இலவச டிவி திட்டம் - யாருக்கு பயன்?

நிறுவனங்களுக்கும் வழங்கப் பட்ட பணம்,
14/02/2007 அன்று 685,00,00,000/-
28/01/2008 அன்று 659,10,00,000/-
25/03/2008 அன்று 93,37,25,000/-
02/09/2008 அன்று 71,40,25,000/-

மொத்தம் : 1508,87,50,000/-

கடந்த வாரம் டெண்டர் கோரப்பட்டிருக்கும் எண்ணிக்கை : 40 லட்சம்
40 லட்சத்திற்கும் தோராயமான செலவு : 800 கோடி
ஏற்கனவே செலவ(ழி)ளித்த தொகை 1500 கோடி
மொத்தம் : 2300 கோடி

இது வரை விநியோகிக்கப் பட்ட எண்ணிக்கை : 85,15,343.

இதெல்லாம் என்னன்னு யோசிக்கிறிங்களா? வேற ஒன்னுமில்லீங்க. தமிழக அரசால் வழங்கப் படுல் இலவச வண்ணத்தொலைகாட்சித் திட்டத்திர்கான செலவுகள் மற்றும் வழங்கப் பட்ட டிவிக்களின் எண்ணிக்கை தானுங்க.

அரசாங்கக் கணக்குப் படி இது வரை 85 லட்சத்திற்கும் மேல் இலவச தொலைகாட்சி பெட்டிகள் விநியோகிக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்த குடும்ப அட்டைகள் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம் எனத் தெரிகிறது. ஆகவே இன்னும் 35லட்சத்திற்கும் குறைவான டிவி வாங்கினாலே போதுமானது. ஆனால் அடுத்த தவணையாக 40 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மீதி 5 லட்சம் டிவிக்கள் என்ன செய்வாங்கன்னு தெரியலை. இதற்கெல்லாம் மொத்தம் 2300 கோடிகளுக்கு மேல் பணம் செலவாகிறது. இந்த இலவச தொலைகாட்சிகளால் என்ன பயன் என்றே தெரியவில்லை. இதன் மூலம் கூடுதல் மின் உபயோகம் தான் செலவாகிறது. அதற்கேற்றவாறு மின் உற்பத்தி திட்டம் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. ஏற்கனவே தொழில் துறை வளர்ச்சியைக் கருத்தில்க் கொண்டு மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தாதலாம் தினமும் குறைந்தபட்சமாக இரண்டு மணி நேரம் மின் தடை அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் டிவிக்களால் கூடுதல் மின் உபயோகமும் சேர்ந்துள்ளது. இதன் மூலம் சோம்பேறிகளை உறுவாக்கியதோடு , இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதம் மகா கேவலமாக உள்ளது.

அனைவருக்கும் இலவசமாக டிவி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

இதற்கு முன் யார் வீட்டிலுமே டிவி இருந்ததில்லையா?

காசு கொடுத்து டிவி வாங்கும் நிலையில் தமிழகத்தில் யாருமே இல்லையா?

எற்கனவே தொலைக்காட்சி வைத்திருப்பவர்களுக்கும் இலவசமாக கூடுதலாக ஒரு டிவி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

இந்த 2300 கோடி ரூபாயை இப்படி விரயம் செய்ததற்கு பதில் ,
  • இதை வைப்பு நிதியாக வைத்து, அதில் வரும் வட்டியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அதிக மதிப்பெண் எடுத்தும் படிப்பைத் தொடர முடியாத ஏழை மாணவர்களின் கல்விக்கு செலவிடலாம்
அல்லது
  • மின்சாரம், சாலை, மருத்துவ வசதி இல்லாத ஆயிரக் கணக்கான கிராமங்களில் பெரும்பாலானவற்றிற்கு இந்த வசதிகளை செய்து தரலாம்.
அல்லது
  • இருக்க வீடில்லாமல் ப்ளாட்பாரங்களிலும் மரத்தடியிலும் வசிக்கும் குடும்பங்களுக்கு சிறிய அளவிலான வீடு கட்டிக் கொடுக்கலாம்.
அல்லது
  • அனைத்து வசதிகளும் கொண்ட சர்வதேசத் தரத்திலான பல்கலைக் கழகம் அமைக்கலாம்.
அல்லது
  • போக்குவரத்து வசதி இல்லாமல் கட்டிலில் நோயாளிகளை சுமந்துக் கொண்டு பல மைல் தூரம் நடந்து செல்லும் அவல நிலையில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி செய்துக் கொடுக்கலாம்.

இப்படி எல்லாம் எதுவும் செய்யாமல் 2300 கோடி ரூபாய் வீணாக அதிமுக, மதிமுக தவிர (இவர்களும் கூட அரசியல் காரணத்திற்காக தான், மக்கள் நலனால் அல்ல) சட்டசபையில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்டுகள் என அனைத்து கட்சியினரும் துணைப் போகிறார்கள்.
இத்திட்டம் முதலில் வண்ணத்தொலைகாட்சி இல்லாதவர்களுக்கு என்றார்கள். பின்னர் அரசு அலுவலர்களுக்கும் இல்லை என்றார்கள். இப்போது குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் என்கிறார்கள். ஏற்கனவே ஒரு பதிவில் கேட்டது தான் இப்போதும் கேட்கிறேன். குடும்ப அட்டை வைத்திருக்கும்

அனைவருக்கும் டிவி பார்க்க மின்சார வசதி இருக்கிறதா?
அல்லது மின் இணைப்பு இருக்கும் குடும்பங்களுக்கு மட்டும் தான் குடும்ப அட்டை வழங்கப் பட்டிருக்கிறதா?

அடுத்த கட்டமாக வாங்கப் படும் 40 லட்சம் டிவிக்களும் வரும் 2010 டிசம்பர் வரை வழங்கப் படும். 2011ல் தேர்தல் என்பது இங்கு தேவை இல்லாத தகவல்.

இதைப் படிக்கும் அனைவரும் இது போல் எதாவது ஒரு பிரச்சனையை மையமாக வைத்து ( ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிடக் கூடாதுன்னு தான் ) ஒரு பதிவு எழுதுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். அரசியல் சார்ந்ததா தான் இருக்கனும்னு அவசியல் இல்லை. எழுதிவிட்டு இணைப்பு குடுங்க. நாம் கவலைப்படும் அளவில் எவ்வளவுப் பிரச்சனைகள் இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்.

ramalingam  – (November 9, 2009 2:18 PM)  


துக்குங்க வம்பு?

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்  – (November 9, 2009 2:25 PM)  

//அரசாங்கக் கணக்குப் படி இது வரை 85 லட்சத்திற்கும் மேல் இலவச தொலைகாட்சி பெட்டிகள் விநியோகிக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்த குடும்ப அட்டைகள் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம் எனத் தெரிகிறது. ஆகவே இன்னும் 35லட்சத்திற்கும் குறைவான டிவி வாங்கினாலே போதுமானது.//

இது வேறயா? எனக்குத் தெரிஞ்சு தெற்குப்பக்கம் குடுத்த மாதிரியே தெரியலயே!?

அமிர்தவர்ஷினி அம்மா  – (November 9, 2009 2:46 PM)  

இன்றைய காலையில் கூட எதுக்கு இலவச டி.வி.ன்னு நினைச்சேங்க?

ஏற்கனவே எங்க வீட்டுல இருக்கற பொட்டி பத்தாதுன்னு ரெண்டு எக்ஸ்ட்ரா டி.வி. எங்க கொண்டு போய் வெக்க / விக்க?

ரூமுக்கு ஒரு டி.வி. வெச்சு, நீங்க சொன்னா மாதிரி கரண்ட் பில் வேணும்னா எகிறலாம்

Mitr Friend - Bhushavali  – (November 9, 2009 3:57 PM)  

Absolutely Sanjai...
TV + Rice at Rs.1 to make people lazy that too from MY money (I pay tax..) - I just cant accept it...

Poetry in Stones Part one at My Travelogue
My Travelogue, Thozhi-Mitr-Friend, Savoir-Faire

மதிபாலா  – (November 9, 2009 4:18 PM)  

சத்தியமான உண்மை...இது தேவையில்லாத செலவு...

பல வீடுகளில் சும்மா தூங்குது கலிஞர் டீவி...

மதிபாலா  – (November 9, 2009 4:19 PM)  

Absolutely Sanjai...
TV + Rice at Rs.1 to make people lazy that too from MY money (I pay tax..) - I just cant accept it...//

ஒரு ரூபாய் அரிசியால் பலனடைந்தவர்கள் , பலனடைபவர்கள் அனேகம் இருக்கிறார்கள்.....

அதே சமயம் அரிசிக்கடத்தல் அதிகமானது உண்மைதான்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை எப்படி ஒழிப்பது?

செந்தழல் ரவி  – (November 9, 2009 4:50 PM)  

மாப்ள. சீரியஸா சொல்லு. இதனால் எல்.ஜி சாம்சங் டிவி வியாபாரம் புஸ்ஸாகிட்டதா இல்லையா ?

இதனால் தனிப்பட்ட முறையில் உனக்கு லாஸ். அதனால நீ பதிவு போடுறியா ? ஏன் அதை நீ பதிவு செய்யலை ?

மற்றபடி. என்னுடைய வீட்டில் இலவச டிவி இருக்கிறது. ஏற்கனவே இருந்த ரொம்ப நாளாக உழைத்த டயனொரா கலர் மக்கர் செய்து நின்றுவிட்டதால், இலவச டிவியை பயன்படுத்துகிறோம். சும்மா சொல்லக்கூடாது. சிறப்பாகவே உள்ளது. இதனால் டிவி இல்லாத வீடுகளில் எல்லாம் டிவி உள்ளது. அதை ஓட்ட கரண்ட் இருக்கிறதா என்பது அடுத்த பிரச்சினை. ஆனால் பஞ்சாயத்து டிவி பிரச்சினை, அடுத்த வீட்டில் டிவி இருக்கு நம்ம வீட்டில் இல்லை என்ற சமூக பிரச்சினை ஒழிந்துள்ளது. (டிவி அத்தியாவசிய தேவையாவிட்ட பிறகு)

டிவியால் பொது அறிவு கண்டிப்பாக வளரும். (சன் டிவி டீலா நோ டீலா போன்ற முட்டாள்தனனமான ப்ரொக்கிராம்களை குறைத்தால்.) இருந்தாலும் மக்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கிறது, பல ப்ரொக்ராம்களை பார்க்கவே செய்கிறார்கள்.

Suddi  – (November 9, 2009 5:01 PM)  

Dear Sanjai,

By giving freebies to people, the Government achieves the following...

1) Making people more lazy, sit and see every damn mega serial in tamil.
2) Party becomes pro-poor, helping the poor people.
3) Out of this 2300 Crores, how much would have gone as commission?. Direct benefit to DMK cadres.
4) Every day, when the women see TV, they will have the gratitude, TV from this party, my vote is for this party.
5) Make Kalignar TV more popular.
6) By smuggling TVs to kerala, many people get direct employment benefits.
7) Police will get mamool seperately.

Big list indeed.. Instead of giving TV, the government should have enabled primary education affordable for all. Our CM has also told, this will enable our women to develop their world knowledge (ulaga arivu)..

Kolangal, sumangali, selvi.. what knowledge our women can get out of these junk stuffs?.

If you notice, way back in 1960's, educational institutions were run by the goverment & arrack shops were with private parties.. Now it's the other way round.

Govt runs TASMAC, all politicians have educational institutions..

Thanks to our Dravidian parties, every Ward counsillor, MLA, MP, CM, irrespective of party is crore-pati.. There are very few exceptions, who can be fingured out.

Why our CM gives this much free-bies, when he is holding the post for the 5th time?. Why not previous times?. All vote bank politics.

Arasiyalla ithu ellam satharanamappa.

கலகலப்ரியா  – (November 9, 2009 5:14 PM)  

v.good.. uruppadiyaana pathivu...

(antha numbers ellaam parthu neenga vijayakanth mathiri therinjathu ennoda thappaa theriyala..)

அமுதா கிருஷ்ணா  – (November 9, 2009 5:29 PM)  

இலவச டீ.வி. வாங்கியவர்களில் பலருக்கு அது இரண்டாவது டி.வி.....

தண்டோரா ......  – (November 9, 2009 5:40 PM)  

நாட்டில் 90 லட்சம் பேருக்கு கழிப்பறை இல்லை..இலவச டி.வி வழங்கப்ப்டும் ஏரியாக்களில் டாஸ்மாக் வருமானம் கணிசமாக உயருகிறது.அதாவது அரசு பணம் உடனே கஜானாவிற்கு வந்துவிடுகிறது..ஒரு டிவி 1000 ரூ விற்கபடுகிறதுஏதோ ஒரு திட்டத்திற்கு 50 கோடி ஜப்பானிடம் கையேந்தும் அரசு 20,000 கோடி ரூ இலவசத்திற்கு ஒதுக்கியிருக்கிறது

வால்பையன்  – (November 9, 2009 9:56 PM)  

//அனைவருக்கும் இலவசமாக டிவி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? //

மானட, மயிலாட போன்ற அர்த்தம் மிக்க நிகழ்ச்சிகள் மக்களை சென்றடைய வேண்டாமா!?

உண்மைத் தமிழன்(15270788164745573644)  – (November 9, 2009 10:29 PM)  

எத்தனை கோடிகள் செலவாகியிருக்கிறது என்பதை கணக்குப் போடும் அதே நேரத்தில், எத்தனை கோடிகள் கமிஷனாக சம்பந்தப்பட்டவர்களை சென்றடைந்திருக்கும் என்பதையும் கணக்குப் போட்டால் யாருக்கு லாபம் என்பது சுலபமாக புரியும் அங்கிள்..!

வவ்வால்  – (November 9, 2009 11:15 PM)  

இலவச டீவி திட்டம் ஆரம்பித்து முடியவே போகுது இப்போது என்ன திடீர் சந்தேகம் ஒரு வேளை சஞ்சய்க்கு இலவச டீவி தரலையோ?100 அல்லது 200 ஏரியா கவுன்சிலருக்கு வெட்டினா டீவி டோக்கன் கொடுப்பாங்க!

//தமிழகத்தில் மொத்த குடும்ப அட்டைகள் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம் எனத் தெரிகிறது. //

தமிழகத்தில் 8 கோடி குடும்ப அட்டைகள் உள்ளதாக அந்த துறை அமைச்சரே சொல்லியுள்ளார், மக்கள் தொகையை விட குடும்ப அட்டைகள் அதிகமாக இருப்பதாக ஒத்துக்குண்டுள்ளார்.

//அனைவருக்கும் இலவசமாக டிவி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? //

இதில ஒரு பெரிய பொருளாதார சூத்திரமே இருக்கு, வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களை வரையருக்க என சில கோட்பாடுகள் உண்டு அதில் உள்ளபடி,

கறுப்பு வெள்ளை டீவி இருந்தால் வறுமைக்கோடு, கலர் டீவி இருந்தால் அதற்கு மேல், டேபிள் ஃபேன் இருந்தால் வறுமைக்கோடு, சிலிங்க் பேன் இருந்தால் வறுமைக்கோட்டிற்கு மேல், கூரை வீடு என்றால் வறுமைக்கோடு, ஓட்டு வீடு என்றால் அதற்கு மேல்,

இது போல சில பேராமீட்டர்கள் வைத்துள்ளார்கள்.( வறுமைக்கோடு பட்டியல் சர்வே எடுப்பதில் பங்கு பெற்றுள்ளேன் அப்போது தான் இது போன்ற பேராமீட்டர்கள் பட்டியலைக்கொடுத்தனர)

இப்படி கலர் டீவி கொடுத்தால் போதும் வருமான உயர்வு இல்லாவிட்டாலும் வறுமைக்கோடு பட்டியலில் இருந்து விடுபட்டு விடலாம்.இது அடுத்த வறுமைக்கோடு பட்டியலிலில் எதிரொலிக்கும்.வறுமைக்கோட்டின் கீழ் இருப்போர் எண்ணிக்கை குறைந்து விடும், பார்த்தீர்களா தமிழகத்தின் சுபிட்சத்தை என்று சொல்லி ஒட்டுக்கேட்கலாம். இதெல்லாம் ஒரு ராஜ தந்திரம் தான். இந்த யோசனையை கலைஞருக்கு கொடுத்தவர் நாக நாதன் இவர் ஒரு பொருளாதார வல்லுனர் , எனவே தான் இப்படி ஒரு திட்டம்.

பட்டிக்காட்டான்..  – (November 10, 2009 12:58 AM)  

//.. எச்சரிக்கை
பின்னூட்டமிடாமல் செல்பவர்கள் பின் புறம் இருந்து அழைக்கப் படுவார்கள் என எச்சரிக்கிறேன். ..//

வேற வழி இல்ல . என் உடல் உறுப்புகள் எனக்கு முக்கியம்..

Guru Prasath  – (November 10, 2009 3:37 AM)  

//டிவியால் பொது அறிவு கண்டிப்பாக வளரும்.

ரவி, ரெண்டாயிரத்து சொச்சம் கோடிய வெச்சுகிட்டு அறிவ
வளர்க யோசிக்காம, வெறும் பொது அறிவு மட்டும் வளர்கறது எந்த
விதத்தில நியாயம்.

Guru Prasath  – (November 10, 2009 3:41 AM)  

//இப்படி கலர் டீவி கொடுத்தால் போதும் வருமான உயர்வு இல்லாவிட்டாலும் வறுமைக்கோடு பட்டியலில் இருந்து விடுபட்டு விடலாம்.இது அடுத்த வறுமைக்கோடு பட்டியலிலில் எதிரொலிக்கும்.வறுமைக்கோட்டின் கீழ் இருப்போர் எண்ணிக்கை குறைந்து விடும், பார்த்தீர்களா தமிழகத்தின் சுபிட்சத்தை என்று சொல்லி ஒட்டுக்கேட்கலாம்//

எப்பிடி, India shining மாதிரியா?

Nangavaram Sathish  – (November 10, 2009 6:09 PM)  

Well written but unfortunately votes & future business is more important than people welfare. The next government will definitely try to surpass this.

செந்தழல் ரவி  – (November 10, 2009 6:33 PM)  

பதில் எங்கே ?? அடுத்த பதிவுக்கு முன் எனக்கு பதில் போடவில்லை என்றால் கோயம்புத்தூர் வந்து உண்ணாவிரதம் இருப்பேன்.

ரோஸ்விக்  – (November 10, 2009 6:33 PM)  

//ramalingam said...

எதுக்குங்க வம்பு? //

தல இந்த பின்னூட்டம் ஒன்னு போதும்...அடுத்த இலவச திட்டத்துக்கு தயார் ஆகிடுவாங்க...:-)

நல்ல இடுகை நண்பரே! விழிப்புணர்வு தழைக்க வாழ்த்துக்கள்.


//இதைப் படிக்கும் அனைவரும் இது போல் எதாவது ஒரு பிரச்சனையை மையமாக வைத்து ( ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிடக் கூடாதுன்னு தான் ) ஒரு பதிவு எழுதுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.//

இது தான் சமுதாய நல்லெண்ணம். தூண்டுவோம்...சிந்திப்பதற்கு.

அஹோரி  – (November 10, 2009 7:38 PM)  

இலவச டிவி திட்டத்துக்கு ஐடியா கொடுத்த அல்லக்கைய 'அலேக்கா தூக்கி மல்லாக்க போட்டு குத்தனும்'.

அந்த கூட்டத்துல படிச்ச பசங்க நாலு பேத்த வேலைக்கு வச்சிக்க சொல்லி ஐடியா கொடுங்க சாமி.

அஹோரி  – (November 10, 2009 7:38 PM)  
This post has been removed by the author.
மின்னுது மின்னல்  – (November 10, 2009 8:06 PM)  

பின்னூட்டமிடாமல் செல்பவர்கள் பின் புறம் இருந்து அழைக்கப் படுவார்கள் என எச்சரிக்கிறேன்.
//


சொந்த செலவில் சூனியம்..?
நான் என்னைய சொன்னேன்
அவ்வ்வ்வ்

SanjaiGandhi™  – (November 10, 2009 8:40 PM)  

ராமலிங்கம், இப்டியே ஒதுங்கிப் போனா எப்டி? இது தானே ஆள்பவர்களுக்கு வசதியாகிறது.

எவனோ ஒருவன், நன்றிங்க.. அதுக்குத்தான் இன்னும் 40 லட்சம் வாங்கறாங்க போல.. :)

நன்றி அமித்து அம்மா, கரண்ட் பில் மட்டுமில்லை, 2 கேபிள் இணைப்பு இருந்தா அதுக்கும் வெட்டி செலவு.

புஷாவலி , நன்றி.. 1 ரூபாய்க்கு அரிசி என்பது மிக நல்ல திட்டம் தான். ஆனால் தரமற்ற அரிசி வழங்குவதால் கால்நடைகளுக்கு தீவனமாகிறது. இன்னும் 1 ரூபாய்க்கு அரிசி வாங்கும் நிலையிலும் மக்கள் இருக்கிறார்கள் என்பதே இவர்களுக்கு அசிங்கம் தான்.

மதிபாலா, நன்றி.. உங்கள் கருத்துகள் சரியே.. திருத்தும் கடமை நமக்கு இருக்கிறது. வாய்ப்பும் இருக்கிறது.

ரவி, இந்தத் திட்டத்தால் எனக்கு இழப்பில்லை. இவர்கள் விநியோகிக்க ஆரம்பிக்கும் போதே நாங்கள் டிவி விநியோகத்தை விட்டுவிட்டோம். நாங்கள் டிவி தவிர்த்த மற்ற பொருட்களுக்கு மாறிவிட்டோம். ஆகையால் இதற்கும் என் தொழிலுக்கும் தொடர்பு இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கும் டிவி நம் வீட்டில் இல்லை என்ற சமூகப் பிரச்சனையை ஒழிக்க நம் வாங்கும் சக்தியை/வருமானத்தை பெருக்கும் வழியை அரசாங்கம் செய்ய வேண்டும். இலவசமாக அளிக்கக் கூடாது. பக்கத்து வீட்டுடன் கம்பேர் பண்ணினா அது டிவியுடன் நிற்காது. அதை எல்லாம் அரசாங்கம் தருமா அல்லது தரலாமா?

டிவியால் பொது அறிவு வளர மக்கள் டிவி தவிர பிற தமிழ் சேனல்களை ஒழித்தாலே போதும்.

சுட்டி, உங்கள் கருத்துகள் அனைத்தும் சரி தான்..
//7) Police will get mamool seperately. //
இது மட்டும் தொடர்பில்லாத மாதிரி தெரிகிறது. இந்த டிவிக்கள் வாங்கிய உடன் ரூ800 முதல் ரூ.1500 வரை சுடச்சுட விற்கப் படுகிறது.

லகலகப்ரியா, நன்றி.. அட அதெல்லாம் அரசாங்க இணையதளத்துல இருக்குபா.. புள்ளிவிவரம் சொன்னாலே விஜய்காந்த் தானா? சிதம்பரமா இருக்கக் கூடாதா? :)

அமுதாமேடம், நன்றிங்க.. கரெக்ட் தான்.. இல்லைனா 1.20கோடி டிவிக்கள் எதுக்கு? இரண்டு குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு அது 3வது.

Manchari  – (November 10, 2009 8:45 PM)  

அண்ணே,
இது மட்டும் இல்ல. இலவச காஸ் சிலிண்டர் கொடுக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் கொடுத்திருக்கோம். இலவச கேபிள் டிவி ஸ்கூல்க்கு எல்லாம் கொடுக்க ஆணை விட்ட்ருக்கோம். இன்னும் அடுத்த தேர்தலுக்குள்ள என்ன என்ன இலவசம் கொடுக்கலாம்னு மந்திரி சபை கிட்ட யோசனை கேட்டுட்டு இருக்கோம்.

இதுக்கே டென்ஷன் ஆனா எப்புடி. சும்மா என்ஜாய் பண்ணுங்க. யாருது பணம். டேக்ஸ் அழறவன் அழுறான். நம்ம என்ஜாய் பண்ணுவோம் வாங்க உடன் பிர்ரப்புகளே!

SanjaiGandhi™  – (November 10, 2009 8:55 PM)  

தண்டோரா மாம்ஸ், ரொம்ப சரியா சொன்னிங்க.. அதான் நானும் தண்டோரா போட்டுட்டேன். :)

வால்பையன், மாம நிகழ்ச்சியை கிண்டலடிக்க வேண்டாம். மிட்நைட் மசாலா ஒளிபரப்பு இல்லாத குறையை போக்கும் கலைநயம் மிக்க நிகழ்ச்சி அது. இதை கலைஞரே தவறாமல் பார்த்து உடைகளுக்கு டிப்ஸ் எல்லாம் தராறாம். அவர்கள் உடையே டிப்ஸ் மாதிரி தான் இருக்கு. :)

உத அண்ணே, கமிஷனா? அப்டின்ன என்ன? இதுல அதெல்லாம் இருக்குமா என்ன?

வவ்வால், இலவசமாக கொடுத்த டிவியை வேண்டாம் என சொல்லிவிட்டோம். முடியப் போகுதுன்னு நினைச்சப்போ மேலும் 40 லட்சம் டிவிகளுக்கு டெண்டர் விட்டதால தான் இதை எழுத நினைச்சேன். 8 கோடி குடும்ப அட்டையா? :( அந்த பேராமீட்டர்கள் புதுத் தகவல். நன்றி. இந்த ஐடியா கொடுத்தது வேறு ஒருவன். பல கோடிகளை ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாக வாழும் நல்லவன். அதிமுகவுக்கு அவன் கொடுத்த ஐடியா : டிவியுடன் டிடிஹெச் தரலாம். :)

பட்டிக்காட்டான், அந்த பயம் இருக்கட்டும்.. :)

குரு பிரசாத், நன்றி..

சத்திஷ் நன்றி...

ரோஸ்விக், நன்றி.. நீங்களும் எழுதுங்க..

அகோரி, நன்றிங்க.. ரொம்ப சூடா இருக்கிங்க போல..

மின்னுது மின்னல், ஹிஹி.. நன்றி..

SanjaiGandhi™  – (November 10, 2009 9:00 PM)  

மஞ்சரி நன்றிங்க.. :)))))))))

Sammy  – (November 10, 2009 9:53 PM)  

//இதைப் படிக்கும் அனைவரும் இது போல் எதாவது ஒரு பிரச்சனையை மையமாக வைத்து ( ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிடக் கூடாதுன்னு தான் ) ஒரு பதிவு எழுதுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்//

நல்ல வேலை நாலு பேரை போட்டு, ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்கலை.

ஏதாவது பிரச்சினை பற்றி எழுத நானும் முயற்சிக்கிறேன் ..பார்க்கலாம், எடுத்தவுடம் நியாபகம் வரது மாயாவதி+சிலை...வேற எத்தனாச்சு தமிழ்நாட்டில் யோசிச்சு தான் பார்க்கணும்.

ஆனந்தன்  – (November 11, 2009 12:55 AM)  

சஞ்ஜெய் காந்தி,நீ ஒரு ஆரிய பார்ப்பானின் அடிமை,அதனால்தான் ஒரு அறிய திட்டம்,அதுவும் ஒரு சூத்திரனின் மூளையில்(இருக்கானு எல்லாம் கேக்கப்படாது வ்வ்வ்வ்வ்வ்வ்)உதித்த திட்டத்தை குறை சொல்கிறாய்.

இதே கேள்விகளை செல்வந்தர் வீட்டு சீமான்,அரசியலை சீரழித்த ஆரிய அடிமை காமராஜரிடம் கேக்க வேண்டியதுதானே?
இத்தனை அணைகள் எதற்கு?
உரேங்கும் பள்ளிகள் எதற்கு?
மதிய உணவு திட்டம் எதற்கு?
ஐ.ஐ.டி எதற்கு?
ஆவடி கனரக தொழிற்சாலை எதற்கு?
நீ கேக்க மாட்டாய்
ஏன் என்றால் நீ ஒரு தமிழ் விரோதி,

எம்.ஜி.ஆரிடம் கேள்
எதற்கு இலவச மதிய உணவு திட்டம்?
இலவச செருப்பு திட்டம்?
நீ கேக்க மாட்டாய்

ஒரு சூத்திரன்,ஒரு தமிழன்?அதுவும் 6 கோடி தமிழர்களின் தன்நிகரில்லா தலைவன்?

தமிழர்கள் கவலை மறந்து வாழ டாஸ்மாக் மூலமாக ஒரு திட்டம்?
ஒரு வேளை அதனால் தமிழ் மகளீர்க்கு பிரச்சனை வந்தாலும் வரலாம்,எனவே அந்த பிரச்சனையை மறக்க மானாட மயிலாட பார்த்திட இலவச தொலைக்காட்சி என நெடு நோக்கோடு திட்டம் தந்தால் பார்ப்பன சூழ்ச்சி, இதை பழிக்கின்ற போக்கு

சிந்தித்துப் பார்த்து எதையும் எழுது.

Karthik  – (November 12, 2009 11:58 AM)  

அரசியல் பத்தி நான் படிக்கிறதே இல்லைங்ணா. ரொம்பவும் கேவலமான விஷயத்தை கொஞ்சமும் அசராம இவங்க பண்றத பார்க்க அதிர்ச்சியா கூட இருக்கு. :((

SanjaiGandhi™  – (November 19, 2009 9:16 PM)  

நன்றி சாமி..

ஆனந்தன் ஏன் இந்தக் கொலைவெறி. முதல்வரியை படிச்சி கதிகலங்கிடிச்சி.. நல்லா கிளப்பறாங்கய்யா பீதிய.. :)

நன்றி கார்த்திக். ஒதுங்கி செல்வது தவறு செய்பவர்களுக்கு ஆதரவளிப்பது மாதிரி தான்.

கிரி  – (November 23, 2009 4:13 PM)  

சஞ்சய் நானும் இதை நினைத்து மனம் வெதும்பி உள்ளேன், நிறைய கூற நினைத்தேன் ரொம்ப தாமதமாக பார்த்து விட்டேன் :-) பலர் ஏற்கனவே விமர்சித்து விட்டார்கள்..

ஊருக்கு வந்தபோது உங்களை தொடர்பு கொள்ள வெயிலானிடம் நம்பர் எல்லாம் வாங்கினேன், நேரமின்மையால் முடியலை. அடுத்த முறை அழைக்கிறேன்.

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP