33% இட ஒதுக்கீடும் மகளிர் தினமும்

 ந்தியாவை ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர், இந்தியக் குடியரசுத்தலைவர் , இந்தியப் பாராளுமன்ற மக்களவை தலைவர், பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர், இந்திய வெளியுறவு செயலர், தனி பட்ஜெட் போடும் அளவு பெரும் துறையான இந்திய ரயில்வேயின் அமைச்சர் ஆகிய முக்கியப் பதவிகள் பெரும்பானவற்றில் பெண்களே இருக்கும் இந்தியா தான் மகளிர் தினத்தைக் கொண்டாட மிகத் தகுதியான நாடு.

இந்த சிறப்புகளோடு இல்லாமல் இன்று (08.03.2010) , காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தியின் தீவிர முயற்சியால் இந்தியப் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப் படுகிறது. காங்கிரஸ் கூட்டணியின் வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதாவை பல எதிர்கட்சிகளும் ஆதரிப்பது ஆரோக்கியமான அரசியல். அனைத்து உறுப்பினர்களும் சபையில் இருக்க வேண்டும் என பாஜக கொறடா உத்தரவே பிறப்பித்திருக்கிறது.

முலாயம் சிங், லாலு பிரசாத் மற்றும் மாயாவதி ஆகியோரைத்தவிர மற்ற அனைத்துக் கட்சியினரும் ஆதரிப்பதால் சுலபமாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறிவிடும். 15 மாநில சட்டசபைகள் ஆதரித்தாலே இந்த மசோதா நடைமுறைக்கு வந்துவிடும் . உத்திரபிரதேசம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் ஆதரிப்பதால் இதிலும் பிரச்சனைகள் இல்லை.

ஆகவே இந்த ஆண்டு இந்திய பெண்களுக்கு மிகச் சிறந்த மகளிர் தினமாக விளங்குகிறது. அனைத்துப் பெண்களுக்கு பெண்கள் தின நல்வாழ்த்துகள்..

சுபா  – (March 8, 2010 8:55 AM)  

Unaku AAngal Thina Vaazthukkal Sanjai :)

SanjaiGandhi™  – (March 8, 2010 8:59 AM)  

சுபா, எல்லா தினமும் ஆண்கள் தினம் தான். பெண்களுக்குத்தான் தனி தினம் வேண்டி இருக்கு. :-)

சுபா  – (March 8, 2010 9:06 AM)  

1day vs 364 days என்றாலும் இதில் வெற்றி பெறுவது என்னவோ பெண்கள்தான் :)

வெள்ளிநிலா ஷர்புதீன்  – (March 8, 2010 9:17 AM)  

:) (உபயம்:அண்ணன் அப்துல்லா)

முகிலன்  – (March 8, 2010 9:28 AM)  

//காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தியின் //

எதோ வார்த்தை மிஸ் பண்ணிட்டாப்ல இருக்கு.. :))

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

KVR  – (March 8, 2010 2:02 PM)  

//இந்தியாவை ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர், இந்தியக் குடியரசுத்தலைவர் , இந்தியப் பாராளுமன்ற மக்களவை தலைவர், பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர், இந்திய வெளியுறவு செயலர், தனி பட்ஜெட் போடும் அளவு பெரும் துறையான இந்திய ரயில்வேயின் அமைச்சர் ஆகிய முக்கியப் பதவிகள் பெரும்பானவற்றில் பெண்களே இருக்கும் இந்தியா தான் மகளிர் தினத்தைக் கொண்டாட மிகத் தகுதியான நாடு//

well said sanjai

கும்க்கி  – (March 8, 2010 2:50 PM)  

ஏனுங்நா.,

வூட்டுல பத்தாதுன்னு இப்ப நாட்டுலயுமா...
அவ்வ்வ்வ்வ்வ்வ்.

சரிங் கந்தி சார்..அரசியலுக்கு வர்ர பெண்கள் எப்படிப்பட்டவங்கன்னு தெரியுமில்ல...

இய‌ற்கை  – (March 8, 2010 7:03 PM)  

மகளிர்தின நன்றிகள்:-)

அன்புடன் அருணா  – (March 8, 2010 9:40 PM)  

மகளிர் தினமும் போயாச்சு! :(

SanjaiGandhi™  – (March 10, 2010 8:40 AM)  

சுபா.. சொல்லிக்க வேண்டியது தான்.. :)

நன்றி வெள்ளிநிலா..

நன்றி முகிலன், நான் திராவிடக் கட்சிக்காரன் இல்லை.. :))

நன்றி KVR

கும்கி, எந்த அர்த்தத்துல சொல்றிங்கன்னு தெரியலை.. எங்க தலைவர் ஒரு பெண் தான்..

நன்றி இயற்கை

அருணாக்கா, நீங்க லேட் என்ட்ரி :))

ஸ்வாமி ஓம்சைக்கிள்  – (March 14, 2010 2:16 PM)  

http://consenttobenothing.blogspot.com/2010/03/blog-post_13.html

mathu  – (March 15, 2010 5:58 PM)  

அமாங்க சாமி.இட ஒதுக்கீடு கிடைத்து விட்டது.இனி மேல் என்னை போன்ற பெண்களின் வாழ்வில் பாலும் தேனும் ஓடும் அல்லவா?ஆண்டிப்பட்டியில் உள்ள பெண்ணும் ஆக்ராவில் உள்ள பெண்ணுக்கும் இதனால் என்ன பயன்.?...... என்னை பொறுத்தவரை இவை அனைத்தும் அதிகாரவர்க்கத்தின் வாக்கு வங்கியை அதிகரிக்க வைக்கும்.அவ்வளவு தான்.இது போன்ற காகித சட்டங்கள் ,காகிதத்தில் கிடைத்துவிடும். பாராளு மன்றத்தில் கிடைத்துவிடும்.அது உரிமையானவர்களுக்கு போய் சேருகிறதா? இல்லவே இல்லை..இது ஒரு பிதலாட்டதனம் இதில் மயங்கிப்போக நான் ஒன்றும் சிந்தனை இல்லாதவள் இல்லை.

SanjaiGandhi™  – (March 15, 2010 6:17 PM)  

மது மேடம்.. கூல்.. வொய் டென்ஷன்...

நீங்க இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக்க என்ன முயற்சி செஞ்சிங்க? ஏன் இப்படி கடுப்பாகறிங்க? 33% இட ஒதுக்கீட்டுக்கு உரிமையாளர்களான பெண்களுக்குத் தான் இந்த வாய்ப்புக் கிடைக்கும். ஆண்களுக்கு மாற்றிவிட முடியாது. அரசியல் ஆர்வம் உள்ள அரசியலில் செயல்பட விரும்பும் பெண்களுக்கு இது மிகப் பெரும் வாய்ப்பு.. அவர்கள் ஆண்டிப் பட்டியில் இருந்தாலும் ஆக்ராவில் இருந்தாலும். உங்களைப் போன்ற சிலர் மேம்போக்காக பேசிவிட்டுப் போவதால் தான் முலாயம் லாலு போன்றவர்கள் இதை எதிர்க்கிறார்கள். எல்லாவற்றையும் காழ்புணர்ச்சியோடே பார்க்கும் பழக்கத்தை மாற்றினால் அனைவருக்கும் பயனளிக்கும். எந்த வகையில் இது பயன் என விவாதிக்க நான் தயார்.. நீங்கள்?

mathu  – (March 16, 2010 1:56 PM)  

// மது மேடம்.. கூல்.. வொய் டென்ஷன்...//
வேறு என்ன பண்ணனும்? ஜன கன மன பாடி சல்யூட் அடிக்கணுமோ?


//நீங்க இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக்க என்ன முயற்சி செஞ்சிங்க?//
அதை விடுங்க சார்.இதுக்கு முன்னாடி வாங்கின இட ஒதுக்கீடுகள் என்ன என்ன சாதித்தன என்று பட்டியல் போட்டுருக்கலாமே?

// இட ஒதுக்கீட்டுக்கு உரிமையாளர்களான பெண்களுக்குத் தான் இந்த வாய்ப்புக் கிடைக்கும்.//
இது வரை அரசியலில் இருக்கும் சொக்க தங்கம் சோனியா,சுஷ்மா,பிருந்தா காரத்,மம்தா,இன்னும் பலவகை ஜென்மங்கள் என்ன சாதித்தார்கள்? ஆனால் ஒரு தெரசா மக்கள் மனதில் நின்றார்.சுதந்திரம் என்பது கேட்டு போராடி பெற வேண்டிய ஒன்று இல்லை.அதை முதலில் நம் மனதில் நடைமுறை வாழ்வில் மேற்கொள்வோம்.அதை விட்டு விட்டு எங்கோ எவனோ கொடுக்கிறானாம்? இனி புதிய மறுமலர்ச்சி உண்டாகி பெண்கள் வாழ்க்கை பூத்து காய்த்து குளுங்கிவிடுமோ?

//உங்களைப் போன்ற சிலர் மேம்போக்காக பேசிவிட்டுப் போவதால் தான் முலாயம் லாலு போன்றவர்கள் இதை எதிர்க்கிறார்கள்.//
ஒரு சமூக சீர்திருத்தக் கொள்கை என்று கூட ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு, அடித்தட்டு உழைப்பாளி பெண்களுக்கு எந்தப் பயனையும் விளைவிக்காத கொள்கையும், ‘சமூகநீதி பேசுகின்ற அரசியல் வாதிகளின் ’ அரசியல் வாழ்வையும் ஆதிக்க குடிகளையும் மட்டும் செழிப்புறச் செய்யும் வகையில் வடிவமைத்துப் பாதுகாக்கப்படும் கொள்கையுமான ‘இடஒதுக்கீடு...’ என்கிற வெற்றுக்காகிதத்தைப் பற்றி கேள்வி கேட்டால்,
நான் மேம்போக்காக பேசுகிறேனாம்? முதலில் உங்களை சுற்றியிருக்கும் சமுகத்தை புரிந்துக்கொள்ளுங்கள்.

SanjaiGandhi™  – (March 16, 2010 2:15 PM)  

மது மேடம், நான் பாமரன்.. நீங்க உங்க வயதுக்கு மீறி ஏராளமாக படித்தவர்.. இப்படி தொவைச்சி தொங்கப் போடலாமா.. நீங்க சொல்ற எல்லாமே மிகச் சரி.. நான் தப்பா எழுதிட்டேன்.. மன்னிச்சிடுங்கோ..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... எஸ்கேப்ப்ப்ப்ப்...

ராஜ நடராஜன்  – (March 21, 2010 5:11 PM)  

இங்கே தான் ஆளுக கூட்டம் குறைவா இருக்குது.அதனால ரகசியத்தை இங்கே கேட்டு விடலாம்.

எனக்கு சஞ்சய்காந்திய விட சஞ்சை எழுத்துக்கள் தெரியும்.கபிஷ் என்ற பின்னூட்டக்காரரையும் பார்த்திருக்கேன்.நீங்க அவரா இல்ல அவர் இவரா வந்திருக்கீங்களா?அல்லது கபிஷ் வேற சஞ்சய் வேறயா? ஒரே குழப்பமா இருக்குதே

ஊர் சுத்துனா இப்படித்தான்.

டிஸ்கி:சஞ்சய் கொஞ்ச நாளா காணாம போயிட்டார்.

SanjaiGandhi™  – (March 21, 2010 10:35 PM)  

வாங்க ராஜ நடராஜன்.. உங்களத்தான் ரொம்ப நாளாக் காணலை. நான் கொஞ்ச நாள் தான் காணாம இருக்கேன்.. :)

கபீஷ் என் சொந்த ஊரை சேர்ந்த தோழி.. நல்ல எழுத்துத் திறமை உண்டு.. தனி வலைப்பூ ஆரம்பிப்பதில் சோம்பேறித்தனம்.. என் ஊர் என்றால் அப்டி தானே இருக்கனும். :) அதனால் அவ்வப்போது இனி இந்த ப்ளாகில் எழுதுவாள்.

mathu  – (March 29, 2010 3:41 PM)  

சார் ஒரு சந்தேகம்.அன்று நீங்கள் ஈழம் குறித்த கருத்துக்களை " இணையத்தில் விவாதிப்பவர்களை நான் மதிப்பது இல்லை என்று சொன்னீர்கள்.வீதியில் இறங்கி பேசினால் ஆதரிப்பேன் என்று சொன்னீர்கள்" அல்லவா? நீங்கள் என்ன சார் r.sபுறத்திலும்,d.b ரோட்டிலும் இறங்கி நின்று இப்போது பேசிக்கொண்டு இருக்கிறீர்களா? அங்கே போய் இட ஒதுக்கீடு பற்றி பேசி இருக்கிறீர்களா?ஒன்னும் புரியல சார்?கொஞ்சம் பதில் சொன்னா நல்ல இருக்கும்..................

SanjaiGandhi™  – (March 30, 2010 11:23 AM)  

மதுமிதா, இதை நீங்கள் அப்போதே கேட்டிருக்கலாமே.. தனிமையில் பேசுவதற்கு கூட பொதுவில் தான் கெள்வி கேட்டு விளம்பரம் தேடுவீங்களாக்கும். RSபுரம் DB ரோட் தான் பெண்களுக்கான அங்கீகரிக்கப் பட்ட ஏரியாவா? எந்தக் கட்சி இதை செய்துக் கொண்டிருக்கிறதோ அந்தக் கட்சியில் இணைந்து பணியாற்றுகிறேன்.. அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியில் இருந்த போது தொடர்ந்து ஊர் ஊராக சென்று பேசி இருக்கிறேன்.. இதை எல்லாம் கேட்டிருந்தால் சாட்டிலேயே பதில் சொல்லி இருப்பேன்.. மெத்தப் படித்தவரான் உங்களுக்கு இதைக் கேட்க இவ்வளவு கால அவகாசம் வேண்டுமா? :)

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP