அமெரிக்க ஆதரவு ஊடகங்களின் தில்லுமுல்லுகள்

சன் குழும தலைவர் கலாநிதி மாறனிடம் கேட்டால் ராபர்ட் முர்டோக் தான் தன் குரு என சொல்வார். ஏனெனில் முர்டோக் தான் தன் நாட்டின் அரசியலை தான் நினைத்த படி ஆட்டிவைப்பவர். இங்கே கலாநிதிக்கும் அதே நோக்கம் தானே. இவர்களாவது பரவாயில்லை. தங்கள் நாட்டின் அரசியலில் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனால் அமெரிக்க ஊடகங்களின் அரசியல் ஆதிக்க தில்லுமுல்லுக்ள எல்லைக் கடந்து விரிவடைந்திருக்கின்றன. சமீபத்தில உதாரணம் ஈரான் தேர்தல்.

சமீபத்தில் நடந்த ஈரான் அதிபர் தேர்தலில் முகமது அகமதினிஜாத் மற்றும் ஹுசெய்ன் மவ்சாவி ஆகியோர் போட்டியிட்டனர். அகமதினிஜாத் அமெரிக்காவின் பரம எதிரி. மவ்சாவி அமெரிக்க ஆதரவாளர். வாக்கு எண்ணிக்கை அன்று ஃபேஸ்புக், ட்விட்ட்ர் மற்றும் யூட்யூப் ஆகியவை தங்கள் ஆதரவு வேட்பாளர் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவித்து, பின் அதிகாரப் பூர்வ முடிவுகள் வெளியாக தாமதானவுடன் , முறைகேடுகள் நடப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்திருக்கின்றன. அவைகளை அப்படியே காப்பி அடித்து உலகம் முழுதும் உள்ள அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன்.

பிபிசி
தேர்தல் முடியும் வரை மவ்சாவியின் பேரணி மற்றும் பொதுக்கூட்ட செய்திகளை மட்டுமே ஒளிபரப்பிய பிபிசி அஹமதினிஜாத் செய்திகளை இருட்டடிப்பு செய்திருக்கிறது. இதன் உச்சகட்டமாக, ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற அஹமதினிஜாதின் பேரணி படத்தை மவ்சாவியின் பேரணி என்று தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறது. அதில் அஹமதியின் படத்தை வெட்டிவிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். பின்னர் இதன் முழுமையான படத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வெளியிட்டுவிட, பிபிசி மன்னிப்புக் கேட்டு “ இரண்டு தரப்பும் பேரணி நடத்தினார்கள்” என தலைப்பை மாற்றி இருக்கிறது.


[எல் ஏ டைம்சின் முழுமையான படம்]

இதோட விடாம, ட்விட்டர்ல பொழுதுபோகாம மக்கள் போடற செய்தியை வைத்து மவ்சாவி பேரணிக்கு 3 லட்சம் பேர் கலந்துக் கொண்டதாக எழுதி இருக்கிறது ( இதைத் தான் நம்பத்தகுந்த சோர்ஸ்னு ஊடக மக்கள் சொல்றாங்களோ? ) . அதில் சில ஆயிரம் பேர் மட்டுமே கலந்துக் கொண்டார்களாம்.

சிஎன்என்
ஜூன் 24ஆம் தேதி பாஹரெஸ்தான் சதுக்கத்தில் நடந்த பேரணியின் போது பாதுகாவல் படையினரால் தாக்கப் பட்டு படுகொலைகள் நடந்ததாக சி என் என் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், அதே பேரணியின் விடியோ காட்சிகளை மற்றொரு சேனல் ஒளிபரப்பியதில் ஒரு சிறு தடியடி சம்பவம் கூட நடைபெறவில்லை என்று தெரிந்திருக்கிறது. பின் சி என் என் , அந்த செய்திக்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறது. சி என் என் அந்த செய்தி வெளியிட காரணம் யார் தெரியுமா? ட்விட்டெரில் வெளியான செய்தி. :))

ஈரானைப் பற்றிய செய்திகளை பரப்பிக் கொண்டிருந்தது குறிப்பிட்ட 3 ஐடிகளில் இருந்து தான். அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் ஈரானுக்கு எதிராகவும். அந்த 3 ஐடிகளை பற்றி ஆராய்ந்ததில் அதில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ மற்றும் இஸ்ரேல் உளவு நிறுவங்களுக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. stopahmadi@twitter.com , iranriggedelect@twitter.com, change_for_iran@twitter.com ஆகிய 3 ஐடிக்களில் இருந்து தான் செய்திகள் பரப்பப் பட்டுக் கொண்டிருந்திருக்கின்றன். இந்த மூன்றும் இஸ்ரேலில் இருந்து வெளியாகும் ஜெருசலேம் போஸ்ட் இதழுக்கு சொந்தமானவை. முதலில் இந்த 3 ஐடிகளையும் தங்கள் ப்ளாகில் வெளியிட்டுவிட்டு பின் அம்பலமானதும் அதை அழித்திருக்கிறார்கள். இந்த 3 அடிகளும் ஒரே நாளில் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது.
ட்விட்டர் முகவரிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதை அதன் தலைவர் இவான் வில்லியம்சும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

எப்படி எல்லாம் சித்து வேலை பண்றாய்ங்கய்யா.. அவ்வ்வ்வ்வ்...
இந்த சதி வேலைகள் அனைத்தையும் மீறி அஹமதினிஜாத் வெற்றிபெற்றுவிட்டார். தனக்கு அடங்கிப் போகாத ஒருத்தருக்கு எதிரா அமெரிக்கா சகல தில்லுமுல்லுகளையும் கூச்சமே இல்லாம அறங்கேற்றி இருக்கு. பிபிசி சி என் என் போன்ற செய்தி நிறுவங்களின் மீது உலகம் முழுவதும் பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பிரத்யேக செய்தி என்ற பெயரில் தகவல்களை திரித்து சொல்வதென்பது உலகம் முழுதும் உள்ள செய்தி நிறுவனங்கள் செய்யும் வேலை தான். தமிழில் “ நமது சிறப்பு நிருபர்” என்ற பெயரில் எழுதுவது போல். ஆனால் அனைவரும் கவனிக்கும் அனைவரும் கவர் செய்யும் ஒரு பொதுவான நிகழ்வுகளில் தில்லுமுல்லு செய்வதென்பது அறவே கூச்சமற்ற செயல். பிபிசி வெளியிட்ட புகப் படம் அலல்து அந்த பேரணியின் செய்தி அனைவரிடமும் இருக்கும். அதிலும் தில்லுமுல்லு செய்கிறார்கள் என்றால் அவர்கள் தரும் பிற செய்தியில் என்ன நம்பகத் தன்மை இருக்கும்?.

நன்றி : திசண்டேஇண்டியன் & கூகுள்.

Read more...

நண்பர் சக்திவேலுடன் ஒரு மெயில்க்காணல்


வலையுலகின் சுனாமியாய் மையம் கொண்டு அனைத்து திசைகளிலும் சுழற்றி அடிக்கும் சூறாவளிப் புயல் அண்ணன் சக்திவேல் அவர்களைப் பற்றி அறிமுகம் செய்வது அவருக்கு அவமானமாய் தான் இருக்கும். அவரைத் தெரியாத யாருக்கும் பதிவுலகில் இருக்க தகுதியே இல்லை. அபப்டி தகுதி இல்லாதவர்கள் தெரிந்துக் கொண்டால் என்ன தெரிந்துக் கொள்ளவில்லை என்றால் என்ன?. பூவுக்கே வாசமா? சக்திவேலுக்கே விளம்பரமா என்பது போல் நேரடியாக பேட்டிக்குள் சென்றுவிடுவோம். வலையுலகம் சார்பில் நான் கேட்ட கேள்விகளுக்கு சக்திவேல் அவர்கள் அளித்த பதில்.

1. உங்களைப் பற்றி சுருக்கமாக சில வரிகள் சொல்லுங்க சக்திவேல்?

முதலில் என்னை பேட்டி எடுக்க வந்தமைக்காக உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்,"உப்பு" விளையும் பூமியிலிருந்து வந்தவன், சென்னையில் வளர்ந்தவன்,
என் உயிருக்கும் மேலாக நேசிக்கும் சினிமாவின் மடியில் வாழ்பவன்...இன்னும் திருமணமாகாத பேச்சுலர் பார்ட்டி நான்.

2. நீங்கள் வலைப்பதிவு எழுத வந்த அனுபவம் பற்றி சொல்லுங்க?

யாரும் எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. நானாக எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன்.என் மனதுக்குள் வெளியே சொல்ல முடியாத பல விஷயங்களை எழுதுவதற்கு வலைப்பதிவு ஒரு பெரிய வரப்பிரசாதம். அது மட்டுமில்லாமல் என் எழுத்து திறமைகளை வெளிப்படுத்துவதற்கு வலைப்பதிவு ஒரு உற்ற நண்பனாக அமைகிறது.

3. இதுவரை நீங்கள் எழுதிய எந்தப் பதிவையாவது திரும்ப படிக்கும் போது “ அடடா.. இதை மொக்கையா எழுதிட்டோமே” என்று நினைத்ததுண்டா?

மொக்கை என்று சொல்ல முடியாது, "பதிவுத்தளத்தில் எனது முதல் சிறுகதை: குமரேசனின் மகன்!" என்ற பதிவு எனக்கு முழு திருப்தியை தரவில்லை. ஆனால் பின்னூட்டம் இட்ட நண்பர்கள் இது முதல் முயற்சி தானே பரவாயில்லை என்றார்கள்.

4.உங்கள் எழுத்தைப் பற்றி நீங்கள் எப்படி விமர்சிப்பீர்கள்?

உண்மைகளை எழுதுவதற்கு ஏன்? உன் எழுத்து இன்னும் பயப்படுகிறது? என்ற கேள்வியை என் மனசாட்சி எனக்குள் அடிக்கடி கேட்டுக் கொள்ளும்.
ஏனென்றால் எல்லா இடங்களிலும், எல்லோருக்கும் உண்மைகள் கசக்கத்தான் செய்கின்றன.

5.இதுவரை உங்கள் எழுத்திற்கு எது போன்ற பாராட்டுகள் அல்லது அங்கீகாரங்கள் கிடைத்திருக்கின்றன? அதில் நீங்கள் உயர்வாய் நினைக்கும் அங்கீகாரம்/பாராட்டு எது?

மிக குறுகிய காலத்தில் நான் எழுதிய பல இடுகைகள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது, என்னை கிள்ளுக்கீரையாக நினைத்து பழகும் என் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட எனது பதிவுகளை படித்து விட்டு உனக்குள் இவ்வளவு எழுத்து திறமையா?என்றெல்லாம் வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.

"தமிழ் 10" திரட்டி தளத்தில் "சிறப்பு பரிசு பெரும் பதிவர்" பகுதியில் முதல் பதிவராக என்னை தேர்ந்தெடுத்து பணப்பரிசு வழங்கியிருக்கிறார்கள். நான் இது குறித்து tamil10 நிர்வாகத்திடம், "என்னை விட பல மூத்த பதிவர்கள் இங்கே இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது என்னை தேர்ந்தெடுத்து பரிசு வழங்க காரணம் என்ன?" என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் எங்களுடைய திரட்டியில் உங்கள் பதிவுகளை படிக்க வரும் வாசகர்கள் தான் அதிகம், மேலும் பொதுவாக பதிவை படிக்க வரும் வாசகர்கள் பதிவின் தலைப்பை பார்த்து விட்டுத் தான் அந்த பதிவுக்குள்ளேயே செல்வார்கள் ஆனால் உங்கள் பதிவுகளைப் பொறுத்தவரையில் அதையெல்லாம் பார்க்காமலேயே படிக்கிறார்கள் என்றார்கள். எனக்கு இந்த தகவல் உண்மையிலேயே இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
உயர்வாக நினைக்கும் "அங்கீகாரம்" என்று சொன்னால் நான் எழுதிய

"என்னுடன் பழகிய மக்களில் 80 சதவீதம் பேர் இப்போது உயிருடன் இல்லை? - ஒரு நடிகரின் ஈழ சோகம்"

என்ற பதிவை கனடாவில் உள்ள ஈழத்தமிழர்கள் அவர்களுடைய தனி ஈழம் போராட்டங்களின் போது பிரதி எடுத்து (பிட் நோட்டிஷாக ) அங்குள்ள மக்களிடம் விநியோகம் செய்தார்கள் என்ற தகவலை அங்கு உள்ள தமிழ் நண்பர் ஒருவர் என்னிடம் கூறிய போது உண்மையிலேயே நான் ஆனந்த கண்ணீர் வடித்தேன், ஒரு அடிமைப்படுத்தப்படும் இனத்தின் விடியலுக்காக என் எழுத்தும் ஒருவகையில் பயன்படுத்தப் பட்டிருப்பதை நான் என் எழுத்துக்கு கிடைத்த மிக உயர்வான அங்கீகாரமாகவே நினைக்கிறேன். இந்த தகவலை அறியத் தந்த அந்த கனடா தமிழ் நண்பருக்கும் இந்த வேளையில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

6. தமிழ்மணம் திரட்டியின் பரிந்துரை விஷயத்தில் நடந்த தில்லுமுள்ளுகளை கண்டு அனைவரும் ஒதுங்கி இருந்த நிலையில் உங்களுக்கு மட்டும் அதைத் தட்டிக் கேட்கும் துணிவு எப்படி வந்தது?

இல்லை, நான் பல மாதங்களாக கவனித்து வந்த நிலையில் தான் அந்த பதிவை எழுத நேர்ந்தது.இந்த விஷயத்தில் துணிவு என்று சொல்வதை விட உண்மை ஜெயிக்க வேண்டும்,நேர்மை இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை,இப்படி நான் கேட்டதால் என்னுடைய பதிவுகளை "தமிழ்மணம்" புறக்கணித்தாலும் (இதுவரை புறக்கணிக்கவில்லை.) அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். நல்ல விஷயங்கள் எங்கு வேண்டுமானாலும் கவனிக்கப்படும். "தமிழ்மணம்" மட்டுமல்ல வேறு எங்கு தவறுகள் நடந்தாலும் நான் கேட்பேன்.

7. இந்த விஷயத்தில் உங்களுக்கு கிடைத்த பலன் என்ன ? நஷ்டம் என்ன?

தொடர்ந்து இரண்டு தடவைகள் எனது பதிவுகள் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அதில் எனக்கு துளியும் சந்தோஷம் இல்லை, எனென்றால் அந்த பதிவுகளும் பரிந்துரைக்கு தகுதியே இல்லாத பதிவுகள் தான்.அதன் மூலம் அது ஒரு குறிப்பிட்ட கும்பலின் கையில் சிக்கியிருக்கிறது என்ற உண்மை வெளிவந்தது. என்னுடைய இந்த பதிவை படித்து விட்டு பொறுக்க முடியாத பல "பிரபல பதிவர்களும்,மூத்த பதிவர்களும்" ஒன்றாக சேர்ந்து கொண்டு பின்னூட்டங்கள் வாயிலாக என்னை கேலியும், கிண்டலும் செய்தார்கள்.

கொஞ்சம் மனசு வருத்தப்பட்டாலும் உண்மையை வெளியே கொண்டு வந்த திருப்தி எனக்கு இருந்தது.இந்த விஷயத்தில் என்னை கேலியும்,கிண்டலும் செய்தவர்களைப் நினைத்து பார்த்தபோது எனக்கு சிரிப்பு தான் வந்தது.அதே நேரம் பாவமாகவும் நினைக்கத் தோன்றியது. உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத கோழைகள் அவர்கள்.

8.இதற்காக ஏதும் மிரட்டல்கள் வந்தனவா? அப்படி வந்தால் எப்படி எதிர்கொள்வீர்கள்?

மிரட்டல்கள் வரவில்லை, பிரபல பதிவர் "உண்மைத்தமிழன்" அவர்கள் என்னை தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கமாகப் பேசினார்.மிரட்டல்கள் வரும் அளவுக்கு இதை நான் ஒரு பெரிய விஷயமாக எனக்குப் படவில்லை.

9.இந்தப் பதிவை எழுதிய பின் உங்களை வலைப்பதிவில் இருந்து துரத்த அந்த பரிந்துரை கும்பல் முயல்வதாக பேசப்படுகிறதே. எப்படி சமாளிப்பீர்கள்?

அதை பற்றி நான் கொஞ்சமும் வருத்தப்படப் போவதில்லை,என் எழுத்துக்கென்று உள்ள வாசகர்கள் மட்டும் எனக்கு போதும், ஜால்ரா கும்பலின் பரிந்துரை எனக்கு அவசியமில்லை.அப்படி செய்தாலும் நட்டம் அவர்களுக்குத்தான், எனக்கு இல்லை.

10.அந்த பரிந்துரை கும்பலில் அட்டகாசத்தை ஒழிக்க ஏதும் திட்டம் இருக்கிறதா?

இல்லை, அசிங்கத்தை கண்டு ஒதுங்கிப்போகவே நினைக்கிறேன்.

11.நீங்கள் அம்பலப் படுத்திய பிறகு உங்களுக்கு பயந்து தமிழ்மணம் உங்கள்
பதிவுகளையும் பரிந்துரை பட்டியலில் கொண்டு வந்தது. அதே போல் தமிழர்ஸ் தளம் ஆங்கிலத்தில் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தீர்கள். அதற்கு ஏதும் பலன் இருக்கா? மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க யோசித்து இருக்கிங்க?


இல்லை."தமிழர்ஸ்" தளத்தின் முகப்பு பக்கம் இப்போதும் ஆங்கிலத்தில் தான் திறக்கிறது.இதிலிருந்தே தெரிகிறது அவர்கள் பதிவர்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்று.மேலும் என்னுடைய user name மற்றும் password இரண்டையும் முடக்கி வைத்து விட்டார்கள். இனி நான் தமிழர்ஸ் தளத்தில் எந்த பதிவையும் இணைக்க முடியாது என்று நினைக்கிறேன், வேண்டுமென்றால் வேறு புதிய பெயரில் இணைக்கலாம், ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. ஒரு பதிவரை இழப்பதால் யாருக்கு நட்டம்.

12.உங்களின் சினிமா விமர்சனப் பதிவுகள் பிரமிக்க வைக்கின்றன. இந்த திறமை உங்களுக்கு எப்படி கிடைத்தது?

இதில் கிடைப்பது என்று ஒன்றுமில்லை. இரும்பு ஊற கல்லும் தேயும் என்று சொல்வார்கள். அது போலத்தான் எழுத எழுத என்னுடைய எழுத்துகள் கூர்ர்மையாகியிருக்கலாம்.அல்லது நல்ல சினிமாக்கள் வர வேண்டும் என்ற கோபம் என் எழுத்தில் வெளிப்பட்டிருக்கலாம். அது உங்களை பிரமிக்க வைத்திருக்கலாம்.

13. சசிகுமார் போன்ற தொடமுடியாத உயரத்தில் இருக்கும் சினிமா ஜாம்பவான்களை எல்லாம் அனாயசமாக சந்தித்துப் புகைப்படமும் எடுத்துக் கொண்டு அசத்துகிறீர்கள். இது போல் உங்களுக்கு வேறு எந்த சினிமாகாரர்களை நன்றாகத் தெரியும்?

நிறைய பேரை தெரியும். ஆனால் தேவையன்றி அவர்கள் மூலமான விளம்பரத்தை நான் எப்போதுமே விரும்புவதில்லை. அதனால் மனிக்கவும்.

14. கூகுள் ஆட்சென்ஸ் தமிழைப் புறக்கணிப்பதைப் பற்றி ரத்தம் கொதிக்க எழுதி இருந்தீர்கள்.அதற்கு கூகுளிடமிருந்து ஏதும் மெயில் வந்ததா? அந்த பதிவை எழுதும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

எந்த மெயிலும் வரவில்லை. தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது எல்லா இடங்களிலும் நடக்கிறது என்ற உண்மை புலப்பட்டது.

15.வலையுலகில் தற்போது பலராலும் எழுதப் படுவது உங்களுக்குத் திருப்தியாக இருக்கிறதா? அல்லது எரிச்சலைத் தருகிறதா?

திருப்தியையும், எரிச்சலையும் ஒரு சேரத் தருகிறது.

16.உங்களின் தந்தையர் தின சிறப்புப் பதிவுக்கு இணையாக இதுவரை யாராவது எழுதி இருக்கிறார்களா?

எனக்கு தெரியவில்லை. அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

17. புதிதாக எழுத வருபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

உங்கள் எழுத்தை யாருக்காகவும் சமரசம் செய்து கொள்ள வேண்டாம்.மனதில் பட்டதை தைரியமாக எழுதுங்கள்,

18. மூத்த அல்லது பிரபலப் பதிவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

என்னைப் பொருத்தவரையில் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும்,மரியாதையும் வைத்திருக்கும் அதே நேரத்தில் புதியவர்களையும் அரவணைத்து செல்வதற்கு அவர்கள் முன் வர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்!

ஆனால் பெரும்பாலான பிரபல,மற்றும் மூத்த பதிவர்கள் இந்த விஷயத்தில் குழந்தைகள் போல நடந்து கொள்கிறார்கள். பொதுவாகவே வயதானவர்களுக்கு தாங்கள் தங்களுடைய குடும்பத்தால் ஒதுக்கப்படுகிறோமோ? என்ற பயம் இருக்கும். அந்த பயம் கோபமாக மாறி அதனால் அவர்கள் எல்லா விஷயங்களிலும் குழந்தைகள் போல அடம் பிடிப்பார்கள், சண்டை போடுவார்கள். அது போலத்தான் பிரபல, மற்றும் மூத்த பதிவர்களும்.

புதியவர்கள் பதிவுலகத்துக்குள் வந்தவுடன் அவர்களை துரத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள், எங்கே, புதியவர்களால் தங்களுடைய இடம் பறிபோய் விடுமோ? என்ற பயம் காரணமாக இருக்கலாம். இந்த பயம் முதலில் அவர்களிடம் மாற வேண்டும்.நல்ல எழுத்துகளுக்கு எப்போதுமே சிம்மாசனம் உண்டு என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.எத்தனை பிரபல பதிவர்கள் மற்றும் மூத்த பதிவர்கள் புதியவர்களை வரவேற்கிறார்கள் சொல்லுங்கள். இந்த விஷயத்தில் அவர்கள் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளைப் போன்றவர்கள்.

19. மிகச் சிறந்த இடுகைகளுக்குக் கூட கும்மி அடிக்கும் சில பதிவர்களைப் பற்றிய கருத்தென்ன?

நல்ல கேள்வி, என்னைப் பொறுத்தவரையில் ஆபாச வார்த்தைகளை உபயோகப்படுத்தும் அனானி கும்பலுக்கும், இவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இப்படிப்பட்டவர்கள் பதிவுலகத்தை விட்டு வெளியேறுவது நல்லது.கைத்தட்டல் ஓசைகளில் உண்மைகள் வெளியே தெரியாமல் போய்விடும் என்று தப்புக் கணக்கு போடும் சுயநலவாதிகள் இவர்கள்.

20.பொதுவாக பிரபலப் பதிவர்கள் என்றால், அவர்களுக்கு வாசகர் கடிதம் வந்திருக்க வேண்டும் என்பது வலையுலக விதி. உங்களுக்கு அது போல் ஏராளமான கடிதம் வந்திருக்குமல்லவா? அதில் நீங்கள் மிகவும் ரசித்த வாசகர் கடிதம் எது? ஏன்?

நிறைய வந்திருக்கிறது.குறிப்பாக "குசும்பன்" என்றொரு பதிவர் எழுதும் பின்னூட்டங்களை நான் வெகுவாக ரசித்தேன்.அவருடைய பெயரைப் போலவே எழுத்திலும் ரொம்ப குசும்பு.

21.உண்மையிலேயே இது போல் வாசகர் கடிதம் வருகிறதா?. அல்லது தோராயமாக பேர் போட்டு வெளியிடுகிறார்களா? ஏனென்றால் அதில் அனுப்புபவர்களின் இ-மெயில் ஐடியை யாருமே குறிப்பிடுவதில்லை. அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் மனசாட்சிப்படி நடந்துக் கொள்வீர்கள் என்பதால் கேட்டேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்?

இதில் மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை. சிலபேர், தங்கள் முகத்தை மறைத்துக் கொள்ள விரும்பலாம். அதே நேரம் தனக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று நினைத்திருக்கலாம். உண்மையிலேயே வாசகர் கடிதம் வருகிறது.

22.உங்கள் பதிவை படித்து பின்னூட்டம் போடுவதைத் தவிர வேறு என்ன வழிகளில் வாசகர்கள் பாராட்டுகிறார்கள்?

நேரிலும், தொலைபேசியிலும் பாராட்டுகிறார்கள், சில பதிவுகளைப் பற்றி விவாதம் செய்கிறார்கள். எனது தந்தையர் தின பதிவை படித்து விட்டு ஒரு நண்பர் என்னை நேரின் சந்தித்து ரொம்பவும் மனம் நெகிழ்ந்து பேசினார். உடனே என்னுடைய வலைத்தள முகவரியையும் அவரது குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொண்டார். இது போன்ற நிகழ்வுகள் என்னை இன்னும் சிறப்பாக எழுத தூண்டுகிறது.

24.சினிமாத் துறையில் உங்களின் அனுபவம் என்ன?

சினிமா என்னுடைய வாழ்க்கையில் ஒன்று என்பதால் இங்கே இந்த தகவலை நான் சொல்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.

25. பதிவு எழுத வந்தோமா போனோமான்னு இல்லாம எதுனா அரசியல் பண்ணி சண்டைப் போட்டுக்கும் பதிவர்களைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?

மலிவான விளம்பரம் தேடுபவர்கள்.

26. பதிவுக்கு பின்னூட்டமும் ஓட்டும் போட்டே ஆகனுமா? அதுக்குத் தான் எழுத வாராங்களா? சிலர் பதிவுக்கு பின்னூட்டம் போட்டால் ப்ளாக் ஹேக் பண்ணிடுவாங்க. தெரியுமா? அந்த பயத்தில் நான் கூட சிலருக்கு பின்னூட்டம் போடுவதில்லை. இதற்கு என்ன தீர்வு?

பின்னூட்டம் போட்டால் ஓட்டும் போட வேண்டிய அவசியம் இல்லை, அதே நேரம் அந்த பதிவு தரமானதாக இருந்தால் ஒட்டு போடுவது சரியானதாகும். ப்ளாக் ஹேக் பற்றி சொல்வதானால் எல்லாவற்றுக்கும் ஆரம்பம் என்று இருந்தால் அதற்கு முடிவும் உண்டு அதே போல் தான் இதற்கு தீர்வும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் பக்குவப்பட்ட நண்பர்கள் இது போன்ற கேவலமான காரியங்களை செய்ய மாட்டார்கள்.

27. "ப்ளாக்ஸ்பாட்" தளமாக இருந்த உங்கள் வலைப்பூவை திடீரென்று "டாட்.காமாக" மாற்றிய காரணம் என்ன?

படிக்க வருபர்கள் முகவரியை ஞாபகம் வைத்து தளத்துக்குள் எளிதாக வர வேண்டும் என்கிற நல்ல எண்ணம் தானே தவிர வேறொன்றுமில்லை.

28.கடைசிக் கேள்வி.. உங்கள் லட்சியம் என்ன? அதில் எவ்வளவு தூரம் கடந்திருக்கிறீர்கள்?

மன்னிக்க வேண்டும், எனது லட்சியம் சினிமா சம்பந்தப்பட்டது மற்றும் சொந்த விஷயம் என்பதால் இந்த இடத்திலும் அதை சொல்ல விரும்பவில்லை, ஆனால் எனது லட்சியப் பாதையில் மெதுவாக அடியெடுத்து வைத்து முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். கடவுளின் ஆசீர்வாதத்தில் கண்டிப்பாக என் லட்சியம் நிறைவேறும். அதன் மூலம் வரும் பேர், புகழ் எல்லாமும் இறைவனுக்கே.

Read more...

சில்லுனு ஒரு சுற்றுலா - பதிவர்களுடன் நெல்லியம்பதி - 2

சில்லுனு ஒரு பயணம் தொடர்கிறது....

சென்ற பதிவில் விடுதிக்கு சென்று இரவு உணவிற்கு செல்வது வரை சொன்னேன்.. திரும்பவும் கொஞ்சம் பின்னோக்கி போவோம்..

கொஞ்ச நேரம் சிவக்குமரன் தன் மகனின் சேட்டைகளையும் குழைந்தைகளுக்கே உரிய செயல்பாடுகளையும் விவரித்துக் கொண்டிருந்தார். ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தோம். காரில் பன்பலைவரிசையில் பழய இளையராஜா பாடல் ஒன்றைக் கேட்டதும் என்னைத் தவிர்த்த நால்வருக்கும் உள்ள கவிதை ரசிகர்கள் உறக்கம் கலைத்தனர். ஆளுக்கொரு தகவல்கள் சொல்லி கலக்கினார்கள். அம்மாடி.. எவ்ளோ விவரம் தெரிஞ்சி வச்சிருக்காங்க. குறிப்பாக நாடோடி இலக்கியனுக்கு பாடல்வர்களில் பெரும் புலமை இருக்கிறது. பாடல்களில் சிறந்த வரிகளை எளிமையாக கவிதையாக வாசித்துக் கொண்டிருந்தார். சில புரியாத வார்த்தைகளுக்கு வேலன் அண்ணாச்சியிடம் அர்த்தம் கேட்டுக் கொண்டார்.

பின்னர் வெயிலான், சிவக்குமரன் மற்றும் அண்ணாச்சி ஆகியோர் பல பாடல்களில் இருந்தும் பல மிகச் சிறந்த வரிகளை வாசித்துக் காட்டினார்கள். திரை இசைப் பாடல்களை இசைக்காகவும் மெட்டுகளுக்காகவும் மட்டுமே ரசிக்கும் எனக்கு இவர்களின் பேச்சுகள் எதையோ இழந்ததைப் போன்ற உணர்வைத் தந்தது. என்னால் எந்த வரிகளையும் வாசித்துக் காட்ட முடியவில்லை. எனக்கு பாடல் வரிகள் புரிவதும் இல்லை.. அவற்றைக் கேட்டுக் கொள்ள நான் ஆர்வம் காட்டுவதுமில்லை. இனி வரிகளை கவனிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

கவிதைகளை நாம் வாசிப்பதை விட அதில் ஆர்வம் கொண்ட மற்றவர் வாசித்துக் காட்டும் போது அதன் மீதான ஈர்ப்பும் அந்த கவிதையின் அழகும் அதிகமாகிறது. நாடோடி இலக்கியன் மற்றும் வேலன் அண்ணாச்சி இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நா.முத்துகுமார், வைரமுத்து , வாலி ஆகியோரின் வரிகளை வாசித்துக் காட்டினார்கள். பாடல்களை கேட்ட மாத்திரத்தில் அதை எழுதியவர், பாடியவர்கள், வெளிவந்த ஆண்டு என அனைத்து விவரங்களையும் விரல் இடுக்கில் வைத்திருக்கிறார்கள். சபாஷ்.

இப்போது இரவு உணவுக்கு வருவோம். உணவை விடுதி அறைக்கே கொண்டுவந்து கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் எங்களுக்கு வெளியே அமர்ந்து சாப்பிடுவதிலே விருப்பம் இருந்தது. அதற்கும் அழகாக ஏற்பாடு செய்து தந்தார்கள். அடர் மேக மூட்டங்களுக்கு இடையில் லேசான மழையில் நனைந்துக் கொண்டும் சாப்பிடத் தயாரானோம். சூடான சப்பாத்தியும் ,மீன் குழம்பும் ,சைவக் குருமாவும்( எனக்காக) ,காளிபிளவர் சில்லியும் ,மாமிச வருவலும், நறுக்கிய தக்காளி, வெள்ளரி, வெங்காயத் துண்டுகளும் அந்த நேர குளிருக்கு இதமாக இருந்தது.

எங்களுக்குப் பரிமாறிய அந்த நண்பர் ரித்தேஷுக்கு( இப்போவாச்சும் கரெக்டா சொல்றேனா அண்ணாச்சி?) நன்றி. நாங்கள் கேட்டதை எல்லாம் அழகான புன்னைகையுடன் கொண்டுவந்து கொடுத்தார். முடிந்த அளவு நல்ல தமிழில் பேசினார். சாப்பிட்டுக் கொண்டே கேலியும் கிண்டலுமாய் பேசிக் கொண்டிருந்தோம். பழங்காலத் தமிழுக்கும் தற்காலத் தமிழுக்கும் இருக்கும் இடைவெளி பற்றி கேட்ட போது ஆளாளுக்கு ஒரு விளக்கம் கொடுத்தார்கள். நாடோடி இலக்கியன் அவர் பதிவில் சொன்னது போல் எனக்கு எவர் பதிலிலும் திருப்தி ஏற்படவில்லை. இதற்காக சேர சோழ பாண்டியர்கள் , திருமலை நாயக்கரெல்லாம் வந்து போனார்கள். பின் தன் எழுத்துப் பிழை மற்றும் சந்திப் பிழை பற்றியெல்லாம் நாடோடி வருத்தப் பட அதற்கு தீர்வாய் தன் வலைப்பக்கத்தில் இருக்கும் ஒரு தமிழ் அகராதியை பயன்படுத்திக் கொள்ளும்படி சொன்னார்.

நாடோடி இலக்கியன் பற்றிய சுவாரஸ்யமான தகவல் சொல்வதாக சொல்லி இருந்தேனே.. இவருடைய அண்ணனும் பிரபலப் பதிவர் தான். ஆனால் இவருக்கே சில மாதங்கள் முன்பு தான் தெரியுமாம். அதற்கு முன் வரை தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களைப் போன்றே இவரும் எழுதி வருகிறாரே என்று சக பதிவர் என்ற வகையில் இவரும் கும்மி அடித்திருக்கிறார். பல மாதங்களுக்கு பின் சில மாதங்களுக்கு முன் தான் ஒரு இனிமையான நாளில் அந்தப் பிரபலப் பதிவரிடம் அவரைப் பற்றிக் கேட்க, அவர் தன் அண்ணன் எனத் தெரிய வந்ததாம். பிறகு கும்மியை நிறுத்தி இருக்கிறார்.

இவருக்குக் குடிப் பழக்கம் கிடையாது. என்னை மாதிரியே ரொம்ப நல்லவர். சில நாட்களுக்கு முன் திருப்பூர் வலைப் பதிவர்கள் சந்திப்பில்( ஒன்னா சேர்ந்து டீ குடிச்சாலும் சந்திப்புன்னா, நானும், அண்ணாச்சியும், செல்வேந்திரனும் 125468 முறையாக சமீபத்தில் கூட கிருஷ்ணா மெஸ்ஸில் பெசரட்டு தோசையும் வடகறியும் கம்பங்கூழும் சாப்பிட்டோம்) இவர் தண்ணி அடித்தார் என்பது போல் நம்ம குணச்சித்திரம் பரிசலார் பதிவில் எழுதிவைக்க ... ஆஹா தம்பிக்கே இந்தப் பழக்கம் இருக்கா?.. அப்போ நாமளும் புத்தகத்தை திறந்து பொதுவில் வைத்துவிட வேண்டியது தான் உண்மைக் கதைகளை அண்ணன் பதிவர் எழுதிக் கொண்டிருக்கிறாராம்.சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் மேலும் மழையில் நனைந்தவாறே திண்ணது செறிக்க என்னதென்றே தெரியாமல் எதெதோ பேசிக் கொண்டிருந்தோம். பின் அறைக்கு சென்றோம்.

அறைக்கு சென்றதும் படுக்கையில் பொத்தென விழுந்தேன். உறக்கம் உச்சந்தலைக்கு ஏறியது. மற்றவர்களுக்கு வரவில்லை போலும். அண்ணாச்சியும் சிவக்குமரனும் வெயிலானும் உறக்கத்திற்கு பதில் சீட்டுக் கட்டை துணைக்கு அழைத்துக் கொண்டார்கள். ஆளுக்கு 100 ரூபாய் பந்தயம் கட்டி விளையாட்டைத் துவக்கினார்கள். டிவியில் டாம் & ஜெர்ரியை ரசித்துக் கொண்டிருந்த நாடோடியிடம் நன்றாக எழுத வருமா என்று அந்த மூவர் கும்பலிடமிருந்து ஒரு குரல் வந்தது. மனிதர் ஆர்வமாய் நன்றாக எழுதுவேனே என குதூகலித்தார். அந்தப் பக்கமிருந்து அவசரமாய் ஒரு பதில் “ அப்போ, பாயிண்டு எழுத நீங்க தான் வேண்டும் வாங்க”. நான் அரைத் தூக்கத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். என் மொபைலில் மிச்சமிருந்த சார்ஜ் தீரும்வரை பாடல்கள் கேட்டுக் கொண்டே கச்சேரியை களைகட்டிக் கொண்டிருந்தார்கள். சிவக்குமரன் தோல்வியில் வெளியேறி பின் ரீஜாய்ன் முறையில் இணைந்து வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார் என்பது அவர்களின் தெளிவான பேச்சுகளில் எனக்கு அறைகுறையாகக் கேட்டது. பின்னர் அவர்களும் ஆட்டத்தை முடித்துக் கொண்டார்கள்.அனைவரும் உறங்கிவிட்டோம்... காலைல எழுந்து மற்றவற்றை சொல்கிறேன்.. குட் நைட்..

அடுத்து.. திகில் பயணம் ஆரம்பம்...

Read more...

சில்லுனு ஒரு சுற்றுலா - பதிவர்களுடன் நெல்லியம்பதி - 1

சில அவசர/தவிர்க்க முடியாத ஆணி புடுங்கல்களுக்காக வெளியே சென்றுவிட்டு வந்து பார்த்தால் வடகரை வேலன் அண்ணாச்சியின் கார் என் வீட்டின் முன் நின்றிருந்தது. நான் வருவதாக சொல்லி இருந்த இடத்திற்கு எனக்கு முன்பே சென்று காத்திருந்திருக்கிறார்கள். வழக்கமாக வண்டியை நிறுத்தும் பேருந்துநிலைய இருசக்கர வாகனம் நிறுத்தும் முதல் தளத்தில் நிறுத்திவிட்டு தமிழ்நாடு ஹோட்டல் முன் சென்றால் ஒருவரையும் காணோம். இம்சை விட்டது என்று எஸ்கேப் ஆகிட்டாங்க போல என்று நினைத்துக் கொண்டே அண்ணாச்சிக்கு போன் பண்ணேன். எடுக்கவே இல்லை. சரி.. நம்மள வச்சி இங்கயே காமெடியா ஆரம்பிச்சிட்டாங்கன்னு புரிஞ்சிடிச்சி. சுத்தி சுத்தி பார்க்கிறேன். எங்கும் அவர்களை காணோம். சில நிமிட தேடலுக்குப் பிறகு தொட்டுவிடும் அருகில் ஒரு காரில் நால்வர் சிரிப்பு விண்ணை முட்டியது.

அண்ணாச்சிக் காராக இருந்தால் கண்டு பிடிச்சி இருப்பேன். இது வேறு ஒருவருடையது. அதனால் தான் கண்டுபிடிக்க முடியலை. இதுக்குப் போய் இப்டியா சிரிப்பாங்க.. ( எப்புடீஈஈ)

நால்வர்: வடகரை வேலன் அண்ணாச்சி, வெயிலான், சிவக்குமரன் மற்றும் நாடோடி இலக்கியன். நாடோடி இலக்கியனை இப்போ தான் முதலில் சந்திக்கிறேன். என்னை வச்சி காமெடி செய்து முடிந்தவுடன் நாடோடி இலக்கியனிடம் நானே அறிமுகப் படுத்திக் கொள்கிறேன். பின்ன.. எவ்ளோ நேரம் தான் அவரும் குத்துமதிப்பாவே என்கிட்ட பேசுவார்? :)

[நாடோடி இலக்கியன் , சிவக்குமரன்]
பிறகு எதோ பேசும் போது சிவக்குமரன் எதோ சொன்னார். அதன் பிறகு ரொம்ப நேரம் அவர் தான் கைப்புள்ள. உக்கடம் தாண்டி கண்ணனில் வெயிலான் பல சரக்குகள் வாங்கிக் கொண்டார். கோவை நகர் எல்லையில் காருக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டோம். அதன் அருகில் இருந்த குன்றின் மீது மேகம் சூழ்ந்திருந்த அழகை ரசித்துக் கொண்டோம்.
[6 மணிக்கு கோவை நகர எல்லையில் கண் கொள்ளாக் காட்சி]
அப்போ நர்சிம் அண்ணாச்சிக்கு போன் பண்ணார். சிறிது நேரம் பேசிவிட்டு போனை என்னிடம் கொடுத்தார். நானும் எதார்த்தமா பேசினேன். பிறகு தான் தெரிந்தது. நர்சிம், நாடோடி இலக்கியனிடம் போனைக் கொடுக்க சொன்னாராம்.

அண்ணாச்சி இந்த தருணத்திற்கு எத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தாரோ.. நர்சிமிடம் பேசப் போய் அவர் எனக்கு ஒரு புது பட்டம் சூட்டியது தான் மிச்சம். எங்கும் அரசியல்.. எதிலும் அரசியல்... ஆளவிடுங்கய்யா சாமிகளா..

பின்னர் பயணம் தொடர்ந்தது. சிறிது நேரம் வலையுலக் அரசியல். சிறிது நேரம் மட்டுமே. பின் வலையுலமே மறக்கப் பட்டது. காரில் பன்பலைவரிசை பாடல்கள் சிலவற்றைக் கேட்டு ரசித்தோம். அடடா.. பாடல் சிடிக்கள் எடுத்து வைத்து மறந்துட்டேனே என்றேன். அண்ணாச்சி அர்த்தத்துடம் முறைத்தார். வழக்கமாக அவர் ”நல்ல” மலையாளப் படங்கள் பார்த்தால் அதை சொல்லி டிவிடி தரேன் பாருடா என்பார். பின்னர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவர் கொண்டுவருவதை ஆவலுடன் பிரித்துப் பார்ப்பேன். அதில் சிவவிலாசின் மசால் போண்டா, நேந்திரம் பழம் பஜ்ஜி , பக்கோடா போன்றவை தான் இருக்கும். அதை மனதில் வைத்து தான் முறைத்தார் போலும். நான் உனக்கு அல்வா குடுத்தா நீ சாப்டாம வச்சிருந்து எனக்கே கொடுக்கறையா என்று நினைத்திருப்பார். :)

இரு வழிப்பாதையில் ஒருவழியாய் கேரள எல்லையில் நுழைந்தோம்.( எத்தனை ழ, ல, ள ). அட அட.. கடவுளின் சொந்த தேசம் என்று அவர்கள் பொய் எதுவும் சொல்வதில்லை போலும். கடவுள் அங்க இருக்காரான்னு கேக்காதிங்க. நாக்கு தல்லேது. இது 4 அலல்து 5வது கேரளப் பயணம் என்றாலும் ஒவ்வொரு முறையும் புதிதாய் வருவது போன்ற உணர்வு. அவ்வளவு பசுமை. அவ்வளவு குளிர்ச்சி. பச்சை விரிப்புகளுக்கிடயே கருப்புக் கோடாய் தான் சாலைகள் தெரிந்தன. கேரளத்தில் வீட்டின் அழகுகள் பிரமிக்க வைக்கின்றன. நம்ம ஊர் மாதிரி தீப்பெட்டி வீடிகளாய் இல்லாமல் நேர்த்தியாய் ரசித்து தனித்தன்மையுடன் கட்டி இருக்கிறார்கள். பெரும்பாலும் தனி வீடுகள் தான். வீட்டைச் சுற்றிலும் ஏராளமான தென்னை மரங்கள் , மலர் செடிகள், காய் கனி மரங்கள் என சொக்க வைக்கும் பேரழகு.

எங்கள் பயணம் முழுதும் பெருநகரங்களைத் தொடாமல் கிராமங்களின் ஊடாகவே சென்றோம். வழியில் குழப்பமான வழித்தடங்களில் கேரளவாசிகளிடம் வழியை விசாரித்துக் கொண்டோம். வெயிலான் அல்லது அண்ணாச்சி தெளிவான(?) மலையாளத்தில் விசாரிப்பதும் அவர்கள் தெளிவான தமிழில் பதில் சொல்வதும் வாடிக்கையாக இருந்தது. குளிருக்கு இதமாக எதாவது சூடாக சாப்பிட வேண்டும் போல் இருந்தது. எங்காவது வழியில் அவ்வாறு கடைகள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டே வந்ததில் ,பாலக்காட்டைத் தாண்டி ஒரு ஊரில் சாலை ஓரத்தில் சூடான பலகாரங்கள் தயாரித்துக் கொண்டிருந்தார் ஒருவர். அங்கே வண்டியை நிறுத்தி பக்கோடா சாப்பிட்டோம். பெப்பர் போட்டு நல்ல சுவையுடன் கொடுத்தார். ரசித்து சாப்பிட்டோம். லேசான மழையும் பெய்துக் கொண்டிருந்தது.

வாழைப்பழம், தண்ணீர் பாட்டில்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு பின்னர் பயணம் தொடர்ந்தது. கும்மிருட்டு ,அடர்கானக வழித்தடம், கொண்டை ஊசி வளைவு மலைப் பாதைகள் என எல்லாம் கலந்துக் கட்டி பயணம் தொடர்ந்தது. வழி எங்கும் அருவிகளின் சத்தம். தாமதமாய் கிளம்பியதர்காக நொந்துக் கொண்டோம். அந்த அழகை எல்லாம் ரசிக்காமலே பயணம் தொடர்ந்தது. ஏற்காட்டில் ஏற்றிக் கொண்டிருந்த... சாரி.. ஏறிக் கொண்டிருந்த கும்கி போன் செய்தார். பரிசலும் உடன் இருக்கிறார் என்று சொன்னதை நம்பும் அளவுக்கு மூச்சு முட்ட.. ச்ச.. மூச்சு வாங்க மலை ஏறிக் கொண்டிருந்தார் போல..

வலது ஓரத்தில் அமர்ந்து வந்த நாடோடி இலக்கியன் திடீரென்று குல தெய்வத்தை எல்லாம் வேண்டிக் கொண்டார். பின்ன, அருவி சத்தம் எல்லாம் அவர் பக்கம் தானே கேட்டுக் கொண்டிருந்தது. மழை பெய்தாலும் மேக மூட்டமும் கடுமையாக இருந்தது. 5 அடி தூரத்திற்கு கூட சரியாக வழி தெரியவில்லை. மலைச் சரிவில் அவருக்கு மண்சரிவு பயம் வந்துவிட்டது. ”இன்னைக்கு சனிக்கிழைமை வேற” அப்டின்னு ஒரு பிட்டப் போட்டார். அடப்பாவி நல்லவரே “ சனிப் பொணம் தனியாப் போகாதுன்னு சொல்வாங்கய்யா” என்றதும், அதுக்குத் தான் அப்டி சொன்னாராம். இதுல என்ன பெரிய கூத்துண்ணா 3 பேர் எதுமே பேசாம வந்தாங்க. அவங்க பயத்துல நடுங்கிட்டே பேசி பயத்தைக் காட்டிக்க விரும்பலையாம். :)

சரி, நாம வாழறதே மத்தவங்களுக்காகத் தானே என்று என் மொபைலில் இருந்து இளையாராஜா பாடல்களை ஒலிபரப்பினேன்( இங்கே இறுதியில் சென்று கேட்கலாம்) . அனைவருக்கும் ரொம்பவே ரசித்தார்கள்/தோம். பின்னர் நெல்லியம்பதியை அடைந்து ஒரு கடையில் சீட்டுக் கட்டுகள் வாங்கிக் கொண்டு சரியாக 9 மணிக்கு விடுதியை அடைந்தோம்.


[பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் வீடு மாதிரி இருக்கா? ]
விடுதியில் நுழைந்து உடைமாற்றிக் கொண்டு சாப்பிடத் தயாரானோம்.. இங்கே பல சுவாரஸ்மான உரையாடல்கள் கேலிகள் கிடல்கள் தொடர்ந்தது.. நாடோடி இலக்கியனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் பயணம் மேலும் சில்லுனு தொடரும்....

(ஒரு வாட்டி எழுதிட்டா என் பதிவை நானே படிக்க மாட்டேன் என்பதால் எழுத்துப் பிழைகளை வழக்கம் போல் பொருத்தருள்க)

Read more...
Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP