எப்படி நன்றி சொல்வது?

கிருஷ்ணகிரி செல்வதற்கு ஒரு நாள் முன்பு, கும்கியிடம் தெரிவித்தேன். வருவதற்கான காரணமும் சொன்னேன். அடுத்த நொடி” பாஸ், என் பைக் எடுத்துக்கோங்க. அப்போ தான் 4 மணிக்குள்ள உங்க வேலை முடியும்”. நான் செல்ல வேண்டிய பகுதிகளை தெரிந்து தான் இதை சொன்னார். அதில் பல ஊர்களுக்கும் பேருந்து வசதியே இல்லை. சாலைகள் மிகக் கொடுமையானது. அடுத்தநாள் கிரிஷ்ணகிரியில் தன் பைக்குடன் தயாராய் நின்றிருந்தார். வண்டியைப் பார்த்ததும் அதிர்ச்சி. வாங்கி சில நாட்களே ஆன விலை உயர்ந்த தன் புத்தம் புதிய யுனிகானை என்னிடம் கொடுத்தார். அந்த சாலைகளில் சைக்கிளில் பயணிப்பதே சிரமம். மோசமான சாலைகளில் சுமார் 150கிமீ பயணம். அவர் அலுவலகம் போவதற்காக உபயோகிக்கும் புத்தம் புதிய வண்டியை என் சவுகரியத்திற்காக கொடுத்தார். எவ்வளவு பெரிய மனசுய்யா உமக்கு..

சில நாட்களுக்கு முன் மீண்டும் அதே வேலைக்காக ஒசூர் சென்றிருந்தேன். அந்த வேலைக்கான பொருட்கள் வந்துக் கொண்டிருப்பதாகவும் ,அதை கிருஷ்ணகிரியில் பாதுகாப்பான இடத்தில் இறக்கி வைக்க வேண்டும் என்றும் அலுவலகத்தில் இருந்து திடீர்த் தகவல். மீண்டும் கும்கியைத் தொடர்புக் கொண்டு உதவி கேட்கிறோம்( நானும் நந்தண்ணாவும்) . அடுத்த நாள் காலையில் என்னுடன் இணைந்துக் கொண்டார். முதலில் தங்குவதற்கு ஒரு ஹோட்டல் அறை வேண்டும் என்பதால் அதற்கு முயற்சிக்கிறோம். அன்று முகூர்த்த தினம் என்பதால் நகரின் முக்கிய ஹோட்டல்கள் அனைத்திலும் இடம் இல்லை. பின்னர் அலைந்துத் திரிந்து ஒரு அறை பதிவு செய்துவிட்டு, பொருட்களை வைப்பதற்கான இடத்திற்காக அவருக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் தொலைபேசி உதவி கேட்கிறார். அவரது உறவினர் பொறியாளர் திரு. ஆறுமுகம் அவர்களுக்கு சொந்தமான ஒரு இடத்தை ஏற்பாடு செய்துக் கொடுத்தார். இந்த வேலைகளுக்காக சுமார் 3 மணி நேரம் அவர் நேரத்தை செலவிட்டார்.

அன்று மாலை நண்பர் மேடியின் திருமணத்திற்கு ஈரோடு செல்ல வேண்டும் என்பதால் தன் அலுவல் பணிகளை எல்லாம் விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. அவரது உயரதிகாரி கண்டிப்பானவர் மட்டுமல்லாமல் மிகவும் தண்டிப்பானவரும் கூட. ஆனாலும் கூட அவர் என்னவோ கூலாகத்தான் இருந்தார். எனக்குத் தான் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருபப்து போல் வேதனை. தொந்தரவு செய்ததற்கு மன்னிச்சிடுங்க கும்கி. அன்றைய உங்கள் சூழ்நிலையில் நீங்கள் செய்தது உதவி இல்லை. தியாகம். என்றும் மறக்க மாட்டேன். நீங்கள் இல்லாமல் இருந்தால் அந்த வேலை முடிந்திருக்காது. உங்கள் நட்பிற்கு என்ன தவம் செய்தேனோ..

நண்பர் மேடியின் திருமணத்திற்காக வருவதற்கு சில நாட்கள் முன்பிருந்தே ரம்யா அககாவிடம் இருந்து அடிக்கடி போன். ஈரோட்டுப் பயணத்தின் போது கோவைக்கும் வருவதாகவும் தம்பியை( நாந்தேன் ) பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மிக்க பாசமான அக்கா என்பதால் நானும் ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தேன். விதி விளையாடிவிட்டது. மேலே சொன்ன வேலைகளுக்காக கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப் பயணத்திற்கு சென்றாக வேண்டியதாகிவிட்டது. இதை சொன்னதும் “ என்னடா தம்பி, புள்ள தனியா இருக்கேன்னு உனக்காக வத்தக் குழம்பு, பூண்டு ஊறுகாய் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டு இருக்கேன். பார்க்க முடியலையே”ன்னு ரொம்ப வருத்தப் பட்டாங்க. அதை எல்லாம் விஜியிடம் குடுத்துட்டுப் போய் இருக்காங்க. வந்து பார்த்தேன். அம்மாடீஈஈஈஈஈஈஈஈஈஈ. எவ்ளோ வாங்கி வந்திருக்காங்க. ஃப்ரிட்ஜ் நிரம்பிடிச்சி. அதை எல்லாம் எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கும்ப் போது, ஏனென்று சரியாகத் தெரியவில்லை , கண்ணீர் முட்டியது. நன்றி சொல்வது உங்களுக்கு பிடிக்காது என்பதால் மட்டுமில்லை , உங்கள் பாசத்தை அந்த வார்த்தையால் ஈடு செய்யவும் முடியாது என்பதால் நன்றி சொல்லவில்லை அக்கா. சொல்லிப் புரியவைக்க முடியாத சந்தோஷத்தில் இருக்கிறேன். உங்கள் பாசத்திற்கு என்னத் தவம் செய்தேனோ..

கோவைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் வரையிலும் இங்கு எனக்கு நண்பர்களே கிடையாது. வியாபாரத் தொடர்புகள் மட்டுமே. ஆனால் இப்போது ,
அண்ணாச்சி வடகரை வேலன் குடும்பத்தார்,
விஜி ராம்கோபால் குடும்பத்தார்,
மஞ்சூர் ராசா அண்ணா குடும்பத்தார்,
தாரணி அக்கா ஆகியோர் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே நடத்துகிறார்கள். நான் இங்கு தனியாக வாழும் உணர்வே இல்லை. இவர்களின் அன்புக்காக எல்லாம் நான் என்ன தவம் செய்தேனோ?

டிஸ்கி: மேலே குறிப்பிட்டிருப்பது அனைத்தும் பதிவுலகத்தால் மட்டுமே எனக்கு சாத்தியமானது. பதிவுலகத்திற்கு வராமல் இருந்திருந்தால் இந்த உறவுகளை எல்லாம் அடைந்திருக்க முடியாது. கோவையைத் தாண்டியும் இன்னும் ஏராளமான உறவினர்கள் இந்த பதிவுலகத்தால் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

டிஸ்கி2 : பதிவுகள் எழுதுவதால் ஒரு பலனும் இல்லை என்று அவ்வப்போது சிலர் புலம்பி எழுதுவதைப் பார்த்தால் அவர்கள் மேல் அனுதாபம் தான் எற்படும். பாவம், அதிர்ஷ்டம் இல்லாதவர்கள். நான் பெரும் அதிர்ஷ்டசாலி.

டிஸ்கி3 : எழுதுங்கள் என் பின்னூட்டத்தில்.. இவன் பெரும் அதிர்ஷ்ட்டக்காரன் என்று. :)

தண்டோரா ......  – (November 30, 2009 9:28 AM)  

உண்மைதான் சஞ்சய்.. கும்க்கியும்,ரம்யாவும் டவுன் டூ எர்த் பர்சனாலிட்டிகள்..

இளைய கவி  – (November 30, 2009 9:59 AM)  

நல்லா இருய்யா , நீ ரொம்ப நல்லா இருய்யா.

mayil  – (November 30, 2009 10:16 AM)  

லொள்ளு சஞ்சய் உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லையா.. இதுக்கு ஒரு பதிவு வேற, அடச்சீ போய் வேலையபாருங்க..

$#@%$#@%$#@%$#@%$#

G3  – (November 30, 2009 10:20 AM)  

//டிஸ்கி3 : எழுதுங்கள் என் பின்னூட்டத்தில்.. இவன் பெரும் அதிர்ஷ்ட்டக்காரன் என்று. :)//

எழுதுங்கள் இவன் பின்னூட்டத்தில்.. இவன் எல்லாவற்றையும் ஓசியில் ஆட்டை போடுபவன் என்று :))

இப்படித்தானே எழுதியிருக்கனும் நீங்க :P

G3  – (November 30, 2009 10:20 AM)  
This post has been removed by the author.
Vinitha  – (November 30, 2009 10:39 AM)  

எதையோ எதிர்பார்த்து பதிவுலகில் வருவது தவறு. உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.

உங்க நிஜ பெயர் என்ன?

கோவையில் சவுரிபாளயத்தில் தான் இப்போ இடமெல்லாம் சீப் ஆமே?

SanjaiGandhi™  – (November 30, 2009 11:06 AM)  

//எழுதுங்கள் இவன் பதிவில்.. இவன் எல்லாவற்றையும் ஓசியில் ஆட்டை போடுபவன் என்று :)) //

ஜி3.. பப்ளிக்.. பப்ளிக்.. :)

அபி அப்பா  – (November 30, 2009 11:11 AM)  

ஜி 3 சரியா சொன்னேள் போங்கோ:-))))

குசும்பன்  – (November 30, 2009 11:14 AM)  

//ஏனென்று சரியாகத் தெரியவில்லை , கண்ணீர் முட்டியது//

இட்லி பொடி பாக்கெட் பிரிஞ்சு இருந்திருக்கும் மாமா அதான் கண்ணில் பட்டு, கண்ணீர் முட்டி இருக்கும்!

குசும்பன்  – (November 30, 2009 11:15 AM)  

டிஸ்கி3 : எழுதுங்கள் என் பின்னூட்டத்தில்.. இவன் பெரும் துரதிஷ்ட்டக்காரன் என்று. :)

இவன் பெரும் துரதிஷ்ட்டக்காரன் என்று. :)

இவன் பெரும் துரதிஷ்ட்டக்காரன் என்று. :)

இவன் பெரும் துரதிஷ்ட்டக்காரன் என்று. :)

இவன் பெரும் துரதிஷ்ட்டக்காரன் என்று. :)

இவன் பெரும் துரதிஷ்ட்டக்காரன் என்று. :)

தாரணி பிரியா  – (November 30, 2009 11:15 AM)  

அடிப்பாவி விஜி எல்லாத்தையும் சஞ்சய்க்கே குடுத்திட்டிங்களா. அப்ப என் ப்ளான் என்ன ஆகறது :(

குசும்பன்  – (November 30, 2009 11:16 AM)  

//ஆனாலும் கூட அவர் என்னவோ கூலாகத்தான் இருந்தார்.//

உன்கிட்ட வாங்கிய ஏசிக்கு கீழே நின்று இருப்பார் மாமா:)

தாரணி பிரியா  – (November 30, 2009 11:17 AM)  

சஞ்சய் நான் ரம்யாகிட்ட சொல்லிட்டேன். சஞ்சய் இங்க இருந்தாலும் இது அவர் கண்ணில் மட்டுமே காண்பிக்கப்படுமுன்னு. அதனால எல்லாத்தையும் மரியாதையா பார்சல் அனுப்பி வைங்க‌

குசும்பன்  – (November 30, 2009 11:17 AM)  

//அந்த சாலைகளில் சைக்கிளில் பயணிப்பதே சிரமம். மோசமான சாலைகளில் சுமார் 150கிமீ பயணம். //

ஓ சொந்த ஊருக்கு போனியா மாமா!

தாரணி பிரியா  – (November 30, 2009 11:18 AM)  

நீங்க அதிர்ஷ்டகாரர்தான் சஞ்சய் ஆனா உங்களை ப்ரெண்டா ஏத்துக்கிட்ட நாங்க எல்லாம்

மங்களூர் சிவா  – (November 30, 2009 11:19 AM)  

மாம்ஸ்

கும்கி அண்ணன் தி க்ரேட்.

☀நான் ஆதவன்☀  – (November 30, 2009 11:19 AM)  

நீங்க பெரும் அதிர்ஷ்ட்டக்காரன் :)

☀நான் ஆதவன்☀  – (November 30, 2009 11:20 AM)  

//
எழுதுங்கள் இவன் பின்னூட்டத்தில்.. இவன் எல்லாவற்றையும் ஓசியில் ஆட்டை போடுபவன் என்று :))/

:))))))))))))))) முடியல :))

கோவி.கண்ணன்  – (November 30, 2009 11:24 AM)  

//டிஸ்கி2 : பதிவுகள் எழுதுவதால் ஒரு பலனும் இல்லை என்று அவ்வப்போது சிலர் புலம்பி எழுதுவதைப் பார்த்தால் அவர்கள் மேல் அனுதாபம் தான் எற்படும். பாவம், அதிர்ஷ்டம் இல்லாதவர்கள். நான் பெரும் அதிர்ஷ்டசாலி.
//

ரிப்பீட்டே !

கலகலப்ரியா  – (November 30, 2009 11:32 AM)  

ஆஹா... டச் பண்ணிட்டாப்பா சஞ்சய்...! வாழ்க பதிவுலகம்..!

லாஸ்ட் வரி பஞ்ச்சா..? :>

சந்தனமுல்லை  – (November 30, 2009 11:41 AM)  

உண்மைதான் சஞ்சய்!! பதிவுலக நட்புகள் குறித்து நான் முழுமையாக அறிந்துகொண்டது - சிங்கைநாதனுக்காக உடஹ்வி வேண்டிய போதும், கோவைக்கு வந்திருந்தபோதும்!! வாழ்த்துகள்!! அப்புறம் ரம்யா மேடம்...நாங்களும் வீட்டையெல்லாம் விட்டு சென்னையிலே தனியாத்தான் இருக்கோம்..எங்களையும் கண்டுக்கறது!?! :-))

cheena (சீனா)  – (November 30, 2009 11:50 AM)  

அன்பின் சஞ்செய்

நன்றி சொல்வது நற்றமிழர் பண்பு
எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்
கும்க்கி ரம்யா நட்பு வாழ்க

ஜெகதீசன்  – (November 30, 2009 11:59 AM)  

///
குசும்பன் said...

//ஆனாலும் கூட அவர் என்னவோ கூலாகத்தான் இருந்தார்.//

உன்கிட்ட வாங்கிய ஏசிக்கு கீழே நின்று இருப்பார் மாமா:)

///
சஞ்சய் கிட்ட வாங்கின ஏசிக்கு கீழ நின்னா எப்படி கூலா இருக்கமுடியும்????
:P

குசும்பன்  – (November 30, 2009 12:14 PM)  

//எழுதுங்கள் இவன் பின்னூட்டத்தில்.. இவன் எல்லாவற்றையும் ஓசியில் ஆட்டை போடுபவன் என்று :))

இப்படித்தானே எழுதியிருக்கனும் நீங்க :P//

கலக்கல் கமெண்ட்! மாமா சிரிச்சுக்கிட்டே இருக்கேன்!

//தாரணி பிரியா said...
நீங்க அதிர்ஷ்டகாரர்தான் சஞ்சய் ஆனா உங்களை ப்ரெண்டா ஏத்துக்கிட்ட நாங்க எல்லாம்
//

சூப்பர்...


ஏன் மாமா உன்மேல இம்புட்டு கொலவெறியா பலர் இருக்காங்க:))

☼ வெயிலான்  – (November 30, 2009 12:41 PM)  

கும்கிக்கு ரொம்பப் பெரிய மனசு.... :)

mayil  – (November 30, 2009 12:45 PM)  

தாரணி பிரியா said...

நீங்க அதிர்ஷ்டகாரர்தான் சஞ்சய் ஆனா உங்களை ப்ரெண்டா ஏத்துக்கிட்ட நாங்க எல்லாம்


repeatttttttttuu

mayil  – (November 30, 2009 12:49 PM)  

குசும்பன், இட்லி பொடி மட்டும் இல்ல ஒரு கிலோ ஸ்வீட், ஒரு கிலோ முறுக்கு, 5 வகை குழம்பு மிக்ஸ், அப்பறம் வேற என்னமோ ஸ்பெஷல் வேற... kirrrrrrrrrrrr

mayil  – (November 30, 2009 12:50 PM)  

உன்கிட்ட வாங்கிய ஏசிக்கு கீழே நின்று இருப்பார் மாமா:)//

தமாசு...

mayil  – (November 30, 2009 12:52 PM)  

அடிப்பாவி விஜி எல்லாத்தையும் சஞ்சய்க்கே குடுத்திட்டிங்களா. அப்ப என் ப்ளான் என்ன ஆகறது :( //

அதை மட்டும் நாம சாப்பிடுருந்தா!!! நேர பெரிய ஆஸ்பத்திரிதான் ....வயித்தெரிச்சல்

mayil  – (November 30, 2009 12:54 PM)  

//அந்த சாலைகளில் சைக்கிளில் பயணிப்பதே சிரமம். மோசமான சாலைகளில் சுமார் 150கிமீ பயணம். //

ஓ சொந்த ஊருக்கு போனியா மாமா!

அந்த ஊருல சைக்கிள் வேற போகுமா? ஒன்லி நடராஜ சர்வீஸ். ரோடு போட்டாத்தான் கல்யாணமே ..பொண்ணே தர மாட்டேன்கரங்க :))

mayil  – (November 30, 2009 12:57 PM)  

நன்றி சொல்லறது ரொம்ப சுலபம்...

//அம்மாடீஈஈஈஈஈஈஈஈஈஈ. எவ்ளோ வாங்கி வந்திருக்காங்க. ஃப்ரிட்ஜ் நிரம்பிடிச்சி. அதை எல்லாம் எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கும்ப் போது, ஏனென்று சரியாகத் தெரியவில்லை ,//

அந்த புது பிரிட்ஜ் மட்டும் என்கிட்ட குடுத்துடுங்க :))

mayil  – (November 30, 2009 12:58 PM)  

உங்க நிஜ பெயர் என்ன? //


ஹிஹிஹிஹி ... என்னத்த சொல்றது ??

RAMYA  – (November 30, 2009 2:04 PM)  

ஒரு பாசக்கார தம்பியை எல்லாருமா போட்டு இப்படி தாக்கிட்டீங்களே :((

நீ கவலைப்படாதே தம்பி அக்கா நான் இருக்கேன் :)

RAMYA  – (November 30, 2009 2:05 PM)  

//

தண்டோரா ...... said...
உண்மைதான் சஞ்சய்.. கும்க்கியும்,ரம்யாவும் டவுன் டூ எர்த் பர்சனாலிட்டிகள்..
//

மணிஜி! என்ன சொல்றதுன்னே தெரியலை!

RAMYA  – (November 30, 2009 2:08 PM)  

//
mayil said...
$#@%$#@%$#@%$#@%$#
//

மயிலூ......இதுக்கு எந்த டிக்சினரிலே அர்த்தம் இருக்கு :)

RAMYA  – (November 30, 2009 2:11 PM)  

//
குசும்பன் said...
//ஏனென்று சரியாகத் தெரியவில்லை , கண்ணீர் முட்டியது//

இட்லி பொடி பாக்கெட் பிரிஞ்சு இருந்திருக்கும் மாமா அதான் கண்ணில் பட்டு, கண்ணீர் முட்டி இருக்கும்!
//

குசும்பன்! அது மிளகாய் பொடினாலே வந்த கண்ணீர் இல்லே
ஆந்தக்கண்ணீர் :)

RAMYA  – (November 30, 2009 2:13 PM)  

//
தாரணி பிரியா said...
அடிப்பாவி விஜி எல்லாத்தையும் சஞ்சய்க்கே குடுத்திட்டிங்களா. அப்ப என் ப்ளான் என்ன ஆகறது :(
//

ஐயோ! தாரிணி பிளான் இப்படி தவிடு பொடியாயிடுச்சே :)

தாரணி பிரியா  – (November 30, 2009 2:14 PM)  

// RAMYA said...

//
குசும்பன் said...
//ஏனென்று சரியாகத் தெரியவில்லை , கண்ணீர் முட்டியது//

இட்லி பொடி பாக்கெட் பிரிஞ்சு இருந்திருக்கும் மாமா அதான் கண்ணில் பட்டு, கண்ணீர் முட்டி இருக்கும்!
//

குசும்பன்! அது மிளகாய் பொடினாலே வந்த கண்ணீர் இல்லே
ஆந்தக்கண்ணீர் :)//

சஞ்சய் ஆந்தையா நன்றி ரம்யா :)

RAMYA  – (November 30, 2009 2:14 PM)  

//
தாரணி பிரியா said...
சஞ்சய் நான் ரம்யாகிட்ட சொல்லிட்டேன். சஞ்சய் இங்க இருந்தாலும் இது அவர் கண்ணில் மட்டுமே காண்பிக்கப்படுமுன்னு. அதனால எல்லாத்தையும் மரியாதையா பார்சல் அனுப்பி வைங்க‌
//

சஞ்சய் ரொம்ப மிரட்டுவாங்க போல இருக்கே :)

எதுக்கும் உங்க பிர்ட்ஜ் பத்திரம் :))

தாரணி பிரியா  – (November 30, 2009 2:14 PM)  

குசும்பன் said...


ஏன் மாமா உன்மேல இம்புட்டு கொலவெறியா பலர் இருக்காங்க:))

எல்லாம் ஒரு பாசம்தான் :)

தாரணி பிரியா  – (November 30, 2009 2:15 PM)  

// mayil said...

அடிப்பாவி விஜி எல்லாத்தையும் சஞ்சய்க்கே குடுத்திட்டிங்களா. அப்ப என் ப்ளான் என்ன ஆகறது :( //

அதை மட்டும் நாம சாப்பிடுருந்தா!!! நேர பெரிய ஆஸ்பத்திரிதான் ....வயித்தெரிச்சல்//


அப்ப சஞ்சய்க்கு நல்லா வயிறு வலிக்குமா விஜி

தாரணி பிரியா  – (November 30, 2009 2:16 PM)  

//Blogger RAMYA said...
)

எதுக்கும் உங்க பிர்ட்ஜ் பத்திரம் :))//

அந்த புது ஃப்ரிட்ஜ் எனக்கே எனக்கு :)

RAMYA  – (November 30, 2009 2:19 PM)  

//
சந்தனமுல்லை said...
அப்புறம் ரம்யா மேடம்...நாங்களும் வீட்டையெல்லாம் விட்டு சென்னையிலே தனியாத்தான் இருக்கோம்..எங்களையும் கண்டுக்கறது!?! :-))
//

ச்சேச்சே! என்ன இப்படி சொல்லிட்டீங்க முல்லை? நான் இருக்கும் போது நீங்க இப்படி தனியாவீங்க?

திடீர்ன்னு ஒரு நாள் வந்துடுவோம்லே :-)

பாருங்க அப்போ திக்குமுக்காடி போயிடுவீங்க :)

கண்டுக்குறது மட்டுமில்லே ஸ்பெஷல்ஆ கவனிச்சிடுவோம்லே :)

தாரணி பிரியா  – (November 30, 2009 2:19 PM)  

RAMYA said...


//

ஐயோ! தாரிணி பிளான் இப்படி தவிடு பொடியாயிடுச்சே :)//


ஆமாம் ரம்ஸ் நான் சொல்லிட்டுதானே கிளம்பினேன் எல்லாத்தையும் ஒருக்கா சஞ்சய் கண்ணுல மட்டும் காமிச்சுட்டு எடுத்து வையுங்கன்னு. இந்த விஜி எல்லாத்தையும் குடுத்துட்டாங்களாம்

RAMYA  – (November 30, 2009 2:21 PM)  

//
cheena (சீனா) said...
அன்பின் சஞ்செய்

நன்றி சொல்வது நற்றமிழர் பண்பு
எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்
கும்க்கி ரம்யா நட்பு வாழ்க
//

நன்றி சீனா! நீங்களும் எங்கள் ஜோதியில் ஐக்கியம் என்பதை மறந்துடாதீங்க :)

RAMYA  – (November 30, 2009 2:23 PM)  

//
குசும்பன்! அது மிளகாய் பொடினாலே வந்த கண்ணீர் இல்லே
ஆந்தக்கண்ணீர் :)
//

அடபாவீங்களா! கொஞ்சமா பிங்கர் ஸ்லிப் ஆயிடுச்சு :))

RAMYA  – (November 30, 2009 2:25 PM)  

//
mayil said...
அடிப்பாவி விஜி எல்லாத்தையும் சஞ்சய்க்கே குடுத்திட்டிங்களா. அப்ப என் ப்ளான் என்ன ஆகறது :( //

அதை மட்டும் நாம சாப்பிடுருந்தா!!! நேர பெரிய ஆஸ்பத்திரிதான் ....வயித்தெரிச்சல்
//

அடப்பாவிங்களா ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க போல :)

RAMYA  – (November 30, 2009 2:29 PM)  

//
mayil said...
நன்றி சொல்லறது ரொம்ப சுலபம்...

//அம்மாடீஈஈஈஈஈஈஈஈஈஈ. எவ்ளோ வாங்கி வந்திருக்காங்க. ஃப்ரிட்ஜ் நிரம்பிடிச்சி. அதை எல்லாம் எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கும்ப் போது, ஏனென்று சரியாகத் தெரியவில்லை ,//

அந்த புது பிரிட்ஜ் மட்டும் என்கிட்ட குடுத்துடுங்க :))
//

ஆஹா! மயிலு பிர்ட்ஜ் வந்துச்சா :))

Vidhoosh  – (November 30, 2009 2:32 PM)  

எவ்வளோ நல்லவர்ங்க நீங்க.. சரி.. கண்ணை துடைச்சுகிட்டு அவங்கவங்க போங்கப்பா.. என்ன கூட்டம் போட்டுக்கிட்டு...

--வித்யா

RAMYA  – (November 30, 2009 2:33 PM)  

//
தாரணி பிரியா said...
RAMYA said...


//

ஐயோ! தாரிணி பிளான் இப்படி தவிடு பொடியாயிடுச்சே :)//


ஆமாம் ரம்ஸ் நான் சொல்லிட்டுதானே கிளம்பினேன் எல்லாத்தையும் ஒருக்கா சஞ்சய் கண்ணுல மட்டும் காமிச்சுட்டு எடுத்து வையுங்கன்னு. இந்த விஜி எல்லாத்தையும் குடுத்துட்டாங்களாம்
//

தாரிணி! அன்னைக்கி நம்மளை எல்லாம் ஒரு சேர பார்த்ததுதிலே விஜிக்கு ஒரே சந்தோஷம் ஆகிடிச்சு இல்லையா? அதுனால மறந்து சஞ்சய்கிட்டே கொடுத்துட்டாங்க போல :)

RAMYA  – (November 30, 2009 2:35 PM)  

//
Vidhoosh said...
எவ்வளோ நல்லவர்ங்க நீங்க.. சரி.. கண்ணை துடைச்சுகிட்டு அவங்கவங்க போங்கப்பா.. என்ன கூட்டம் போட்டுக்கிட்டு...

--வித்யா
//

வாங்க வாங்க வித்யா ஒரு கைக்குட்டை வேணும் தோழி கண்களை துடைக்க
பாசம் என்னும் மழையில் நனைந்து கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது :(

இவைகள் தான் வலையில் நான் சம்பாதிச்சது!

SanjaiGandhi™  – (November 30, 2009 4:18 PM)  

கொலகாரப் பாவிகளா..நல்லா இருங்க எல்லாரும்.. ஓய் தாரணி ப்ரியா , ஏற்கனவே இருந்ததை தம்பிங்கற பேர்ல ஒருத்தன் தூக்கிட்டுப் போய்ட்டான். இப்போ அக்காங்கற பேர்ல நீங்க கிளம்பி இருக்கிங்களா? பிச்சிபுடுவேன் பிச்சி. சரி சரி.. சீக்கிறம் திரும்பவும் களியும் கீரைக் குழம்பும் எடுத்துட்டு வாங்க. :)

Venky  – (November 30, 2009 5:12 PM)  

ஆமா ஆமா கும்கி ரொம்ப பெரிய ஆள்... அவரோட அற்புதமான MFM ஸ்டில் ஒன்னு இருக்கு வலை ஏத்திடலாமா...

நான் போன வாரம் வேலையாக ஹோசூர்ல 2 நாள் இருந்தேன் தெரிந்திருந்த்தால் மீட் பண்ணிருக்கலாம்

Venky  – (November 30, 2009 5:12 PM)  

ஆமா ஆமா கும்கி ரொம்ப பெரிய ஆள்... அவரோட அற்புதமான MFM ஸ்டில் ஒன்னு இருக்கு வலை ஏத்திடலாமா...

நான் போன வாரம் வேலையாக ஹோசூர்ல 2 நாள் இருந்தேன் தெரிந்திருந்த்தால் மீட் பண்ணிருக்கலாம்

கும்க்கி  – (November 30, 2009 6:13 PM)  

என்ன கொடுமை சஞ்சூஸ்..?

பைக் கொடுத்ததுக்கெல்லாமா இப்படி?

ரொம்ப கூச்சமா இருக்கு.

அந்தந்த ஊருக்கு போகும்போது இப்போதெல்லாம் சொந்தக்காரங்களை விடவும் வலைப்பதிவு நண்பர்கள்தான் நினைவிற்கும் உதவிக்கும் ஓடோடி வருகிறார்கள் அல்லவா?
நான் மட்டும் விதிவிலக்கா....?

இதெல்லாம் மத்தவங்க செய்ற உதவிகளைவிடவும் ரொம்பவே சாதாரணமானதுதானே.....

கும்க்கி  – (November 30, 2009 6:15 PM)  

இளைய கவி said...

நல்லா இருய்யா , நீ ரொம்ப நல்லா இருய்யா....

என்ன அக்கிரமம்...நீரும் நல்லாரும் ஓய்...நல்லாயிரும்..

கும்க்கி  – (November 30, 2009 6:20 PM)  

Venky said...

ஆமா ஆமா கும்கி ரொம்ப பெரிய ஆள்... அவரோட அற்புதமான MFM ஸ்டில் ஒன்னு இருக்கு வலை ஏத்திடலாமா...

தலைவரே இம்புட்டு தூரம் ஓசூர் வரை வந்து...சொல்லாம.....
நல்லாயில்லை.

இந்த தடவையாவது நல்ல ஏர் பஸ்ஸுல ஏத்திவிட்ருப்பமுல்ல...

என்னவோ போங்க.....

அன்புடன் அருணா  – (November 30, 2009 7:20 PM)  

பெரிய பூங்கொத்து......சஞ்செய்க்கு இல்ல....ரம்யாவுக்கு!

SanjaiGandhi™  – (November 30, 2009 7:29 PM)  

@ தண்டோரா,
எஸ் மாம்ஸ்..

@இ.கவி : ரொம்ப நன்றி ராசா..

@ சின்ன அம்மிணி அக்கா
என்ன சிரிப்பு? :)

@மயில்
//$#@%$#@%$#@%$#@%$#//
ரொம்ப புகழாதிங்க விஜி.. எனக்கு வெக்க வெக்கமா இருக்கு.. :)

@வினிதா
பதிவுலகில் எனக்கு எதிரிகளே கிடையாது. ஏராளமான நண்பர்கள் மட்டுமே. சொக்கத் தங்ககங்கள். செங்கல் வச்சி தேச்சிப் பார்த்தால் தெரியும். தக தகன்னு மின்னுவாங்க..:))

என் நிஜப் பெயர் சஞ்சய்காந்தி தான்.
கோவையில் இடமெல்லாம் ரொம்ப காஸ்டிங்க.

அபி அப்பா.. நன்றி.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

குசும்பா, பதில் மரியாதை செய்யப் படும்.. உனக்கு இருக்குடி..

தாரணி, கொலைகாரி.. கும்மியா அடிக்கிறிங்க.. நீங்க எல்லாம் எனக்கு அக்கா.. :(
//நீங்க அதிர்ஷ்டகாரர்தான் சஞ்சய் ஆனா உங்களை ப்ரெண்டா ஏத்துக்கிட்ட நாங்க எல்லாம்//
ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணவங்க.. :)

மங்களூராரே .. நிஜம் தான்.. நன்றி..

ஆதவன், நன்றி..
யூ டூ.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

கோவிஜி, நன்றிங்க..

லொல்லுப்ரியா, அதுல என்ன பன்ச்.. வசந்தமாளிகை டயலாக் உல்டா.. :)

SanjaiGandhi™  – (November 30, 2009 7:35 PM)  

சந்தனமுல்லை, நன்றி ஆச்சி.. ஆனாலும் இப்படி போட்டிக்கு வரக் கூடாது. :)

சீனா சார், நன்றி.. லண்டன் நலமா? :)

ஜெக்தீஷ், நன்றி.. மைண்ட்ல வச்சிக்கிரேன்.. :)

குசும்பன் மாம்ஸ்,
//ஏன் மாமா உன்மேல இம்புட்டு கொலவெறியா பலர் இருக்காங்க:)//
தாரணி அக்கா பதில் சொல்லிட்டாங்க பாருங்க.. :) அவ்ளோ பாசம் என் மேல.

நன்றி தமிழ்பிரியன்.. ஜூனியர் நலமா?

நன்றி வெயிலான்.. எஸ் ரா வரும் போது எங்களுக்கும் அழைப்பு உண்டா? :)

நன்றி ரம்யாக்கா.. விஜி, தாரணி அக்காவை எல்லாம் கண்டுக்காதிங்க.. அவ்ளோ வொர்த் இல்லை.. :))

வித்யா, சிரிச்சிட்டே இருக்கேன்.. :))

வெங்கி அண்ணா, நான் போன வாரம் புதன் - சனிக்கிழமை காலைவரை அங்க தான் இருந்தேன்.

நன்றி கும்கி.. உங்கள் உதவியின் அருமை எனக்குத் தானே தெரியும்.

Mrs.Menagasathia  – (November 30, 2009 7:37 PM)  

கொடுத்து வைத்தவர் நீங்க ..எனக்கும் ஒரு பார்சல் அனுப்புங்க சகோ...

SanjaiGandhi™  – (November 30, 2009 7:40 PM)  

@ மேனகா சிஸ்டர்,
உங்களுக்கு இல்லாததா.. என்ன வேணும் சொல்லுங்க.. வாங்கி அனுப்பறேன். :)

Mitr Friend - Bhushavali  – (November 30, 2009 9:27 PM)  
This post has been removed by the author.
Mitr Friend - Bhushavali  – (November 30, 2009 9:28 PM)  

Wow Sanjay... Ur indeed very lucky.. :)

My new blog on Fashion - FASHION PANACHE
Abhayapradha Ranganathar Koil at My Travelogue
Varadatchanai - Dowry at Thozhi Mitr Friend

குசும்பன்  – (November 30, 2009 9:29 PM)  

SanjaiGandhi™ said...
@ மேனகா சிஸ்டர்,
உங்களுக்கு இல்லாததா.. என்ன வேணும் சொல்லுங்க.. வாங்கி அனுப்பறேன். :)//

சொக்க தங்கத்தில் ஒரே ஒரு ஒட்டியானம் மட்டும் மாம்ஸ்! போதும், ஆர்த்தி இடுப்பு சைஸ்க்கு ஏத்தமாதிரி!:)

mayil  – (November 30, 2009 10:20 PM)  

சொக்க தங்கத்தில் ஒரே ஒரு ஒட்டியானம் மட்டும் மாம்ஸ்! போதும், ஆர்த்தி இடுப்பு சைஸ்க்கு ஏத்தமாதிரி!:)//

எனக்கும் ஒண்ணு....

$#@%$#@%$#@%$#@%$# - ரம்யா இதுக்கு அர்த்தம் சஞ்சய்க்கு தெரியும் :))

குறை ஒன்றும் இல்லை !!!  – (November 30, 2009 11:19 PM)  

//"எப்படி நன்றி சொல்வது?"//


ரொம்ப சுலபமுங்க.. நான் கோவை பக்கம் வர்ரப்போ என்னையும் நல்ல படியா கவனிச்சு( எந்த உள்,வெளி, நடு குத்தும் இல்லை, உங்களை அவங்க கவனிச்ச மாதிறி ) அனுப்புங்க.. போதும்..

Karthik  – (December 1, 2009 8:21 AM)  

ஸ்ரீமதி கிட்ட உங்க மொபைல் நம்பர்லாம் வாங்கினேன். கூப்பிட்டிருந்தா இப்படி நானும் ஒரு பதிவு போட்டிருக்கலாம். அடுத்து வரும்போது கால் பண்றேன். ;)))

நாதஸ்  – (December 1, 2009 10:26 AM)  

அண்ணா, உங்க மேல நெறைய கண்ணு பட்டு இருக்கு. திருஷ்டி சுத்தி போட்டுகோங்க.

கார்த்திக்  – (December 1, 2009 5:57 PM)  

// எழுதுங்கள் என் பின்னூட்டத்தில்.. இவன் பெரும் அதிர்ஷ்ட்டக்காரன் என்று. :)//

எழுதீருவோம் தொழிலதிபரே

ரம்யாக்கா வாங்கிவன்ந்த இனிப்பும் காரமும் இங்கையும் இன்னும் ஓடிகிட்டு தான் இருக்கு :-))

ரம்யாவுக்கு எனது அன்பு என்னைக்கும் :-))

அப்புறம் தல
கிருட்டிணகிரிய விடுங்க

ஜார்க்கண்ட்ல ஒரு பிஸினஸ் ஸார்ட்பண்ணுரீங்கன்னு கேள்விப்பட்டேன்

அங்க பிளாக்பிரண்ட்ஸ் கொஞ்சம் கஸ்டம்
கம்முனு நல்ல நாலு நக்சல் பிரண்டா பாத்து புடிங்க யுதுத்துக்கு யுஸ்ஸா இருக்கும்

SanjaiGandhi™  – (December 1, 2009 6:10 PM)  

புஷா, நன்றி தோழி.. உங்க புது ப்ளாக் சீக்கிறம் படிக்கிறேன்.

ராஜ்குமார், கவனிச்சிடறேன்..( நீங்க சொன்ன மாதிரு தான்பா..) :)

நன்றி கார்த்திக்.. ரம்யாக்கா வந்தா தான் கால் பண்ணுவீங்களோ தொர?

SanjaiGandhi™  – (December 1, 2009 6:12 PM)  

/அப்புறம் தல
கிருட்டிணகிரிய விடுங்க

ஜார்க்கண்ட்ல ஒரு பிஸினஸ் ஸார்ட்பண்ணுரீங்கன்னு கேள்விப்பட்டேன்//

கார்த்தி, கொலகாரப் பாவிகளா.. இதெல்லாம் கும்பல் கூடித்தான் பண்ணிங்களா?. பக்கத்துல ஓவரா சிரிச்சப்போவே நெனைச்சேன். மேட்டூர் ரோடு தாண்டியும் நம்மள கைபுள்ள ஆக்கிட்டாங்கன்னு.. இப்டி கருங்கல்பாளையம் வரைக்கும் சந்தி சிரிச்சிடிச்சா? :((

Karthik  – (December 1, 2009 6:20 PM)  

//SanjaiGandhi™ said...
நன்றி கார்த்திக்.. ரம்யாக்கா வந்தா தான் கால் பண்ணுவீங்களோ தொர?

ஆவ்வ்.. செமஸ்டர் லீவில் ஊருக்கு வந்திருந்தேன்.. கால் பண்ணியிருந்தா, என்னை உங்க வீட்டுக்கு கூட்டி போய் நல்லா கவனிச்சிருப்பீங்க(?!).. நானும் 'சஞ்சய் அண்ணாவுக்கு நன்றி.. எல்லோரும் அவருக்கே ஓட்டு பொடுங்க'னு பதிவு போட்டிருக்கலாம்னு சொல்ல வந்தேன்.. :) :)

ஜோசப் பால்ராஜ்  – (December 1, 2009 8:24 PM)  

மச்சி,
நமக்கெல்லாம் உலகம் முழுக்க சொந்தக்காரங்க இருக்காங்கடே.
சிங்கப்பூருக்கு எப்ப வர்ற மச்சி? இங்கயும் ஒரு பெரிய உறவுக்கார கூட்டம் இருக்குடே.

angelintotheheaven  – (December 6, 2009 8:45 PM)  

இவன் பெரும் அதிர்ஷ்ட்டக்காரன்

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP