September 24, 2009

உயிரைக் குடித்த முத்தம்

வருங்காலத் தூண்கள்
சரிகிறது
முதுகில் புத்தகப் பொதி..

***

அம்மாவுக்கு மூக்குக் கண்ணாடி
அப்பாவுக்கு மூட்டு ஆப்பரேஷன்
மகனுக்கு பள்ளிக்கட்டணம்
மனைவிக்கு சொந்த வீடு
எனக்கு
இழந்த என் வேலை..

***

(நீண்ட நாட்களுக்கு முன் எழுதி வேலன் அண்ணாச்சி வலைப்பூவில் வந்த கவிதை )

எப்போதும் சுவாரஸ்யம் தான்
எதிர் திசை ஓடும் ஜல்லிக்கற்கள்
கூடவே பயணிக்கும்
பக்கத்துத் தண்டவாளம்
பச்சைக்கே தானம் தர தயாராய்
தென்னந்தோப்புகள்
கவனம் சிதறாத
சோளக்காட்டு பொம்மை
கோடையிலும்
தண்ணீர் சுமக்கும் குட்டைகள்
வானம் பார்த்த பூமிகளில்
வரிசையாய்க் கோரைப்புற்கள்
ஆங்கிலேயரை மறக்கவிடாத
கிராமத்து ரயில் நிலையங்கள்
சுவாரஸ்யமாய்
புது உலகத்தில் நான்..
“அண்ணா..”
கவனம் கலைக்கிறான்
கையேந்தி நிற்கும் சிறுவன்..

டிஸ்கி : பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் தொடர்பு இல்லை.. :-)

42 comments:

குசும்பன் said...

//பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் தொடர்பு இல்லை.. :-)//

தலைப்புக்கும் உனக்குமே தொடர்பு இல்லை என்பது எங்களுக்கு தெரியும், கண்ணாடிய பார்த்து நீயே உனக்கு கொடுத்துக்கிட்டாதான் உண்டு:)))

யாசவி said...

kavithai nice

:))

குசும்பன் said...

//எனக்கு
இழந்த என் வேலை..
//

இழந்தது அதுமட்டும் தானா? இல்ல வேறு ஏதாச்சும் இருக்கா? மோட்டுவளைய பார்த்துக்கிட்டு மண்டைய சொறிஞ்சு பாரு மாமா வேறும் ஏதும் நினைவுக்கு வரும்:))

குசும்பன் said...

//யாசவி said...
kavithai nice

:))
//

என்ன கொடுமை இது?:(

சின்ன அம்மிணி said...

குசும்பன் back to form போலிருக்கு :)

குசும்பன் said...

//புது உலகத்தில் நான்..
“அண்ணா..”//

அவன் மட்டும் இல்ல ஊரில் இருக்கும் 99% பிகருங்க உன்னை அண்ணான்னு கூப்பிடுது, மீதி 1% அங்கிள் என்று கூப்பிடுது. இதை பற்றி எல்லாம் கவிதை எழுத மாட்டீயா மாமா?

mayil said...

இல்ல வேறு ஏதாச்சும் இருக்கா? மோட்டுவளைய பார்த்துக்கிட்டு மண்டைய சொறிஞ்சு பாரு அத்திம்பேர் வேறும் ஏதும் நினைவுக்கு வரும்:))

mayil said...

குசும்பனுக்கு அந்த பர்மா, அஸ்ஸாம் மேட்டர் எல்லாம் தெரியுமா?

தெரிஞ்சா எங்களுக்கு ஒரு ரெண்டு நாள் பொழுது போகும் :)))))

குசும்பன் said...

//நீண்ட நாட்களுக்கு முன் எழுதி வேலன் அண்ணாச்சி வலைப்பூவில் வந்த கவிதை //

பாவம் அவரு வலைபதிவு ஆரம்பிச்ச புதுசா இருக்கும், உன்னையும் பெரிய ஆளுன்னு நினைச்சு உன்னிடம் இருந்து கவிதை வாங்கி போட்டு இருப்பார். இப்ப கொடுத்து பாரு பொற மண்டையில் நாலு போடு போடுவார்:)))

செல்வேந்திரன் said...

மூன்றாவது கவிதை ஏற்கனவே சிலாகிக்கப்பட்டது.

ஒரு டிப்ஸ்:

நவகவிஞர்கள் கவிதையை எழுதி முடித்தவுடன் "(பட்டு அருணாசலத்திற்கு...)" என்று யாராவது வேண்டியவங்க அல்லது வேண்டாதவங்களுக்கு டெடிகேட் செய்கிறார்கள்.

நான் அடுத்து எழுதப்போற கவிதை பர்மிய தேவதைக்கு சமர்ப்பனம்.

SanjaiGandhi said...

//mayil said...

இல்ல வேறு ஏதாச்சும் இருக்கா? மோட்டுவளைய பார்த்துக்கிட்டு மண்டைய சொறிஞ்சு பாரு அத்திம்பேர் வேறும் ஏதும் நினைவுக்கு வரும்:))
//

அசாம், பர்மான்னு என்னன்னவோ நினைவுக்கு வருது விஜி.. ;))))

SanjaiGandhi said...

குசும்பா, எல்லாம் அக்கவுண்ட்ல சேர்த்துக்கிறேன்.. இருக்குடி உனக்கு.. :)

குசும்பன் said...

//mayil said...
குசும்பனுக்கு அந்த பர்மா, அஸ்ஸாம் மேட்டர் எல்லாம் தெரியுமா?
//

அவ்வ்வ் இது புது மேட்டரால்ல இருக்கு:) தனி மெயில் சொல்லுங்க போட்டு கும்மிடலாம்:)) கடைசியா உங்க வீட்டுக்கு அவரு சாப்பிட வந்த போன பிறகு மற்றவர்களுக்கு ஹோட்டலில் இருந்து சாப்பாடு பார்சல் நீங்க வாங்கி வந்தது தெரியும்:))

SanjaiGandhi said...

//நான் அடுத்து எழுதப்போற கவிதை பர்மிய தேவதைக்கு சமர்ப்பனம்.//

ராம் நகரிலோ ராம்ஸ் நகரிலோ ஒரு கொலை விழுவதை யாரால் தடுக்க முடியும் செல்வா? :)

mayil said...

இப்படி எல்லாம் தலைப்பு வச்சு மனச தேத்திக்க வேண்டியது தான் :)

mayil said...

அந்த ஹோட்டலில் இந்த ரெண்டு பெரும் பண்ண ரவுசு சொல்லலையா?

நான் வேற அங்க ரெகுலர் கஸ்டமர், இவங்க பண்ண அலும்புல என்ன பண்ண போறாங்களோ ??

mayil said...

அந்த பர்மா, அஸ்ஸாம் ரெண்டுமே கொஞ்சம் கண்ணு ஸ்டடி யா இல்ல, இவங்க அதுக்குள்ள என்னமோ கற்பனை வேற. தலையில் இருக்கும் தொப்பி எடுத்து விட்டுருக்கனும்... மிஸ் ஆயிடுச்சு. நெக்ஸ்ட் டைம் பண்ணிடலாம்.

குசும்பன் said...

//மூன்றாவது கவிதை ஏற்கனவே சிலாகிக்கப்பட்டது.
//

இப்ப கிழிக்கப்பட்டதா மாத்திக்குங்க:)

mayil said...

செல்வா, கவிதை வேறையா, நடத்துங்க. எதுக்கும் திருக்கு ஒரு தட்கல் டிக்கெட் புக் பண்ணிட்டு.

SanjaiGandhi said...

//அந்த பர்மா, அஸ்ஸாம் ரெண்டுமே கொஞ்சம் கண்ணு ஸ்டடி யா இல்ல, இவங்க அதுக்குள்ள என்னமோ கற்பனை வேற. தலையில் இருக்கும் தொப்பி எடுத்து விட்டுருக்கனும்... மிஸ் ஆயிடுச்சு. நெக்ஸ்ட் டைம் பண்ணிடலாம். //
FYI.. அன்னைக்கு ஆன் ட்யூட்டி.. நோ தொப்பி அண்ட் ஆல்.. :)

mayil said...

அப்படின்னா அதுங்களுக்கு உங்களை பார்த்த அவங்க அப்பிச்சி நினைப்பு வந்திருக்கும். :))

சின்ன அம்மிணி said...

சக்திவேல் மாட்டின மாதிரி இன்று சஞ்சய் மாட்டுவார் போல் தெரிகிறது. :)

காயத்ரி சித்தார்த் said...

ஹய்ய்யோ. ஹைய்யோ... :)))))))))))))

காயத்ரி சித்தார்த் said...

குசும்பா.. 'சஞ்சய் அண்ணா' பாவம்.. விட்டுடு ப்ளீஸ்.. கிகிகி :)

நாடோடி இலக்கியன் said...

கவிதையெல்லாமே நல்லாயிருக்கு.

அந்த மூன்றாவது கவிதையில் காட்சிகள் கண்முன்னே வந்தது.கலக்கல் சஞ்சய்.

கலகலப்ரியா said...

ithu verayaa... (nalla selection..)

அன்புடன் அருணா said...

ஏம்பா...நல்லாதான போய்க்கிட்டு இருந்துச்சி!

பதுமை said...

enaki sambandhathoda thalaippu vechi iruka!!! nice

இய‌ற்கை said...

படிக்கறவங்க உயிரை குடிக்கும் கவிதைன்னு தலைப்பு வச்சிருக்கலாம்

கும்க்கி said...

கலகலப்ரியா said...

ithu verayaa... (nalla selection..)

இவங்க போட்டோவ பார்த்தாலே தெரியுதே...அய்யோ பாவம் கவிதைய கவிதைன்னு நம்பி படிச்சிட்டாங்க போல...

கும்க்கி said...

இய‌ற்கை said...

படிக்கறவங்க உயிரை குடிக்கும் கவிதைன்னு தலைப்பு வச்சிருக்கலாம்...

லாம்தான்....உங்களுக்கு தெரியுது...என்ன பண்றது..?

ஸ்ரீமதி said...

ஹ்ம்ம்ம்ம் நீ நடத்து...:)))

வால்பையன் said...

//பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் தொடர்பு இல்லை.//

இப்படிச் சொன்னா எங்களுக்கு தெரியாதாக்கும்!

சுரேகா.. said...

சஞ்சய்...
கவிதை இவ்வளவு சூப்பரா இருக்கு!

ஆனா..
குசும்பன் கமெண்ட் அதைவிட சூப்பரா இருக்கு!

கலகலப்ரியா said...

//கும்க்கி said...

கலகலப்ரியா said...

ithu verayaa... (nalla selection..)

இவங்க போட்டோவ பார்த்தாலே தெரியுதே...அய்யோ பாவம் கவிதைய கவிதைன்னு நம்பி படிச்சிட்டாங்க போல...//

ஹும்.. என்னைப் பத்தி உங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோதான் கும்க்கி.. நடக்கறது நடக்கட்டு.. =))

Mitr Friend - Bhushavali said...

//பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் தொடர்பு இல்லை.. :-)// - Lollu dhane ungalukku...!!!
Btw, mudhal rendu haikkookalum ungal padaippugala..???
My Travelogue

SanjaiGandhi said...

நன்றி மிஸ்டர் கும்மி குசும்பன்

நன்றி யாசவி

நன்றி சின்னம்மினி அக்கா.. குசும்பனுக்கு என் பேர் கேட்டாலே போதும்.. கும்மி ஃபார்ம்க்கு வந்துடுவார்.. :)

மயில், கொஞ்சம் அமைதியா இருக்கிங்களா? :)

நன்றி செல்வா..

//சக்திவேல் மாட்டின மாதிரி இன்று சஞ்சய் மாட்டுவார் போல் தெரிகிறது. :)//
சக்திவேல் எல்லாம் எப்போவாச்சும் தான் அம்மணி அக்கா.. சஞ்சய் தான் சிலர்க்கு நிரந்தரக் கைப்புள்ள.. :(

SanjaiGandhi said...

திருமதி. காயத்ரி சித்தார்த் அவர்களே.. மிக்க நன்றி.. எனக்கும் நேரம் வரும்.. :)

நன்றி நாடோடி இலக்கியன்.. புது தேசத்து பயணம் சிறப்பாய் அமைவ வாழ்த்துகள்..

நன்றி லகலக ப்ரியா.. ( கொழுப்பு)

அருணாக்கா நன்றி.. எதும் நல்லா இருந்தா தான் நமக்குப் பிடிக்காதே.. :)

நன்றி பதுமை.. நீ எனக்காக செய்ற சில வேலைகளுக்காக உன்னை சும்மா விடறேன்.. பொழைச்சிப் போ.. :)

நன்றி இயர்க்கை.. கவிதைல சில விஷயங்கள் நேரடியா சொல்ல வேண்டியதில்லை.. படிக்கிறவங்க புரிஞ்சிப்பாங்க.. இப்போ நீங்க புரிஞ்சிகிட்டிங்க பாருங்க.. ;))

SanjaiGandhi said...

நன்றி கும்கி.. லகலக ப்ரியாவை பாவம்னு சொன்ன பாவத்துக்கே உங்களை தூக்குல போடனும்.. :)

நன்றி திருமதி ஸ்ரீமதி.. :)

நன்றி வால்.. :))

நன்றி சுரேகா.. :)

நன்றி Mitr.. ஆனாலும் வர வர உங்க குசும்பு அதிகரிச்சிட்டே போகுது.. :)

அன்புடன் மலிக்கா said...

கவிதை கல கல்ன்னு சொல்லவா
கலக்கல்ன்னு சொல்லவா
மொத்தத்தில் கலக்கலோக்கலக்கல்

செந்தழல் ரவி said...

கலக்கல்ஸ் !!!!!

SanjaiGandhi said...

நன்றி மலிக்கா.. :)

நன்றி ரவி மாம்ஸ்.. :)

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget