பயிலரங்கு பதிவர் சந்திப்பு இட்லிவடை போட்டோ
நாமக்கல் மாவட்ட மக்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு மிகச் சிறந்த ஆட்சியர் கிடைத்திருக்கிறார். உதாரணம் காட்டக் கூடிய அரசு அதிகாரி. மக்களின் பொதுப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர்கள் படும் சிரமங்களை கவனத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் குறைகளை அரசு அதிகாரிகளுக்கு தெரியபடுத்தவும் அதை விரைவாக நிவர்த்தி செய்யவுமான ஒரு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தார். மாவட்டத்தில் பல கிராமங்களில் இருந்து தலா 5 தன்னார்வலர்களை வரவழைத்திருந்தார். 200 பேருக்கும் மேல் தன்னார்வலர்களும் அரசு அதிகாரிகளும் ஆர்வமுடன் கலந்துக் கொண்டார்கள்.
அவர்களுக்குப் பயிற்சியும் விழுப்புணர்வும் அளிப்பதற்காக தமிழ்மணம் திரு. காசி , நான்(சஞ்சய்) , திரு.லதானந்த், திரு. தகடூர் கோபி, திரு.விஜயகுமார், திரு. செல்வமுரளி ஆகியோர் அழைக்கப் பட்டிருந்தோம். வலைப்பூக்களின் தொழில்நுட்பம் மற்றும் பயன்கள் பற்றி காசி அண்ணாவும், தமிழில் தட்டச்சு செய்யும் முறை மற்றும் தொழில்நுட்பம் பற்றி தகடூர் கோபியும், கணினி மற்றும் இணையத்தில் தமிழ் என்பது பற்றி நானும், அதிகாரியில் பார்வையில் வலைப்பூக்கள் மற்றும் அதன் பயன்கள் என்பது பற்றி லதானந்தும் விளக்கமளித்தோம்.
பயிலரங்கத்தின் ஆரம்பத்தில் அமெரிக்காவிலிருந்து திரு. ஆல்பர்ட் , ஆஸ்திரேலியாவிலிருந்து திரு.முகுந்த்( இ கலப்பை உருவாக்கியவர், நாமக்கலை சேர்ந்தவர்), மலேசியாவிலிருந்து திரு. இளந்தமிழ் , பிரான்சிலிருந்து திரு. பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூரிலிருந்து திரு. மணியம், லண்டனிலிருந்து திரு.சிவாபிள்ளை ஆகியோர் விடியோ கான்ஃபரன்சிங் மூலமாக வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக வழக்கறிஞர் திரு. மார்ட்டின் அவர்கள் தகவல் உரிமை சட்டம் மற்றும் பயன்கள் பற்றி விளக்கமளித்தார்.
பிறகு அனைவரும் குழுவாக பிரிந்து தமிழ்பயன்பாடு பற்றிய நேரடிப் பயிற்சியை அளித்தோம். மிக திருப்தியான உபயோகமான பயிலரங்காக அமைந்தது. மாவட்ட ஆட்சியரின் ஆர்வத்தை அறிந்து அதற்கான முயற்சியை எடுத்து எங்களை எல்லாம் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட காரணமாக இருந்தவர் திரு. ஆல்பர்ட் அவர்கள். அமெரிக்காவில் வசிக்கிறார். விளக்கமளிக்க ஏதுவாக பவர்பாய்ண்ட் ப்ரசண்டேஷனை உருவாக்கி அனுப்பி இருந்தார். அதற்குத் தான் நான் விளக்கமளித்தேன். நல்ல வேளை எனக்குத் தெரியாத எதுவும் அனுப்பவில்லை. தப்பித்தேன். நன்றி ஆல்பர்ட் சார். :)
குறிப்பு: இந்தப் பயிலரங்கிற்கு, பதிவர்கள் என்ற முறையில் மட்டுமே நாங்கள் அழைக்கப் பட்டிருந்தோம். மொக்கைப் போடுகிறோம், கதை, கவிதை எழுதுகிறோம், நமக்குள் உதவிக் கொள்கிறோம் என்பதைத் தாண்டி நமக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தையும் ஒன்றுகூடும் மனோபாவத்தையும் கொண்டு சமுதாயத்திலும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதற்கு இந்த பயிலரங்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் மற்றும் நல்ல ஆரம்பம். பதிவர்களாய் இருக்க பெருமை கொள்வோம்.
மாலையில் ஈரோட்டில் நடைபெற்ற சங்கமம் பதிவர் சந்திப்பில் கலந்துக் கொண்டேன். இவ்வளவு பதிவர்கள் வருவார்கள் என நினைக்கவில்லை. ஏராளமான பதிவர்களை/புதியவர்களை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. யாரும் முதல் முறை சந்திப்பவர்கள் போல நடந்துக் கொள்ளவில்லை. மிகுந்த பாசமுடன் நீண்ட கால நண்பர்கள் போலவே நடந்துக் கொண்டார்கள். இது தான் பதிவுலகத்தின் நம்பகத் தன்மைக்கு உதாரணம். தனிப்பட்ட விரோதம் , சுயக் கட்டுபாடின்மை போன்றவற்றால் இந்த ஆரோக்கியமான சூழலைக் கெடுத்துவிடக் கூடாது.முதல் முறை ஏற்பாடு செய்த பதிவர் சந்திப்பு போலவே இல்லை. மிகச் சிறப்பாக திட்டமிட்டு மிகக் கடுமையாக உழைந்திருக்கிறார்கள். வால்பையன் தவிர்த்த ஈரோடு பதிவர்கள் அனைவருக்கும் சல்யூட். சாதிச்சிட்டிங்க. மேடை அமைத்து நாற்காலிகள் எல்லாம் போட்டிருந்ததை பார்த்ததும் வயிற்றில் சல்ப்யூரிக் ஆசிட் கரைத்தாலும் யாரும் கொடுமை படுத்தும் அளவு சொற்பொழிவு ஆத்தவில்லை. :). காசி அண்ணா மற்றும் பழமைப் பேசியின் உரைகள் வெகு சிறப்பு. பழமைப் பேசி அரசியலுக்கு வந்தால் விரைவில் கோட்டையைப் பிடித்து விடுவார். பேச்சால் நம்மைக் கட்டிப் போடுகிறார். ஆரூரான் அவர்கள், கலிங்கராயன் காளிங்கராயனாகி பின்னர் காளிங்க கரையான் ஆனதை சுவாரஸ்யமாக சொன்னார். மிக சுவையான இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடபெற அதிகம் உழைத்தவர் ஈரோடு கதிர். சந்திப்புகளுக்கு இவரை ஆலோசகராக நியமிக்கலாம். மனிதர் பிரமாதமாய் வழிநடத்துவதோடு மிகப் பிரமாதமாய் விருந்தினர்களை உபசரிக்கிறார். நந்தண்ணா( f/o நிலா) , கார்த்திக்( தல அடிக்கடி பதிவு எழுதுங்க) , கோடிஸ்வரன் , ஜாபர்( பதிவர் இல்லை) , நாகா மற்றும் பல ஈரோட்டுப் பதிவர்களின் முயற்சியும் மிக அன்பான உபசரிப்பும் குறிப்பிடத்தக்கது.

என்ன சாப்பாடு போடறாங்களோ போங்க.. ஈரோட்டுப் பதிவர் சந்திப்பின் முடிவில் சாப்பிட இட்லி குடுத்தாங்க இன்னும் என்னென்னவோ குடுத்தாங்க. ஒரு வடைக் குடுக்கனும்னு தோனவே இல்லை. அதையும் குடுத்திருந்தால் ஈரோட்டில் இட்லிவடை என்றே தலைப்பு வைத்திருக்கலாம். இப்போ பாருங்க , நெட்ல இருந்து எடுக்க வேண்டியதா போச்சி. என்னவோ போங்க பாஸ்...
பயிலரங்கு மற்றும் பதிவர் சந்திப்பு படங்கள் உதவி : kasilingam.blogspot.com
எப்பப்பாரு வட சாம்பார்னு
இன்னும் பச்சபுள்ளயாவே இருக்கீங்க
கொஞ்சம் வளருங்க சாமி :-))
:-)))
பகிர்வுக்கு நன்றி! நிலா பாப்பா வரலையா இங்கே?!!
உண்மையில் இது போன்ற அரசு அதிகாரிகளை பாராட்டுவதோடு மட்டும் அல்லாமல் மேற்கொண்டு அவருக்கு நம்மாலான ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்யலாம்.ஏனெனில் அவர்களுக்கு அலுவல் சார்ந்த பளு அதிகமாதலால் இது போன்ற தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ளவும், அதனால் பொது மக்களுக்கு ஏதேனும் சேவை செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும் செயல் படுத்த போதுமான நேரம் அமைவதில்லை.
தகவலுக்கும், பங்கெடுத்தமைக்கும் மிக்க நன்றி சஞ்ஜூ.
அதென்ன வால் பையன் தவிர்த்த...அடுத்த குடுமிப்புடி ஆரம்பமா..?
கொஞ்சம் வளருங்க சாமி :-))
இதுக்கும் மேல வளர்ந்தா வாசப்படி இடிக்கும் சாமியோவ்..
ஓ ஹோ...இதத்தான் “வடை போச்சே” என்று சொல்கிறார்களா..?
இன்னும் என்னென்னவோ குடுத்தாங்க...
:-))
பதிவர் சந்திப்பில் உங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
உங்கள் வருகையும், சக பதிவர்களோடு நீங்கள் பழகிய விதமும், நட்பு பாராட்டிய விதமும் நெகிழ வைக்கின்றன.
உங்கள் அன்பிற்கும், ஈரோடு சந்திப்பு பற்றிய இடுகைக்கும் நன்றி.
அன்புடன்
ஆரூரன்
அய்ய்ய்யோ... தப்புபண்ணிட்டோமே...
28 + 28 குடுக்காம விட்டுட்டோமே...
சரி... சரி கோவையில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்துங்க... நான் அங்கே வந்தா நீங்க ஒரு 28+ 28 குடுக்கனுமில்ல....
டேலி ஆயிடும் சஞ்சய்
சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
//கணினி மற்றும் இணையத்தில் தமிழ் என்பது பற்றி நானும்,//
மாமா நீ பேசும் பொழுது செம கூட்டமாமே! ஹாலுக்கு வெளியில்...உள்ளே இருந்தவங்க அனைவரும் ஓடி வந்துட்டாங்களாம்:)
மிக்க நன்றி தங்களின் வருகைக்கும்....இடுகைக்கும்....அடுத்தமுறை வடையுடன் சந்திப்போம்....
//வால்பையன் தவிர்த்த ஈரோடு பதிவர்கள் அனைவருக்கும் சல்யூட்.//
:((( ஒன்னும் சொல்லுவதுக்கில்லை
//சந்தனமுல்லை said...
:-)))
பகிர்வுக்கு நன்றி! நிலா பாப்பா வரலையா இங்கே?!!
//
ஆஹா என் கேர்ள் பிரண்டை பற்றி ஆள் ஆளுக்கு விசாரிக்கிறாங்களே!
:))
அப்ப வட போச்சா!!!
:)
கார்த்திக், நமக்கு வேண்டியதைத் தானே யோசிக்க முடியும்.. தன்னடக்க சிகாமணியே நன்றிங்க.
சந்தனமுல்லை,நிலாவுக்கு பாப்பா இல்லையே.அதனால வரலை. :)
அவளை எல்லாம் ஒரு இடத்துல வச்சி அவளவு நேரம் சமாளிக்க முடியாதுங்க.
நன்றி கும்கி. கிராமப் புறத்தில் இருப்பவர்கள் கஷ்டம் நமக்கு தானே நல்லா தெரியும். அவர்களுக்காக ஒரு நல்ல முயற்சின்னா நாம தானே முதல்ல உதவனும். மிக திருப்திகரமான நிகழ்ச்சி.
//ஓ ஹோ...இதத்தான் “வடை போச்சே” என்று சொல்கிறார்களா..?//
ஹிஹி... நல்லாருக்கே.. :)
வர,வர குசும்பனுக்கு போட்டியா ஆகிட்டு வர்ற மாப்ளே..எனக்கும் போட்ட பின்னூட்டத்தை சொல்றேன்
நன்றி ஆரூரான் சார். உங்கள் ஆரம்ப உரை நல்லா இருந்துச்சி. ஈரோடு பத்தின தகவல்கள் உபயோகமானது. 4 ஆண்டுகள் ஈரோட்டில் இருந்தும் தெரியாத தகவல்கள். :) 2 சம்பவங்களப் பற்றி எழுதியதால் சுருக்கமாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும். உங்கள் அனைவரின் அன்பும் நெகிழவைத்தது. நன்றிகள்.
கதிர், உங்களை இந்த வகையில் நான் எதிர்பார்க்கவில்லை. யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன். விழாநாயகன் நீங்கள் தான். உங்கள் அன்புக்கு நன்றி. அக்கா இருந்ததால் நீங்கள் சற்று அடக்கி வாசித்ததையும் உணர முடிந்தது. ( எதோ என்னால் முடிஞ்சது..:) )
நன்றி பாலாசி. பதிவின் நீளம் கருதி உங்களைப் போன்ற மிக நல்ல நண்பர்கள் பலரின் பெயர் விடுபட்டிருக்கிறது. இதயத்தில் நிரந்தரமாய் இடம் பெற்றிருக்கும் போது பதிவில் இல்லை என்றால் என்ன?. உங்கள் அன்புக்கு நன்றிகள்.:)
நன்றி குசும்பனாரே.. எனக்கு சொல்ல நிறைய இருக்கு. ஆனால் சொல்ல விரும்பவில்லை.
நன்றி ஆதவன்..
நன்றி அம்மிணி அக்கா
நன்றி தாரணி அக்கா
நன்றி தண்டோரா மாமா..
அழகோ அறிவோ குசும்போ.. குசும்பனின் நிழலைக் கூட என்னால் தொட முடியாது மாம்ஸ்..( போய் டெட்டால் போட்டுக் கையைக் கழுவனும்)
நாமக்கல் ஆட்சயர் மாதிரி எல்லாரும் இருந்தா நாம எப்பவோ முன்னேறிஇருப்போம்....
அவரின் முயற்சிக்கும், உங்களின் பங்களிப்பிற்கும் எனது வாழ்த்துக்கள்.......
நேற்று ஈரோட்டில் உங்களை சந்திக்காமல் மிஸ் பண்ணிட்டேன்.......
அப்படியே நேரம் இருந்தா என் வலைப்பதிவையும் பாருங்களேன்.....
ஈரோடு பதிவர்கள் சந்திப்பு குறித்த இரு பதிவுகளில் வால்பையனின் பெயர் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கிறேன். எனக்கு அவரைத் தெரியாது, அங்கு நடந்தவையும் தெரியாது. ஆனால், அசௌகர்யமான விஷயங்கள் நடந்திருந்தால் பெயர் குறிப்பிட்டு பதிவில் சொல்லாமல் ஒரு பதிவர் என்பதோடு நிறுத்திக்கொண்டு தனிப்பட்ட முறையில் அந்தப் பதிவரோடு பேசினால் அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவர் அப்படி நடப்பதை மாற்றிக்கொள்ள வழிவகுக்கும் அல்லவா? சஞ்சய், இது என்னுடைய எண்ணம் மட்டுமே, மற்றவர்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம். நன்றி
நன்றி சங்கவி. நானும் நாமக்கல் சிபியும் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். உங்கள் வலைப்பூ எனக்குப் பரிச்சயம் தான். அன்புக்கு நன்றி.
நன்றி KVR. நான் வால்பையனின் நடத்தைக்காக எதையும் குறிப்பிடலை. அந்த சந்திப்பு ஏற்பாட்டில் அவர் பங்கு எதுவும் இல்லை என்று அவரே என்னிடம் சொன்னார். சந்திப்பிலும் அவர் வெளியூர் பதிவரைப் போல் தான் நடந்துக் கொண்டார். அவரைத் தவிர மற்ற அனைவரும் வந்தவர்களை உபசரித்தும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டும் இருந்தார்கள். பொதுவாக ஈரோட்டுப் பதிவர் என்று குறிப்பிடாமல் அவர் தவிர்த்து பிறருக்கு வாழ்த்து சொன்னேன். அவர் செய்யாத செயலுக்கு வாழ்த்து சொல்ல எனக்கு விருப்பமில்லை. அவருக்கும் அந்த எதிர்பார்ப்பு இருக்காது. அது ஒரே வாக்கியமாக இருந்ததால் மொத்தமும் போல்டாக்கிவிட்டேன்.
//அசௌகர்யமான விஷயங்கள் நடந்திருந்தால் பெயர் குறிப்பிட்டு பதிவில் சொல்லாமல் ஒரு பதிவர் என்பதோடு நிறுத்திக்கொண்டு தனிப்பட்ட முறையில் அந்தப் பதிவரோடு பேசினால் அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவர் அப்படி நடப்பதை மாற்றிக்கொள்ள வழிவகுக்கும் அல்லவா?//
அப்படித் தனியாக எடுத்து சொல்லும் போது மிக அசிங்கமான வார்த்தைகளில் மேலும் பேசினால் என்ன செய்யலாம்? நேற்று அதுவும் நடந்தது. அதை எதுவுமே நான் குறிப்பிடலை.
கலக்டரும், நம் பதிவர் கதிர் மற்றும் பாலாசி போன்றவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். சிரத்தையுடன் செயல்பட்டு மிகத் திறமையாக நடத்தியுள்ளார்கள். வாழ்த்துகள்.
// ஆஹா என் கேர்ள் பிரண்டை பற்றி ஆள் ஆளுக்கு விசாரிக்கிறாங்களே!//
தல இது சரியில்ல சொல்லிப்புட்டேன் ஆமா
உங்க பேத்திமாதிரின்னு சொல்லுங்க.
=)).. mm.. nadakkattu..
ஆம் ஈரோடு சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது நண்பரே..
விவாதங்களும் பயனுள்ளவாறு அமைந்தன..
அடடா! இதென்ன கலாட்டா?நாங்கல்லாம் வரவே மாட்டோம்னு முடிவு கட்டி எங்களுக்கு தெரியப் படுத்தலியே!
பூங்கொத்து!ஸ்டேஜ்லெ கலக்கியதுக்கு!
//அப்படித் தனியாக எடுத்து சொல்லும் போது மிக அசிங்கமான வார்த்தைகளில் மேலும் பேசினால் என்ன செய்யலாம்? நேற்று அதுவும் நடந்தது. அதை எதுவுமே நான் குறிப்பிடலை.
//
:-(
ஏம்பா சஞ்செய் - நானும் அங்கே வந்திருந்ததாக நினைவு - மேடியில் பேச்னதாகவும் நினைவு - சரி சரி - நீ எங்கே எங்களைப் பத்தி எல்லாம் எழுதப்போறே !
நல்லாரு - நல்வாழ்த்துகள்
நீங்க சொன்னா சரிதான் தல!
அடடே சஞ்சய் அண்ணா, ரெண்டு விஷயத்தை பத்தியும் நம்ம கிட்ட மூச்சே காட்டலையே கிர்ர்ர்ர்ர்ர்....
இரண்டு நிகழ்விலும் கோவை பதிவர்கள் சார்பில் கலந்து கொண்டு அசத்தியதால் உங்களை நமது சங்கத்தின் வெளியுறவு துறை செயலராக நியமிக்கலாம் என்று செயலாளர் யோசனையில் இருக்கிறார். பப்பு எதிர்த்தாலும் வர்ஷாவின் ஆதரவு உங்களுக்குத்தான் :)
சஞ்சய். நாமக்கல் திட்டம் வெற்றியடைய வாழ்த்துகள். தொடருங்கள் உங்கள் பணியை. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
நல்லதொரு பகிர்வு சஞ்சய். நாங்க எல்லாம் ஒரு விழாவிலேதான் பங்கேற்றோம். ஆனா நீங்க இரண்டு விழாவில். இரெண்டையும் அட்சரம் பிசகாமல் எழுதி இருக்கீங்க. உங்களை சந்தித்ததில் இந்த அக்காவுக்கும் மிக்க மகிழ்ச்சி தம்பி. மறுபடியும் சந்திப்போம்!!
வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.
நிகழ்ச்சியை சிறப்பாக்கிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!
சஞ்சய்
உங்கள் பதிவை இன்று தான் பார்தேன், மனதில் பட்டதை எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
நாமக்கல் ஆட்சியர் திரு.சகாயம் குறித்தான பதிவு.
http://kaveriganesh.blogspot.com/2009/11/blog-post_27.html
நன்றி சஞ்சய்.
மகிழ்ச்சியான ச்ந்திப்புகள்.
எல்லாமே அசத்தல்.
அப்டேட் : எங்கள் பயிற்சியைப் பற்றிய தினமணி செய்தி.
hi dosti,you look handsome man,and nice too.still i remember your jokes.
உழைத்த அத்தனை பேருக்கும் என் சார்பாகவும் வாழ்த்துக்கள்.
Buddy,
It was so nice of you that providing instant comments in such a way to convert unusual things into casual environment. I enjoyed...I hope the crowd too... Thank you!!
நன்றி ரோஸ்விக்..
நல்லா சொல்லுங்க கார்த்திக் குசும்பனுக்கு :))
நன்றி கலகப் ப்ரியா :))
நன்றி குணசீலன்
நன்றி அருணாக்கா.
என்னிடம் தகவல் சொன்ன சில நட்களில் நிகழ்ச்சிகளுடன் அழைப்பு வந்துவிட்டது. அதான் சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும்.. எல்லாம் உங்க ஆசிகள் தானே.. :)
நன்றி சீனா சார்.. பூவுக்கு எதுக்கு விளம்பரம்? :))
இதில் நான் விரிவாக எழுதலை சார். மேலும் உங்களை நான் பாராட்ட மாட்டேன். அம்மா எழுதியதற்கு டப்பிங் குடுத்தது மட்டுமே நீங்கள். :))
நன்றி வால். உங்களை காயப் படுத்த எதுவும் சொல்லவில்லை. இனி அதுபோல் நடக்க மாட்டேன் என நீங்கள் சொன்னது சந்தோஷம்.. புரிதலுடன் தொடரும் நட்புக்கு நன்றி.
நன்றி செல்வா, என்ன சூழ்நிலை என்பதை தான் நேரில் சொல்லிவிட்டேனே. பப்பு எப்போதும் என் கட்சி. வர்ஷா தான் எதிரி. :) இன்னைக்கு வர்ஷா சமையலாம்.. அழைப்பு அனுப்பி இருக்கா.. வரிங்களா? ;)
நன்றி செந்தில்.. உங்களை சந்தித்தது எனக்கும் மிக்க மகிழ்ச்சி..
நன்றி ரம்யாக்கா.. விரைவில் சந்திப்போம்..
நன்றி துபாய் ராஜா
நன்றி ராமலக்ஷ்மியக்கா
நன்றி கணேஷ்
நன்றி சூர்யா மாம்ஸ். :)
நன்றி ஈசானந்தா வாத்யாரே.. நல்ல வேளை உங்கள் பின்னூட்டம் என்னை தொடர்ந்து நக்கலடிக்கும் என் பாசமிகு எதிரிகள் கண்ணில் படவில்லை.. :))
நன்றி ஊர்சுற்றி
நன்றி பழமைபேசி, உங்கள் பேச்சில் அனைவரும் மயங்கினோம்..
>>