Mini Meals v 5.02
அதிஷாவாக அவதாரம் எடுத்து உங்களுக்கெல்லாம் அறிமுகம் ஆகும் முன்பு வினோத்குமாராகவே இவர் எனக்கு நண்பன். அதிஷா என்ற பெயரில் யாரோ எழுதுகிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் வால்பையன், அதிஷாவுடன் சாட்டில் பேசியதை அவர் வலைப்பூவில் வெளியிட்டார். அதில் அதிஷாவின் மின்னஞ்சல் முகவரி பார்த்து தான், அட இது நம்ம வினோத்தாச்சே என தெரிந்துக் கொண்டேன். கடந்த ஞாயிறன்று இருவரும் சென்னையிலில் இருந்து ஒன்றாய் பயணித்து கோவை வந்தோம். அப்போது அவர் பையில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்தேன். பெயர்களைப் படிக்கும் போதே கண்ணைக் கட்டியது. பயபுள்ள ஏன் ஒரு மார்க்கமா இருக்குன்னு அப்போ தான் தெரிஞ்சது. சரி விஷயம் அதில்லை. நம் நண்பன் அதிஷா @ வினோத்குமாருக்கு நாளை மறுநாள் ( 18.02.2010 ) வியாழக்கிழமை அன்று கோவையில் திருமணம் நடைபெறுகிறது. வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ நண்பனை வாழ்த்துகிறேன்.
கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறப் போவதை அனைவரும் அறிவீர்கள். தினம் தினம் செய்தி அறிக்கைகள் பார்த்தால் தான் எங்களுக்கும் நினைவுவரும். கோவையில் அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. யாரோ ஒரு புண்ணியவான் தகவல் அறியும் உரிமை சட்டப் படி , செம்மொழி மாநாட்டிற்கு ஒதுக்கீடு செய்திருக்கும் நிதி விவரம் கேட்டிருக்கிறார். உதட்டைப் பிதுக்கியபடி பதில் வந்திருக்கிறது. அவர் கோவையில் எங்களைக் கேட்டிருக்கலாம். பிம்பிலிக்கி பிலாப்பி.. மாமா பிஸ்கோத்துன்னு நாங்களே சொல்லி இருப்போம். இன்னும் மின்சார வசதி சீரடையவில்லை. தினம் இரண்டு மணி நேரக் கட்டாய மின் தடை இல்லாமல் அவ்வப்போது சில பல மணிநேரங்கள் மின்தடை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சிறு கோளாறுகளைக் கூட உடனடியாக சரி செய்வதில்லை. செம்மொழி மாநாட்டின் போது இன்னும் என்ன எல்லாம் அரங்கெறப் போகுதோ..
பரிசல்காரன் மற்றும் கேபிள் சங்கரின் புத்தக வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. நண்பர்களுடன் சென்று வந்தது இனிமையான அனுபவம். கார்க்கி எங்கள் உடன் இருந்து மிக நன்றாய் கவனித்துக் கொண்டார்.என் மாமன் அப்துல்லா தன் வீட்டில் தங்கவைத்து மிகச் சிறப்பாய் உபசரித்தார். நிகழ்ச்சியின் போது ஏராளமான நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. வழக்கம் போலவே முதல் முறை சந்திப்பது போலன்றி மிக இயல்பாய் சென்னைக்காரர்கள் பழகினார்கள். இரண்டு எழுத்தாளர்களிடமும் புத்தகமும் ஆட்டோகிராபும் வாங்கிக்கொண்டேன். நண்பர் சுரேகா அற்புதமாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். என் பின்னூட்டங்களைப் பார்த்து டரியலாகி என் ப்ளாகை படிக்கவே பயமாக இருப்பதாக இரண்டு அப்பாவிகள் சொன்னதைக் கேட்டு, கவுஜாயினி காயத்ரி கவிதை படிக்காமலே எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வந்துச்சி.. குசும்பா கவனிக்க. நானும் ரவுடிதாம்லே.. கும்மி எல்லாம் கொறைச்சிக்கனும்.. :). அன் மூஞ்சியைப் பார்ந்த சில வினாடிகளிலேயே, இனி தினம் வந்து உங்களுக்கு 10 கமெண்ட் போட்டு கும்முறது தான் எங்கள் வேலை என்றும் அதே வாய்கள் சொல்லின. எப்டித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ..
வழக்கமாக, வெங்கட்ப்ரபு அண்ட் கோவின் படம் திரைக்கு வரும் போது இவர்களின் பந்தாவிற்கு அளவே இருக்காது. எல்லா சேனல்களிலும் கும்பல் கும்பலாக வந்து தங்களின் உலகத் தரம் வாய்ந்த திரைப்படத்தின் மேக்கிங் ஆஃப் ஜிம்பலக்கா ஜும்பாலே என்று மொக்கைப் போட்டுத் தள்ளிவிடுவார்கள். உலக சாதனைகள் படைக்கும் ஜேம்ஸ் காமரூன் அணிகள் கூட இவ்வளவு பேச மாட்டார்கள். ஆனால் இவர்கள் அலப்பறை தாங்காது. அதில் இந்த ப்ரேம்ஜியின் டார்ச்சர்.. அப்பப்பா சொல்லி மாளாது.. எல்லாப் படத்திலும் ஒரே மாதிரி வசனங்கள் தான். அதுவாச்சும் புதுசா என்றால் இல்லை.. என்னக் கொடுமை சார் இது என்று இன்னும் எத்தனைப் படங்களில் சாவடிப்பாரோ?. எனினும் கோவாப் படத்திற்கு பெரிய சீன் எதுவும் போடவில்லை. அடக்கியே வாசித்தார்கள். படம் அந்த அளவிற்கு ஊத்திக் கொண்டது. கோவா என்றால் ஊற்றிக் கொள்ள வேண்டுமே. ரொம்ப அடக்கி வாசிக்கிறார்களே திருந்திவிட்டார்கள் போலும் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே கோவை U டிவியில் ப்ரேம்ஜி அண்ட் கோ கும்பலாய் வந்து பிப்ரவர் 14ஆம் தேதி எங்களை சந்திக்கப் போவதாக பயமுறுத்தினார்கள். அடப்பாவிகளா.. இங்கயும் வந்துட்டிங்களா.. நல்ல வேளை நான் அன்று சென்னையில் இருந்ததால் உயிர் பிழைத்தேன்.
புகழ்பெற்ற தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் & எழுத்தாளர் அலெக்ஸ் கிர்க், ஒரு வார்த்தைக் கூட பேசாமல் ஒரு வாரம் மௌணமாக வாழ்ந்திருக்கிறார். உலகிலேயே மிகவும் அதிகம் பேசுபவர் தான் தான் என சொல்லிக் கொள்ளும் கிர்க், ஒருவாரம் பேசாமல் இருக்க முடிவு செய்து அதை சாதித்திருக்கிறார். தன் காதலியுடன் பேசாமல், தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லாமல் சைகையிலும் காகிதத்தில் எழுதிக் காட்டியுமே சமாளித்திருக்கிறார். இரவு உணவுக்கு காளான் சமைக்க கடைக்கு சென்று காளான் வேண்டும் என ஒரு காகிதத்தில் எழுதிக் காட்டி இருக்கிறார். அதைப் படித்த அந்த கடை பணிபெண் இவரைப் பரிதாபமாகப் பார்த்திருக்கிறார். தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் ஒரு காதலி கூட இருக்கிறார் என சொல்ல நினைத்தும் சொல்ல முடியலையேப்பாஆஆஆ என சிவாஜி பாணியில் மனதுக்குள் குலுங்கிக் குலுங்கிப் புலம்பி இருக்கிறார். எங்க உண்மைத்தமிழன் அண்ணன் இவ்வளவு நாள் பதிவெழுதாமல் இருக்கும் சாதனை விடவா அலெக்ஸ் கிர்க்கின் சாதனை பெரிது? போங்கய்யா போங்க.. :)
ராகுல்காந்தியின் அரசியல் பிரவேசம் நிர்பந்தத்தால் நிகழ்ந்ததாக இருப்பினும் அதை மிகச் சிறப்பாக செய்கிறார். நியமனங்கள், ஜால்றாக்கள், வயோதிகர்கள் போன்றவற்றால் புரயோடிக் கிடந்த கட்சி அமைப்புகளுக்கு புது ரத்தம் பாய்ச்சுகிறார். இளைஞர்களைத் தேடித்தேடி சந்திக்கிறார். அவர்களை அரசியலுக்கு அழைக்கிறார். மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரசுக்கு நியமன முறையை ஒழித்து தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கப் போவதாக சொன்னதுடன் அதை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறார். தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்கு தன்னார்வ அமைப்புகள் மூலம் பயிற்சி அளிக்கப் படும் என அறிவித்தார் ராகுல்காந்தி. இப்போது பாண்டிச்சேரியில் பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நம் பதிவர் ஒருவரும் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் தன்னார்வ அமைப்பு ஒன்றும் இந்தப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவரும் பாண்டிச்சேரியில் இப்போது பயிற்சி வகுப்பில் இருக்கிறார். இந்திய அரசியலில் பயிற்சி பெற்ற, ஆக்கப் பூர்வமாக சிந்திக்கும் இளைஞர்களின் ஆதிக்கம் வெகு விரைவில் நடக்கும். இதற்காக ராகுல்காந்திக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
சமீபமாக வந்த திரைப் பாடல்களில் சில பாடல்களில் என்னை அதிகம் கவர்ந்திருக்கின்றன. அதில் முதல் இடம் ஓடிபோலாமா என்ற படத்தில் டி.இமான் இசையில் இடம் பெற்றிருக்கும் வாலுபையனே பாடல். அனிதாவின் குரலும் வரிகளும் அசத்தல். அடுத்து, ஆயிரத்தில் ஒருவனின் “உன் மேல ஆச தான்” பாடல். தனுஷின் தெனாவெட்டு குரலும் ஆண்ட்ரியாவின் மயக்கும் குரலும் கலக்கல். முந்தினம் பார்த்தேன் படத்தின் பேசும் பூவே பாடலின் இடையில் வரும் வரிகள் ரொம்ப நல்லா இருக்குங்க.. கேட்டுப் பாருங்க.. அப்டியே பையாவில் நா.முத்துக்குமாரின் வரிகளின் துளித்துளி மழையாய்.. அழகாய் மனதைப் பறித்துவிட்டாயே.. :).
ஓடிப்போலாமா இன்னும் கேட்கல.. கேட்டுட்டு சொல்றேன்..
கோவா..ரைட்டு
பேசாமலா? நாங்க தமிழர்கள் பாஸ்>.
ராகு(ல்)..ம்ம்
ரை ரைட்டு
//அதிஷாவாக அவதாரம் எடுத்து உங்களுக்கெல்லாம் அறிமுகம் ஆகும் முன்பு வினோத்குமாராகவே இவர் எனக்கு நண்பன்.
அவர் பையில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்தேன். பெயர்களைப் படிக்கும் போதே கண்ணைக் கட்டியது. //
இதிலிருந்து தெரியவரும் நீதி என்னன்னா? உன்கூட இருந்தா ஒன்னாம் வாய்ப்பாடை கூட படிக்க முடியாது, உன்னை விட்டு தொலைவில் சென்றால் உருப்படியா படிச்சு பெரிய ஆளாக வரலாம்.
சரிதானே மாமா?
[[[எங்க உண்மைத்தமிழன் அண்ணன் இவ்வளவு நாள் பதிவெழுதாமல் இருக்கும் சாதனைவிடவா அலெக்ஸ் கிர்க்கின் சாதனை பெரிது? போங்கய்யா போங்க..]]]
இப்படி கண்ணு வைச்சே மறுபடியும் எழுத வைச்சுட்டீங்களேப்பா..!
இன்னிலேர்ந்து மறுபடியும் கடை திறக்கப்படுகிறது..!
குசும்பா..
பரவாயில்லை.. சில சமயங்களில் உண்மைகளையும் பேசுகிறாய்..
பாராட்டுகிறேன்..!
ஹ்ம்ம்ம்
//பயமாக இருப்பதாக இரண்டு அப்பாவிகள் சொன்னதைக் கேட்டு,//
அட நீ வேற நேற்று கூட ஒருவர் சொன்னார் நீங்கதான் சஞ்சயை வில்லன் மாதிரி ஆக்குறீங்க அவரு பாவம் என்று. என்ன கொடுமை இது இன்னுமா இந்த உலகம் உன்னை நம்பிக்கிட்டு இருக்கு?
//குசும்பா கவனிக்க. //
மாமா நீ சொல்லனுமா? சொல்லாமலேயே உன்னையும் ஆதியையும் கவனிப்பதுதானே என் கடமை!
//இன்னிலேர்ந்து மறுபடியும் கடை திறக்கப்படுகிறது..!//
எங்கள் உனாதானா அண்ணனை மறுபடியும் எழுதவைத்த வருங்கால பிரதமர் சஞ்செய் வாழ்க வாழ்க!
//அடப்பாவிகளா.. இங்கயும் வந்துட்டிங்களா.. நல்ல வேளை நான் அன்று சென்னையில் இருந்ததால் உயிர் பிழைத்தேன்.
//
ஆமா இல்லேன்னா சஞ்சூ வராம நாங்க மேடை ஏற மாட்டோம் என்று சொல்லிடுவாங்க பாரு..
எப்படிங்க இத மாதிரியெல்லாம் எழுதுறீங்க? என்னமோ போங்க ...
முன்தினம் பார்த்தனே...
நீங்க சொன்ன பாட்டு சூப்பர் தான்....
மேலும் அதில் மூன்று பாடல்களும்
நன்றாக இருக்கிறது...
//உண்மைத்தமிழன் அண்ணன் இவ்வளவு நாள் பதிவெழுதாமல் இருக்கும் சாதனை விடவா அலெக்ஸ் கிர்க்கின் சாதனை பெரிது? போங்கய்யா போங்க.. :)
//
மாமா அவரு சானையினால் பலன் இருந்தாச்சா இல்லையான்னு தெரியாது, ஆனா உ.த சாதனையால் நாம் சோதனை இல்லாமல் இருக்கிறோம்.
// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
குசும்பா..
பரவாயில்லை.. சில சமயங்களில் உண்மைகளையும் பேசுகிறாய்..
///
அண்ணே மேலே நான் சொன்னதும் அந்த கேட்டகிரியில் தானே வரும்?:)
//ராகுல்காந்தியின்.. //
இதுக்கு மேல் அந்த பத்தி சாய்ஸில் விடப்படுகிறது!
//ஓடிபோலாமா என்ற படத்தில் டி.இமான் இசையில் இடம் பெற்றிருக்கும் வாலுபையனே பாடல்.//
அடிங் அடிங் அடிங் அடிங் பாட்டுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
அன்பின் சஞ்சய்,
பரிசல் - கேபிள் புத்தக வெளியீட்டுக்கு நீங்கள் வந்திருந்தது எனக்கு தெரியாது. கூட்டத்துக்கு தாமதமாக வந்ததால் சிலருடன் மட்டுமே பேச முடிந்தது. உங்களை சந்திக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இருந்தேன். இம்முறை அது இயலவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது அடுத்தமுறை சந்திப்போம் நண்பா...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
ரைட்டு!
//கவுஜாயினி காயத்ரி கவிதை படிக்காமலே எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வந்துச்சி.//
புதுசா 4 கவுஜ மெயில்ல பார்சல் பண்றேன் இருங்க..
//கூட்டத்துக்கு தாமதமாக வந்ததால் சிலருடன் மட்டுமே பேச முடிந்தது. உங்களை சந்திக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே //
அண்ணே நல்லவேளை தாமதமாக போய் இருக்கீங்க:) இதுக்கு எல்லாம் வருத்தப்படக்கூடாது:)
// மூஞ்சியைப் பார்ந்த சில வினாடிகளிலேயே, இனி தினம் வந்து உங்களுக்கு 10 கமெண்ட் போட்டு கும்முறது தான் எங்கள் வேலை என்றும் அதே வாய்கள் சொல்லின. எப்டித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ..//
ஹாஹ்ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா..ஹோஓஓஒஹ்ஹ்ஹோ.. ஹீஹீஹ்ஹ்ஹி :))))))))
நல்லாருக்குங்க உங்க எழுத்து!!
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
பயபுள்ள எழுதுனா நல்லாத்தாம்லே எழுதுது :)
//பிம்பிலிக்கி பிலாப்பி.. மாமா பிஸ்கோத்துன்னு நாங்களே சொல்லி இருப்போம்.//
//மேக்கிங் ஆஃப் ஜிம்பலக்கா ஜும்பாலே//
ஆஹா ஆஹா... உங்கள் மொழியாளுமை சிலிர்க்க வைக்கிறது சஞ்சய் ... (ஸ்டார்ட் மீஜிக்...)
:)
:))
பத்து இல்லைன்னாலும் ரெண்டு கமெண்ட் :)
பின்னூட்டம் படிச்சு சிரிச்சேன். பதிவு என்னான்னு மறந்தே போச்சு
வேலை வெட்டி இல்லாம இருக்கறது நல்லாவே தெரியுது :))
பின்னூட்டம் படிச்சு சிரிச்சேன். பதிவு என்னான்னு மறந்தே போச்சு//
:))))அம்புட்டு அப்பாவியா நீங்க
கேளுங்க கார்க்கி.. நல்லா இருக்கு..
குசும்பா, என்னை விட்டு தொலைவில் எல்லாம் போகலை.. இங்கனத்தான் இருககாரு.. :)
உ.தமிழன் அண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்னாஆஆஆஆ.. என்ன இது விமரீத முடிவு.. வீ ஆர் பாவம்.. :(
நன்றி ஜீவ்ஸ்.
நன்றி ஆதவன்.. எத்தனை ஆட்டோ என் வீட்டுக்கு வருமோன்னு பயந்துட்டே இருக்கேன் நான்.. :(
நன்றி வெள்ளிநிலா.. ரொம்ப கேவலமா இருக்கோ? ஒண்ணும் பண்ண முடியாது பாஸ் :))
நன்றி ஜெட்லி.. கேட்டுப் பார்க்கிறேன்..
நன்றி சிவராமன் சார்.. நீங்க வந்தது எனக்கு தெரியாது.. எபப்டியாவது சந்திச்சிருப்பேன்.. அடுத்தமுறை நிச்சயம் சந்திப்போம்.. அன்புக்கு நன்றி சார்..
நன்றி மங்களூர் மாமா
காயத்ரி, ஏன் இந்த கொலைவெறி.. உனக்கு தெரிஞ்ச என் 2 மெயில் ஐடியும் இப்போவே அழிச்சிடறேன்.. ஐயாம் பாவம்.. :(
ரொம்ப சிரிக்காத.. பல்லு சுளுக்கிடும்.. :)
அதிஷாவுக்கு நல் வாழ்த்துகள்.
அந்த “பையா” பாடல் அருமை
[[காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுதான்
பூக்களும் பூக்குமோ]] வரிகள் அருமை.
நன்றி மோகன்குமார்.. உங்களை சந்தித்ததில் எனக்கும் ரொம்ப சந்தோஷம்.. :)
நன்றி ராதாகிருஷ்ணன் சார்.. ஒரே ஒரு முறை தொலைபேசியதையும் நினைவில் வைத்திருக்கிறீர்கள்.. மனதில் இன்னும் யங் தான் நீங்க.. :)
அப்துல்லா மாம்ஸ், ஹிஹி.. ரொம்ப புகழாதிங்க மாமா.. நாம ரெண்டு பேரும் 2011 சட்டசபைல இது பத்தி விரிவா பேசலாம்.. :))
கலகப்ரியா, ஆரம்பிச்சிட்டிங்களா? இன்னும் ஜெமோ நாவலின் பாதிப்புல இருந்து மீளவே இல்லை போல.. புதுசா எழுதுங்க அம்மிணி..
முத்தக்காஆஆஆ.. யூ டூ.. கிர்ர்ர்ர்ர்ர்.. கவனிச்சிக்கிறேன் இருங்க. :)
நன்றி சின்ன அம்மிணி அக்கா.. என் ப்ளாக்ல ஸ்பெஷலே இது தானே.. பதிவுல எப்போவும் ஒண்ணும் இருக்காது.. பின்னூட்டத்துல தானே எல்லாரும் கலக்குவீங்க.. எனக்கும் இதான் ரொம்ப புடிக்கும்.. எல்லாரும் எவ்ளோ உரிமை எடுத்துக்கிறாங்க.. பாசக்காரங்க ;))
நன்றி மயில்.. புது ஆபிஸ் ஆரம்பிச்ச தெனாவெட்டா? நல்லா இருங்க.. :)
நன்றி ஜமால்.. வரிகள் நன்றாக இருக்கும்..
மினி மீல்ஸ்'ல சந்திக்கறேன்னு அப்போவே சொன்னேன் பாத்திங்களா??
:)
ஒரு சாதரண விசயத்த எப்படிங்க சுவராசியாமா எழுதுறீங்கன்னு தானே கேட்டேன்., கோவை வந்த உடனே ரிவீட் கொடுப்பீங்களோ?!!
நல்லாருக்குங்க உங்க எழுத்து!!
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...
ஹி..ஹி..
ரொம்ப இயல்பா அழகா இருக்கு எழுத்து ,
ungala evlo kumminalum adanga matengala? aiyo..mudilaye.. alugachiya varuthe:-(
அ மணிகண்டன், மினி மீல்சை மினி டிபன் என்று சொன்ன புண்ணியவானே.. வாரும் வாரும்.. உம்மை சந்தத்தது கூடுதல் மகிழ்ச்சி.. :)
வெள்ளிநிலா, எப்போ ஊருக்கு வரிங்க? :))
கும்கி, என்னை எப்போதைய்யா நீர் சந்தித்தீர்? காலையிலேயே தாக சாந்தியா? :))
மிக்க நன்றி பத்மா.. கவிஞர்கள் எல்லாம் அடியேன் பக்கம் எட்டிப் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி.. :)
இயற்கை.. நாங்கல்லாம் அடிவாங்காத ஏஇயாவே இல்லை.. இப்போ வந்து அடிச்சிட்டு பெரிசா பெருமை பேசக் கூடாது.. போம்மா.. போய் புள்ள குட்டிகளுக்கு ஒழுங்கா படிப்பு சொல்லிக் குடுங்க.. இன்னும் 2 மாசத்துல கல்யாணத்தை வச்சிகிட்டு இங்க வந்து கும்மி அடிச்சிட்டு.. வாத்யார் கிட்ட சொல்லி வைக்கனுமா? :))
கல்யாண வீட்டிற்கு லேட்டாக வரவும்! நாங்களும் சாப்பிட வர்றோம்!
(வாசிக்கும்) பசியில் மினி மீல்ஸ்'ஐ மினி டிபன் என்று தவறாக சொல்லிட்டேன்... :)
பயபுள்ள எப்படியெல்லாம் சமாளிக்குது பாரு'ன்னு நீங்க சொல்றது கேக்குது... ;)
\\எங்க உண்மைத்தமிழன் அண்ணன் இவ்வளவு நாள் பதிவெழுதாமல் இருக்கும் சாதனை விடவா அலெக்ஸ் கிர்க்கின் சாதனை பெரிது? //
அண்ணே இது மேட்டர்.
புல் மீல்ஸ்ன்னு பேரு வச்சிடுங்க நல்லா இருக்கும்
வால், நல்லவேளை ஞாபகப் படுத்தினிங்க.. நீங்க எல்லாம் வரதுக்குள்ள போய் சாப்ட்டு வந்துடறேன்.. என்னால பட்டினி கிடக்க முடியாது.. :)
நீ ரொம்ப நல்லவன் மணி :))
நன்றி ரோமியோ... மினி மீல்ஸ்ல தான் நெறய வெரைட்டி கிடைக்கும்.. புல் மீல்ஸ்னா ஒரு வகை சாதம் மட்டும் தான் கிடைக்கும்.. :)
முந்தினம் பார்த்தேன்- பேசும் பூவே பையா- துளித்துளி மழையாய்..(not bad), என் காதல் சொல்ல (கேட்டும் வைக்கலாம் அதன் வரிகளுக்காக)
தம்பிக்கு இந்த ஊரு - யாரடி(ஷ்ரேயாவுக்காக மீண்டும் மீண்டும் கேட்கலாம்)
இதெல்லாமே அருமையான பாடல்கள்தான்!! :-))
//இயற்கை.. நாங்கல்லாம் அடிவாங்காத ஏஇயாவே இல்லை.. இப்போ வந்து அடிச்சிட்டு பெரிசா பெருமை பேசக் கூடாது.. போம்மா.. போய் புள்ள குட்டிகளுக்கு ஒழுங்கா படிப்பு சொல்லிக் குடுங்க.. இன்னும் 2 மாசத்துல கல்யாணத்தை வச்சிகிட்டு இங்க வந்து கும்மி அடிச்சிட்டு.. வாத்யார் கிட்ட சொல்லி வைக்கனுமா? :))//
எனக்கு கல்யாணம்ன்னு எனக்கே தெரியாம புரளிய கெளப்பி விடுறீங்களே... அவ்ளோ பாசமா என் மேல....ரொம்பா தேங்ஸ்
நன்றி புனிதா.. கேட்டுப் பார்க்கிறேன்..
ஆமா இயற்கை.. நீங்க அவ்ளோ நல்லவங்க.. :)
பத்மா, உங்க கமெண்ட் எனக்குப் புரியலை.. நான் பின்னூட்டம் மட்டுறுத்துவதில்லை.. தானாகவே வெளிவரும்.. ஆனாலும் உங்க கமெண்ட் புரியவில்லை..
அவர் பையில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்தேன். பெயர்களைப் படிக்கும் போதே கண்ணைக் கட்டியது. //
அவ்வளவு படிக்கறவர் எப்படி உங்க ஃப்ரண்டு:))
நீங்கதான் சஞ்சயை வில்லன் மாதிரி //
மாதிரியா? நிஜம் :))
எனக்கு கல்யாணம்ன்னு எனக்கே தெரியாம புரளிய கெளப்பி விடுறீங்களே.//
ராஜி அது ஒண்ணும் இல்லை, அப்படியாவது அவரைப்பத்தி புரளி கிளம்பி எதாவது வொர்கவுட் ஆகுதான்னு தான் :))
மினி மீல்ஸ் - நல்லாவே வெரைட்டியா இருக்கு - லேட்டா வந்தாலும் சாப்பிட்டேன்
நன்றி மயில்..
நன்றி சீனா சார்.. :)
>>