December 28, 2009

20 தமிழக சுற்றுலா தலங்கள்- பகுதி 2

பகுதி ஒன்றில் இருக்கும் 10 சுற்றுலாத் தலங்கள் பற்றி அறிய இங்கே

11.முண்டந்துறை
பாபநாசம் மலையின் அழகிய அருவிகளைத் தாண்டினால் புலிகள் சரணாலயம். ட்ரெக்கிங்கிற்கு ஏற்ற இடம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து 200 கிமீ.

அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித் துறை, களக்காட்டில் மின்வாரியம், முண்டந்துறையில் வன இலாகா கெஸ்ட் ஹவுஸ்களில் தங்கலாம்.




12. வால்பாறை


மலை முழுதும் பச்சைப் பசேல் தோற்றம். தேயிலை, காபி எஸ்டேட்டுகள்.

பொள்ளாச்சியிலிருந்து 64 கிமீ. கோவை வரை ரயில் பயணம்.

தங்கும் வசதிகள் உண்டு. ஹோம் ஸ்டே வசதியும் உள்ளது.




13.கங்கை கொண்ட சோழபுரம்


ராஜேந்திர சோழனின் தலைநகர். யுனெஸ்கோ உலக மரபுச் சின்னம் கவுரவம் பெற்றது.

ஜெயங்கொண்டத்துக்கு அருகில் உள்ளது. திருச்சியில் இருந்து பஸ் வசதி உண்டு.

ஜெயங்கொண்டத்தில் தங்குமிட வசதிகள் உண்டு. ஒரு நாள் பயணமென்பதால் வேறு இடங்களிலும் தங்கலாம்.( எனக்கு 2 நெருங்கிய நண்பர்கள் இருக்காங்க. அவங்க வீட்டுக்கும் போகலாம்:) )

14. தரங்கம்பாடி

200 ஆண்டுகளுக்கு மேல் டச்சுக்காரர்கள் கட்டுபாட்டிலிருந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரம்.

நாகப்பட்டினத்திலிருந்து 35 கிமீ. கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லலாம்.

நாகப்பட்டினம் மற்றும் திருக்கடையூரில் தங்கலாம்.






15. கோடியக்கரை


250 வகைகளைச் சேர்ந்த 1 லட்சம் பறவைகள். வெளிமான், டால்பின்களைக் கண்டு ரசிக்கலாம்.

நாகப்பட்டினத்திலிருந்து 55 கிமீ. திருத்துறைப் பூண்டி வரை ரயில், பஸ் வசதிகள் உண்டு.

கோடிக்கரை வனத்துறை கெஸ்ட் ஹவுஸ். நாகப்பட்டினத்தில் ஹோட்டல்கள்.

16.கூந்தங்குளம்

நவம்பர் முதல் ஜூலை வரை 140 வகையான பறவைகளைக் காணலாம்.

திருநெல்வேலியில் மூலக்கரைப்பட்டி வழியாக பஸ்ஸில் செல்லலாம்.

திருநெல்வேலியில் தங்கலாம்.






17. ஜவ்வாதுமலை


அதிசயங்களை உள்ளடக்கிய மலை. மலைவாழ் மக்களின் வாழ்க்கையை நேரடியாக உணரலாம்.

திருவண்ணாமலையில் இருந்து 75 கிமீ தூரத்தில் வானியம்பாடி அருகில் உள்ளது.

மலையில் ஃபாரஸ்ட் கெஸ்ட் ஹவுஸ் மட்டும் உண்டு. அடிவாரத்தில் உள்ள ஊர்களில் தங்கலாம்.



18.கல்வராயன் மலை


1976 வரை ஜாகிர்தார்களின் கட்டுபாட்டில் கட்டுப்பாட்டில் இருந்ததால் பழமை மாறாமல் இருக்கும் ஊர்.

கள்ளக்குறிச்சி & உளுந்தூர்ப் பேட்டை சென்று அங்கிருந்து கல்வராயன் மலைத்தொடர் ஏறலாம்.

தங்குவதற்கு சாதாரன ஹோட்டல்களே உள்ளன. அடிவார ஊர்களில் தங்கலாம்.

19.ஏற்காடு

ஏழைகளின் ஊட்டி என்ற பெருமை. ஊட்டியைப் போன்ற க்ளைமேட். சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள்.

சேலத்திற்கு அருகில். பல பகுதிகளில் இருந்தும் சேலத்திற்கு ஏராளமான ரயில்கள் உண்டு.

ஏற்காட்டில் சிறிய பெரிய ஹோட்டல்கள் ஏராளமாக உள்ளன.





20. வேடந்தாங்கல்


115 வகை வெளிநாட்டு, உள்நாட்டுப் பறவைகள் நவம்பர் முதல் இங்கு ஆயிரக்கணக்கில் வருகின்றன.

சென்னையில் இருந்து 86கிமீ. தாம்பரத்தில் பஸ் வசதி உண்டு.

வனத்துறை ரெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது. பறவைகள் பார்க்க காலை நேரம் உகந்தது.

தகவல்கள் : இந்தியா டுடே.
படங்கள் : பல்வேறு இணையதளங்களில் இருந்து எடுத்தது.

11 comments:

நாதஸ் said...

Thanks a lot Annachi !!!

ஆரூரன் விசுவநாதன் said...

அரிய தகவல்கள், புகைப்படங்களுடன், அருமை சஞ்சய்...வாழ்த்துக்கள். உங்கள் அலைபேசி எண் கிடைக்குமா? என் எண் 9894717185

அன்புடன்
ஆரூரன்

ஆயில்யன் said...

போட்டோக்கள் கலக்கல் பாஸ் எங்க ஊரு பக்கம் இருக்கும் தரங்கம்பாடி போட்டோ பார்த்துக்கிட்டேஏஏஏஏஏஎ இருக்கேன் !:)

குசும்பன் said...

மாமா திப்பணம்பேட்டையை விட்டுவிட்டீயே மாமா?

அது புனிதபூமிகள் என்ற தலைப்பில் வருமா?:)))

குசும்பன் said...

அடடே சுற்றுலா தலங்கள் பற்றி பதிவு எழுதுவது நொம்ப ஈசி போல:)

படம் போட்டுவிட்டு கீழே அங்கு தங்கும் இடம் உள்ளது,பஸ் வசதி உள்ளது என்று எழுதிடனும் அவ்வளோ தானா?:)

mayil said...

//கோவை வரை ரயில் பயணம்.
தங்கும் வசதிகள் உண்டு. ஹோம் ஸ்டே வசதியும் உள்ளது.//

உங்க வீடா? :))

ஆபிசர் எப்ப கூட்டிட்டு போவீங்க ஆபிசர் :))

ஜீவன் said...

பயனுள்ள பதிவு....!
படங்கள் அருமை ..!

தொடருங்கள் ..!

புனிதா||Punitha said...

nice 1 ...

கலகலப்ரியா said...

superb..! நன்றி சஞ்சய்.. =)).. பாபநாசம் போயிருக்கேன்.. பியூட்டிபுல்.. ஆனா... போயி சேர்றதுக்குள்ள.. போதும் போதும்னு ஆய்டும்... ரோடு எல்லாம் அவ்ளோஓஒ... அவ்வ்வ்வ்...

’டொன்’ லீ said...

அருமை....சில இடங்களை சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (விஜயசாரதி வழங்கிய)பார்த்திருக்கிறேன் :-)

Mitr Friend - Bhushavali said...

Good compilation Boss!!!

Me and my Mannequin!!! - Fashion Panache
Interview at Speakbindas - My Travelogue

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget