மாணவி தற்கொலை - யார் குற்றம்?
வடகரைவேலன் அண்ணாச்சி, சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்ட கோவை மாணவி பற்றிய செய்தியை கதம்பத்தில் எழுதி இருக்கிறார். அது ஆழமான விவாதத்திற்கு உரிய செய்தி. அந்த மாணவியின் மரணத்திற்கு பெற்றோரும் காரணம் என்பது போல் சிலர் சொல்லி இருந்தார்கள். என் பார்வையில் ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகமே குற்றவாளிகள். பள்ளியில் பாடத்துடன் சேர்த்து ஒழுக்கமும் கற்றுக் கொடுப்பது ஆசியர்களின் கடமை தான். ஆனால் ஒழுக்கத்தை மிரட்டலின் மூலம் கற்றுக் கொடுக்கக் கூடாது. இப்போது இருக்கும் மட்டமான கல்வி முறையை பின்பற்றிக் கொண்டு விட்டு, அந்த மாணவி காப்பி அடித்ததை எந்த வித்தத்திலும் நியாயப் படுத்தவில்லை.
ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் சிலவற்றை யோசித்திருக்க வேண்டும். முதலில் அந்த மாணவியின் மனநிலை அறிந்திருக்க வேண்டும். எது போன்ற தண்டனைகளை அவளால் தாங்கிக் கொள்ள முடியும் அல்லது எந்த முறையில் அவளைத் திருந்த வேண்டும் என்பதை யோசித்திருக்க வேண்டும். வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் “ ஒருத்தனைப் பார்த்ததும் அவன் கிரிமினலா இல்லையான்னு கண்டு பிடிக்க முடியாதவன் என்னைய்யா போலிஸ்காரன்?” என்பார். அதே போல், மாதக் கணக்கில் நெருங்கிப் பழகியும் ஒரு மாணவியின் மனநிலைப் புரியாதவர் என்ன ஆசிரியர்?.
அந்த மாணவி ரொம்ப சென்சிடிவாக இருக்கும் பட்சத்தில், அப்போதைக்கு சாதாரனமாக அவரை கண்டித்து விட்டு , தொலைபேசி வாயிலாகவோ கடிதம் மூலமோ அந்த மாணவியின் தவறை அவள் பெற்றோருக்குத் தெரிய படுத்தி , மிகக் கடுமையாக நடந்துக் கொண்டால் ஏற்பட சாத்தியமாகும் விளைவுகளைப் புரியவைத்து , மென்மையாக அவளுக்குப் புரியவைக்க சொல்லி திருத்தி இருக்க வேண்டும். அதை விட்டு, எடுத்த எடுப்பிலேயே உன் பெற்றோரை அழைத்து வா என்பது மிருகத் தனம். அந்த மாணவி , தான் செய்த தவறை தன் பெற்றோரிடமே சொல்லி அதற்காக பள்ளிக்கு அழைக்கிறார்கள் என்பதை எப்படி தைரியமாக சொல்வாள்?. பெரும்பாலான பெற்றோர்களுக்கு, தன் பிள்ளைகளின் சிறு பிழைகளைக் கூட பொறுமையாக யோசித்து அறிவுரை சொல்லும் மனப் பக்குவம் கிடையாது. உடனே அடிப்பார்கள். அல்லது வேறு யாருடனாவது ஒப்பிட்டு மனதில் நீங்காத காயத்தை எற்படுத்துவார்கள். இது போன்ற சூழலில் அந்த மாணவியிடம் அவர் பெற்றோரை அழைத்து வர சொன்னது பெரும் குற்றம்.
பொறுப்பாக இருக்க வேண்டிய ஆசிரியையே யோசிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் போது, அந்த சிறுமியின் அவசர புத்தியை எப்படி குறை சொல்வது?. போதிக்கும் நிலையிலிருபப்வர்களே யோசிக்காமல் கடுமையாக நடந்துக் கொண்டு தண்டனைக் கொடுக்கும் போது, அவ்வளவாக படிப்பறிவில்லாதவர்கள் அல்லது தங்களால் முடியாததை தங்கள் பிள்ளைகள் மூலம் அடையத் துடிக்கும் பெற்றோர்கள் பொறுமையாக நடந்துக் கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?. எப்படிப் பார்த்தாலும் ஆசிரியை செய்ததே பெரிய தவறாக தெரிகிறது.
மேலும் பாடப் புத்தகங்களை மனப்பாடம் செய்ய வைப்பதில் காட்டும் அக்கறையில் 1 சதவீதம் கூட மாணவர்களுக்கு மனவலிமை கிடைக்க செய்யும் எந்த பயிற்சியையும்பெரும்பாலான பள்ளிகள் அளிப்பதில்லை. முதலில் இந்த பாழாய்ப் போன தேர்வு முறைகளையும் மதிப்பெண் முறைகளையும் ஒழிக்க வேண்டும்.
அந்த மாணவி தன் உள்ளங்கையில் எழுதி வைத்திருந்த வாசகம் :
“sorry, everybody... give everyone a chance 2 change”
இனியும் இது போன்ற மரணங்கள் நிகழாமல் தவிர்க்க வேண்டும்.
:(
முதலில் மாணவியிடம் பேசிவிட்டு, அப்படியும் சரிப்படாவிட்டால் பெற்றோர்களிடம் பேசவேண்டும்.
எல்லாப்பள்ளிமாணவர்களின் பெற்றோர்கள் தொடர்பு எண் பள்ளி நிர்வாகத்திடம் இருக்க வேண்டும். அவர்களே நேராக பெற்றோரிடம் பேசலாம்.
நான் 8 வது படிக்கும் போது பரிட்ச்சை எழுதி கொண்டிருந்தவனுக்கு உதவியதாக HM ஆல் அடித்து துவைக்க பட்டு பெற்றோரை அழைத்துவந்தவன்:(
ஆனால் அந்த சம்பவத்துக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை
எனக்கு பின்னால் இருந்தவன் செய்த செயலுக்கு எந்த விசாரனையும் இல்லாமல் எதுக்கு என தெரியாமல் எனக்கு அடி :(
பின்னால் இருந்தவன் காலில் விழுந்து கெஞ்றான் அடி வாங்குனது தான் வாங்கிட்ட என்னை காட்டி கொடுத்து என்னையும் அடிவாங்க வைச்சிடாதேனு
பட் அவனோட நேர்மை புடிச்சி இருந்தது :)
தப்பு யார் பெயரில் ???
//இப்போது இருக்கும் மட்டமான கல்வி முறையை பின்பற்றிக் கொண்டு//
இதை பின்பற்றித்தான் நான் இன்ஜினியராகியிருக்கேன் :)
பாடத்திட்டங்களை குறை கூற வேண்டாம் முடிந்தால் மேம்படுத்த முடிந்த வாய்ப்புக்களை பற்றி கூறுவோம் !
//மாதக் கணக்கில் நெருங்கிப் பழகியும் ஒரு மாணவியின் மனநிலைப் புரியாதவர் என்ன ஆசிரியர்?.///
ஒரு வகுப்புக்கு மட்டும் சில மணி நேரங்கள் வந்து பாடம் சொல்லி தந்துவிட்டு மற்றொரு வகுப்புக்கு செல்லுகின்ற ஆசிரியர்களா இது சாத்தியம்தானா???
ஆயில்யனை வழிமொழிகிறேன்.
////மாதக் கணக்கில் நெருங்கிப் பழகியும் ஒரு மாணவியின் மனநிலைப் புரியாதவர் என்ன ஆசிரியர்?.///
ஒரு வகுப்புக்கு மட்டும் சில மணி நேரங்கள் வந்து பாடம் சொல்லி தந்துவிட்டு மற்றொரு வகுப்புக்கு செல்லுகின்ற ஆசிரியர்களா இது சாத்தியம்தானா???
//
சற்று சிக்கலான விசயம். ஆனால் பெற்றோரை கூட்டி வரச்சொல்லுவது, தேவையில்லாததுதான்.
சில இன்ஜினியரிங் கல்லூரிகளிலேயே இதுபோல பெற்றோரை கூட்டிவரச் சொல்லும் விசயங்கள் நடக்கின்றன. என்னத்த சொல்ல!
ஆயில்யன் said...
//இப்போது இருக்கும் மட்டமான கல்வி முறையை பின்பற்றிக் கொண்டு//
இதை பின்பற்றித்தான் நான் இன்ஜினியராகியிருக்கேன் :)
//
அதனால் தான் நீங்க இன்ஜினியராகியிருக்கீங்க :)
சும்மா லுலுவாயி :)
//மின்னுது மின்னல் said...
ஆயில்யன் said...
//இப்போது இருக்கும் மட்டமான கல்வி முறையை பின்பற்றிக் கொண்டு//
இதை பின்பற்றித்தான் நான் இன்ஜினியராகியிருக்கேன் :)
//
அதனால் தான் நீங்க இன்ஜினியராகியிருக்கீங்க :)
சும்மா லுலுவாயி :)//
ஆமாம் கமெண்ட் போட்ட பிறகுதான் பார்த்தேன் ஆஹா இது ரெண்டு விதமாவும் அர்த்தமாகுமேன்னு :(
சும்மா லுலுவாயி தான் ”மட்டமான கல்வி முறைன்னு” சொல்லுறதும் என்ன சரிதானே..? :))
//அதனால் தான் நீங்க இன்ஜினியராகியிருக்கீங்க :)//
இந்த ஆயில்யன் அண்ணனை அடக்க சரியான ஆள் மின்னல் தான்... :))
ஆயில்ஸ், கல்வி முறையை குறை சொல்வதோடு இல்லாமல் கபில் சிபல் மற்றும் தமிழக அரசு செய்யும் கல்வி சீர்த்திருத்தங்களையும் ஆதரிக்கிறேன். சமச்சீர் கல்வி, 10ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது போன்றவை.. அதைப் பற்றியும் எழுதுவோம்.
ஆயில்ஸ் & ஊர்சுற்றி
ஒரு நல்ல ஆசிரியரை கேட்டுப் பாருங்கள். அவர் வகுப்பு மாணவர்கள் அனைவரைப் பற்றியும் விரல் நுனியில் விவரம் வைத்திருப்பார். நான் படித்த காலத்தில் இது போல் பலரையும் பார்த்திருக்கிறேன்.
//.. எது போன்ற தண்டனைகளை அவளால் தாங்கிக் கொள்ள முடியும் அல்லது எந்த முறையில் அவளைத் திருந்த வேண்டும் ..//
எனது கருத்தும் இதுதான்.. அண்ணாச்சி இடுகையிலேயே இதை சொல்ல நினைத்தேன்.. சொல்லவில்லை..
//.. ஒரு நல்ல ஆசிரியரை கேட்டுப் பாருங்கள். அவர் வகுப்பு மாணவர்கள் அனைவரைப் பற்றியும் விரல் நுனியில் விவரம் வைத்திருப்பார்..//
எனக்கும் இப்படிப்பட்ட ஒருசில ஆசிரியர்களைத் தெரியும்..
Very good post! valid points
How brutal???
இவ்ளோ சென்சிடிவான ஒரு பொண்ணு.. ஆசிரியை தனியா கூப்பிட்டு கண்டிச்சாலே.. டீச்சர் நம்மள தப்பா நெனச்சிட்டாங்களேன்னு கவலைப் பட்டு இதே மாதிரி தப்பான முடிவுக்கு போகமாட்டாள்ன்னு என்ன நிச்சயம் ?
அப்படி ஏதும் நடந்திருந்தால் பெற்றோர் கேட்கும் முதல் கேள்வி என்னவாக இருக்கும்.... எங்ககிட்ட ஏன் சொல்லல? அப்படிங்கறதுதானே....
//பெரும்பாலான பெற்றோர்களுக்கு, தன் பிள்ளைகளின் சிறு பிழைகளைக் கூட பொறுமையாக யோசித்து அறிவுரை சொல்லும் மனப் பக்குவம் கிடையாது. உடனே அடிப்பார்கள். அல்லது வேறு யாருடனாவது ஒப்பிட்டு மனதில் நீங்காத காயத்தை எற்படுத்துவார்கள். இது போன்ற சூழலில் அந்த மாணவியிடம் அவர் பெற்றோரை அழைத்து வர சொன்னது பெரும் குற்றம்.
//
ஒண்ணு, ரெண்டு குழந்தகள் இருக்கற அப்பா..அம்மா.. அவங்க குழந்தைகளைப் புரிஞ்சிக்க மாட்டாங்களாம்.. 40,50, பேர கவனிக்கற டீச்சர் புரிஞ்சிகிட்டு குழந்தைக்கு ஏற்ற மாதிரி நடந்துக்கணுமாம்.. இது எந்த ஊர் நியாயம்?
ராஜி,
பதிவை முழுசா படிம்மா மின்னல்.. :)
//அந்த மாணவி ரொம்ப சென்சிடிவாக இருக்கும் பட்சத்தில், அப்போதைக்கு சாதாரனமாக அவரை கண்டித்து விட்டு , தொலைபேசி வாயிலாகவோ கடிதம் மூலமோ அந்த மாணவியின் தவறை அவள் பெற்றோருக்குத் தெரிய படுத்தி , மிகக் கடுமையாக நடந்துக் கொண்டால் ஏற்பட சாத்தியமாகும் விளைவுகளைப் புரியவைத்து , மென்மையாக அவளுக்குப் புரியவைக்க சொல்லி திருத்தி இருக்க வேண்டும்.//
அந்த மாணவி தன் உள்ளங்கையில் எழுதி வைத்திருந்த வாசகம் : “sorry, everybody... give everyone a chance 2 change”
இந்தப் பொண்ண திருத்தி இருக்க முடியாதா?
//போதிக்கும் நிலையிலிருபப்வர்களே யோசிக்காமல் கடுமையாக நடந்துக் கொண்டு தண்டனைக் கொடுக்கும் போது, //
காப்பி அடிப்பதற்கு தண்டிப்பதென்றால்.. அந்த மாணவரை பள்ளியை விட்டு விலக்குவது.. அவர் 3 ஆண்டுகளுக்கு படிப்பை தொடர முடியாமல் செய்வதுதானே..அப்படிப்பட்ட தண்டனை ஏதும் அவர்கள் தரவில்லையே..பெற்றோருக்கு அவர்கள் குழந்தை செய்த தவறை தெரியப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.இதுவே குற்றமா
//பாடப் புத்தகங்களை மனப்பாடம் செய்ய வைப்பதில் காட்டும் அக்கறையில் 1 சதவீதம் கூட மாணவர்களுக்கு மனவலிமை கிடைக்க செய்யும் எந்த பயிற்சியையும்பெரும்பாலான பள்ளிகள் அளிப்பதில்லை//
பெரும்பாலான பெற்றோர் எதிர்பார்ப்பதைத் தான் பள்ளிகள் செய்ய முயலுகின்றன.. "என் குழந்தைக்கு படிப்பு சொல்லித்தரதை விட அவர்கள் மனவலிமையை அதிகப்படுத்தும் பள்ளி வேணும் " அப்படின்னு சொல்ல எத்தனைப் பெற்றோர் தயாரா இருக்காங்க?
இப்போது இருக்கும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அவ்வளவாக மெச்சூரிட்டி இல்லை என்றே தோன்றுகிறது.
முதலில் ஆசிரியர் பணியில் அவசரகதியில் ஆட்களை சேர்ப்பதை சரிப்படுத்த வேண்டும்..
இத்தனை மாணவருக்கு இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற சட்டம் சரிதான்.. ஆனால் ஆசிரியர்கள் சரியாக இல்லாவிட்டால்.. பாதிக்கபடுவது மாணவர்கள் தானே?
கல்யாணம் ஆச்சே இன்னும் குழந்தை இல்லியா? இந்த கேள்வியை இனிமேல் யாரும் கேட்காதீர்கள்..
இரண்டு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு இன்னொரு குழ்ந்தையை வேறு இந்த மண்ணில் கொண்டு வர ஏன் தவிக்கிறீர்கள்..?
முதலில் பெற்றோர்கள் முழு மனிதராகட்டும்..பிறகு இன்னொரு குழந்தையை மனிதனாக்கட்டும்..
குழந்தை பிறக்க தகுதியுடன் இருந்தால் மட்டும் போதாது.. அதை வளர்க்கவும் நீங்கள் மனதளவில் தகுதியுடையவராக இருக்கவேண்டும்..
..
//பள்ளியில் பாடத்துடன் சேர்த்து ஒழுக்கமும் கற்றுக் கொடுப்பது ஆசியர்களின் கடமை தான்//
அப்ப பெத்தவங்க கடமை என்னங்க? இந்த குழந்தக்கு துணையா அடுத்தத ஏற்பாடு பண்றதா? \:)))
//அதே போல், மாதக் கணக்கில் நெருங்கிப் பழகியும் ஒரு மாணவியின் மனநிலைப் புரியாதவர் என்ன ஆசிரியர்?.//
ஏங்க மாசக்கணக்கில திட்டம் போட்டு செய்ய இது ஒண்ணும் கொலை இல்ல.. தற்கொலை !!!! தற்கொலைக்கு அந்த ஒரு வினாடி போதும்.. அது மட்டும் இல்லாம தற்கொலை செய்ய அந்த ஆசிரியர் மட்டும் காரணம்னு சொல்ல முடியாது.. வேறு ஏதாச்சும் பிரச்சினை இருந்து இருக்கலாம், அப்போ அந்த பொண் காப்பி அடிச்சத கண்டிச்சப்போ அந்த வினாடியில முடிவெடுத்து குதிச்சி இருக்கலாம்.. கவனிங்க நான் இருக்கலாம்னு சொன்னது உண்மையாகவும் இருக்க வாய்ப்பு இருக்கு , வேற காரணம் இருக்கவும் வாய்ப்பு இருக்கு..
//இது போன்ற சூழலில் அந்த மாணவியிடம் அவர் பெற்றோரை அழைத்து வர சொன்னது பெரும் குற்றம்//
ஏங்க அப்போ பக்கத்து வீட்டுக்காரனையா கூப்பிட்டு வரச்சொல்லுவாங்க... காப்பி அடிக்கிறதே தப்பு இதுல அவங்களுக்கு கனுன்சலிங்க வேற பண்ணனுமா? அப்ப அடுத்தவன் அத பாத்து எப்படி பயப்படுவான்? கல்வி முறை தப்புண்ணா எப்படி வருசா வருசம் தேர்ச்சி கூடிட்டே போகுது? அப்புரம் இந்த மத்திய , சர்வதேச பாடத்திட்டமெல்லாம் எப்படி படிக்க?
//முதலில் இந்த பாழாய்ப் போன தேர்வு முறைகளையும் மதிப்பெண் முறைகளையும் ஒழிக்க வேண்டும்//
இதை நான் ஆமோதிக்கிறேன்...இதனால் பள்ளிகளிக்கிடையே போட்டி வராது.. பெற்றோர்களுக்கிடையே ஒப்புமை வராது..
அய்யா குறை ராஜ்குமாரு.. முடியலை.. :(
அந்த மாணவியின் கையிலிருந்த வாசகம் அனைவர் நெஞ்சிலும் ஈட்டியைப் பாய்ச்சியிருக்கும்!
I strongly disagree with you Sanjay.
//ஏங்க அப்போ பக்கத்து வீட்டுக்காரனையா கூப்பிட்டு வரச்சொல்லுவாங்க... காப்பி அடிக்கிறதே தப்பு இதுல அவங்களுக்கு கனுன்சலிங்க வேற பண்ணனுமா? அப்ப அடுத்தவன் அத பாத்து எப்படி பயப்படுவான்? கல்வி முறை தப்புண்ணா எப்படி வருசா வருசம் தேர்ச்சி கூடிட்டே போகுது? அப்புரம் இந்த மத்திய , சர்வதேச பாடத்திட்டமெல்லாம் எப்படி படிக்க?//
ராசா, மனப்பாடம் பண்றது தான் நம்ம பாடத் திட்டம். அதுல தேர்ச்சி பெற்றா என்ன பெறலைனா என்ன? இந்த கன்றாவி மாறி செயல் வழிக் கல்வி வரனும். காப்பி அடிக்கிறதை பாராட்டி பத்திரம் தர சொல்லலை. அதுக்காக அப்பாவை கூட்டிட்டு வா அம்மாவைக் கூட்டிட்டு வான்னு மிரட்டக் கூடாது. அவனுக்கு புரியற மாதிரி சொல்லித் திருத்தனும். வீட்ல பாடமும் சொல்லிக் குடுக்கனும்.. ஒழுக்கமும் சொல்லிக் குடுக்கனும்... எல்லம் செய்யனும்னா பள்ளிக்கு போக வேண்டிய அவசியம் என்ன? சான்றிதழ் மட்டும் வாங்கவா?
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
அன்பின் சஞ்செய் - ஆசிரியர் மாணவர் உறவு - நட்பு - இவை எல்லாம் முடிவில்லாத விவாதங்களில் தான் முடிகின்றன. இன்று வரை சீர் திருத்தப் பட வில்லை. பலப்பல விவாதங்கள் நடந்து முடிந்து விட்டன். விவாதங்கள் தொடர்கின்றன - எடுக்க வேண்டிய தீர்வுகள், எடுக்கப்பட்ட தீர்வுகள் என்று ஒன்றுமே இல்லை. என்ன செய்வது.
நல்வாழ்த்துகள் சஞ்செய்
நட்புடன் சீனா
>>