தத்துபித்துவம் - 3

கடந்த வியாழன் அன்று விஜ்ய டிவி சார்பில் கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் “கமலும் காதலும்” என்ற தலைப்பில் SPB தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. கமல் நடித்த படங்களில் இருந்து காதல் ரசம்( இதை கலந்து சோறு சாப்ட முடியுமா?) சொட்டும் 30 பாடல்களைப் பாடினார்கள். ஆரம்பத்தில் சுமாராகத்தான் இருந்தது. SPB , சித்ரா, சைந்தவி தவிர மற்றவர்கள் லேசாக அல்லது நல்லாவே சொதப்பினார்கள். அதுவும் ஸ்ரீதர் பார்த்தசாரதி வந்து பாடும் போதெல்லாம் மகாஜனங்கள் கொத்துக் கொத்தாக தடைகளைத் தாண்டி குதித்தோடினார்கள். முக்கால்வாசிக் கூட்டம் காலியான பின் எங்களையும் சேர்த்து சில நூறு பேர் மட்டுமே இருந்தோம். அதன் பிறகு தான் கச்சேரியே கலை கட்டியது. முதலில் மெலடி பாடல்களில் தட்டுத் தடுமாறின இளம் பாடகர்கள் பின் ஹைபிட்ச் குத்துப் பாடல்களில் பின்னிப் பெடலெடுத்தார்கள். கடைசியாக அனைவரும் சேர்ந்து சில பாடல்களின் சில வரிகளைப் பாடினார்கள். அட அட.. சூப்பரப்பு.. அதிலும் முதல் பாடலாக ”அம்மாவும் நீயே” பாடலைப் பாடின சைந்தவி அந்தப் பாடலைப் பாடுவதற்காகவே பிறவி எடுத்திருப்பார் போல. சபாஷ் சைந்தவி. சைந்தவிக்கும் இசை அமைப்பாளார் ஒருவருக்கும் காதல் இழையோடுவதாக சொல்லப் படும் வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என கண்ணீரும் கம்பலையுமாகக் கேட்டுக் கொள்கிறேன். சைந்தவி பாடல்களை ரசிக்க இங்கே

எப்போவுமே துக்கத்துல இருக்கிறவங்களை வச்சி காமெடி பண்ணா கடுப்பாய்டும். ஆனா சிலர் அதையும் மீறி ரசிக்க வச்சிடுவாங்க. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜஷேகர ரெட்டி விபத்தில் இறக்கவில்லையாம். விஜய் காங்கிரசில் சேர்வதாக வந்த செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டாராம். விஜய் நடித்த படங்களை மட்டும் வச்சிக் காமெடி பண்ணவங்களுக்கு இப்போ புதுசா அரசியலும் கிடைச்சாச்சி. விஜய் வச்சி காமெடி பண்ணி தினமும் லட்சக் கணக்கான ( ச்ச.. இதுக்கு தான் சாரு ப்ளாக் படிக்கக் கூடாதுன்னு சொல்றது.. அதுல சொல்லி இருக்கார் “காலையில் 10 முட்டை, ஒரு கிலோ மாமிசம், இரண்டு லிட்டர் பால்; மதியம் பத்து கோழி, 20 முட்டை, 2 கிலோ காய்கற்கள் என்று இப்படியாகப் போகும் அவர்களுடைய உணவுப் பட்டியல்.") SMS வரும்.

இளைஞர் காங்கிரஸ்ல சேர்வதற்கு 35 வயதை கடந்திருக்கக் கூடாதுன்னு சொன்னதும் நிறைய பேருக்கு குழப்பம். ராகுல்காந்திக்கு 39 வயது ஆய்டிச்சே. அவருக்கு இந்த விதி பொருந்தாதா என்று கேட்கிறார்கள். ராகுல்காந்தி , இளைஞர் காங்கிரசின் உறுப்பினர் கூட இல்லை. அவர் கட்சியின் பொதுச் செயலாளர். மற்றப் பொதுச் செயலாளர்கள் எல்லாம் எதாவது மாநிலங்களுக்கு பொறுப்பாளர்களாக இருப்பார்கள். ராகுல்காந்தி , மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரசிற்கு பொறுப்பாளராக இருக்கிறார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெயர் அசோக் தன்வர். மாணவர் காங்கிரஸ் தலைவர் பெயர் ஹிபி எடன்.

சில சமயங்களில் அரசியல் செய்திகள் படிக்கும் போது மிக அரியத் தகவல்கள் எல்லாம் எல்லாம் தெரியவரும். சமீபத்தில் ஜீவியில் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பம் பற்றிய செய்தி படித்தேன். அவருக்கு(ம்) மனைவி துணைவி இருக்கிறார்களாம். மனைவி சேலம் பூலாவாரியிலும் துணைவி சென்னையிலும் இருக்கிறார்கள். துணைவிக்கு பிரபு என்கிற மகன் இருக்கிறாராம். தற்போது சேலத்தில் துவங்கி இருக்கும் VSA பொறியியல் கல்லூரியின் தலைவராக மனைவி மகன் ராஜா MLAவும்( கருணாநிதி குடும்பம் போல் தந்தையும் மகனும் MLAவாக இருப்பது வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தில் தான்) தாளாளராக துணைவி மகன் பிரபுவையும் நியமித்திருக்கிறார். மேட்டர் இது இல்ல. வீரபாண்டியாரின் துணைவி , நடிகை மீனாவின் சொந்த சித்தியாம். வரலாறு முக்கியம் அமைச்சரே.

20- 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்த போது கிரிக்கெட்டின் பாரம்பரியம் அழியும் என பலரும் சொன்னதை மேலும் பலரும் மறுத்தார்கள். இப்போது சச்சின் டெண்டுல்கர் புது ஃபார்முலா வெளியிட்டிருக்கிறாராம். ஒரு நாள் போட்டியை 25 , 25 ஓவராக தவணை முறையில் ஆடினால் விறுவிறுப்பாக இருக்குமாம். நல்லா சொல்றாங்கய்யா ஓசனை. 20-20 போட்டிகள் அதிக அளவில் நடைபெற்ற கடந்த 12 மாதங்களில் தோனி தான் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராம். 50 கோடியுடன் தோனி முதல் இடத்திலும் 40 கோடியுடன் சச்சின் 2வது இடத்திலும் இருக்கிறாராம். ஸ்டேடியத்துக்கு வெளியே விளம்பரங்கள்ல நல்ல தான் ஆடறாங்க. இது கூட இல்லைனா எப்புடீ?. இதே ரீதியில் பின்னூட்டத்தில் ஐடியா தருபவர்களுக்கு அடுத்த 1-1 பால் கிரிக்கெட் போட்டியில் முதல் பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு வழங்கப் படும்.

TheRisingSun என்ற புதிய ஆங்கில வார இதழ் தமிழகத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. நிறுவனர் : முத்தமிழறிஞர் மு. கருணாநிதி. திமுக, தேசியக் கட்சியாக வளர்ந்துவிட்டதாக சொல்லப் படும் நிலையில் விரைவில் இந்தியில் வார இதழோ நாளிதழோ எதிர் பார்க்கலாம்.

உன்னைப் போல் ஒருவன் ட்ரைலர் பட்டையைக் கிளப்புது. இதன் இந்தி வெர்ஷனான Wednesday மிக அற்புதமாக இருந்தது. உ.போ.ஒருவன் இசை ஸ்ருதி கமல். ட்ரெய்லரில் அசத்தலாக இருக்கிறது. படம் பார்க்க ஆவலைத் தூண்டுகிறது.


அம்புட்டு தான்..

குழலி / Kuzhali  – (September 7, 2009 9:11 AM)  

//சமீபத்தில் ஜீவியில் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பம் பற்றிய செய்தி படித்தேன். அவருக்கு(ம்) மனைவி துணைவி இருக்கிறார்களாம். மனைவி சேலம் பூலாவாரியிலும் துணைவி சென்னையிலும் இருக்கிறார்கள். துணைவிக்கு பிரபு என்கிற மகன் இருக்கிறாராம். தற்போது சேலத்தில் துவங்கி இருக்கும் VSA பொறியியல் கல்லூரியின் தலைவராக மனைவி மகன் ராஜா MLAவும்( கருணாநிதி குடும்பம் போல் தந்தையும் மகனும் MLAவாக இருப்பது வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தில் தான்) தாளாளராக துணைவி மகன் பிரபுவையும் நியமித்திருக்கிறார். மேட்டர் இது இல்ல. வீரபாண்டியாரின் துணைவி , நடிகை மீனாவின் சொந்த சித்தியாம். வரலாறு முக்கியம் அமைச்சரே.
//
விடுங்க விடுங்க, தலைவர் எவ்வழியோ தொண்டர் அவ்வழி...

பிறந்த நாள் வாழ்த்துகள்...

சின்ன அம்மிணி  – (September 7, 2009 10:53 AM)  

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய்

ஆயில்யன்  – (September 7, 2009 11:18 AM)  

//”அம்மாவும் நீயே” பாடலைப் பாடின சைந்தவி அந்தப் பாடலைப் பாடுவதற்காகவே பிறவி எடுத்திருப்பார் போல. சபாஷ் சைந்தவி. //


இந்த லைன்ஸோடயே நிப்பாட்டியிருந்திருக்கலாம் எக்ஸ்ட்ரா லைன்ஸ்ல எக்ட்ஸ்ட்ரா பிட்டு போட்டு போங்க அண்ணாச்சி......!:(

ஆயில்யன்  – (September 7, 2009 11:19 AM)  

//இளைஞர் காங்கிரஸ்ல சேர்வதற்கு 35 வயதை கடந்திருக்கக் கூடாதுன்னு சொன்னதும் நிறைய பேருக்கு குழப்பம். ராகுல்காந்திக்கு 39 வயது ஆய்டிச்சே. அவருக்கு இந்த விதி பொருந்தாதா என்று கேட்கிறார்கள். ராகுல்காந்தி , இளைஞர் காங்கிரசின் உறுப்பினர் கூட இல்லை. அவர் கட்சியின் பொதுச் செயலாளர். மற்றப் பொதுச் செயலாளர்கள் எல்லாம் எதாவது மாநிலங்களுக்கு பொறுப்பாளர்களாக இருப்பார்கள்///


இதை தத்துபித்துவத்துல சொன்னது எனக்கு பயங்கர கொழப்பமா இருக்கு பாஸ் :))))))))))

கார்த்திக்  – (September 7, 2009 11:48 AM)  

பிறந்தநாள் நல்வாழ்துக்கள் தல.

இளைய கவி  – (September 7, 2009 12:58 PM)  

சஞ்ஜெய் அங்கிள் விஷ் யூ அ வெரி ஹாப்பி பர்த் டே. எனது மாமா சஞ்ஜெய் அவர்களே உங்களை வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்கி செல்கிறேன்.

MAHA  – (September 7, 2009 2:53 PM)  

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய்

அமிர்தவர்ஷினி அம்மா  – (September 7, 2009 4:08 PM)  

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஞ்சய்

அமிர்தவர்ஷினி அம்மா  – (September 7, 2009 4:08 PM)  

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஞ்சய்

வால்பையன்  – (September 7, 2009 5:45 PM)  

அங்கிள் கோவை வர்றோம்!
பிறந்த நாள் பார்டி வையுங்க!

அன்புடன் அருணா  – (September 7, 2009 6:54 PM)  

பிறந்தநாளுககு இப்பிடி ஏதாவது தத்துபித்து எழுதணும்னு வேணடுதலா?

Mrs.Menagasathia  – (September 7, 2009 7:14 PM)  

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

பொடிப்பொண்ணு  – (September 7, 2009 8:38 PM)  

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய்!!! :)

Heam  – (September 8, 2009 4:08 AM)  

//விடுங்க விடுங்க, தலைவர் எவ்வழியோ தொண்டர் அவ்வழி...
//

:)

அடடா அந்த இசை நிகழ்ச்சிக்கு நானும் வந்து இருந்தேன் நீங்க வந்தது தெரியமா போச்சே ... என் செல்பேசியை எவனோ கலைவாணி பய அடிச்சிடான் ..அதன் கால் பண்ண முடியல ..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !! Sanjai

கும்க்கி  – (September 8, 2009 7:08 AM)  

சைந்தவிக்கும் இசை அமைப்பாளார் ஒருவருக்கும் காதல் இழையோடுவதாக சொல்லப் படும் வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என கண்ணீரும் கம்பலையுமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

போட்டோ போடக்கூடாதா பாஸு.நாங்களும் கொஞ்சம் கண்ணீர் விட்டுப்பமுள்ள...

கும்க்கி  – (September 8, 2009 7:10 AM)  

வரலாறு முக்கியம் அமைச்சரே.....

ஒரு என்சைக்ளோபீடியா போடுமளவிற்கு வரலாறு உள்ளது அமைச்சரே...நாடு தாங்காது.

கும்க்கி  – (September 8, 2009 7:12 AM)  

அம்புட்டு தான்....

ஓகே..ஓகே..

கிச்சன்ல வேலையிருக்காக்கும்.

கும்க்கி  – (September 8, 2009 7:12 AM)  

ஆப்பி பர்த்டே...சஞ்சூ.

பட்டிக்காட்டான்..  – (September 9, 2009 1:11 AM)  

பிறந்த நாள் வாழ்த்துகள் சஞ்சய்..

இரா.சிவக்குமரன்  – (September 9, 2009 8:51 AM)  

லேட்டா சொன்னாலும் பரவாயில்ல!

ஆப்பி பர்த்டே...சஞ்சூ

SanjaiGandhi  – (September 22, 2009 5:24 PM)  

குழலி
இன்னா தல.. குஜாலாயிட்டு வந்து பின்னூட்டம் போடறிங்க.. ஆறுமொகத்துகிட்ட சொல்லி ஆளை முடிக்க சொல்லவா? :))

நன்றி சின்ன அம்மிணி அக்கா

நன்றி ஆயில்யன் ( அடி வாங்கப் போறிங்க:) )

நன்றி கார்த்திக்

நன்றி முதியகவி

நன்றி மஹா

நன்றி அமித்து அம்மா

நன்றி அமித்து அம்மா (ஹிஹி )

நன்றி வால் தாத்தா.. வரேன்னு சொல்லிட்டு வரவே இல்ல.. :)

நன்றி அருணாக்கா ( ஹிஹி.. உங்கள எல்லாம் இம்சை பண்ணத்தான் )

நன்றி மேனகா சிஸ்டர்..

நன்றி நித்யா.

நன்றி ஹீம்.. நானும் உங்களை நினைத்தேன். ஆனால் உங்களுக்கு நைட் ஷிஃப்டாக இருக்கும் என்று அழைக்காமல் விட்டுவிட்டேன். புது நம்பர் மெயில் பண்ணுங்க.

கும்கி
வயசான காலத்துல சைந்தவி போட்டோவா? :)

நன்றி ஸ்ரீமதி

நன்றி பட்டிக்காட்டான்

நன்றி சிவக்குமரன்..

வால்பையன்  – (September 22, 2009 5:25 PM)  

//வால் தாத்தா.. வரேன்னு சொல்லிட்டு வரவே இல்ல.. :)//

தாத்தா வந்தாரு! நான் தான் வரல!

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP