ரப்பர் பஞ்சத்தை எற்படுத்திய ச்சீமான்

மாணவர்கள் உபயோகிக்கும் ரப்பருக்கு தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் அதனால் தேர்வுகளைத் தள்ளிப் போட தேர்வுத்துறை உத்தேசித்துள்ளதாகவும்  செய்திகள் கசிந்தவண்ண்ம் உள்ளது. கசிவை அடைக்கா அரசாங்கம் போர்க்கால நடவடிக்கையில் செயல்படுவதால் ப்ளம்பர்கள் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறதாம். இதனால் தேங்காய் எண்ணெய் வியாபாரிகள் குஷியில் இருக்கிறார்களாம்.அரசாங்க சாராயத்துக்கு இணையாக தேங்காய் எண்ணெய் விற்பனை ஆவதாக ஏஜென்ஸி செய்திகள் கூறுகின்றன. ரப்பர் பஞ்சத்தை உறுதிபடுத்த எமது புலனாய்வு சொரி சிறங்கு படையை க்ரேன் உதவியுடன் களத்தில் இறக்கினோம்.

எமது புலயாய்வுப் படை, இலங்கைத் தேர்வுத்துறையை.. சாரி புகடன் படிக்கும் நினைவில் சொல்லிவிட்டேன்.. தமிழகத் தேர்வுத்துறையில் முக்கிய அதிகாரிகளை அணுகினோம். ஜாதகம் தர விரும்பாத ஒரு மூத்த அதிகாரி,” உண்மைதான். தமிழகத்தில் யாரும் யூகிக்க முடியாத வகையில் மாணவர்கள் பயன்படுத்தும் ரப்பருக்கு பஞ்சம் வந்துவிட்டது.நாங்களும் எல்லா இடங்களிலும் விசாரித்துவிட்டோம். ஸ்டாக் இல்லை என்பதே பதில். கேரளாவுக்கு சென்று ரப்பர் தோட்ட விவசாயிகளை நேரடியாக அணுகினோம். தமிழகத்தில் இருந்து வந்து கூடுதல் விலை கொடுத்து வாங்கி சென்று விட்டார்களாம். அவர்கள் குழந்தைகளுக்குக் கூட இல்லையாம். பெரும் மர்மமாக இருக்கிறது. விஷயம் காவல் துறையின் விசாரணையில் இருக்கிறது” என்றார்.

தமிழக காவல்துறை உயர் அதிகார்களிடம் இது பற்றி விசாரித்தோம்.ரேஷன் பதுக்கலுக்கே பாதுகாப்புக் குடுக்க முடியாமல் .. இல்ல..இல்ல.. ரேஷன் பதுக்கலையே சமாளிக்க முடியாமல் தவிக்கும் போது நம் ஆட்ச்சிக்கு.. சாரி.. தமிழக அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என எதிர்க்கட்சிகள் செய்த சதியாகத் தான் இருக்கும். இதை கண்டுபிடிக்க ஏசி வாஞ்சிநாதன் தலைமையில் தனிப் படை அமைத்துள்ளோம். விரைவில் கழகத்தின் மீதான.. சாரி சாரி.. காவல் துறையின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்போம் ” என முடித்துக் கொண்டார் அந்த கழக அதிகாரி.

இந்த இதழ் அச்சேறுவதற்கு சில நொடிகள் முன்னர், வாஞ்சிநாதனின் விசாரணை அறிக்கை நம் ரகசிய சோர்ஸ்கள் மூலம் கிடைத்தது. அதை ரப்பரை பதுக்கியவர் பற்றியும் அதற்கான காரணமும் இருந்தது. விரைவாக கண்டுபிடித்து நம்மை ஆச்சர்யப் படுத்திய ஏசி வாஞ்சிநாதனுடன் தொலைபேசியில் பேசினோம். “ எந்தத் தடையமும் இல்லாமல் தவித்த எங்களுக்கு, முக்க்ஹீர்ரன் என்ற குஜால் பத்திரிக்கையின் இணையதளத்தில் வந்த செய்தி விசாரணைக்கு பேருதவியாக இருந்தது. அவர் வீட்டில் கைப்பற்றப் பட்ட ரப்பர்களை எல்லாம் எல்லா பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். மாணவர்கள் அதை பயன்படுத்தலாம். தேர்வுகள் பாதிக்காது” என்றார்.

அந்த செய்தி : காங்கிரசை அழிப்பதற்கு, எந்தவொரு செயலில் ஈடுபடவும் தயாராக இருப்பதாக இயக்குனர் சீமான் கூறினார்.

Sangkavi  – (January 29, 2010 10:35 AM)  

//காங்கிரசை அழிப்பதற்கு, எந்தவொரு செயலில் ஈடுபடவும் தயாராக இருப்பதாக இயக்குனர் சீமான் கூறினார்.//

அவர் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியில் உள்ள (கோஷ்டிகள் உருவாக்கி) பலர் இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்...

SanjaiGandhi™  – (January 29, 2010 10:39 AM)  

நன்றி ராபின்..

சங்கமேஸ், உங்க ஊர்ல் திமுக அதிமுகவுல எவ்ளோ கோஷ்டின்னு உங்களுக்கு தெரியுமா? இல்லைனா சொல்லுங்க நான் சொல்றேன். காங்ரஸ்ல மட்டும் தான் இருக்குதாக்கும்..

Nila...  – (January 29, 2010 10:49 AM)  

SAnJaiiiiii NeeNga IvLo TiMe WasTe PaNNi ERuKa VeaNDaM Nu EnaKu ThOnuDhu.... :)

SanjaiGandhi™  – (January 29, 2010 10:54 AM)  

நிலா, சீமான் பத்தி எழுதறது டைம் வேஸ்ட்னு உனக்கு தெரியுது.. எனக்குத் தெரியலையேம்மாஆஆஆஆ... :))

Nila...  – (January 29, 2010 11:02 AM)  

He He.... Sanjai NeenGa Innum Valaranum... :) Chinna Pulla thanama Peasa Kudadhu Ok... Poi Amma Kitta Solli Junior Horlicks Kudinga.... :) :) :)

எம்.எம்.அப்துல்லா  – (January 29, 2010 11:26 AM)  

//உங்க ஊர்ல் திமுக அதிமுகவுல எவ்ளோ கோஷ்டின்னு உங்களுக்கு தெரியுமா? இல்லைனா சொல்லுங்க நான் சொல்றேன் //

திமுகவில் உள்ள கோஷ்டிகள் திமுகவை அழிக்கும் செயலில் ஈடுபடுவதில்லை.

SanjaiGandhi™  – (January 29, 2010 11:31 AM)  

ஹிஹி.. அப்துல்லா மாம்ஸ்.. தா. கிருட்டிணன்கள் எனக்கு நினைவுக்கு வந்தாலும் பதிவு அதைப் பற்றியது இல்லை என்பதால் முற்றுப் புள்ளி வைப்போம். இங்கே கும்ம வேண்டியவர் ச்சீமான் மட்டுமே.. வேண்டுமானால் கோஷ்டிகள் பற்றி யாராவது பதிவு போடுங்க.. தனியா விவாதிக்கலாம்..

கும்க்கி  – (January 29, 2010 4:46 PM)  

போங்க போயி ஆயிரத்தில் ஒருவன் படம் பாருங்க...அத விட்டுட்டு....

அருள்மொழியன்  – (January 29, 2010 5:45 PM)  

//காங்கிரசை அழிப்பதற்கு, எந்தவொரு செயலில் ஈடுபடவும் தயாராக இருப்பதாக இயக்குனர் சீமான் கூறினார்//

ஆனானபட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் எவ்வளவோ முயற்சி செய்தும் அழிக்க முடியாத காங்கிரஸை பாவம் இந்த சீமானா அழிக்க போறார்.


Sanjai காங்கிரசை பற்றி உங்கள் பார்வையில் எனக்கு உடன்பாடு இல்லைனாலும், அந்த கட்சியை நோக்கி இப்படி அறைகூவல் விடும் தகுதி அண்ணன் சீமானுக்கு இல்லை என்பது உண்மையே, எனவே இந்த அழகான, குசும்பான பதிவை ரசித்து வாழ்த்துகிறேன்

மங்களூர் சிவா  – (January 29, 2010 8:47 PM)  

மூத்தர காங்கிரஸ்வாதி , சுதந்திர போராட்ட துரோகி என்.டி திவாரியவிடவா பெருசா பண்ணிட போறார் சீமான்??
:)))

குடுகுடுப்பை  – (January 29, 2010 9:43 PM)  

'தலை' வரே, ரப்பர் மூலம் தடுக்கலாம் அழிக்க முடியாது.(இங்கே ரப்பர் என்றால் condom). மற்றபடி சீமானும் , காங்கிரசும் எனக்கு ரொம்ப தூரம்,அதுனால அது பத்தி நோ கமெண்ட்ஸ்

முகிலன்  – (January 30, 2010 2:47 AM)  

அதானே காங்கிரஸை அழிக்க சீமான் எதுக்கு?

SanjaiGandhi™  – (January 31, 2010 5:03 PM)  

நன்றி ராபின்

நன்றி சங்கவி.. உங்கள் மாதிரி நெறைய பேர் தொடர்ந்து சொல்லிட்டுத் தான் இருக்காங்க.. எங்களுக்கு இது வெறும் நகைச்சுவை மட்டுமே.. தொடர்ந்து வெல்வோம்..

வினோ, ஏன் நீ வாங்கித் தர மாட்டியா?

நன்றி அப்துஸ்

நன்றி கும்கி, பார்த்துட்டேன்.. நாளைக்கு அதும் பதிவா வரும் :)

நன்றி அருள்மொழியன். தொடர்ந்து அவர் இதை சொல்லிட்டு இருக்கார்.. அதும் சிரிக்காமலே சொல்றார்.. அது சரி.. நடிகனாச்சே. :)

மங்களூர் மாம்ஸ் உங்க கமெண்ட்க்கு இந்தப் பதிவுக்கும் இன்னா சம்பந்தமுங்க?

குடுகுடுப்பை, காண்டம் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி உங்க ஊர்ல ரப்பர்னு ஒரு வார்த்தையே இல்லீங்களா? எரேசரை நாங்க ரப்பர்னு தானுங்க சொல்வோம்.. கெவருமண்டு பள்ளியோட பீஸ்ங்க நானு..

நன்றி முகிலன்.. இன்னும் யாரும் காங்கிரசை அழிக்கப் பிறக்கலை.. :)

ஜோசப் பால்ராஜ்  – (February 4, 2010 6:28 PM)  

உன் கோவம் எனக்கு புரியுது மாமா. இந்த கோவம் உனக்கு மட்டும் இல்ல, ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் இருக்கும் தார்மீக கோவம் தான்.

பின்ன, காங்கிரஸ் கட்சிய அழிக்கிறதுக்கு சீமான் யாரு? இதென்ன சின்னப்புள்ள தனமா பேசிக்கிட்டு இருக்காரு? இவ்ளோ பெரிய காங்கிரஸ் கட்சியில எத்தனை கோஷ்டி இருக்குன்னாச்சும் தெரியுமா அவருக்கு? அத்தனை கோஷ்டியும் செஞ்சுகிட்டு இருக்க வேலைய இவரு செய்வேன்னு சொன்னா எப்பூடி ? நீ கவலப்படாத மாமா, அந்த கட்சிய நீங்களேதான் அழிப்பிங்க. அதெல்லாம் சும்மா, சீமான் எல்லாம் கிட்ட வர்றப்ப அழிக்க ஒன்னியும் இருக்காது. நீ கவலையேப்படாத.

SanjaiGandhi™  – (February 4, 2010 6:31 PM)  

ஜோசப், உன் கோவமும் எனக்குப் புரிது.. எவ்ளோவோ பொய்களைப் பரப்பிப் பார்க்கிறோம்.. இவனுங்கள ஒன்னுமே பண்ண முடியலைனு தானே.. விடு மச்சி.. மக்கள் அவ்ளோ முட்டாள்கள் இல்லை.. ஒவ்வொருத் தேர்தலிலும் எங்கள் பலம் அதிகரிச்சிட்டே தான் போகுது.. நீங்க பொலம்பிட்டே இருக்க வேண்டியது தான்.. எங்களுக்கும் பொழுது போகனும்ல.. அதுக்கு உன்னயும் நாம் கைக்கூலிகள் ச்சீமான் மாதிரி ஆளுங்களும் வேணும்டே ;))

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP