November 3, 2009

தைரியம் இருந்தா வந்து பாருங்க

என்னைப் பிடிக்காதவங்க ஏராளமா இருக்காங்க. எனக்குப் பிடிக்காதவங்க யாருமே இல்லைங்க..
(போதும்டா வெண்ண.. விஷயத்துக்கு வா..)

வலையுல ஆச்சி(மசாலா இல்ல)யும் பப்பு டைம்ஸ் எடிட்டர் இன் சீஃபுமான சந்தன முல்லை ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு விடுத்திருக்காங்க. ஏற்கனவே சில அழைப்புகள் பெண்டிங்கல இருக்கு. அவங்களும் ரொம்ப வேண்டியவங்க வேற. என்ன நடக்கப் போகுதோ.. இது ரொம்ப சின்ன பதிவு என்பதால்( மொக்கை போட்டு பெரிசாக்கிட்டு இருக்கேன் பாருங்க) முதலில் எழுதிவிடுகிறேன்.. பிறகு மற்றவர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும். அது வரை மன்னிக்க.

பிடிக்காதவர்கள் பட்டியலில் இருப்பவர்களிடம் பிடிக்காதது அவர்கள் துறை சார்ந்த செயல்களால் மட்டுமே. தனிப்பட்ட வாழ்விற்காக இல்லை.

1.அரசியல் தலைவர்
பிடித்தவர் :காமராஜர் - நம் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்துக்கு காரணம்.
பிடிக்காதவர்: எம்ஜிஆர் - இலவசங்களை குடுத்து ஏமாற்றும் வித்தையை அறிமுகப் படுத்தியதோடு கல்வி நிறுவன உரிமைகளை ஜால்றாக்களுக்கு குடுத்து வியாபாரம் ஆக்கியவர்.

2.எழுத்தாளர்
பிடித்தவர் : சுஜாதா - சுவாரஸ்யமாக இருக்கும்.
பிடிக்காதவர் : பாலகுமாரன் - கதைகள் படிக்கும் பழக்கத்தை விடக் காரணமே இந்த புண்ணியவான் தான். இவரைப் படிப்பவர்கள் பெரும் ஞானிகள் என்பது என் தாழ்மையானச் கருத்து.

3.கவிஞர்
பிடித்தவர் : கண்ணதாசன் - அனுபவத்தை அற்புத வரிகளாக்கியவர்..
பிடிக்காதவர் : கண்ணதாசன் - ஓவர் பில்டப் குடுத்து சிலரை வளர்த்துவிட்டவர். குறிப்பாக எம்ஜிஆரை. ( பிடிக்காதவ்ர்கள் பட்டியல் ரொம்பப் பெரிசு இதுல மட்டும் )

4.இயக்குனர்
பிடித்தவர் : மணிரத்னம் - பொழுது போக்கிற்கு இடையே எப்போதாவது கருத்து சொல்வார்.
பிடிக்காதவர்: சேரன் - தன் இஷ்டத்துக்கு படம் எடுத்து பிறர் உயிரை வாங்குவார்.

5.நடிகர்
பிடித்தவர் : கமல்ஹாசன் - சகலகலாவல்லவன்..
பிடிக்காதவர் : பிரகாஷ்ராஜ் - சிவாஜிக்கு பிறகு மிகை நடிப்பின் சூப்பர்ஸ்டார். சிவாஜியாவது மேடை நாடகம் மூலம் வந்தவர். இவருக்கென்ன?

6.நடிகை
பிடித்தவர் : ஜோதிகா ( நமீதாவும் தான் ) - மொழி தெரியாமலே பாவனைகளில் பின்னி பெடலெடுப்பார்.. மொழியிலும் கலக்கியவர்.. ( நமீதா.... ஹிஹி.. என் ஆசை மச்சான் )
பிடிக்காதவர் : திரிஷா ( முன்னனி நாயகர்களுடன் ****ஆடுவது மட்டுமே நோக்கம். நடிப்பு பற்றி அக்கறை இல்லை.)

7 . இசையமைப்பாளர்
பிடித்தவர் : ஏ.ஆர்.ரஹ்மான் , இளையராஜா - முணுமுணுக்க வைக்கும் இசைக்கு சொந்தமானவர்கள்.
பிடிக்காதவர் : தேவா - காப்பி பேஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். காப்பி கடையோ சாஃப்ட்வேர் கம்பெனியோ நடத்தி இருக்கலாம்.

இந்த தொடரை தொடர அழைப்பது- ஒசாமா பின்லேடன், இந்துகுஷ் மலை, ஆப்கானிஸ்தான் மற்றும் என் கே கே பி ராஜா , பெங்களூர் அல்லது கேரளா.
( மீண்டும் தலைப்பைப் படித்துக் கொள்ளவும்)

40 comments:

சந்தனமுல்லை said...

/பிடிக்காதவர்: சேரன் - தன் இஷ்டத்துக்கு படம் எடுத்து பிறர் உயிரை வாங்குவார்./

:)))))

சந்தனமுல்லை said...

/ஜோதிகா ( நமீதாவும் தான் ) - மொழி தெரியாமலே பாவனைகளில் பின்னி பெடலெடுப்பார்.. மொழியிலும் கலக்கியவர்.. ( /

தமன்னா அத்தையை விட்டுட்டீங்களே...அவ்வ்வ்!! :))

அமுதா கிருஷ்ணா said...

எம்.ஜி.ஆர் பாயிண்ட் கரெக்ட் சார்...

ரங்கன் said...

ப்ரகாஷ்ராஜ் : ஹாய் செல்லம்..என்ன வார்த்த சொல்லிட்ட செல்லம்..பாரு..த்ரிஷா செல்லம் ரொம்ப ஃபீல் பண்ணுது..

எம்.ஜி.ஆர் : அடடா!! என் ரத்தத்தின் ரத்தமே..!! என் உடம்பிறப்பே..என்ன சஞ்சய் இது என்ன இது..? என்னால தாங்க முடியலை..!!

பாலகுமாரன் : நீங்கள் இன்னும் வளரவேண்டும் தம்பி.!!

சேரன்: மணிரத்னம் மட்டும் என்ன உங்ககிட்ட வந்து பர்மிஷன் கேட்ட படம் பிடிக்கிறாரு..?

தேவா : அன்னிக்கு என்ன ஏன் நீ ஏற இறங்க பார்த்த..!!
இன்னிக்கு சஞ்செய் நீ சொல்லிட்டியே ..ஒரு வார்த்த..!!

ரங்கன் said...

நமீதா : மச்சான்..ஐ..லவ் யூ...டூ மச்... த்ரீ மச்..போர் மச்..!!

தாரணி பிரியா said...

நான் உங்க போட்டோ ஏதனாச்சும் போட்டு இருக்கிங்களோன்னு பயந்துட்டே வந்தேன்

அய்யோ இந்த பாலகுமாரன் தானே ஒரு ஞானி ரேஞ்சுல இல்ல எழுதி உயிரை வாங்குவார்.

கோவி.கண்ணன் said...

//இந்த தொடரை தொடர அழைப்பது- ஒசாமா பின்லேடன், இந்துகுஷ் மலை, ஆப்கானிஸ்தான் //

:)

கலகலப்ரியா said...

=)).. achcho.. achcho... fat rombathaan jaasthi saamiyo.. =))

ஆயில்யன் said...

//அவங்களும் ரொம்ப வேண்டியவங்க வேற. /

ஆச்சி உங்களுக்காக என்ன வேண்டிக்கிட்டாங்க பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

பீர் | Peer said...

ஹலோ என்ன விளையாடுறீங்களா... பதில் தப்பு தப்பா இருக்கு. மார்க் போட முடியாது. :)

ஆயில்யன் said...

//எம்ஜிஆர் - இலவசங்களை குடுத்து ஏமாற்றும் வித்தையை அறிமுகப் படுத்தியதோடு கல்வி நிறுவன உரிமைகளை ஜால்றாக்களுக்கு குடுத்து வியாபாரம் ஆக்கியவர்.//

குட்!

Swami said...

//பிடிக்காதவர் : தேவா - காப்பி பேஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். காப்பி கடையோ சாஃப்ட்வேர் கம்பெனியோ நடத்தி இருக்கலாம்.//

இசை எடுப்பாளர் சே..சாரி.. இசை அமைப்பாளர் தேவா inspire ஆனதை copy past என்று அவமதிப்பதை வன்மையுடன் கண்டிக்கிறேன் :)

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

பீர் | Peer said...

//தமன்னா அத்தையை விட்டுட்டீங்களே...அவ்வ்வ்!! :))//

நாளை காலை வீட்டுக் கதவை திறக்கும் போது கவனம். வாசலில் ஆட்டோ நிற்கலாம். :)

ஆயில்யன் said...

//பிடிக்காதவர்: சேரன் - தன் இஷ்டத்துக்கு படம் எடுத்து பிறர் உயிரை வாங்குவார்.

:)

Princess said...

நான் பாலகுமாரன் படிச்சு இருக்கேனே!

-பதுமை.

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு இந்த லிஸ்ட்.

இந்த தொடரை தொடர அழைப்பது- ஒசாமா பின்லேடன், இந்துகுஷ் மலை, ஆப்கானிஸ்தான் மற்றும் என் கே கே பி ராஜா , பெங்களூர் அல்லது கேரளா. //

என்னாதிது...

ஜெட்லி said...

கடைசியா கேக்குறேன் கண்ணதாசனை
பிடிக்குமா?? பிடிக்காதா??

Karthik said...

//பிடிக்காதவர் : பிரகாஷ்ராஜ் - சிவாஜிக்கு பிறகு மிகை நடிப்பின் சூப்பர்ஸ்டார். சிவாஜியாவது மேடை நாடகம் மூலம் வந்தவர். இவருக்கென்ன?

இதச் சொன்னா ஏத்துக்க மாட்டேங்கிறாங்ணா.. நீங்க இருக்கீங்களா.. சரி..

//நமீதாவும் தான்

இப்போ எனக்கு எல்லாமே தெளிவா புரியுது.. நன்றி. :)))

Cable Sankar said...

எனக்கு கூட திரிஷா வை பிடிக்காது. அவரிடம் என்ன இருக்கிறது என்று இவ்வளவு பெரிய ஹிட் ஆனார் என்று புரியவில்லை. சஞ்செய்..

க.பாலாசி said...

எல்லா பதில்களையும் விரும்பினேன் அன்பரே...

பிடித்தவர் லிஸ்டில் நமீதாவை சேர்த்துக்கொண்டதால் பிழைத்துக்கொண்டீர். இல்லையென்றால் எத்தனை மஜ்ஜான்கள் சண்டைக்கு வருவார்கள் என்று தெரியாது?

நாடோடி இலக்கியன் said...

என்னப்பா நான் எழுத வேண்டியதை நீ எழுதியிருக்க.

கும்க்கி said...

ஓஹோ....
என்.கே.கே.பி.ஆரா....

இருக்குடி உமக்கு.....

சாருக்கும் தோட்டத்துலதானே வீடு..?

Rajalakshmi Pakkirisamy said...

//பிரகாஷ்ராஜ் - சிவாஜிக்கு பிறகு மிகை நடிப்பின் சூப்பர்ஸ்டார். சிவாஜியாவது மேடை நாடகம் மூலம் வந்தவர். இவருக்கென்ன?//

:( :( :(

சின்ன அம்மிணி said...

//தமன்னா அத்தையை விட்டுட்டீங்களே...அவ்வ்வ்!! :)//
ஆச்சி பாயிண்டை பிடிச்சிருக்காங்க :)

பித்தனின் வாக்கு said...

கண்ணதாசன் ????????????? எம் ஜியாரை ஓவர் பில்டப் கொடுத்தது வாலி அல்லவா? இப்ப முதல்வர்.
பாலகுமாரன் ????????????? இப்ப அவர் வாழ்க்கை தத்துவங்கள் அல்ல எழுதுறார்.
ஒசமா தொடர் பதிவா ஏன் அமெரிக்கா அளிக்கும் பரிசு உங்களுக்கு வேனுமா
என்,கே.கே. பி. ஏன் மருத்துவமனையில் நீங்க ரெஸ்ட் எடுக்கனுமா?

நல்ல பதிவு. நன்றி.

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html

Please accept this gift from me with deep appreciation for your blog.

-vidhya

ஸ்ரீமதி said...

எல்லா பதிலும் பிடிச்சிருந்தது.. :))

Sammy said...

///பிடிக்காதவர் : தேவா - காப்பி பேஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். காப்பி கடையோ சாஃப்ட்வேர் கம்பெனியோ நடத்தி இருக்கலாம்.///

எத்தனாச்சு திட்டனும்னா சாஃப்ட்வேர் கம்பெனி பசங்களை, நேர்லையே திட்டலாம்....

Mitr Friend - Bhushavali said...

//( நமீதாவும் தான் )// - What the hell!!! Ennala mudiyala... Apram azhudhuduven...

Pls do wish my friend a Happy B'day at Savoir-Faire

வால்பையன் said...

//என் கே கே பி ராஜா , பெங்களூர் அல்லது கேரளா./

ரொம்ப தான் குசும்பு!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இந்த தொடரை தொடர அழைப்பது- ஒசாமா பின்லேடன், இந்துகுஷ் மலை, ஆப்கானிஸ்தான் மற்றும் என் கே கே பி ராஜா , பெங்களூர் அல்லது கேரளா.
//

இது மெத்த ரசிக்கும் படியாக இருந்தது. இவ்வளவு பெரிய ஆக்களை ஒழுங்கான அட்ரஸ் இல்லாம ஆக்கி புட்டீங்களே!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

1.அரசியல் தலைவர்
பிடித்தவர் :காமராஜர் - நம் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்துக்கு காரணம்.
பிடிக்காதவர்: எம்ஜிஆர் - இலவசங்களை குடுத்து ஏமாற்றும் வித்தையை அறிமுகப் படுத்தியதோடு கல்வி நிறுவன உரிமைகளை ஜால்றாக்களுக்கு குடுத்து வியாபாரம் ஆக்கியவர்.

//
எப்ப மாறுனீங்க!?

உங்களுக்கு உங்க கட்சி(காங்கிரஸ்) தலைவர் சோனியாவையும்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்மோஹன் சிங்கையும் பிடிக்காதுன்னு இப்பதான் தெரியும்.

அட, தங்கபாலுவையுமா பிடிக்காது!?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

4.இயக்குனர்
பிடித்தவர் : மணிரத்னம் - பொழுது போக்கிற்கு இடையே எப்போதாவது கருத்து சொல்வார்.
பிடிக்காதவர்: சேரன் - தன் இஷ்டத்துக்கு படம் எடுத்து பிறர் உயிரை வாங்குவார்.//

மேல இருக்காரே மணிரத்னம் அவரும் அவரு இச்டத்துக்குதானே படம் எடுக்குறார்! :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

6.நடிகை
பிடித்தவர் : ஜோதிகா ( நமீதாவும் தான் ) - மொழி தெரியாமலே பாவனைகளில் பின்னி பெடலெடுப்பார்.. மொழியிலும் கலக்கியவர்.. ( நமீதா.... ஹிஹி.. என் ஆசை மச்சான் )
//

ஜோதிகா கொங்கு நாட்டு மருமகளாயிற்றே!?

அப்படிப்போடு அருவாள!

நீங்க நமீதா மச்சானா?

அவ்வ்வ்வ்வ்வ்!

SanjaiGandhi™ said...

பப்புஅம்மா, தமன்னா உங்களுக்கு அத்தையா? அழிச்சாட்டியத்துக்கு ஒரு அளவில்லையா? :)

அமுதா மேடம், நன்றி..

ரங்கன் , ஏன் இந்தக் கொலைவெறி ராசா? :)

தாரணி யக்கா, ஹிஹி.. நன்றி,,

கோவியாரே, ஏன் சுமைல்? அவர் உங்களுக்கு வேண்டியவரா? :) நன்றி..

லகலகப்ரியா, இந்த வயசுல கொழுப்பு அதிகமா இருக்கக் கூடாது. ஒரு வேளை ஓட்ஸ் சாப்டுங்க. :))

ஆயில்ஸ், ஆச்சி தானே.. அவங்க ரொம்ப நல்லவங்க.. ரொம்ப நல்லா வேண்டிக்கிட்டாங்க.. ஆயில்யனுக்கு அடுத்த மாசமே கல்யாணம் ஆகனும்னு.. :)

பீர், மார்க் எல்லாம் வேண்டாம். அதான் கமெண்ட் போட்டுட்டிங்களே.. btw நிற்கிறது புது ஆட்டோவா இருந்தா சந்தோஷம்ங்க..நன்றி.. :)

ஸ்வாமி, நீங்க தேவா ப்ரியரா? :)நன்றி..

ப்ரின்சஸ், அதானே.. எனக்கு எது பிடிக்காதோ அது மட்டும் தானே உனக்குப் பிடிக்கும்.. :)

விக்னேஷ்வரி, நன்றி.. அது என்னன்னு சாட்ல சொல்றேன். :)

ஜெட்லி, மொதல்ல பிடிக்கும்.. கடைசில பிடிக்காது.. :)

கார்த்திக், அடப்பாவி.. உன் ப்ளாக்ல போட்ட கமெண்ட்க்கு இங்க வந்து விளக்கம் தேடறியா நீ.. ரொம்ப நல்லவண்டா.. :))

கேபிளாரே, அதே கொஸ்டின் தான் இங்கயும்.. நன்றிங்ணா.. ;)

SanjaiGandhi™ said...

பாலாசி, கரெக்ட் தான்.. என் மச்சான்கள் எல்லாம் சண்டைக்கு வருவாங்க.. :) நன்றி

நாடோடி, உங்க லிஸ்ட் பார்த்தேன். பல விஷயங்களில் ரசனை சேம் சேம்.. :)

கும்கி, அதை எழுத சொன்னதே நீர் தானே ஓய்? :))

ராஜி, உங்களுகென்ன இவ்ளோ சோகம்? ப்ரகாஷ்ராஜ் உங்க சித்தப்பாவா? :)

சின்ன அம்மினி அக்கா.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நன்றி..

பித்தனின் வாக்கு, நன்றி சார்.. என்னை ஹாஸ்பிட்டலில் பார்க்கிறதுல உங்களுக்கு இவ்ளோ சந்தோஷமா? :)

விதூஷ், உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க.. அழகாய் அலமாரியில் அடுக்கி வச்சிட்டேன்..:)

ஸ்ரீமதி, நீ திருந்திட்டியா? குறை சொல்லாம பிடிச்சிருக்குன்னு சொல்ற.. :)

சாமி, நேர்ல திட்றதில்லைனு யார் சொன்னது? அட,, இந்த காப்பி பேஸ்ட் மேட்டர் எல்லாம் அவங்களா சொல்றது தானுங்க.. நான் கண்டுபிடிக்கலை..:)

புஷாவலி, ஏனுங்கம்ணி இம்புட்டு ரியாக்‌ஷன்? நமீதாவுக்கு இன்னா கொறைச்சலாம்.. :)) உங்கள் சித்து அக்காவை வாழ்த்திவிட்டேன்.. அவருக்கு கிடைத்த மிகச் சிறந்த பரிசு உங்கள் நட்பு தான்.. வாழ்க பல்லாண்டு..

வால்பையன், சொந்தக்காரங்களை விட்டுத்தர மாட்டிங்களே.. :)

SanjaiGandhi™ said...

ஜோதிசார், அவங்களே அட்ரஸ் இல்லாம ஆக்கிக்கிட்டாங்க.. 2 பேர்க்கும் ஒரு ஒத்தும இருக்கு.. வளர்த்தவங்களே அழிக்கப் பார்க்கிறாங்க.. :)

சோனியாகாந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை ரொம்ப பிடிக்கும். இந்தத் தொடரின் விதிப்படி அனைவரும் தமிழர்களா இருக்கனுமாம். மேலும், காமராசரை ஏன் பிடிக்கும் என்பதையும் சொல்லி இருக்கிறேன். :)

மணிரத்தனம் பிறர் இஷ்டப்படும் வகையில் படம் புடிப்பார். சேரன் தன் திருப்திக்கு படம் புடிப்பதாக அவரே அடிக்கடி சொல்கிறார். அவர் திருப்திக்கு நாம காசு கொடுத்துப் பார்க்கனுமாம். அவர் வீட்டிலேயே பார்த்துக் கொல்ல வேண்டியது தானே? எதற்கு தியேட்டருக்கு அனுப்பனும்?

ஜோவை கொங்கு நாட்டு மருமகளாக நினைக்க முடிவதில்லை. கொங்கு நாட்டுத் தொடர்பு சிவக்குமாருடனேயே முடிந்துவிடுகிறது. சூர்யாவின் காற்றாலைத் தொடர்பு மட்டுமே கொங்கு நாட்டில் உள்ளது. ஜோவின் நடிப்பிற்காக மட்டுமே பிடிக்கும். சிம்ரனைப் போல் நடிப்புடன் ஆபாசத்தையும் காட்டாமல் ஜொலித்தவர்.

நமிதா.. ஹிஹி.. நான் நமிதாவின் மச்சான் தான்.. :))

Honey said...

Dey mama no yaroda machan!!!!!!! Reconfirm panu

Honey said...

En ning matum than ishtathuku pesi mathavangala kolvingala, pavam cheramn mama polaichu potume

SanjaiGandhi™ said...

ஹனி, தெரிஞ்ச விஷயத்துக்கெல்லாம் நான் பதில் சொல்றதில்லை.. ரிகன்ஃபர்ம் பண்ணனுமா? மிதிக்கிறென் இரு.. ஸ்டுப்பிட் கேர்ள்..

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget