குடி மக்களாட்சி


சமீபத்தில் ஒகேனக்கல் செல்லும் வழியில் ஒரு அரசாங்க சாராயக் கடை முன்பு கண்ட காட்சி அதிர்ச்சியாக இருந்தது. ரயில்நிலைய பயணிகள் வரிசை மாதிரி அவ்வளவு பெரிய குடிமக்கள் வரிசை. அடுத்த நாள் ஊரில் இருக்கும் அரசாங்க சாராயக் கடை திறக்கும் முன் வாசலை அடைத்துக் கொண்டு மிகப்பெரிய கூட்டம். அது குடியிருப்புப் பகுதி. ஒதுக்குப் புறங்களில் வைத்துத் தொலையலாமே. ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க இப்படி வரிசையில் காத்திருப்பார்களா இவர்கள்?.அது பெண்கள், பிள்ளைகள் வேலை. காலையில் காய் கறி வாங்க கடைக்கு அனுப்பினால் போக மாட்டார்கள். ஆனால் சாராயக் கடைக்கு வந்து காத்திருக்கிறார்கள்.

எல்லாப் புகழும் கழகங்களுக்கே. கழக அரசாங்கம் வெளியிட்ட வருடத்தின் முதல் சாதனை அறிக்கையே சாராயம் விற்று சம்பாதிச்சதைப் பற்றி தான். குடிப்பழக்கத்தால் விபத்துகளின் எண்ணிக்கையும் உயிர் பலியும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. குற்றங்களின் எண்ணிக்கையும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்திருக்கிறது. குடிபோதையில் வாய்த்தகராறுகள் கொலையிம் முடிந்தவை ஏராளம். தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளைத் திறந்து சேவை செய்கிறது அரசாங்கம்.

அவ்வப்போது விலைகளையும் உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அரிசி பருப்பு, வெளியிலிருந்து வாங்கி விற்கும் பெட்ரோல், எரிவாயு போன்றவை விலை உயர்ந்தால் கதகளியே ஆடுகிறோம். சாராய விலையை உயர்த்திக் கொண்டே இருப்பதற்கு யாராவது எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களா? என்ன விலை குடுத்தும் குடிப்போம் என நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு அரசாங்கமே மக்களை சாராயத்திற்கு அடிமை ஆக்கி வைத்திருக்கிறது. மக்களிடம் சாராயம் விற்று பிடுங்கும் காசிலிருந்து பொருகள் வாங்கி அவர்களுக்கே இலவசமாய்த் தருகிறார்கள். ஏமாளிகள் இதற்குத்தான் வாக்களிக்கிறார்கள்.

எவ்வளவு விலை உயர்த்தினாலும் எதிர்ப்பில்லாமல் வாங்கிக் குடிக்கும் சாராய அடிமைகளைக் கேட்டால், உழைப்பதால் வரும் உடல் உழைப்பையும் மன உளைச்சலையும் போக்கத் தான் குடிப்பதாக சொல்கிறார்கள். குடிக்காதவர்களுக்கெல்லாம் மன உளைச்சலே இல்லை பாருங்க. பொங்கல் அன்று விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாணவர், காலையில் 2 மணி நேரம் மூட்டைத் தூக்கிவிட்டு சம்பாதித்து தினம் கல்லூரிக்கு சென்றதாக சொன்னார். அவருக்கு உடல் வலிக்காதா? தினம் குடித்துவிட்டா படிக்க சென்றார்?.

அடுத்த தேர்தலில் சாராயத்திற்கும் மானியம் அளித்து ரேஷன் கடைகளில் வழங்கப் படும் என எந்தக் கழகமாவது அறிவித்தால் குடிமக்களின் மொத்த வாக்குகளையும் அள்ளிவிடலாம். அது குடி மக்களுக்கான குடியாட்சி என பெருமையாக பீற்றிக் கொள்ளலாம். இந்தப் பொழப்புக்கு...


சாராயம் விற்றவர்கள் கல்வித் தந்தைகளாகி அரசியல் அதிகாரத்திற்கு வந்தால் அவர்கள் மூளையில் வேறு என்ன திட்டம் வர முடியும்?.நாம் இனியும் அரசியலை பழித்து ஒதுங்கியே இருப்போம். இந்த நாடும் நாட்டு மக்களும்.....

நட்புடன் ஜமால்  – (January 20, 2010 9:36 AM)  

தங்கள் ஆதிர்ச்சி எனக்கு ஆச்சர்ய்மா இருக்கு.

குழலி / Kuzhali  – (January 20, 2010 10:38 AM)  

//.நாம் இனியும் அரசியலை பழித்து ஒதுங்கியே இருப்போம். இந்த நாடும் நாட்டு மக்களும்.
//
ஸோ அதுக்காக என்ன செய்ய சொல்றீங்க எல்லோரையும் காங்கிரஸ்ல சேர சேர்ந்து ராகுல்காந்திக்கு ஓட்டு போட சொல்றீங்களா? நோ ஸ்மைலி சீரியசாவே கேட்கிறேன்

seeprabagaran  – (January 20, 2010 11:20 AM)  

“தமிழகம் அனைத்திலும் முன்னேறி இருக்கிறது மக்களிடம் பணப்புழக்கம் கழகத்தின் ஆட்சியில் அதிகமாக இருக்கிறது என்ற பொறாமையை தங்களை இந்த பதிவு எழுத தூண்டியிருக்கிறது.” என்று கருணாநிதி விரைவில் தங்களுக்கு விரைவில் கேள்வி பதில் அறிக்கையில் பதில் சொல்வார்.

தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் காப்பாற்றா தமிழ்நாட்டில் யாருமே இல்லையா???????????

SanjaiGandhi™  – (January 20, 2010 11:48 AM)  

mr kolavi.. y dont u start a new political party?

கும்க்கி  – (January 20, 2010 4:49 PM)  

அடுத்த தேர்தலில் சாராயத்திற்கும் மானியம் அளித்து ரேஷன் கடைகளில் வழங்கப் படும் என எந்தக் கழகமாவது அறிவித்தால் குடிமக்களின் மொத்த வாக்குகளையும் அள்ளிவிடலாம்...

அடக்கடவுளே....ஆட்சேபிக்கிறேன் பேர்வழி என்று அய்டியா கொடுத்துக்கொண்டிருக்கிறீர்....

கும்க்கி  – (January 20, 2010 4:54 PM)  

நேற்று நண்பருடன் பேசிக்கொண்டிருந்தது உமது டெலிபதியில் தெரிந்து விட்டதோ...

அரிசி கிலோ ரூ100+
பருப்பு கிலோ ரூ150+
சமையல் எண்ணெய் லிட்டர்200+
பெட்ரோல்+டீசல் லிட்டர்250+
காய்கறிகள் குறைந்தபட்சம்
கிலோ ரூ100+

ஆனாலும் டாஸ்மாக் சோமபானங்கள் தனிநபர் அளவு நிர்ணயிக்கப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் அனைத்து வகையும் இலவசம்....

எப்பூடி நம்ம அய்டியா...?

அன்புடன் அருணா  – (January 20, 2010 7:39 PM)  

/நாம் இனியும் அரசியலை பழித்து ஒதுங்கியே இருப்போம்/
ஆஆஆஆ....சரியான குட்டு!...மண்டை வலிக்கிறது.

குறை ஒன்றும் இல்லை !!!  – (January 20, 2010 8:17 PM)  

என்னது காந்திய சுட்டுடாங்களா?

குறை ஒன்றும் இல்லை !!!  – (January 20, 2010 8:20 PM)  

//ஸோ அதுக்காக என்ன செய்ய சொல்றீங்க எல்லோரையும் காங்கிரஸ்ல சேர சேர்ந்து ராகுல்காந்திக்கு ஓட்டு போட சொல்றீங்களா? நோ ஸ்மைலி சீரியசாவே கேட்கிறேன்//

:))))))))))))))))))))))))

குறை ஒன்றும் இல்லை !!!  – (January 20, 2010 8:27 PM)  

ஹா ஹா ஹா.. என்ன கொடுமை இது இவ்ளோ நாளா காங்கிரஸ் என்ன விளக்கு பிடிச்சிட்டு இருந்துச்சா?


பாருங்க சில சமயம் உண்மை மட்டுமல்லாம வேறு சிலதும் சுடுது!!!! நான் பொதுவா சொன்னேன்..

குறை ஒன்றும் இல்லை !!!  – (January 20, 2010 8:37 PM)  

ஆகவே மக்களே ..

ஒரு நாள் ஏழை,தங்கும் ஓரு நாளிலேயே சம்மந்தப்பட்ட குடும்பத்தை வாழ வைக்கும் இத்தாலியைச் சேர்ந்த இந்திய குடிமகர் ராகுல் கோஸ்(அப்படின்னு தான் நினைக்கிறேன்) ஓட்டளித்து இந்தியாவை வாழ வைப்போம் ..

ஜெய் ஹிந்த் !!!!!!

SanjaiGandhi™  – (January 21, 2010 10:30 AM)  

//இது இவ்ளோ நாளா காங்கிரஸ் என்ன விளக்கு பிடிச்சிட்டு இருந்துச்சா?//

உங்கள் தொழிலை செய்ய காங்கிரஸ் என்றுமே விரும்பாது. கவலை இல்லாமல் நீங்களே தொடர்ந்து விளக்க்ப் பிடியுங்கள்.

SanjaiGandhi™  – (January 21, 2010 10:33 AM)  

அரசியலை எதிர்ப்பவர்கள் பற்றி பொதுவாகத் தான் எழுதி இருக்கிறேன். ராகுல்காந்தியை ஆதரிக்கவோ காங்கிரசில் இணையவோ சொல்லவில்லை. ராஜ்குமார், உங்க அப்பா ஒன்றிய துணை செயலாளரா இருக்கும் திமுகவில் இணைந்தும் நீங்கள் நல்லது செய்ய முடியுமே.. ஹிஹி.. அதுக்கெல்லாம் விட மாட்டாங்கன்னு தான் அடுத்த கட்சியை குறை சொல்றிங்களா?.

கோவி.கண்ணன்  – (January 21, 2010 10:56 AM)  

குடி குடியைக் கெடுக்கும் !

:)

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ  – (January 21, 2010 11:24 AM)  

//ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க இப்படி வரிசையில் காத்திருப்பார்களா இவர்கள்?.அது பெண்கள், பிள்ளைகள் வேலை. காலையில் காய் கறி வாங்க கடைக்கு அனுப்பினால் போக மாட்டார்கள். ஆனால் சாராயக் கடைக்கு வந்து காத்திருக்கிறார்கள்//

இதற்கும்

//எல்லாபுகழும் கழகங்களுக்கே//

என்ன சம்பந்தம்?

SanjaiGandhi™  – (January 21, 2010 12:12 PM)  

ஜோ அமலன்,

தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளைத் திறந்து சாராய அடிமைகளாக்கியது கழகங்கள் தானே. வரிசையில் நிற்கும் அளவுக்கு அடிமை ஆக்கியது யார்? சாராயத்திற்கு வரிசையில் நிற்பவர்கள் மேற் சொன்னவற்றிற்கு நிற்பார்களா?

குறை ஒன்றும் இல்லை !!!  – (January 21, 2010 2:36 PM)  

//உங்கள் தொழிலை செய்ய காங்கிரஸ் என்றுமே விரும்பாது. கவலை இல்லாமல் நீங்களே தொடர்ந்து விளக்க்ப் பிடியுங்கள்.//
ஹா ஹா ஹா ... என்னது காங்கிரஸ் விளக்கு பிடிக்காதா? அட!!!! குத்வரோசி , அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் போன்றவர்களுக்கெல்லாம் என்ன பிடித்தது என நீங்க தான் விளக்கனும் !!!
நாங்க பிடிக்கும் விளக்கு இருட்டை விலக்கும் ஆனால் தற்போதைய கழக ஆட்சிக்கு நீங்கள் பிடிக்கும் விளக்கு திருட்டை பெருக்கும்!!!!

குறை ஒன்றும் இல்லை !!!  – (January 21, 2010 3:13 PM)  

//ராஜ்குமார், உங்க அப்பா ஒன்றிய துணை செயலாளரா இருக்கும் திமுகவில் இணைந்தும் நீங்கள் நல்லது செய்ய முடியுமே//
எங்க அப்பா தான் கழகத்தில இருக்காரு அதுவும் சும்மா இல்ல இருபது வருசமா இருக்காரு ஆனா ஆண்டமொனிய அம்மையார் மாதிரி பின் வாசல் வந்தவங்க இல்ல ...

//ஹிஹி.. அதுக்கெல்லாம் விட மாட்டாங்கன்னு தான் அடுத்த கட்சியை குறை சொல்றிங்களா?.//
எங்க அப்பா தான் கழகத்தில இருக்காரு அதுவும் சும்மா இல்ல இருபது வருசமா இருக்காரு ஆனா ஆண்டமொனிய அம்மையார் மாதிரி பின் வாசல் வந்தவங்க இல்ல ...
நான் எந்த கட்சிலேயும் இல்லேங்க ஆனா நீங்க தொண்டர்கள விட அதிக தலைவர்கள் உள்ள பாரம்பரிய காங்கிரசில் இருக்கீங்க இல்லே!!!!
கழக ஆட்சி தப்பு பண்ணினா ,அதுக்கு துணையா இருக்கிற உங்க காங்கிரஸ் மட்டும் என்ன ரொம்ப சுத்தமோ ? தப்பு பண்றத விட அதுக்கு துணை போறது உங்க காங்கிரஸ் தானே ?

SanjaiGandhi™  – (January 21, 2010 4:26 PM)  

ராஜ்குமார், உங்க பொழப்பே சம்பந்தம் இல்லாம பேசி திசை திருப்பறது தான்.. நீங்க கமெண்ட் போடாதிங்கன்னு கூட சொல்லிப் பார்த்துட்டேன்.. இதுக்கு மேல உங்களுக்கு எப்டி சொல்றதுன்னு புரியலை. பதிவு எதைப் பத்தி இருக்கு, நீங்க எதப் பத்திப் பேசறிங்க? உங்கப்பா எந்த வழியில வந்தார்னு விசாரிச்சா தான் தெரியும். உங்க கட்சிக் காரங்க பதவிக்கு வர உபயோகிக்கும் வழி எங்களுக்குத் தெரியாதா? விடுங்க சார். :)) நிங்க எந்தக் கட்சியிலும் இல்லைன்னு விடற புருடாவ நாங்க நம்பனுமா? திமுக பத்தி எழுதினா மட்டுமே அந்த ஒடுங்கின சொம்ப தூக்கிட்டு ஓடி வரிங்க.. இல்லைனா வரதில்லை.. ஆனா இவருக்கு கட்சி சார்பில்லையாம்.. ஸ்ஸபாஆஆஆஆ.. இப்போவும் சொல்றேன். என் பதிவுல ஒரு பேர் இருக்கிறதை விரும்பலைனா அது உங்களோடது மட்டும் தான். நானும் எவ்ளோ பேர்கிட்ட பேசி இருக்கேன். உங்கள் மாதிரி மூன்றாம் தர ஆளுங்கள தான் சகிக்கவே முடியறதில்லை. தயவு செய்து நீங்க எனக்கு பின்னூட்டம் போட வேண்டாம். உங்களால நானும் தேவை இல்லாதத எல்லாம் பேசித் தொலைய வேண்டி இருக்கு. உங்க லெவல்க்கு எறங்க வேண்டியும் இருக்கு. விட்ருங்க ப்ளீஸ்.

ஜோதிஜி  – (January 21, 2010 8:59 PM)  

1. அன்புடன் அருணா சொல்லி உள்ளதை விரைவில் ஒரு இடுகை வாயிலாக வரும். தெளிவான புரிதலுடன்.

2. கேள்வி பதில் அறிக்கை உண்மை. வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

3. குடிசைக்கு வாக்கு அள்ளிவிடலாம் என்பது கூட முற்றிலும் உண்மையாகும் வாய்ப்பு அதிகம் தான்.


என்னடா உங்கள் கருத்துக்களை விமர்சனம் செய்யவில்லையே என்று பார்க்கிறீர்களா? திருப்பூர் கடைகளில் வந்து காலை முதல் நடு இரவு வரைக்கும் அம்மும் மக்களைப் பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

அதற்கு மேலும் கொங்கு பார்ட்டிகள் கள் இறக்கும் போராட்டத்தை இறப்பு போராட்டம் போல் முடித்து வைத்தது சற்று வருத்தம்.

Sammy  – (January 23, 2010 10:25 PM)  

//குடிபோதையில் வாய்த்தகராறுகள் கொலையிம் முடிந்தவை ஏராளம்//

சாராயம், குடி...இதெல்லாம் சமுதாயத்திற்கு கேடு உண்டு பன்னுவது என்பதில் மறு பேச்சு இல்லை..
ஆனா.....இதற்கு மானியம் கொடுத்து ...இதை ஒட்டு வங்கியாக அரசியல் கட்சிகள் உபயோகம் பண்ண முடியுமா ?. எனக்கு தோன்றவில்லை

SanjaiGandhi™  – (January 26, 2010 11:15 PM)  

நன்றி ஜமால்.. நிஜமாவே அதிர்ச்சி தான்..

குழலி, நான் பொதுவான அரசியல் வெருப்பு பற்றி தான் சொல்லி இருக்கிறேன்.. காங்கிரஸ் , ராகுல்காந்தி என்றேல்லாம் எதும் சொல்லவில்லை..

நன்றி ப்ரபாகரன்.. இல்லைனு தான் நினைக்கிறேன்..

நன்றி கும்கி. நாம என்ன ஐடியா குடுக்கிறது.. 200 தொகுதிகள் வெல்லனுமாம்.. எதுவும் எதிர்பார்க்கலாம்.

நன்றி அருணாக்கா.. சிலர் இதுக்கும் சப்பைக் கட்டுக் கட்றாங்க..

நன்றி கோவியாரே.. யார் குடியை? :))

நன்றி ஜோ அமலன்..

நன்றி ஜோதிஜி.. கள் இறக்கும் போராட்டம் பொது நலன் இல்லை.. கொங்கு மண்டல தென்னந்தோப்புக்காரர்களின் சுயநலன் தான்.. அதனால் அது எக்கேடோ கெட்டு ஒழியட்டும் விடுங்க பாஸ்..

என்ன சாமி அப்பாவியா இருக்கிங்க.. ஓட்டு வாங்கறதுல சாராயத்தோட பங்கு மிக முக்கியமானது..

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP