நானும் ரவுடிதான்.. ஜெமோ சந்திப்பில் கடைசிவரை
கடந்த வார இறுதியின் ஒரு பொன்மாலைப் பொழுதில் சன்மார்க்க சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் சந்திப்பில் கலந்து கொள்ள செல்வேந்திரன் விடுத்த அழைப்பை ஏற்று விழாவை சிறப்பித்து வந்தேன்.
ஜெமோ இலக்கியக் கூட்டம் என்பதால் சாருவின் ரசிகர்கள் உ.க.வுடன் வருவார்களோ என உதறலுடனே தான் தாமதமாகவே சென்றேன். ஒருவர் பேசி அமற இன்னொருவர் பேச அடுத்தவர் அமர்ந்தே இருந்தார். அவரைக் கண்டதும் வெளியே செல்ல முயற்சித்தவனை மறித்த ஒருவர் ஏனென வினவினார். மன்னிக்கவும் , ஜெமோ சந்திப்பிற்கு போகனும் வாகை சந்திரசேகர் நிகழ்ச்சிக்கு தவறுதலாய் வந்தேனென்றேன். இவர்தான் ஜெமோவென்றாரவர். அட! நடிகர் வாகை சந்திரசேகரர் தான் கழகக்கறை விடுத்து மாற்றுடையில் வந்தாரோ என் நினைத்தேன். ஜெமோ மீசை மழித்து சந்திரசேகர் சாயலில் தான் இருந்தார். அமர்ந்த சற்று நேரத்தில் இருவர் என்னை நோக்கி கொலைபார்வையுடன் வந்தார்கள். அய்யா, நான் வெளியேறிய போது அவர் தான் உள்ளே இழுத்துவிட்டார் அடிக்காதிர்கள் என்று முடிபப்தற்குள் செருப்பை வெளியே விட சொன்னார்கள். வெருப்போடு வந்தாலும் செருப்போடு வராதிர்கள் என்கிறார்களோ..( சரி சரி விடுங்க.. இதுக்குப் போய் அழுதுட்டு ). ஜெமோவிற்கு போட்டியாய் சூர்யா கலந்து கொண்ட கலை நிகழ்ச்சியையும் தினமலர் சாம்சங்கின் மாபெரும் பொருட்காட்சியையும் தவிர்த்து இலக்கியக் கூட்டத்திற்கு இத்தனைப் பேர் வந்திருந்தது ஆச்சர்யம். சாரு கவனிக்க.
பேசியவர் அமர அடுத்தவர் எழுந்தார் பின் அமர்ந்தார் நடுநாயகமாய். அவரை நாஞ்சில்நாடன் என அழைத்தாரிவர். அமர்ந்தவர் அருகில் இருந்தவர்கள் பார்வையாளர்களாக புதிய மைக் அமைப்பில் இவர் பொன்னம்பல அடிகளாராய் மாறினார். அவரை இந்துமதவாதி என்பதாக குறைபட்டார். ஆரம்ப உரையாற்றினாரோ என்னவோ இப்போது கேள்விகளை கேளுங்கள் என்றார். ஆரம்ப கேள்வியை ஞானி ஐயா பதிலைவிட பெரிதாக கேட்டார் அல்லது சொன்னார். மிகவயதாகினும் நினைவாற்றலில் அசத்தினார். பின் தொடரும் நிழல் , கொற்றவை, விஷ்ணுபுரம் என அனைத்தையும் பிரிக்காமலே மேய்ந்தார். ஜெமோவின் அரசியல் பார்வை கேட்டார். எழுத்தாளனுக்கு ஒரு அரசியல் பார்வை இல்லை என்றார் ஜெமோ. எலலா கதாபாத்திரத்திற்கும் தனி பார்வை இருக்க வேண்டுமென்றார். ஆர்எஸ்எஸ்காரன் இல்லை என்றார்.
தமிழில் யோசித்து மளையாளத்தில் எழுதி சாதிக்கும் ஆர்வமில்லையென்றார். தமிழே போதுமாம். அங்கே வருமானம் மிக அதிகமாம்.மளையாளத்தில் ஒரே பிரபல எழுத்தாளரின் வறுமை நினைவுக்கு வந்தது. ஜெமோ.. எனி உள்குத்து?. எதிர்மறை விமர்சனம் பற்றி சூடான கேள்வியை வா.மணிகண்டன் வீச , ஜெமோவை நெருங்கும் முன் ஞானி ஐயா மறித்தார். இது போன்றவைக்கு பதில் சொல்லி நேரம் வீணடிக்க வேண்டாம் என்றார். வடபறிவேலன்கள் தொல்லை தாங்கலை. வீணானது ஒரு வடை. ஆனால் ஜெமோ விடலயே. தன் வாசகர்கள் தரமானவர்கள், சோப்புத் தேவையில்லை, அன்பால் சேர்ந்த கூட்டம் , அடியாட்கள் இல்லை... ஸ்ஸ்ஸபாஆஆஆஆ
விஷ்ணுபுரம் 10 பக்கத்தை தாண்ட முடியலை என்றார்கள் பலரும். ஈழ ஆயுத போராட்டம் பற்றிய கேள்விக்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இறந்தேவிட்டன புரட்சிகள், இப்போது முட்டாள்தனம் என்றார். இலங்கையில் ஒரு குடும்பத்தை சுட்ட போராளி நண்பர் இன்று அதில் இரு குழந்தைகளின் நான்கு கண்களை நினைத்து தினம் அழுகிறாராம். யாரின் அதிகாரத்திற்கோ மேற்கின் சூழ்ச்சிக்கோ விழுந்ததாகவும் இப்போது தவறை உணர்ந்ததாகவும் சொன்னாராம். வென்ற புரட்சிகளுக்கு தற்போதைய உதாரணம் கேட்டார் கேட்டவரிடம். மவுனம். சம்மதமா?. மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர், சீனாவின் வால்தனம் பற்றி வெல்லுமா இந்தியா சிதறுமா எனக் கேட்டார். கொடுமை. ஜெமோ எப்போ வெளியுறவு அமைச்சரானார்?. சிரிக்காமல் ஜெமோவும் பதிலளித்தார். ஒரு அழுகுரல் கேட்டிருக்குமோ அவருக்கு?
நக்சலைட்டுகள் மக்களுக்காக போராடுவதில்லையாம். அவர்களை அடிமை படுத்திக் கொல்கிறார்களாம். கதைகளில் சரக்கடிபப்தைப் பற்றி விவரமாக எழுதுவதைப் படித்து ஏராளமனோர் பாட்டிலோடு வந்தார்களாம். பழக்கம் இல்லை என பத்திரிக்கை செய்தி கொடுத்து நிறுத்தினாராம்.தெரிந்ததை மட்டும் எழுதுவதால் சுந்தரராமசாமி சிறந்த எழுத்தாளர் என்றும் தெரியாததையும் எழுதுவதான் தான் மிகச்சிறந்த எழுத்தாளர் என்றும் அவரிடம் விளையாடினாராம். சுஜாதா எழுதியது டெக்னாலஜி ஃபிக்ஷன் தான் சைன்ஸ் ஃபிக்ஷன் இல்லை என்றார். வேறுபாடு உள்ளதாம். கா.சி சிவக்குமாரின் எழுத்தை சிலாகித்தவரிடம் சிவந்துவிட்டார். அவர் தரத்தில் தினம் ஐம்பதாயிரம் பக்கம் வருகிறதாம். அவர் தரம் போதுமென்றால் என் கூட்டத்திற்கு ஏன் வர வேண்டுமென்றார் அரசியல்வாதி ஜெமோ. முதல் வரிசையில் தொட்டுவிடும் தொலைவில் உட்கார்ந்திருந்தவன் தன் சிறுகதை கூட படிச்சதில்லை என்பது தெரியாது போலும்.
செம்மொழியாய் தமிழிருக்க தாங்களே(எழுத்தாளர்கள்) காரணமென்றார். திருப்பூர் கம்யூனிஸ்ட் ஒருவர் புரியாத மொழியில் எழுதாமல் பாமர பாஷையில் எழுத சொன்னார். பத்தாம் வகுப்புடன் நில்லாமல் பனிரெண்டாம், கல்லூரிகள் எதற்கென்றார் ஜெமோ. மொழியாக்கம் செய்ய அனுமதி வேண்டுமா என்ற சென்ஷி கும்பகோணத்திற்கு, அனுமதிக்கும் உரிமையாவது படைத்தவனுக்கு இருக்கட்டுமே என்றார். எல்லாரும் அரசியல், சினிமாவை எழுதுவதால் தான் விலகி இருப்பதாக சொன்னார். அதையே அனைவரும் எழுதினால் பிற யார் எழுதுவார் எனக் கேட்டார். கதையில் தகவல் தரும் ஜெமோவின் முயற்சியை ஆதாரத்தோடு செல்வேந்திரன் புகழ்ந்தார்.
கடந்த பத்தாண்டுகளில் தான் ரசிக்கும் ஒரு கவிதையும் இல்லை என்றார் இளாங்கோ கிருஷ்ணனுக்கு. சாரு நிவேதிதா பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. சாரு மட்டும் ஏன்?..ஆரம்பத்தில் சொம்பைத் தூக்கிய ஞானி இறுதியில் சோனியாகாந்தி, மன்மோகன், கருணாநிதி, ராஜபக்ஷே, அவன் இவன் அயோக்கியன் என கர்ஜித்தார். கம்யூனிஸ்டாச்சே. வா. மணிகண்டன் சிரித்திருப்பார் மனதிற்குள். நானும்..இன்னும் எதெதோ மறந்துவிட்டேன்..
நினைவுபடுத்துகிறேன் : இலக்கிய?! சந்திப்பு பற்றிய பதிவிது.

ஹா ஹா.. கடைசி வரி படித்துவிட்டு
ஆரம்பத்தில் கொஞ்சம் தலை சுத்துவது போல் இருந்தது.. அப்புறம் சரியாகி விட்டது.. ;-)
சொல்லாம விட்டுட்டேனே.. நான் ஜெ.மோ. ரசிகன்.. :-)
//
நினைவுபடுத்துகிறேன் : இலக்கிய?! சந்திப்பு பற்றிய பதிவிது.
//
ஹா ஹா ஹா
கொஞ்சம் சூடு ஆறியிருந்த நெருப்பை ஊதி பத்தி வச்சூட்டிங்களே பரட்ட.
எனக்குக் கடைசி வரைககும் தலை சுத்திச்சு!
அல்லோ யாரு...
சஞ்செய் கந்தியா....நல்லாருக்கீங்களா அய்யா....
சரிங்க வச்சுடறேனுங்க.
ஒரு ம ...வும் புரியல!
(மண்ணும்)
என்னளவில் ஜெயமோகன் ஒரு உதிர்ந்த “ஆ*ன ரோ**”. சஞ்சய் அண்ணே, உங்க மேல இருக்க மரியாதைக்காக என் கமெண்ட்ட நானே சென்சார் பண்ணி எழுதுறேன்.
:))
நல்ல பகிர்வு நண்பரே.
சஞ்சய் அப்பவே சொன்னேன். உங்களுக்கு இதெல்லாம் ஒத்துக்காது. போகவேண்டாம்ன்னு கேட்காம போய் இப்படி ஆயிடுச்சே... மந்திரிக்க ஆள் தேடனும் :))
நினைவுபடுத்துகிறேன் : இலக்கிய?! சந்திப்பு பற்றிய பதிவிது.//
அதான் ஒன்னும் புரியல.
ஆரம்பத்தில் ஒண்ணும் புரியல...போக போக ஏதோ புரிஞ்சுச்சு...
:))))))
உங்களைச் சந்தித்திருக்கலாம். எனக்கு நீங்கள் கூட்டத்தில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
//உங்களைச் சந்தித்திருக்கலாம். எனக்கு நீங்கள் கூட்டத்தில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
//
வா.மணிகண்டன் இது எப்படி தெரியுமா இருக்கு, நாமக்கல் வரை போய் ஆஞ்சனேயரை பார்க்காமல் வந்த மாதிரி இருக்கு!
வா.மணிகண்டன் இது எப்படி தெரியுமா இருக்கு, நாமக்கல் வரை போய் ஆஞ்சனேயரை பார்க்காமல் வந்த மாதிரி இருக்கு!//
அதானே!! :))
//உங்களைச் சந்தித்திருக்கலாம். எனக்கு நீங்கள் கூட்டத்தில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
//
வா.மணிகண்டன் இது எப்படி தெரியுமா இருக்கு, நாமக்கல் வரை போய் ஆஞ்சனேயரை பார்க்காமல் வந்த மாதிரி இருக்கு!//
:)))
கலக்கல் பதிவு....
ஒரு எலக்கியவியாதியின் எலக்கிய நிகழ்ச்சியை இவ்ளோ எளக்கியவிதமாக எழுதியிருக்கும் தம்பி எளக்கியவியாதி சஞ்சய்க்கு நன்றி..!
:))
சஞ்சய்,
எனக்கும் நீங்க இருந்தது தெரியல. நான் பாதிலயே எழுந்து போய்டேன். அது ஒரு ரசிகர் மன்ற பொதுக்குழு ரேஞ்சுக்கு நடக்கும்னு எதிர்பார்க்கல.
குழலி
தமிழ்பிரியன்
ஜோ
காவேரிகணேஷ்
அருணாக்கா, படிச்சதுக்கேவா? :)
கும்கி
குசும்பன், ஹிஹி.. இதத்தான் மாமா எதிர்பார்த்தேன்.. புரியறதெல்லாம் இலைக்கியமில்லை.. :)
விஜய் கூல்.. கூல்ல்..
நிஜமா நல்லவர்,
சரவணக்குமார்
மயில்
குடுகுடுப்பை
மேனகாசிஸ்டர்
ராஜலக்ஷ்மி
வா.மணிகண்டன், முடிந்தபின் அவசரமாக கிளம்ப வேண்டி இருந்ததால் சந்திக்க இயலவில்லை.. விரைவில் சந்திப்போம்..
கார்த்திகா, என்ன் கொடுமைடா இது? எப்டி தான் பார்த்ததும் கண்டுபிடிக்கிராங்களோ.. புதுசா வரவங்களாம் கலாய்க்கிறாங்கய்யா..
பாஸ்கி
உ.தமிழன் அண்ணே, ரொம்ப புகழாதிங்கண்ணே.. :)
தமிழன் கருப்பி
கவிஞர் இளங்கோ.. விரைவில் மீண்டும் சந்திப்போம்..
..... அனைவருக்கும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
>>