்றால் நம்பிவிடுவோமா. :)

ஸ்ரீமதி said...

:))))))))

ஸ்ரீமதி said...

எங்கண்ணே எவ்ளோ பெரிய பதிவு எழுதிருக்கு பாரேன்... :O

ஸ்ரீமதி said...

அதென்ன தலைப்பு இப்படி (தலைய பிச்சிக்கிற மாதிரி) சூப்பரா வெச்சிருக்க?? :)))))))

ஸ்ரீமதி said...

எல்லாரும் பார்த்துக்கோங்க பார்த்துக்கோங்க இன்ஃபர்மேட்டிவா பதிவு போட எங்கண்ணனுக்கும் தெரியும்... போனா வராது.. ;)))))))

ஸ்ரீமதி said...

அண்ணா ஏன் கயித்துல தொங்கற?? :((( அண்ணி வந்துடுவாங்க சீக்கிரம் டோண்ட் வொரி.. ஓகே?? ;)))

ஸ்ரீமதி said...

என்னது நீ தமிழ் எழுத கத்துக்கிட்டியா?? யார்க்கிட்ட காது குத்தற?? ;)))))))))))))

ஸ்ரீமதி said...

உன் URL ல S-ன்னு போட்டிருக்கு.. அப்படின்னா Srimathi-யா?? என்னா ஒரு பாசம் தங்கச்சி மேல??

ஸ்ரீமதி said...

கோவிலுக்கெல்லாம் போறியா அண்ணா நீ?? எனக்கென்னமோ டவுட்டாவே இருக்கு... ;)))))))))

ஸ்ரீமதி said...

இப்போ வர நிறைய படங்கள்லயே logic இருக்கறதில்ல... நீ விளம்பரங்கள்ல லாஜிக்க expect பண்ற... ஹய்யோ ஹய்யோ... :))))

ஸ்ரீமதி said...

ஹப்பா இப்போ தான் நிம்மதியா இருக்கு... நீ எப்போ பதிவு போடுவன்னு வழி மேல விழி வெச்சி பாத்துட்டு இருந்தேன்.. எதுக்கா?? கும்மி அடிக்க தான்.. இப்போ தான் நல்லா இருக்கு.. வரட்டா?? வீட்டுக்கு போகனும்... ம்ம்ம்ம் இன்னும் எதாவது சொல்லாம விட்டுட்டேனா?? அப்படி எதாவது இருந்தா சொல்லிவிடு வந்து கும்மறேன்.. :)))

இய‌ற்கை said...

No comments ....:-)))

மங்களூர் சிவா said...

/
இய‌ற்கை said...

No comments ....:-)))
/

ரிப்பீட்டு

सुREஷ் कुMAர் said...

//
முதலில் 16x16 அளவில் ஒரு படத்தை உருவாக்கி அதை image_name.png என்று சேமிக்கவும். பின் http://www.convertico.com/ என்ற இணையதளம் சென்று .png ஃபைலை .ico ஃபைலாக மாற்றிக் கொள்ளவும்.
//
மாற்றுவழியாக, ஃபோட்டோஷாப் தெரிந்திருதால், அதன்மூலம் நேரடியாக நமக்கு தேவையான படத்தினை .ICO ஃபைல் ஃபார்மேட்டாக சேமிக்கலாம்..

mayil said...

ஆவ்வ்வ்வ்வ்வ் ( கொட்டாவி) :)))

சுரேகா.. said...

எவ்ளோ மேட்டரு!
எல்லாமே சூப்பரு!
நல்லாருங்க தலைவரு!

சஞ்சய்தான்
அடுத்த முதல்வரு!

:))

கலகலப்ரியா said...

//
சில நாட்களுக்கு முன் வேலூர் சக்தி அம்மா?!//
ean anga ellaam poreega..? blog-ku sarakku maattumne povaainga pola..

//ஹிஹி.. நாந்தேன் //
ethu parasail-la thongarathaa..? naan ennangadaa ostrich parachute la thonguthunnu ninaichen..! (kodumaidaa.. bayaththila nadungirathu intha pic laye clear a theriyuthunga..)

சின்ன அம்மிணி said...

நிறைய மேட்டர் போட்டிருக்கீங்க. அவியல் மாதிரி இருக்கு. :)

சின்ன அம்மிணி said...

கோவைப்பதிவர்கள் திரட்டு நல்ல முயற்சி.

sakthi said...

No comments ....:-)))

sakthi said...

evlo periya postttttttttttttttttttt

sakthi said...

இவ்ளோ பெரிய போஸ்ட் எப்படி படிக்கிறது சஞ்சய் அண்ணா

Mitr - Friend said...

Ha ha ha... Had a hearty laugh Sanjay.. Its so funny. Esp the story about the temple... Ok. gold, silver coins, money is fine; but what's the point of credit cards.??? Wont they complain for a lost card and buy a new one. Or if someone takes it and manages to use it would they continue to pay the bill assuming that it's a donation..!!! Its freaky funny...!!!

ஆ.ஞானசேகரன் said...

பெருசா இருக்கே

ஆ.ஞானசேகரன் said...

எல்லாமே நல்லா இருக்கு நண்பா

க. பாலாஜி said...

//5 ஸ்டார் சாப்டற பணக்காரன் கிட்ட தான் மனசாட்சி பார்ப்பாங்களா?. அப்போ அன்றாடங்காய்சிக் கிட்ட திருடினா பரவால்லையா? நல்லா யோசிக்கிறாய்ங்கப்பு. //

நீங்களும் நல்லாதான் யோசிச்சிருக்கீங்கப்பு.

நல்லாருக்கு தல உங்க பதிவு.

வாழ்த்துக்களுடன் க.பாலாஜி (ஈரோடு)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோவையில் ஆயிரக் கணக்கான பதிவர்கள் இருக்கிறார்கள். தமிழில் எழுதுபவர்கள் பதிவுகளை மட்டும் திரட்டி பலத்தைக் காட்டலாம் என நினைத்து கோவைப் பதிவர்கள் என்ற சிறு திரட்டி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. படித்து மகிழவும். ///


ம்ம்ம்! அப்படியா!

வாழ்த்துகள்!

அப்புறம் குசும்பன் மாட்டர் சூப்பர்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவர் சிங்கை செந்தில்நாதன் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். காலம் கடந்துக் கொண்டே இருக்கிறது. தயவுசெய்து உங்களால் முடிந்த பன உதவியை உடனே செய்யுமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.
//

நன்றி சஞ்செய்!

குசும்பன் said...

மகிழ்ச்சியாக உணர்கிறேன் மாமா!
அண்ணனிடம் நன்றியை சொல்லிவிடு!

ஊர்சுற்றி said...

கோவையில ஆயிரக்கணக்கான பதிவர்களா?!!!


பெவிகான் பற்றி என்னுடைய இடுகைகள்...

கார்த்திக் said...

// இங்கிலாந்திற்கு மேல் படிப்பு படிக்க செல்கிறார். வாழ்த்துகள் தோழி. உங்கள் ஆசைப் படியே திரும்பி வந்து கோவையில் இண்டஸ்ட்ரி ஆரம்பிக்க வாழ்த்துகிறேன். //

நானுந்தான் ரயில்ல போறேன் ஒரு பொண்ணு...

எப்படி தல உங்களால மாட்டும்
அந்த ரகசியத்த சொல்லுங்க

நட்புடன் ஜமால் said...

கோவை பதிவர்களை ஒருங்கிணைத்த விடயம் அருமை.

குசும்ப்ஸ் டிசர்வ்

ப்ரியா said...

//சமீபத்தில் தமிழில் ஒரு அலுவல் கடிதம் எழுத வேண்டியதாகிவிட்டது. சில எழுத்துகளை எப்படி எழுதுவதென்றே தெரியாமல் விழித்தேன். நான் எதோ நினைத்து எழுத வேறு எழுத்துகள் வந்தன. கையெழுத்து மிக மிக கேவலமாய் இருந்தது. அசிங்கமாய் உணர்ந்தேன். அன்று முதல் தினமும் நளிதழைப் பார்த்து சில வரிகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போ தேறிவிட்டேன்//
தேறின மாதிரி தெரியலையே..."நாளிதழை" பாத்தா...

ஓகே ஓகே புரியுது, நீங்க ஒரு வாட்டி எழுதிட்டா, அத நீங்களே திரும்ப படிக்க மாட்டீங்க. எங்களுக்கு தான் அந்த தலை எழுத்து எல்லாம்.

கும்க்கி said...

வேலூர் போய் தொழில் ரகசியத்த கத்துட்டு வரச்சொன்னா.......என்னத்த சொல்ல.......

கும்க்கி said...

இன்னது டமில்ல எலுத வல்லியா..?

என்ன கொடும இது சஞ்சூஸ்?

SanjaiGandhi said...

ஆயில்ஸ்
நன்றி.. அந்தப் பதிவு ரொம்ப நல்லா இருக்கும்.. எல்லாப் புகழும் குசும்பனுக்கே..

வெயிலான்
ஹிஹி.. அதான் சொன்னேனே.. ஒருவாட்டி எழுதிட்டா என் பதிவை நானே படிக்க மாட்டேன்னு.. :) திகில் பயணம் தொடரனுமா? சோம்பேறித் தனம் தான்.. நீங்கள் தொடரலாமே :).. நீங்க திருப்பூர்.. அதனால் கோவை பட்டியலில் சேர்க்க முடியாது.. நீங்க ஆரம்பிச்சிட்டிங்களா? :)

கேபிளார்,
லாங் ஷாட்டுக்கே இந்த கமெண்டா? க்ளோஸ் அப் போட்டிருந்தா நிஜமா பாண்ட் படம் தான்னு சொல்லி இருப்பிங்க.. காஸ்ட்யூம் அப்டி தான் போட்டிருந்தேன். :)).. நீங்க நம்பனும்னு நான் தாய்லாந்துல எடுத்த போட்டோன்னு சொல்லி விளம்பரப் படுத்திக்க முடியுமா என்ன? :))

திருமதி ஸ்ரீமதி,
சந்தோஷமா.. நல்லா குதிச்சி விளையாடியாச்சா?. ஆமா எஸ் ஃபார் ஸ்ரீமதி தான். தங்கச்சி மேல அம்புட்டு பாசம் எனக்கு. :)

SanjaiGandhi said...

நன்றி இயற்கை.. தப்பிச்சேன் :)

நன்றி மங்களூராரே.

சுரேஷ்
போட்டோஷாப்ல .ico ஃபார்மேட் இல்லை டம்ரி. ஒருவேளை இருந்தால் விம் போட்டு விளக்கவும்..

மயில்,
ராம்க்கு வச்சிருந்த ஆப்பமும் சேர்த்து சாப்ட்டிங்களா.. கொட்டாவி பலமா வருது? ;)

சுரேகா
இதெல்லாம் நல்லா இல்லை.. எனக்கு பிரதமர் பதவி மட்டும் தான் வேணும். :)

கலகலப்ரியா,
ஹிஹி.. ப்ளாக்ல எழுத போகலை.. ஒரு பிக்னிக் போற மூட்ல தான் போனேன்.. அதான் கடுப்பு.. சாமி கும்பிட போறவங்களுக்கு பிடிக்குமோ என்னவோ? :)

ஓய்.. கொழுப்பா.. அது ஒரு ஸ்பீட் போட்.. நான் போனது Para Gliding.. எவ்ளோ ஹைட் தெரியுமா?.. பொறாமை உங்களுக்கு.. :)

சின்ன அம்மனி அக்கா,
நன்றி.. சீக்கிறம் நம்ம ஊருக்கு வந்துடுங்க.. உங்களையும் லிஸ்ட்ல சேர்த்துடறேன். :)

சக்தி,
இதெல்லாம் பெரிய போஸ்டா? உங்க கவிதை அளவுதானுங்க இருக்கு. :)

Mitr
படிச்சதுக்கே இப்டி சிரிச்சா, நேர்ல பார்த்த எனக்கு எப்டி இருந்திருக்கும்? அந்த க்ரெடிட் கார்ட் எல்லாம் வேலிடிட்டி முடிஞ்சதா இருக்கும். வெவரமா போட்டிருப்பானுங்க பக்த கேடிகள்.. :)

SanjaiGandhi said...

நன்றி ஞானசேகரன்..

நன்றி பாலாஜி..

நன்றி ஜோதி சார்..
செந்தில்நாதன் விஷயத்தில் சிங்கைப் பதிவர்கள் மீது ரொம்பவே வருத்தம். யார் உதவினாலும் ஓடிவந்து நன்றி சொல்றிங்க. உங்களுக்கு அவர் என்ன உறவோ அதே தான் எங்களுக்கும். எதற்கு நீங்க நன்றி சொல்லனும்.

குசும்பன்,
சொல்லிடறேன் மாமா..

நன்றி ஊர்சுற்றி. உங்கள் பதிவு பார்த்தேன். மிக எளிமையாக சொல்லி இருக்கிங்க. உங்க இகான் கலக்கல். :)

கார்த்திக்,
எளக்கியவாதி, ஏரியாவுக்கு ஒரு கைபுள்ள போதும். நீங்க எதுக்கு? அதான் ஸ்ட்ராங்கா பிடிச்சிட்டிங்களே.. இன்னும் என்ன சாமி வேணும்? ;))

நன்றி ஜமால்.. ஆமா குசும்பன் அதற்கும் மேலே தகுதியானவர் தான்..

ப்ரியா
வழி தெரியாத தவறி வந்ததே பெரிசு. வந்ததும் திட்டனுமா? அர்ஜுன் கிட்ட சொல்லி அடிப்பேன்.. ஜாக்கிறதை.. :)

கும்கி,
நீங்க தான் பக்கத்துல இருக்கிங்க. தொழிலை ஆரம்பிங்க.. நான் கல்லா கட்டிடறேன். :)

வால்பையன் said...

எனக்கு ஒரு ஃபெவிகான் ஐடி செய்து தர்றிங்களா?

ஈரோடு வரும்போது மசால் தோசை வாங்கிதர்றேன்!

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget