December 18, 2009

தமிழ்மணம் விருதுகள் - அதிக ஓட்டு வாங்குவது எப்படி?

தமிழ்மணம் விருதுகள்2009 அறிவிச்சி பல பதிவர்களும் அதில் தங்கள் பதிவுகளை இணைச்சிருக்காங்க. எல்லாப் பதிவுகளையும் படிச்சி நேர்மையா ஓட்டுப் போடறதுக்கெல்லாம் யாருக்கும் நேரம் இருக்காது. உலக வலைப்பதிவுகளிலேயே தமிழ் பதிவுகளுக்கென்று ஒரு தனி சிறப்பு இருக்கு. சக்தி வாய்ந்த குழுக்கள் சில பல உண்டு . இப்போவே பல குழுக்களும் களத்துல குதிச்சிட்டாங்க. வேற ஒன்னுமில்லீங்க .. எல்லாம் கிவ்வண்ட்டேட் தானுங்க. அந்த குழுக்களுக்குள்ளயே மாத்தி மாத்தி ஓட்டுப் போட்டுப்பாங்க. போட்டுக்கிட்டும் இருக்காங்க.

ஆனால் என்னை மாதிரி எந்த கோஷ்டியிலும் சேராத( சேர்த்துக் கொள்ளப்படாத) ஆளுங்களும் இருக்கோமில்லையா?. நம்மளுக்கெல்லாம் எப்படி ஓட்டு வாங்கறதுன்னு ஒக்காந்து யோசிச்சதுல ஒரு ஐடியா கெடைச்சது.

தமிழ்மணம் விருதுகள் பதிவுகளுக்கு ஓட்டுப் போட கால அவகாசம் குடுத்திருக்காங்க. அந்த அவகாசத்துல நாம எத்தனை முறை வேண்டுமானாலும் ஓட்டுகளை மாற்றிப் போடலாம். இதைப் பயன்படுத்தி எப்டி ஓட்டு வாங்கறதுன்னு சொல்லிடறேன்.

நீங்க போட்டியிடற பிரிவு தவிர மற்ற பிரிவுகளில் இருக்கும் பதிவர்கள் பட்டியல் பாருங்க. ( நம்ம பதிவு விட்டு போட்டியாளருக்கு ஓட்டுப் போடற அளவுக்கா நாம நல்லவங்க? ) பெரும்பாலானவங்க மெயில் ஐடி நம்ம கிட்ட இருக்கும். இல்லைனாலும் அவங்க ப்ரொஃபைல் பக்கம் பார்த்து எடுத்துக்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம். முதலில் இருக்கும் பதிவரின் பதிவுக்கு ஓட்டுப் போடுவோம். அது முகப்புல வந்து நிக்கும். அதை அப்டியே ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுங்க. அதை அந்த பதிவருக்கு அனுப்புங்க. ”உனக்கு நான் ஓட்டுப் போட்டிருக்கேன். இதோ ஆதாரம். எனக்கும் ஓட்டுப் போடு” - இதான் செய்தி. இப்போ திரும்ப உள்ள போய் இரண்டாவது பதிவுக்கு ஓட்டுப் போடுவோம். அதையும் ஸ்க்ரீன் ஷாட் எடுப்போம். அதை அந்தப் பதிவருக்கு அனுப்பி ஓட்டுக் கேட்போம்.

இப்டியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எடுத்து மெயில் அனுப்பி விளையாடலாம். ஏமாந்தவங்க யாருமேவா இருக்க மாட்டாங்க. 100 பேர்ல 10 பேர் ஓட்டுப் போட்டாலும் லாபம் தானே. ஐடியா ஓக்கேவா?.. வாங்க விளையாடலாம்.

டி(வி)ஸ்கி: இனி யார்னா ஸ்க்ரீன்ஷாட் அனுப்பி ஓட்டுக் கேட்டா நம்புவீங்க? :))

25 comments:

கோவி.கண்ணன் said...

பத்தவச்சிட்டியே பரட்டை !

சந்தனமுல்லை said...

:-))))

ஐடியாமணி சஞ்சய்!!

mayil said...

அடப்பாவி, இது தெரியாம நான் உங்களுக்கு ஓட்டு போட்டனே... :(

♠ ராஜு ♠ said...

தெய்வம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மே.....! எங்கயோ போயிட்டீங்க தெய்வமே.

vattukozhi said...

இது சூப்பரா இருக்கு. நீங்க ஒருதடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி????? ......

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இந்தப் பதிவுக்கு தமிழ்மணத்துல ஓட்டு போட்டுட்டேன்!

ச்கிரீன் சாட்டு எதும் எடுக்கனுமா?

சின்ன அம்மிணி said...

//அடப்பாவி, இது தெரியாம நான் உங்களுக்கு ஓட்டு போட்டனே... ://

மயிலு, இன்னுமா இந்த உலகம் உங்களைய நம்புது :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பீ.. நானும் உனக்குத்தான் ஓட்டுப் போட்டிருக்கேன்.. ஸ்கிரீன்ஷாட் மெயில்ல வந்துக்கிட்டே இருக்கு..

மருவாதையா எனக்கு ஓட்டுப் போட்டிரு..!

Tech Shankar said...

என்னை மாதிரி தமிழ்மணத்தால் ஓரங்கட்டப்பட்டு / அடித்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்கள் என்ன செய்வது?

//ஆனால் என்னை மாதிரி எந்த கோஷ்டியிலும் சேராத( சேர்த்துக் கொள்ளப்படாத) ஆளுங்களும் இருக்கோமில்லையா?

விக்னேஷ்வரி said...

யப்பா... எப்படி இப்படியெல்லாம்...

வெயிலான் said...

எந்தப் பதிவுக்கு வேணும்னாலும் ஓட்டு போடுவேன். ஆனா, பரளிக்காடு சுற்றுலா பதிவுக்கு மட்டும் ஓட்டு நிச்சயம் போட மாட்ட்ட்ட்ட்ட்ட்டேன்.

கும்க்கி said...

கி..கி...கி..

கும்க்கி said...

சில பல ரஹசியங்களை சொல்லப்படாது...சஞ்ஜூ.
இப்படியா போட்டு உடைக்கறது..?

கலகலப்ரியா said...

=)))... shall send you a scrn shot soon sanjay.. (ivangala yaarum serthukkollaliyaamla... =)))

தமிழ் பிரியன் said...

;-)))))))))))))))))

Princess said...

thillumullu paarti neethaan nee matum than..

SanjaiGandhi™ said...

//thillumullu paarti neethaan nee matum than//

5 வருஷமா உன்கூட சகவாசம் வச்சிருக்கேனே.. வேற எப்டி இருப்பேன்.. இப்போ எந்த ஐடில இருக்க? ஜிமெயில்ல வா.

Sammy said...

ஆஹா ... போட்ட ஓட்ட மாத்துலாமா ? முதல்ல லாகின் பண்ணி "பருத்திக் காட்டுக்கு" போட்ட ஓட்ட .. எடுத்து விட்டுட்டு..நம்மலுடய வேலையை ஆரம்பிக்க வேண்டிதான்.

வந்தியத்தேவன் said...

சஞ்சே உங்களுக்கு நான் ஓட்டூப்போட்டிருக்கின்றேன்.
நல்ல ஐடியா தான் ஆனால் படைத்தவர்களை விட படைப்புக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் ஆனால் நடக்கின்ற காரியமா?

SanjaiGandhi™ said...

கோவிஜி நன்றி.. எதோ என்னால முடிஞ்சது.. :)

நன்றி சந்தனமுல்லை ஆச்சி.. :)

மயில் விஜி, நம்பிட்டேன். :)

ராஜூ , இம்மாம்பெரிசா பாராட்டினா அதுக்குப் பேர் ஆப்புன்னு எனக்கும் தெர்யுமுங்க.. ;)

நன்றி வாத்துக்கோழி.. ரஜினி மாதிரி நானும் காமெடியன்னு சொல்ல வரிங்களா? :)

ஜோதி சார், ஸ்க்ரீன்ஷாட் வேணாம். தமிழ்மணத்துல இருந்து மெயில் அனுப்பிட்டாங்க. உங்க ஐபில இருந்து ஓட்டு வந்திருக்குன்னு. :)

புனிதா||Punitha said...

Hey fraud..:-))

ராமலக்ஷ்மி said...

:))!

SanjaiGandhi™ said...

நன்றி சின்ன அம்மினி அக்கா, மயிலை எப்போவுமே நாம நம்பறதில்லை. :)

உ.தமிழன் அண்ணே. உங்களுக்கு ஓட்டுப் போடலாம்னு தான் ஆசை. ஆனா உங்க ப்ளாக் தான் காக்கா தூக்கிட்டுப் போய்டிச்சே. :(

டெக் சங்கர். வேற என்ன, போட்டி திரட்டி ஆரம்பிச்சி விருது அறிவிக்க வேண்டியது தான். நாங்க அங்கயும் ஆதரவு குடுப்போம்ல. :)

விக்னேஷ்வரி, எல்லாம் உங்க சகவாசம் தான். :) பத்திரமா ஊருக்குப் போய்ட்டிங்களா?

வெயிலான், விடுங்க பாஸ். சீக்கிறமே உங்க செலவுல ஒருக்கா போய்டுவோம். இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணிகிட்டு. :))

SanjaiGandhi™ said...

நன்றி கும்கியாரே. நம் கடன் பணி செய்து கிடப்பதே.. :)

லகலகப்ரியா, உங்க ஓட்டு செல்லாதாம். ஆமா ப்ரியா. என்னை யாருமே சேர்த்துக்க மாட்டேங்கறாங்க.. :(

நன்றி தமிழ்பிரியன் அண்ணாச்சி. ஜூனியர் நலமா?

நன்றி ப்ரின்சஸ் ஐஸ். நான் உன் நண்பனாச்சே. உன்னை மாதிரி தானே இருப்பேன். :)

சாமி, ஏஞ்சாமி இந்த கொல வெறி? :)

வந்தி, மிக்க நன்றி நண்பா. படைப்புக்கு தான் முக்கியத்துவம் தரனும். ஆனா அது நடக்கறதில்லை. நட்புக்கே ஓட்டு. :(

SanjaiGandhi™ said...

புனிதா, என் குருவே. நன்றி. வஷிஸ்டர் வாயால் பாராட்டு. :))

நன்றி லக்‌ஷ்மியக்கா..

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget