December 25, 2009

20 தமிழக சுற்றுலா தலங்கள்- பகுதி 1

1. பிச்சாவரம்
தனிச்சிறப்பு:
மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளுக்கு நிகரான கடல் முகத்துவாரம். மாங்குரோவ் வகைக் காடுகள்.

அருகாமை:
சிதம்பரத்திலிருந்து 16கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

தங்குமிடம்:
தமிழ்நாடு வனத்துறையின் கெஸ்ட் ஹவுஸ், ஹோட்டல் அக்‌ஷயா போன்ற இடங்கள்.



2. மன்னார் வளைகுடா


தனிச்சிறப்பு:
டால்பின், ட்யூகாங், பவளத்திட்டுகள் என கடல் உயிரின வளம் செழித்த , யுனெஸ்கோ கவுரவம் பெற்றப் பகுதி.

அருகாமை:
மண்டபத்துக்கு அருகே உள்ளது. ராமநாதபுரம் வழியாக செல்லலாம்.

தங்குமிடம்:
ராமேஸ்வரத்தில் தேவையான தங்குமிட வசதிகள் உண்டு.

3.ஏலகிரி

தனிச்சிறப்பு:
சாகச சுற்றுலாப் பயணிகளுக்கான பாரா க்ளைடிங், ட்ரெக்கிங் செல்லலாம்.

அருகாமை:
ரயில்மார்க்கமாக ஜோலார்பேட்டையில் இறங்கி பேருந்து கார் மூலமாக செல்லலாம்.( கிருஷ்ணகிரி அருகில் - எங்க ஏரியாவாச்சே. :) )

தங்குமிடம்:
மிகக்குறைவான விலையில் தொடங்கி சிறந்த அனுபவம் தரும் ஹோட்டல் வரை.

4.முதலியார் குப்பம்:
தனிச்சிறப்பு:
நீர்ப்படுமை நடுவே 20 நிமிடங்கள் படகில் பயணித்து கடற்கரையை அடைய வேண்டும்.

அருகாமை:
சென்னை - புதுச்சேரி நெடுஞ்சாலையில் சுமார் 50கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

தங்குமிடம்:
கிழக்குக் கடற்கரை சாலை முழுதும் ஹோட்டல்கள்.

5.முட்டம் கடற்கரை

தனிச்சிறப்பு:
சூரியனின் உதயம், அஸ்தமனத்தை அழகாக பார்க்க முடியும்.

அருகாமை:
நாகர்கோவிம் மற்றும் கன்யாகுமரிக்கும் அருகில்.

தங்குமிடம் :
முட்டத்திலேயே தங்குவதற்கு நல்ல ஹோட்டல்கள் உண்டு.



6. வட்டக் கோட்டை


டச்சுக் கடற்படையை மார்த்தாண்ட வர்மா வீழ்த்திய இடம். க்ரேன் அளவு உயரத்தில் நீலக் கடலை ரசிக்கலாம்.

நாஞ்சில் நாட்டில் குமரி முனையின் வடகிழக்கில் 6 கிமீ தொலைவில் உள்ளது.

கன்னியாகுமரியில் தங்குமிடம்.



7.கொல்லிமலை
அழகான கொண்டை ஊசி வளைவுகள். அறப்பளீசுவரர் கோயில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. சித்தர்கள் உலவுகிறார்களாம்.

சேலம் ரயில் நிலையத்திலிருந்து 100 கிமீ. திருச்சி விமான நிலையத்திலிருந்து 90கிமீ.

கொல்லிமலை ஹில்ஸ், நல்லதம்பி ரிசார்ட் போன்ற தங்குமிடங்கள்.



8.மேகமலை


வர்த்தகமயமாகாதலால் சீர்கெடாத மலைப் பகுதி. காஃபி தோட்டங்களும் நடுவில் ஓடும் அழகிய நதியும்.

மதுரையிலிருந்தும் தேனியிலிருந்தும் செல்லலாம். சின்னமனூரிலிருந்து 2 மணி நேரம் மலைப் பயனம்.

பஞ்சாயத்து போர்ட் விடுதியில் ஆறு அறைகள். தேனியில் தங்கலாம்.( ஃபாரஸ்ட் ரிசார்ட் இருப்பதாக எங்க டீலர் ஒருத்தர் சொன்னார் )

9.பைக்காரா
வெள்ளி அருவியாக பைக்காரா நதி பள்ளத்தில் வீழ்வதும் அணைப் பகுதியில் படகு சவாரியும்.

கோவையிலிருது சாலை மார்க்கமாக செல்லலாம். மேட்டுபாளையத்திலிருந்து ரயில் பயணம் மூலமும் வரலாம்.

தங்குமிடங்கள் ஏராளம். ரூ.200 முதல் ரூ.20,000 வரை.




10.திற்பரப்பு அருவி


தென் தமிழகத்தில் அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத கூட்டம் இல்லாத அருவி.

குழித்துறை வரை ரயிலிலும் நாகர்கோவிலிலிருந்து ரயில் மற்றும் சாலை வழியாகவும் செல்லலாம்.

திற்பரப்பில் தங்கும் வசதி அதிகமில்லை. நாகர்கோவில், கன்னியாகுமரியில் தங்கலாம்.


தகவல்கள் : இந்தியா டுடே.
படங்கள் : பல்வேறு இணையதளங்களில் இருந்து எடுத்தது.
அடுத்த பதிவில் மீதி 10 தலங்கள் பற்றிய தகவல்கள் வரும்..

முதலியார் குப்பம் படம் கிடைக்கவில்லை. யாராவது உதவவும்.

20 comments:

க.பாலாசி said...

எல்லாமே அழகான இடங்கள். தங்குமிடம்லாம் போட்டு சொல்லியிருக்கீங்க. நல்லது.

ஆனா பாருங்க எங்க ஊருக்கு பக்கத்துல இருக்குற பிச்சாவரத்துக்கே நான் இன்னும் போனதில்ல. 2012 க்குள்ள அங்க போயி பார்த்திடனும்.

நாடோடி இலக்கியன் said...

மேக மலைக்கு எப்போ போகலாம்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பத்துல ஒன்னு தான் பாத்திருக்கேன்.

கலகலப்ரியா said...

இப்டி பொறாமையா கிளப்பறதே வேலையா போச்சே... அவ்வ்வ்வ்...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கொள்ளிமலையில குப்ப பாத்தியளா!?

ஓ! அது கொல்லிமலையா?

mayil said...

ஆபிசர், எப்ப கூட்டிட்டு போவீங்க ஆபிசர் ??

ஆயில்யன் said...

ஆபிசர்,ஆபிசர், எப்ப கூட்டிட்டு போவீங்க ஆபிசர் ??

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் சஞ்செய்...

சில இடங்கள் பார்த்து இருக்கேன். நேரம் கிடைக்கும் போது மற்ற இடங்களையும் பார்க்கணும்.

ராமலக்ஷ்மி said...

திற்பரப்பு 3 முறை போயிருக்கிறேன்.

மற்ற இடங்கள் போனதில்லை.

தொடருங்கள். காத்திருக்கிறோம்.

குடுகுடுப்பை said...

திற்பரப்பு அருவி அருமை, வருஷம் 16 படம் கூட அங்கே எடுத்திருப்பார்கள். நான் கூட ராவா குடிச்சிப்பிட்டு நேரடியா அருவி தண்ணிய குடிச்சி நெஞ்சு கரிப்ப சரி செஞ்சேன். மொத்தத்தில் அருவி தண்ணீர் குடிச்சா நெஞ்சு கரிப்பு சரியாகும்.

மணிகண்டன் said...

இதுல நான் கொல்லிமலை மட்டும் தான் போயிருக்கேன். ஆனா, கொல்லிமலைக்கு புளியஞ்சோலைன்னு (துறையூர் பக்கத்துல) ஒரு இடத்துலேந்து ட்ரெக்கிங் போகலாம். ரொம்ப சூப்பரா இருக்கும்.

அன்புடன்-மணிகண்டன் said...

பைக்காரா மட்டும் தான் போயிருக்கேன்.. (சில வருடங்களுக்கு முன்) நான் போனபோது முட்டியளவு தண்ணி தான் இருந்தது.. :)
கொல்லிமலையும், மேகமலையும் அங்கு செல்லும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.. மிக நல்ல பகிர்வு சார்..

கும்க்கி said...

கந்தி சார் விடுபட்டவை ரெண்டே ரெண்டுதான்
திற்பரப்பு, மேகமலை.
ஆனாலும் கிட்டக்க போய் நட்புக்கள் தொல்லையால் இரண்டையும் அடைய முடியாமல் திரும்ப வேண்டியதாகிவிட்டது..
காரணம் பெரிதாக ஒன்றுமில்லை..எல்லாம் சோமபானம் சுறாபானம் செய்த லீலைகள்தான்...

தொடறவும்...மிக ஆர்வத்துடன் நினைவுகளை அசைபோட்டபடி....

கும்க்கி said...

நாடோடி இலக்கியன் said...
மேக மலைக்கு எப்போ போகலாம்...?

ஸ்ட்ரைட் ப்ளைட் இருக்கா நண்பா...?

SurveySan said...

////முட்டத்திலேயே தங்குவதற்கு நல்ல ஹோட்டல்கள் உண்டு.////


நீங்க கொஞ்சம் ரிசேர்ச் பண்னி தகவல் போட்டா உபயோகமா இருக்கும்ல.

அபி அப்பா said...
This comment has been removed by the author.
SanjaiGandhi™ said...

நன்றி பாலாசி.. உங்களுக்கு 2012 வைரஸா? :))

நாடோடி, கும்கி சொன்ன மாதிரி எதும் டைரக்ட் ஃப்ளைட் இருந்தா வாங்க. நாளைக்கே போகலாம்.. BTW நான், பரிசல், வெயிலான், அண்ணாச்சி, செல்வா எல்லாரும் உங்கள விட்டு வாலையாறு போறோம். :)

முத்தக்கா நன்றி.. சீக்றமே மத்ததும் பாருங்க.. அடுத்த பாகமும் போட்டாச்சி..

கலகப்ரியா, ஜூன்ல உங்க செலவுல போய்ட்டு வரலாம் விடுங்க.. :))

நன்றி ஜோதியாரே.. அவர் இவரில்லை.. :)

மயில், வழக்கம் போல உங்க ஸ்பான்சர் தானே.. ராம் ரெடின்னு சொல்லிட்டார்.. :)

ஆயில்யண் அண்ணா, உங்க கல்யாணத்துக்கு இங்க எல்லாம் கூட்டிட்டுப் போய் பார்ட்டி குடுங்க.. :)

நன்றி ராகவன் அண்ணே.. இந்தத் தம்பியையும் மைண்ட வச்சிக்கோங்க.. :)

நன்றி லக்‌ஷ்மியக்கா, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிஞ்சதா? அடுத்த பார்ட் போட்டாச்சி..

நன்றி குடுகுடுப்பை.. அருமையானதொரு குறிப்பு.. சிங்கைக்கு ஒரு பார்சல் போட்டாச்சி.. :))

மணிகண்டன், நன்றி சித்தரே..

நன்றி அன்புடன் மணிகண்டன்.. இன்னொருக்கா சார் சொன்னா பென்ச் மேல நிக்க வச்சிடுவேன் ராசா.. சாக்கிறதை..

நன்றி கும்கியாரே.. நாங்க விட்டுட்டுப் போனா மட்டும் ருத்ர தாண்டவம் ஆடுங்க.. ஆனா நீங்க மட்டும் அத செய்ங்க..

நன்றி சர்வேஸ்.. இனி மினிமீல்ஸ்ல சுற்றுலா தலம் பத்தி எழுதறேன் நீங்க சொன்ன மாதிரியே.. ஒரு சாம்பிள் <a href="http://www.blog.sanjaigandhi.com/2009/12/mini-meals-v-21209.html>இங்கே</a>

SanjaiGandhi™ said...

http://www.blog.sanjaigandhi.com/2009/12/mini-meals-v-21209.html

jeya said...

tourist places in kanyakumari districts are so beautiful and calm.........otherplaces in kk dist are
mathoor thottipalam
padmanabapuram kottai
chitharal MALAI KOVIL
KALLUPALAM POTRAI
NAGERCOIL NAGARAJA KOVIL
SUSEENDRUM THANAMALAYA TEMPLE
SWAMITHOPPU AYYA VAIGUNDANATHAR TEMPLE
MUPPANTHAL ISAKKIAMMAN TEMPLE
THIRUVATTAR SRI AATHIKESAVAR TEMPLE

SanjaiGandhi™ said...

நன்றி ஜெயா.. விவரங்கள் அனுப்புங்க.. பதிவுல சேர்த்துடுவோம்..

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget