January 11, 2010

புத்தாண்டு டைரி - Friendship Special

2010ஆம் ஆண்டு நண்பர்கள் சந்திப்புடனேயே நகர்ந்துக் கொண்டிருக்கிறது. 31.12.2009 அன்று இரவு நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. வடகரைவேலன், செல்வேந்திரன், ராம்கோபால்( பதிவர் மயில்விஜியின் கணவர்), பரிசல்காரன் மற்றும் வெயிலான் ஆகியோருடன் வாலையாறில் பாடகி உஷா உதூப்பின் கச்சேரியில் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்து பின் நடந்த நிகழ்வுகளில் விலாவையும் சிறப்பித்து வந்தோம்.

எனக்கு செண்டிமெண்ட்ஸ் எதுவும் இல்லை. ஆனாலும் சில சமயங்களில் சில சம்பவங்கள் அப்படி நினைக்க வைத்துவிடும். வருடத்தின் முதல் SMS ” நல்லா இருப்போம்.. நல்லா இருப்போம்.. எல்லாரும் நல்லா இருப்போம்” என்று ஜோவிடம் காப்பி அடித்து வந்திருந்தது, புதிய எண். அனுப்பியவர் யார் எனத் தெரிந்ததும் செண்டிமெண்ட் வலுக்கட்டாயமாக எட்டிப் பார்த்தது. அதற்கு முன்வரை அவரிடம் பேசியதும் இல்லை.

ஒன்றாம் தேதி மதியம், வீட்டிற்கு ரமணி வந்தான். பள்ளிக்கூட நண்பன். பக்கத்து ஊர்க்காரனும் கூட. சந்திப்புகள் அரிது. மாலை ஸ்வாமி ஓம்காரின் தினம் தினம் திருமந்திரம் புத்தக வெளியீட்டிற்கு சென்றேன்.ரமணி, அருள்மொழி, அன்புராஜ், தங்கவேல் ஆகிய பள்ளிக்கால நண்பர்கள் எனக்காக காத்திருந்ததால் நிகழ்சி முடியும் முன்பே வந்துவிட்டேன். அன்று இரவு ஐவரும் கதற கதற கலாய்ச்சிகொண்டோம். பின் ஒரு ரோட்டோர ஹோட்டலில் சாப்பிட்டோம்.


இரண்டாம் தேதி நான், ரமணி, அன்புராஜ் மற்றும் ரமணியின் நண்பர் சந்ரு ஆகியோர் ஆழியாறு மற்றும் குரங்கு அறுவி சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினோம். அன்றைய நாள் டார்கெட் ரமணி தான். மாலைவரை அவனை கலாய்த்தும் போர் அடிக்கவில்லை. நல்லா இருடா மச்சான்.

மூன்றாம் தேதி மாலை நான், ரமணி, அன்புராஜ் ஆகியோர் அருள்மொழி வீட்டிற்கு சென்று அவனையும் அவன் மனைவியையும்( என் பள்ளி ஜூனியர் :) ) அழைத்துக் கொண்டு தங்கவேல் வீட்டிற்கு சென்றோம். இருவரும் பல ஆண்டுகளாக கோவையில் தான் இருக்கிறார்கள். இதுவரை அவர்கள் வீட்டிற்கு போனதில்லை. நானாவது பரவால்ல. 2 கிமீ தூரத்துல இருக்கேன். அருளும் தங்கவேலும் அடுத்தடுத்த தெருவில் இருக்கிறார்கள். ஒருவர் மற்றவர் வீட்டிற்கு சென்றதில்லை. இதுவே கிராமமாக இருந்தால்....

தங்கவேல் வீட்டில் இரவு உணவு சாப்பிடத் திட்டம் இருந்தாலும் அவன் மனைவி கர்ப்பினியாக இருப்பதால் தொந்தரவு வேண்டாம் என வெளியில் சாப்பிடலாமே  என்று கோவை உணவுத்திருவிழா சென்றோம். அம்மாடி.. என்னா ஒரு கூட்டம். மைதானத்தின் புழுதியும் மக்கள் கூட்டமும் அங்கு சாப்பிடும் எண்ணத்தை மண்மூட செய்துவிட்டது. பிறகு 9 மணிக்கு ராயப்பாஸில் நுழைந்து போனாப் போகட்டும் என 11 மணிக்கு கிளம்பினோம். அந்த 3 நாட்கள் மறக்க இயலாதவை. பள்ளி படிப்பிற்கு பின் 5 பேரும் ஒன்றாக சந்திப்பது இதுவே முதல்முறை. இன்னும் தொடரும் அந்தப் பள்ளியின் நண்பர்கள் சிலருக்கு தொலைபேசி கெட்ட வார்த்தையில் வாங்கிக் கட்டிகொண்டதும் நல்லா தான் இருந்துச்சி. :). என் வாழ்நாளில் நான் அதிகம் மகிழ்சியாக இருந்தது PDR பள்ளியில் படித்த கடைசி 2 ஆண்டுகள் தான். கல்லூரி வாழ்க்கை கூட அவ்வாறு இல்லை.

ஈரோட்டு இலக்கிய சிங்கம் கார்த்தி, உறவினர்களுடன் வீட்டிற்கு வந்தார். சிவ விலாசில் நல்லதொரு காலை உணவு.

அடுத்த சில நாட்களில் ஈரோடு கதிர், ஆரூரான் விஸ்வநாதன், பழமைபேசி, செல்வேந்திரன் , வடகரைவேலன் அண்ணாச்சியுடன் அஞ்சப்பரில் மதிய உணவுடன் இனிமையான சந்திப்பு.

வார இறுதி நாட்களின் முன் ஒரு மாலை வேளை மயில்விஜியும் அவர் கணவர் ராம்கோபாலும் தோசை, வெங்காய சாம்பார் மற்றும் கம்பங்கூழ் சகிதம் வீட்டிற்கு வந்து சிறப்பித்தனர்.

நேற்று (10.1.2010) எழுத்தாளர் ஆதி@தாமிரா கோவைக்கு விஜயம் செய்தார். மதியம் அவரை அழைத்துக் கொண்டு வேலன் அண்ணாச்சி வீட்டில் சுவையான மதிய விருந்து, பின்னர் செல்வேந்திரன் வீட்டிற்கு சென்று 9 மணி வரை இலக்கிய சூழல் பற்றி உரையாடினார்கள். நவீன இலக்கியத்தில் இசக்கி முத்துவின் பங்களிப்பு பற்றி அதிகம் பேசினார்கள்.எனக்கு வழைக்காய் பஜ்ஜியும், உருளைகிழங்கு சிப்ஸ், இளநீர் மற்றும் ஜெல் மிட்டாய்.

17ஆம் தேதி பெரியக்கா ஜி3யின் வருகைக்காக வெய்ட்டிங்.

( யாரையாச்சும் விட்டுட்டேனா? எழுதி எழுதி தீர்த்தப் பின்னும் எதோ ஒன்று குறையுதே.. வழக்கம் போல் எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும் . )

இந்தப் பதிவை எழுத முதல்முறையாக ப்ளாகரின் புதிய கம்போஸ் முறை பயன்படுத்தினேன். அட!.. ரொம்ப சவுகர்யமா இருக்கே.

32 comments:

சிட்டுக்குருவி said...

எப்பிடிப்பா நண்பர்கள் பிச்சைஎடுக்கிற மாதிரியே ஒரு படத்தை பிடிச்சுவச்சிருக்கீங்க

சின்ன அம்மிணி said...

//அவன் மனைவியையும்( என் பள்ளி ஜூனியர் :) ) //

வீட்டு நம்பர் கொடுங்க. உங்களுக்கு பொண் பாக்க சொல்றோம் :)

ஆயில்யன் said...

தின்ன மேட்டரால்ல இருக்கு எல்லாம் !

கார்க்கி said...

//PDR பள்ளியில் படித்த கடைசி 2 ஆண்டுகள் தான். கல்லூரி வாழ்க்கை கூட அவ்வாறு இல்லை.//

பொதுவாக டுட்டோரியல் கல்லூரி வாழ்க்கை நன்றாக இருக்காது என குசும்பன் போன்றோர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எனக்கு அந்த அனுபவம் இல்லாததால் உறுதியாக சொல்ல முடியல சகா

கார்க்கி said...

//வீட்டு நம்பர் கொடுங்க. உங்களுக்கு பொண் பாக்க சொல்றோம் /

பையன் வீட்டு நம்பரா? பொண்ணு வீட்டு நம்பரா?

நட்புடன் ஜமால் said...

ரமணி ப்லாக்கரா?

உண்மையில் கலாய்க்கப்பட்டது யார் என்று அறியும் அளவிலா ஆவலில் ...

குசும்பன் said...

3 நாள் உன் சமையல் இல்லாம ஓசி சோறு தின்னதுக்கு ஒரு பதிவு:)

g3 சொன்னதுதான் நினைவுக்கு வருது

"எழுதுங்கள் இவன் ஓசியில் சாப்பாடை ஆட்டைய போடுபவன் என்று"

குசும்பன் said...

//ஸ்வாமி ஓம்காரின் தினம் தினம் திருமந்திரம் புத்தக வெளியீட்டிற்கு சென்றேன்//

ஏன் மாமா ஒரு முறை வெளியிட்டா பத்தாதது? தினம் தினம் திருமந்திரன் புத்தகம் வெளியிடனுமா?:)))

குசும்பன் said...

//பொதுவாக டுட்டோரியல் கல்லூரி வாழ்க்கை நன்றாக இருக்காது என குசும்பன் போன்றோர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.//

அட டுபுக்குங்களா, டுட்டோரியலில் தான் அவ்வளோ லவ்ஸ் செட் ஆகும், இவனும் அவளும் ஒரே வேவ் லென்தில் இருப்பாங்க ரொம்ப படிக்கனும் என்ற வேலையும் இருக்காது..ஜாடிக்கேத்த மூடியா பக்காவா செட் ஆகும்.

குடுகுடுப்பை said...

நீங்களும் பழமையும் தொப்பி எக்ஸேஞ்ச் பண்ணிக்கிட்டீங்களா?

குசும்பன் said...

//பின் ஒரு ரோட்டோர ஹோட்டலில் சாப்பிட்டோம்.
//

எது அந்த கோயில் வெளிவாசலில் கை நீட்டிக்கிட்டு உட்காந்து இருப்பது போல் இருக்கே அதுவா?

மாமா அது ஹோட்டல் இல்லை, உண்டகட்டி மிச்சத்தை போடுவது!

குசும்பன் said...

//என் வாழ்நாளில் நான் அதிகம் மகிழ்சியாக இருந்தது PDR பள்ளியில் படித்த கடைசி 2 ஆண்டுகள் தான்.//

என்னோட லைப்பில் இதுபோல் ஒரு மேட்ச் பார்த்தது இல்லை என்று என் அக்கா மகன் சொன்னான் அவனுக்கு வயசு 10.

ஏதோ பெரிய தலைவரு ரேஞ்சுக்கு பில்டப்பை பாரு...

குசும்பன் said...

//அன்புராஜ் ஆகியோர் அருள்மொழி வீட்டிற்கு சென்று அவனையும் அவன் மனைவியையும்( என் பள்ளி ஜூனியர் :) /

அதுபுள்ள எவ்வளோ விவரமா இருக்கு, நீயும் தான் இருக்கியே... கூட இருக்கிறவங்க, பழகுறவங்க(குறிப்பா துபாயில்) இவங்களை பார்த்தாவது திருந்தவேண்டாம்...உன்னை எல்லாம்..

குசும்பன் said...

மாமா அந்த போட்டோவை பார்க்கும் பொழுது கவுண்டமணி ஒரு படத்தில் பொண்ணு பார்க்க போய் இருப்பார்,பொண்ணு கவுண்டருக்கு தங்கச்சி முறை வந்துடும் ஏகப்பட்ட பிரச்சினை நடக்கும் பொழுதும் பொண்ணோட அப்பா தட்டில் இருந்து மிக்ஸரை சாப்பிட்டுக்கிட்டு இருப்பார்...அந்த சீன் நினைவுக்கு வருது:)

கார்த்திக் said...

விடுபட்டவை
வியாபாரகாந்தமே 2ந்தேதி உங்கள பாக்க இந்த ரசிகன் வந்தத மறந்துட்டீங்களா
இல்ல பிரபலங்கள மட்டும் தான் நெனப்புல வெச்சுக்குவீங்கள :-))

ஆரூரன் விசுவநாதன் said...

நண்பர்களோடும், நல்ல உணவோடும், தொடங்கிய இந்த புத்தாண்டு, தொடர்ந்து உங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்கட்டும்.

வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

குசும்பாஆஆஆஆ

ம்ம்.. நடத்து நடத்து!!

மங்களூர் சிவா said...

:)))

மயில் said...

அவ்வளவு தூரம் கொண்டுவந்து கொடுத்தா சாப்பிடாம வெளியில் வீசிட்டு பேச்ச பாரு....

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மயில் said...

//அட டுபுக்குங்களா, டுட்டோரியலில் தான் அவ்வளோ லவ்ஸ் செட் ஆகும், இவனும் அவளும் ஒரே வேவ் லென்தில் இருப்பாங்க ரொம்ப படிக்கனும் என்ற வேலையும் இருக்காது..ஜாடிக்கேத்த மூடியா பக்காவா செட் ஆகும்.//

அப்பவும் வயசு வித்தியாசம்ன்னு ஒண்ணு இருக்கில்ல... அதுங்கள்ளாம் பெயில் ஆன உடனே வந்திருப்பாங்க.. :))

மயில் said...

அவனையும் அவன் மனைவியையும்( என் பள்ளி ஜூனியர் :) //

ம்ம்ம்ம் என்னத்த சொல்ல.. அறுபதாம் கல்யாணத்துக்கு எல்லாரும் வந்திடுங்க :))

மயில் said...

யேய்ய்ய்ய்ய்ய் யாருப்பா அது சஞ்சய் காந்திய கிண்டல் பண்றது... என்ன தைரியம்..

வந்து ஸ்வீட் வாங்கிக்குங்க :)))))

சின்ன அம்மிணி said...

// மயில்

அப்பவும் வயசு வித்தியாசம்ன்னு ஒண்ணு இருக்கில்ல... அதுங்கள்ளாம் பெயில் ஆன உடனே வந்திருப்பாங்க.. :))
//

மயில், என்கூட போன்ல பேசும்போது அக்கான்னு என்னை கூப்பிடவும் , சஞ்சய் சின்னப்பையன்ன்னு நினைச்சு ஏமாந்துட்டங்க.

சின்ன அம்மிணி said...

//கார்க்கி said...

பையன் வீட்டு நம்பரா? பொண்ணு வீட்டு நம்பரா?//

சஞ்சய் நம்பர் ஏற்கெனவே தெரியும். பொண்ணு வீட்டு நம்பர்தான் தெரியாது :)

சின்ன அம்மிணி said...

//வார இறுதி நாட்களின் முன் ஒரு மாலை வேளை மயில்விஜியும் அவர் கணவர் ராம்கோபாலும் தோசை, வெங்காய சாம்பார் மற்றும் கம்பங்கூழ் சகிதம் வீட்டிற்கு வந்து சிறப்பித்தனர்.//

கம்மங்கூழ் தூக்கிப்போட்டுட்டீங்கன்னு பட்சி சொல்லுச்சு.

வால்பையன் said...

//ஈரோட்டு இலக்கிய சிங்கம் கார்த்தி, உறவினர்களுடன் வீட்டிற்கு வந்தார். சிவ விலாசில் நல்லதொரு காலை உணவு. //

சிங்கத்தை அசிங்கபடுத்துறிங்களா?
ஒரிஜினல் இலக்கிய சிங்கம் நந்து அண்ணா தான்! நாங்கெல்லாம் தொண்டர் படை மட்டுமே!

விக்னேஷ்வரி said...

அனுப்பியவர் யார் எனத் தெரிந்ததும் செண்டிமெண்ட் வலுக்கட்டாயமாக எட்டிப் பார்த்தது. அதற்கு முன்வரை அவரிடம் பேசியதும் இல்லை. //
ஆஹா, பட்சி சிக்கிடுச்சா...

இந்த வருடம் நல்லா சாப்பாட்டு வருடமா இருக்குனு சொல்லுங்க. மெனுவை அள்ளி விட்டிருக்கீங்க.

கும்க்கி said...

நல்லது கந்தி சார்.,

மொத போட்டோ அருமை...

கலகலப்ரியா said...

beautiful pics... + good post..

kudukuduppai.. =))..

அன்புடன் அருணா said...

புத்தாண்டு ஸ்பெஷல்....சாப்பாட்டு ஸ்பெஷல்னு சொல்லுங்க!

SanjaiGandhi™ said...

சிட்டுக்குருவி நன்றி.. சும்மா வெளையாட்டுக்குத் தான்.. :)

அம்மிணி அக்கா, அவங்களோடது காதல் கல்யாணம் இல்லை.. படிச்ச காலத்துல அந்த பொண்ண பார்த்த நினைவு கூட இல்லை.. :)

ஆயில்ஸ், நம்ம கிட்ட வேற என்ன மேட்டர் இடுக்கும்? :)

கார்க்கி, பப்ளிக்.. பப்ளிக்.. :))

ஜமால், அவன் ப்ளாகர் இல்லை.. ஆனால் என் பதிவும் கமெண்ட்ஸும் தொடர்ந்து படிக்கிறான்..

குசும்பு மாமா நீயும் ஜி3யும் அதை பேசக் கூடாது..ஸ்வாமிகிட்ட தான் கேட்கனும் அதை:)

குடுகுடுப்பை, மறந்துட்டோம்..

குசும்பன்... விடு மாமா :))

கார்த்திக், சேர்த்துட்டேன் தெய்வமே..

SanjaiGandhi™ said...

நன்றி பரிசலாரே.. குசும்பன் கெடக்கறார் :)

நன்றி மங்களூர் மாமா.. ;)

ஜாரி மயிலக்கா.. :) கொழுப்பு ஜாஸ்தி ஆய்டிச்சி உமக்கு...

சின்ன அம்மிணி அக்கா, அடுத்த வாட்டி வாங்க.. என் சமையலை உங்களுக்கு தரேன்.. :))

ஹிஹி வால்.. நல்லா உசுப்பேத்தரிங்க :)

நன்றி விக்னேஷ்வரி

நன்றி கும்கியாரே..

நன்றி லகலகப்ப்ரியா

நன்றி அருணாக்கா.. அதே அதே.. :)

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget