February 11, 2010

Mini Meals v 4.02.10

ந்த வார ஆரம்பத்தின் ஒரு முன்மாலைப் பொழுதில் கோவை மாநகராட்சியில் 20 சொச்சம் கருத்தரங்கு அறைகளில் எதோ ஒன்றில் சில பெரும்புள்ளிகளுடன் சிறு புள்ளியாய் நானும் எதிரில் சில அதிகாரிகளுமாய், ஆணையர் திரு. அன்சுல் மிஷ்ராவுக்காக காத்திருந்த இடைவேளையில் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது என் அருகில் இருந்த ஒருவர் தன் அலுவலகம் இருக்கும் பகுதியின் பெயரை சொன்னதும் எதிரில் இருந்த அலுவலர் ஒருவர் இடைமறித்தார்.

”லக்‌ஷ்மிபுரத்துல எந்த இடம்ங்க?”
“அந்த பாலத்துக்கு பக்கம் லெஃப்ட்ல ஒரு ரோடு போகுமே அங்க சார்”
“ஒரு மளிகைடை இருக்குமே. அங்கயா?”
“இன்னும் கொஞ்சம் மேல வாங்க” ( கையை உயர்த்திக்காட்டினார்)
“ஆமா.. கொஞ்ச தூரத்துல ஒரு டீக் கடை இருக்கும். என் வீடும் அங்க தான் இருக்கு”
“ஓ. நாங்க ஒரு TWAD போர்ட் இஞ்சினியர் வீட்ல கீழ வாடகைக்கு எடுத்திருக்கோம் சார்”
“அப்டியா?. வீட்டு நம்பர் என்ன?
“15B”
“15Bயா? 16Bயா?
"சாரி சார்.. 16B தான்.. அந்த வீடு தெரியுங்களா?”
“அந்த வீடே என்னோடது தானுங்க..TWAD போர்ட் இஞ்சினியர் இல்லை.. கார்பரேஷன் இஞ்சினியர். மாடியில் தான் குடி இருக்கிறேன். ஆனா உங்கள பார்த்ததில்லை பாருங்க”
என் அருகில் இருந்தவர்கள் சிரித்து முடிக்க நீண்ட நேரம் ஆகியது.அந்த நபருக்கு ஆச்சர்யம்.. இது வரை இருவரும் சந்தித்துக் கொண்டதே இல்லையாம். வீட்டம்மாவிடம் தான் வாடகை தருகிறாராம். அதனால் வீட்டய்யாவை பார்த்ததில்லையாம்.. இது எப்டி இருக்கு.. :)

கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஷ்ரா மிகவும் எளிமையாகவும் நட்பாகவும் பழகுகிறார். நேர்மையானவரும் கூட. மிக அழகான தமிழில் பேசுகிறார். தமிழ் அதிகாரிகளைப் போல் ஆங்கிலத்தில் பேசி டரியல் ஆக்குவதில்லை. அதே போல் கோவை மாநகர காவல்துறை ஆணையர் திரு.சிவணாண்டி மிக சிறப்பாக செயல்படுகிறார். குயர் கணக்கில் பேப்பரும் பான்பராக்கும் மசால்வடையும் வாங்கித் தர வேண்டிய அவசியம் இல்லாமல், முதன் முறையாக, தொலைபேசியில் புகார் அளித்தாலே போதும் FIRவீடு தேடி வரும் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டினார். ஹெல்மெட் அணிவதை தீவிரப் படுத்தினார். பணியில் இருக்கும் போது காவலர்கள் அலை பேசியை உபயோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே , யாராவது பேருந்துகளில் படியில் பயணம் செய்தால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறார். நேற்று மாநகர பேருந்தில் பயணம் செய்த போது படியில் நிற்க நடத்துனர், யாரையும் அனுமதிக்கவில்லை. நல்ல கமிஷனர் தான்.

 ப்போதெல்லாம் கோவையில் அநேக இடங்களில் பெரும் ஃப்ளக்ஸ் பேனர்களில் அஞ்சா நெஞ்சன் அழகிரி ஓயாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார். நேற்று பொள்ளாச்சியிலும் அவரின் பிரமாண்ட சிரிப்பை தரிசிக்க நேர்ந்தது. அழகிரியார் தெற்கில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுதும் பரவிக்கொண்டிருக்கிறார். சுடாலினார்(நன்றி TBCD) உஷாராக இருக்க வேண்டும். உருண்டு திரண்டு வரும் கரும் மேகம் சூரியனையே மறைக்கும். நிலா எம்மாத்திரம்?. அரசியல்வாதிகளுக்கு இணையாக ஆன்மிக வியாபாரிகளும் களத்தில் குதித்துவிட்டார்கள். எங்கெங்கு நோக்கினும் ஜக்கியும் நித்தியும் பிரமாண்டமாக புன்னகைக்கிறார்கள். சில பால்கள் சித்து வேலைகள் காட்ட மைதாணம் நோக்கி பெரு வாரியாக அழைக்கிறார்கள். அரசியல்வாதிகளைப் போல் ஆன்மிக வியாபாரிகளுக்கும் தொண்டரடிபொடிகள் அதிகரித்து விட்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு பேனர் கட்டுகிறார்கள் கடவுளின் ஏஜெண்டுகளின் கடைக்கண் பார்வைக்கு.. நல்லா இருங்க ராசாக்களா..

தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரும் இண்டர்நெட் நிறுவனம் telkom. இதன் மோசமான சேவையில் கடுப்பான ஒரு IT நிறுவன பணியாளர் புறாவின் மூலம் தகவல் அனுப்ப முடிவு செய்திருக்கிறார். அதன் படி 4GB மெமரி ஸ்டிக்கை ஒரு புறாவின் காலில் கட்டி 85கிமி தொலைவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறார். அந்தப் புறாவும் சமர்த்தாக அந்த நிறுவனத்திற்கு சென்று மெமரிஸ்டிக்கை ஒப்படைத்துவிட்டது. அதில் இருந்த டேட்டாவை அந்த நிறுவனத்தினர் தங்கள் கணினியில் ஏற்றிவிட்டார்கள். இதற்காக ஆன காலம் 2 மணி நேரம் மட்டுமே. இந்த 2 மணி நேரத்தில் telkomன் அதிவேக இணைப்பின் மூலம் இதே தகவல் 4% மட்டுமே அப்லோட் ஆகி இருந்ததாம். இது எப்டி இருக்கு? :))

சில வணிக விசாரணைகளுக்காக Tradeindia இணையதளத்தில் மேய்ந்துக் கொண்டிருக்கும் போது ஒரு நிறுவனமும் அதன் அலுவலக விலாசமும் கண்ணில்பட்டது.இது காய்கறிகள் ஏற்றுமதி நிறுவனம். MLA ஹாஸ்டல்ல தங்கறவங்க தான் பெரும் வணிகர்கள் என்று பார்த்தால், ஹாஸ்டலே கமர்சியல் காம்ப்ளக்ஸ் போல் தான் செயல்படுகிறது போலும்.

ANBU INTERNATIONAL
No. C/6A, MLA Quarters,
Government Estate,
Chennai - 600002, Tamil Nadu, India

Key Personnel
Mr. J. Karunanithi (Proprietor)

இதெப்டி இருக்கு?


திர் வரும் ஞாயிறுக் கிழமை, சென்னையில் பிரமாண்டமான கேபிள்சங்கர் எழுதிய புத்தகமும் திருப்பூர் திலகம் பரிசல்காரன் எழுதிய புத்தகமும் வெளியிடப்படுகிறது.பரிசல் மாமனின் அன்பான அழைப்பை ஏற்று சென்னை வந்து விழாவை சிறப்பிக்க உள்ளேன். அரசியல்வாதிகள், ஆன்மீக வியாபாரிகளுக்கு இணையாக எனக்கு கட் அவுட்கள் பேனர்கள் வைப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக “வருங்காலப் பிரதமரே வருக வருக” என போஸ்டர் அடித்து ஒட்டுவதைத் தவிர்க்கவும். எனக்கு புகழ்ச்சி பிடிக்காது. இது வரை ரசிகர் மன்றம் அமைக்க வந்த 154685478521458 சொச்சம் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளேன். மேலும் நான் சென்னை வரவில்லை என்றால் தீக்குளித்துவிடுவதாக அச்சுறுத்தி மெயில் அனுப்பிய 143 இளம்பெண் வாசகிகளுக்கும் என் அன்புகள். வெறும் பெயரையும் ஊரையும் மட்டும் போட்டு அந்த மின்னஞ்சல்களை எல்லாம் வெளியிடுவதில் விருப்பம் இல்லை. அவர்களின் மெயில் முகவரிகளுடன் விரைவில் வெளியிடுகிறேன். ஏனெனில் இப்போதைக்கு 143 மெயில் ஐடிகள் உருவாக்க நேரம் இல்லை என்பதை என் ஏழரை நாட்டு வாசகர்கள் புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

42 comments:

தண்டோரா ...... said...

அது சரி !

ஆயில்யன் said...

எம் எல் ஏ ஹாஸ்டல் விசயம் செம - வியாபார காந்தங்கள் தான் சுத்தி திரியிறாங்க போல! :)))

கோவி.கண்ணன் said...

//அரசியல்வாதிகள், ஆன்மீக வியாபாரிகளுக்கு இணையாக எனக்கு கட் அவுட்கள் பேனர்கள் வைப்பதைத் தவிர்க்கவும்//

அதனால் தான் உன் தலையில் அந்த அறிவிப்புகளை எழுதிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்

வெண்பூ said...

//
பிரமாண்டமான கேபிள்சங்கர்
//

உம்ம நக்கலுக்கு அளவில்லாம போச்சி...

சென்ஷி said...

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

என் ஏழரை நாட்டு வாசகர்கள் //

நல்ல வேளை ஏழரை வாசகர்கள்னு எழுதாம விட்டீங்களே :)))))))

பரிசல்காரன் said...

முதல் பத்தி எழுதியிருந்த விதம் ரசிச்சேன்.

//பிரம்மாண்ட கேபிள் சங்கர்//

சூப்பர்!

SanjaiGandhi™ said...

தண்டோரா மாம்ஸ்.. எது சரிங்க? :)

ஆயில்ஸ்.. விரைவில் நாமளும் அட்ரஸ் தரலாம் விடுங்க ;))

கோவியாரே, நிகழ்சி நடப்பது சிங்கார சென்னையில் சிங்கையில் இல்லை ஐயரே.. :))

வெண்பூ, கேபிள் எழுதிய புத்தகத்தை சொன்னேனய்யா.. :))

சென்ஷி, என்ன இளிப்பு ராசா?

அமித்தம்மா, நான் சென்னையில் இருந்து மீண்டும் கோவைக்கு வரதுல உங்களுக்கு என்னங்கம்ணி பிரச்சனை? உசுர எடுக்க ப்ளான் பண்றிங்களே.. வர்ஷா கிட்ட சொல்லிடுவேன்.. நான் அவங்க ஃப்ரண்ட் சஞ்சு :))

butterfly Surya said...

எல்லாமே சூப்பர். புறா மேட்டர் கலக்கல்.

பணம் வந்து சேர்ந்தது. நீ சொன்ன படி கட் அவுட் எங்க வைக்கணும்..

ஏர்போர்ட்டா..?? சென்னை சென்டரலா..??

பாலராஜன்கீதா said...

//Key Personnel
Mr. ***J. Karunanithi (Proprietor)***//
:-)

தாரணி பிரியா said...

//இப்போதைக்கு 143 மெயில் ஐடிகள் உறுவாக்க நேரம் இல்லை என்பதை என் ஏழரை நாட்டு வாசகர்கள் புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.//

ஆங் அப்புறம் :)

KarthigaVasudevan said...

இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை,ஜப்பான் இப்பிடி தான் கேள்விப்பட்ருக்கேன்,

அதென்ன ஏழரை நாடு !!!

சஞ்சய் பிரதமரானா அப்படி ஒரு நாடு உருவாக்கற திட்டமா?! கொடுமை தான்.
:(

புதுகைத் தென்றல் said...

:))

மின்னுது மின்னல் said...

“வருங்காலப் பிரதமரே வருக வருக”
//


கட்சிகாரர்கள் பதவிக்கு ஆசை பட கூடாது - சோனியா காந்தி

:)

☀நான் ஆதவன்☀ said...

:)) மினி மீல்ஸ் வயித்துக்கு க்ரெக்டா இருக்கு :)

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. உருண்டு திரண்டு வரும் கரும் மேகம் சூரியனையே மறைக்கும். நிலா எம்மாத்திரம்?. ..//

:-)))

மயில் said...

ஏர்போர்ட்டா..?? சென்னை சென்டரலா..??//ரெண்டும் இல்லை புழல் வாசல்ல வைங்க :))

கலகலப்ரியா said...

//என் அருகில் இருந்தவர்கள் சிரித்து முடிக்க நீண்ட நேரம் ஆகியது.//
நீங் சிரிக்கலீங்களாக்கூ...

//இது எப்டி இருக்கு.. :)//
இப்டித்தான் இருக்கு.. (அட டவுன் வாழ்க்கைன்னு சொன்னேன்பா..)

//நல்ல கமிஷனர் தான்.//
அட கமிஷன் இல்லாம ஒரு கமிஷனரா... த..பார்றா..

அடுத்தது என்ன அரசியலா... ஸ்கிப் பண்ணு ப்ரியா...

//இது எப்டி இருக்கு? :))//
செம ஸ்பீடு புறா மச்சி... இணைப்பைத் துண்டித்து புறாவை வாங்கறதா முடிவெடுத்துட்டாங்களா எல்லாரும்..?

பிசினெஸ் மேட்டர்... அதையும் ஸ்கிப் பண்ணுடிம்மா...

நண்பர்களுக்கு வாழ்த்துகள்..

//அரசியல்வாதிகள், ஆன்மீக வியாபாரிகளுக்கு இணையாக எனக்கு கட் அவுட்கள் பேனர்கள் வைப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக “வருங்காலப் பிரதமரே வருக வருக” என போஸ்டர் அடித்து ஒட்டுவதைத் தவிர்க்கவும். எனக்கு புகழ்ச்சி பிடிக்காது. இது வரை ரசிகர் மன்றம் அமைக்க வந்த 154685478521458 சொச்சம் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளேன். மேலும் நான் சென்னை வரவில்லை என்றால் தீக்குளித்துவிடுவதாக அச்சுறுத்தி மெயில் அனுப்பிய 143 இளம்பெண் வாசகிகளுக்கும் என் அன்புகள். வெறும் பெயரையும் ஊரையும் மட்டும் போட்டு அந்த மின்னஞ்சல்களை எல்லாம் வெளியிடுவதில் விருப்பம் இல்லை. அவர்களின் மெயில் முகவரிகளுடன் விரைவில் வெளியிடுகிறேன்.//

செல்ஃப் குக்கிங் உடம்புக்கு ஆகாதுன்னு சொன்னா கேக்குறாங்களா.... என்ன கொடுமை எல்லாம் வெளில வருது பாருங்கோ... ஆனாலும் மினிமீல்ஸ் சோக்கா கீதுமா... இம்பூட்டு காமெண்டு... ஸ்ஸ்ஸ்...

மயில் said...

என்றால் தீக்குளித்துவிடுவதாக அச்சுறுத்தி //

முதல்ல குளிக்க சொல்லுங்க ஆபிசர் :)

மயில் said...

குறிப்பாக “வருங்காலப் பிரதமரே வருக வருக” என போஸ்டர் அடித்து ஒட்டுவதைத் தவிர்க்கவும். //

ம்ம்ம். நினைப்புதான் பொழப்பை கெடுக்குது :))

மயில் said...

143 இளம்பெண் வாசகிகளுக்கும் //

கருமம் இதெல்லாம் ஒரு பொழப்பு :))

மங்களூர் சிவா said...

154685478521458
rendu cyber vittu pochu pola irukke???

Mrs.Menagasathia said...

// ஆன்மீக வியாபாரிகளுக்கு இணையாக எனக்கு கட் அவுட்கள் பேனர்கள் வைப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக “வருங்காலப் பிரதமரே வருக வருக” என போஸ்டர் அடித்து ஒட்டுவதைத் தவிர்க்கவும். எனக்கு புகழ்ச்சி பிடிக்காது. இது வரை ரசிகர் மன்றம் அமைக்க வந்த 154685478521458 சொச்சம் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளேன். மேலும் நான் சென்னை வரவில்லை என்றால் தீக்குளித்துவிடுவதாக அச்சுறுத்தி மெயில் அனுப்பிய 143 இளம்பெண் வாசகிகளுக்கும் என் அன்புகள். வெறும் பெயரையும் ஊரையும் மட்டும் போட்டு அந்த மின்னஞ்சல்களை எல்லாம் வெளியிடுவதில் விருப்பம் இல்லை. அவர்களின் மெயில் முகவரிகளுடன் விரைவில் வெளியிடுகிறேன். ஏனெனில் இப்போதைக்கு 143 மெயில் ஐடிகள் உருவாக்க நேரம் இல்லை என்பதை என் ஏழரை நாட்டு வாசகர்கள் புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.//ஹா ஹா இது சூப்பராயிருக்கு...

அன்புடன் அருணா said...

கோவைலே வருங்காலப் பிரதமர் இருக்கறதினாலே இப்படி அவ்வ்ளோப் பேரும் நல்லவங்களாயிட்டாங்களா? கொஞ்ச நாள் எங்க ஊருக்கு வந்துட்டுப் போப்பா!!!!கலக்குறே!

SanjaiGandhi™ said...

பரிசல் மாம்ஸ் நன்றி.. பெரியவங்க எல்லாம் இந்த பக்கம் வந்திருக்கிங்க :)

சூர்யா மாம்ஸ் நன்றிங்க.. நல்ல வேளை வெரும் செண்ட்ரல்னு சொல்லி டரியல் ஆககாம விட்டிங்க.. :))

பாராகீதா நன்றிங்க :)

தாரணி அக்கா, அதென்ன அப்புறங்.. கதையா சொல்றாங்க.. போய் சாப்ட்டு ஆபிஸ்ல தூங்குங்க.. :)

எழுத்தாளினி கார்த்திகா, அட என் வாசகர்களின் எண்ணிக்கை அவ்ளோங்க.. 7 முழு நாடுகளின் மக்களும் ஒரு நாட்டின் பாதி மக்களும் என் வாசகர்கள்னு சொல்ல வந்தேன்.. :))

SanjaiGandhi™ said...

புதுகை அக்கா தேங்க்ஸ்க்கா

மின்னல், தேடிவரும் பதவியை அலட்சியப் படுத்தாமல் பொறுப்பு உணர்ந்து பணியாற்றவேண்டும் எனவும் அன்னை சொல்லி இருக்கிறார். :)

நன்றி ஆதவன்.. செரிக்கிறதுக்குள்ள அடுத்த சாப்பாடு ரெடி பண்ணிடலாம்.. :)

நன்றி திருஞான சம்பத் :)

மயில், நீங்க அங்க தான் இருக்கிங்களா? பெயில்ல எடுக்கனுமா? காண்டாக்ட் மிஸ்டர் பெயிலான் :)

SanjaiGandhi™ said...

அம்மணி லகலகப்ரியா.. இம்புட்டு தான் முடிஞ்சதுங்களா? இல்ல இன்னும் ஸ்டாக் இருக்கா? நல்லா இருங்க தாயீ.. நானாவது செல்ஃப் குக்கிங்.. சிலர் கடைல தோசை வாங்கி வந்து கெஸ்ட்க்கு தராங்களாம்..:)

மங்களூர் மாம்ஸ், கீ போர்ட்ல இன்னைக்கு சைபர் வொர்க் ஆகலை :))

சுரேகா.. said...

//143 ஐடி//

இந்தமாதிரி எத்தனை?

மொத்தத்துல ஜிமெய்ல் காரனை இப்படித்தான் ஏமாத்தி வச்சிருக்கீங்களா?
:)

இது தெரியாம அவம்பாட்டுக்கும் எங்கள நம்பி இத்தனை ஓட்டு இருக்குன்னு ஏலம்ப்போட்டுக்கிட்டிருக்கானேப்பா!

நல்லா இருங்க பிரதமரே! :))

போதுமா???

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்கள ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்னு நினைச்சு ரொம்ப நாளா உங்கபதிவ படிக்குறதில்ல சஞ்சய். எவ்வளவு சுவாரசியமான அதே சமயம் விஷயங்களோடு கூடிய எழுத்து உங்களுடையது என அறியும் போது இத்தனை நாள் மிஸ் பண்ணியதுக்காக (அடிக்கடி டெம்பிளேட் மாத்தாதீங்க, கொளம்புது) வருந்துகிறேன்.

இனி தவறாது வருவேன் மாம்ஸ்.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

அதுக்காக பழசெல்லாம் படிக்கலாமேன்னு சொன்னா.. ஸாரி அதுக்கு நான் ஆளில்லை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

154685478521458 மற்றும் 143 எண்கள் இரண்டும் இடம் மாறிவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.

SanjaiGandhi™ said...

சுரேகா, ஹிஹி.. நன்றி..
தோராயமா பேரும் ஊரும் போட்டு வாசகர் கடிதம் பிரசுரிக்க நாம என்ன பெரும் எழுத்தாளர்களா? இந்த மாதிரி எல்லாம் டகல்பாஸ் வேலை செஞ்சா தான் உலகம் நம்பும் :))

ஆதிமாம்ஸ்,, ஆஹா எழுத்தாளரே ரசிக்கிற மாதிரி எழுதிட்டேனா? நன்றி நன்றி.. :) என்னாது பழசெல்லாம் படிக்க சொல்வேனா? ஹிஹி.. என் பதிவை நானே இன்னொருவாட்டி படிக்கிறதில்லை.. உங்கள கொடுமை படுத்துவேனா? :))
( கொய்யால இவ்ளோ நாள் போட்ட கமெண்டெல்லாம் படிக்காம தானா? உலகத்துல யாருமே நல்லவங்க இல்லையா? :) )

ஆதிமூலகிருஷ்ணன் said...

( கொய்யால இவ்ளோ நாள் போட்ட கமெண்டெல்லாம் படிக்காம தானா? உலகத்துல யாருமே நல்லவங்க இல்லையா? :) //

கொய்யால நான் எப்போ உங்க பதிவுக்கு பின்னூட்டம் போட்டேன்.. ஹிஹி.

SanjaiGandhi™ said...

ஆதிமாம்ஸ், ஒண்ணு ரெண்டில்லை ராசா.. ஏராளமா இருக்கு.. :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

சரி உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்.. அவை எப்பயாச்சும் யாருன்னே தெரியாம போட்ட பின்னூட்டங்களா இருக்கும்.

இனிமே மொக்கை போட்டா கொமட்டுலயே குத்துவேன் சரிதானா..

SanjaiGandhi™ said...

என்னாது மொக்கை போட வேணாமா? அப்போ ப்ளாக் டெலிட் பண்ணிடவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

//(அடிக்கடி டெம்பிளேட் மாத்தாதீங்க, கொளம்புது)//

இதுக்கு முன்னாடி வராதவருக்கு டெம்ப்ளெட் அடிக்கடி மாத்தறது மட்டும் தெரியுமாக்கும் :))

ரமாக்கா வர வரைக்கும் உம்ம சமாளிக்கிறது பெரும்பாடய்யா :))

குடுகுடுப்பை said...

அண்ணே உங்க நண்பர் அரங்கப்பெருமாளுக்கு கூடிய விரைவில் என் வீட்ல விருந்து வைக்கலாமின்னு இருக்கேன்.

Vidhoosh said...

///143 இளம்பெண் வாசகிகளுக்கும் //

இதெல்லாம் ஒரு பொழப்பு :))

SanjaiGandhi™ said...

குடுகுடுப்பை, யாருங்க அவரு? அப்டி யாரும் நம்ம ”நட்பு” வட்டத்துல இல்லையேண்ணே.. பொங்க வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டிங்க.. நல்லா வைங்க.. எதும் ஒத்தாச வெணும்னா சொல்லி அனுப்புங்கோண்ணா.. :))

விதூஷ்,
அதானே.. பாருங்க வித்யா இந்த 143 பொண்ணுங்கள.. இத எல்லாம் ஒரு பொழப்பா வச்சிட்டு இருக்காங்க :))

ஜெ.பாலா said...

ஏவ்வ்வ்வ்வ்...

இய‌ற்கை said...

இதுக்கு கமெண்ட் வேற போட்டு நான் பாவத்தை சேர்த்துக்கணுமா?

SanjaiGandhi™ said...

நன்றி பாலா.. ரொம்ப பெரிய ஏப்பம் போல.. :))

நன்றி இயற்கை.. ;)

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget