February 20, 2010

நில்.. கவனி.. செல்..

  • இந்தியாவில் தீவிரவாதம், இயற்கை பேரழிவுகள் போன்றவற்றைக் காட்டிலும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவது சாலை விபத்துகளே..
  • ஒவ்வொரு மணி நேரமும் 13 பேர் இந்தியாவில் சாலை விபத்தில் மரணமடைகிறார்கள். இது உலக அளவில் மிக அதிகம்.
  • உலக அளவில் சாலைவிபத்தில் மரணமடையும் 10 பேரில் ஒருவர் இந்தியர்.
  • தினமும் சுமார் 250 பேர் சாலை விபத்தில் மரணமடைகிறார்கள்.
  • இவர்களில் 85 சதவீதம் பேர் ஆண்கள். 70 சதவீதம் பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள். சம்பாத்தித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கடமையில் இருப்பவர்கள்.
  • குடிபோதையில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களால் 29 சதவீத விபத்து மரணங்கள் நடைபெறுகின்றன.
  • ஹெல்மெட் அணிவதன் மூலம் 40 சதவீத பாதிப்பையும், காரில் சீட் பெல்ட் அணிவதால் 50 சதவீத விபத்து பாதிப்பையும் தடுக்க முடியும்.
  • சாலை விதிகளை மீறுவதன் மூலமே 80 சதவீத விபத்துகள் நடைபெறுகின்றன.
ஆகவே சாலை விதிகளை கடைபிடிப்போம்.. அதிவேகமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்போம்.. குடி போதையில் வாகனம் ஓட்டாதீர்கள்.. செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.. உங்களை நம்பி குடும்பம் இருக்கிறது.. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதை தவறாமல் கடைபிடிப்போம்.. சாலை விபத்தை தவிர்ப்போம்..

டிஸ்கி:  இயற்கை ராஜி அழைப்பின் பேரில் ஒரு தொடர் பதிவு.. விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்களும் பதிவிடுங்கள்..

27 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நல்லதுங்க. நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன், எல்லோரும் ஒரு இடுகையாவது இது பற்றி எழுத வேண்டும்.

நல்ல தலைப்பு.:)

ஈரோடு கதிர் said...

நல்ல இடுகை...

//தினமும் சுமார் 250 பேர் சாலை விபத்தில் மரணமடைகிறார்கள்.//

இது என்ன கணக்கு? மாவட்ட / மாநில / தேசிய அளவிலா?

மின்னுது மின்னல் said...

நல்ல பதிவு



//
ஜெல்மெட்
//

புதுசா இருக்கு :)

SanjaiGandhi™ said...

நன்றி ஷங்கர்..

கதிர், அனைத்து தகவல்களும் இந்திய அளவிலானது தான்.

மயில் said...

ம்ம்.. நல்ல பதிவு எல்லாம் நாலு வரியில் முடிச்சுடுங்க. மொக்கை, ஜொள்ளு பதிவு மட்டும் பக்கம் பக்கமா எழுத வேண்டியது :))

நல்லாருங்க :))

சின்ன அம்மிணி said...

விஜிக்கு ரிப்பீட்டிக்கறேன்.:)

இன்னும் கொஞ்சம் விவரமா எழுதியிருக்கலாம். கடமைக்கு எழுதின மாதிரி இருக்கு.

ராஜன் said...

எக்ஸ்செல் சூப்பர் கிழவர்களுடன் மல்லுக் கட்டி என் மண்டை உடைகிறது ..... நடு ரோட்டுல 15 கி மீ ஸ்பீடுல ஓட்டி பின்னாடி வர்றவனுங்க தாலியக்கரானுங்க கிழவர்கள்

மயில் said...

கடமைக்கு எழுதின மாதிரி இருக்கு.//

கடமைக்கு இல்லப்பா, கடனுக்கு..

மயில் said...

இயற்கை ராஜி அழைப்பின் பேரில் ஒரு தொடர் பதிவு.. //

ராஜி உனக்கு வேற ஆளே கிடைக்கலையா?

மயில் said...

இந்த லட்சணத்தில் புள்ளி விவரம் வேற. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இதான் தினம் லோக்கல் கோவை சேனலில் தினம் 30 தடவை சொல்லாங்க. அதை காப்பி அடிச்சு ஒரு பதிவு...இதெல்லாம் ஒரு பொழப்பு :))

அகநாழிகை said...

சரிங். சஞ்சய்.

கடை பிடிக்கிறோம்.

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

நல்ல பதிவு....!


///இந்த லட்சணத்தில் புள்ளி விவரம் வேற. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இதான் தினம் லோக்கல் கோவை சேனலில் தினம் 30 தடவை சொல்லாங்க. அதை காப்பி அடிச்சு ஒரு பதிவு...இதெல்லாம் ஒரு பொழப்பு :))///


கோயம்புத்தூர்ல இருக்குற நீங்க மட்டும் தெரிஞ்சுகிட்டா போதுமா ? நாங்கல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாமா ? ;;)

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

Bar Parking Area?

jaffer erode said...

நல்ல பதிவு

க.பாலாசி said...

வண்டியோட்டுறப்ப இதெல்லாம் நெனச்சிப்பாக்கணும்... நல்ல இடுகைங்ணா...

க.இராமசாமி said...

உபயோகமான பதிவு.

செந்தழல் ரவி said...

நல்ல இடுகை. இன்ஸ்பையரிங் மாம்ஸ்.

இய‌ற்கை said...

//இயற்கை ராஜி அழைப்பின் பேரில் ஒரு தொடர் பதிவு.. //

ராஜி உனக்கு வேற ஆளே கிடைக்கலையா?//


இப்பிடியாவது ஒரு உருப்படியான பதிவு எழுத வைக்கலாம்ன்னு பார்த்தேன்.......

இய‌ற்கை said...

SanjaiGandhi™ said...

//கதிர், அனைத்து தகவல்களும் இந்திய அளவிலானது தான்.//


அதானே... நீங்க கன்ட்ரி லெவல் டீலிங் தானே...... எல்லாமேஏஏஏஏ:-)

அன்புடன்-மணிகண்டன் said...

நல்ல பதிவு சஞ்சய்.. நானும் முடிந்தவரை சாலைவிதிகளை கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன்.. நண்பர்களையும் கடைபிடிக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்..

இய‌ற்கை said...

ஹெல்மெட்டைப் போட்டுகிட்டு ரோட்டுக்கு பதிலா வேற "எங்கியோ பார்த்து"கிட்டு வண்டி ஓட்டறவங்களப் பத்தி உங்க கருத்து என்ன திரு.சஞ்சய் காந்தி அவர்களே:-)

ஜோசப் பால்ராஜ் said...

கடந்த மாத இறுதியில் இந்தியப் பயணத்தின் போது சென்னையில் இருந்து தஞ்சைக்கு காரில் சென்ற போது கவனித்தவைகளையே ஒரு பதிவா எழுதலாம் மச்சி.
முன்பெல்லாம் சாலை சரியில்லாம விபத்துகள் நடந்துச்சு. இப்ப நல்ல சாலைகள் இருக்கு, ஆனா அத எப்டி உபயோகிக்கிறதுன்னு நம்மாட்களுக்கு தெரியலை.
மெதுவாக செல்லும் கனரக வாகனங்கள் சாலையின் இடபுற தடத்தில் தான் செல்ல வேண்டும் என்பது சாலை விதி. ஆனால் இதை எவரும் கடைபிடிப்பது கிடையாது. மிக அதிகளவில் பாரமேற்றப்பட்டு செல்லும் லாரிகள், டாட் ஏஸ், மினிடோர் போன்ற வாகனங்கள் கூட சாலையின் வலது தடத்தில் தான் செல்கின்றன. இவர்களை இடதுபுறமாக மற்றவர்கள் முந்திச் செல்கின்றார்கள். அதோடு நன்றாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் திடீரென குறுக்கே ஓடுபவர்களும் இன்னமும் இருக்கின்றார்கள். சாலை நன்றாக இருப்பதால் வேகமாக வாகனங்கள் செல்வதால் இது போல் குறுக்கே ஓடுபவர்களால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவே இயலாது.

முதலில் 4 தடமுள்ள சாலைகளில் எப்படி வாகனங்களை ஓட்டுவது, யார் யார் எந்த தடத்தில் செல்லலாம் , எப்படி முன் செல்லும் வாகனத்தை முந்துவது, எப்படி ஒளி சமிக்கைகள் குடுப்பது என்பது குறித்து கட்டாயம் பயிற்சியளிக்க வேண்டும்.

முன் செல்லும் வாகனம் வலதுபுறம் திரும்பும் சமிக்ஞை(Right Indicator) குடுத்தால் பின்செல்லும் வாகனம் முன்செல்லும் வாகனத்தை முந்திக்கொள்ளலாம் என அர்த்தம் என எங்கள் வாகனத்தை ஓட்டியவர் சொன்னார். அதிர்ந்து போயிட்டேன்.ஒரு வேளை என் போன்றவர்கள் வலது சமிக்ஞை போட்டுவிட்டு வலது தடத்திற்கு மாற முயற்சிக்கும் போது, பின்னால் வருபவர் முந்திக்கொள்ள அவருக்கு சமிக்ஞை கொடுத்ததாக எண்ணி வேகமாக வந்தால் கட்டாயம் விபத்து ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இதை என்னவென்று சொல்வது?
மிக கடுமையான பயிற்சிகள் வாகன ஓட்டிகளுக்கு தரப்பட வேண்டும். பயிற்சியளிப்பதோடு , அதை ஒழுங்காக கடைபிடிக்கின்றார்களா என கண்காணிக்கவும் வேண்டும்.

அடுத்து இருச் சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிவோர் , சிலர் கட்டாயத்தின் பேரில் தலைகவசம் அணிந்தாலும், அதில் உள்ள வாரை ஒழுங்காக மாட்டாமல் , ரொம்ப அலட்சியமா விட்டுட்டு போயிட்டு இருக்காங்க. ஒரு வேளை கீழே விழுந்தால் அந்த அதிர்சியிலேயே தலைக்கவசம் தனியே கழண்டு விழுந்துவிடும். தலைக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது. ( இதே போல் ஒரு விபத்து ஏற்பட்டு என்றும் அன்புடன் பாலா அவர்களின் உறவினர் ஒரு இளம் வாலிபர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது). இது போல் பலர் அலட்சியமாக இருப்பதையும் காண நேரிடுகிறது. இதெல்லாம் தானா வரணும், வரலைன்னு சட்டம் போட்டாலும் இப்டி செய்யிறாங்க, உயிரோட மதிப்பு அரசாங்கத்துக்கு மட்டுமில்ல, தனி மனிதர்களுக்கும் தெரியலை.

cheena (சீனா) said...

புள்ளி விபரங்கள் எதற்கும் பயன்படாது. சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். தவறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தர வேண்டும். காவல்துறை அவ்வப்பொழுது விதி முறைகளை கற்பிக்க வேண்டும். அறிவுறுத்த வேண்டும்

Mitr Friend - Bhushavali said...

Remembering a thought said earlier:

What is the moral of the movie 'Alaipayudhe' - Cross the road carefully!!!

True indeed, right?

Paris City - Part II
My Little Black Dress

SanjaiGandhi™ said...

நன்றி மின்னுது மின்னல்..( விட மாட்டிங்களே) :)

நன்றி மயில்.. மொக்கைகள் எவ்வளவு பக்கம் எழுதினாலும் படிக்கிறாங்க.. நல்லப் பதிவுகள் 4 வரிகளுக்கு மேல படிக்க மாட்டேங்கறாங்க.. என்ன செய்ய?
எந்த லோக்கல் சானலில் இந்த புள்ளி விவரம் வருதுங்க அம்னி? இதெல்லாம் இணையத்தில் தேடி எடுத்தவை..

நன்றி சின்ன அம்மினி அக்கா.. விஜிக்கு சொன்ன பதிலைப் பாருங்க.. :)

நன்றி ராஜன்.. பெரியவர்கள் மட்டுமா அப்படி இருக்கிறார்கள்.. ஆட்டோ, மினிடோர் ஓட்டும் இளசுகளும் இப்டி தானே இருக்காங்க..

நன்றி வாசு சார். :)

நன்றி ஜீவன்.. நல்லா சொல்லுங்க அந்த அம்மனிக்கு :)

SanjaiGandhi™ said...

ஷர்புதீன்.. என்னாது பார் பார்க்கிங் ஏரியாவா? 6 மணிக்கு மேல ஆச்சினா அதே நெனப்பா :)

நன்றி ஜாஃபர்

நன்றி பாலாசி

நன்றி ராமசாமி

நன்றி ரவிமாமா.. யாழினி டார்லிங் சவுக்கியமா?

நன்றி இயற்கை.. :)

நன்றி மணிகண்டன்.. நீ சமத்து பையன்பா :)

அடேய் ஜோசப்பு.. உண்மை தமிழன் அண்ணன் கூட சேராதன்னு சொன்னா கேக்கறியா? :)

நன்றி சீனா சார்.. புள்ளிவிவரங்களை பார்த்தால் பயம்வர வேண்டும் என எழுத்னேன்..

நன்றி புஷா.. எத கொண்டுவந்து எங்க சேக்கிற பரு.. கலக்கறடா :))

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அருமையான அலசல் .

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget