கந்த கந்த கந்த கந்த நொந்தசாமி

விக்ரம் படம் எல்லாம் நல்லாவே இருக்காது என்பதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. விஜய் படங்கள் மட்டும் தான் நல்லா இருக்கும். வேணும்னா எங்க க்ளாஸ் பசங்க கிட்ட வந்து கேட்டுப் பாருங்க என்றான் என் சின்னத் தம்பி ஆதி. முதல் பாதி ஓகெ. இரண்டாவது பாதியை சொன்னதுக்காகவே உன்னையும் தூக்கிட்டுப் போறேண்டா என வம்படியாக கந்தசாமி பார்க்க முடிவு செய்தோம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பதிவர் நண்பர் ஹீம்@சதிஷ் போன் பண்ணார். விஷயத்தை சொன்னேன். அய்யய்யோ போகாதிங்க என்றார். என்னய்யா இது.. எதோ சுனாமி எச்சரிக்கையைவிட பலமா இருக்குதேன்னு நெனைச்சி மாமா, சித்தப்பா, தம்பி கிட்ட எல்லாம் சொன்னேன். அதெல்லாம் முடியாது, போகனும்னு முடிவு பண்ணியாச்சில்ல. போறோம்னான் என் ஒடன் பொறப்பு. அகராதிப் புடிச்ச பயலுகளா இருக்காய்ங்களேன்னு கிளம்பியாச்சி.

ஓபனிங் சீனே படத்தின் ரேஞ்ச் என்ன என்பதை புரிய வைத்துவிட்டது. விட்றா.. விட்றா சூனா பானான்னு மனச தேத்தியாச்சி. நாலு வரி டயலாக் பேசறாங்க. பாட்டு வருது. அடுத்த கொஞ்ச நேரம் பேசிக்கிறாங்க. பாட்டு வருது. அடுத்து இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கிறாங்க. பாட்டு வருது. இப்படியே மாத்தி மாத்தி அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாட்டும் வசனமும் போட்டு மூன்ற மணி நேரம் படத்தை ஓட்டினாங்க. இதுல எதோ சேட்டிலைட் டெக்னாலஜியாம்.. ஸ்ட்ரெய்ட்டா மெட்ராஸ்ல இருந்து தியேட்டருக்கு கனெக்‌ஷனாம்.. நேரடி ஒளிபரப்பாம். பக்கத்துல பொதுஜனம் பேசிக்கிச்சி. டேய் எங்க ஊர் தியேட்டர்( சினிமா கொட்டகை தான் சரி) எல்லாம் அவ்ளோ வொர்த் இல்லைடான்னு சொல்ல கவுரவம் ஒத்துக்கலை.

விக்ரம் ஒரு சிபிஐ ஆபிசர். கந்தசாமி கோயில்ல மக்கள் ஒரு சீட்ல தங்களோட கஷ்டங்களை எல்லாம் பேப்பர்ல எழுதி ஒரு மரத்துல கட்டிவிட்டுப் போறாங்க. அதை கொண்டுவந்து அதுல இருக்கிற குறைகளுக்கேத்த மாதிரி பண முடிப்புகளை அவங்களுக்கு கந்தசாமி வேஷத்துல விக்ரம் அண்ட் கோ கொடுக்கிறாங்க. இந்தப் பணத்தை எல்லாம் பெரும் பணக்காரர்களிடம் கொள்ளை அடிக்கிறாங்க. இதுக்கு விக்ரம் பின்னாடி பெரிய டீமே செயல்படுது. சண்டைக் காட்சிகளில் இவர்கள் அபத்தம் தாங்கலை. லாஜிக் மெய்ண்டெய்ன் பண்றாங்களாமாம். இந்த நண்பர்கள் குழு எல்லாம் ஒரு காலத்துல ஒண்ணா படிச்சவங்களாம். எல்லாரும் நாடகம் போடறதுல எக்ஸ்பர்ட்டுங்களாம். அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி தான் கந்தசாமி ட்ராமா பண்றாங்களாம். ரைட்டு இருக்கட்டும். இவர்கள் அனைவருக்கும் தலைவர் சிபிஐ உயரதிகாரி.

ரமணாவும் அந்நியனும் கலந்துகட்டி அடிச்சிருக்காங்க. கடைசியா கோர்ட் விக்ரமுக்கு தண்டனை கொடுக்கும். எப்டின்னா, இவர் இனி தமிழ்நாட்ல வேலை பார்க்காம வேற மாநிலத்துல வேலை செய்யனும்னு. ராஜஸ்தானுக்கு மாற்றலாகிப் போய்டுவார். அங்க ஒரு கோயிலுக்குப் போவார். அங்கயும் ஒரு மரத்துல மக்கள் குறைகளை எழுதி கட்டி இருப்பாங்க. அதுல ஒரு பேப்பரைப் படித்து மடித்து பாக்கெட்டில் போட்டுக் கொள்வார். அங்க ’கந்து’சாமி அவதாரம் எடுப்பார் போல. இதெல்லாம் நாங்க அந்நியன்லயே பார்த்துட்டோம் தண்ணியக் குடி தண்ணியக் குடின்னு நம்மளப் பார்த்தே சொல்லிக்க வேண்டி இருக்கு.

வடிவேலுகிட்ட கைநீட்டி சம்பளம் கொடுத்த பாவத்துக்காக ரெண்டு சீன்ல காட்றாங்க. வழக்கம் போல அடிவாங்கறார். பிரபு இவரை ரொம்ப சீரியசா விஜாரிக்கிறதெல்லாம் டூ மச்.. அதாவது ரொம்ப அதிகம்.. டைரடக்கர் தான் காப்பி அடிக்கிறார்னா இவருமா?. ஒருத்தர் மேல ஏறி உட்கார்ந்துட்டு அவரை அடிக்கப் பார்ப்பார். கீழ இருக்கிறவர் எங்கயோ ஏடாகூடமா பிடிச்சிப்பார். உடனே வடிவேலு அலறுவார். இந்தக் கர்மத்தை தான் முன்னாடியே “ ஒரு ஆம்பள இன்னொரு ஆம்ப்ளைய டச்சு பண்ணலாம்.. டிச்சுப் பண்ணப் படாது”ன்னு ஒரு படத்துல காமெடி( அப்டியா?) பண்ணி இருப்பார்.

இதுல தேவி சிரி பிரசாத் தன் பங்குக்கு எவ்ளோ காப்பி அடிச்சார்னு வடகரைவேலன் அண்ணாச்சி வூட்டுக்கு போன் பண்ணி என் சின்ன அக்கா கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கனும். காப்பி அடிக்கிறவங்கள கண்டுபிடிக்கிறதுல அவங்க தான் எக்ஸ்பர்ட்.

ஐயா சுசி கணேசன் அவர்களே,
படத்துல எதோ மெசேஜ் சொல்றிங்கன்னு தெரியுது. ஆனா அது என்னன்னு தான் மிகச் சரியா புரிஞ்சித் தொலைய மாட்டேங்குது. காசு வீணாக்காம புள்ளகுட்டிங்களை அல்லது கிராமங்களை தத்தெடுங்கன்னு சொல்ல வரீங்கன்னு நெனைக்கிறேன். சரிதானுங்களே. ஏஞ்சாமி ஊருக்கு மட்டுமே உபதேசம் பண்றதுக்கு தான் அரசியல் இருக்கே. எதுக்கு சினிமாவுக்கு வந்தீய?. 20 லட்சம் குடுத்து ஒருத்தன் கையை வெட்ட சொல்றது பணத்திமிர் தான். அதுக்கு பதில் 200 குழந்தைகளை படிக்க வைக்கலாம் என்பதும் சரி தான். ஒரு பொண்ணுக் கூட ஒருநாள் கூத்தடிக்க 30 லட்சம் செலவு பண்றதும் அதே பணக் கொழுப்பு தான். இதை எல்லாம் விக்ரமை வைச்சி பச்சத் தண்ணிப் பல்லுல படவிடாம வேர்க்க விறுவிறுக்க வசனம் பேச வைக்கிறதும் சரிதானுங்க.

அதிக பட்சம் 3 கோடி ரூவாய்ல எடுக்க வேண்டிய படத்தை 50 கோடி(70 கோடின்னும் சொல்றாங்க) ரூவாய் செலவழிச்சி எடுத்திங்களாமே. 47 கோடி வச்சி எத்தனை ஆயிரம் குழந்தைகள் எத்தனை கிராமங்களை தத்தெடுத்திருக்கலாம்?

ஒரு பாட்டுல ஸ்ரேயா போடறதுக்கு ( கவனமாகப் படிக்கவும் ) 15 லட்ச ரூவாய்க்கு துணி தெச்சிக் குடுத்திங்களாமே( அது தச்சி குடுத்ததா பிச்சிக் குடுத்ததா). பத்தாயிரம் ரூபாய்ல தெச்சிருந்தாலே மொத்த ஒடம்பையும் மூடற அளவுக்கு இருந்திருக்குமே. 15 லட்சம் செலவழிச்சும் பாதி தானே மூட முடிஞ்சி இருக்கு. ஊர்ல எம்புட்டோ பேரு மானத்தை காப்பாத்திக்கவே துணி போட முடியாம கஷ்டப் படும் போது இந்த புள்ளைக்கு பாதியை மறைக்கவே 15 லட்சம் செலவு தேவையா? அதை வச்சி ஒரு 150 குழந்தைகளை படிக்க வச்சிருக்கலாம் இல்லையா?

இது ஒரு மெசேஜ்( இப்டி தானே சொல்வீங்க) சொல்ற படம் தானே. இதுக்கு எதுக்கு பாட்டு. அட போட்டதும் போட்டிங்க. இவ்ளோ பாட்டுத் தேவையா? ஒரு பாட்டு முடிஞ்சி அடுத்த சீன் வரும் போது முந்தைய சீன் மறந்துப் போய்டுது. ( அதுக்கு ஸ்ரேயா தான் காரணம்னு நீங்களா புரிஞ்சிகிட்டா நான் என்ன செய்றது? ) . அவ்ளோ குறைந்த இடைவெளிகள்ல பாட்டு போட்டுக் கொல்றிங்க. இதுக்கு ஒலகம் பூரா சுத்தி சுத்தி படம் புடிச்சி இருக்கிங்க. இந்த வகைல சில பல கோடிகள் வீண். இதை வச்சி எவ்ளோ பேரை தத்தெடுத்திருக்கலாம்?

இப்போலாம் புதுப் பசங்க நடிக்கிற படங்கள் தான் சக்கைப் போடு போடுது. இதுமாதிரி கருத்து கந்தசாமி படத்துக்கு பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமா? இந்த பந்தம் எல்லாம் கொளுத்திக்கக் கூடாதா? புதுசா யாரையாச்சும் நடிக்க வச்சிருக்கலாம்.முதல்வன் படம் ரஜினி நடிக்காம அர்ஜுன் நடிச்சும் ஹிட்டாச்சிங்க்ணா. விக்ரமுக்கு 5, 6 கோடியாச்சும் குடுத்திருப்பிங்க.

இப்டி படத்துக்கு/துல நீங்க பண்ணி இருக்கும் வெட்டி செலவே பல கோடிகள். இதுக்கு என்னப் பேரு? பணக் கொழுப்பா? இல்லை ..பக்கத்து வீட்டுக்காரன் நெய்யே.. என் பொண்டாட்டிக் கைய்யே என்று பூந்து விளையாடினிங்களா?. அடுத்தவன் காசுதானே.. உங்களுக்கென்ன?. நஷ்டம் வந்து சமாளிக்க முடியாம போச்சினா அவங்க தானே தற்கொலை பண்ணி சாவப் போறாங்க.

சமுதாயத்துல தொழிலதிபர்கள் மட்டும் தான் இப்டி அநியாயமா சம்பாதிச்சி , செலவு செஞ்சி, வெளிநாட்ல பணத்தை பதுக்கறாங்களா?அதிக பட்சம் 60 நாள் கால்சீட்டுக்கு கோடிகோடியா ( 25 கோடி வரைக்கும் கூட) வாங்கற நடிகனும், பாட்டுக்கு மட்டும் வந்து பாதி துணில குத்தாட்டம் போட்டு பல லட்சங்கள் முதல் சில கோடிகள் வரை வாங்கும் நடிகையும் புனித பிம்பங்களா? அது ஏன் எந்த சினிமாவுலையும் இந்த கும்பலைக் கண்டுக்கறதே இல்ல?

கொய்யாலே.. கேக்கறவன் கேணப் பயலா இருந்தா கருணாநிதியும் ஜெயலலிதாவும் குட் ஃப்ரண்ட்ஸ்னு சொல்விங்க போல இருக்கே. சத்தமே இல்லாம தங்களோட மாத வருமானத்தை வச்சி முடிஞ்ச அளவு சேவை செய்ற நடுத்தர வர்க்கத்தை பத்தி யாராச்சும் எடுத்து சொல்லி இருக்கிங்களா?.. மெசேஜ் சொல்றாங்களாமா மெசேஜ்.

வெளிய வரும்போது படத்தோட டைட்டில் சாங் கேட்டுச்சி.. நொந்த நொந்த நொந்த நொந்த நொந்தசாமி....

Read more...

Join Youth Congress


இரண்டு கோடி இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வரும் நோக்கத்துடன் , காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தியின் தலைமையிலும் முன்னாள் தேர்தல் ஆணையர்கள் சிலரின் வழிகாட்டுதலிலும் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையும் தேர்தலும் நடைபெறுகிறது. அரசியலை இளைஞர் மயமாக்குவதே இதன் நோக்கம். 18 முதல் 35 வயதிற்குள் இருக்கும் யார் வேண்டுமானாலும் இளைஞர் காங்கிரஸில் இணையலாம்.

குஜராத், பஞ்சாப், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பே பஞ்சாபில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற்று முடிந்ததால், அங்கே மாநில தலைவர் மற்றும் துணைத்தலைவராக வெற்றிபெற்றவர்களுக்கு பாராளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இது தான் இளைஞர் காங்கிரசின் நோக்கமும். முதியோர் இல்லம் என அழைக்கப் படும் இந்திய பாராளுமன்றத்தை இளைஞர்கள் நிரம்பிய பல்கலைக் கழகமாக மாற்றுவது தான் நோக்கம்.

தற்போது தமிழகத்தில் இளைஞர் காங்கிரசிற்கான உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெறுகிறது. நவம்பரில் தேர்தல் நடக்கும். அரசியலை சாக்கடை என்று சொல்லி எத்தனைக் காலத்துக்கு ஒதுங்கியே இருப்போம்? வாருங்கள் சாக்கடையை சுத்தம் செய்வோம். இணையுங்கள் இளைஞர் காங்கிரசில்.

தேர்தல் நடைபெறும் முறை:

  • உறுப்பினர்கள் வாக்களித்து பஞ்சாயத்துக்களுக்கான 5 நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள். ஒரு உறுப்பினருக்கு ஒரு வாக்கு மட்டுமே. இதில் பொறுப்பு/பதவிகளுக்கு போட்டியிடுபவர்களில் அதிக வாக்கு பெற்றவர் தலைவராகவும் அதற்கடுத்த வாக்குகள் பெறுபவர் துணைத்தலைவராகவும் மற்ற மூவர் செயலர்களாகவும் இருப்பார்கள்.
  • பஞ்சாயத்து நிலையில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒவ்வொருவருக்கும் 2 வாக்குகள் அளிக்கும் உரிமை உண்டு. இவர்கள் வாக்களித்து சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். சட்டமன்ற தொகுதிக்கு 10 நிர்வாகிகளும் 10 செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். பஞ்சாயத்து நிலையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் நிர்வாகிக்கு ஒரு வாக்கும் செயற்குழு உறுப்பினருக்கு ஒரு வாக்கும் அளிக்க வேண்டும். இதில் அதிக வாக்குகள் பெறுபவர் தலைவர். அடுத்தவர் துணைத் தலைவர். அடுத்தடுத்த எண்ணிக்கை பெறுபவர்கள் பொதுச்செயலாளர்கள் மற்றும் செயலாளர்களாக சேர்வு செய்யப் படுவார்கள். பொதுச்செயலாளர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. ஒரு பிற்படுத்த்ப் பட்ட வகுப்பை சேர்ந்தவர், ஒரு பெண், ஒரு தாழ்த்தப்ப்பட வகுப்பைச் சேர்ந்தவர் மற்றும் சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர்.
  • சட்டமன்ற தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு 4 வாக்குகள் அளிக்க உரிமை உண்டு. ஒரு வாக்கு மாவட்ட நிர்வாகிக்கு, 2வது மாவட்ட செயற்குழு உறுப்பினருக்கு, 3வது மாநில நிர்வாகிக்கு, 4வது மாநில செயற்குழு உறுப்பினருக்கு. இதிலும் அதே இட ஒதுக்கீடு முறை தான். வாக்கு எண்ணிக்கை அடிப்படையிலேயே நிர்வாகிகள் தேர்வு.
இளைஞர் காங்கிரசில் சேரத் தகுதிகள்,
வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எந்தக் குற்றப் பின்னணியும் இருக்கக் கூடாது.
வயது மற்றும் இருப்பிட சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். மேலும்..

தவறான தகவல்களுடன் சேர்ந்து, அது கண்டுபிடிக்கப் பட்டால், 7 ஆண்டுகள் வரை கட்சியிலிருந்து நீக்கப் படுவார்கள்.

இளைஞர் காங்கிரசில் இணைய விருப்பம் உள்ளவர்கள் இந்தப் படிவத்தை நிரப்பி உங்கள் பகுதி தேர்தல் பொறுப்பாளரிடம் அளித்துவிடுங்கள். அவர்களுக்கு தொலைபேசினால் கூட போதும். வீடு தேடி வந்து படிவம் வாங்கிச் செல்வார்கள். தமிழகம் மொத்தம் 5 மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டு 5 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களுக்கு கீழ் பாராளுமன்றத் தொகுதிகளுக்கு தனி பொறுப்பாளர்கள். அனைவரும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

வாருங்கள் .. அரசியலை மாற்றுவோம்... மேலும் விவரங்களுக்கு : sanjaigandhi@msn.com க்கு மெயில் அனுப்புங்க.

முழு விவரங்களுக்கு: http://iyc.in
தமிழக தேர்தல் விவரங்களுக்கு :
http://iyc.in/sns/pg/pages/view/67343/


For any concerns/queries regarding membership, please contact the IYC help desk -

mail : support@iyc.in

phone : 1860 425 4357

Our six drivers of Transformation



Read more...

புதிய தலைமுறை - ஒரு பார்வை

புதிய தலைமுறை” இதழின் மாதிரி இதழ் கிடைத்தது.அட்டையே அட்டகாசமாய் இருந்தது. இந்தியா டுடேயின் சாயல். இதழின் உள்ளடக்கம் பற்றித் தனிப் பக்கம் போடாமல் அட்டையிலேயே 4 பகுதிகளை மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள்.அதிலும் பக்கம் எண் இல்லை. உள்ளடக்கத்திற்கு தனிப் பக்கம் இருப்பது நல்லது. முதல் கட்டுரையே இளம் பெண் சாதனையாளர்கள் பற்றி. தலைப்பு “ வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்”. திரப்படங்களில் வரும் முதல் வசனம் போல மங்களகரமாக வைத்திருப்பார்கள் போலும்.அதே பக்கத்தின் இறுதியில் பெரிய எழுத்துகளில் “அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் பெண்களைச் சேரும்”. சரி சரி.. புரியுது.. :)

”உதவி காத்திருக்கு” என்ற அருமையான பகுதியை ஆரம்பித்திருக்கிறார்கள். தடை இன்றி தொடரவேண்டும்.ஏழை மற்றும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கான , அரசு/அரசு சாரா அமைப்புகளின் உதவிகள் பற்றி எழுதி இருக்கிறார்கள். இந்த ஆண்டிற்கான விண்ணப்ப கடைசி தேதி : ஆகஸ்ட் 31. மேலும் விவரங்களுக்கு www.socialjustice.in என்ற இணையதளத்தை பார்வை இடவும். ப்ரேர்ணா என்ற அமைப்பு பற்றியும் விவரம் வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் தொலைபேசி எண் : 9900906338.( நன்றி : புதியதலைமுறை)

பொறியியல் கவுன்சிலிங் பற்றி நம் வலையுலக இரட்டையர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். கட்டுரை ஒரு மொக்கை பதிவுக்கு சற்றும் சளைக்காமல் இருந்தாலும் பெட்டிச் செய்திகளாகக் கொடுத்திருக்கும் தகவல்கள் அருமை. “ரொம்பவும், நெருக்கி அடித்து, கடையைக் கட்டுவதற்குள்” போன்ற குமுதம் , குங்குமம், வலைப்பதிவு வகையறாக்களின் மொழியில் தான் எழுத வேண்டுமா?. சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக வார்த்தைகள் பயன்படுத்துவது சரி அல்ல. வலிமையான ஊடகத்தில் வாய்ப்புப் பெற்றும் வழக்கமாகவே எழுதுவது நல்லதல்ல. வாய்ப்பைக் கொண்டு மொழிக்கும் நல்லது செய்யுங்கள். அதைக் கெடுக்கும் வேலைகளை எல்லாம் வலையுலகில் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.ஒரு ஜனரஞ்சகக் கட்டுரை எழுதுவதற்கும் தகவல் சார்ந்த கட்டுரை எழுதுவதற்கும் வேறுபாடுகள் இல்லையா என்ன?.இனி கூடுதல் கவனத்துடன் எழுத உரிமையுடன் வேண்டுகோளும் வாழ்த்துகளும்.

தமிழ்சினிமாவில் கிராமத்து இளைஞர்களின் புதுப் பாய்ச்சல் என ஒரு நல்ல கட்டுரை கவர்கிறது. முண்டியடித்து முட்டி மோதி வென்ற இளம் இயக்குனர்களைப் பற்றி அழகாய் எழுதி இருக்கிறார்கள். ஒரு தன்னம்பிக்கைக் கட்டுரைக்கு உரிய நடை. இதே போல் பல துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களைப் பற்றியும் கவனமாக ஆராய்ந்து தவறான தகவல்கள் இன்றி தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும். சினிமா விமர்சனம் என்று வழக்கமாக எழுதிவிட்டு இறுதியில் நம் சக வலைபபதிவர்கள் அதே படத்திற்கு எழுதி இருக்கும் விமர்சனங்களின் சில வரிகளை பிரசுரித்திருப்பது புதுமை.

சந்திப்பு, மின்னஞ்சல் சிந்தனை, மருத்துவம்/ஆரோக்கியம் என்ற பகுதிக்காக சர்க்கரை நோய்ப் பற்றிய( இன்னும் எத்தனை லட்சம் கட்டுரைகள் தான் இது பற்றி எழுதுவார்களோ. எல்லாம் ஒரே மாதிரி பயமுறுத்தல் மற்றும் தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை.. ஸ்ஸ்ஸபாஆஆஆ..முடியல..) கட்டுரை, பயணக் கட்டுரை ( பார்க்கும் இடமாவது இதுவரை யாரும் சொல்லாத/செல்லாத இடமாக இருந்தால் நல்லது சாமிகளா) என ஒரு ஜனரஞ்சக வார/மாத இதழுக்கே உரிய பகுதிகள் தவறாமல் இடம் பிடித்திருக்கின்றன. இதில் உமாசக்தியின் ’புத்தரும் நானும்’ கவிதை அபாரம்.முதல் இதழிலேயே எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டார்கள். நட்புக்காக மொக்கை கவிதைகளை பிரசுரித்து கடுப்பேற்றாமல் இதே ரீதியில் தரமான கவிதைகளுடன் தொடர்ந்தால் நலம். இலங்கையிலிருந்து திரும்பிய(கவனமான வார்த்தை , சொந்த ஊருக்கும் மீண்டு(ம்) வந்தால் அது திரும்புதல் தானே. சபாஷ் ஷக்தி) புத்தர் இங்கே நடக்கும் அழிச்சாட்டியங்களைக் கண்டு தப்பிக்க நினைக்கும் வேளையில் எதிரே வந்து விழும் துப்பாக்கியையும் கத்தியையும் நடுங்கிய கைகளால் எடுத்துப் பார்ப்பதாக முடித்திருக்கிறார். இந்த இதழ் விற்பனைக்கு அல்ல என்பதால் உமா ஷக்தியே அவர் வலைப்பூவில் வெளியிடுவார் என நினைக்கிறேன்.

அச்சத்தை வென்றது எப்படி? என்று 25 வரிகளில் ஒரே பக்கத்தில் கவிதையாய் சொல்லி இருக்க வேண்டியதை வலுக்கட்டாயமாக வார்த்தைகளைப் பிரித்துப் போட்டு கவிதையாகவும் இல்லாமல் கட்டுரையாகவும் புரியாமல் வைரமுத்துவை வைத்து இரண்டு பக்கங்களை நிரப்பி இருக்கிறார்கள். சோதனை இதழுக்கே மேட்டர் பஞ்சமா?.

கடவுள் எங்கே இருக்கிறார் என்ற மின்னஞ்சல் சிந்தனைப் பகுதிக்கு வெளியிட்டிருக்கும் வாசுதேவனின் ஓவியல் ஆயிரம் மொழிகள் பேசுகிறது. நிஜமாவே அது ஓவியமா, இல்லை புகைப் படத்தில் சித்து வேலைகள் செய்திருக்கிறார்களா என சந்தேகமாக இருக்கிறது. உண்மையிலேயே ஓவியமாக இருக்கும் பட்சத்தில் வாசுதேவனுக்கு பலமான கைக்குலுக்கல். அதில் ’ஓவியம்:வாசுதேவன்’ என்று தான் இருக்கிறது.

சிறுகதை, கார்ட்டூன், படங்களில் எதையாச்சும் கண்டுபிடிக்கிறது, செய்தி( வடிவமைப்பு நக்கீரன் நெடி.. நல்லா இல்ல.. ), தகவல் தொழில்நுட்பம், புத்தக அறிமுகம் என சேம் சேம்..( ஷேம் ஷேம் இல்ல).

அரசியல் செய்திகள் இல்லை என்று யாரும் பல்லு மேல நாக்கு போட்டு சொல்லிடக் கூடாது என்று அரசியலில் வாரிசுகளின் வரைபடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் செய்தி எதுவும் இல்லை. சும்மா படம் மட்டும் தான். அரசியல் செய்திகள் இல்லாமல் வெளிவரும் ஒரே இதழ் இதுவாகத் தான் இருக்கும் போல.இளம்பெண் சாதனையாளர்கள் பற்றியக் கட்டுரைத் தவிர வேறு எங்கும் தேசிய அல்லது சர்வதேச செய்திகள் மருந்துக்குக் கூட இல்லை. கவனிக்கவும்.

இந்த இதழின் 90 சதவீத உள்ளடக்கம் உட்கார்ந்த இடத்திலிருந்தே கொஞ்சமும் மெனக் கெடமால் தொகுத்தவைகளாகத் தான் இருக்கிறது. பயணக் கட்டுரையும் நம்ம இரட்டையர்கள் அண்ணா பல்கலைக் கழகம் வரை சென்றதும் சீமானின் உப்புச்சப்பில்லாத சந்திப்புக்கும் மட்டுமே வெளியே சென்றிருக்கிறார்கள் போல. இதெல்லாம் ஆவறதுக்கில்லை. பேர் மட்டும் புதிய தலைமுறை என்று இருந்தால் போதுமா?. செயலில் இருக்க வேண்டாமா?

இப்போதைக்கு தமிழில் சிறந்த இதழ்களென்றால் அவ்வப்போது இந்தியா டுடேயும் , தி சண்டே இந்தியனின் அனைத்து இதழ்களும் தான். இலக்கிய ஆர்வம் உள்ளவர்களுக்கு சிற்றிதழ்கள் தாண்டி ஆனந்த விகடன் பிடித்திருக்கிறது( அதுவும் சிறுகதைகளுக்காகவும், கவிதைகளுக்காகவும் வேறு மாற்று இல்லாததால் மட்டுமே அல்லது தொட்டில் பழக்கம்..... )

மெனக் கெடாமல் தயாராகி இருக்கும் 48 பக்கங்கள் கொண்ட( அட்டைகள் நீங்கலாக) புதிய தலைமுறை இதழின் தற்போதைய வடிவத்திற்கு 5 ரூபாய் விலை என்பதே அதிகமாகத் தான் இருக்கும். எவ்வளவு விலை வைக்கிறார்கள் எனப் பார்ப்போம். உள்ளடக்கத்தில் புதுமையும் கவனுமும் தேவை. சர்வே எல்லாம் எடுத்தாங்களே. அதெல்லாம் சும்மா லுலுல்லாய்க்கா... புதிய தலைமுறை - சிறந்த இதழாக வருவதற்கு வாழ்த்துவோம்.

Read more...

குசும்பன் 5 ஸ்டார் சக்தி அம்மா தமிழ் கையெழுத்து கோவைப் பதிவர்கள் ஃபேஸ்புக் நண்பர்கள்தின நட்பு

[ஹிஹி.. நாந்தேன்]

சென்ற வாரத்தில் ஒரு நாள் என் அண்ணன் அழைத்து “ யார்டா குசும்பன். இப்டி எழுதி இருக்கார். போலிஸ் சுற்றிவளைத்த சென்னைப் பதிவர்கள் படிக்கிறேன். சிரிச்சி சிரிச்சி கண்ல தண்ணி வருதுடா” என்றார். என் நண்பர் தான் என்றேன். பெருமை இருக்காதா பின்ன? :). பதில் பின்னூட்டம் எதிர்பார்க்காத நிஜமான பாராட்டு. வாழ்த்துகள் குசும்பன்.
***

சமீபமா 5 ஸ்டார் சாக்லேட்க்கு ஒரு விளம்பரம் வருது. அந்த சாக்லெட் சாப்ட்டு மெய்மறந்து அமர்ந்திருக்கும் ஒருவரிடம் ஒருவர் திருட முயற்சிப்பார். அதை கவனித்து வரும் இன்னொரு திருடனார், ” 5 ஸ்டார் சாப்ட்டா மெய்மறந்து போய்டுவாங்க. நம்மள மாதிரி திருடர்களுக்கு மனசாட்சி வேணாமா? இவர் கிட்ட எப்டி திருடறது” எனக் கூறி முன்னவரை அழைத்து சென்றுவிடுவார். அடப்பாவிகளா. 5 ஸ்டார் சாப்டற பணக்காரன் கிட்ட தான் மனசாட்சி பார்ப்பாங்களா?. அப்போ அன்றாடங்காய்சிக் கிட்ட திருடினா பரவால்லையா? நல்லா யோசிக்கிறாய்ங்கப்பு.
***

சில நாட்களுக்கு முன் வேலூர் சக்தி அம்மா?! தங்கக் கோயிலுக்கு சென்றேன். கோவிலுக்கு செல்ல மொத்தம் 3 வழி. ஒன்று இலவச வழி. அது வழியாக காலையில் சென்றால் மாலையில் தான் திரும்பி வர முடியுமாம். இரண்டாவது 100 ரூபாய்க் கட்டணம். இந்த வழியில் 2 நிமிடத்தில் 3 சோதனைகளை முடித்துக் கொண்டு கோவிலை அடையலாம். மூன்றாவது வழியில் செல்ல 250 ரூபாய்க் கட்டணம். 45 வினாடிகளில் கோவிலை சென்றடையலாம். இந்த நுழைவாயில்களில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் கோவில் இருக்கு. இதுக்கு 3 வழிகள். பெரும் புல்வெளிகளையும் பூந்தோட்டங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு கடைசியாக கோவிலுக்கு செல்வது போல் பாதை அமைத்திருக்கிறார்கள். உள்ளே கேமரா, செல் போன் எடுத்து செல்ல தடை. ஆனால் வழி எங்கும் சக்தி அம்மா( ஆண் தான் )வின் புகைப் படம் அச்சடித்த (அதிக)பிரசங்க பலகைகள். அங்கே பணி புரிபவர்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். 3 இடங்களில் சோதிப்பதெல்லாம் ஓவராக இருக்கிறது. அப்படி ஒன்றும் பெரிய பொக்கிஷம் எதுவும் அங்கே இல்லை.

கோவிலுக்கு சற்று முன் சக்தி அம்மா எனப் படுபவரின் 2 மிகப் பெரிய புகைப் படங்களை வைத்து அதற்கும் ஒருவரை காவலுக்கு வைத்திருக்கிறார்கள். கோவிலை சுற்றியுள்ள குளத்தில் க்ரெடிட் கார்ட், தங்க , வெள்ளி நாணயங்கள், 1000, 500, 100 ரூபாய் நோட்டுகள் எல்லாம் பக்த கோடிகளால் வீசப் பட்டிருக்கு. யாருக்கு என்ன பயனோ?. போகும் போது பூஜை சாமான்கள் வாங்கி செல்ல சொல்கிறார்கள். உள்ளே அதை வைத்து பூஜிப்பதில்ல்லை. எதோ ஒன்றைக் காட்டி அம்மா பாதம் என்று சொல்லி அதில் வைத்துத் தருகிறார்கள். சிலர் அதையும் எடுத்து செல்வதில்லை. அவைகள் அடுத்த நாள் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளப் படுமாம். எங்கு வாங்கினோமோ அதே ஸ்டோருக்கு திருப்பி அனுப்பப் பட்டிருக்கும். :) எரிச்சல் படுத்தும் ஒரு வியாபார தலத்திற்கு சென்று வந்த உணர்வு. நல்லா இருங்க சாமிகளா.
***

சமீபத்தில் தமிழில் ஒரு அலுவல் கடிதம் எழுத வேண்டியதாகிவிட்டது. சில எழுத்துகளை எப்படி எழுதுவதென்றே தெரியாமல் விழித்தேன். நான் எதோ நினைத்து எழுத வேறு எழுத்துகள் வந்தன. கையெழுத்து மிக மிக கேவலமாய் இருந்தது. அசிங்கமாய் உணர்ந்தேன். அன்று முதல் தினமும் நளிதழைப் பார்த்து சில வரிகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போ தேறிவிட்டேன். வாழ்க கணிப்பொறியும் விசைப் பலகையும் மொபைல் போனும்.

மேற்சொன்ன கூத்தெல்லாம் நடந்தது கேபிஎன் அலுவலக வளாகத்தில் தான். அப்போது ஒருவர் , ரசீது இல்லாததால் தன் பொருட்கள் விற்பனை வரி அலுவலர்களால் கைப்பற்றப் பட்டதாக சொன்னார். சிறிது நேரத்தில் அந்த அலுவலர்களுடன் அந்தப் பொருட்களைப் பார்க்கச் சென்றோம். எங்கள் நிறுவனப் பொருட்களுக்கும் அதே நிலை தான். எங்க ஆளுங்க விற்பனை ரசீது தனியாகவும் பொருள் தனியாகவும் அனுப்பி இருந்தார்கள். இன்னொருவரின் பொருட்களாக ஒரு அட்டைப் பெட்டிக்குள் பழய ப்ளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றும் சிறிய பழைய மின்விசிறி ஒன்றும் இருந்தது. உபயோகித்தப் பொருட்கள். அத்ற்கெல்லாம் ரசீதுக்கு எங்கே செல்வது? என்னக் கன்றாவி சட்டமோ?. உபயோகித்தப் பொருட்கள் என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பொருளை எடுத்து செல்ல சொன்னார்கள்.

அந்த அலுவலர் சொன்னது “ உபயோகப் படுத்திய பொருட்களை அனுப்பும் போது பெட்டியில் அதைக் குறிப்பிடுங்கள். தேவை இல்லாமல் அதற்கெல்லாம் ரசீது கேட்டு சோதிக்க வேண்டி இருக்காது”. பார்சல் அனுப்புபவர்கள் கவனிக்கவும்.

***

கோவையில் ஆயிரக் கணக்கான பதிவர்கள் இருக்கிறார்கள். தமிழில் எழுதுபவர்கள் பதிவுகளை மட்டும் திரட்டி பலத்தைக் காட்டலாம் என நினைத்து கோவைப் பதிவர்கள் என்ற சிறு திரட்டி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. படித்து மகிழவும்.

***

ஃபேஸ்புக்கில் குறுஞ்செய்தி சேவை ஆரம்பித்திருக்கிறார்கள். யாராவது நமக்கு மெயில் அனுப்பினால் மொபைலுக்கு செய்தியாக வந்துவிடுகிறது. இலவச சேவை தான். பயன்படுத்திப் பாருங்கள்.

***

நண்பர்கள் தினத்தில் அதிக பட்சமாக வாழ்த்தும் பரிசும் கிடைக்கலாம். எனக்கு அன்றைய ரயில் பயணத்தில் புதிய நண்பரே கிடைத்தார். கோயம்புத்தூர் தான். அப்போது ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். தியாகு லைப்ரரியில் எடுத்தாராம். அதில் உறுப்பினராம். நான், அண்ணாச்சி , செல்வேந்திரன் மூவரும் அடிக்கடி சந்திக்கும் இடம் தான் தியாகு லைப்ரரி. :) மிக நல்ல நண்பர். ஆனால் என்ன... அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு மேல் படிப்பு படிக்க செல்கிறார். வாழ்த்துகள் தோழி. உங்கள் ஆசைப் படியே திரும்பி வந்து கோவையில் இண்டஸ்ட்ரி ஆரம்பிக்க வாழ்த்துகிறேன்.

***

இணையதளங்களுக்கு தனி அடையாளமாக விளங்கும் favicon பற்றி சிலருக்காவது தெரிந்திருக்கும். ஃபயர்ஃபாக்ஸ் அல்லது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரில் வலைதளங்கள் பார்க்கும் போது அட்ரஸ் பாரில் ஒரு படம் தெரியும். அதே போல் நம் வலைப்பதிவுகளுக்கும் செய்ய முடியும். உங்கள் வலைப்பூவில் edit html பக்கம் சென்று <data:blog.pagetitle/> <data:blog.pagetitle/9(((title)(data:blog.pageTitle/)(/title)என்பதற்கு அடுத்த வரியில் (link href='image url' rel='shortcut icon' type='image/vnd.microsoft.icon'/)என்று டைப் செய்யுங்க. இதுல image url என்பதற்கு பதில் உங்கள் படத்திற்கான முழு முகவரியையை தரவும்.

( ) = <>

படம் பற்றிய விவரம்.
முதலில் 16x16 அளவில் ஒரு படத்தை உருவாக்கி அதை image_name.png என்று சேமிக்கவும். பின் http://www.convertico.com/ என்ற இணையதளம் சென்று .png ஃபைலை .ico ஃபைலாக மாற்றிக் கொள்ளவும். பின் அந்த படத்தை உங்கள் கணினியில் சேமித்து அதை இனையத்தில் எதாவது இமேஜ் ஹோஸ்ட் தளத்தில் சேமித்து அதன் முகவரியை (ie: http://sanjaigandhi.com/sanjai.ico) மேலே உள்ள umage url என்ற இடத்தில் அளித்துவிடவும். இப்போது உங்கள் படம் ரெடி. படம் காட்ட வாழ்த்துகள்.

***

Read more...

இஞ்சினியரிங் படிப்பு உச்ச (அ)நீதி மன்றம் மாணிக்கத்தாகூர் மின்மரணம் தவிர்ப்பு பிஎட் படிப்பு தடை


இந்த வருஷம் இஞ்சினியரிங் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் சேர்வதற்கு ஆள் இல்லாம காலியா இருக்காம். எல்லாத் துறைகளிலும் இந்த நிலை என்றாலும் கணிப்பொறித் துறையில் மிக மோசம். அதில் தான் அதிக காலி இடங்கள். பொருளாதார மந்த நிலையினால் பல நிறுவங்கள் மூடப் படுவதாலும் ஆயிரக்கணக்கில் வேலை இழப்புகள் ஏற்படுவதாலும் பொறியியல் மீதான மோகம் குறைந்துவிட்டது. அது மட்டுமில்லாம எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதில் மந்திரியாக இருப்பவர்கள், விசிட்டிங் கார்ட் அடிக்கிறதுக்கு முன்னாடியே இஞ்சினியரிங் காலேஜ் ஆரம்பிச்சிடறாங்க. எற்கனவே காலேஜ் வச்சிருக்கிறவங்க மாவட்டத்துக்கு ஒன்னு ஆரம்பிச்சிடறாங்க. எம்ஜியாரின் பெரும் சாதனைகளில் இதுவும் ஒன்று. அந்த புண்ணியவான் ஆரம்பித்த கலாச்சாரம் தான் இதெல்லாம். கல்லூரிகள் பெட்டிக் கடை மாதிரி பெருகிட்டே போகுது. அப்புறம் காலி இடம் இல்லாம என்ன செய்யுமாம். ”சாராயம் காய்ச்சினவன் எல்லாம் கல்வி வள்ளல். கல்வி பயின்றவர்கள் எலலாம் அரசு சாராயக் கடையில் வேலை” என்று யாரோ சொன்னாங்க. படிக்காதவனுக்கெல்லாம் டாக்டர் பட்டம் தர மாதிரி கட்சி தொண்டர்களுக்கெல்லாம் ஒரு சீட் குடுத்து இஞ்சினியரிங் காலேஜ்ல அட்மிஷன் போட்டா காலி இடம் இருக்காது.

***

இந்தியாவின் ஜனாதிபதி ஒரு பெண். இந்தியாவின் ஆளும் கட்சிகளின் தலைவி ஒரு பெண். இந்திய பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஒரு பெண். இன்னும் பல முதல்வர்கள், ஆசியாவின் மிகப் பெரும் நிறுவனத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் ஒரு பெண், வெளியுறவு செயலர், நீதிபதிகள், வங்கிகளின் உயர்பதவிகள் என பெண்களின் தளம் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் வீட்டில் கணவனோ மாமியாரோ எட்டி உதைத்தாலும் அது கொடுமை இல்லையாம். அதற்கெல்லாம் தண்டனைத் தர முடியாதாம். விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டினாலும் தவறில்லையாம். மாமியாரின் பழய ஆடைகளை அணிய சொல்லி கட்டாயப் படுத்தினாலும் தவறில்லையாம். சொல்கிறது நம் உச்ச நீதி மன்றம். இது உச்ச அநீதிமன்றத்திற்குரிய செயல். இப்படியும் எதிர்பார்க்கலாம்
  • பெட்ரோல் ஊத்தி கொளுத்தினா தான் தப்பு, மண்ணெண்ணெய் ஊத்திக் கொளுத்தினா தப்பில்லை.
  • கிலோ கணக்கில் நகை கேட்டால் தான் தப்பு. சவரன் கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு மிரட்டலாம்.
  • பங்களா என்று கேட்டால் தான் தப்பு. வீடு என்று கேட்டு சித்ரவதை செய்யலாம்.
  • மச்சினன், நார்த்தனார் எல்லாம் மிரட்டினாலோ அடித்தாலோ அதை குற்றம் என்று சொல்ல முடியாது.
என் கூடப் பொறக்கலைனாலும், அதைவிட பாசமா ஏராளமான அக்கா தங்கச்சிங்க இருக்காங்க.. அதனால , நீங்க நல்லா இருக்கனும் சாமி..

***

சமீபத்தில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலர் உயிரிழந்தனர். பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்க விருதுநகர் எம்பி மாணிக்கதாகூர், பிரதமர் அலுவலகத்தில் வேண்டுகோள் விடுத்தார். இது போன்ற நிவாரணங்கள் மாநில அரசின் மூலம் தான் நடைபெறும், மத்திய அரசு நிதி ஒதுக்க வழி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். உடனே காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாகாந்தியிடன் மாணிக்கதாகூர் முறையிட்டார். கேட்டதும் , எவ்வளவு தொகை வேண்டும் என சோனியாகாந்தி கேட்டிருக்கிறார். எவ்வளவு அதிகம் கொடுத்தாலும் மகிழ்ச்சியே என்று எம்பி சொல்லி இருக்கிறார். உடனே 16 லட்ச ரூபாய் கட்சி நிதியிலிருந்து கொடுக்கும்படி சோனியா உத்தரவிட்டிருக்கிறார். அதை பெற்று வந்து சென்ற வார இறுதியில் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு எம்பி கொடுத்துவிட்டார். ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பராகவும் இளைஞர் காங்கிரசின் தேர்தல் குழு தலைவராகவும் இருப்பதால் மாணிக்கத்தாகூர் எம்பியால் இதை செய்ய முடிந்திருக்கிறது. ( ராகுலின் நம்பிக்கைகுரிய இன்னொருவர் மீனாட்சி நடராஜன். தமிழர். இப்போது அவரும் எம்பி) மேலும் பல நன்மைகள் செய்ய வாழ்த்துகள். சென்ற வாரம் நான் தலைநகரத்தில் இருந்த போதே அறிந்துகொண்டேன். நேற்று பத்திரிக்கையிலும் வந்தது. இதைக் கூட அதிகாரப் பூர்வ செய்தியாக போடாமல் புரளிபேசும் பகுதியில் போட்ட தினமலர் வாழ்க. அந்த விபத்தில் காயமடைந்தவர்களை பார்க்க எம்பி சென்றிருந்த போது எடுத்த புகைப் படங்களை காண நேர்ந்தது. பட்டாசுத் தொழிலையே ஒழிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அதை நம்பி இருப்பவர்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்யலாம். மிகக் கொடுமை அவர்கள் வாழ்க்கை.

***

மாணிக்கதாகூர், சிவகங்கையை சேர்ந்தவர். பிறந்து வளர்ந்தது இங்கு தான். அவர் தந்தை , பள்ளி ஆசிரியர். ரவீந்திரநாத் தாகூர் மீது அதிக பிரியம் கொண்டவர். அதனால், தன் தந்தையின் பெயரான மாணிக்கத்தையும் தாகூரின் பெயரையும் இணைத்து மகனுக்கு மாணிக்கத் தாகூர் என பெயர் வைத்துவிட்டார். பலரும் நினைப்பது போல் அவர் பெயர் மாணிக்தாகூரோ டெல்லியில் இருப்பதால் அரசியலுக்காக தாகூர் என்று சேர்த்துக்கொள்ளவோ வட இந்தியாவை சேர்ந்தவரோ இல்லை. சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர் தான். தேசிய மாணவர் கங்கிரஸ் துணைத் தலைவர் போன்ற பதவிகளின் அனுபவம் மூலமாக இப்போது தேசிய பொது செயலாளர் மற்றும் தேர்தல் குழு தலைவர். வழக்கறிஞரும் கூட.

***

2 நாட்களுக்கு முன் கோவையில் மேட்டுபாளையும் சாலையில் ஒரு மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் விழுந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக அது சாலையில் விழாமல் எதிர்புறமாக( அல்லது பின்புறமாக) கவிழ்ந்துவிட்டது. அதனுடன் சேர்ந்து சில மின் கம்பகளும். இவைகள் எல்லாம் சாலையில் விழுந்திருந்தால் எவ்வளவு உயிர்பலி ஆகி இருக்கும் என நினைத்தாலே நடுங்குகிறது. இதுக்கெல்லாம் ஆற்காட்டார்ரை நொந்துக்க முடியாது. அவருக்கு கருணாநிதி வீட்டில் எவ்வளவு வேலை பாவம். இல்லைனாலும் இதை எல்லாமா பார்த்துட்டு இருக்க முடியும்?.. இங்கிருக்கும் மின்வாரிய அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. இந்த லட்சனத்தில் மாதம் ஒரு நாள் பராமரிப்புப் பணிக்கான மின் விடுமுறை வேறு. இம்சை அரசன் படத்தில் வடிவேலு பேசும் வசனம் தான் ஞாபகம் வருகிறது. ( காலை 9 மணிக்கு வருவது. இடையில் 1 மணி நேரம் உணவு விடுமுறை. மாலை 6 மணிக்கு சென்று விடுவது. கேட்டால் அரசாங்க உத்தியோகம் என பீற்றிக் கொள்வது. )

***

ஒரு சந்தோஷ செய்தி.. அடுத்த கல்வி ஆண்டு பிஎட் படிப்புக்கான சேர்க்கைக்கு தடை விதிக்கப் படுகிறதாம். கேட்கவே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.. வாழும் வள்ளல் கருணாநிதி வாத்தியாருங்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கினாலும் வழங்கினார், இவங்க அழிச்சாட்டியம் தாங்கலை.. ஊர்ல இருக்கிறவன் எல்லாம் பிஎட் படிச்சிடறாங்க. சரி நல்லா படிக்கட்டும். வாத்தியார் வேலைக்கும் போகட்டும். வழக்கம் போல வெட்டியா சம்பளமும் வாங்கி குவிக்கட்டும். அதில்லை பிரச்சனை. கல்யாணம்னு வரும் போது இவங்க பந்தா இருக்கு பாருங்க. அட அட.. தாங்கல.. டீச்சரக்கா வாதியார் மாமாவத்தான் கட்டிப்பாங்களாம். வாத்தியார் மாமா டீச்சர் அக்காவத்தான் கட்டிப்பாராம். குலத் தொழில் மாதிரி இது குலக்கல்யாணம் போல. அப்போ மத்த அக்காக்களும் மத்த மாமாக்களும் எங்க தான் போவாங்க அல்லது போவோம்?.. ஹ்ம்ம்.. இதெல்லாம் சொந்த வாழ்க்கை சோகம்.. உங்க கிட்ட பொலம்பி என்ன ஆகப் போகுது? :)) ஆனாலும் அடுத்து வரவங்களாவது நல்லா இருக்கனும்னா இந்த வாத்தியார் படிப்பை தடை பண்ணியே ஆகனும். ஏற்கனவே படிச்சி கிழிச்சவங்களுக்கு வேலை குடுத்தாலே இன்னும் சில பல நூற்றாண்டுகளுக்கான தேவை தீர்ந்துடும்.

***

டில்லி போகும் மகா ஜனங்கள் மறவாமல் அடையாள அட்டை கொண்டு செல்லவும். அதில்லைனா தண்ணிக் கூட குடிக்க முடியாது போல. நம் நாட்டில் நம் மீதே சந்தேக நிழல் படியவைத்து வெற்றிக் கண்ட தீவிரவாத பெருமக்கள் வாழ்க.

Read more...
Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP