December 30, 2009

Mini Meals v 2.12.09

பொழுது போக்கிற்கு பதிவுகள் எழுதுபவர்கள் கூட , பதிவுக்காக குறைந்த பட்சம் கூட தகவலுக்காக உழைப்பதில்லை என சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். விகடன் மாதிரி காசுக்கு விற்கும் பத்திரிக்கைகள் கூட அவ்வாறு தான் இருக்கின்றன. சில வாரங்கள் முன்பு ஜூனியர் விகடனில் “ 300 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஐநா சபை மாநாட்டில் திருமாவளவனும் பங்கேற்றதாக” எழுதி இருந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட புதிய நாடுகளை கண்டுபிடித்து அதை விகடன் ரகசியமாக வைத்திருக்கிறது போல. சமீபத்தில் ஆனந்தவிகடனில் உளவாளி என்னும் இணைப்பு இதழ் வழங்கினார்கள். அதில் ரஷ்யாவின் உளவு நிறுவனம் 1953ல் தோற்றுவிக்கப் பட்டதாவும் இரண்டாம் உலகப் போரின் அதன் பங்கு முக்கியமானது எனவும் எழுதி இருந்தார்கள். விகடனுக்கு மட்டும் சிறப்புப் போராய், இரண்டாம் உலகப் போர் 1953க்கு பிறகு தான் நடைபெற்றதோ?. என்ன அக்கப்போரய்யா இது?

மீபத்தில் கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி விளக்குகள் எரியாததால் சிறிது நேரம் போட்டி பாதிக்கப் பட்டது. மொத்தமிருந்த 4 விளக்கு கோபுரங்களில் 3 கோபுரங்கள் எரியவில்லையாம். அதன் பிறகு டில்லி கோட்லா மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, மோசமான பிட்ச் தயாரிப்பால் ரத்து செய்யப் பட்டது. ஒரு சர்வதேசப் போட்டி மைதானத்தின் பிட்ச் கூட கவனிக்காமல் எப்படி விளையாட அனுமத்தித்தார்களோ? லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொழுத்துக் கிடக்கும் கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகளின் மெத்தனமே காரணம். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கு காமென்வெல்த் போட்டிகளில் இன்னும் எவ்வளவு சொதப்ப போகிறார்களோ? இந்த லட்சனத்தில் ஒலிம்பிக் போட்டி நடத்த முயற்சிக்கிறார்களாம். இந்திய விளையாட்டுத் துறைக்கு எப்போ விடிவுகாலம் வருமோ?

பாவம் பாரதிய ஜனதா கட்சி. எற்கனவே இந்திய மக்களால் புறக்கணிக்கப் பட்டுவிட்டது. அதோடு நில்லாமல் உள்கட்சி பிரச்சனைகளால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது. அந்த கட்சிக்கு யார் தலைவர் என்று அதன் நிறுவனர்களில் ஒருவரான அத்வானிக்கே தெரியவில்லை. அவரையும் கைபுள்ள ஆக்கிட்டாங்க. ஆர்எஸ்எஸ்-ன் மோகன் பகவத் தான் இப்போது பஜகவின் சுப்ரீம் லீடராக செயல்படுகிறார். இப்படி துக்கம் தொண்டையை அடைக்க அரசியல் செய்யும் அவர்கள் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு சிபுசோரனிடம் ஐக்கியமாகி இருக்கிறார்கள். சிபுசோரனைப் பற்றி தெரிந்தும் அவருடன் கூட்டு வைக்க அசாத்திய துணிச்சல் வேண்டும் தான் என்றாலும் இது சொந்த செலவில் சூனியமும் கூட. ஏந்தான் இப்படி ஆப்பைத் தேடிப் போய் அமர்கிறார்களோ?

காவல் துறை உயரதிகாரி ரத்தோர் என்பவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான ருச்சிகா என்னும் சிறுமி, அதன் பின் நடந்த சம்பவங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி 1993ல் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காரணமான ரத்தோருக்கு 6 மாதம் சிறதண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரத்தோரைவிட இந்தத் தீர்ப்பளித்த நீதிபதி தான் மிகப் பெரும் குற்றவாளி. இந்தக் கொடுமை இவர் மகளுக்கோ பேத்திக்கோ நடந்திருந்தால்( யாருக்கும் நடக்கக் கூடாத கொடுமை) இப்படித் தான் தீர்ப்பளித்திருப்பாரா?. நீதிபதிகளை விமர்சிக்கக் கூடாதாம். அதெல்லாம் அந்தக் காலம். நீதிபதிகள் நீதி அரசர்களாக மதிக்கப் பட்டார்கள். இப்போதைய நீதிபதிகள் செய்யும் முறைகேடுகள் பற்றி தொடர்ந்து செய்திகள் வருகின்றன. அப்படிப் பட்டவர்களை விமர்சிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இந்த வழக்கில் ரத்தோருக்கு ஆஜரானவர் ராம்ஜெத்மலானி. தன் வழக்காடும் அறிவை காசுக்காக எப்படி விற்கிறார் பாருங்க. ருச்சிகாவை பள்ளியில் இருந்து நீக்கியதற்காக அந்த பள்ளியின் மீது இப்போது வழக்குத் பதிவு செய்யப் பட்டுள்ளது. ரத்தோர் சொல்லி தான் நீக்கியதாக அந்த பள்ளி விளக்கம் சொல்கிறது. என்னக் கொடுமை.

ஒகேனக்கல்
மிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குறிப்பிடத்தக்கது. தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் (விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது) அருகில் உள்ளது. தர்மபுரி மாவட்ட மக்கள் இதை காவேரி என்று தான் அழைக்கிறோம். இந்தியாவின் நயாகரா என்றும் அழைக்கப் படுகிறது. காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் இடம் தான் ஒகேனக்கல். பேரிரைச்சலுடன் ஐந்தருவிகளில் இருந்து விழும் நீரைப் பார்க்க அழகாய் இருக்கும். பரிசலில் பயணம் செல்லலாம். மீன் உணவுப் பிரியர்களுக்கு ஏற்ற இடம். பல வகையான மீன்களை மிகவும் சுவையாக சமைத்துக் கொடுக்கிறார்கள். ஆயில் மசாஜ் செய்வதற்கு புகழ்பெற்ற இடம். கொஞ்சம் நேரம் ஒதுக்கி தருமபுரியில் உள்ள அதியமான் கோட்டத்தையும் பார்வை இடலாம்.

தருமபுரியிலிருந்து 45கிமீ , சேலத்திலிருந்து 113கிமீ மற்றும் பெங்களூரில் இருந்து 133கிமீ தொலைவில் உள்ளது.

ஒகேனக்கல்லில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தங்கலாம். 6 படுக்கைகள் கொண்ட ஃபேமிலி ரூம் 1000 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கிறது . இருவர் தங்கும் அறைகளும் உள்ளன. தனியார் ஹோட்டல்களும் உள்ளன. ஒருநாள் பயணமாக செல்பவர்கள் தருமபுரியில் தங்கலாம். ஏராளமான ஹோட்டல்கள் இருக்கின்றன.

தொடர்புக்கு :
Hotel TamilNadu : 04342 - 2564447

பயணப் பதிவுகளுக்கான என் குருவின் ஒகேனக்கல் சுற்றுலா அனுபவம் படிக்க..
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

31 comments:

கலையரசன் said...

உங்க ஊருல காலையிலையே மீல்ஸ் போடுவீங்களா??
ஏதாவது டிபன் போட்டா சாப்பிடலாம்!!

உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தலைவரே..

வந்தியத்தேவன் said...

விகடன் செய்திகள் நம்பகத் தன்மையை என்றைக்கோ இழந்துவிட்டது. ஈழம் சம்பந்தப்பட்ட செய்திகளில் பெரும்பாலும் வருவது ராஜேஸ்குமார் நாவல்கள் வகைக் கற்பனையே.

டில்லி மைதானம் என்னத்தைச் சொல்வது. அதிகாரிகளிடம் சிரத்தை இல்லையென்பதையே இது காட்டுகின்றது.

ஆளுனர் திவாரி மேட்டரையும் போட்டிருக்கலாம்.

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ELIYAVAN said...

What sort of judgement do we follow? Any developed country should render the judgement within a maximum period of 6 months. In India, sometimes we get the judgement result after 70 years. The same case for Ruchika.

குடுகுடுப்பை said...

ஏந்தான் இப்படி ஆப்பைத் தேடிப் போய் அமர்கிறார்களோ?//

அரசியலில் எல்லாரும் ஆப்புல உட்காந்திருக்காங்க.தேடுனாலும் தேடாட்டியும் அதுதானே கிடைக்கும்.

குடுகுடுப்பை said...

வந்தியத்தேவன் said...
விகடன் செய்திகள் நம்பகத் தன்மையை என்றைக்கோ இழந்துவிட்டது. ஈழம் சம்பந்தப்பட்ட செய்திகளில் பெரும்பாலும் வருவது ராஜேஸ்குமார் நாவல்கள் வகைக் கற்பனையே. //

ஈழம் செய்திகளை இப்படி பொய் சொல்லி காசு பார்ப்பது என்ன தருமமோ, ஒருவேளை நக்கீரனுக்கு போட்டியாக பொய் சொல்வார்கள் போல.

SanjaiGandhi™ said...

கலை, இது ஃபுல் மீல் இல்லை.. மினி மீல் :)) அதும் இல்லாம நாம எல்லாம் கிராமத்தானுங்க.. நம்ம ஊட்ல 3 வேளையும் சோறு தானே.. :)

வந்தி, விகடன் ஈழம் பத்தி எழுதறது எதும் நம்பற மாதிரி இருக்காது. இலங்கை இணையதளங்களில் வரும் செய்திகளை கற்பனை கலந்து அடிச்சி விடுவாங்க. இதுல ஜோக் என்னான்னா, இலங்கை அரசியல்வாதிகளுடன் பேசினோம், இலங்கைப் பத்திரிக்கையாளர்களிடம் பேசினோம்னு புரூடா விடுவாங்க. :))

ருச்சிகா மரணம், ஒரு பெண்ணின் வாழ்க்கையே வீணாக்கப் பட்ட விவகாரம் மற்றும் நீதித்துறையின் அலட்சியம் தொடர்பானது. திவாரி மேட்டர் எனக்கு எந்த அதிர்ச்சியும் தரலை வந்தி. ஆளுனர் மாளிகை என்பதே காலாவதி ஆன, மக்களால் ஒதுக்கப் பட்ட வயோதிகர்களின் ஓய்வு இல்லம். இதில் திவாரி மாட்டிக் கொண்டார்.. இன்னும் எவ்வளவோ?. மேலும் திவாரியுடன் இருந்தவர்கள் தொழில்முறை விபச்சாரம் செய்யும் பெண்கள் தான் என்றாலும் திவாரியின் செயல் கேவலமானது. நிச்சயம் தண்டிக்க வேண்டும்.

குடுகுடுப்பை said...

தொடர்புக்கு :
Hotel TamilNadu : 04342 - 2564447//

தெரியாம உம்ம போன் நம்பர்னு போன் பண்ணிட்டேன், ”மேலிடத்து கட்டுப்படறேன்னு” நீர் பேசுவீர்னு பாத்தா ஏதோ இங்கிலீஸ்ல பேசுனாங்க புரியல வெச்சிட்டேன்பா.

Rajakamal said...

பல தகவல்களுடன் கூடிய சமுதாய பொறுப்புள்ள நல்ல பதிவு சஞ்சய்.

குடுகுடுப்பை said...

எனக்கு ஒரு சந்தேகம் மதுகோடா கட்சிக்கும் ஓட்டுப்போட்டாங்களாண்ணே.

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல தகவல்களைப் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் சஞ்சய்

Karthikeyan G said...

intresting...

//நாம எல்லாம் கிராமத்தானுங்க.. நம்ம ஊட்ல 3 வேளையும் சோறு தானே.// Same pinch,, :-)

butterfly Surya said...

Mini meals .. Good Taste.

Hearty wishes for New Year..

சின்ன அம்மிணி said...

காமன்வெல்த் விளையாட்டு இந்தியாவுல நடக்குமா,

Britain has pulled out.

ப்ரியா said...

//அந்த கட்சிக்கு யார் தலைவர் என்று அதன் நிறுவனர்களில் ஒருவரான அத்வானிக்கே தெரியவில்லை. அவரையும் கைபுள்ள ஆக்கிட்டாங்க//
அது சரி சஞ்சய். அப்படியே தமிழக காங்கிரஸ்ல எத்தனை உள்கட்சி இருக்கு? அதுக்கெல்லாம் தலைவர்கள் ஆராரு? கைப்புள்ள யாரு? ன்னு அடுத்த மினி மீல்ஸ் கூட வேணாம், ஒரு 'உப்புமா' பதிவு போடுங்களேன். நேயர் விருப்பம்.

Happy new year to you and your family.

ஜெரி ஈசானந்தா. said...

ஹாய் சஞ்சய்,மினி மீல்ஸ் டக்கர் .

கலகலப்ரியா said...

Happy new year..!

mini meals saptach..! :p

பரிசல்காரன் said...

புத்தாண்டு வாழ்த்துகள் மாப்ஸ்.

ஒரு மேட்டருக்கும் இன்னொரு மேட்டருக்கும் இடைவெளி கரெக்டா இருக்கு, ஆனா வித்தியாசம் தெரியல. முதல் வார்த்தை BOLD, அல்லது முதல் வரி வேற கலர்னு மாத்திருக்கலாமே பாஸு..

கும்க்கி said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மிஸ்டர் கந்தி..

மீல்ஸ்ஸுக்குள் போனால் நற்குணம் பாதிக்கப்பட்டுவிடும் வேண்டாம்..

sriram said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சஞ்செய்..
மீல்ஸ்ல எல்லாமே அருமை..
ஆனா சிபு சோரன் கூட சேருவதைப் பத்தி பேச காங்கிரஸ் கட்சியை சப்போர்ட் பண்ணும் யாருக்கும் அருகதை கிடையாது. அரெஸ்ட் வாரண்ட் இருந்த போதும் அந்த ஆளை டெல்லியில் உலவ விட்டவர்கள் யாருன்னு ஊருக்கே தெரியும்.
பாஜக சோரனோடு கூட்டு வைத்ததை சரியென்று சொல்லவில்லை, கருணாநிதி, ஜெயலலிதா, குமாரசாமி போன்றவர்களோடு கூட்டு சேர (எவ்வளவு அடி வாங்கினாலும்) காங்கிரஸும், பாஜக வும் போட்டி போடும், இவிங்க திருந்தவே மாட்டாங்க..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

SanjaiGandhi™ said...

லேட்டஸ்ட் அப்டேட் : தற்போதைய ஜூனியர் விகடன் பதிப்பில், தம்பிதுரையை தருமபுரி எம்பி என்று எழுதி இருக்கிறார்கள். அப்போ கரூருக்கு தாமரைசெல்வன் எம்பியா?. அடப்பாவிகளா. வாங்கற காசுக்கு கொஞ்சம் கூடவா உழைக்கக் கூடாது? :(

☀நான் ஆதவன்☀ said...

ஹேப்பி நியூ இயர் தலைவரே

குடுகுடுப்பை said...

லேட்டஸ்ட் அப்டேட்.
தொடர்புக்கு :
Hotel TamilNadu : 04342 - 2564447//
//

இந்த நம்பரை மீண்டும் தொடர்பு கொண்டபோது யாரோ ஒரு 85 வயது ஆள் எல்லா ரூமையும் புக் பண்ணிட்டாராம்.

Sammy said...

//காவல் துறை உயரதிகாரி ரத்தோர் என்பவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான ருச்சிகா என்னும் சிறுமி//
அவருடைய மனைவி தாங்க அவருடைய வக்கீல்..... "கல்லானாலும் புருஷன் ..." ராம் ஜெத்மாலினி இந்த வழக்கை முன்னாடி நடதினாரானு சரியா தெரியலை.

// ஒரு துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு சிபுசோரனிடம் ஐக்கியமாகி இருக்கிறார்கள்//
துணை முதல்வர் ஆனா தான் இப்பெல்லாம் அடுத்த முதல்வர் ஆக முடியுது, உதாரணம் கர்நாடகம், 'தமிழகம்?' :-)

//தொடர்புக்கு : Hotel TamilNadu : 04342 - 2564447 //
பாஸ் இந்த நம்பர் கால் பண்ணா சஞ்சய் நண்பரா, ரூம் கொடுக்கவே முடியாதுன்னு சொல்றாங்க..:-)

Mitr Friend - Bhushavali said...

//more than 300 countries// - I had a heary laugh Sanjai.. :D And am still giggling!!!

//Rathore// - Wish he's hung to death!!! He's a sick fellow...

//Hogenakkal// - Reminds me of my own post.. And the lovely comment argument.. :D

Interview at Speakbindas - My Travelogue
Me and my Mannequin!!! - Fashion Panache

SanjaiGandhi™ said...

புஷா, ஒகேனக்கல் பற்றி எழுத நினைத்தவுடன் உங்க பதிவு தான் நினைவுக்கு வந்தது. அப்போது இணைப்பு குடுக்க நினைத்தேன். எழுதும் போது மறந்து விட்டேன். இப்போது இணைப்பு குடுத்துட்டேன். நன்றி குருவே. :)

http://flutteringandwandering.blogspot.com/2009/08/hogenakkal-falls-dharmapuri-tamil-nadu.html

அன்புடன்-மணிகண்டன் said...

அரசியல், விளையாட்டு, சமூகப் பார்வை, சுற்றுலா என்று மினி மீல்ஸ் நல்ல ருசி.. இனி பசிக்கும்போதெல்லாம் வந்துடறேன்.. :)

லதானந்த் said...

9442417689 கூப்பிட முடியுமா?

..:: Mãstän ::.. said...

எங்க பாஸு போய்ட்டீங்க??? வாங்க வந்து புதுசா எதாவது போடுங்க... :D

SanjaiGandhi™ said...

கலையரசன்
வந்தியதேவன்
எளியவன்
குடுகுடுப்பை
ராஜகமல்
ஆரூரான்
கார்த்திகேயன்
சூர்யா
சின்னாம்மிணி அக்கா
ப்ரியா கதிரவன்
ஜெரி ஈசானந்தா
கல்கலப்ரியா
பரிசல்காரன்
கும்கி
ஸ்ரீராம்
சாமி
புஷாவளி
அன்புடன் மணிகண்டன்
லதானந்த்
மஸ்தான்

அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

Indian said...

//வாங்கற காசுக்கு கொஞ்சம் கூடவா உழைக்கக் கூடாது?//

Old saying: One get monkeys when they pay peanuts.

JV & AV depends on student-reporters and former student-reporters. don't think they have journalism degrees.

Would a student-reporter priorizie his class assignments or adequate research for his article?

It helps both ways. Free service for vikatan. Previleges of 'Vikatan connection' for students.

Indian said...

//அடுத்த ஆண்டு நடைபெற இருக்கு காமென்வெல்த் போட்டிகளில் இன்னும் எவ்வளவு சொதப்ப போகிறார்களோ? //

Mark my words.

There are every signs to suggest our conducting the CWG going to be ridiculed by everyone. In the end, it is our stupid ego that is going to get a sound beating.

The preparations are pathetic so far. Reams and reams of articles written already on our under preparedness. The so called sports administrators are busy swindling the CWG fund. Post game, they'll pretend that they did their "best" for the success of the event. Despite their best effort, things went beyond their control. That is going to be their shameless defense.

I say this with heavy heart. In my opinion, the event is going to be sure-fire disaster.

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget