December 15, 2009

Mini Meals v 1.12.09

கோவையில் உறங்குவது போல் 7 மணிக்கு அடிக்கும் அலாரத்தை அணைத்துவிட்டு 8 மணிவரை தூங்கும் வேலை எல்லாம் ஊரில் வேலைக்கு ஆகறதில்லை. மிகச் சரியாக 7 மணிக்கு 2 பேர் வராங்க. காதுகிட்ட வந்து கன்னாபின்னான்னு திட்றாங்க. விரட்டிவிட்டு மறுபடி தூங்க முயற்சிப்பேன். ம்ஹூம்.. நம்ம பருப்பெல்லாம் இவங்க கிட்ட வேகறதில்லை. மறுபடி வந்து கெட்ட வார்த்தைல திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. ஆனாலும் அவர்கள் திட்டுவது எனக்கு ரொம்ப இனிமையா இருக்கும். எங்கே கூடு கட்டி குடி இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் தினமும் காலையில் 7 மணிக்கு என் படுக்கை அறை ஜன்னலில் அமர்ந்து ட்விட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். எலேய் நானும் ட்விட்டர்தாம்லே என்று நான் சொன்னது அவர்களுக்கு கேட்டதா தெரியவில்லை. இவர்கள் பண்ணும் சில பல அழிச்சாட்டியங்களை எழுதினாலே ஒரு பதிவு தேறும். எப்டி எல்லாம் வெறுப்பேத்தறாங்கய்யா.. மைனா மைனாக் குருவி...

ஊருக்குப் போகும் போது கோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கும் கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க முன் பதிவு செய்துவிடுவதுண்டு. ஊரிலிருந்து வரும் போது முன் பதிவு செய்வதில்லை. சூழ்நிலை பொறுத்து வெஸ்ட் கோஸ்ட் அல்லது இண்டர்சிட்டியில் வருவேன் என்பதால் சரியாக திட்டமிட முடிவதில்லை. மேலும் என்னையும் சேர்த்து 5 பேருக்கு மேல் வரிசையில் இருந்து நான் பார்த்ததே இல்லை. அங்கே பயணச் சீட்டுப் பெறுவதும் சுலபம் தான். ஓபன் டிக்கெட் வாங்கிவிட்டு ரிசர்வேஷன் கோச்சில் வருதுவதும் சுகம் தான். சமயத்தில் 15 ரூபாய்க்கு ரசீது வாங்க வேண்டிய நிலையும் வரும். ஹ்ம்ம்..ஆல் இன் தி கேம். இந்த வாட்டி இண்டர்சிட்டியின் நேரத்திற்கு நான் ரயில் நிலையம் வந்தாலும் பல மணி நேரம் தாமதமாக வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரஸ், இண்டர்சிட்டி நேரத்திற்கு வந்தது. அதிலேயே ஏறிக் கொண்டேன். சிறிது தூரம் சென்றதும் ரயிலில் ஒரு பையன் சமோசா விற்றுக் கொண்டிருந்தான். எனக்கு வெங்காய சமோசா என்றால் ரொம்ப பிடிக்கும். விசாரித்த்தில் அதுவும் வெங்காய சமோசா தான். 10 ரூபாய்க்கு 3 என்றான். ஹிஹி.. யூ ஆர் ரைட். 6 வாங்கிக் கொண்டேன். உணவகங்களில் விற்பது போன்ற வெஜ் சமோசா எனக்குப் பிடிக்காது. பெரும்பாலான ரயில்களிலும் வெஜ் சமோசா தான் விற்பார்கள். அதனால் எப்போது ஈரோடு சென்றைடைவோம் எனக் காத்துக் கொண்டிருப்பேன். ஈரோடு ரயில் நிலையத்தில் சிறிய அளவு வெங்காய சமோசாக்கள் விற்பார்கள். அமிர்தமாய் இருக்கும். இப்போது ரயிலிலேயே கிடைத்ததில் சந்தோஷம். கோவை/இண்டர்சிட்டி எக்ஸ்ப்ரஸில் உணவகம் அழகாய் இருக்கும். பாதி கோச் சமையல் பகுதியாகவும் மிச்சம் பாதி ரெஸ்டாரண்ட் போன்ற தோற்றத்துடனும் இருக்கும். சமோசா சாப்பிட வரும் சேட்டுப் பெண்களை ரசித்துக் கொண்டே மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுப் பாருங்கள். சும்மாவாச்சும் பயணம் செய்யத் தோன்றும். மற்ற ரயில்களில் அப்படி இருப்பதில்லை.

விரைவில் வெளிநாடு செல்லவிருக்கும் ஒரு அண்ணா புதிய டெல் ஸ்டுடியோ 15 லேப்டாப் வாங்கி இருக்கிறார். ரயிலில் அதை இயக்கிப் பார்த்துக் கொண்டிருந்த போது அதிலிருந்த ஜானகி அம்மாவின் ஒரு பாடல் எனக்குத் தேவைப்பட்டது. அந்த லேப்டாப்பில் ப்ளூடூத் வசதி இருந்ததால் என் மொபைலுக்கு பாடலை மாற்றும் முயற்சியில் இருந்தேன். அப்போது என் மொபைலை அந்த லேப்டாப்புடன் இணைக்கும் செட்டிங்ஸ் முடிவுற்றதும் ஒரு பக்கம் தோன்றியது. அதில் மொபைல் ப்ளூடூத் பயன்படுத்தி இணைய இணைப்பு பெறவும் என்று ஒரு செய்தியும் அதன் முடிவில் Connect என்ற பட்டனும் இருந்தது. இதென்னாடா புதுசா இருக்கே என்று Connect பட்டனை அமுக்கியதும் டயலப் விண்டோ வந்தது. அதில் யூசர் நேம் , பாஸ்வேர்ட் எல்லாம் கேட்டதால் பொக்குன்னு போனாலும் எதுவும் உள்ளிடாமலே கனெக்ட் என்றேன். என்னக் கொடுமை ஆபிசர்ஸ்? இணைய இணைப்புக் கிடைத்துவிட்ட்டது. ஆனாலும் எதுவும் ப்ரவுஸ் பண்ண முடியலை. தானாகவே ஐபி முகவரியை எடுத்துக் கொள்ளும் வசதியை தேர்ந்தெடுத்து மீண்டும் முயற்சித்ததில், அடடே... டயலப் இணைப்பைவிட வேகமாக இணையத்தை பயன்படுத்த முடிந்தது. என் மொபைலில் இணைய வசதி இருந்த்தால் லேப்டாப்பிலும் இந்த வசதியை பெற முடிந்தது போலும். ஆனால் அது மொபைலுக்கான பாக்கெட் டேட்டா என்று தான் இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். டெஸ்க் டாப்பில் டேட்டா கார்ட் மூலம் முயற்சித்திருக்கிறேன். தோல்வி தான். ப்ளூ டூத் வழியாக மட்டும் சாத்தியமோ என்னவோ?.. கம்ப்யூட்டர் புலிகளுக்கு இது பழைய தகவலாக இருக்கலாம். என்னைப் போன்ற பாமரனுக்கு புதியதாய் இருந்தது. ப்ளூடூத் வசதியின் மூலம் என் மொபைலில் இருந்த படங்கள், விடியோக்கள் உள்ளிட்ட கோப்புகளையும் லேப்டாப்பிலேயே இயக்க முடிந்தது. எதையோ செய்யப் போய் எதையோ தெரிந்து கொண்டேன். ப்ளூ டூத் மூலம் என் மொபைலையும் அவர் லேப்டாப்பையும் இணைக்கும் போது திரையில் தெரிந்த Virus Found என்ற என் மொபைல் பெயரைப் பார்த்து அண்ணாத்த ரொம்பவே டரியல் ஆய்ட்டார். பின்ன புது லேப்டாப் ஆச்சே. :) சமீபத்தில் ஒரு கல்லூரியின் கருத்தரங்கில் , என் மொபைலிலிருந்து புகைப் படத்தை மாற்ற முயற்சிக்கும் போது Virus Found என்ற வார்த்தையைப் பார்த்து பிரபல காட்டிலாக்கா பதிவர் தன் மொபைலை ஆஃப் பண்ணிட்டார். :) டரியல் தொடர்கிறது...

சென்ற முறை ஊருக்கு சென்றிருந்த போது ஊர் சுற்றல் அதிகமாக இருந்ததால் வயல்வெளி விசிட் போகவில்லை, இந்த வாட்டியும் அதிக வேலைகள் இருந்தாலும் எப்படியும் வயலுக்கு செல்ல வேண்டும் என்று நேரம் ஒதுக்கி சென்றேன். பருத்தி , வழக்கத்தை விட நன்றாக இருந்தது. விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது பார்த்தாலே தெரிந்தது. வீட்டிற்கு வந்ததும் எங்கம்மா ஒரே பருத்தி புராணம் தான். வழக்கமாக பயிரிடும் மரபுவழி விதை இல்லாமல் மரபணு மாற்றப் பட்ட விதைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டதால் தெரியும் மாற்றம் இது. வழக்கம் போல் பூச்சிக் கொள்ளி மருந்தின் தேவையும் பெரிதாக இல்லையாம். மரபணு மாற்றப் பட்ட விதைகளை உபயோகிப்பதை நான் ஆதரிக்க இதுவும் ஒரு காரணம். மற்ற காரணங்களைத் தனியாக எழுதுவோம்.

சன் டிவி குழுமம் ஏராளமான திரைப் படங்களை ரிலிஸ் செய்வதால் தினம் தினம் அதன் காட்சிகளைப் போட்டு விளம்பரம் செய்கிறார்கள். கலைஞர் டிவியும் அவர்களுக்குப் போட்டியாக எதாவது செய்தாகணுமே. அதனால் தினம் தினம் கலைஞருக்கு நடக்கும் பாராட்டு விழாவிற்கான அழைப்புக் காட்சிகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சன் டிவி வெளியிடும் திரைப் படஙளைவிட கலைஞரின் பாராட்டு விழாக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. முதலமைச்சராக தான் செய்யும் கடமைகளுக்கெல்லாம் பாராட்டு விழா நடத்தும் ஒரே முதல்வர் நம்ம கலைஞர் ஐயா தான். நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற.. நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற.. பின்ன யாரு இவ்ளோ இலவசங்களைத் தருவாங்க.

என்னடா இது கூகுள் வேவிற்கு வந்த சோதனை. பதிவு போட்டு சொல்லியும் பெரிதாக வரவேற்பில்லை. பலருக்குக் கொடுத்தும் இன்னும் ஏராளமான அழைப்புகள் இருக்கு. வேண்டுவோர் பின்னூட்டம் அல்லது மெயிலில் தெரியப் படுத்துங்கள்.

மினி டிப்ஸ்
  • சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு க்ளாஸ் தண்ணீர்க் குடிப்பது ஜீரணத்திற்கு உதவுமாம்.
  • காலையில் தூங்கி எழுந்த உடன் 2 க்ளாஸ் தண்ணீர்க் குடித்தால் உடளுக்குள் இருக்கும் உறுப்புகள் சரியாக இயங்க உதவுமாம்.
  • இரவில் தூங்குவதற்கு முன் 1 க்ளாஸ் தண்ணீர்க் குடித்தால் நடு இரவில் இதயக் கோளாறு மற்றும் பக்கவாதம் வராமல் காக்குமாம்.
  • குளித்த உடன் 1 க்ளாஸ் தண்ணீர்க் குடித்தால் உயர் ரத்த அழுத்தம் குறையுமாம்.

27 comments:

Sri said...

// என் மொபைலில் இணைய வசதி இருந்த்தால் லேப்டாப்பிலும் இந்த வசதியை பெற முடிந்தது போலும்.

This is called tethering :)

Srini

Sri said...

btw.. good post...

சின்ன அம்மிணி said...

//Virus Found//

இது மாதிரி ட்ரெயின்ல யாரையோ டரியல் ஆக்குனதை பதிவா போட்டீங்கன்னு நினைக்கிறேன்.:)

நாடோடி இலக்கியன் said...

சூப்பர்,

நல்ல சுவாரஸ்யமான இடுகை. படிப்பதற்கும் வார்த்தைகளின் கோர்வை சரளமாய் இருந்தது.

நாடோடி இலக்கியன் said...

’பருத்திப் பூ’ படம் நல்லாயிருக்கு.பார்ப்பதற்கு வெண்டை பூவை போலிருக்கிறது.

நான் வெள்ளை நிறத்திலும்,பிங் நிறத்திலும்தான் பார்த்திருக்கேன்.

குசும்பன் said...

அயன் படத்தில் நண்டு சொல்வாரே பார்க்க சினேகா மாதிரி இருந்துக்கிட்டு செய்யுறது எல்லாம் நமிதாவேலைன்னு அதுமாதிரி திங்கிறது எல்லாம் அன் லிமிட்டட் மீல்ஸ் எழுதுறது மினி மீல்ஸ் உன்னை எல்லாம் மாமா..

ஹுஸைனம்மா said...

/எலேய் நானும் ட்விட்டர்தாம்லே//

உடனே, அது இப்படி ட்விட்டியிருக்குமே “எலேய், நான் உங்க தாத்தாவுக்கு தாத்தா காலத்துலயே ட்விட்டர்டா”ன்னு!!

மைனாவிடு தூது அனுப்புவது யாரோ?

//வெங்காய சமோசா//

ரெஸிப்பி கேட்டுச் சொல்ல முடியுமா?

//Virus Found //

நெம்பப் பழைய சோக்கு தம்பி.

//மரபணு மாற்றப் பட்ட விதை... காரணங்களைத் தனியாக எழுதுவோம்.//

அடுத்த புதிய விதை கண்டுபிடிப்புக்கு முன்னாடி எழுதிடுவீங்கன்னு நம்பறேன்.

//கூகுள் வேவிற்கு வந்த சோதனை.//

இப்படி கூவிக்கூவி விக்கிறீங்களே, பாவம், எனக்கு ஒண்ணு அனுப்புங்க. மெயில் அனுப்புறேன்.


//2 க்ளாஸ் தண்ணீர்க் குடித்தால்..//

எந்த பிராண்டுன்னு சொல்லவே இல்லையே... ஹலோ, மினரல் வாட்டரைச் சொன்னேன்.

குசும்பன் said...

//எலேய் நானும் ட்விட்டர்தாம்லே என்று நான் சொன்னது அவர்களுக்கு கேட்டதா தெரியவில்லை.//

மாமா நான் காங்கிரஸ்காரன் டா என்று சொல்லி பாரு, நாளையில் இருந்து உன் தெரு பக்கமே வராது.

குசும்பன் said...

//என் மொபைலில் இணைய வசதி இருந்த்தால் லேப்டாப்பிலும் இந்த வசதியை பெற முடிந்தது போலும்.//

இதை சொல்றதுக்கு இவ்வளோ பெரிய பத்தி!

எல்லோரும் கேட்டுக்குங்கப்பா, சஞ்சய் இன்டெர்நெட் வசதி உடைய மெபைல் வெச்சிருக்கார்...

சஞ்சய் இன்டெர்நெட் வசதி உடைய மெபைல் வெச்சிருக்கார்...

சஞ்சய் இன்டெர்நெட் வசதி உடைய மெபைல் வெச்சிருக்கார்...

சொல்லிட்டேன் மாமா!

குசும்பன் said...

//சமோசா சாப்பிட வரும் சேட்டுப் பெண்களை ரசித்துக் கொண்டே மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுப் பாருங்கள்.//

எப்ப சேட்டு பெண்ணாக சோனியா அகர்வாலை காட்டினாங்களோ அன்னையோட சேட்டு பெண்ணை ரசிக்கும் ஆசை போய்விட்டது மாமா!

க‌ரிச‌ல்கார‌ன் said...

//திரையில் தெரிந்த Virus Found என்ற என் மொபைல் பெயரைப் பார்த்து அண்ணாத்த ரொம்பவே டரியல் ஆய்ட்டார்//
கோய‌ம்புத்தூர் லொள்ளு

Karthik said...

நல்ல பதிவு. முந்தா நாள் வந்த எஸ் எம் எஸை மொழிபெயர்ப்பு பண்ணினா அது டிப்ஸா? :))

//காலையில் 7 மணிக்கு என் படுக்கை அறை ஜன்னலில் அமர்ந்து ட்விட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

:))))

RAMYA said...

நல்ல இடுகை. படிக்க சுவாரஸ்யம் குறையாமல் இருந்தது.

குசும்பனின் பின்னூட்டம் சிரிப்பை வரவழைத்தது:)

செடியும் அதன் மலரும் அருமை:)

Princess said...

bluetooth வழியா சிஸ்டம்ல இணையம் பார்க்கலாமே! i know i know i know ;)

unnoda narration romba nalla iruku..

-பதுமை.

Mitr Friend - Bhushavali said...

Good topic - "Mini Meals".. Hee hee... Good variety..
Yes, every morning I have the same experience with crows. If I forget to keep them food, they know how to remind me.. :)

Looking into the EYES!!! at Savoir-Faire
My Little Black Dress at Fashion Pancahe
Mallikarjunar Koil at My Travelogue

Mitr Friend - Bhushavali said...
This comment has been removed by the author.
mayil said...

ஒரு நாள் இல்ல ஒரு நாள் அந்த போன் சுடல...பாருங்க .. எடுத்து குசும்பனுக்கு கிப்ட் பண்ணிடுவேன்..

Heam said...

//என்னடா இது கூகுள் வேவிற்கு வந்த சோதனை. பதிவு போட்டு சொல்லியும் பெரிதாக வரவேற்பில்லை. பலருக்குக் கொடுத்தும் இன்னும் ஏராளமான அழைப்புகள் இருக்கு. வேண்டுவோர் பின்னூட்டம் அல்லது மெயிலில் தெரியப் படுத்துங்கள்.//
sanjai உங்கள்ளுக்கு எத்தனை அழைப்புகள் வேண்டும் ? gwave is not that much userfriendly to use and its mostly useful for the team collaborations. so will take time to reach normal users
//எப்ப சேட்டு பெண்ணாக சோனியா அகர்வாலை காட்டினாங்களோ அன்னையோட சேட்டு பெண்ணை ரசிக்கும் ஆசை போய்விட்டது மாமா!// நானும் தானுங்க குசும்பன்

கலகலப்ரியா said...

ivlo persaa irukke... naalaikku padichukkaren.. =))

SanjaiGandhi™ said...

நன்றி ஸ்ரீ. அந்த தொழில்நுட்பம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.

சின்ன அம்மிணி அக்கா,
2 பெண்களை டரியல் ஆக்க ஆரம்பிச்சது தான். இன்னும் தொடருது. பதிவு நான் போடலை. அண்ணாச்சிப் போட்டார்.

நன்றி நாடோடியாரே..
மூன்று வண்ணத்திலுமே பருத்திப் பூ இருக்கும்.

குசும்பன், பப்ளிக்.. பப்ளிக்.. :)

ஹூசைனம்மா நன்றி.
ரெசிபி தெரியாது. கேட்டு சொல்றேன். பழைய ஜோக்கா இருக்கலாம். ஆனால் நான் சொன்னது ஜோக் இல்லை. நிஜ அனுபவம். வடகரைவேலன் அண்ணாச்சி, லதானந்த் உட்பட பல அனுபவசாலிகள் இருக்காங்க. :)
//எந்த பிராண்டுன்னு சொல்லவே இல்லையே... ஹலோ, மினரல் வாட்டரைச் சொன்னேன்.//

கொஞ்சம் உஷாராவே இருந்துக்கிறேன். :))

SanjaiGandhi™ said...

நன்றி கரிசல்காரன்.. உங்க குசும்பை விடவா? குசும்பனுக்கே போட்டியா வரிங்களே.. :)

கார்த்திக்,
எலேய் டம்ரி, டிப்ஸ் மொழிபெயர்ப்பு தான்.. சொந்தமா சொல்றதுக்கு நான் என்ன டாக்டர் விஜய்யா? :)

நன்றி ரம்யாக்கா.. :)

ப்ரின்சஸ் @ பதுமை @ ஐஸ், நன்றி மேடம்.
இந்த நாட்ல தான் இருக்கியா?

நன்றி புஷாவலி..
சாப்பாடு குடுக்கலைனா தலைலையே கொத்துமா? பேஷன் சைட்க்கு அதை கூட மாடலாக்கலாமே.. :)

மயில் விஜி, அதென்ன குசும்பனுக்கு கிஃப்ட்? என்னை நக்கலடிக்கிறதாலயா? நீங்க இவ்ளோ நல்லவங்களா? :(

ஹேமந்த் நன்றி.. கரெக்ட் தான்.. இப்போதைக்கு தனி நபர் உபயோகத்திற்கு ஏற்றதல்ல.

லகலகப்ரியா, படிச்சி முடிச்சிட்டிங்களா? :)

சந்தனமுல்லை said...

மினி மீல்ஸ் ..நல்ல சுவை! :-) நானும் உங்க வீட்டு குட்டி பசங்கன்னு நினைச்சேன்...பக்கத்துவீட்டுலே இருக்கற கூண்டு குருவிங்கதான் எங்களையும் எழுப்பிக்கிட்டு இருந்ததுங்க...இப்போல்லாம் அதையும் தாண்டி தூங்க பழகியாச்சு! :-))

எல்லோரும் மரபணு விதை டவுன் டவுன்னு சொன்னா நீங்க ஆதரிக்கிறேன்னு சொல்றீங்களே...அவ்வ்!! :-)

SanjaiGandhi™ said...

சந்தனமுல்லை ஆச்சி,
அந்த போட்டோவில் இருக்கும் மைனாக்கள் தான் அவர்கள். பிடி விதைகளை எதிர்ப்பவர்கள் பல விஷயங்களை யோசிப்பதில்லை. மண்ணின் தரம் இதனால் புதிதாக கெட்டுவிடப் போவதில்லை. இயற்கை அல்லது வேதி உரங்கள் இடாமல் விளையும் பயிர் இப்போது எதுவுமே இல்லை. மண்ணின் தரம் மாறாமல் இருந்தால் எதற்கு உரமிடனும்? ஆக, பிடி விதைகளால் புதிதாக எதும் ஆபத்தில்லை. மேலும் குறைந்த செலவில் அதிக விளைச்சல். தாவரத்தில் ஏற்படு மாற்றம் மனித மரபணுக்களில் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிடும்? எந்த ஆய்வுக் கூடத்தில் மரத்தை வைத்து மனிதனுக்கான மருந்துகளை சோதிக்கிறார்கள்?. கறிக் கோழிகளால் ஏற்படும் பாதிப்புக் கூட பிடி விதைகளால் ஏற்படாது.

ஹுஸைனம்மா said...

//பழைய ஜோக்கா இருக்கலாம். ஆனால் நான் சொன்னது ஜோக் இல்லை. நிஜ அனுபவம். //

நிஜம்னு தெரியும். கொஞ்சம் பழைய டிரிக்னு சொல்ல வந்தேன்.

அன்புடன் அருணா said...

ட்ரேயின்லெ சாப்பிட்டு,சாப்பிட்டு டரியலாகி வந்தா...மினி மீல்ஸா? தேவைதான்!

☀நான் ஆதவன்☀ said...

:)

அப்படியே நமக்கும் ஒரு அழைப்பு விடுறது....
aadhavanssk@gmail.com

SanjaiGandhi™ said...

ஹுசைனம்மா, பழைய ட்ரிக் தான். வேடிக்கையாக இருப்பதால் நான் இன்னும் பயன்படுத்தறேன்.

அருணாக்கா, ட்ரெயினில் சாப்பிடும் மெனுக்கள் பெயர் சொன்னாலே மெகா மீல்ஸாகிவிடும். :)

நன்றி ஆதவன். அனுப்பிவிட்டென்.

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget