September 1, 2009

பரளிக்காடு சுற்றுலா - பதிவர்களுடன்

ரளிக்காடு : கோவையிலிருந்து 70 கிமீ தொலைவில் அழகானதொரு சுற்றுலா தலம். செல்வதற்கு ஒரு வாரம் முன்பே முன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நாட்கள் முன்பு. பரிசல் பயணம் தான் பிரதானம். அங்கு மொத்தமே 10 பரிசல்கள் தான் இருக்கின்றன. ஒரு பரிசலுக்கு 4 பேர் வீதம் ஒரு நாளைக்கு 40 பேருக்கு மட்டுமே அனுமதி. மேலும் 20 பேருக்கு மேல் முன் பதிவு செய்துகொண்டால் அவர்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கும் அற்புதமான மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறார்கள். பரளிக்காடு வனச் சுற்றுலா என்பது 2 இடங்களை உள்ளடக்கியது. ஒன்று பரளிக்காடு பரிசல்சவாரி. மற்றொன்று அத்திக்கடவு ஆற்றுக் குளியல்( பழக்கம் உள்ளவர்களுக்கு ) மற்றும் அருகில் மலையேற்றம்.

இரண்டு கட்டமாக பரிசல் பயன்படுத்தும் அளவு ஆட்கள் இருந்தால், ஒரு பிரிவை படகு சவாரிக்கும் மற்றொரு பிரிவை மலையேற்றத்திற்கும் அனுப்பிவிடுகிறார்கள். பின் மதிய உணவு முடித்து இடம் மாறிக்கொள்ள வேண்டியது தான்.

அங்கு 10 மணிக்கே வர வேண்டும் என சொல்லி இருந்ததால் காலை 7 மணிக்கு கிளம்ப திட்டமிட்டிருந்தாலும் மயில் விஜி வீட்டில் காலை உணவு முடித்து கிளம்ப 8.45 மணி ஆகிவிட்டது. வழியில் இரண்டு சோதனை சாவடிகளிலும் தெளிவாக வழி சொன்னார்கள். பரளிக்காடு செல்ல 10.30 மணிக்கு மேல் ஆனது. வன அலுவலர் திரு. சீனிவாசன் அவர்கள் இன்முகத்துடன் எங்களை வரவேற்றார். எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டதும் தேநீர் குடிக்க தந்தார்கள்.ஆரம்பமே அழகாய் இருந்தது. எங்களுக்கு முன்பே ஒரு மருத்துவத் தம்பதிகள் காந்திருந்தார்கள். நாங்கள் தான் தாமதம் என்று நினைத்தால் எங்களுக்கு பின்னும் சிலர் வந்தார்கள். அனைவரும் வரும் வரை ஓய்வெடுக்க பெரிய ஆலமரங்களுக்குக் கீழே நாற்காலிகள் போட்டிருக்கிறார்கள். குழந்தைகள் விளையாட ஆலமரத்தில் சில ஊஞ்சல்கள் அமைத்திருக்கிறார்கள். 10 பரிசலுக்குமான ஆட்கள் சேர்ந்ததும் பயணம் செல்ல தயாரானோம். 50 அடி ஆழ நீர்த்தேக்கம் என்பதால் லைஃப் ஜாக்கெட் அணிவித்து பாதுகாப்பாக அனுப்பினார்கள்

வெயிலும் நிழலும் மாறி மாறி அழகான க்ளைமேட். பரிசலையும் வெயிலிலும் கரையோர மரங்களின் ஊடாக நிழலிலுமாக செலுத்தி மேலும் இனிமையான பயணமாக்கினார்கள்.மிக நல்ல பரிசல் ஓட்டிகள். இனிமையாக பழகினார்கள். எனக்கும் கொஞ்ச நேரம் பரிசல் ஓட்டக் குடுத்தார்கள். என்னுடன் பயணித்தவர்கள் தான் திகில் தோய்ந்த முகத்துடன் இருந்தார்கள். என்னால் வேகமாக ஓட்ட முடியவில்லை. அவர்கள் ஒரு கட்டையின் மேல் அமர்ந்து சவுகரியமாக துடுப்புப் போடுகிறார்கள். நான் கேட்டபோது நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே செலுத்த சொல்லிவிட்டார். அவ்வளாவு சவுகர்யமாக இல்லை. ( இல்லைனா மட்டும் 100 கிமீ வேகத்துல ஓட்டிடற மாதிரி ).

சிறுது தூரம் சென்றதும் அனைத்துப் பரிசல்களையும் கரையோரம் நிறுத்திவிட்டு, காட்டில் சென்று பார்க்க சொன்னார்கள். இறங்கிய இடத்தில் காட்டெறுமையின் கொம்பு மற்றும் எலும்புக் கூடுகளை அடுக்கி வைத்திருந்தார்கள். அங்கு ஒரு புகைபடப்பிடிப்பு முடித்து கண்ணுக்கு தெரிந்த வழியில் காட்டிற்குள் சென்றோம். சிறிது தொலைவு சென்று பின் அதே வழியில் திரும்பி வருவதாக நினைத்து வழி தவறினோம். வழி கண்டுபிடிப்பதற்காக ஆளுக்கொரு திசையில் கொஞ்ச நேரம் தொலைந்து திரிந்தது ஆங்கிலப் படக் காட்சிகள் போல் இருந்தது. சினிமாவில் வருவது போல் பேர் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தோம். அழகான அனுபவம். பின் கரையை அடைந்து பயணத்தைத் தொடர்ந்தோம். பின் எதிர் கரை பக்கம் பயணம் செய்து திரும்பினோம். சுமார் இரண்டு மணி நேரம். மிக அற்புதமான பரிசல் பயணம். பரிசல்களை அருகில் செலுத்தி திண்பண்டங்கள் மாற்றிக் கொண்டதும் அறிமுகமே இல்லாத சக சுற்றுலாப் பயணிகளுடன் சந்தோஷமாய் பேசிகொண்டு வந்ததும் மறக்க இயலாத தருணங்கள்.
பரிசல் பயணம் முடிந்ததும் மதிய உணவு தயாராய் இருந்தது. அந்த பகுதி மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்களால் தயாரிக்கப் பட்டு மரிமாறப்பட்டது. உணவு வகைகள் ;
  • சர்க்கரைப் பொங்கல்
  • சப்பாத்தி
  • வெஜ் பிரியாணி
  • தயிர் பச்சிடியும் குருமாவும்
  • ராகி களி
  • கீரைக் குழம்பு மற்றும் கருவாட்டுக் குழம்பு.
  • தயிர்சாதம்
  • வாழைப் பழம்
மிக மிக சுவையாக சமைத்திருந்தார்கள். தேவையான அளவு சாப்பிடலாம். நானும் அண்ணாச்சி வடகரைவேலனும் போட்டிப் போட்டுக் கொண்டு களி சாப்பிட்டோம். என்ன இருந்தாலும் ஊரில் வீட்டில் கீரைக்குழம்புடன் ராகிக் களி சாப்பிடும் சுவை இல்லை. அதுவும் பழைய களியுடன் கெட்டித் தயிர் சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப சுவையா இருக்கும். அதை ஒப்பிட்டுப் பார்க்காமல் சாப்பிட்டால் சுவையே. ஆனாலும் மூன்று உருண்டைகள் உள்ளே தள்ளினேன். மற்றவை எல்லாம் மிக நன்று. நாற்காலிகள் தவிர வேறு ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதில்லை. யாரோ நீரில் போட்டுவிட்ட ப்ளாஸ்டிக் பை ஒன்றை பரிசலில் சென்று எடுத்துவந்தார்கள். அவ்வளவு சிறப்பாக பராமரிக்கிறார்கள்.
மதிய உணவு முடிந்ததும் திரு. சீனிவாசன் அவர்களுக்கு நன்றி சொல்லி கிளம்பினோம். அத்திக்கடவு செல்லும் வழியைத் தொலைத்து 15 கிமீ தூரம் சென்று திடீர் சந்தேகத்தில் திரும்பிவந்து சரியான பாதையை அடைத்து அத்திக்கடவு சோதனை சாவடி வந்தோம். அங்கே ஒரு வன அலுவலர் மலையேற்றத்திற்கான வழியை சொன்னார். வழிகாட்டவே அவரை நியமித்திருக்கிறார்கள் போல.
ஆற்றங்கரை அருகே ஏற்கனவே இருந்த ( எங்களுடன் பரிசல் பயணம் வந்தவர்கள்) வாகனங்களைக் கடந்து ஆற்றை அடைந்து ஆனந்தக் குளியல் போட்டோம். ஆற்றில் குளித்து( ஆற்றில் மட்டுமா? ) எத்தனை ஆண்டுகள் ஆகிறது. நீரின் வேகம் சற்று அதிகமாகவே இருந்ததாலும் பழக்கமில்லாத ஆறு என்பதாலும் ( நீர் சுழல் மற்றும் நீருக்கடியில் இருக்கும் பாறைகள் பற்றி தெரியாது) அதிக தூரம் நீந்த முடியவில்லை. சற்று உள் சென்றாலும் நீ நம்மையும் சேர்த்து இழுத்துச் செல்கிறது. எங்காவது பாறைகளை பிடித்துக் கொள்ளலாம் என்றாலும் அவைகளில் பாசிப் படிந்து இருக்கிறது. ஆனாலும் முடிந்த வரை ஆட்டம் போட்டோம். 4.30 மணிக்கு மேல் யானைகள் தண்ணீர் குடிக்க வரும் என்பதால் வெளியேற வேண்டும் என்றார்கள். அவைகளுக்கு எப்படி 4.30 ஆச்சின்னு தெரியும்? காட்டில் பெரிய கடிகாரம் இருக்குமோ? :) ( அய்ய.. மொக்கைடா சாமி ). மதியம் செம கட்டு கட்டியதாலும் ஆற்றுக் குளியலில் அதிக நேரம் செலவிட்டதாலும் மலையேற்றம் செல்லவில்லை.

வழியில் காரமடையில் காஃபி குடித்துவிட்டு கோவையை அடைந்தோம். ஒருநாள் சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். நேரம் போனதே தெரியவில்லை. ஆரம்பம் முதல் கடைசி வரை எங்குமே நேர விரயம் இல்லை. மிகச் சரியாக இருந்தது.

சுருக் தகவல்ஸ்
  • கோவையிலிருந்து பரளிக்காடு 70 கிமீ தொலைவில் இருக்கிறது.
  • மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை மற்றும் பில்லூர் அணை வழியாக செல்ல வேண்டும்.
  • பரிசல் சவாரிக்கு பெரியவர்களுக்கு ரூ.300
  • 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.200
  • 10 வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கு இலவசம்.
  • பரிசல் கட்டணம் மதிய உணவிற்கும் சேர்த்து தான்.
  • வழக்கமாக சனி ஞாயிறுகளில் மட்டுமே சுற்றுலா உண்டு. வார நாட்களில் 40 பேர் வரை முன்பதிவு செய்யும் நாட்களில் ஏற்பாடு செய்கிறார்களாம். அதற்கு நிச்சயம் ஒரு வாரம் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.
  • தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : திரு. சீனிவாசன் : +91 9047051011
  • தகவல்களுக்கு : http://coimbatoreforests.com/baralikaduEco.htm
நாம் செலுத்தும் கட்டணத்தில் பரிசல் ஓட்டுபவர்களுக்கு 150 ரூபாயும் உணவிற்கு ஒருவருக்கு 100 ரூபாயும் தருகிறார்களாம். மீதம் உள்ள பணம் அந்த பகுதி மக்கள் மேம்பாட்டிற்கு பயன்படுத்துகிறார்களாம். பரிசல் ஓட்டுபவர்கள் வார இறுதியில் இங்கும் மற்ற நாட்களில் வெளி வேலைக்கும் செல்கிறார்கள். உணவு கொடுத்த சுய உதவிக் குழுவினர் 2 ஆண்டுகளுக்கு முன் 10,000 முதலீட்டில் ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் 100 ரூபாயில் ஒருவருக்கான உணவுக்கு 35 ரூபாய் எடுத்துக் கொண்டு மாத சம்பளமும் எடுத்துக் கொண்டு உபரியாக ரூபாய் 80,000 சேமிப்பில் வைத்திருக்கிறார்களாம். சபாஷ்.

இரவில் தங்க புதியதாக 2 குடில்கள் அமைத்திருக்கிறார்கள். ஒரு குடிலுக்கு ரூ.2000 வாடகை. 5 பேர் வரை தங்கலாம். குளியலறை வசதியும் உண்டு. பெண்கள், குழந்தைகளுடன் தங்குவது பாதுக்காப்பாக இருக்குமா என்பது தெரியவில்லை. யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு என்கிறார்கள்.

மொத்தத்தில் அரசு நடத்தும் சுற்றுலாப் போல இல்லாமல் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து குடும்பத்தில் ஒருவர் போல பழகிய திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் சேவையைப் பாராட்டினால்தான் இப்பதிவு முழுமை பெறும்.

டிஸ்கி: இதுவரை பல சுற்றுலாப் பதிவுகள் எழுதி இருந்தாலும், உரையாடல்கள் எல்லாம் எழுதி படிப்பவர்களைக் கொட்டாவி விட வைக்கும் மோசமான பதிவுகளாகவே எழுதி இருக்கிறேன். சுற்றுலாப் பயணங்கள் பற்றிய பதிவுகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் எனபதற்கு தோழி. MITR பதிவுகளே சான்று. பிரமிக்க வைக்கும் வகையில் அற்புதமாக விவரங்களுடன் எழுதுகிறார்.அவரைப் போல் ஒரு பதிவாவது வாழ்வில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தின் முதல் முயற்சி இந்தப் பதிவு. பல இடங்களைப் பற்றி அந்த ஊர்க்காரர்களுக்கே தெரியாத தகவல்களுடனும் படங்களுடனும் எழுதி இருக்கிறார்.

மேலும் படங்களுக்கு :

42 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டூ ! :))

ஆயில்யன் said...

//"பரளிக்காடு சுற்றுலா - பதிவர்களுடன்"///


பதிவர்களுடனா? சரி அப்ப மெதுவா வந்து படிச்சுக்கிறேன் :)) நான் எதோ நீங்க தேன் சூரியனை பார்க்க போயிருப்பீங்கன்னுல்ல நினைச்சேன்

ஆயில்யன் said...

/வெறும் 50 அடி ஆழ நீர்த்தேக்கத்தில் செல்ல லைஃப் ஜாக்கெட் அணிவித்து அவமானப் படுத்தினார்கள் :).///

ஏன் பாஸ் 50 அடியும் ஒரு ஆழம்தானே !

அரசு ஊழியர்களின் கடமை உணர்ச்சி உங்களுக்கு பொறுக்காதே???

ஆயில்யன் said...

//தோழி. MITR பதிவுகளே சான்று. பிரமிக்க வைக்கும் வகையில் அற்புதமாக விவரங்களுடன் எழுதுகிறார்///

ஆமாம் பாஸ் போட்டோஸ் & விபரங்கள் செம கலக்கலா இருக்குது !

நன்னி பகிர்வுக்கு :)

Mitr - Friend said...

Hey Sanjai,
This seems to be a great place and fantastic experiences...
So nice of u to share all details including prices and phone no.s..
Gotta visit soon.

Btw, thanks a ton for mentioning my name. I am overwhelmed... Its so flattering and am glad... :)

My Travelogue, Thozhi-Mitr-Friend, Savoir-Faire

நாடோடி இலக்கியன் said...

சஞ்சய், தெளிவான விவரங்களுடன் அருமையானக் கட்டுரை.

இனி இதை மாதிரி ஃபாலோ பண்ண வேண்டியது தான்.

ஸ்ரீமதி said...

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய் நல்லா எழுதிருக்க அண்ணா.. :))

எவனோ ஒருவன் said...

அருமையா சொல்லியிருக்கீங்க. நன்றி.

sakthi said...

இரண்டு கட்டமாக பரிசல் பயன்படுத்தும் அளவு ஆட்கள் இருந்தால், ஒரு பிரிவை படகு சவாரிக்கும் மற்றொரு பிரிவை மலையேற்றத்திற்கும் அனுப்பிவிடுகிறார்கள். பின் மதிய உணவு முடித்து இடம் மாறிக்கொள்ள வேண்டியது தான்.

அப்படியா

sakthi said...

நல்ல பகிர்வு

குசும்பன் said...

//பரிசல் ஓட்டுபவர்களுக்கு 150 ரூபாயும் உணவிற்கு ஒருவருக்கு 100 ரூபாயும் தருகிறார்களாம். //

மாமா பரிசலை நான் ஓட்டுகிறேன் அவர் சரியான டுபுக்கு மாமா. பதிவு போட்டு வேண்டும் என்றாலும் பரிசலை ஓட்டுகிறேன் பணம் எப்ப எங்க கொடுப்பாங்கன்னு சொல்லு மாமா:)

மின்னுது மின்னல் said...

ரைட்டு..:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா எழுதியிருக்கீங்க சஞ்சய். பரளிக்காடு பார்க்கணும்னு ஆசையா இருக்கு :)

மின்னுது மின்னல் said...

MITR பதிவுகளே சான்று.
//

ஆமா எதோ இங்கிலிசுபிசுல எழுதியிருக்காங்க :(

இரா.சிவக்குமரன் said...
This comment has been removed by the author.
மின்னுது மின்னல் said...

மாமா பரிசலை நான் ஓட்டுகிறேன் அவர் சரியான டுபுக்கு மாமா. பதிவு போட்டு வேண்டும் என்றாலும் பரிசலை ஓட்டுகிறேன்
//

ஆமா காசே கொடுக்கலைனாலும் பரவாயில்லை இவரு ஓட்டுவாரு :)

கார்த்திக் said...

தல அருமையான பதிவு
உங்க கூட நாங்களும் வந்தாமாதிரி ஒரு பீலிங்.என்னாதான் நீங்க பெரிய இலக்கியவாதியா இருந்தாலும் என்னப்போல பாமரனுக்கும் புரியுரமாதிரி எழுதுரீங்க பாருங்க அங்க அங்க தான் நீங்க நிக்குரீங்க.

// MITR பதிவுகளே சான்று //

நீங்க சொன்னீங்கலேன்னு அங்க போயி பாத்தேன்
சாரி அங்க ஒரே பீட்டரு தல
சோ மீ அப்பீட்டு :-))

ஆ.ஞானசேகரன் said...

ஆகா,... நல்ல பயனக்கட்டுரை மிக்க நன்றி... நாங்களும் வந்த உணர்வை கொடுக்கின்றது..

லவ்டேல் மேடி said...

ஆஹா... நல்ல குளு..குளு.. பயணக் கட்டுரை...!! இந்த பதிவுல எனக்கு புடுச்ததே ... அந்த மதிய உணவு மெனு லிஸ்டுத்தான் .....!! அடா.. அடா... அடா... அருமை... அருமை....!!

குசும்பன் said...

//நானும் அண்ணாச்சி வடகரைவேலனும் போட்டிப் போட்டுக் கொண்டு களி சாப்பிட்டோம். என்ன இருந்தாலும் ...//

வேலூர் ஜெயிலில் சாப்பிட்ட களி மாதிரி இல்லீயா மாமா?... அண்ணாச்சின்னு பேரு இருந்தாலே சிறைக்கு செல்வார்களா? :)))

RAMYA said...

அற்புதமான இடம், உங்கள் பயணக் கட்டுரையும் தான்!

அடுத்த பிக்னிக் அங்கே தான்.

அதான் உபயோகமான தகவல்கள் கொடுத்துள்ளீர்களே!

நன்றி சஞ்சய் :))

Mitr - Friend said...

@Ayilyan,
நன்றி... :)

@Karthik,
/சாரி அங்க ஒரே பீட்டரு தல
சோ மீ அப்பீட்டு :-))//
இதில் Sorry, Peter, So, Me ஆகியவை ஆங்கில வார்த்தைகள். Appeat என்பது என்ன மொழியோ, யாமறியோம். உங்களுக்காகவே என் தமிழ் பதிவு Thozhi-Mitr-Friend இருக்கிறதே...
My Travelogue, Thozhi-Mitr-Friend, Savoir-Faire

SanjaiGandhi said...

Mir டென்ஷன் வேண்டாம். கார்த்திக் அதை சீரியசாக சொல்லவில்லை. அவர் என்னைவிட ஜாலியானவர். நீங்க என் நண்பர் என்பதால் விளையாட்டாக சொல்லி இருக்கிறார். உங்கள் கட்டுரைகள் பலரையும் சென்றடைய வேண்டிய அளவுக்கு சிறப்பானவை. அதனால் பெரும்பான்மையானோர் படிக்கும் மொழியில் எழுதுவது தான் சிறந்தது. தொடருங்கள்.


அய்யா எளக்கியவாதி கார்த்தி, பார்த்திங்களா என் ஃப்ரண்ட் எப்டி மடக்கினாங்கன்னு? :)) அவங்க சஞ்சய் ஃப்ரண்ட்.. ஞாபகம் இருக்கட்டும். உங்க ஊர் பத்திக் கூட எழுதி இருக்காங்க. படிச்சி பாரும். அதெல்லாம் உங்களுக்கே தெரியாத தகவலா இருக்கும்..:))

SanjaiGandhi said...

Mitr
//Btw, thanks a ton for mentioning my name. I am overwhelmed... Its so flattering and am glad... :)//

you deserve it baby.. நான் இந்தப் பதிவை இந்த மாதிரி எழுதக் காரணமே நீங்க தான். என்னை எப்போதும் நக்கலடிக்கும் நண்பர்கள் பலரும் இந்த மாதிரி எழுதுவது நன்றாக இருப்பதாக சொன்னார்கள். எல்லாப் புகழும் என் குருவிற்கே. :)
தகவல் விவரங்கள் எல்லாம் கொடுத்தது உங்கள் பதிவுகள் பார்த்து தான். நன்றி நன்றி நன்றி..

இப்போ சொல்றேன் குறிச்சி வச்சிக்கோங்க. என்னைக்காவது ஒரு நாள் உங்கள மாதிரியே ஒரு பயணப் பதிவாவது எழுதுவேன். அந்த நாள் என் வாழ்வில்... ஹிஹிஹி....

கார்த்திக் said...

// இதில் Sorry, Peter, So, Me ஆகியவை ஆங்கில வார்த்தைகள். Appeat என்பது என்ன மொழியோ, யாமறியோம்.//

நண்பரே நான் சும்மா விளையாட்டுக்குத்தாங்க அப்படி சொன்னேன்.நிச்சயம் உங்கள கிண்டல்பண்ணும் நோக்கத்துலையோ காயப்படுத்தனும்னோ சொல்லல.
ஒருவேள நீங்க அப்படி உண்ர்ந்தா அதுக்கு ஒரு பெரியா மாப்பூ கேட்டுக்குறேன் :-))

// அய்யா எளக்கியவாதி கார்த்தி, பார்த்திங்களா //

அது யாருங்க
தல இதுக்கு நீங்க என்ன நல்லாவே திட்டிருக்கலாம் :-))

Mrs.Menagasathia said...

நல்ல பதிவு!!நன்றி.

கலகலப்ரியா said...

nammalukku vela thalaiya thinnuthu.. neenga sutrulaa poittu vanthu veruppethureengala.. irunga nidhanama padikkaren..

சின்ன அம்மிணி said...

பொறாமையாக இருக்கிறது .
அழகான இடமாக இருக்கிறது பரளிக்காடு.

கலகலப்ரியா said...

//( இல்லைனா மட்டும் 100 கிமீ வேகத்துல ஓட்டிடற மாதிரி )
( ஆற்றில் மட்டுமா? ) .//
ரொம்ப உஷாரோ.. நான் கேட்கணும்னு நினைச்சேன்.. அப்புறம் பார்த்தா அடைப்புக்குள்ளார இருக்கு..

//#
# 10 வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கு இலவசம்.//
இலவசமா பரிசல் சவாரி போயிட்டு வந்து இப்டியா..

தகவல்களுக்கு ரொம்ப நன்றி.. நெக்ஸ்ட் ட்ரிப் அங்கதான்.. என்ன நாமன்னா முன்னூறு கொடுத்து பரிசல் சவாரி பண்ணனும்.. ஹ்ம்ம்..

SanjaiGandhi said...

//# 10 வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கு இலவசம்.//
இலவசமா பரிசல் சவாரி போயிட்டு வந்து இப்டியா..
//

நன்றி ப்ரியா.. நீக்களாச்சும் என்னை பொடியன்னு நம்பறிங்களே.. ;)


//நெக்ஸ்ட் ட்ரிப் அங்கதான்.. என்ன நாமன்னா முன்னூறு கொடுத்து பரிசல் சவாரி பண்ணனும்.. ஹ்ம்ம்..//
எனக்கு ஃப்ரீ தானே. மறக்காம கூட்டிட்டுப் போங்க. இப்போ அந்த காட்டு வழியும் தெரிஞ்சிகிட்டேன்.. தொலைஞ்சிப் போகாம பார்த்துப்பேன்..:)

விக்னேஷ்வரி said...

நல்லா என்ஜாய் பண்ணதோடு இல்லாமல், நல்லா எழுதியும் இருக்கீங்க. அடுத்த முறை கோவை போகும் போது போய் பார்த்திட வேண்டியது தான் இந்த இடத்தை.

செல்வேந்திரன் said...

நடுக்காட்டில் திடீரென சிங்கம் வந்ததையும் அண்ணாச்சி சிங்கத்துடன் போராடி அதன் வாயைக் கிழித்து எறிந்ததையும் அவையடக்கம் கருதி குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தப் பயணத்தின் முதுகெலும்பாக செயல்பட்ட தினத்தந்தி நிருபருக்கு ஒரு நன்றி கூட சொல்லாததைக் கண்டிக்கிறேன்.

மங்களூர் சிவா said...

சூப்பர் சஞ்சய்!

மங்களூர் சிவா said...

/
மதியம் செம கட்டு கட்டியதாலும் ஆற்றுக் குளியலில் அதிக நேரம் செலவிட்டதாலும் மலையேற்றம் செல்லவில்லை.
/

இல்லைனா மட்டும்
:)))))))))))

வால்பையன் said...

போயிட்டு வந்த பின் சொல்ற உங்க பண்பை பாராட்டுறேன்!

கலகலப்ரியா said...

//
நன்றி ப்ரியா.. நீக்களாச்சும் என்னை பொடியன்னு நம்பறிங்களே.. ;)//

நம்பிக்கைதானே தம்பீ வாழ்க்கை..

//
எனக்கு ஃப்ரீ தானே. மறக்காம கூட்டிட்டுப் போங்க. இப்போ அந்த காட்டு வழியும் தெரிஞ்சிகிட்டேன்.. தொலைஞ்சிப் போகாம பார்த்துப்பேன்..:)//

அது என்னமோ வாஸ்தவம்.. இதில கூட எனக்கு நம்பிக்கைதான்.. ஆனா நீங்க தொலைஞ்சு போகாம நான் பார்த்துப்பேன்னு என்ன guarantee சொல்லுங்க..

பட்டிக்காட்டான்.. said...

நல்ல பயணம்..

//.. வால்பையன் said...

போயிட்டு வந்த பின் சொல்ற உங்க பண்பை பாராட்டுறேன்! ..//

ஹா.. ஹா..

எனக்கு :-)
அவருக்கு :-(

Mitr Friend said...

@Sanjai,
//நான் இந்தப் பதிவை இந்த மாதிரி எழுதக் காரணமே நீங்க தான்.எல்லாப் புகழும் என் குருவிற்கே. :)//
Oh my.... This is so flattering... Thanks dear... Thanks a lot...

@Karthik,
//ஒருவேள நீங்க அப்படி உண்ர்ந்தா அதுக்கு ஒரு பெரியா மாப்பூ கேட்டுக்குறேன் :-))//
No no.. I didn't take it seriously... No need of maappu... :)

My Travelogue, Thozhi-Mitr-Friend, Savoir-Faire

SanjaiGandhi said...

ஆயில்ஸ், அதென்ன தேன் சூரியன் ? பிரிலையே அண்ணா.. நமக்கு 50 அடி எல்லாம் ஒரு ஆழமே இல்லையே ஆயில்ஸ்.. ஆனாலும் அநியாயத்துக்கு நல்ல ஆபிசருங்க அவரு.. நன்றிங்கணா.. mitr ப்ளாக்ல எல்லா பதிவும் படிங்க.. அம்மணி கலக்கி இருப்பாங்க.. :)

நன்றி நாடோடி.. இப்டியே பாலோ பண்ணுங்க.. :)

நன்றி ஸ்ரீமதி..

நன்றிங்க எவனோ ஒருவன்..

நன்றி சக்தி..

நன்றி குசும்பன் மாம்ஸ்.. விரைவில் பரிசலை ஓட்டுவது எபப்டி என்ற் பதிவை எதிர்பார்க்கிறேன்.. ;)

நன்றி மின்னல்..

நன்றி சுந்தர்ஜி.. வாங்க போய்டுவோம்.. :)

SanjaiGandhi said...

கார்த்திக் நன்றி.. அங்க போனாலும் போனிங்க..அக்கப் போரை ஆரம்பிச்சிட்டிங்க.. :)

நன்றி ஞானசேகரன்

நன்றி புது மாப்பிள்ளை மேடி. :)

குசும்பா, அண்ணாச்சி கிட்ட கேட்டு சொல்றேன்.. :)

நன்றி ரம்யாக்கா..

நன்றி மேனகா சிஸ்டர்..

நன்றி கலகலப் ப்ரியா..

நன்றி சின்ன அம்மிணி அக்கா.. அடுத்த வாட்டி ஊருக்கு வரும் போது போய்ட்டு வாங்க.. :)

SanjaiGandhi said...

நன்றி விக்னேஷ்வரி.. :)

செல்வேந்திரன்,
//இந்தப் பயணத்தின் முதுகெலும்பாக செயல்பட்ட தினத்தந்தி நிருபருக்கு ஒரு நன்றி கூட சொல்லாததைக் கண்டிக்கிறேன்.//
ஹிஹி.. உங்க செலவுல இன்னொருவாட்டி போய்டுவோம்.. என்ன கஷ்டம்? :))

நன்றி மங்களூராரே..
மாம்ஸ்.. நானெல்லாம் காட்டுப் பய மாம்ஸ்.. மலையேற்றம் எல்லாம் பெரிய மேட்டரே இல்லை.. :)

வால்,
நாங்க சாதா தண்ணியில இருந்தோம் வால். உங்களுக்குத் தான் அதெல்லாம் ஒத்துக்காதே.. அதான் சொல்லலை.. :)

நன்றி பட்டிக்காட்டான்.. வாலுக்கும் எதிரிகள் இருக்கத் தான் செய்றாங்க.. :)))

Mitr - ப்ரொஃபைல் படம் எல்லாம் மாத்திக் கலக்கரிங்க.. உடன் இருப்பவர் யாரோ? :)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நான் மேட்டுப்பாளையம் தான்.. இவ்வளவு பக்கத்தில் ஒரு அருமையான பகுதியை நான் பார்க்காமல் இருந்திருக்கிறேன்.. உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி..

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget