இலவச டிவி திட்டம் - யாருக்கு பயன்?- 2 - கோவி.கண்ணன்

ஏற்கனவே வழங்கப்பட்ட டிவிகளின் எண்ணிக்கை 85 லட்சம், அடுத்து வழங்க இருப்பது 40 லட்சம்
மொத்தமாக 120 லட்சம் அல்லது 1.2 கோடி டிவிக்கள் இன்னும் ஓர் ஆண்டில் வழங்கப்பட்டு இருக்கும் என்று வைத்துக் கொள்வோம்.
டிவிகளில் யாரும் வயலும் வாழ்வும் பார்க்க விரும்புவதில்லை, சோத்துக்கு காசு இல்லாவிட்டாலும் டிவி பார்ப்பது பொழுது போக்காகவே இருக்கிறது. இலவசமாக கொடுத்த டிவிக்கு தமிழக கருணாநிதி அரசு இலவச கேபிள் இணைப்பு தருமா ? தராது. வைத்திருக்கும் டிவியை மக்களும் அப்படியே துணி போட்டு மூடி வைக்க மாட்டார்கள். கேபிள் கணெக்சன் வாங்கனும், யாரிடம் வாங்குவது ? கருணாநிதியின் கூட்டுடன் 'சன்' நிறுவனத்தார் தவிர தமிழகத்தில் வேறு யாரும் கேபிள் கனெக்சன் கொடுத்துவிட முடியுமா ?
ஆக சன் நிறுவனத்தாரின் மாத நிரந்தரவருமானம் இனி வெறும் தொலைகாட்சி வழியாக அதுவும் தமிழக மக்களின் வரிப்பணத்தினால் தரப்படும் இலவச டிவிகளினால் எப்படி பெருகும் என்பதைப் பார்த்தால்,
1.2 கோடி இணைப்பு * 75 ரூபாய் = 90 கோடி ஒரு மாதத்திற்கு
1.2 கோடி இணைப்பு * 75 ரூபாய் * 12 மாதம் = 1080 கோடி ஒரு ஆண்டுக்கு
1.2 கோடி இணைப்பு * 75 ரூபாய் * 12 மாதம் * 5 ஆண்டு = 5400 கோடி ஐந்து ஆண்டுகளுக்கு
ஐந்து ஆண்டுக்கு கிட்டதட்ட இந்திய அரசின் தேர்தல் பட்ஜட் அளவுக்கு சன் குடும்பத்தாருக்கு இலவச தொலைகாட்சி மூலம் வருமானம் சென்று சேர்கிறது.
இவை யாவும் மக்கள் வரிப்பணத்தால் 'இலவசம்' என்ற பெயரில் செய்யப்பட்ட முதலீடு, இதில் பொதுமக்களுக்கோ, ஏழைகளுக்கோ ஒரு பைசா கூட சென்று சேராது.
இலவச டிவி வழங்குவதின் நீண்ட காலப் பயன் இதுவே.
வாழ்க திமுக அரசு ! வளர்க்க சன் குடும்பம் ! வாழ்க இலவச டிவி திட்டம் !

எழுதியவர் : கோவி.கண்ணன்
(நண்பர் நாகராஜன் திவாகர் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலின் விரிவாக்கம்)

டிஸ்கி: இந்தப் பதிவை நான் முழுமையாக ஒத்துக் கொள்வதால் அவர் விருப்பப் படி என் வலைப்பூவில் வெளியிடுகிறேன். மேலும் , இது தொடர்பான என்னுடைய இன்னொரு பதிவு நாளை.. கேபிள் தொழில் - ஆதாயம்- பாதிப்பு என கலந்துக் கட்டி அடிக்கலாம். :)

கோவி.கண்ணன்  – (November 10, 2009 11:23 AM)  

//எழுதியவர் : கோவி.கண்ணன்

டிஸ்கி: இந்தப் பதிவை நான் முழுமையாக ஒத்துக் கொள்வதால் அவர் விருப்பப் படி என் வலைப்பூவில் வெளியிடுகிறேன். மேலும் , இது தொடர்பான என்னுடைய இன்னொரு பதிவு நாளை.. கேபிள் தொழில் - ஆதாயம்- பாதிப்பு என கலந்துக் கட்டி அடிக்கலாம். :)//

யப்பா.......சஞ்செய், எனக்கு வந்த மின் அஞ்சலில் இடம் பெற்ற உன் பதிவு தொடர்புடைய கருத்து ஆகையால் அதை உனக்கு அனுப்பினேன்.

எல்லாப் புகழும் வெளியிட்ட உனக்கே ! வேறு எதாவது கிடைத்தால் பகிர்ந்து கொள்ளலாம்
:)

பட்டிக்காட்டான்..  – (November 10, 2009 2:00 PM)  

இதனால தான் நிறைய பேர் பிடித்த தொழிலதிபர் கருணாநிதின்னு சொன்னாங்களா?

:-(

கும்க்கி  – (November 10, 2009 4:18 PM)  

எதை செய்தாலும் நீண்ண்ண்ண்ட கால கண்ணோட்டத்தில் பலனளிக்கும் விதமாகத்தான் யோசிப்போம்.

அப்புறம் குவாத்ரோச்சி என்று ஒரு தள்ளுபடி கேஸும் இருக்குதுங்கோவ்...

செந்தழல் ரவி  – (November 10, 2009 6:34 PM)  

கன்வின்ஸிங் ஆக உள்ளது.

ரோஸ்விக்  – (November 10, 2009 6:37 PM)  

//பட்டிக்காட்டான்.. said...

இதனால தான் நிறைய பேர் பிடித்த தொழிலதிபர் கருணாநிதின்னு சொன்னாங்களா? ///

நல்ல டைமிங்க்யா....கலக்குங்க...
கணக்கு எங்கயோ போகும் போல இருக்கு...அடடா.....
வேசிப்பொழப்பு...த்...தூ...

தாரணி பிரியா  – (November 10, 2009 10:49 PM)  

எங்க ஏரியாவில எல்லாம் கேபிள் கனெக்சனுக்கு 150 ரூபாய் சஞ்சய்

துளசி கோபால்  – (November 24, 2009 8:03 AM)  

எல்லாத்துலேயும் ஒரு தொலைநோக்குப் பார்வை வேணுமேய்யா. இது இல்லாம அரசாங்கத்தை நடத்திறமுடியுமா?


மக்கள் ஆனந்தமா டிவி பார்த்துப் பொழுதுபோக்குவது பார்க்கவே எவ்வளோ நல்லா இருக்கு தெரியுமா? வீட்டுலே அடங்கிக் கிடக்கட்டுமே.....

என்னவோ போங்க..........(-:

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP