January 28, 2010

Mini Meals v 3.01.10

லங்கைத் தேர்தல் முடிவுகள் செம குழப்பம். புலிகளையும் பொது மக்களையும் கொன்று குவித்த இருவருக்கும் போட்டிப் போட்டு ஓட்டுப் போட்டிருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். புலிகள், ஆயுத பலத்தில் மக்களை அடிமைப் படுத்தி வைத்திருந்தார்கள் என சொல்லப்பட்டது நிஜம் தானோ?. தமிழகத்தின் புலனாய்வுப் பத்திரிக்கைப் புலிகள் அறிவித்த “ புலிகள் ஆசி பெற்ற அரசியல் கட்சிகள்” போட்டிப் போட்டுக் கொண்டு இரண்டு கொலைகாரர்களையும் ஆதரித்தார்கள். அப்போதே இந்தியத் தமிழர்கள் காமெடியர்களணார்கள். இதில் சிவாஜிலிங்கம் தான் பாவம்.. மிகப்பெரிய காமெடியர் ஆனார். இவருக்கு கிடைத்த வாக்குகள் 9962. கடந்த இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் இவர் , பிஜேபிக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். சொந்த நாட்டிலேயே 9662 வாக்குகள் தான். கூரை எறிக் கோழிப் பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்..

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம், தொழில்நுட்ப ரீதியிலும் வியாபார ரீதியிலும் பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. உலக அளவில் அதிக வசூலை வாரிக் குவித்ததாக கருதப் பட்ட இதே கெமரூனின் டைட்டானிக்கின் 1.843 பில்லியன் டாலர் சாதனையை  கடந்து அவதார் படம் 1.859 பில்லியன் டாலர் வசூலின் மூலம்  புதிய வியாபார சாதனைப் படைத்திருக்கிறது. அவதாரின் தயாரிப்பு செலவு 237 மில்லியன் டாலர்( 300மில்லியன் டாலருக்கு குறைவாக இருக்காது என்பது ஹாலிவுட் வட்டாரங்களின் கணிப்பாம்). பண்டோரா கிரகம் அதன் மொழி உட்பட பலவும் கேமரூனின் கற்பனையே. உண்மையான உழைப்புக்கும் அதை முழுமையாக்குவதற்கான காத்திருத்தலுக்கும் கிடைத்த பலன் இது. கமலஹாசனின் தவத்தின் மீது மரியாதை அதிகரிக்கிறது. நிச்சயம் ஒருநாள் அவர் இந்திய கேமரூனாவார்.

மிழ்மணம், வாக்களிப்பில் புதிய முறையை அறிமுகப் படுத்தி இருக்கிறது. பதிவுகளுக்கு வாக்களிப்பவர்களின் பெயர் தெரிவது போல் செய்திருக்கிறார்கள். அதை வைத்து நம் வலைமகாஜனம் விளையாட ஆரம்பித்துவிட்டது. பிரபலமான பதிவர்களின் பெயரில் கணக்கு ஆரம்பித்து அவர்களின் நண்பர்களுக்கு எதிர் ஓட்டுப் போடுகிறார்கள். சமீபத்தில் ஒரு பதிவருக்கு அனைத்தும் மைனஸ் ஓட்டுகளாக இருந்தது. அதில் ஒரு பெயர் sankara4. கேபிள்சங்கரின் மெயில் ஐடியில் கணக்கை ஆரம்பித்து யாரோ விளையாடுகிறார்கள். அவரின் தமிழ்மனம் ஐடி cablesankar. இந்த வசதியை உடனே நீக்க வேண்டும். வாக்களிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப் படும் என்பது ஆரம்பத்தில் விதியாக இருந்த ஞாபகம். இப்போது அது என்னவாயிற்று எனத் தெரியவில்லை. இதனால் எற்படும் குழப்பங்களை சொல்லி இதை நீக்க வேண்டும் என தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்பினேன். வேலைப்பளுவோ என்னவோ இதுவரை பதில் இல்லை. ஐந்தெழுத்து பெண் பதிவர் பெயரிலும் மைனஸ் ஓட்டுகள் குத்தி தள்ளுகிறார் ஒருவர். ஒரே பெயரில் கணக்கை ஆரம்பிக்க தமிழ்மணம் அனுமதிக்கிறது. ( ie : sanjai, Sanjai ) வாக்களிப்பவர்களின் ஐபி முகவரி தமிழ்மணம் சர்வரில் பதிவாகும் எனபதும் அதை வைத்து கறுப்பு ஆடுகள் இனம்காணப் படுவார்கள் என்பதும் சிலருக்கு தெரியவில்லை போல.

சில நாட்களுக்கு முன் ஒரு நண்பனுக்கு காரில் இருக்கும் ஆடியோ ப்ளேயரில் கேட்பதற்கு சிடியில் பாடல்களை பதிவு செய்ய முயற்சிக்கும் போது Music என்ற பிரிவில் Audio CD என்ற வசதியை கொண்டு பதிவு செய்ய பார்த்தேன். அதில் நேர அளவில் தான் பதிவாகிறது. சில பாடல்கள் மட்டுமே பதிய முடிகிறது. அதற்கு பதில் Music என்பதிலேயே Jukebox Audie CD  என்ற பிரிவை பயன்படுத்தி பதிவு செய்தால் ஃபைல் அளவைக் கொண்டு பதிவாகிறது. நூறுக்கும் மேற்பட்ட பாடல்களை பதியலாம். இது எல்லா வகை ஆடியோ ப்ளேயர்களிலும் செயல்படுகிறது. நான் Neroவை பயன்படுத்துகிறேன். இது சப்பை மேட்டராக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற பாமரர் யாருக்காவது பயன்படும் என்பதால் பகிர்ந்துக் கொள்கிறேன்.

வெட்டான்குடி பறவைகள் சரணாலையம்

  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரே பறவைகள் சரணாலையம். மதுரையிலிருந்து 51கிமீ தொலைவில், மேலூர் - திருப்பத்தூர் சாலையில் உள்ளது. காரைக்குடியிலிருந்து 30கிமீ. காரைக்குடி அல்லது மதுரை வரை ரயிலிலும் பின்னர் சாலை வழியாக செல்ல வேண்டும். காரைக்குடி , மதுரை மற்றும் திருப்பத்தூரில் தங்கும் வசதிகள் உள்ளன.

தொடர்புக்கு
Wildlife Warden
Gulf of Mannar Biosphere Reserve
Mandapam, Ramanathapuram.
Phone:04567-230079

18 comments:

குசும்பன் said...

//இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் இவர் , பிஜேபிக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். //

இப்ப வாங்கியிருக்கும் ஓட்டை பார்த்தால் அடுத்த முறை காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்யலாம் போல:))

☀நான் ஆதவன்☀ said...

மினி மீல்ஸ் ரொம்ப மினியா இருக்கே சஞ்செய்.

தமிழ்மண ஓட்டு பிரச்சனைய கொளுத்தி போட்டதால + போட்டாச்சு. இனி அது கொளுந்து விட்டு எரிய வாழ்த்துகள் :))

குசும்பன் said...

//ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம், தொழில்நுட்ப ரீதியிலும் வியாபார ரீதியிலும் பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. //

வர வர இங்கிலீஸ் படம் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்ட! ம்ம்ம் என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது...

குசும்பன் said...

//தமிழ்மணம், வாக்களிப்பில் புதிய முறையை அறிமுகப் படுத்தி இருக்கிறது. பதிவுகளுக்கு வாக்களிப்பவர்களின் பெயர் தெரிவது போல் செய்திருக்கிறார்கள். //

மாமா இன்னொன்னும் கேள்வி பட்டேன் இதை வைத்து தனக்கு தானே பல முறை ஓட்டு போட்டுக்கிட்ட பல பெருசுங்க வண்டவாளமும் தண்டவாளம் ஏறுதாமே!!!:)))

குசும்பன் said...

//சில நாட்களுக்கு முன் ஒரு நண்பனுக்கு காரில் இருக்கும் ஆடியோ ப்ளேயரில் கேட்பதற்கு சிடியில் பாடல்களை பதிவு செய்ய முயற்சிக்கும் போது //

உனக்கு கொடுத்த வேலை என்னா ?காரை ஒழுங்கா கழுவி துடைச்சு வைக்க வேண்டிய வேலைதானே! உனக்கு எதுக்கு தேவையில்லாத முயற்சி எல்லாம்.

குசும்பன் said...

மாமா துணைக்கு நீயாவது வாயேன் இங்க தனியா இருக்க பயமா இருக்கு!:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது என்ன்ப்பா வில்லங்கமாவில்ல இருக்கு.. ஓட்டுன்னாலே ப்ரச்சனை தான்..

நீரோ விசயம் ட்ரை செய்து பாக்கறேன்..நன்றி

வெண்பூ said...

//
அவதாரின் தயாரிப்பு செலவு 16மில்லியன் டாலர்
//

சின்ன தப்பு.. ஒரு 221 மில்லியன் டாலர்தான் கம்மியா சொல்லி இருக்கீங்க.. ஹி..ஹி..

SanjaiGandhi™ said...

நன்றி வெண்பூ. மாற்றிவிட்டேன்.

http://www.hollywoodreporter.com/hr/content_display/film/news/e3i00be01c04176633520c85625eee7b9f4

இந்தப் பக்கத்தில் இன்னும் ஏராளமான தகவல்கள் இருக்கு.

தாரணி பிரியா said...

கமலுக்கு இது போல ஒப்பீடு செய்யறது பிடிக்காதுன்னு அருள் சொன்னான் :)

அன்புடன் அருணா said...

/ஆனால் என்னைப் போன்ற பாமரர் யாருக்காவது பயன்படும் என்பதால் பகிர்ந்துக் கொள்கிறேன்./
எனக்குப் பயன்பட்டுதுங்க!:)

கும்க்கி said...

சஞ்செய்..,
நீரோ என்பவர் இந்த பிடில், ரோமன் சமாச்சார ஆசாமிதானே...அவரை என்னத்துக்கு....?

அப்புறம் இலங்கையில் நடந்தது நேர்மையான வாக்குப்பதிவுதானாமே...
எல்லா உலக பத்திரிகையாளர்களும் சான்று கொடுத்துட்டாங்களாமே...உண்மையா?

சாமுவேல் | Samuel said...

அவதார்.... வன்முறை தூண்டுதுன்னு சீனாவில் (china) படத்தை ரத்து பண்ணிடாங்க.

Mrs.Menagasathia said...

மினி மீல்ஸ் நல்லாயிருக்கு..

கிரி said...

என்னது ஓட்டு போட்டா பேர் தெரியுதா! எங்கே!

என் பதிவு எல்லாம் பரிந்துரை பகுதி பக்கமே வராது ..அதனால பேரு வந்தா என்ன வராட்டி என்ன.. :-))

முகிலன் said...

ஆடியோ சிடி நல்ல பகிர்வு..

முயற்சி செய்து பார்க்கிறேன்.

குடுகுடுப்பை said...

பொது மக்களையும் கொன்று குவித்த இருவருக்கும் போட்டிப் போட்டு ஓட்டுப் போட்டிருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள்//

அப்படியெல்லாம் எதுவும் நடக்கலன்னு பெரிய நாடுகள் , நீங்கள் ஆளும் நாடு சொல்லிருக்கு, எதுக்கும் மேலிடத்துல அனுமதி வாங்கிருங்க. ஒரு கட்சில இருந்த மனசாட்சியோட பேசக்கூடாது.

SanjaiGandhi™ said...

குசும்பன், இவர் என்ன ? நீங்களே பிரச்சாரம் செய்தாலும் காங்கிரசுக்கு இழப்பில்லை.. :)

நன்றி ஆதவன். பெரிசா எழுதினா திட்றாங்க.. ரொம்ப வலிக்கிது.. :(

குசும்பன், கெட்ட சகவாசம் மாமா :)

நன்றி முத்தக்கா

திருத்திவிட்டேன் வெண்பூ, நன்றி

தாரணி அக்கா, எனக்குப் பிடிக்குமே :)

நன்றி அருணாக்கா. பொதுச் சேவை செய்வதே உங்கள் தம்பியின் கடமை :)

கும்கி, அப்டி தான் அங்க இருக்கிற தமிழர்களே சொல்றாங்க.. இல்லைனா கொன்னிருவாங்களாம். பொன்சேகா ஒருபக்கம், ராஜபக்‌ஷே ஒரு பக்கம் துப்பாக்கு காட்டி மிரட்டினாங்களாம்.. அதனால ஆளுக்கு பாதியா பிரிச்சிப் போட்டுட்டாங்களாம்

சாமுவேல், சீனாக்காரனுக்கு கண்ணுக்கு எல்லாம் சந்தேகமே.. அது ஒரு அடிமை தேசம்

நன்றி மேனகா சிஸ்டர்

கிரி, பரிந்துரைல வரலைனாலும் பார்க்கலாம்.. தனக்குத் தானே பல ஓட்டுகள் போட்டு பரிந்துரைல வர வைக்கும் பல நல்லவர்களை பார்க்க முடியுது ;))

நன்றி முகிலன்

குடுகுடுப்பை, அப்டியா? தமிழர்கள் மாத்தி மாத்தி 2 நல்லவர்களுக்கும் ஓட்டுப் போட்டிருக்கிறதா இலங்கைத் தமிழர்களும் அரசாங்கமுமே சொல்லி இருக்காங்களே.. இதை சொல்ல அனுமதியும் மனசாட்சியும் எதுக்குங்ணா..

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget