September 3, 2009

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்


காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆந்திராவில் மிகத்திறமையாகவும் மக்களின் நன் மதிப்புடனும் ஆட்சி செய்து பலத்தப் போட்டிகளுக்கிடையே ஆந்திர மக்களால் தொடர்ந்து இரண்டாவது முறையாக மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்தவருமான முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கும் அவருடன் பயணித்து மரணம் அடைந்த விமான ஓட்டிகள், அரசு அலுவலர்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.

  • பிறந்தது : ஜூலை 8, 1949
  • மருத்துவர்
  • நான்கு முறை ஆந்திர சட்ட மன்றத்திற்கும் நான்கு முறை பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
  • போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வென்றவர்.
  • இரண்டு முறை ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர்.
  • ஒரு முறை ஆந்திர சட்டசபை எதிர்கட்சித் தலைவராக இருந்தவர்.(1999-2004)
  • 2004 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 185 தொகுதி வெற்றிகளுடன் முதல்வராக இருந்தார்.
  • 2009 தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றி பெற்று முதல்வராகத் தொடர்ந்தார்.
  • 2009 பாராளுமன்றத் தேர்தலில் 33 தொகுதிகளில் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்.
  • செப்டம்பர் 2, 2009ல் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்கும் அகில இந்திய அளவிலும் மிகப் பெரும் இழப்பு. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

34 comments:

குசும்பன் said...

:(((

கோவி.கண்ணன் said...

அண்டை மாநில முதல்வருக்கு ஆழ்ந்த அஞ்சலி.

பரிசல்காரன் said...

:-(

லவ்டேல் மேடி said...

தனது நாட்டில் நல்லவர்களே இல்லையென்று ... நம்முலகில் உள்ள நல்லவர்களை நயவஞ்சகத்தில் கொன்றுகுவிக்கும் இறைவனுக்கு கண்டனங்களுடன்.... நல்ல உள்ளம் படைத்த தெய்வத்திரு.ராஜசேகர ரெட்டி அவர்களுக்கு என் மலர் மற்றும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்..!!

யுவகிருஷ்ணா said...

அஞ்சலிகள்! :-(

யுவகிருஷ்ணா said...

ராஜசேகர ரெட்டியின் இழப்பு காங்கிரஸ் பேரியக்கத்துக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பு!

ஆந்திராவில் காங்கிரஸ் இயக்கத்தை தழைத்தோங்கி வளரச்செய்தவர்.

ஆந்திர காங்கிரஸ் கமிட்டிக்கு இரங்கல்கள்!!

வடகரை வேலன் said...

வருத்தமா இருக்கு சஞ்சய். எப்படியும் மீட்டிவிடுவார்கள் என இந்த நிமிடம் வரை நினைத்திருந்தேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

மிகுந்த வருத்தம் தந்த செய்தி. எனது அஞ்சலி.!

ஜோசப் பால்ராஜ் said...

எப்படியும் உயிருடன் திரும்புவார் என்றே நம்பினேன்.
திறமையான மனிதர். காங்கிரஸ்க்கு பேரிழப்பு.
அவரது ஆன்மாவும், உடன் இறந்தவர்களது ஆன்மாவும் சாந்தியடைய வேண்டுகிறேன்.

முத்துகுமரன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்..

நல்ல தலைவர்களை விபத்துகளில் இழப்பது காங்கிரஸ் கட்சியில் மட்டும் தொடர்கதையாக உள்ளது

செல்வேந்திரன் said...

Kadaisila neenga sonnathuthan nadanthiruchi.....

நிகழ்காலத்தில்... said...

ஹெலிகாப்டர் GPS கருவி இல்லை, இதை அரசியல்வாதிகள் கவனிப்பார்களா?

உயிர்கள் பலி, நமது தேசத்தில்தான் இது சாதரணம்,

என் ஆழ்ந்த அனுதாபங்கள்

ஜோ/Joe said...

ஆழ்ந்த அனுதாபங்கள் :((

Robin said...

ராஜசேகர ரெட்டியின் மறைவு நாட்டிற்கே ஒரு பேரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள்.

செந்தழல் ரவி said...

அஞ்சலிகள். !!

சதியாக இருக்க வாய்ப்புண்டு.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:(((

ஆயில்யன் said...

:(

இய‌ற்கை said...

மீட்டு விடுவார்கள் எனக் காலை முதல் டிவி முன்னே இருந்தேன்..ம்ம்ம்..ஆழ்ந்த அஞ்சலிகள்

வால்பையன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்!

நிஜமா நல்லவன் said...

:(

Cable Sankar said...

ஆழ்ந்த இரங்கல்கள்.:(

Mrs.Menagasathia said...

ஆழ்ந்த இரங்கல்கள்..

T.V.Radhakrishnan said...

அஞ்சலிகள்! :-(

பேரு முருகேஷ் பாபு said...

நெஞ்சார்ந்த அஞ்சலி!

கலகலப்ரியா said...

sry! :(

vijayakumar said...

நெஞ்சார்ந்த அஞ்சலி!

நட்புடன் ஜமால் said...

வருத்தம் தான்.

குடுகுடுப்பை said...

ஆழ்ந்த அஞ்சலிகள்.

புருனோ Bruno said...

அவரின் இரு முக்கிய சாதனைகள் குறித்த எனது இடுகை இங்குள்ளது

பீர் | Peer said...

ஆந்திர மக்களுக்கு பேரிழப்பு :(

ஆழ்ந்த அஞ்சலி.

பட்டிக்காட்டான்.. said...

ஆந்திர முதல்வருக்கு எனது கண்ணீர் அஞ்சலி..

சின்ன அம்மிணி said...

ஆந்திர முதல்வருக்கு என் அஞ்சலி

cheena (சீனா) said...

நல்லவர்களை ஆண்டவன் அருகில் அழைத்துக் கொள்கிறான். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்.. என் ஆழ்ந்த அஞ்சலி...

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget