February 18, 2010

இனி வரப் போகும் பதிவர்களின் புத்தகங்கள் விவரம்


பிரபலப் பதிவர்கள் சிலர் ஏற்கனவே புத்தகம் வெளியிட்டிருக்கும் நிலையில் மேலும் சில பிரபலப் பதிவர்களும் புத்தகம் வெளியிடும் முயற்சியில் இருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. புலனாய்வு செய்ததில் அவர்களில் புத்தகங்களின் பெயர்கள் தெரிந்துக் கொள்ள முடிந்தது. அதன் விவரம்..

நசுங்காத சொம்பும் நச்சினு சில தீர்ப்புகளும்
- வடகரை வேலன்

பார்வை மாற்றமும் கலர்கண்ணாடிகளும் சுனாதினாவும்
- குசும்பன்

அழுவாச்சிக் காவியம்
- காயத்ரி சித்தார்த்

பப்புவின் ஆப்பும் தினம் தினம் ”ஙே”வும்
 - சந்தனமுல்லை

பப்லுவின் க்ளாஸ் மிஸ்களும் ஏழுவின் காதல் லீலைகளும்
 - கார்க்கி

பொண்டாட்டி ராஜ்ஜியமும் சில புலம்பல்களும்
- ஆதி தாமிரா

பாரதியின் ரௌத்திரமும் ரெண்டு ப்ளேட் ரத்தப் பொரியலும்
- கலகலப்ப்ரியா

 தம்பித் தங்கக் கம்பி
 - புதுகை அப்துல்லா

இலவச பூங்கொத்தனார்
 - அன்புடன் அருணா

கல்யாணராமன்
  - அதிஷா

அண்ணனுக்கு ஜே - ஆட்டையைப் போட சில கவிதைகள்
 - இயற்கை மகள்

வாலும் கோளும்
 - வால்பையன்

கல்யாணம் பண்ணிப்பார்.. பதிவெழுதிப்பார்
 - மங்களூர் சிவா

தினமலரும் தினம் ஒரு பதிவும் for Dummies 
- கோவி. கண்ணன்

மல்லு ஆண்டி மைனர்
 - ஆயில்யன்

மானிட்டர் கவிதைகளும் மசால் போண்டாவும்
 - தண்டோரா

இட்லி பூரி பொங்கலும் கெட்டிச் சட்னியும் கொஞ்சம் சில்லறையும் மறுபிறவியும் கொஞ்சூண்டு பெரிய பதிவுகளும்
- உண்மைத்தமிழன்

பாமகவை திட்டுவது போல் நடிப்பது எப்படி?
- குழலி

எழுதுவதெல்லாம் கவிதையே
- ஜ்யோவ்ரம் சுந்தர்

சுமாரான பிகரும் சூப்பர் பிகரின் அலப்பறையும்
- சின்ன அம்மினி

நீங்களும் புனைவு எழுதலாம்
- நிஜமா நல்லவன்

வாங்க  அட்வைசர் ஆகலாம்
- புதுகைத் தென்றல்

Last.. but not least..

30 நாளில் படம் வரைந்து பாகம் குறிப்பது எப்படி? ஒரு அனுபவக் குறிப்பு ( இது அது அல்ல)
- கணேஷ் பக்கங்கள் ”சியாமளா” கணேஷ்

டிஸ்கி: இது யாரையும் புண்படுத்த அல்ல.. தவறாக இருப்பின் மன்னித்து சுட்டிகாட்டவும்..நீங்களும் மற்ற ரவுடிகளை ஜீப்பில் ஏற்றுங்கள்..

81 comments:

கோவி.கண்ணன் said...

ராகுல் - இந்தியாவிற்காக புதிய இளைஞர்

- சஞ்சய்காந்தி

கோவி.கண்ணன் said...

ஒவ்வொரு நாளும் ஒன்பது கோள்கள் - சுப்பையா வாத்தியார்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அப்பாடி!
நல்ல புனைவு!!

கோவி.கண்ணன் said...

வாய்விடாமல் சிரிங்க - டிவி இராதகிருஷ்ணன்

மயில் said...

ரிமாசென்னும் நமீதாவும் ஒரு மினி (மெகா) மீல்ஸ்

- சஞ்சய் காந்தி

☀நான் ஆதவன்☀ said...

//
கல்யாணம் பண்ணிப்பார்.. பதிவெழுதிப்பார்
- மங்களூர் சிவா//

இது மட்டும் செட்டாகல.. பதிவே எழுதுறது கிடையாது இதுல புக் வேறயா? :))

Cable Sankar said...

வாங்கிருவோம்..:)))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோவி.கண்ணன் said...
ராகுல் - இந்தியாவிற்காக புதிய இளைஞர்

- சஞ்சய்காந்தி
//
அது என்ன புதிய இளைஞர்!?

முப்பத்தஞ்சு வயசத் தாண்டி இருக்கனுமா?

SanjaiGandhi™ said...

நன்றி கோவிஜி.. :))
இன்னும் சிலைரையும் ஏத்திவிடுங்க :)

நன்றி ஜோதிசார்.. உங்களையும் ஜீப்ல ஏற்றத்தான் நினைத்தேன்.. இடப்பற்றாக் குறை.. அடுத்த வாட்டி முதல் வரிசைல ஏத்திடறேன் :)

நன்றி மயில்.. இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பார்க்கிறென் :)

நன்றி ஆதவன்.. கல்யாணத்துக்கப்புறம் அவர் பதிவெழுதறதில்லை.. அதனால தான் இந்த தலைப்புல புக் எழுதறார் :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோவி.கண்ணன் said...
ஒவ்வொரு நாளும் ஒன்பது கோள்கள் - சுப்பையா வாத்தியார்
//

எந்தக் கோளச் சொல்லுறிய சாமியோவ்!?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோவி.கண்ணன் said...
வாய்விடாமல் சிரிங்க - டிவி இராதகிருஷ்ணன்
//

வாய விட்டுட்டா எப்படிங்க சிரிக்கமுடியும்?

ஓ... ஒரு வழி இருக்கு.
அதைப் பயன்படுத்தி மத்தவங்க சிரிக்கக் கூடும்!

கோவி.கண்ணன் said...

//அது என்ன புதிய இளைஞர்!?

முப்பத்தஞ்சு வயசத் தாண்டி இருக்கனுமா?//

:)

இளைஞர்களின் வயது எது என்பது ராகுல் வயது ஏற ஏற மாறும். ஸ்டாலின் அறுபது வயதில் இளைஞர் அணி தலைவராக இருந்தது இல்லையா ? :)

ஆயில்யன் said...

//டிஸ்கி: இது யாரையும் புண்படுத்த அல்ல.///


ம்ஹுக்கும் எனக்கு எதயத்தில ரத்தம் வழிஞ்சு ஓடிக்கிட்டிருக்குய்யா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோவி.கண்ணன் said...
//அது என்ன புதிய இளைஞர்!?

முப்பத்தஞ்சு வயசத் தாண்டி இருக்கனுமா?//

:)

இளைஞர்களின் வயது எது என்பது ராகுல் வயது ஏற ஏற மாறும். ஸ்டாலின் அறுபது வயதில் இளைஞர் அணி தலைவராக இருந்தது இல்லையா ? :)
//

இனமான உணர்வு மட்டும் இருந்துச்சுன்னு வச்சுக்குங்களேன்...
எந்த வயசயும் இளைஞர்னு ஏத்துக்கிட்டு அடிமாடா உழைக்க முடியும்!
:)

பித்தனின் வாக்கு said...

ஹா ஹா சூப்பர், தினமலரும் காலமும் நல்ல கற்பனை. வாழ்த்துக்கள் சஞ்சய். கொஞ்சம் பெரிய ஜீப்பா வைக்கக்கூடாது. இன்னமும் நிறைய பேரை ஏத்தி இருக்கலாம். நன்றி.

Vidhoosh said...

:))

ஜீவன் said...

;;;)

குசும்பன் said...

ஆஹா மாமா போச்சே போச்சே
அடுத்த பதிவு இதுமாதிரிதான் எழுதனும் நினைச்சு பதிவு போனது கூட பரவாயில்லை மாமா, உன்ன மாதிரி நான் யோசிச்சிட்டேனே அவ்வ்வ்வ் அப்ப நானும் லூசா?:(((


//பாரதியின் ரௌத்திரமும் ரெண்டு ப்ளேட் ரத்தப் பொரியலும்
- கலகலப்ப்ரியா//

இது செம டாப்.

குசும்பன் said...

30 நாளில் படம் வரைந்து பாகம் குறிப்பது எப்படி? ஒரு அனுபவக் குறிப்பு//

மாமா இன்னும் ஸ்கூலில் செஞ்ச சேட்டையை மறக்காமல் இருக்கீயே?:))

வெண்பூ said...

Sanjai Gandhi: Vision 2016 : 2016ல் தமிழக ஆட்சியை பிடிப்பது குறித்த கற்பனைக் குவியல்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்குக் குழலி எழுதப் போகும் புக்தான் பிடிச்சிருக்கு :)

புனிதா||Punitha said...

நாளைய பிரதமர்: இந்தியா என் கனவு - எழுத்தாக்கம் சஞ்சய் காந்தி

♠ ராஜு ♠ said...

முடிவிலா முடியலத்துவம் - செல்வேந்திரன்.

ஆங்காங்கே சில அவியல்கள்- பரிசல்.

சுகமாய் ஒரு சுற்றுலா-வெயிலான்.

தங்கமடா என் தங்கமணி- ஆமூகி.

கார்க்கி said...

Cable Sankar February 18, 2010 9:24 AM
வாங்கிருவோம்..:))//

இவரு ரொம்ப சீரியஸா பேசறாரோ...

♠ ராஜு ♠ said...

கற்காலத்தில் காங்கிரஸ் - சஞ்சய் காந்தி.

கம்பர் எனும் கலகக்காரர் - நர்சிம்.

என் கவிதைகளை விளங்கிக் கொள்ளல் எப்படி..? (A Common Catalog For All my Poems)
-அனுஜன்யா.

அயிரம் பதிவெழுதிய சிங்கப்பூர் சிந்தாமணி - கோவியார்.

♠ ராஜு ♠ said...

கார்க்கியின் ஸ்பெஷல் பதிப்புகள்..

துணி உலர்த்த வந்த என் தேவதை, சில மொட்டைமாடிக் குறிப்புகள் - கார்க்கி.

செல்வாவின் வாந்தி, ஓட்டைகளுக்கான ஒரு சாட்டையடி - கார்க்கி.

அரிச்சந்திரனின் அவதார லீலைகள் -கார்க்கி.

கைப்புள்ளைகள் வளர்க்கும் இலக்கியம்,சமகாலத்தின் இலக்கியக் குறிப்புகள் - கார்க்கி.

மொக்கை தர்பார்,சரித்திர நாவல் - கார்க்கி.

பரிசல்காரன் said...

செம!

சுபா said...

எப்படி சஞ்சய் இப்படியெல்லாம்?

புனிதா||Punitha said...

//சுபா said...
எப்படி சஞ்சய் இப்படியெல்லாம்?//

சித்தம் கலங்கின்னா இப்படித்தான் :P

Ramesh said...

very nice!

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹிஹி.. செமையா இருந்தது. அதுவும் முதல் புக்கே டாப்பு. ஒண்ணு விட்டுட்டீங்களே..

காப்பி ஆத்துவது எப்படி?
-வெண்பூ.

வெண்பூ said...

கொய்யால... அந்த ஆளே மறந்துட்டானேன்னு சந்தோஷப்பட விட மாட்டீங்களே??? :)))

ஜெரி ஈசானந்தா. said...

ஹாய் சஞ்சய் "வலைத்தளம் மிரட்டலாய் இருக்கிறது,வாழ்த்துகள்."

அறிவிலி said...

//தினமலரும் தினம் ஒரு பதிவும் for Dummies
- கோவி. கண்ணன்//

இது டாப்பு..

:-))))

சந்தோஷ் = Santhosh said...

சஞ்ஜை,
எல்லாமே சூப்பரு..

Sangkavi said...

எப்படி இப்படியெல்லாம்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\கல்யாணம் பண்ணிப்பார்.. பதிவெழுதிப்பார்
- மங்களூர் சிவா//

:))

சந்தனமுல்லை said...

:-)))

தமன்னாவும் ஒரு கல்யாண கனவும் வர்ஷா உடைத்த குட்டும்! - - சஞ்சய் காந்தி



/பப்புவின் ஆப்பும் தினம் தினம் ”ஙே”வும்
- சந்தனமுல்லை/

அவ்வ்வ்வ்!

அன்புடன் அருணா said...

அடப்பாவி!ஆனா நல்ல ஐடியாவா இருக்கே புத்தகம் எழுதிரவேண்டியதுதான்!

க.பாலாசி said...

//இட்லி பூரி பொங்கலும் கெட்டிச் சட்னியும் கொஞ்சம் சில்லறையும் மறுபிறவியும் கொஞ்சூண்டு பெரிய பதிவுகளும்
- உண்மைத்தமிழன்//

ஆனாலும்....உமக்கு....

கணேஷ் said...

கிர்ர்ர்... இங்கேயுமா..?

அது சரி படத்தையே இன்னும் கண்ல பாக்கலியே... பார்த்தா தானே படம் வரைஞ்சி பாகம் குறிக்க முடியும்.....

KarthigaVasudevan said...

கலக்கல்...சூப்பர் போஸ்ட்
:)))

Deepa said...

:-)))) ellaame super.

The best:
இட்லி பூரி பொங்கலும் கெட்டிச் சட்னியும் கொஞ்சம் சில்லறையும் மறுபிறவியும் கொஞ்சூண்டு பெரிய பதிவுகளும்
- உண்மைத்தமிழன்

காயத்ரி சித்தார்த் said...

:)

ஸ்ரீமதி said...

:))))))))

SanjaiGandhi™ said...

நன்றி எழுத்தாளர் சங்கர் அவர்களே.. :))

கோவிஜி, மறுபடியும் உங்கள் கவனத்திற்கு.. எங்கள் கட்சியின் சட்டங்கள் அனைவருக்கும் சமம். ராகுல்காந்தி இளைஞர் அணியில் இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்.

ஆயில்யன், ஏன் ராசா? எதுனா மல்லு ஆண்டி கண்ணில் நீர் வழிகிறதா? :))

நன்றி பித்தனின் வாக்கு.. அடுத்ததா ரயில் தான்.. அவ்ளோ நல்லவங்க இருக்காங்க.. :))

SanjaiGandhi™ said...

நன்றி விதூஷ்.. விடுபட்டவர்கள் பட்டியலில் நீங்களும் இருக்கிங்க :)

நன்றி ஜீவன் :)

குசும்பா, என்ன மாமா டவுட்டு.. நாமெல்லாம் ஒரே இனமல்லவா? :))

வெண்பூ, நீர் அடிக்கடி பதிவெழுதாமல் இருப்பதால் தப்பித்தீர் :)

நன்றி சுந்தர்ஜி.. குழலி அந்த புத்தகத்தை பல பகுதிகளாக ஏற்கனவே எழுதி இருக்கிறார்... வரப்போவது தொகுப்பு. :)

SanjaiGandhi™ said...

புனிதா அம்மையாரே.. நான் எதிர்கால இந்தியப் பிரதமர் தான்.. :)

நன்றி ராஜு.. கலக்கிட்டிங்க.. கார்க்கி மேல ரொம்ப பாசமோ :))

கார்க்கி, எழுத்தாளர்னா சீரியசா தான் பேசுவார்.. சீனியர் மேல கொஞ்சம் இர்ரெஸ்பெக்ட் வைங்க :)

நன்றி பரிசல் மாம்ஸ் :)

சுபா, எல்லாம் உன் சகவாசம் தான்.. :)

SanjaiGandhi™ said...

நன்றி ரமேஷ் :)

ஆதி மாம்ஸ், வெண்பூ அந்த புத்தகத்தை எழுத ஆரம்பித்து நீண்ட நாட்கள் ஆகிறது.. ஆயினும், வெண்பூ, ஜோசப் பால்ராஜ் எல்லாம் பதிவர்களாக கணக்கில் கொள்ளப் படாததால் பட்டியலில் இடம் பெறவில்லை :))

வெண்பூ, மறக்கவெல்லாம் இல்லை ராசா.. இது பதிவர்கள் எழுதும் புத்தகம் பற்றிய பதிவு.. நீர் பதிவரா? :))

நன்றி ஜெரி வாத்தியாரே :)

நன்றி அறிவிலி :)

SanjaiGandhi™ said...

நன்றி சந்தோஷ்.. :)

நன்றி சங்கவி.. எல்லாம் உங்க ஆசிகள் தலைவரே ;)

நன்றி முத்தக்கா.. உங்களுக்காச்சும் புரிஞ்சதே.. ”இது காமிக்ஸ் படிக்கும் வயசல்ல” என்று நீங்கள் எழுதும் புத்தகம் பற்றி குறிப்பிடாமல் விட்டுவிட்டேன் :))

சந்தனமுல்லை.. பப்ளிக்.. பப்ளிக்.. :)

அருணாக்கா, சீக்கிறம் எழுதுங்க.. எவ்ளோ நாள் தான் ஓசில பூங்கொத்து குடுத்துட்டே இருப்பிங்க :))

SanjaiGandhi™ said...

நன்றி பாலாசி.. கண்டுக்காதிங்க ;))

கணேஷ், இன்னுமா உன் ப்ராஜக்ட் முடியலை.. வெண்பூ மற்றும் ஜீவ்ஸின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது :))

நன்றி கதாசிரியை கார்த்திகா :)

நன்றி தீபா.. உ.த அண்ணனிடம் மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பிங்க போல .. :)

காயத்ரி, இன்னாமே அழுவாச்சி கவுஜாயினி.. புதுசா சிரிச்சிப் பழகறயாக்கும்.. :)

நன்றி திருமதி ஸ்ரீமதி..

Mrs.Menagasathia said...

////பாரதியின் ரௌத்திரமும் ரெண்டு ப்ளேட் ரத்தப் பொரியலும்
- கலகலப்ப்ரியா//
செம சூப்பர்ர்ர்....கலக்கல் பதிவு!!

நிஜமா நல்லவன் said...

:)))))))))))))))

ரோஸ்விக் said...

என்னா ஒரு வில்லத்தனம்... செமையா காலாய்ச்சிருக்கீங்க.... பல தலைப்புகள் ரசிக்கும்படியா இருக்கு... :-)))

கலகலப்ரியா said...

romba sokkaa keethubaa... (seththaadaa mavane.. apdinnu yaaro solraaynga..)

SanjaiGandhi™ said...

நன்றி மேனகா சிஸ்டர். ஆனா பாருங்க அந்தம்மா மெரட்றாங்க.. :)

நன்றி மெய்யாலுமே நல்லவரே.. :)

நன்றி ரோஸ்விக்.. உங்களவிடவா தல? :)

ஹிஹி .. நன்றி கலகப்ரியா
//seththaadaa mavane.. apdinnu yaaro solraaynga..//

என் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு திருமதி ப்ரியா அவர்களே காரணம் என எழுதிவைக்கிறேன்.. அவ்வ்வ்.. பாவி.. அதான் அங்கயே மெரட்டி ஆச்சி இல்ல.. இங்கயுமா? :(

அன்புடன்-மணிகண்டன் said...

மினி மீல்சும்... பே பண்ணாத பில்லும் ... - சஞ்சய் ;)

எப்பூபூபூடி??

வால்பையன் said...

யூத்து போல் நடிப்பது எப்படி!?
-சஞ்சய்காந்தி

*****

ரகசிய தொப்பியும், சின்ன தொப்பையும்
-சஞ்சய்காந்தி

*****

தொழில்அதிபர் போல் சீன் போடுவது எப்படி!?
-சஞ்சய்காந்தி

*****

கோவை ரோடும், இரும்பு ராடும்
-சஞ்சய்காந்தி

*****

வேலை செய்யாமல் ஓபி அடிப்பது எப்படி
-சஞ்சய்காந்தி

*****


வாங்கி விட்டீர்களாஆஆஆஆ!!!

Mitr Friend - Bhushavali said...

That's an impressive (lolz!!!) list... :D

Paris City - Part II
My Little Black Dress

~~~Romeo~~~ said...

முன் பின் தெரியாத பெண்களிடம் பேசுவது எப்படி - ரோமீயோ ( என்னையும் ஆட்டதுல சேத்துகோங்க ப்ளீஸ் :(( )

டம்பி மேவீ said...

தொடர்ந்து டம்மி பீஸ் யாக இருப்பது எப்படி - டம்பி மேவீ .....

சூப்பர் பதிவு அண்ணே

டம்பி மேவீ said...

இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாரும் இல்லையா

டம்பி மேவீ said...

இந்த புத்தகங்களை எல்லாம் எந்த பழைய புத்தக கடையில் கிடைக்கும் ???

டம்பி மேவீ said...

புத்தகதுக்க்கு அட்டையில் பெயர் மட்டும் தானே இருக்கும் ...உள்ளே ஒன்னும் இருக்காது ல

டம்பி மேவீ said...

பதிவை படிக்காமல் பின்னோட்டம் போடுவது எப்புடி - வளரும் வலைப்பதிவாளர்கள் சங்கம்

டம்பி மேவீ said...

ஒரே நாளில் நான்கு பதிவு எழுதுவது எப்புடி - பரிசல்க்காரன்

டம்பி மேவீ said...

கடவுளை வைத்து ஹிட்ஸ் வாங்குவது எப்புடி - வால் பையன்

டம்பி மேவீ said...
This comment has been removed by the author.
டம்பி மேவீ said...

feelings of india - karki

SanjaiGandhi™ said...

வாலு, நான் எப்போ ராசா தொழிலதிபர்னு சொன்னேன்? என்னை வச்சி எல்லாரும் காமெடி பன்றாங்க.. அப்டி சொல்லி நான் சீன் போடறதா நினைச்சது உங்க முட்டாள்தனம். :)

யூத்து பத்தி யார் பேசறதுன்னே இல்லாம பேச்சே..அவ்வ்வ்வ்வ்..

ஓபி அடிக்கிறது பத்தி என்னால அதிக பட்சம் 10 பக்கம் எழுத முடியும். நீங்க 1000 பாகமே எழுதலாம்.. நீங்க எழுத வேண்டிய புத்தகம் எல்லாமே என் பக்கம் தள்ளிவிட்டா எப்டி சாமி? மனசாட்சி வேணாமா? :))

SanjaiGandhi™ said...

நன்றி மணிகண்டன்.. நல்லா தான் இருக்கு :)

நன்றி புஷா.. நல்லா இருக்கிங்களா?

நன்றி ரோமியோ.. சீக்கிறம் புக் ரிலீஸ் பண்ணுங்க.. செம சேல்ஸ் ஆகும்.. மொத காப்பி எனக்கு அனுப்புங்க :)

நன்றி டம்பி மேவி.. கலக்கறிங்க போங்க.. :)

LOSHAN said...

கலக்கல்..
பின்னூட்டங்களையும் சேர்த்தே ரசித்தேன்..

மங்குனி அமைச்சர் said...

சாமி எந்த கடைல அரிசி வாங்குறிங்க..... யப்பா இப்படி யோசிகிரிங்க (நான் எந்த டாஸ்மாக்ல சரக்கு அடிபிங்க தான் கேட்க நினைத்தேன் நீங்க ஏதும் தப்பா எடுதுபிங்கலோனுதான்......... அரிசி மேட்டர்)

மதிபாலா said...

ஜ்யோவ் "ரம்" சுந்தர்

தலைப்புல மட்டும் தான் உள்குத்துன்னா பேர்லயுமா?

சரிசரி...நடத்துங்க நடத்துங்க.!

மங்குனி அமைச்சர் said...

சார் என்னோட ப்ளாக்-ல உங்களுக்கு ரிப்ளை பன்னும்போது ஒரு ஸ்பெல்லிங் mistake இருந்தது அதுனால அத டெலிட் பண்றதுக்கு பதிலா தவறுதலா உங்க போஸ்ட டெலிட் பன்னிட்டேன் ரொம்ப சாரி

எனக்கு இந்த ப்ளாக் சமாசாரம் ரொம்ப புதுசு ரெண்டுநாளதான் ஆச்சு அதுதான் mistake ஆகிபோச்சு சீக்கிரம் கத்துகிறேன்

இய‌ற்கை said...

cha...feel panni oru kavithai elutha vidamateengala?

சின்ன அம்மிணி said...

ரொம்ப சீக்கிரமா இன்னைக்குதான் பாக்கறேன்.
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

//தொழில்அதிபர் போல் சீன் போடுவது எப்படி!?
-சஞ்சய்காந்தி//

ஹஹஹஹா

சின்ன அம்மிணி said...

//இலவச பூங்கொத்தனார்
- அன்புடன் அருணா//

இலவச பூங்கொத்தி - பெண்பால்

Mitr Friend - Bhushavali said...

@Sanjai,
Am very good... Enga neenga en blog pakkame kaanom...

Paris City - Part II
My Little Black Dress

Tech Shankar said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

SanjaiGandhi™ said...

நன்றி லோஷன் :)

நன்றி மங்குனியாரே :))
( அட விடுங்க பாஸ்.. இதெல்லாம் சாதாரனம்)

நன்றி மதி.. நலமா தோழா? :)

நன்றி இயற்கை :)

நன்றி சின்ன அம்மினி அக்கா :)

புஷா.. வரேன்.. வரேன்.. நேரமில்லைடா.. சாரி..

நன்றி டெக் சங்கர்

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget