ரீமா டார்லிங்கின் ஆயிரத்தில் ஒருவன் - வரலாறு முக்கியம் பதிவரே

ஒருவழி/லியாய் ஆயிரத்தில் ஒருவன் பார்த்தே விட்டேன். மின்னலே படத்தில் மட்டும் தான் ரீமா அழகாய் இருந்தார் என நினைத்திருந்தேன். ஆஒவின் ஆரம்பக் காட்சியில் ரீமாஆஆஆஆஆ.. அட அட என்ன அழகு.. என்ன அழகு.. என்னை ஏதோ செய்துவிட்டாள்.. ஆண்ட்ரியாவுடன் ஆரம்பத்தில் தோழமையுடன் பேசும் போதே அழகிலும் முக பாவனைகளிலும் கலக்குகுறார். அகழ்வாராய்ச்சி அணியை வழிநடத்தும் போதும் கப்பலில் கார்த்தி படுக்கைக்கு அழைக்கும் போதும் மிக அழகான திமிரை முகத்தில் கொண்டுவருகிறார்.

பாடல்காட்சிகளில் ஆக்ரோஷமான ஆட்டமாகட்டும் இடுப்பை வளைத்து நெளித்து நளினமாக ஆடுவதாகட்டும்.. அப்படியே நம்மை கொஞ்சம் கொஞ்சமாக தின்றுவிடுகிறார். அடி கள்ளி.. இவ்வளவு திறமைகளை எங்கேயடி ஒளித்து வைத்திருந்தாய் எனக் கேட்கத் தோன்றுகிறது. இதோடு திரும்பிப் போய்டலாம் என சொல்லும் கார்த்தியை , நீ பொட்டையாடா எனக் கேட்டு உசுப்பேத்தும் போது அந்த ஏளனம் வேறு யாருக்கும் வரமா என்று தெரியவில்லை. துப்பாக்கியை எடுத்து , தன்னை தாக்க வரும் காட்டுவாசிகளையும் பின்னர் பாம்புகளை சுடும் போது செய்யும் சாகசங்களையும் பார்க்கும் போது இந்தியாவின் ஏஞ்செலினா ஜூலியாய் ஜொலித்தார்.. டாம் ரைடர் மாதிரி பாம்ப் ரைடராக ரீமாவால் கலக்க முடியும்.

துப்பாக்கிக் குண்டு தீர்ந்ததும் கார்த்தியின் முதுகில் ஏறிக்கொண்டு காட்டும் பயமும் அபபவித்தனமும் சராசரிப் பெண்ணுக்கே உரியது.. சபாஷ் செல்லமே.. தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தனி முத்திரைப் பதிக்கிறார் ரீமா. சோழர்கள்(?) கிராமத்தைக் கண்டுபிடித்ததை விடியோ கேமராவில் பதிவு செய்யும் போது ஒரு குழந்தையைப் போன்று பேசுகிறார்.. பார்த்திபன் அண்ட் கோவின் நம்பிக்கையைப் பெற்று தனி அறையில் அவருக்கு செய்தி(ஹிஹி) சொல்லும் போது தன்னைவிட அழகான பெண்ணைக் காட்டுங்கள் பார்க்கலாம் என சவால் விடுகிறார். இன்னும் இன்னும் ரீமாவைப் பற்றி சொல்ல ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் இப்போதைக்கு இது போதும்.

ஆண்ட்ரியா பாவம்.. என்ன செய்வதென்றே தெரியாமல் வருகிறார்.. ரீமா பின்னிப் பெடலெடுக்கும் போது இவர் தேமேவென்று தெரிகிறார். குளிரில் நடுங்கும் போது கார்த்தியை கட்டிப் பிடிக்கும் ஒரு காட்ச்சிகாக இந்த அழகுப் பெண்ணை வீணடித்திருக்கிறார் செல்வராகவன். ஆனால் பாடல்கள் எல்லாம் அழகாய்ப் பாடி இருக்கிறார். மயக்கும் குரல். மற்ற இசை அமைப்பாளர்களும் பயன்படுத்தலாம். உன் மேல ஆச தான் பாடலில் அழகாய் ஆடவும் செய்கிறார்.ஆனாலும் ரசிக்கும்படி பெரிதாய் ஒன்றும் இல்லை..

படத்தை பலரும் நார் நாராய்க் கிழித்துத் தொங்கப் போட்டுவிட்டதாம் பெரிதாய் சொல்ல எதுவும் இல்லை என்றாலும் வரலாறு முக்கியாயிற்றே. இவன் ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் எழுதவே இல்லை என்று சொல்லி வருங்கால வலையுலகம் ஒதுக்கிவிடக் கூடாது பாருங்க. முதல் பாதி மிகச் சிறப்பாகவே இருக்கிறது. விரு விரு சுறு சுறு.. ஓவ்வொரு காட்சியும் அடுத்த காட்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. இடைவேளையுடனே படம் முடிந்துவிடுகிறது. ஆனாலும் எதற்கு அதற்குப் பிறகான கட்சிகள் என்றுத் தெரியவில்லை. இடைவேளைக்குப் பிறகு, எவனுக்காச்சும் தைரியம் இருந்தா இது போன்ற ஒரு கேவலமான படத்தை எடுத்துக் காட்டுங்கள் என பேரரசு வகையறாக்களுக்கு சவால் விட்டிருக்கிறார் செல்வராகவன். லாஜிக், சோழர், அடிமைகள் , புண்ணாக்குப் , பொடலங்காய் என எதுவும் பார்த்து நான் சொல்லவில்லை. ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரத்தம் ரத்தம் ரத்தம். இது ஃபேண்டசி என்று சொல்லப் பட்டதால் ஒரு பிரமாண்டமான வரலாற்றுக் கார்ட்டூன் படம் பார்க்கப் போகும் மனநிலையில் தான் சென்றேன். ஆனால் அபப்டி எல்லாம் ஒரு ம....ண்ணும் இல்லை.

முதல்பாதி படத்தை நிச்சயம் பார்க்கலாம். இரண்டாவது பாதியை பார்க்காமல் இருப்பது உங்கள் பாவச் செயல் எண்ணிகையில் ஒன்று கூடாமல் இருக்க உதவலாம். சிலரின் பாசிட்டிவான விமர்சனத்தைப் படித்து விட்டு , இந்தப் படத்தை கிழித்து தொங்கப் போட்டவர்களிடம் படத்திற்கு ஆதரவாய்ப் பேசியது எவ்வளவு பெரிய அபத்தம் எனப் புரிகிறது.சிலர் சொன்னதைப் போல், இதில் புரியாத கதை என்றெல்லாம் ஒன்றும் இல்லை. புரியாத அளவுக்கு சிக்கலாம கதை எல்லாம் இல்லை. மிக எளிமையாகதான் இருக்கு.

பாண்டியர்களுடனான போரில் தோல்வியுற்ற சோழர்கள், பாண்டியர்களின் குலதெய்வம் சிலையை எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறார்கள். அதை கைப்பற்ற பாண்டியர்கள் வந்து விடக் கூடாது என சாமர்த்தியமான 7 ஆபத்துகளை விட்டுச் செல்கிறார்கள். அதைத்தாண்டி யாரும் சென்றதில்லை போல. ரீமா சென், கார்த்தி, ஆண்ட்ரியா குழுவினர் 7 தடைகளையும் கடந்து அந்த இடத்தை அடைந்துவிடுகிறார்கள். சோழர்கள் வரைந்து வைத்திருக்கும் ஓவியத்தின் படி கார்த்தி, அங்கு வந்து சோழ வாரிசை காக்க வேண்டியவர்.  பாண்டியர்களில் மிஞ்சிய 8 பேரில் ஒருவர் தான் ரீமா சென். அவர் சோழர் இடத்திற்கு செல்வதே குல தெய்வத்தின் சிலையைக் கைப்பற்றி சோழர்களை பழிவாங்கத்தான். சோழர்களுக்காக கார்த்தி போரிடுகிறார். ரீமா, ராணுவத்தின் உதவியுடன் சோ கால்ட் சோழர்களை பிடித்து ஒரு முகாமில் அடிமைகளாக வைக்கிறார். இதில் இருந்து தப்பிக்கும் கார்த்தி, சோழர்களின் வாரிசை தோலில் சுமந்தபடி செல்கிறார். சோழர்களின் பயணம் தொடரும் என்பதோடு படம் முடிகிறது. இதில் புரியாமல் போக என்ன எழவு இருக்கு?


டிஸ்கி: நமீதாவுக்கு மட்டுமே இடம் அளித்த என் இதயக் கோயிலில் இனி ரீமா மட்டுமே குடி இருப்பார் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கிறேன்.

கோவி.கண்ணன்  – (February 1, 2010 9:28 AM)  

//பார்த்திபன் அண்ட் கோவின் நம்பிக்கையைப் பெற்று தனி அறையில் அவருக்கு செய்தி(ஹிஹி) சொல்லும் போது தன்னைவிட அழகான பெண்ணைக் காட்டுங்கள் பார்க்கலாம் என சவால் விடுகிறார். இன்னும் இன்னும் ரீமாவைப் பற்றி சொல்ல ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் இப்போதைக்கு இது போதும்.//

இப்'போதை'க்கு இது போதும் !

யாராவது இவருக்கு திருமணம் செய்து வையுங்கய்யா !

☀நான் ஆதவன்☀  – (February 1, 2010 9:38 AM)  

ஆ.ஒ ரீமாசென் போல் மனைவி அமைய என் மனமார்ர்ர்ர்ர்ர்ர்ந்த வாழ்த்துகள் :)

☀நான் ஆதவன்☀  – (February 1, 2010 9:39 AM)  

//யாராவது இவருக்கு திருமணம் செய்து வையுங்கய்யா !//

பிரதமர் ஆனாதான் கல்யாணம்னு சொல்லிட்டாரே! இதுக்கப்புறம் எப்படிங்க அவரை வற்புறுத்துறது?

தமிழ் பிரியன்  – (February 1, 2010 10:07 AM)  

எனக்கும் ரீமாவை ரொம்பப் பிடிச்சு போச்சு... பாண்டிய நாட்டு மங்கை என்பதால்.. ;-)

சின்ன அம்மிணி  – (February 1, 2010 10:11 AM)  

ரீமா டார்லிங்கா !!! இதெல்லாம் ஒண்ணும் நல்லதுக்கில்ல.
இந்த வருசம் கோவைப்பயணம் உண்டு. வந்து உங்க அம்மா அப்பாகிட்ட நிறைய பேசணும். :)

மயில்  – (February 1, 2010 10:46 AM)  

அடப்பாவி இந்த ஜொள்ளு ஜொள்ளிருக்கையே :))

வேலன் அண்ணாச்சி கெளம்புங்க, சஞ்சய் வீட்டுக்கு போலாம்.. இது ஆவறதில்லை..

ராமலக்ஷ்மி  – (February 1, 2010 11:11 AM)  

ரீமா எனக்கு மின்னலே படம் வந்த போதிலிருந்தே பிடிக்கும்:))! இந்தப் படம் இன்னும் பார்க்கவில்லை.

குசும்பன்  – (February 1, 2010 11:16 AM)  

மாமா மாடர்ன் ட்ரெசில் ரீமா அரேபிய குதிரை மாதிரியும், பார்த்திபன் கூட டான்ஸ் ஆடும் பொழுது நோஞ்சான் மாதிரியும் இருக்கும் "வித்தியாசத்தை" கவனிச்சியா?:)))))

குசும்பன்  – (February 1, 2010 11:20 AM)  

ஏன் மாமா ரீமாவை மட்டும் சந்தனம், பன்னீர் மற்றும் வாசனை திரவியம் எல்லாம் போட்டு "தயார் செய்கிறார்கள்"! ஆனா அந்த பாடாவதி மன்னன் குளிக்காம சொறிஞ்சுவிட ஒரு ஆள் வெச்சிக்கிட்டு இருக்கான் இந்த ஆணிய போக்கை நீ தட்டிகேட்பேன்னு நினைச்சேன் விட்டுவிட்டீயே மாமா?:(((

குசும்பன்  – (February 1, 2010 11:22 AM)  

//ஒரு வழி/லியாய் ஆயிரத்தில் ஒருவன் பார்த்தே விட்டேன்.//

என்ன ஸ்பெலிங் என்று சரியா தெரியவில்லை என்றால் இப்படி எழுதிடலாமா ?:) சூப்பரு

குசும்பன்  – (February 1, 2010 11:25 AM)  

//மற்ற இசை அமைப்பாளர்களும் பயன்படுத்தலாம்.//

இந்த ஒருவார்த்தைக்காகதான் ரகுமான், ஹாரீஸ்ஜெயராஜ், யுவன் சங்கர் எல்லாம் உன் பிளாக் முன்னாடியே குத்தவெச்சிக்கிட்டு உட்காந்திருக்காங்க!

நீசொல்லிட்டில்ல இனி அவுங்க பாட சான்ஸ் கொடுத்துடுவாங்க!

குசும்பன்  – (February 1, 2010 11:31 AM)  

//நமீதாவுக்கு மட்டுமே இடம் அளித்த என் இதயக் கோயிலில் இனி ரீமா மட்டுமே குடி இருப்பார் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கிறேன்.//

இதுமட்டும் ரீமாவுக்கு தெரிஞ்சுதுன்னு வெச்சுக்க, கார்த்திக்கை குறிவெச்ச இடத்திலேயே உன்னை சுடும் ஜாக்கிரதை:))

மங்களூர் சிவா  – (February 1, 2010 11:33 AM)  

SSapppppppppppppppppaaaaa

/
கோவி.கண்ணன் said...
யாராவது இவருக்கு திருமணம் செய்து வையுங்கய்யா !
/

உலகத்துல நடக்கிற விசயம் எதாச்சும் சொல்லுங்க கோவி அண்ணே!
:)))

btw நான் இன்னும் படம் பாக்கலை. பாக்கிற ஐடியாவும் இல்லை. மங்களூர்ல ரிலீஸ் செஞ்சு 4 நாள்ல தூக்கீட்டான்.

குசும்பன்  – (February 1, 2010 11:34 AM)  

//தொடரும் என்பதோடு படம் முடிகிறது. இதில் புரியாமல் போக என்ன எழவு இருக்கு?
//

எல்லோரும் உன்னை மாதிரியே இன் டெலிஜெண்டா இருப்பாங்களா மாமா?

Vani  – (February 1, 2010 1:43 PM)  

எந்த எழவும் இல்லாத படத்துக்கா வரலாற்றுப்பதிவு

தாரணி பிரியா  – (February 1, 2010 2:06 PM)  

1. ஆரம்பிக்கும் போது நல்லாதான் ஆரம்பிச்சு இருக்கிங்க‌

2. ஹி ஹி என்னை பத்தி நல்லவிதமாதான் சொல்லி இருக்குங்க‌

3. அவ்வளவு அழகா இருக்கேனா என்ன‌

4. போதும் விடுப்பா

5. என்னால முடியலை. ஒரு மனுசியை இப்படியா புகழறது

6. இனியும் விடமாட்டேங்கறாரே

7. ஹையோ என்ன சொல்லி புரிய வைக்க‌

8. அடேய் சஞ்சய் கத்தி எடுத்தா தான் நீ அடங்குவே போல‌

‍‍‍‍‍‍====

இது எல்லாம் ரீமாசென் படங்கள் சொல்லறது போலவே எனக்கு தோணுதே :)

மயில்  – (February 1, 2010 6:54 PM)  

ஆபிசர் ஒரு ட்வுட்... ரீமா கனவில் வரும்போது தொப்பிய என்ன பண்ணுவீங்க ஆபிசர்??

மயில்  – (February 1, 2010 6:55 PM)  

யாராவது இவருக்கு திருமணம் செய்து வையுங்கய்யா !//

கோவி.கண்ணண், ஒரு பொன்னு வாழ்க்கையை கெடுப்பதில் உங்களுக்கு அப்படி என்ன சந்தோசம்?

மயில்  – (February 1, 2010 7:04 PM)  

இந்தியாவின் ஏஞ்செலினா ஜூலியாய் ஜொலித்தார்.. டாம் ரைடர் மாதிரி பாம்ப் ரைடராக ரீமாவால் கலக்க முடியும்.//

எப்படி இப்படியெல்லாம் சிரிக்காமல் எழுத முடியுது உங்களால் :))))

இய‌ற்கை  – (February 1, 2010 7:09 PM)  

யாராவது இவருக்கு திருமணம் செய்து வையுங்கய்யா !//

கோவி.கண்ணண், ஒரு பொன்னு வாழ்க்கையை கெடுப்பதில் உங்களுக்கு அப்படி என்ன சந்தோசம்?
//

Repeat o repeat:-)

இய‌ற்கை  – (February 1, 2010 7:14 PM)  

நமீதாவுக்கு மட்டுமே இடம் அளித்த என் இதயக் கோயிலில் இனி ரீமா மட்டுமே குடி இருப்பார் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கிறேன்.//




இது ரீமாக்குத் தெரிஞ்சா என்ன ஆகுறது? உசுரை விட்டுறாது?

மயில்  – (February 1, 2010 7:17 PM)  

/நமீதாவுக்கு மட்டுமே இடம் அளித்த என் இதயக் கோயிலில் இனி ரீமா மட்டுமே குடி இருப்பார் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கிறேன்.//

இதுமட்டும் ரீமாவுக்கு தெரிஞ்சுதுன்னு வெச்சுக்க, கார்த்திக்கை குறிவெச்ச இடத்திலேயே உன்னை சுடும் ஜாக்கிரதை:))//

ஹிஹிஹி.. துப்பாக்கிக்கு ஸ்பான்ஸர் நாந்தான் :))

மயில்  – (February 1, 2010 7:19 PM)  

இந்தியாவின் ஏஞ்செலினா ஜூலியாய் ஜொலித்தார்..//

எனக்கென்னவோ ரிவால்வர் ரீட்டா மாதிரிதான் தெரியுது.. தாரணி, ராஜி கூட அதான் சொன்னாங்க..

செல்வேந்திரன்  – (February 1, 2010 7:22 PM)  

இமேஜூமும் முக்கியம் பதிவரே :)

மயில்  – (February 1, 2010 7:27 PM)  

இதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க மக்கா..
அம்மாவாசை பவுர்ணமின்னா சஞ்சய் இப்படி ஆயிடுவார். கண்டுக்காதீங்க:))

இதெல்லாம் வயசானா வர பிரச்சனைதான். :))

இய‌ற்கை  – (February 1, 2010 7:27 PM)  

/இவன் ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் எழுதவே இல்லை /


இதுக்குப் பேர் ஆயிரத்தில் ஒருவன் விமர்சனமா?

ரீமா மட்டும் தான் படத்துல இருந்தாங்களா?

இய‌ற்கை  – (February 1, 2010 7:29 PM)  

//டிஸ்கி: நமீதாவுக்கு மட்டுமே இடம் அளித்த என் இதயக் கோயிலில் இனி ரீமா மட்டுமே குடி இருப்பார் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கிறேன்.//


ஆஹா... நமீதா தப்பிச்சிகிச்சி:-)

இய‌ற்கை  – (February 1, 2010 7:30 PM)  

// சின்ன அம்மிணி said...
ரீமா டார்லிங்கா !!! இதெல்லாம் ஒண்ணும் நல்லதுக்கில்ல.
இந்த வருசம் கோவைப்பயணம் உண்டு. வந்து உங்க அம்மா அப்பாகிட்ட நிறைய பேசணும். :)
//

அப்படி யாரும் பேச மாட்டாங்களான்னு தான் அவரே வெயிட்டிங். நீங்க வேற ஏங்க‌:-))

இய‌ற்கை  – (February 1, 2010 7:34 PM)  

//இந்தியாவின் ஏஞ்செலினா ஜூலியாய் ஜொலித்தார்.. டாம் ரைடர் மாதிரி பாம்ப் ரைடராக ரீமாவால் கலக்க முடியும்.//

எப்படி இப்படியெல்லாம் சிரிக்காமல் எழுத முடியுது உங்களால் :))))//

அவர் சமையலையே அவர் அழாமல் சாப்பிடும்போது, இதை சிரிக்காம எழுத மாட்டாரா? விடுங்க்..விடுங்க‌‌

இய‌ற்கை  – (February 1, 2010 7:39 PM)  

//இதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க மக்கா..
அம்மாவாசை பவுர்ணமின்னா சஞ்சய் இப்படி ஆயிடுவார். கண்டுக்காதீங்க:))
//

அமாவாசை, பவுர்ணமி இல்லன்னா மட்டும் ரொம்பத் தெளிவா இருப்பாரா?

இதுக்கு எதுக்கு அமாவாசை, பவுர்ணமியை இழுக்கறீங்க பாவம்:-)

புனிதா||Punitha  – (February 1, 2010 7:51 PM)  

//அமாவாசை, பவுர்ணமி இல்லன்னா மட்டும் ரொம்பத் தெளிவா இருப்பாரா?

இதுக்கு எதுக்கு அமாவாசை, பவுர்ணமியை இழுக்கறீங்க பாவம்:-)//

ha ha ha repeattu :P

Mrs.Menagasathia  – (February 1, 2010 8:47 PM)  

கிழவியை டார்லிங் என்று சொன்னதற்காக உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்படி ஜொள்ளு விட்ருக்கிங்களே சகோ....

Mrs.Menagasathia  – (February 1, 2010 8:48 PM)  

நமீதாவுக்கு மட்டுமே இடம் அளித்த என் இதயக் கோயிலில் இனி ரீமா மட்டுமே குடி இருப்பார் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கிறேன்.//




இது ரீமாக்குத் தெரிஞ்சா என்ன ஆகுறது? உசுரை விட்டுறாது?// ரீப்பிட்ட்ட்ட்ட்ட்

மயில்  – (February 1, 2010 9:02 PM)  

கிழவியை டார்லிங் என்று சொன்னதற்காக உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.//

ஹிஹிஹிஹி.. சஞ்ஜய் வயசுக்கு தக்கன பார்க்கராரு.. வேற என்ன செய்வாரு? :))

மயில்  – (February 1, 2010 9:03 PM)  

ஆ.ஒ ரீமாசென் போல் மனைவி அமைய என் மனமார்ர்ர்ர்ர்ர்ர்ந்த வாழ்த்துகள் :///

:))) கோவை தாங்காது :))

SanjaiGandhi™  – (February 1, 2010 9:11 PM)  

நன்றி கோவியாரே.. என் கஷ்டம் உங்களுக்காச்சும் புரியுதே :)

ரொம்ப நன்றி ஆதவன் :)

தமிழ்பிரியன், பெரிசு இதெல்லாம் ஓவரு.. :)

சின்ன அம்மினி அக்கா, வாங்க வாங்க.. தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.. :)

ஏனுங்க மயிலு, இதெல்லாம் வயசு புள்ளைங்க சமாச்சாரமுங்க.. அப்டிக்கா ஓரமா நின்னு வேடிக்கை பாருங்கம்ணி :)

ராமலக்‌ஷ்மி அக்கா, எனக்கு மின்னலேக்கு அடுத்து இந்தப் படத்துல தான் ரொம்ப பிடிசிருக்கு :))

மயில்  – (February 1, 2010 9:21 PM)  

இதெல்லாம் வயசு புள்ளைங்க சமாச்சாரமுங்க.. //

அப்ப நீங்க எதுக்கு இங்க? கெளம்புங்க...

கண்மணி  – (February 1, 2010 9:40 PM)  

//நமீதாவுக்கு மட்டுமே இடம் அளித்த என் இதயக் கோயிலில் இனி ரீமா மட்டுமே குடி இருப்பார் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கிறேன்.//

இதைச் சொல்லத்தானே இந்த பதிவி :))

தம்பி ரீமா கொஞ்சம் முத்தல் [வத்தல்] நமீ யாட்டம் வருமா:((

கணேஷ்  – (February 1, 2010 9:54 PM)  

ஸாருக்கு,

ஒரு கர்ச்சீப், டவல் எல்லாம் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

கும்க்கி  – (February 2, 2010 12:21 AM)  

என்ன எழவு புடுச்ச டெப்ளேட் கந்தி இது..?
மொதல்ல அத மாத்தும்...அப்புறம் பதிவ பத்தி யோசிக்கலாம்...

ஸ்ரீமதி  – (February 3, 2010 12:25 PM)  

அடப்பாவி அண்ணா. இப்படியா பப்ளிக்கா ஜொள்ளுவாங்க?? சாரி சொல்லுவாங்க அண்ணிய பத்தி. (ஹி ஹி ஹி.. ஏதோ நம்மலால முடிஞ்சது. ;)))))))

சுரேகா..  – (February 3, 2010 6:11 PM)  

சர்ரி...சர்ரி..!

இந்த விஷயம்
ரீமாவுக்குத் தெரியுமா?

SanjaiGandhi™  – (February 9, 2010 3:37 PM)  

குசும்பா, பப்ளிக் பப்ளிக்..
இங்கயும் பரிசலை வழி மொழியனுமா? :))

மங்களூராரே.. உடல் நலன் எப்படி இருக்கு? கவனாக இருக்கவும்.. ;)

வாணி, ரீமாவைப் பற்றி அவ்வளவு எழுதி இருக்கேனே படிகலையா? முதல் பாதி மிக சிறப்பா இருக்குன்னு சொல்லி இருக்கிறதையும் படிக்கலையா? கதை புரியாம இருக்க ஒரு எழவும் இல்லைனு தானே சொல்லி இருக்கேன்.. படத்துல ஒரு எழவும் இல்லைனு சொல்லி இருக்கேனா? ஏன் இப்டி?

தாரணி அக்கா, விடுங்க விடுங்க.. :))

இயற்கை, என்னை கும்முறதுன்னா ஒரு கூட்டாமா வந்துடுவீங்களே.. நல்லா இருங்க தாயீ.. :(

செல்வேந்திரன், இந்த இமேஜ் பத்தலையா? வேற இருந்தா அனுப்பி வைங்க.. சேர்த்துடலாம் :))

புனிதா, நீ ஊர் சுத்த போனியா இல்லை இங்க ரிப்பீட்டு போடவா? :)

மேனகா சிஸ்டர், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

கன்மணி அக்கா, இதெல்லாம் அநியாயம்.. 16 வயசு பொண்ணுங்க கூட கமல் ரஜினி பார்த்து ஜொள்ளு விடறாங்க.. எங்கள விட 2, 3 வயசுக் கூட இருக்கிற பொண்ணை சைட் அடிச்சா தப்பா? :))

எலேய் கணேஷா, பிச்சிபுடுவேன்.. ”அங்க” வா ராசா.. கவனிச்சிக்கிறேன்..

கும்கி, இந்த டெம்ப்ளெட் மாத்த எவ்ளோ கஷ்ட பட்டேன் தெரியுமா? :(

ஸ்ரீ, என்னாது அண்ணியா? அடிபாவி.. விட்டா கல்யாணமே செஞ்சி வச்சிடுவ போல.. விண்ணைத்தாண்டி வருவாய் பார்த்ததும் அ(ண்)ணி மாற சான்ஸ் இருக்கு.. வெய்ட் பண்ணு :))

சுரேகா, தெரியுமாம்.. கமெண்ட் கூட போடறேன்னு சொன்னா.. நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன் :))

லதானந்த்  – (February 9, 2010 9:01 PM)  

சஞ்சய் கந்தியையைப் பார்த்துக் கேட்கிறேன்.!

கார்த்திக் சோழ வாரிசைத் தோலில் சுமந்து செல்வதாக எழுதியுள்ளீர்கள். கார்த்திக் தோலில் சுமப்பது ரீமாவையும் ஆண்ட்ரியாவையும்தான்

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP