புட்டன் தாத்தன்

புட்டன் தாத்தன் ஒசரம் கம்மியா இருப்பார். அதனால எல்லாம் மரியாத கொறஞ்சதில்ல. மத்த பெரியவங்க மாரியே அவரும் எனக்கு வாங்க போங்க தாத்தன் தான். பெரியவங்கள வா போன்னு பேசினா ஊட்ல எம்முதுகு பழுத்துடும். எந்தாத்தனோட தம்பிமார்ல ஒருத்தர் ஊட்ல தான் இருந்தார். அவர் வேல ஆடு மேக்கிறது மட்டுந்தான். எங்கிட்ட ரொம்ப பாசமா இருப்பார். பொன்வண்டு, காரப்பழம் எல்லாம் கொண்டு வந்துத் தருவார். தினமும் சாய்ங்க்யாலம் ஆடு அடைக்கிற நேரத்துக்கு பட்டிக்குப் போய்டுவேன்.நாலு பக்கமும் தடுப்புச் சுவர் மாதிரி மூங்கில் படல்களால் இருக்கும் அமைப்பு தான் பட்டி.

தினமும் காலைல நாலு, அஞ்சி மணிக்கெல்லாம் அவருக்கான நாள் ஆரம்பிச்சிடும். ஆடுகளுக்குப் பாதுகாப்பா தினமும் இரவு பட்டியில தான் தங்குவார். ஆள் இலைனா ஆட்டுத் திருடனுங்க ஆட்டையப் போட்ருவானுங்க. காத்தால எழுந்ததும் பட்டித் திருப்பறது தான் மொத வேல. தினம் பட்டித் திருப்பியாவனும். ஆட்டு புளுக்கை தான் இருப்பதிலேயே நல்ல இயற்கை உரம்னு சொல்வாங்க. அதனால ஆட்டுப் பட்டிய விவசாய நிலங்கள்ல தான் போடுவாங்க. பட்டித் திருப்பறதுன்னா ஒரு இடத்துல இருந்து அதுக்கு அடுத்த இடத்துல மாத்தறது தான். நிலத்தை செஸ் கட்டங்கள் மாதிரி யோசிச்சிக்கோங்க. ஒரு கட்டத்துல இருக்கிற பட்டிய அடுத்தடுத்த கட்டங்களுக்கு தினமும் மாத்தனும்.சில சமயங்கள்ல பக்கம் பக்கமே நெறய பேர் பட்டிக் கட்டி இருப்பாங்க.

பக்கத்துல எதும் விவசாயம் இல்லாம இருந்தா ஒருத்தரே பட்டித் திருப்ப முடியும். ஆடுங்களும் எங்கயும் போகாது.  யாராச்சும் பண்ணயம் பண்ணி இருந்தாங்கன்னா ஆடுகள் அதை மேயாம தடுக்க ஒருத்தர் வேணும். இத தான் தினமும் மொத வேலயா புட்டன் தாத்தன் செய்வார். மொதல்ல , படல்களுக்கு முட்டுக் குடுத்து கட்டி இருக்கும் L மாதிரி இருக்கும் கட்டைகளில் ஒண்ணை எடுத்து பட்டி திருப்ப வேண்டிய எடத்துல வைப்பார். அப்புறம் அந்த பக்கத்து படல்களை மட்டும் பிரிச்சி எடுத்துட்டுப் போய் அந்த கட்டைல கட்டுவார். இதே மாதிரி நாலு பக்கமும் செய்வார். அப்புறம் கொடாப்புஅக் கொண்டு போய் பட்டுக்குள்ள வைப்பார். பட்டியில் ஆடுகள் தான் அடைக்கனும். குட்டிகளை அடைக்க பெரிய அண்டாவை கவுத்து வச்ச மாதிரி சில குச்சிகளை வளைத்து செய்த கொடாப்புல தான் அடைக்கனும். அதுல மேல் பக்கத்துல ஒரு கயிறுகட்டி அந்தக் கயித்துல குட்டிகள் சாப்பிடும் இலைகளை கட்டி வச்சிடுவார். குட்டிகள் மட்டும் சென்று வரும் அளவு குட்டியா கொடாப்புல ஒரு கதவும் இருக்கும்.

பட்டியும் கொடாப்பும் மாத்தினதும் அவர் படுக்கிறதுக்காக இருக்கும் பட்டிக் குடிசையை பட்டுக்கு உள்ளயோ வெளியவோ வச்சிடுவார்.  இதெல்லாம் முடியறதுக்குள்ள கருக்கல் மறய ஆரம்பிச்சி இருக்கும். நேரா ஊட்டுக்கு வந்துடுவார். பட்டிக்காட்ல எல்லாரும் நாலு அஞ்சி மணிக்கெல்லாம் முழுச்சிருவாங்க. புட்டன் தாத்தன் வரும் போது அவங்க ஊட்ல சோளக் கூழ ரெடியா இருக்கும். கைகால் கழுவிட்டு வந்து சுடச் சுட கூழ் குடிப்பார். அப்டியே கொஞ்ச நேரம் அக்கம் பக்கம் கத பேசுவார். நல்லா வெளிச்சம் வந்துரும். குட்டிகளுக்கு தழ ஒடிச்சினு வர கிளம்பிடுவார்.

தேவையான அளவு தழைங்க சேர்ந்ததும் நேரா பட்டிக்குப் போய் குட்டிகளுக்கு கொடாப்புல தழ கட்டிட்டு குட்டிகளை வெளிய எடுத்து அதுங்க அம்மாங்க கிட்ட பால் குடிக்க வச்சி மறுபடியும் கொடாப்புல அடைச்சிட்டு ஊட்டுக்கு வருவார். பல்லு வெளக்கி பக்கத்துல எங்கனா தொட்டியில குளிச்சிட்டு காத்தால சாப்பாட்டுக்கு ரெடி ஆய்டுவார். சாம சோறோ வரகு சோறோ இருக்கும். கொள்ளு பருப்பு கொழம்பு ஊத்தி வயிறு முட்ட ஒரு கட்டு கட்டிட்டு அப்டியே எங்கனா போய்ட்டு 11 மணிவாக்குல மறுபடியும் பட்டிக்குப் போய்டுவார். போகும் போது ஒரு தூக்குல கூழ் ஊத்தி எடுத்துப்பார். மத்யான சாப்பாட்டுக்கு. தண்ணி எங்கனா கெடைக்கும். இல்லைனா அது ஒரு பாட்டில்ல எடுத்துப்பார்.


ஆடு மேக்கிற எல்லாருமே அந்த நேரத்துல தான் கிளம்புவாங்க. காட்டுக்கு ஆடு ஓட்டிட்டுப் போற வழியில எல்லாரும் ஒண்ணு சேர்ந்துடுவாங்க. அப்டியே காட்டுக்குப் போய் ஆடுகளைமேய விட்டுட்டு ஆளுக்கொரு மரத்தடில தூக்கம் போட ஆரம்பிச்சிடுவாங்க. யார்னா ஒருத்தர் ரெண்டு பேர் மட்டும் முழிச்சிட்டு ஆடுகள பார்த்துப்பாங்க. பெரும்பாலும் தூக்கத்த விட கதை அடிக்கிறது தான் அதிகமா இருக்கும். ஒரே எடத்துலன்னு இல்லாம பச்ச இருக்கிற எடமெல்லாம் சுத்தி சுத்தி மேய்ப்பாங்க.

இருட்ட ஆரம்பிக்கிற மாதிரி ஆய்டிசின்னா எல்லாரும் ஆடுக்கள ஓட்டிட்டு திரும்புவாங்க. யார்னா ஒருத்தர் ஆடுகளுக்கு முன்னாடி வருவார். மத்தவங்க ஆடுகளுக்கு பின்னாடியும் பக்கவாட்டுலையும் வருவாங்க.இல்லைனா கூட்டத்துல இருக்கிற எதுனா குறும்பாடு அது இஷ்டத்துக்கு எங்கனா போகும். அது பின்னாடியே மத்த ஆடுங்க போகும். வழியில் இருக்கிற பண்ணயத்துல ஆடுங்க வாய் வசிடக் கூடாதே. அது பெரிய கலவரத்தை உண்டு பண்ணிடும். எப்போவும் யார் தோள்ளயாச்சும் 2 ஆட்டுக் குட்டிகள் இருக்கும். ஆடுகள் ஒரு நேரத்துல 2 குட்டிப் போடும்.

புட்டன் தாத்தன் பட்டிக்கு வந்ததும் அவரு ஆடுகள் மடும் தனியா பட்டிய பார்த்து ஓட ஆரம்பிச்சிடும். ஆடுங்க வரது தெரிஞ்சதும் கொடாப்புல இருக்கிற குட்டிங்க எல்லாம் கத்த ஆரம்பிச்சிடும். புட்டன் தாத்தன் ஒரு படலை மட்டும் கொஞ்சமா திறந்து விடுவார். அது மட்டும் தான் திறக்கற மாதிரி இருக்கும். மத்த படல் எதும் திறக்க முடியாத மாதிரி கட்டி இருப்பாங்க. பட்டியில இருக்கிற தொட்டியில மத்யானம் தண்ணி நெரப்பி வச்சிருப்பாங்க. ஆடுங்க அதை குடிச்சி தாகம் தீர்த்துக்கும். எல்லா ஆடுங்களும் பட்டிக்குள்ள போனதும் பட்டியை அடைச்சிடுவார். அப்புறம் குட்டிகளை திறந்து விட்ருவார். அவங்கவங்க அம்மாகிட்ட போய் சமத்தா பால் குடிச்சிட்டு செமத்தியா ஆட்டம் போட ஆரம்பிச்சிடும். அப்புறம் குட்டிகளை பிடிச்சி கொடாப்புல அடைச்சிட்டு ராத்திரி சாப்பாட்டுக்கு ஊட்டுக்கு வருவார். களியோட கீரைக் குழம்போ அவரைப் பருப்பு குழம்போ சமைச்சி வச்சிருப்பாங்க. சாப்ட்டுட்டு ஒரு பேட்டரி லைட்டும் மூங்கில் தடியும் போர்வையும் எடுத்துக்கு திரும்ப பட்டிக்கு போய்டுவார். போகும் போதே செட்டு செட்டா தான் போவாங்க. அவங்கவங்க பட்டிக்குப் போனதும் பட்டி குடிசைல படுத்துடுவாங்க. அதுல உயரமான கால்களோட ஒரு கட்டில் இருக்கும். வைக்கோல் போட்டு அதுக்கு மேல சாக்குப் பை மூடி இருக்கும். மெத்து மெத்துனு இருக்கும் மெத்தை மாதிரி. குளிர் அல்லது வெக்கைக்கு ஏத்த மாதிரி கட்டிலுக்கு மெல இருக்கிற குடிச்சை மூடாப்பை உயரமவோ தாழ்வாவோ வச்சிக்குவார். அன்றையநாள் முடிந்தது. அடுத்த காலைல நாலு அஞ்சி மணிக்கு எழுந்துடுவார்...

பெரியவனாகற வரைக்குமே தெரியாது அவர் ஆடு மேய்க்கவே எந்த தாத்தமூட்டுக்கு வந்தார்ன்னும் அவர் எங்க தாத்தனுங்களுக்கு சொந்தம் இல்லைனும். ஆனாலும் கடைசி வரை எங்களுக்கு தாத்தனாவே இருந்தார். ஒருநாள் ஊருக்குப் போனப்போ புட்டன் தாத்தன் பட்டியில இருந்த தாடிக்கார ஆடு வேற ஒருத்தர் ஓட்டிட்டுப் போனார். வாங்கிட்டியான்னு கேட்டதுக்கு, புட்டன் கெழவன் செத்ததும் உங்க தாத்தமூட்டார் இத வித்துட்டாங்கன்னு சொன்னான். என்னவோ மாதிரி இருந்துச்சி..எதயாச்சும் திண்ணுட்டு வயித்தால போச்சின்னா ஒடு டம்பரும் எலுமுச்சம் பழமும் எடுத்துட்டு பட்டிப்புப் போய்டுவேன். ஆட்டுப் பால் கறந்து அதுல எலுமிச்சம் பழம் சாறு பிழிஞ்சித் தருவார். கொஞ்ச நேரத்துல சரி ஆய்டும். அவர் செத்துப் போய்ட்டார்னு கேட்டதுல இருந்து மீள ஆட்டுப்பாலும் உதவாது..




சிட்டுக்குருவி  – (February 8, 2010 10:14 AM)  

நல்ல கிராமத்து அனுபவத்தொகுப்பு!!!

எல்லா ஊர்லயும் புட்டன் தாத்தா இருப்பாங்க போல

Sangkavi  – (February 8, 2010 10:27 AM)  

எங்க ஊர்லயும் இப்படி ஒரு தாத்தா இருக்கிறாருங்க....

அழக சொல்லியிருக்கறீங்க...

அன்புடன் அருணா  – (February 8, 2010 5:58 PM)  

/பெரியவங்கள வா போன்னு பேசினா ஊட்ல எம்முதுகு பழுத்துடும். /
எங்க ஊட்லெயும்தான்!நல்லாருக்கு!

கலகலப்ரியா  – (February 8, 2010 6:18 PM)  

அழகான நினைவு நீரோடை சஞ்சய்..!!

//பெரியவங்கள வா போன்னு பேசினா ஊட்ல எம்முதுகு பழுத்துடும்//
=)).. சரிதான் ..

Mrs.Menagasathia  – (February 8, 2010 7:35 PM)  

என்னால் முழுதாக படிக்கமுடியல.பாதி வெள்ளையாவும்,பாதி கருப்பாகவும் இருக்கு சகோ...

ஜெகநாதன்  – (February 9, 2010 7:35 AM)  

பட்டிக்குள் அடைந்து ​கொள்கிறது மனசு..!
தாத்தனை நன்கு அவதானித்து எழுதியிருக்கிறீர்கள். புகைப்படங்கள் ​நேர்த்தி!

SanjaiGandhi™  – (February 9, 2010 3:48 PM)  

நன்றி சிட்டுக்குருவி

நன்றி சங்கவி

நன்றி அருணாக்கா.. அங்கயுமா? :)

நன்றி லகலகப் ப்ரியா.. சரி சரி.. புரியுது.. அதெல்லாம் ஒன்னியும் பண்ண முடியாது ஆத்தா.. :))

மேனகா சிஸ்டர், மீண்டும் முயற்சி பண்ணுங்க.. பக்கம் முழுசா லோட் ஆகாம இருந்திருக்கும்.. நன்றிக்கா..

ரொம்ப நன்றி ஜெகநாதன்..

மயில்  – (February 9, 2010 10:00 PM)  

ரீமா சென்னுக்கு 44 கமெண்ட்ஸ், தாத்தாக்கு வெறும் 7 தானா? வெளங்கும்..:))

henry J  – (February 10, 2010 3:41 PM)  

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

SanjaiGandhi™  – (February 11, 2010 11:28 AM)  

மயில், புரிஞ்சா சரி :)

ஹென்றி நன்றி..

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP