எங்க வீட்ல புதுவரவு
கிராமங்களில் பெரும்பாலானோர் மாடு வளர்ப்பார்கள். அது கன்று குட்டி ஈன்றால் , வீட்டில் குழந்தை பிறந்தது போல் சந்தோஷப் படுவார்கள். ஆனால் அது பெண் கன்னு குட்டியா இருக்கனும். ஆண் பிறந்தால் அவ்வளவு தான். திட்டியே தீர்த்துவிடுவார்கள். கறவை மாடுதானே இன்னும் கன்னு குட்டி போட்டு பால் குடுத்து காசு பார்க்க முடியும். காளை மாடு அம்புட்டு வொர்த் இல்லை. பதினெட்டு பட்டிக்கு ஒரு காளைமாடு தான் இருக்கும். அவரோட வாரிசுகள் தான் சுத்து பட்டு கிராமங்களிலும் இருப்பார்கள்.
இப்போ எங்க மாடும் கன்னு குட்டி போட்டிருக்கு. இதுக்கு நான் ஊருக்கு வரலைனு வேற எங்கம்மா குறை பட்டுகிட்டாங்க. நாலு பீஸ் சீம்பாலுக்கு 239 கிமீ போய்ட்டு வரனுமாம். இந்த மாடு எங்க வீட்டுக்கு வந்து ரொம்ப வருஷம் ஆய்டிச்சி. அதனால ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் இதை விலைபேசி இருக்காங்க. 22,000 ரூபாயாம். மாட்டை விற்கும் அளவுக்கா வீட்டில் பஞ்சம் என்று திட்டியதில் , இதுக்கு வயசாகிட்டதால ரெண்டு பல்லு ( இளசு )சினை மாடு வாங்கிக்கலாம்னு இதுக்கு விலை பேசியதாக சொன்னாங்க. ஆனால் பிறந்தது பெண் குட்டி என்பதால் குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். விலை பேசியவன் பாவம். பேசிய அன்றே முன் பணம் எதுவும் கொடுத்திருந்தால் அன்றே கொடுத்திருப்பார்கள். அல்லது இன்னும் ரெண்டு நாள் கழிச்சி பிறந்திருந்தாலும், அதுக்குள்ள வாங்கிட்டு போய் இருப்பார். வடை போச்சி அவருக்கு..
மாட்டின் பிரசவ நேரமும் மனிதர்களைப் போலத்தான். அந்த நேரத்தில் அவைகள் துடிப்பதைப் பார்த்தால் அழுகையே வரும். ஆனால் அதெல்லாம் கொஞ்ச நேரம் தான். கன்று பிறந்ததும் பரவசத்துடன் தாய் அதை நுகர்ந்துக் கொண்டிருக்கும். கன்றுகுட்டி 5 நிமிடத்தில் நடக்க ஆரம்பித்துவிடும். 10 நிமிடத்தில் ஓட ஆரம்பித்துவிடும். அதை அடக்கி கயிறு போட்டு கட்டுவதற்குள் நம் கால்கள் கன்னாபின்னாவென்று மிதி பட்டிருக்கும். மனசாட்சியே இல்லாம கன்றுகுட்டி மிதிக்கும்.
கன்று பிறந்தவுடன் அதை பால்குடிக்க பழக்க வேண்டும். ரொம்ப சிரமம் எல்லாம் தேவை இருக்காது. கொஞ்ச நேரத்தில் சமத்தாய் குடிக்கக் கற்றுக் கொள்ளும். பின் மிச்சமாகும் பாலைக் கறந்து அந்த மாட்டிற்கே தந்துடுவோம். அடுத்த வேளை பாலைக் கறந்து சீம்பால் காய்ச்சுவோம். சீம்பால் செய்வது மிகப் பெரும் கலை. சரியான பதத்தில் செய்வது மிகச் சிலராலேயே முடியும். மாட்டுப் பாலில் செய்யும் சீம்பால் அவ்வளவு கெட்டியாக ஆகாது. எருமைப் பால் தான் மிக நன்றாக இருக்கும். சிலர் அதையும் கல் மாதிரி செய்துவிடுவார்கள். கடித்தால் நம் பல்லு போய்டும்.
சீம்பால் நமக்கு மட்டுமில்லை. சொந்த பந்தத்திற்கெல்லாம் அனுப்பிவைக்கப் படும். அதே போல் அக்கம் பக்கமோ சொந்தக் காரர்கள் வீட்டில் மாடு அல்லது எருமை கன்று போட்டாலும் நமக்கு சீம்பால் கொடுத்து அனுப்புவார்கள். பள்ளி நாட்களில் நண்பர்களுக்கெல்லாம் கொடுப்பதுண்டு. அதற்கு ஏக டிமாண்ட் இருக்கும். சீம்பால் வரவில்லை என்று பகையான உறவுகளும் உண்டு. அதுவும் கவுரவப் பிரச்சனைகளை உண்டாக்கும்.
எப்படியும் மாதம் ஒருமுறையாவது யார் வீட்டிலிருந்தாவது சீம்பால் வந்துவிடும். பிரசவ வலியில் துடிப்பதையும் அதன் தொடர்ச்சியாய் கன்று குட்டி வெளிவருவதையும் பல முறை நேரில் பார்த்தும் அதன் பாலை காய்ச்சி சீம்பால் என்று சாப்பிட்டது இப்போது குற்ற உணர்வையேத் தந்தாலும், நாம் சாப்பிடவில்லை என்றால் அந்தப் பாலை கீழே தான் கொட்டவேண்டும் என்பதால் மிக சத்தான இயற்கை உணவாக அதை எடுத்துக் கொள்வது பெரிய குற்றமில்லை என்று ஆறுதலும் சொல்லிக் கொள்ள வேண்டி இருக்கு.
டிஸ்கி : இப்போ எங்க வீட்ல ஏழு (4+3) பேராக்கும்.. :-)

Me the firstae :))))
ஆஹா.. சீம்பால் எல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்களே... சாப்பிட்டு எம்புட்டு வருஷம் ஆகுது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கணக்குத் தப்பாச்சே (3+4) என்று வரணும்..:P
புது வரவிற்கு வாழ்த்துகள்.
காலைல டிபன் கடலை புண்ணாக்கா?
சீம்பால்லாம் ஆகாது அதனால
போகும்போது சீம்பே நம்ம ஊருல இறங்க குடுத்துப்போட்டு போங்க :-))
புதுவரவுக்கு பேர் வைச்சாச்சா
சஞ்செய், நீயும் 'பண்ணையாரா ?'
:)
குழந்தைக்கும் தாய்க்கும் ஆசிகள்.
நல்லா இருக்கணும்.
ஒரு முறை மாடு கன்னு போட்டதைப் பார்த்துருக்கேன். வாயில்லா ஜீவன். வலியைப் பொறுக்க முடியாமல் அதுக்குக் கண்ணுலே கண்ணீர் வழியும்போது மனசுக்குப் பேஜாராப் போயிருச்சு.
//பிரசவ வலியில் துடிப்பதையும் அதன் தொடர்ச்சியாய் கன்று குட்டி வெளிவருவதையும் பல முறை நேரில் பார்த்தும் அதன் பாலை காய்ச்சி சீம்பால் என்று சாப்பிட்டது இப்போது குற்ற உணர்வையேத் தந்தாலும், நாம் சாப்பிடவில்லை என்றால் அந்தப் பாலை கீழே தான் கொட்டவேண்டும் என்பதால் மிக சத்தான இயற்கை உணவாக அதை எடுத்துக் கொள்வது பெரிய குற்றமில்லை என்று ஆறுதலும் சொல்லிக் கொள்ள வேண்டி இருக்கு.//
புது வரவுக்கு வாழ்த்துகள்
நல்ல பகிர்வு தந்தமைக்கு நன்றிங்க
சஞ்சய் எங்க ஊர் நினைவை கொண்டு வந்துட்டீங்க..:-)
ஐயோ.. யாரோ குட்டி சஞ்சய் வந்துட்டாங்கன்னு நினைச்சு ஆர்வமா வந்து பார்த்தா.. உங்க ஜாடைல மூணு பேர காண்பிச்சு கவுத்துட்டியளே.. வாழ்க கன்றுக் குட்டிகள்..
(நிஜம்மாவே அருமையான.. நெகிழ்வான பதிவு.. டச் பண்ணிட்டீங்க போங்க.. )
நிஜமாவே நெகிழ்வான பதிவு!!
உங்க வீட்ல புது வரவுன்னு தலைப்பை படித்ததும் கற்பனை பலமாவே இருந்துச்சு எனக்கு. தாய்க்கும் சேய்க்கும் வாழ்த்துக்கள்!!
போங்க சீம்பால் கிடைக்காத நாட்ல இருக்கேன்.இப்போ போய் ஞாபகபடுத்துறீங்க ப்ரதர்...
வாழ்த்துக்கள் சஞ்சய்
அன்பான நண்பர் திரு சஞ்சய் காந்தி அவர்களுக்கு,
Just for your information!!!!!!!! ஹி ஹி
----------------------
அன்பான நண்பர் திரு கோவி கண்ணன்,
என்ன சார், இன்னைக்கு சாப்பாடு இந்த subject ஆ!!!!!
சரி சரி........என் அடுத்த ரிலீஸ் ரெடி ஆகிட்டு இருக்கு!!!!
" NO" வழங்கும், கோவி கண்ணன் இன் " கோவியன்"
விரைவில்!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கோவி அண்ணன்அவர்கள் தும்பி, கோவியன், டெமோ என்று மூன்று வித்த்யாச வேடங்களில் தூள் கிளப்ப
ஸ்டார் ஜன் அண்ணன், ஸ்டார் ஜன் ரோலிலே சாகடிக்க
விரைவில் வருகிறார் கோவியன்...................
இந்த வருடத்தின் மிக பிரம்மாண்டமான மாரடைப்பு sorry படைப்பு ...............................
நன்றி
-------------------------
நன்றி
வாழ்த்துகள்!
:)
வாழ்த்துக்கள் :) நீங்க மறுபடியும் அங்கிள் ஆயிட்டீங்களோன்னு வந்தேன்!
சீம்பால் + வெல்லம் + ஏலக்காய் = அமிர்தம்
//டிஸ்கி : இப்போ எங்க வீட்ல ஏழு (4+3) பேராக்கும்.. :-)//
புதுவரவுக்கு மாமாவா இல்ல பெரியப்பாவா மாமா நீ, கொஞ்சம் உறவு முறை சொல்லேன்:))
மாமா எருமைமாட்டுக்கு வாழ்த்துக்கள்:)
இப்படிக்கு
வாழ்த்துக்கள் சொல்லியே பழக்கப்பட்ட வீனாபோன பிளாக்கர்:)))
mm..enna ennamo solla thonuthu....venam..polachiponga...
//mm..enna ennamo solla thonuthu....venam..polachiponga...//
Ha ha ha... repeatttttttttttt..........
அன்பின் சஞ்செய்
புது வரவினிற்கு நல்வாழ்த்துகள்
நான் கூட சஞ்செய்க்குப் பொண்ணு பாத்துட்டாங்க போலன்னு தலைப்பெப் பாத்துட்டும் - சீதனமா பசுமாடு கண்ணுக்குட்டியோட கொடுத்தாங்க போலன்னு நெனெச்சிட்டேன்
நல்லாருக்குப்பா
நல்வாழ்த்துகள்
எங்க வீட்ல ஏழு (4+3) பேராக்கும்.. :-)
//
5+3 ஆக வாழ்த்துக்கள் :)
பன்றி காய்ச்சலுக்கு சீம்பால் நல்ல ஒரு தடுப்புணர்வு தரும் என்று மெக்சிகோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்..என்று தினமலரில் படித்தாக நியாபகம்.
நான் புதிதாக தமிழ் பதிவு ஒன்னு எழுத ஆரம்பிச்சிருக்கேன். நேரம் கிடைத்தால் பாருங்க, அரசியல் பத்தியும் எழுதிருக்கேன்.
http://maduraitrichy.blogspot.com/
எங்க வீட்லேயும் இப்படி மாடு வாரிசுகள் உண்டு.
வாழ்த்துக்கள்
//.. அக்கம் பக்கமோ சொந்தக் காரர்கள் வீட்டில் மாடு அல்லது எருமை கன்று போட்டாலும் நமக்கு சீம்பால் கொடுத்து அனுப்புவார்கள் ..//
இப்போ யாரும் அப்படி இருக்குறது இல்லைங்க.. உறவு குறைஞ்சு எல்லோருக்கும் சுயநலம் அதிகமாகிடுச்சு..
:-(
:)
வாழ்த்துக்கள் மிஸ்டர் மாட்டுக்கார வேலன்! :)
சீம்பாலில் வெல்லம் போட்டு காய்ச்சினால்தான் எனக்குப் பிடிக்கும். அதுவும் கட்டியாக இல்லாமல் குளுகுளுனு குடிப்பதற்கேற்றவாறு இருக்கவேண்டும்.
நல்ல இடுகை :-)
பெண் என்றுமே மகத்துவம் வாய்ந்தவள் தானே!
yengal veetirku innum seempal varala gandhi sir
/
இப்போ எங்க மாடும் கன்னு குட்டி போட்டிருக்கு. இதுக்கு நான் ஊருக்கு வரலைனு வேற எங்கம்மா குறை பட்டுகிட்டாங்க.
/
இதுக்குகூட போகாம அப்பிடி என்ன ----- வேல??
:))
/
விலை பேசியவன் பாவம். பேசிய அன்றே முன் பணம் எதுவும் கொடுத்திருந்தால் அன்றே கொடுத்திருப்பார்கள். அல்லது இன்னும் ரெண்டு நாள் கழிச்சி பிறந்திருந்தாலும், அதுக்குள்ள வாங்கிட்டு போய் இருப்பார். வடை போச்சி அவருக்கு..
/
:)))
/
கன்றுகுட்டி 5 நிமிடத்தில் நடக்க ஆரம்பித்துவிடும். 10 நிமிடத்தில் ஓட ஆரம்பித்துவிடும்.
/
timer வைச்சி செக் பண்ணீட்டீங்களா ஆப்பீசர்??
/
குசும்பன் said...
//டிஸ்கி : இப்போ எங்க வீட்ல ஏழு (4+3) பேராக்கும்.. :-)//
புதுவரவுக்கு மாமாவா இல்ல பெரியப்பாவா மாமா நீ, கொஞ்சம் உறவு முறை சொல்லேன்:))
மாமா எருமைமாட்டுக்கு வாழ்த்துக்கள்:)
/
ரிப்பீட்டு
/
இப்படிக்கு
வாழ்த்துக்கள் சொல்லியே பழக்கப்பட்ட வீனாபோன பிளாக்கர்:)))
/
ஸ்பெஷல் ரிப்பீட்டு
Hey,,,,,,, Congrats....
My Travelogue, Thozhi-Mitr-Friend, Savoir-Faire
நன்றி ஜி3 யக்கா.. :)
புனிதா, மைண்ட்ல வச்சிக்கிறேன்.. இருக்கு உங்களுக்கு பதிலடி விரைவில்.. :)
நன்றி ஆபிசர் சூர்யா.. :)
தண்டோராரா மாம்ஸ், காலைல இல்லை. மதிய வேளைகளில் தான் கடலை எண்ணெய் அரைக்க மில்லுக்கு போவோம். அப்போ தான் சுட சுட சுவையான புண்ணாக்கு சாப்டுவோம். :)
கார்த்துக், நன்றி..
சி.அம்மிணி அக்கா, இதுக்குமா பேர் வைக்கிறது? அப்புறம் ரேஷன் கார்ட்ல பேர் சேர்த்தாச்சான்னு கேப்பிங்க போல.. :)
கோவியார்,
மாடு வளக்கறவஙக எல்லாம் பண்ணையார்னா பூம் பூம் மாட்டுக்காரனும் நானும் கூட பண்ணையார்தானுங்க. :) - சிக்கமாட்டோம்ல.. :))
நன்றி துளசி அம்மா.. நிஜம் தான். பாவமா இருக்கும்.
ஞானசேகரன் , நன்றிங்க..
கிரி, நன்றிங்க.. குட்டி கிரி நலமா?
லகலக ப்ரியா,
இன்னும் கல்யாணமே ஆகலை.. அதுக்குள்ள தொட்டில் கட்டி புள்ளைக்கு தேன்மொழின்னு பேர் வைக்க சொல்விங்க போல.. அவ்வ்வ்வ்.. என்வே.. நன்றிங்கோ..
மேனகா சிஸ்டர்,
கிடைக்கிற நாட்ல இருந்தும் வேற ஊர்ல இருந்ததால எனக்கும் கிடைக்கலை.. :(
கலா அக்கா
நன்றி
நன்றி நோ அவர்களே.. வந்து கலக்கறிங்க போல.. :)
ஜமால், நன்றி
அருணாக்கா , நன்றி
தஞ்சாவூரான் , நன்றி
குசும்பன், நன்றிங்க வீனாப் போனவரே. :)
இயற்கை, அந்த பயம் இருக்கட்டும்.. :)
நன்றி ராஜலெட்சுமி அவர்களே... :)
சீனா சார், நன்றி
மின்னல், ஹிஹி.. நன்றி.. :)
சாமி, நன்றி.. உங்க பதிவுகள் நல்லா இருக்கு.. எழுத்துப் பிழைகள் தான் அதிகம்..
குடுகுடுப்பை, நன்றிங்க..
நன்றி முரளிகண்ணன்..
பட்டிகாட்டான், உண்மை தான்.. நன்றி
நன்றி நல்லவரே..
>>