இலவச டிவி திட்டம் - யாருக்கு பயன்? - 3
எனக்குத் தெரிந்தவரையில் போட்டியே இல்லாத ஒரு தொழில் என்றால் அது டிவி கேபிள் இணைப்பு வழங்குவது தான். எந்த ஏரியாவிலாவது ஒரு தெருவில் இரண்டு ஆபரேட்டர்கள் இயங்குவதுண்டா?. ஒருவர் மட்டும் தான் இருப்பார். அவர் வைத்தது தான் சட்டம். அவர் சொல்வது தான் கட்டணம். எந்த சேனலை நாம் பார்க்க வேண்டும் என்பது கூட அவர் விருப்பமாகத்தான் இருக்கிறது. எந்த சேனல் நன்றாகத் தெரியவேண்டும், எந்த சேனல் மோசமாகத் தெரிய வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் முடிவு தான்.
இவர்களை இயக்குவது மாறன் ப்ரதர்ஸ் தான். பெரிய தொலைகாட்சி நெட்வொர்க்கின் உரிமையாளர்களான அவர்கள் தங்கள் போட்டியாளர்களை ஒழிக்க இந்த வழியைத்தான் பயன்படுத்துகிறார்கள். கடந்த தீபாவளிக்கு ஜீ தமிழ் வாங்கி இருந்த சுப்ரமணியபுரம் படத்தை அதே நாள் அதே நேரத்தில் சன் டிவி ஒளிபரப்ப முடிந்ததற்கு காரணமும் இது தான் என்று கேபிள் சங்கர் எழுதி இருந்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தத் திட்டம் அறிவிக்கக் காரணமே ஓட்டு வாங்குவதுடன் தங்கள் கேபிள் வியாபாரத்தையும் பெருக்குவது தான். பின்னர் பேரன்களுடன் பிணக்கு ஏற்பட்டதும் கலைஞர் டிவி ஆரம்பித்து அரசு கேபிள் என்ற நிறுவனமும் ஆரம்பிக்கப் பட்டது. கிட்டத்தட்ட மாறன் சகோதரர்களின் சுமங்கலி கேபிள் நெட்வொர்க் அழியும் நிலைக்கு சென்றது. சுமங்கலி இருந்த இடமெல்லாம் அரசு கேபிள் ஆக்கிரமித்தது. மதுரையில் அழகிரியின் ராயல் கேபிள் விஷன் சுமங்கலியை காலி செய்தது. பின்னர் மீண்டும் தாத்தாவுக்கும் பேரன்களுக்கும் கண்கள் பணித்து இதயம் இனித்ததில் மீண்டும் சுமங்கலி தன் ஆக்டோபஸ் முறையை தொடர்ந்தது. ராயல் கேபிள், அழகிரியின் நிறுவனம் என்பதால் இன்னும் தொடர்கிறது.
ஆனால் அரசு கேபிள்..? வேற என்ன.. சாவு மணி அடிக்கப் பட்டுவிட்டது. அதற்காக ஆக்கிரமிக்கப் பட்ட அலுவலகங்கள் எல்லாம் சுவடே இல்லாமல் அழிக்கப் பட்டுவிட்டன. சுமங்கலியால் இணைப்பு வழங்கப் பட்ட போது 175 ரூபாயாக இருந்த கேபிள் கட்டணம் அரசு கேபிளால் 100 ரூபாயாக குறைக்கப் பட்டது. பின்னர் சுமங்கலியே தொடர்ந்ததும் கட்டணம் 150 ரூபாயாக உயர்ந்துவிட்டது. நான் 100 ரூபாய்க்கு மேல் தர முடியாது என்று சொல்லிவிட்டேன். ஒவ்வொரு முறையும் கட்டண அட்டையில் 50 ரூபாய் பாக்கி என குறித்து செல்கின்றனர். :)
வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் கஷ்டத்தை விட சில கேபிள் ஆபரேட்டர் படும் துன்பங்கள் சொல்லி மாளாது. அரசு கேபிள் ஆரம்பிக்கும் போது பலரும் சுமங்கலியில் இருந்து பிரிந்து அரசு கேபிளில் இணைத்துக் கொண்டனர். இப்போது வேறு வழி இல்லாமல் சுமங்கலியுடனே இணைய வேண்டிய நிர்பந்தம். ஆனால் இவர்கள் பிரிந்து சென்ற சுமார் 5 மாதங்களுக்கான நிலுவைத்தொகையைக் கட்டினால் மட்டுமே இணைப்பு வழங்கப் படும் என சுமங்கலி நிறுவனல் சொன்னதாம். இதனால் 5 மாத பெரும் நிலுவைத்தொகையை செலுத்த முடியாமல் பலரும் தங்கள் நிறுவங்களை சுமங்கலிக்கே விற்றுவிட்டனர். எங்கள் ஏரிய ஆபரேட்டர் உட்பட.. இன்று அவர்கள் நிலை பரிதாபத்தில் இருக்கிறது.
அரசாங்கம் அறிவித்து செயல்படுத்தும் இலவச தொலைக்காட்சித்திட்டத்தால் வேறு என்ன விளைவுகள்?
கிராமங்களில் இன்னும் முழுமையாக கேபிள் இணைப்புகள் இல்லை. இருக்கும் சில இடங்களிலும் பகையாலும் பொறாமையாலும் கேபிள்கள் அறுக்கப் படுகின்றன. அதனால் மக்கள் முழுமையாக கேபிள இணைப்பை பயன்படுத்தாமல் இருந்தனர். இந்த நேரத்தில் தான் DTH ஒளிபரப்பு துவங்கப்பட்டது. இதில் மாறன் குடும்பத்தின் சன் டைரக்டும் தன் ”சேவை”யைத் துவங்கியது. எப்போதும் அடித்தட்டு மக்களை குறிவைக்கும் மாறன் குடும்பம் இதிலும் தன் திறமையைக் காட்டியது. மற்ற நிறுவங்கள் எல்லாம் அதிக சேனல்களுடன் பெரும் கட்டணங்களை நிர்ணயித்து சந்தைக்கு வந்தது. ஆனால் சன் டைரக்ட் மட்டும் தங்கள் தொலைகாட்சிகள் அனைத்தும் அடங்கிய பேக்கேஜ் மற்றும் சில தமிழ் சேனல்களுடன் 70 ரூபாய் ஆரம்பம் என்ற அளவில் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்தது. கிராம மக்களை பொறுத்தவரை சன் நிறுவன சேனல்கள் இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பவர்கள். அவர்கள் ஓடோடி சன் டைரக்டை வாங்க ஆரம்பித்தார்கள்.
டிவி இல்லாதவர்களுக்கும் இப்போது இலவசமாக டிவி கிடைக்க வைத்ததால் அவர்களும் சன் டைரக்டை வாங்கிவிட்டார்கள். கேபிளோ அல்லது நேரடியாக வீட்டுக்கு ஒளிபரப்பும் தொழிலோ எதுவாக இருந்தாலும் தாங்களே ஏகபோக உரிமையாளர்களாக இருக்க வேண்டும் என்ற மாறன் குடும்பத்தின் லாபமும் மனதில் வைத்தே இந்த இலவச டிவி திட்டம் அறிவிக்கப் பட்டதாக “அரசியல் வட்டாரங்கள்” சொல்கின்றன.( விகடன்ல இலங்கை பத்திரிக்கையாளர்கள் மற்றும் இலங்கை அரசியல்வாதிகள் சொல்வாங்களே , அந்த மாதிரி)
/ஒவ்வொரு முறையும் கட்டண அட்டையில் 50 ரூபாய் பாக்கி என குறித்து செல்கின்றனர். :)/
ஆஹா..இது நல்ல மெத்தடா இருக்கே!!
நல்லாருக்கு கட்டுரை! :)
முதல் பாரா சுத்தமாக பிடிக்கவில்லை.
//போட்டியே இல்லாத ஒரு தொழில் என்றால் அது டிவி கேபிள் இணைப்பு வழங்குவது தான்.//
எந்த ஊருல?
//எந்த சேனலை நாம் பார்க்க வேண்டும் என்பது கூட அவர் விருப்பமாகத்தான் இருக்கிறது.//
திரும்பவும் கேக்குறேன்... எந்த ஊருல?
//சுமங்கலி இருந்த இடமெல்லாம் அரசு கேபிள் ஆக்கிரமித்தது//
உண்மையா?
கடைசி மூனு பாரா ஓக்கே.
நான் இப்போது சென்னையில் இருக்கிறேன். சுமங்கலி செட்டப் பாக்ஸ். நல்ல தெளிவான ஒளிபரப்பு. Pay Channel வேண்டுமானால் அவற்றிற்கு தனி கட்டணம் செலுத்திக்கொள்ள வேண்டும். ஒரு சேனலுக்கு 6 ரூபாய். உங்கள் விருப்பப்ப்டி தனித்தனியாக தேர்வுசெய்துகொள்ளலாம். டிஷ் மாதிரி பேக்கேஜ் குடுத்து தேவையில்லாத சேனல்களின் திணிப்பு கிடையாது.
எனது அனுபவத்தில், டிஷ் அளிப்பவர்களி விட சுமங்கலி செட்டப் பாக்ஸ் குறைந்த செலவில் நிறைவாய் இருக்கிறது.
இதற்கு முன் இருந்த ஹாத்வேயும் இதே முறைதான். ஆனால் சென்னையை விட்டுப் போய்விட்டது.
யோவ் இதெல்லாம் ஒரு மேட்டரு என்னமோ ஆராய்ஞ்சி பீராய்ஞ்சி எழுதின மாதிரி
எங்க அம்மா சொல்றாங்க ஆமாம் அவன் டிவி பிசினஸ் ஓடனும் அதுக்கு தான் ஃப்ரீயா டிவி தந்தான்னு இதுக்கு ஒரு அனாலிசிஸ் என்னமோ புதுசா கண்டிபுடிச்ச மாதிரி இதுக்கு பதில் நூறு நாள் வேலைதிட்டம் அதனால் அடிக்கப்பட்ட கொள்ளைகள் ஊரில் இருக்கும் ஒரே கோயில் சுவத்துக்கு 9 முறை வெள்ளை அடித்தது, இருக்கற ஒரே குளத்தை 10 முறை சுத்தம் செய்தது, அதில் பங்கு போனது, நன்மை தீமைகள் பற்றி ஆராய்ஞ்சி பீராய்ஞ்சி எழுதனா நல்லா இருக்கும் புதுசாவும் இருக்கும்
நன்றி முல்லை..
எ.ஒருவன்
உங்க 3 கேள்விகளுக்கும் ஒரே பதில் : சென்னைக்கு வெளியே பிற எல்லாம் ஊர்களிலும். ஒரு தெருவில் 2 கேபிள் ஆபரேட்டர் எங்காவது இருக்கிறார்களா? எனக்குத் தெரிந்து இல்லை. இருந்தால் சொல்லுங்கள். தெரிந்துக் கொள்கிறேன். அரசு கேபிள் சுமங்கலியை கபளீகரம் செய்திருக்கும் இன்னும் கொஞ்சம் காலம் விட்டிருந்தால். மதுரையில் சுமங்கலியின் இடத்தில் இப்போது ராயல் கேபிள் விஷன் இருக்கிறது.
செட்டாப் பாக்ஸ் சென்னையில் மட்டுமே இருக்கிறது.
குழலி, அதையும் எழுதிடுவோம்..
நன்றி சஞ்சய்.
எனக்குத் தெரிந்து சென்னையிலும் (சைதாப்பேட்டை, மாம்பலம்) ஒரே ஏரியாவில் ரெண்டு ஆபரேட்டர்கள் இல்லை. இப்போது எல்லாமே சுமங்கலி வசம்.
என்னைப் பொறுத்தவரை சுமங்கலியின் செட்டாப் பாக்ஸ் நன்றாகத்தான் இருக்கிறது. அனைத்து ஊர்களிலும் கொண்டுவந்தாலும் தப்பில்லை, ஆச்சர்யப்படுவதற்கில்லை.
ஆனால், ஒரு சில அராஜகங்களைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அண்மையில் ஹாத்வே.
//இதுக்கு பதில் நூறு நாள் வேலைதிட்டம் அதனால் அடிக்கப்பட்ட கொள்ளைகள் ஊரில் இருக்கும் ஒரே கோயில் சுவத்துக்கு 9 முறை வெள்ளை அடித்தது, இருக்கற ஒரே குளத்தை 10 முறை சுத்தம் செய்தது, அதில் பங்கு போனது, நன்மை தீமைகள் பற்றி ஆராய்ஞ்சி பீராய்ஞ்சி எழுதனா நல்லா இருக்கும் புதுசாவும் இருக்கும்//
இதுவும் சூப்பரு !
:)
//கிராம மக்களை பொறுத்தவரை சன் நிறுவன சேனல்கள் இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பவர்கள். அவர்கள் ஓடோடி சன் டைரக்டை வாங்க ஆரம்பித்தார்கள்.//
உண்மைதான் அன்பரே.....இதுவும் ஒரு வியாபார நுணுக்கம்தான். ஓட்டு பெறுவதற்கான நுணுக்கமும் இதில் அடங்கியுள்ளது. ஒரு குடும்பத்தின் ஏகபோக உரிமையில் எல்லாம் நடக்கிறது.
இதற்கு முன் இருந்த ஹாத்வேயும் இதே முறைதான். ஆனால் சென்னையை விட்டுப் போய்விட்டது.//
சென்னை மட்டும் இல்லை, கோவையிலும் விரட்டிடாங்க :(
யாருப்பா அங்க?? நம்ம சஞ்சய் இதோட நாளாவது பாகம் எழுதுவதற்குள் ஒரு இலவச டிவி யும், ஒரு சன் டைரக்ட் டிஷும் கொடுங்க... கொடுங்க... முடியல :)
நான் கேபிள் கட்டணம் கொடுத்தே ஒரு வருடம் ஆகுது..
இது எப்படி இருக்கு..??
சஞ்சய், விஷயத்தை நல்லா அலசுறீங்க!!
ஆனா, கூட்டணிக் கட்சியையே எதிர்த்து, ஓ, நீங்க.. எனிவே, எதிர்காலத்துக்குத் தேவையான ஸ்ட்ராங்க் பேஸ்மெண்ட்தான்...
ஜோக்ஸ் அபார்ட், இதில் ஊழல் இருக்கும் என்று தெரிந்தாலும், தொகையைக் கண்டால் தலைசுற்றுகிறது.
பின்னூட்டமிடாமல் செல்பவர்கள் விருந்துக்கு அழைக்கப் படுவார்கள் என எச்சரிக்கிறேன்.
சரி.
விருந்து எப்போ எங்கே..?
பட்டா போட்டு விற்காமல் ஓய மாட்டார்கள் போலிருக்கிறதே....
மீடியா பவர்தான் கண்களை பனியவைத்து இதயதை இனிக்க வைத்துவிட்டதே....நமக்கு எல்லாமே வேடிக்கைதான்.
அப்போது தினசரி தினகரனில் வந்து கொண்டிருந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம்(கிட்டத்தட்ட அரை பக்கம்-நாங்க மட்டும் சொல்லல...அவன் சொன்னான் இந்தா இவம் சொன்னான் என்கிற ரேஞ்சுக்கு)
ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது...
சரி...கற்றுக்கொடுத்த குரு: மம்மியே மயக்கம் போட்டு விழுமளவு ஆகிவிட்டது.
இனி டெண்டர் ஒன்றுதான் பாக்கி: ஓட்டெடுபிற்கு பதில்.
தலைவரே.. போட்டியே இல்லாத தொழில்னு சொல்லாதீங்க.. எவ்வளவு வெட்டு குத்து, கொலை எல்லாம் நடந்திருக்கு தெரியுமா..// இப்பல்லாம் வேணாம்னு எலலாரும் ஒதுங்கிட்டோம்ம் அவ்வளவுதான்..
NDTV,discovery,BBC போன்ற அறிவுபூர்வ சேனல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன. டிவியை ஓசியில் கொடுப்பவர்கள், நல்ல சேனல்களையும் இலவசமாகக் கொடுக்கலாம்.
////இதுக்கு பதில் நூறு நாள் வேலைதிட்டம் அதனால் அடிக்கப்பட்ட கொள்ளைகள் ஊரில் இருக்கும் ஒரே கோயில் சுவத்துக்கு 9 முறை வெள்ளை அடித்தது, இருக்கற ஒரே குளத்தை 10 முறை சுத்தம் செய்தது, அதில் பங்கு போனது, நன்மை தீமைகள் பற்றி ஆராய்ஞ்சி பீராய்ஞ்சி எழுதனா நல்லா இருக்கும் புதுசாவும் இருக்கும்//
திட்டம் நடைமுறை படுத்தும் போது உள்ள பிரச்சினைகளை சொல்லுகிறீர்கள், பதிவு எழுதியவர் திட்டமே சரி இல்லாத திட்டம் பற்றி எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.
வேலை வாங்கிட்டு நூறு ரூபாய் குடுப்பது. ஒரு திட்டமாக தப்பான திட்டம் அப்படின்னு சொல்ல முடியுமா.
இலவசமா எல்லாருக்கும் TV குடுப்பது அப்படி சொல்ல முடியும்.
நல்ல பதிவு சஞ்சய். இப்படியெல்லாம் தவறுகளை சுட்டிக் காட்ட ஒரு தைரியம் வேணும். அது உங்களுக்கு இருப்பதில் மகிழ்ச்சி.
இப்படியே பாகம் பாகமா எழுதினீங்க, வீட்டுக்கு ஆட்டோ வரப் போகுது. ;)
Nice :)
hey ppl,
u guys dont think about how politics making money. the ppl who wrote the comments they just talking about their self, because u guys soo dumb. think about poor ppl. if gud ppl they ll alike to help ppl but indian poilics invest their money and manking more money. the money they spending for TV with that money u can help for medical ot school or food. most our ppl they dont think about other ppl. they think just eat and die. one think when ppl die u guys dont taking stuff wid u guys. soo many ppl dieing because of food.
நானும் சன் டிரக்ட்தான் மாமா வெச்சிருக்கேன் இப்ப 100 ரூவா. இசையருவி வராது :(
மொதல்ல வேற எந்த டிடிஎச்லயும் இவ்வளவு தமிழ் சானல் இல்லைங்கிறதுக்காகவே இத வாங்கினேன், இப்ப எல்லா டிடிஎச்லயும் எல்லா தமிழ்சானல் இசையருவி உட்பட வருது மாறலாமான்னு யோசிக்கிறேன்.
இப்ப இருக்கிற டிஷ்ஷை எடைக்கு போட்டா எம்புட்டு கிடைக்கும். (அவந்தானே டிஷ்ஷும் செட்டாப் பாக்ஸும் இலவசம்னு சொல்லுறான்ல)
இந்த ஊர்ல கேபிள் டிவிக்கு 220ரூ வெறும் 3 தமிழ் சானல்தான் வரும். :(
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
// Cable Sankar said...
தலைவரே.. போட்டியே இல்லாத தொழில்னு சொல்லாதீங்க.. எவ்வளவு வெட்டு குத்து, கொலை எல்லாம் நடந்திருக்கு தெரியுமா..// இப்பல்லாம் வேணாம்னு எலலாரும் ஒதுங்கிட்டோம்ம் அவ்வளவுதான்..//
எதற்கு வெட்டு குத்து கொலைகள் எல்லாம் நடந்தது சங்கர்ஜி? போட்டியே இருக்கக் கூடாதுன்னு தானே. ஒரு தெருவில் 2 கேபிள் இணைப்புத் தரும் நிற்வனம் எந்த ஊரிலாவது இருக்கிறதா? வாடிக்கையாளருக்கு வேறு ஆப்ஷனே இல்லாத தொழில் இது தானே. எவ்வளவு மோசமான விஷயம் இது.
>>