விரைவில் பிரபலப் பதிவராவது எப்படி? சில உதவிக் குறிப்புகள்

குறிப்பு: இது படைப்பாளிகளுக்கான அறிவுரை அல்ல. புதிய பதிவர்கள் பிறர் கவனம் பெறுவதற்கான உதவிக் குறிப்புகள் மட்டுமே. பிரபலப் பதிவர்கள் தங்களுக்கு பின்னூட்டமிடுவதில்லை என்று சிலர் வருந்தியதாக நண்பர் கேட்டுக் கொண்டதால் அவர்களுக்கான உதவிக் குறிப்பு தான் இது. எப்படி எழுத வேண்டும் என்று அறிவுரை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை( தெரிஞ்சா தானே).

ஆரம்பத்தில் சில உப்புமா பதிவுகளைப் போட்டு தமிழ்மணம், தமிழ்வெளி, தமிழிஷ் போன்ற பிரபல திரட்டிகளில் உங்கள் பதிவுகள் வரச் செய்யுங்கள். வரும் சில பின்னூட்டங்களுக்கும் உடனேயும் கலகலப்பாகவும் பதில் சொல்லுங்கள்.

எடுத்த எடுப்பிலேயே மிகச் சிறந்த பதிவுகளை எழுதி வீணடிக்க வேண்டாம். அது பிறரை போய்ச் சேராது. தாமதமாக படிக்க நேரும் போது யாரும் பழைய பதிவுகளுக்கு பின்னூட்டமிட மாட்டார்கள்.

பிரபல பதிவராக நீங்கள் நினைப்பவர்களுக்குத் தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள். அவர்கள் உங்களுக்கு பின்னூட்டமிடவில்லை என்று நிறுத்த வேண்டாம். உங்கள் தொடர்ச்சியான வருகை அவர்கள் கவனத்தை ஈர்க்கும். அவர்களைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் உங்களையும் கவனிப்பார்கள். மறக்காமல் உங்களைப் போன்ற புதியவர்களுக்கும் தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்.

தினம் ஒரு பதிவு எழுத வேண்டாம். வாரம் ஒன்று அல்லது இரண்டு போதும். அடிக்கடி எழுதுவது படிப்பவர்களை அலுக்கச் செய்துவிடும். உங்களை புறக்கணிக்க வைக்கும்.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் பதிவிட வேண்டாம். வெள்ளிக்கிழமை வளைகுடா பதிவர்கள் ஓய்வில் இருப்பார்கள். சனி, ஞாயிறில் ஐடி வல்லுனர்கள் ஓய்வில் இருப்பார்கள். பதிவர்கள் பெரும்பாலும் அலுவலங்கங்களில் தான் இயங்குகிறார்கள். அதனால் அவர்கள் ஓய்வில் இருக்கும் போது பதிவுகள் போட்டுவிட்டு பின்னூட்டம் வரவில்லை, ஹிட்ஸ் வரவில்லை என புலம்ப வேண்டாம்.

பதிவுகளை இரவில் அல்லது மாலையில் வெளியிட வேண்டாம். இந்திய நேரப்படி காலை 9 மணி முதல் 12 மணிக்குள் வெளியிடவும். இது அனைத்து  தேச தமிழர்களுக்கும் பதிவுகள் வாசிக்க சரியான நேரம்.

பிறரின் பதிவுகளைப் படித்துவிட்டு தமிழ்மணம் மற்றும் தமிழிஷில் அவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிடுங்கள். ஓட்டுப் போட்ட விவரத்தை மறக்காமல் பின்னூட்டத்தில் சொல்லிவிடுங்கள். அப்போது தான் உங்களுக்கும் அவர்கள் ஓட்டுப் போடுவார்கள். அதிக ஓட்டுகள் வாங்கினால் தமிழ்மணம் பரிந்துரை மற்றும் தமிழிஷ் பிரபலப் பதிவுகள் பட்டியலில் உங்கள் பதிவு வந்துவிடும். தானாகவே அதிகமானோரின் கவனம் பெறுவீர்கள்.

விருதுகளை உருவாக்கி நண்பர்களுக்குள் பகிர்ந்துக் கொள்ளுங்கள். மறவாமல் பிரபலப் பதிவர்களாக நீங்கள் நினைப்பவர்களுக்கும் விருதுகளை வழங்கி அவர்களுக்கு தெரிவித்துவிடுங்கள். விருது பெறுபவர்கள் தங்கள் தளத்தில் உங்களுக்கு நன்றி சொல்லி சுட்டி கொடுத்துவிடுவார்கள். அதை பார்த்து பலர் உங்கள் பதிவை படிப்பார்கள். தேவையானால் உங்கள் பாலோயராக மாறி தொடர்ந்து வாசிக்கவும் செய்வார்கள்.
 
இது போன்ற விருது கொடுக்கும் போது சில ப்ராபளப் பதிவர்கள் நக்கல் அடிக்கவும் செய்வார்கள். அதை எல்லாம் கண்டுக் கொள்ள வேண்டாம். அவர்கள் செய்வதை எல்லாம் உங்களிடம் அனுமதி பெற்றா செய்கிறார்கள். நீங்கள் மட்டும் ஏன் கண்டுகொளள வேண்டும்.

ஆரம்ப காலத்திலேயே யாருக்கும் பிரச்சனைக்குரிய பின்னூட்டங்கள் போட வேண்டாம். உங்கள் பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்கும். இப்போது பதிவுலகில் குழு மனப்பான்மை அதிகரித்துவிட்டது. நீங்க பிரச்சனைக்குரிய பின்னூட்டம் போடுபவர் மிகப் பிரபலமான பதிவராக இருக்கும் பட்சத்தில் அவரிடம் நல்ல பிள்ளை பெயரெடுக்க சிலர்(அனைவரும் அல்ல..) உங்களை எதிர்ப்பார்கள் அல்லது ஒதுக்குவார்கள்.

இதை எல்லாம் பின்பற்றினால் மூன்று மாதங்களில் நீங்களும் பிரபலம் ஆகிவிட முடியும். பின் ஜாலியாக மொக்கை போட்டு நட்பு வளர்த்தோ( என்னை மாதிரி) அல்லது சிறந்த படைப்புகளை படைத்தோ பதிவுலகில் உங்கள் விருப்பம் போல் செயல்படுங்கள்.

மூன்று பிரபலத் திரட்டிகளில் தொடர்ந்து உங்கள் பதிவுகள் வருவதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். தமிழிஷ் மற்றும் தமிழ்மணம் கருவிப் பட்டை நிறுவிவிட்டால், யார் வேண்டுமானாலும் சுலபமாய் உங்கள் பதிவை இணைத்துவிட முடியும். தமிழ்வெளி(tamilveli.com)யில் உங்கள் வலைப்பூவை இணைத்துவிட்டால் போதும். புதுப் பதிவுகளை தானாகவே எடுத்துக் கொள்ளும். ஈழம் தொடர்பான இடுகை எழுதுபவர்கள் தமிழ்வெளி மூலம் அதிக வாசகர்களைப் பெற முடியும்.
 
[இந்த மாதம் வெள்ளிநிலா இதழுக்காக எழுதிய பதிவு]

Robin  – (March 15, 2010 9:58 AM)  

உபயோகமான பதிவு.
நன்றி.
//ஆரம்ப காலத்திலேயே யாருக்கும் பிரச்சனைக்குரிய பின்னூட்டங்கள் போட வேண்டாம்.// நான் எழுதிய பாதி பின்னூட்டங்களும் பிரச்சனைக்குரியவையே. அழிக்கிறதுக்கு ஏதாவது உபாயம் இருக்குதா? :)

தாரணி பிரியா  – (March 15, 2010 10:07 AM)  

அட திரும்ப ப்ளாக் பேரு மாத்தியாச்சா :).

தாரணி பிரியா  – (March 15, 2010 10:08 AM)  

//உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..//

இது என்னது நல்ல பையனாட்டும் இப்படி எல்லாம் சொல்லிக்கிட்டு :(

சின்ன அம்மிணி  – (March 15, 2010 10:23 AM)  

எல்லா பதிவர்களையும் திட்டி ஒரு பதிவு போட்டாக்கூட பிரபல பதிவர் ஆகிடலாம் :)

ஈரோடு கதிர்  – (March 15, 2010 10:25 AM)  

வெள்ளி நிலாவில் வாசித்தேன்

சந்தோஷ் = Santhosh  – (March 15, 2010 10:50 AM)  

பிரதமரே,
திங்கட்கிழமை காத்தால இப்படி ஒரு சீரியஸ் பதிவு தேவையா? எல்லாரும் இப்படி நாட்டை திருத்த கிளம்பிட்டா எப்பூடி?

அன்புடன் அருணா  – (March 15, 2010 10:56 AM)  

ரைட்டு நீங்க பிரபலப் பதிவர்தான்!

சாம்ராஜ்ய ப்ரியன்  – (March 15, 2010 11:04 AM)  

இனிமேல் பிரபல பதிவர்களுக்கு பின்னூட்டம் இடாமல் விடுவதில்லை.

இன்று இருந்து, இப்பொழுதே ஆரம்பித்து விட்டேன்.

வானம்பாடிகள்  – (March 15, 2010 11:10 AM)  

நீங்க பி.ப. வா இல்லையா?

சின்ன அம்மிணி  – (March 15, 2010 11:16 AM)  

அண்ணன் சக்திவேல் பாணியை மறந்துட்டீங்க. ஓவர்நைட்ல பிரபல பதிவராக்கினீங்களே அவரை :)

ஆர்.கே.சதீஷ்குமார்  – (March 15, 2010 11:26 AM)  

இப்பதான் பதிவரசியல் புரியுது..அப்புறம் நான் உங்களுக்கு ஓட்டு போட்ருக்கேன்

முனைவர்.இரா.குணசீலன்  – (March 15, 2010 11:32 AM)  

பயனுள்ள குறிப்புகள் நண்பா.

கோவி.கண்ணன்  – (March 15, 2010 11:51 AM)  

//விரைவில் பிரபலப் பதிவராவது எப்படி? சில உதவிக் குறிப்புகள்//

விரைவில் என்றால் எப்போது .... எழுதுவீர்கள், தயவு செய்து தேதியைக் குறிப்பிடவும். உங்கள் உதவி குறிப்புகளை படிக்க ஆவலாக உள்ளேன்.

NO  – (March 15, 2010 12:15 PM)  

அன்பான நண்பர் திரு சஞ்சய் காந்தி,

என்ன சார், நல்லா இருக்கீகளா?

ஆரம்பிப்போமா??

வேற என்ன?

கோவி அண்ணன்தான்!!

ரொம்ப பிஸி சில மாதங்களா!! மற்ற தளங்களுக்கு போய் பார்க்க நேரம் இல்லை (Of course, நண்பர் வினவு மற்றும் இதர புரட்சி நண்பர்களின் புரட்சி புரட்டை விமர்சிப்பதை தவிர்த்து!!) நடுவுல இந்த நித்தியா மேட்டர் வந்தாலும் வந்தது, எல்லா தளத்திலையும் ஆளாளுக்கு போட்டு தாக்குறாங்க!

சோ கொஞ்சம் காமெடி diversion வேண்டாமா?

அதான்............... கோவி அண்ணன் ஞாபகம் வந்தது!

ஆரம்பிப்போமா?????

கருத்து கனவான், காகித புலி, சிங்கை சரவெடி
அன்பு அண்ணன், ரீல் மன்னன்,

கோவி கண்ணன்

in

வேட்டையாடு விளையாடு!!!!

மிக பரபரப்பான கிரைம் த்ரில்லர்!!!!

நடிப்பு -

ராகவன் (கமல்) - அண்ணன் கோவிகண்ணன்
ஆரோக்கியராஜ் (பிரகாஷ் ராஜ்) - புரட்சி போர் முரசு அண்ணன் பைத்தியக்காரன்
ஆராதனா (ஜ்யோதிகா) - அரை பக்கம் பதிவு அண்ணாச்சி அண்ணன் கார்கி (இந்த பாத்திரம் ஆண் பாத்திரமாக மாற்றப்படுகிறது)
கயல்விழி (கமாலினி) - அண்டாகாகசும் அண்ணன் ஜால்ரா மன்னன் அண்ணன் ஸ்டார்ஜன் (இந்த பாத்திரமும் ஆணாக)
அமுதன் (டானியல் பாலாஜி) - பல்சுவை மன்னன் அண்ணன் செந்தழில் இரவி
இளமாறன் - பதிவுலக பிதாமகன் அண்ணன் யுவ கிருஷ்ணா
ஆண்டர்சன் - ஆல் இன் ஆல் அண்ணன் வால் பையன்

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இயக்கம் - நோ...........NO.....

விரைவில் ........அதிரடியாக............வருகிறான்..............

கலகலப்ரியா  – (March 15, 2010 1:10 PM)  

அருமையான அனுபவக்கட்டுரை நண்பா... வாழ்த்துகள்...

சசிகுமார்  – (March 15, 2010 1:12 PM)  

நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

A.சிவசங்கர்  – (March 15, 2010 1:22 PM)  

நன்றி நான் பின்பற்ற முயற்சிக்கிறேன்

கபீஷ்  – (March 15, 2010 1:24 PM)  

//இப்போது பதிவுலகில் குழு மனப்பான்மை அதிகரித்துவிட்டது.//

ஹி ஹி. எப்போ குறைவாக இருந்தது?
ஜெனரல் நாலெட்ஜ்- கேள்வி. பிஜியா இருக்கும்போது பதில் சொல்லு சஞ்செய்

மஞ்சூர் ராசா  – (March 15, 2010 1:57 PM)  

புதிய பதிவர்களுக்கான மிகவும் பயனுள்ள பதிவு.

இன்னும் சில மிக முக்கிய குறிப்புகளை விட்டுவிட்டீர்கள் உதாரணத்திற்கு:

பதிவிடும் போது அல்லது பின்னூட்டம் இடும்போது கொஞ்சம் உள்குத்துகள் இருக்கணும், ஆனா அது உள்குத்துதான்னு பலருக்கும் தெரியக்கூடாது...

SanjaiGandhi™  – (March 15, 2010 2:03 PM)  

ராபின், நீங்க கமெண்ட் போட்ட ஐடியில் லாகின் செய்து உங்கள் கமெண்ட்ஸ் எதுவாயினும் அழிக்க முடியும்..

தாரணி அக்கா, இனி இது இருவர் ப்ளாக். அதனால் பேர் மாத்தியாச்சி.. நான் கொஞ்சம் கொஞ்சம் நல்ல பையன் .. :)

நன்றி Axleration, காலையில் தான் தமிழிஷ் வழியாக உங்கள் ஃபோரமை பார்வையிட்டேன்.. நன்றாக இருக்கிறது..

சின்ன அம்மிணி அக்கா, எல்லாரையும் திட்ட வேணாம். மிக பிரபலமா இருக்கிற உங்களை திட்டினா போதும்.. ஒரே பதிவு.. ஓஹோன்னு பிரபலம்.. :)))

நன்றி கதிர், வெநியில் உங்கள் பக்கத்தை தாண்டி யாரும் படிக்க மாட்டேங்கறாங்க.. எல்லாரையும் உணர்ச்சி வசப் படுத்திடறிங்க.. இனி உங்களுக்கு முதல் பக்கம் குடுத்தா டீ குடிப்பேன்னு சொல்லி இருக்கேன்.. :))

SanjaiGandhi™  – (March 15, 2010 2:05 PM)  

நன்றி செல்வராஜ்... இன்னும் இருக்கு பாஸ்.. :)

சந்தோஷ், இது போன மாசமே எழுதினது.. இப்போ தான் ப்ளாக்ல பப்ளிஷ் ஆகுது :)

அருணாக்கா, எனக்கேவா? :)

ப்ரியன், இன்னைக்கு ஊறுகாய் நானா? ஹ்ம்ம் நடத்துங்க..

வானம்பாடிகள்.. இல்லை.. இல்லை.. இல்லை.. :)

கோவி.கண்ணன்  – (March 15, 2010 2:08 PM)  

//NO says:
March 15, 2010 12:15 PM

அன்பான நண்பர் திரு சஞ்சய் காந்தி, //

அந்தோ பரிதாபம்,

அண்ணன் நோவின் ஆங்கில பின்னூட்டங்களையும், அனுமார் வால் போன்ற புன்னூட்டங்களிலும் வினவு பதிவில் பலத்த அடிபட்டு, யாரும் திரும்பிப் பார்க்கததால் இங்கே டெண்டு போட்டு இருக்கிறார். அண்ணன் நோவை சொறிந்துவிடுபவர்கள் எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவும். குரங்குக்கு சிரங்குவருவதைவிட அண்ணன் நோ எழுதுவது ரணகளம், அவரே ரசிப்பார், அவரே சிரிப்பார். அண்ணன் நோ பேசாமல் பல்வேறு பெயர்களில் ப்ரொபைல் தொடங்கிவிட்டால் நீங்களே எழுதி நீங்களே பாராட்டிக் 'கொல்லலாம்'

மஞ்சூர் ராசா  – (March 15, 2010 2:13 PM)  

சாமியின் மன அலைகள் என்ற தலைப்பில் எழுதி வரும் நண்பரொருவர் பதிவராவது எப்படி என்பது பற்றி ஒரு தொடரே எழுதியிருக்கிறார். (http://swamysmusings.blogspot.com/2009/10/1.html) (நன்றி சாமி அவர்களே)

அதிலிருந்து :

இந்த QUIZ ல் 100க்கு 100 மார்க் வாங்கினால் மட்டுமே நீங்கள் பதிவு எழுத லாயக்கானவர். இல்லையென்றால் பார்வையாளர் பெஞ்சில் உட்காரத்தான் லாயக்கு.
1. சரளமாக உண்மை கலவாத பொய் எழுத வருமா?
2. மெட்ராஸ் பாஷை, குறிப்பாக அதில் உள்ள வசைச்சொற்கள், நன்றாக தெரியுமா?
3. வீட்டிற்கு ஆட்டோ(?) வந்தால் சமாளிப்பீர்களா?
4. டாஸ்மாக்கில் 5 ரவுண்டு போட்ட பிறகும் ஸ்டெடியாக நிற்பீர்களா?
5. உங்கள் மூக்கு ஸ்ட்ராங்காக இருக்கிறதா? யாராவது உங்கள் மூக்கில் குத்தினால் தாங்குவீர்களா? ரத்தத்தை பயமில்லாமல் பார்ப்பீர்களா?
6. அடுத்த பதிவர்களின் அந்தரங்கங்களை சேகரித்துக்கொடுக்க நம்பிக்கையான நண்பர்கள் உண்டா?
7. அப்படி கிடைத்த தகவல்களை வைத்து அவர்களுடைய குடும்ப நபர்களைப்பற்றி அவதூறுகள் கூறி பதிவுகள் போடமுடியுமா?
8. உங்களை ஒரு சமயம் காவல்துறையில் கூப்பிட்டால், இன்ஸ்பெக்டர் கூப்பிட்டபொழுதெல்லாம் சலிக்காமல் போக முடியுமா?
9. உங்கள் மனச்சாட்சியை ஒதுக்கித்தள்ள முடியுமா?
10. உங்களை அடுத்த பதிவர் போட்டுத்தாக்கும்போது அதைத்தாங்கிக்கொண்டு திருப்பித்தாக்க முடியுமா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்று பதில் அளித்தீர்கள் என்றால் நீங்கள் பதிவு எழுதலாம்.
கூடவே கீழ்க்கண்ட வார்த்தைகளுக்கும் அர்த்தம் கண்டுபிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
1. உங்கள் தளத்தை பின்பற்றுவோர்; 2. உங்கள் தளத்திற்கு வருகை தந்தவர்கள் எண்ணிக்கை 3. உங்கள் பதிவிற்கு போடப்படும் பின்னூட்டங்கள்.
இந்த மூன்றும்தான் உங்கள் தளத்தின் பிரபலத்தின் அளவுகோல். இவை அதிகமாக அதிகமாக உங்கள் தளத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகும். அதனால் எனக்கு என்ன பயன் என்று நீங்கள் நினைக்கலாம்.

உண்மைத் தமிழன்(15270788164745573644)  – (March 15, 2010 2:24 PM)  

அறிவுரைகளுக்கு மிக்க நன்றிங்கண்ணே..!

இனிமேல் நீங்கள் சொல்லியிருப்பவைகளைப் பின்பற்றி நானும் ஒரு பிரபல பதிவராகிவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்..!

தயவு செய்து நீங்க ஒருத்தராவது எனக்குப் பின்னூட்டம் போடுங்கண்ணே..!

மிக்க நன்றி..!

SanjaiGandhi™  – (March 15, 2010 2:38 PM)  

RK சதிஷ், நன்றி.. மைனஸ் ஓட்டு போட்டது நீங்க தானா? :)

நன்றிகள் குணசீலன்

கோவியாரே.. நீங்க என்னை நக்கல் அடிக்கிறதால தான் எங்க அண்ணன் நோ டென்ஷன் ஆய்டறார். பார்த்து நடந்துக்கோங்க.. :)

கலகப்ப்ரியா.. ஒடம்பு சரி இல்லையா? எதும் உள்குத்தா?

நன்றி சசி.. நீங்களுமா? அவ்வ்வ்வ்

SanjaiGandhi™  – (March 15, 2010 2:38 PM)  

நோ அண்ணே, நான் உங்கள் ரசிகன் தான் என்றாலும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைவரும் என் பாசத்திற்குரிய பாரதிராஜாக்கள்.. ரீல் மன்னன், ஜால்றா போன்ற வார்த்தைகளெலலம் உபயோகிக்க வேண்டாம்.. அவரவர் கருத்து அவரவர்க்கு.. வழக்கம் போல ஜாலியாய் கலாய்க்கலாமே.. புண்படுத்தும் வார்த்தைகள் வேண்டாம்..

SanjaiGandhi™  – (March 15, 2010 2:44 PM)  

சிவசங்கர், பின்பற்றுங்கள்.. விரைவில் பிரபலம் ஆகிவிடலாம்.. :)

கபீஷ், கரெக்ட் தான் மச்சி.. :) இப்போ ந்ம்ம ப்ளாக் கூட குழு ப்ளாக் ஆய்டிச்சி பாரேன்.. மரியாதையா சீக்கிறம் எதாச்சும் எழுது.. வெட்டியா எடத்தை அடைச்சிட்டு இருக்காத.. பேரெல்லாம் மாத்திட்டேன் பார்.. :)

நன்றி மஞ்சூர் அண்ணா, :))))
சாமி பதிவு சூப்பரு..

உ. தமிழன் அண்ணே, அதுல சொல்ல மறந்துட்டேன்.. 2000 வரிகளில் பதிவு போடாமல் இருப்பதும் பிரபலம் ஆவதற்கான வழி.. :)))

NO  – (March 15, 2010 3:05 PM)  

ஹா ஹா ஹா............

அண்ணன் கோவி கோபத்துடன் வந்தார் தாவி
அவர் "காலம்" மட்டுமே போற்றும் ஒரு அறிவு ஜீவி
அதை படிப்பவர்க்கு வரும் நல்ல கொட்டாவி
அதை வாயத்திறந்து சொன்னால் நான் ஒரு பாவி

கோபத்துடன் சீரும் நண்பரே
நீங்கள் போடும் கணக்குகள் வெறும் ராங் நம்பரே
அந்தோ பரிதாபம் என மாற்றாரை சொல்லுவார்
நானும் எழுதுவேன் காவியம் என படிப்போரை எல்லாம் கொல்லுவார்

ஒப்பிலா காவியங்களை எழுதி களைத்த அண்ணன் திரு கோவி, கொஞ்ச நாட்களாக ஆன்மிகம் வேறு பரப்புகிறார் போலும்! நடு நடுவே, நித்த்யானந்தா வகைறாக்கள்! அதையும் படித்துவிட்டு பதில் எழுதும் ஒரு பத்துபேருக்கு பக்க வாத்தியமாக அண்ணன் அதற்க்கும் வந்து வரிக்கு வரி பதில் கொடுத்து தன்னுடைய நேரத்தை நன்றாக உபயோகப்படுத்துகிறார்!!!

இதைப்போன்ற திறமையாளர்களை வேட்டையாட விடாமல், சஞ்சய்காந்தி போன்றவர்களையா விளையாடவிடுவது!!

கோபித்துக்கொள்ளாதீர்கள் கோவி சார், எப்பவும் போலதான், நீங்க பார்க்காததா..... எவ்வளவு நல்லவருன்னு நானே எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன்!!!
நீங்களே வந்து ஆசீர்வதித்து விட்டீக ..... வேட்டையாடிட வேண்டியதுதான்!!!!!!

க.பாலாசி  – (March 15, 2010 3:59 PM)  

என்னமாதிரி சின்ன பசங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.....

NO  – (March 15, 2010 4:43 PM)  

பகுதி ஒன்று:



கமிசனர் கோவியன் அந்த இன்டர்நெட் பார்லருக்குள் செல்கிறார்! அங்கே அவரை எதிர்ககொள்கிறார் பதிவுலக புலி எனபடும் அந்த நபர்!



அ ந: கோவியன், என்ன தனியா வரீங்க , அதுவும் என்னுடைய இடத்திற்கு!

கோவி: பின்ன, பின்னூட்டம் போட நாலு பெயரையா கூட்டிட்டு வர முடியும்?? அவங்க ஆன் லைன்ல இருக்காங்க. இப்போ நான் தனி ஆளு! அமாம் அது என்ன உன்னோட இடம், என் காலம் தளத்திற்கே நான் தனியா போகும்பொழுது உன் இடம் என்னய்யா, அதை விட பயங்கரமானதா??



அ ந: ரொம்ப அனாவசியமா பேசுறீங்க கோவியன், போய்டுங்க!

கோவி : என்ன, சமாதி பற்றிய என் சமீபத்திய பதிவ கண்டபடி திட்டு பின்னூட்டம் போட்டு அதை என்னையே டெலிட்டு செய்ய வெப்பியாமே ... கேள்விப்பட்டேன், அதான் பாத்துட்டு போலாமுன்னு வந்தேன், இதோ என் லாப்டாப்பு, இதுல இருக்கு என் பதிவு, வா வா வந்து பின்னூட்டம் போடு, அதிலும் என் லாப்டாப்புலையே போடு பார்க்கலாம்! என்று கூறி தன் ஒரு கையில் லாப்டாப்பின் அடியை பிடித்துக்கொண்டு மறு கையின் இரு விரல்களால் ஸ்டைலாக

லாப்ட்டப்பை திறக்கிறார் கோவி!!!!



அ ந: வேண்டாம் கோவி போயிடு.........

கோவி: என்ன பயமா.......பின்னூட்டமுன்ன பயமா.....இந்த கோவி பதிவுன்னா அவளவு பயமா??????



அ நா விற்கு கோபம் வந்து அவரின் ஆட்களிடம்: டாய், கடை கதவ மூடுங்கடா...வாங்க ஆளுக்கு ஒரு கம்ப்யூட்டர் முன்னால உட்காருங்க, நான் சொல்லுறத பின்னூட்டம் போடுங்க, மாத்தி மாத்தி போடணும், இந்த கோவியன் அதைப்பார்த்து ஓடனும்...... என்று முடித்து, " கோவியன், கடைசி சான்ஸ், ஒன்னு ஓடுங்க இல்லாட்டி இண்டர்நெட்டுல கனெக்ட் பண்ணி ஆன் லைன்ல வாங்க!!



கோவி : ஏய் ஏய், காலத்தையே தன் கைக்குள்ள வெச்சிருக்கான் இந்த கோவி...இந்த சில்லறை பசங்களுக்கா பயப்புடுவான் ... வாங்கடா.......



கோவியாரின் பதிவில் பின்னூட்டங்கள் வந்து விழுகின்றன...

பின்னூட்டம் 1 : சமாதிகெல்லாம் ஒரு சப்ஜெக்டா ?????

கோவி: சாமாநியனுக்கே சமாதி கட்டும்பொழுது சமாதிக்கு ஒரு சப்ஜெக்ட்டு கூடாதா??

பின்னூட்டம் 2 : எல்லோரும் சமாதி ஆகலாமுன்னு சொன்ன அவன் அவன் குடும்பத்த யாரு நடத்துவாங்க!!

கோவி : எனக்கு சமாதியும் ஒண்ணுதான் சம்மந்தியும் ஒண்ணுதான், தூங்கிற உள்ளம் சமாதி, தூங்காத உள்ளம் சம்மந்தி! சமாதியான சம்மந்தி இருக்காரு!!!

பின்னூட்டம் 3 : சமாதி பற்றி எழுதுவதற்கு நேரம் காலம் வேண்டாம், காலைல கம்ப்யூட்டர் தொறந்தா உங்க கருமாதி இல்லாட்டி சமாதி வகைரா பதிவு!

கோவி : காலம் வேண்டுமுன்னுதான் சொல்லுறேன், அவன் அவன் காலையுலையே காலத்தை பார்த்தாங்கன்னா, சமாதியை அப்போவே அடையலாம்!

பின்னூட்டம் 4 : சமாதி நிலமைய நீ எப்போ அடையப்போர, சொன்னீங்கன்னா கொண்டாட்டத்திற்கு தயாராவோம்

கோவி : என் சமாதி காலத்தைத்தாண்டி வரும்! அந்த காலம் உங்களுக்கு புரியாது!

பின்னூட்டம் 5 ஆடிப்போய் : புரியலையே........

கோவி: என் காலமே எனக்கு புரியல......புரிந்தவுடன் சொல்லுகிறேன்....... அதுவரைக்கும் காலமும் அதன் கோலமும் எனக்கு ஒன்றுதான்!



இப்படியாக சில பல பின்னூட்டங்கள் முடிந்த பின்னர், சத்தமே இல்லாததால் கோவி திரும்பி பார்க்கின்றார்!!!! எல்லோரும் மயங்கிய நிலைமையில்

இருக்கின்றார்!!!



முதலில் வந்த அந்த நபர் மட்டும் முனுமுன்னுப்புடன்: எப்படி கோவியரே இந்த மாதிரி முட்டாள்த்தனமான அதுவும் விடாப்பிடியாய் வாராவாரம் இந்த மாதிரி ஆளையே கொல்லுற படைப்புகளை , பதில்களை கொடுக்கமுடியுது........சொல்லுங்க கோவியன்.....



கோவி : கோவியன் எந்த மடத்தனமான படைப்பையும் படைக்கவில்லை, மாறாக நம்மை சுத்தி இருக்கும் மடத்தனங்கள் கோவியனை படைத்தது என்று சொல்லுவதே சரி:



முழுவதுமாக மயங்கி விழுகிறார் எல்லோரும், கோவியாரை தவிர!!!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi  – (March 15, 2010 4:58 PM)  

பத்திரிக்கையில் எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா ? :)

சிவபாலன் (பாலன்)  – (March 15, 2010 5:57 PM)  

இப்போது தான் ஆரம்பிக்கிறேன், உங்கள் அறிவுரைப் படி..

NO  – (March 15, 2010 6:02 PM)  

பகுதி இரண்டு:

பதிவுலகப்புலியை பதம் பார்த்து விட்ட பிறகு அடுத்த பதிவை எழுத ஆரம்பிக்கிறார் கோவி அண்ணன்! ஒரு நல்ல சப்ஜக்ட் இல்லை என்ற கவலை அவருக்கு! ஏதாவது மனம் போல கிறுக்குவோம் அப்புறம் படிப்பவர்களே அர்த்தம் செய்து கொள்ளட்டும் என்று மனதை தேத்திவிட்டு ஆரம்பிக்கிறார்! அப்பொழுது தொலை பேசி அடிக்கிறது!
அதை எடுத்தவுடன் கோவி: ஹெலோ யாரு...
மறுமுனையில் : பைத்தியக்காரன்
கோவி : அதான் எனக்கே தெரியுமே, நீங்க யாருங்க
மறுமுனையில்: நாந்தாங்க பைத்தியக்காரன்
கோவி: அடேடே நம்ம மதுரை போலீஸ் கமிசனர் பைத்தியக்காரனா! சொல்லுங்க சார், ஏதாவது பதிவு எழுதி பின்னூட்டம் வரலையா இல்ல ஐடியா ஏதாவது வேணுமா .... சொல்லுங்க அடிச்சு விடறேன்....நேத்துக்கூட சமாதி பத்தி எழுதினேன், வேணுமுன்னா சொல்லுங்க சமாதிக்கே சமாதி கட்டிய புரட்சி பைத்தியக்காரன் அப்படின்னு போட ஒரு சப்ஜக்ட் தர்றேன்!!
பைத்: அதெல்லாம் இல்லை கோவி, ஒரு முக்கியமான விஷயம்!
கோவி: என்ன சார், யாரவது உங்களுக்கு தெரியாம புரட்சி செய்துட்டாங்களா, வேணுமுன்ன சொல்லுங்க பைத்தியக்காரன் இல்லாத புரட்சி ஒரு புரட்டுன்னு ஒரு பதிவு போடுறேன்...
பைத்: அட அது இல்லீங்க..............
கோவி: என்னங்க இவ்வளு சோகமா பேசுறீங்க...என்ன ஆச்சு, மாவோவின் செம்புரட்ச்சி உண்மையாவே வராதுன்னு நம்ம புரட்சி பிடிக்காத சிலர் சொல்லிட்டாங்களா, உடுங்க , இதுக்கு போய் வருத்தப்ப்டுகிட்டு, சும்மா புரட்சி வந்திடும், தோ பக்கத்து ஊரில இருக்கு இன்னும் நாலு நாட்களில் வந்துரும், ஆஹா வந்தாச்சு அப்படி இப்படின்னு அடிச்சு உடவேண்டியதுதானே! நமேக்ல்லாம் இது புதுசா??? சொல்லுங்க? ஏன் சொல்லுறேன்னா வறட்சியும் புரட்சியும் ரெண்டும் எனக்கு ஒண்ணுதான், ஒண்ணு வந்தா பேஜாரு, இன்னொன்று வராமலிரந்தாலும் பேஜாரு, வருது வருதுன்னு ஒரு பத்து பேரு அலப்பல் தாங்க முடியவில்லை! ஏன் காலத்தையே மிஞ்சிடும் போலிருக்கு......அதான்.
பைத்: கோவி, ஹூம் ஹூம் அழுதுகொண்டே........அதெல்லாம் இல்லை, இவ்வளவு நாளா நான் எழுதி வெச்ச பதிவை எல்லாம் காணல!
கோவி: என்ன, பதிவுகள காணலையா.......
பைத்: ஆமாம் கோவி ஆமாம்.....காலைல எல்லாத்தையும் படிச்சு மலையுல மறுபடியும் படிக்கலாமேன்னு பார்த்தேன் ஒன்றும் வரவில்லை......எல்லா பதிவும் எங்கேயோ போச்சே... ஐயோ......ஐயோ.....
கோவி: அட கவலைப்படாதீங்க..... உங்க பதிவுக்கு ஒன்றும் ஆகிவிடாது....... நான் இப்போவே கிளம்பி வரேன்...........

இய‌ற்கை  – (March 15, 2010 8:32 PM)  

சஞ்சய்..சஞ்சய்ன்னு ஒருத்தர் எழுதிட்டு இருந்தாரே? அந்த பிளாக் இது தானுங்களா?

இய‌ற்கை  – (March 15, 2010 8:33 PM)  

//சின்ன அம்மிணி said...
எல்லா பதிவர்களையும் திட்டி ஒரு பதிவு போட்டாக்கூட பிரபல பதிவர் ஆகிடலாம் :)
//

அப்படியா.. சரி..சரி.. சஞ்சய திட்டி ஒரு பதிவு போட்டுட வேண்டியதுதான்

கலகலப்ரியா  – (March 15, 2010 8:34 PM)  

||இய‌ற்கை says:
March 15, 2010 8:32 PM

சஞ்சய்..சஞ்சய்ன்னு ஒருத்தர் எழுதிட்டு இருந்தாரே? அந்த பிளாக் இது தானுங்களா?||

oh.. ithu sanjay blog a..? naan nanba nnu sonnene... sorrypa sanjay... ipdi eathavathu panrappo sollittu panrathillayaa...

வால்பையன்  – (March 15, 2010 10:22 PM)  

அங்கிள் ஓட்டு போட்டுட்டேன்!

smart  – (March 15, 2010 11:00 PM)  

உங்க கருத்து நல்லத்தான் இருக்கு.(அதுதான் நடக்குதுபோல)
ஆனால் ஒரு தனி மனிதப்பார்வையில் இது ஆரோக்கியமான சுழல் இல்லை என்பதுதான் உண்மை இந்த நிலைமை நீடித்தால் வருங்கால எழுத்தாளர்கள் (சாரு கூட சொன்னமாதிரி) பதிவுலகம் ஒரு குப்பைனு சொல்வாங்க

{பிரபல} ஒட்டு வங்கி கொண்ட பதிவர்கள் சிந்திக்க வேண்டும்

அமர பாரதி  – (March 15, 2010 11:05 PM)  
This post has been removed by the author.
செல்வேந்திரன்  – (March 15, 2010 11:38 PM)  

இதன் அச்சு வடிவம் கண்டு நேரிலேயே ஸ்மைலீ போட்டு விட்டதால் ஸ்மைலீயை மிச்சப்படுத்திக்கொள்கிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன்  – (March 15, 2010 11:58 PM)  

சீரியஸும் இல்லாமல் மொக்கையும் இல்லாமல் எப்பிடி இப்படி நடுவால ஒண்ணு எழுதுனீங்கன்னு யோசிச்சுகினு இருக்கேன். ஹிஹி

~~Romeo~~  – (March 16, 2010 3:35 AM)  

பத்திரிக்கைல படிக்கும் போதே சூப்பர் ஹா இருந்துச்சு .. ஹ்ம்ம் நடத்துங்க நடத்துங்க

SanjaiGandhi™  – (March 16, 2010 7:51 AM)  

பாலாசி, உங்கள மாதிரி இருக்கிறவங்க எல்லாம் சின்ன பசங்கன்னா, எங்களை எல்லாம் என்ன சொல்றது? பொறக்காத கொழந்தைங்கன்னா? :)

முத்தக்கா, அது பதிவர்களுக்கான இலசவ பத்திரிக்கை.. எழுத ஆள் கிடைக்கலைனு என்கிட்ட கேட்டாங்க.. :)

சிவபாலன், வரம் குடுத்தவன் தலைலையே கைவைக்கக் கூடாது.. :)

இயற்கை.. ஒடம்பு எப்டி இருக்கு?

கலகப்பிரியா.. கொழுப்பா? அதான் அப்போவே கேட்டேன்.. என்னை நண்பன் சொல்றிங்களே.. ஒடம்பு சரி இல்லையான்னு..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி  – (March 16, 2010 8:28 AM)  

போகும் வழி தவறானது.. ஆனாலும் நல்ல கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் நினைப்பு இருந்தால் பரவா இல்லை..

சும்மா பிரபலமாக வேண்டும் என்ற முனைப்போடு எழுதினால், கொஞ்ச நாள் மொக்கை போடலாம்... அவ்வளவு தான்...

ஆள் சேர்க்க வேண்டும் என்று நினைப்போருக்கு இந்த பதிவு உபயோகமானது... ஆனால் பதிவு போடுவது, கால நேரம், விடுமுறை நாட்கள், பின்னூட்டம் போடும் முறை, அடுத்த பதிவர்களை கலாய்ப்பது என்று பதிவில் உள்ள அத்தனை பிரிவுகளையும் உள்நோக்கத்தோடு செய்யச் சொல்லுவது சத்தியமாக பெரும் தவறு.. அந்த மாதிரியான ஆட்கள் எப்படி நல்ல நண்பர்களாக ஆக முடியும்..உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது நட்புக்கு அழகல்ல..

என்னுடைய கருத்து இவ்வாறு இருக்கும்..

எந்த கருத்துகளையும் எந்த நேரமும் தோன்றும்போதே பதித்து விட வேண்டும்.. செய்யுங்கள் என்பதைத் தவிர்த்து செய்வோம் என்பதை உபயோகிக்க வேண்டும்.. பின்னூட்டங்களை நம் மனதிலிருந்து எழத வேண்டும்.. யாருக்கும் பயப்படவோ, இவர்கள் நமக்கு ஆதரவு தர வேண்டும் என்றோ, ஒரு பின்னூட்டம் இடக் கூடாது..அந்த கருத்து ஒத்திருந்தால் ஆதரவு கருத்து, ஒத்துவராது என்றால், ஒரு மறுப்பு, பிடிக்கவில்லை என்றால் அமைதியாக திரும்பி விட வேண்டும்..

நம்முடன் ஒத்த கருத்துள்ள பதிவர்களின் பதிவை அடிக்கடி பார்க்க வேண்டும்.. பிரபலமாக வேண்டும் என்றே ரணகளம் நடக்கும் இடத்தில் குதித்து விடக் கூடாது.. நம்மால் போராட முடியும் என்றால் ஓகே..

நம் பாதையை விட்டு பிசக கூடாது.. ஓட்டு வேண்டும் என்பதர்காக, காலத்திற்கேற்ப நம் கருத்துகளை மாற்றுவது தவறாகும்.. எண்ணமும் நோக்கமும் ஒன்றாக இருக்க வேண்டும்.. நம்முடைய ஒத்த கருத்துடையவர்கள் நிச்சயம் வருவர்..

என்னுடைய பகுதிக்கு சமீப காலமாக தான் நண்பர்கள் வர ஆரம்பித்துள்ளனர். ஆனால் எனக்கு மிக மகிழ்ச்சி.. ஏனெனில் எந்த பரப்புரையும் செய்யாமல், என்னோடு ஒத்த கருத்துடையவர்கள் அவர்கள்.. எனவே எனக்கு அவர்கள் வருவதில் என் கருத்து வலுப் பெறுகிறது..நல்ல களம் அமைகிறது.... அவர்கள் என்னுடைய பழைய பதிவுகளையும் பார்க்கிறார்கள். பின்னூட்டம் ஒரு அங்கீகாரம். ஆனால் அது மட்டுமே அங்கீகாரம் இல்லை..

தொடர்ந்து உயரிய நோக்கோடு எழுத வேண்டும்.. நமக்குரிய கூட்டம் சேரும்..(நகைச்சுவை கூட ஒரு பெரிய உயரிய நோக்கமே..)

நன்றி..

தவறு இருந்தால் தயவு செய்து திருத்துங்கள்..

sweetprabha  – (March 16, 2010 9:36 AM)  

"விரைவில் பிரபலப் பதிவராவது எப்படி? சில உதவிக் குறிப்புகள்"
nice one , so sweet....

வரதராஜலு .பூ  – (March 16, 2010 9:50 AM)  

பத்திரிகையிலேயே படித்துவிட்டேன். நன்றாக உள்ளது.

karthik  – (March 16, 2010 10:17 AM)  

மிகவும் பயனுள்ள பதிவு வணக்கம் தல

ராஜன்  – (March 16, 2010 11:45 AM)  

//எப்படி எழுத வேண்டும் என்று அறிவுரை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை( தெரிஞ்சா தானே).//

கரெக்டு !

ராஜன்  – (March 16, 2010 11:46 AM)  

//எடுத்த எடுப்பிலேயே மிகச் சிறந்த பதிவுகளை எழுதி வீணடிக்க வேண்டாம்.//

நாங்க என வெச்சுகிட்டா வஞ்சகம் பண்றோம் !

ராஜன்  – (March 16, 2010 11:46 AM)  

//எடுத்த எடுப்பிலேயே மிகச் சிறந்த பதிவுகளை எழுதி வீணடிக்க வேண்டாம்.//

நாங்க என வெச்சுகிட்டா வஞ்சகம் பண்றோம் !

ராஜன்  – (March 16, 2010 11:46 AM)  

// சில ப்ராபளப் பதிவர்கள் நக்கல் அடிக்கவும் செய்வார்கள். அதை எல்லாம் கண்டுக் கொள்ள வேண்டாம். //

ஹா ஹா ஹா ! என்ன சார் பண்றது நம்ம கடமைய நாம செஞ்சு தானே ஆவணும்

Bairave  – (March 16, 2010 12:19 PM)  

அண்ணாத்தே ஓட்டு போட்டாச்சு

மைதீன்  – (March 16, 2010 12:36 PM)  

ஆஹா,இவ்வளவு நாளா இது தெரியாம இருந்துட்டனே! வட போச்சே! இனிமேயாவது உஷாரா இருக்கணும்.நன்றி தலைவா!

Mitr Friend - Bhushavali  – (March 16, 2010 11:00 PM)  

Wow... A rather interestinbg blog post... I laughed at the end of it anfd still am....

Versailles Palace, Paris - Part III
Work Wear Style - 8

மங்குனி அமைச்சர்  – (March 17, 2010 1:06 PM)  

சார் நான் மொத்தம் 3 ஒட்டு போட்டேன் (2 கள்ளவோட்டு )

SanjaiGandhi™  – (March 19, 2010 1:02 PM)  

நன்றி வாலாரே

@இன்னொரு வால்பையன்.. என்னடா மச்சி 2 வால்பையன்களும் அடுத்தடுத்து கமெண்ட் போடறிங்க? இத்தாலி சுகமா? :)

ஸ்மார்ட், பதிவுலகம் எழுத்தாளர்களின் உலகம் இல்லை.. நம் எண்ணங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் இடம் தான்.. இதை குறை சொல்ல யாருக்கு உரிமை இல்லை..

நன்றி செல்வா :)

ஆதி, நான் எதுமே யோசிக்காம எழுதினேன் மாம்ஸ்.. அதான் இப்டி :)

SanjaiGandhi™  – (March 19, 2010 1:07 PM)  

நன்றி ரோமியோ.. நான் நடத்தறது இருக்கட்டும்.. நீங்க தொடர்ந்து எழுதுங்க பாஸ்..

பிரகாஷ், நீங்க முதல் சில வரிகளைப் படிக்கலையா? அடுத்த பதிவு பாருங்க.. ப்ளாக் பத்தி தவறான புரிதல் இருக்கிறவங்களுக்காக எழுதறேன்..
//எந்த கருத்துகளையும் எந்த நேரமும் தோன்றும்போதே பதித்து விட வேண்டும்..//

கரெக்ட் தான்.. ஆனா பிரிசுரமாகும் நேரத்தை கணக்கில் கொள்ள வேண்டும். அப்போ தான் உங்க எழுத்து அதிகமானோரை சென்றடையும்.

நன்றி ஸ்வீட்ப்ரபா..

நன்றி வரதராஜுலு

நன்றி கார்த்திக்( அம்மாடி.. எவ்ளோ கார்த்திக் பதிவுலகத்துல இருக்காங்க )

SanjaiGandhi™  – (March 19, 2010 1:10 PM)  

ராஜன் ஆரம்பிச்சாச்சா? நான் சொன்னது நீங்க அடிக்கிற நக்கல் இல்லை.. விருதுகள் தருவதை குறை சொல்லி நக்கல் பண்றவங்களை..

நன்றி பைரவி

நன்றி மைதீன்.. உஷாரா இருங்க :)

நன்றி புஷா.. ரொம்ப நேரம் தனியா சிரிக்காதம்மா.. யார்னா தப்பா புரிஞ்சிக்கப் போறாங்க :)

நன்றி மங்குனி அமைச்சர்.. உங்கள் அன்புக்கு நன்றி என்றாலும்.. இது டூ மச் :)

வால்பையன்  – (March 19, 2010 1:45 PM)  
This post has been removed by the author.
வால்பையன்  – (March 19, 2010 1:46 PM)  
This post has been removed by the author.
மனோ சாமிநாதன்  – (March 20, 2010 12:39 AM)  

அன்புள்ள சகோதரருக்கு!

என்னைப்போன்ற ஆரம்பப்பதிவாளருக்கு மிகவும் உபயோகமான பதிவு இது. சகோதரி ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் இதை அனுப்பியிருந்தார். அதனால் நேரடியாகவே உங்கள் தளத்துக்கு வந்து நன்றி சொல்கிறேன்.

அப்புறம் கீழ்க்கண்ட அருமையான வரிகளுக்கு ஒரு பாராட்டும்கூட!

“Life is like a journey where you meet people on the way...some come near and some may not, but never be emotionally involved, you never know when you have to walk alone...

♥ தூயா ♥ Thooya ♥  – (March 20, 2010 9:43 AM)  

என்ன செய்தாலும், உங்கள போல பிரபலம் ஆக முடியுமா என்ன?!!!

ராஜ நடராஜன்  – (March 21, 2010 5:03 PM)  

முதலில் பயாஸ்கோப்புக்கு வாழ்த்துக்கள்.

66 மார்க் வாங்கியிருக்கீங்க.நான் தான் வாழ்த்து சொல்ல தாமதம் போல இருக்குது.

SanjaiGandhi™  – (March 21, 2010 10:41 PM)  

திருமதி மனோ சாமிநாதன், நீங்கள் என்னை சகோதரர் என அழைத்தது உள்குத்தாகவே தெரிகிறது.. :) ( சும்மா.. தமாஷ்.. )

உங்களை நான் அம்மா என அழைப்பதே சரியாக இருக்கும்.. நன்றி அம்மா.. உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியவருக்கு என் மனமார்ந்த நன்றியை சொல்லிடுங்க.. என் பதிவெல்லாம் மெயில்ல ட்ராவல் பண்ணுதா.. ஆஹா.. :) நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகள் என் சொந்த சரக்கல்ல.. எங்கோ எப்போதோ சுட்டது.. எனக்கு மிக சரியாக பொருந்திப் போவதால் அதை பயன்படுத்துகிறேன். நன்றி..

அம்மாடி தூயா, உன்னை தூக்கத்துல இருந்து எழுப்பினதுக்கு இந்த தண்டனையா? நல்லா இரு தாயீ..:)

என்னாச்சி மதுமிதா மேடம்.. ஏனிந்த சோகம்? இங்கே நான் பெண்ணுரிமை பத்தி எல்லாம் எதும் பேசலையே..:)

நன்றி ராஜ நடராஜன்.. பதில் என்ற பெயரில் எனக்கு நானே போட்டதும் சேர்த்து 66 :)

karthikeyan  – (March 23, 2010 3:50 PM)  

yennudaiya manak kuzappathai neekki vitterkal thanks

SanjaiGandhi™  – (March 25, 2010 8:14 PM)  

நன்றி கார்த்திகேயன்.. எஞ்சாய்...

cheena (சீனா)  – (April 6, 2010 7:57 PM)  

oookooo -ஓகோ - நான் பிரபலப் பதிவரா இல்லையா - தெரில தம்பி - முயற்சி பண்ரேன்

நல்வாழ்த்துகள் சஞ்செய்
நட்புடன் சீனா

சுரேகா..  – (April 8, 2010 1:32 PM)  

இந்தப்பதிவின் மூலம் நீங்க மிக மிகப் பிரபலமாக ஆகிட்டீங்க! சூப்பர்!

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP