March 25, 2010

அதிரை ஃபரூக்கிற்கு ஆப்பு வைக்கலாம் வாங்க

அதிரை ஃபரூக் என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு வயித்தைக் கலக்கும் போல. பய புள்ளைக இந்த மதவெறியனை பத்தி சொல்லி லிட்டர் லிட்டரா கண்ணீர் வடிக்கிறாங்க.. கொஞ்ச நாளா எனக்கும் வந்தது.கண்ணீர் இல்ல.. மெயில் தான்.. இதுல இருந்து தப்பிக்கிறது மட்டுமில்லாம அவர் இனி யாருக்கும் மெயிலே அனுப்பாம செய்யலாம். மேட்டர் சிம்பிள் மச்சிஸ்.. யாருக்கெல்லாம் இந்த மதவெறி மெயில் வருதோ அவங்க எல்லாம் யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்..
  •  ஜிமெயிலில் தேடும் பெட்டிக்கு அடுத்து Create Filter என்பதை அமுக்கி அதனுள் சென்றுவிடுங்கள்.
  • அந்தப் பக்கத்தில் From என்ற இடத்தில் athiraifarook@gmail.com என்ற முகவரியைக் கொடுத்துடுங்க.
  • மற்ற அனைத்தையும் காலியாக விட்டு next Step என்ற பட்டனை அமுக்குங்க.
  • Choose Action என்ற பகுதியில் Forward it to என்பதை தேர்வு செய்துவிட்டு athiraifarook@gmail.com என்ற முகவரியை அதற்கான பெட்டியில் அளித்துவிடுங்கள்.
  • அடுத்த வரியில் இருக்கும் delete it என்பதையும் தேர்வு செய்து பின்னர் கடைசி வரியில் இருக்கும் Also apply filter to X conversations below என்பதையும் தேர்வு செய்துவிடுங்கள். 
  • இப்போது Create Filter என்ற பட்டனை அமுக்குங்க.வேலை முடிந்தது.

இனி அவர் அனுப்பும் மெயில் உங்களுக்கு தெரியாமலே அவருக்கே சென்றுவிடும். நமக்கு வரதும் தெரியாது.. போறதும் தெரியாது. வரும் முன் காப்போம் திட்டப் படி இந்த மெயில் இன்னும் வராதவர்களும் இதை செய்துவிடலாம். எப்போதாவது அவர் அனுப்பினால் அது அவருக்கே சென்றுவிடும். இனி அவர் எத்தனை பேருக்கு அனுப்புகிறாரோ அத்தனை மெயில்கள் அவருக்கே சென்று குவியும். அண்ணன் ஆனந்தமடையட்டும்.. வாழ்க வளமுடன்.



இன்னும் ஒரு டெர்ரர் ஐடியா இருக்கு. அதை சொன்னால் நம் பாசக்கார பயலுக எனக்கே அதை செஞ்சிடுவாங்க. அதனால யாராச்சும் ரொம்ப அதிகமா பாதிக்கப் பட்டிருந்தா தனி மெயில் அனுப்புங்க. அதை சொல்றேன்.. :)

55 comments:

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

:)

கயல்விழி நடனம் said...

hmmmmmmmmmmmmm

ambi said...

:)))

Indian said...

:)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

முடிந்தது கதை!

வானம்பாடிகள் said...

என்ன சஞ்சய் வரிசையா டெர்ரர் பதிவா வருது:))

தாரணி பிரியா said...

அட நல்ல நல்ல பதிவா போடறீங்களே :) இப்படி சொல்லமா கொள்ளாம நல்லவன் ஆகிட்டா நாங்க எல்லாம் என்ன செய்யறது.

SanjaiGandhi™ said...

எச்சரிக்கை: ப்ளாண்ட் இஸ்லாம் என்று ஒரு கும்பல் புதிதாக கிளம்பி இருக்கிறது. planet.islam@gmail.com
அவர்களுக்கும் இந்த ஆப்பை பயன்படுத்தலாம். :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இதையே மற்ற மத பரப்புரையாளர்களுக்கும் பயன்படுத்தலாமா? கூடாதா?
:)
பதில் முக்கியம்!

SanjaiGandhi™ said...

//இதையே மற்ற மத பரப்புரையாளர்களுக்கும் பயன்படுத்தலாமா? கூடாதா?
:)
பதில் முக்கியம்!
//

இதென்ன சந்தேகம்.. எல்லாருக்கும் ”விதி” ஒன்று தான்.. :) அடிச்சி ஆடுங்க..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

SanjaiGandhi™ said...

//இதையே மற்ற மத பரப்புரையாளர்களுக்கும் பயன்படுத்தலாமா? கூடாதா?
:)
பதில் முக்கியம்!
//

இதென்ன சந்தேகம்.. எல்லாருக்கும் ”விதி” ஒன்று தான்.. :) அடிச்சி ஆடுங்க..//

அப்ப பொது சிவில் சட்டத்த ஆதரிக்கிறீர்களா?
:)
இதுக்கும் பதில் முக்கியம்!

Rekha said...

if he also do like u, d mails may be reached ur inbox again na.

SanjaiGandhi™ said...

ரேகா, அதுக்கு வாய்ப்பில்லை.. Fromல் அவர் ஐடி தானே இருக்கு.. அவரே அவருக்கு அனுப்பின மாதிரி தான் போகும்.. அதே ஐடில அதே மெயில் நமக்கு வரவே வராது..மேலும் 100 பேர் அவருக்கு பார்வர்ட் செய்வாங்க.. அவர் 100 பேருக்கும் பில்டர் போடுவாரா என்ன? :)

கபீஷ் said...

நீங்க பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கலயா

கபீஷ் said...

இந்த போஸ்ட், உங்க கட்சி கொள்கைப் படி மதச்சார்பின்மைக்கு எதிரானது.
அதனால் உடனடியாக பதிவை நீக்கி ஒரு மன்னிப்பு கோரும் பதிவிடவும்

செந்தழல் ரவி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நீயும் அவன்ல ஒருவனா ? அவ்வ்வ்...

பலமுறை தனிமடலில் நல்லவிதமாக எடுத்து சொல்லியும் இவன் திரும்ப திரும்ப அனுப்பறாண்டா..

நான் குல்லா போட்டு நோம்பு கஞ்சி குடிக்கறவரைக்கும் உடமாட்டான் போலருக்குன்னு நினைச்சேன்..

பதிவுக்கு நன்றிப்பா..

செந்தழல் ரவி said...

யூஸ் திஸ் ரூல் டு எக்ஸிஸ்டிங் கான்வர்சேஷன் என்பதை தெரிவு செய்யவும்..

அன்புடன் அருணா said...

அதாருப்பா "அதிரை ஃபரூக்??????????

ஜாகிர் said...

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது.

ஜாகிர் said...

அன்புடன் அருணா said...
அதாருப்பா "அதிரை ஃபரூக்??????????
கேக்க வச்சிட்டீர்களே

ஜாகிர் said...

http://www.onlinepj.com/books/ariviyal_sanrukal_2/
நண்பரே முடிந்தால் இதை படித்து விட்டு இதற்கு உங்களால் முடிந்தால் ஒரு ஆப்பு பதிவு போடுங்கள்.
மண்டையில் முடிமட்டும் தான் இல்லையா.இல்லை மூலையும் இல்லையா பார்போம்

~~Romeo~~ said...

இதுவரை எனக்கு வரல. சோ வரும் முன் காப்போம் :D

~~Romeo~~ said...
This comment has been removed by the author.
கார்த்திக் said...

தல கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டிங்குரார்
நேத்துகூட மெய்ல் பண்ணினார்
பதிலுக்கு விவேகானந்தர் தத்துவம் சாணக்கியன் சொல் இதெல்லம் கொஞ்சம் அனுப்பி வெச்சேன்.மனுசன் சோதிக்குரார் :-((

சந்தோஷ் = Santhosh said...

பிரதமரே,
சூப்பர்.. அருணா அவரு பிரபல பதிவருங்களுக்கு தான் மெயில் அனுப்புவாரு.. அதனால தான் உங்களுக்கும் எனக்குமெல்லாம் வரலை :)..

மாயவரத்தான்.... said...

மண்டையில 'மூலை'யா? அது என்ன மூலை? ஈசானி மூலையா?

SARFUDEEN said...

சகோதரர் அதிரைஃபாருக் அவர்கள் அழகாக ஆதாரத்துடன் எழுதக் கூடியவர். உங்களுக்கு முடியுமானால் அவருடைய ஆக்கங்களுக்கு நேர்மையுடன் அழகான முறையில் பதில் சொல்லலாம். எனெனில் நாம் வாழ்வது காட்டுமிராண்டி காலத்தில் அல்ல. நாகரீகமான இந்தக் காலத்தில் எதையுமே ஆராய்ச்சி செய்து அறிவுப் பூர்வமாக பதில் சொன்னால் நேர்மையாளர்கள், யாருடைய ஆக்கங்களாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். அதை செய்வதை விட்டுவிட்டு, படித்த படிப்பை இப்படி தவறான வழியில் செயல் படுத்துவது அறிவுப் பூர்வமாக இல்லை.

கார்த்திக் said...

சர்புதீன் சார்
நீங்க சொல்லுரது நியாம் தான் அது மதம் பத்தி விவாதிக்குரவங்ககிட்ட அவர் பேசலாம் ஆர்வம் இல்லாதவங்ககிட்ட ஏன்.
நான் பல தடவ சொல்லிட்டேன் அவர் கேக்குரமாதிரி தெரியல அதான் நானும் பதிலுக்கு மெய்ல் போட்டேன்

அவர் விவாதம் பண்ணனும்ன அதுக்குனு ஆள் இருக்காங்க அவங்ககிட்ட பண்ணசொல்லுங்க விவாதம் இதெல்லாம் வேண்டாமே :-))

SanjaiGandhi™ said...

முதலில் சர்ஃபுதீனுக்கு,
ஜாகிர் போல் அநாகரிகமாய் பேசாமல் நாகரிகமாய் பின்னூட்டமிட்டதுக்கு நன்றி. அதிரை ஃபரூக் என்று இல்லை, வேறு யார் இப்படி தொந்தரவு செய்தாலும் இதான் எதிர்வினை. யாரையும் மதம் பற்றி பேச வேண்டாம் என்றோ அவர்கள் மதத்தைப் பரப்ப வேண்டாம் என்றோ நான் சொன்னதில்லை. எனக்கு எந்த மதத்தின் மீதும் பற்றில்லை. அதிரை ஃப்ரூக் என்பவர் எவ்வளவு அழகாக ஆதாரபூர்வமாக வேண்டுமானாலும் எழுதட்டும். அதை பிறருக்கு அனுப்பட்டும். என் கவலை அதுவல்ல. எனக்கு இது போன்ற மத ரீதியிலான மெயில்கள் பிடிக்கவில்லை என்றும் தொடர்ந்து அனுப்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறேன். என்னைப் போலவே பலரும். அப்படி சொல்லியும் திரும்ப திரும்ப அனுப்புவதன் நோக்கம் என்ன? இதற்குப் பேர் தான் அழகாய் கருத்து சொல்வதா?. இது போல் நடந்துக் கொள்வது முஸ்லிமாக இருந்தாலும் கிருஸ்துவ , இந்துவாக இருந்தாலும் நான் இதை தான் செய்வேன். அதிரை ஃபரூக் என்ற பெயர் இருப்பதாலேயே இஸ்லாமியர்கள் இதற்கு வக்காலத்து வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரை நான் இஸ்லாமியராக பார்க்கவில்லை. ஒரு மதவெறியராகத்தான் பார்க்கிறேன். அதனால் தான் இந்தப் பதிவு.

முதல் பின்னூட்டம் யாரிடம் என்று பாருங்கள். அந்த சர்ஃபுதீனுக்கும் ஒரு பழக்கமுண்டு. புதுப் பதிவு போட்டால் நண்பர்களுக்கு மெயில் அனுப்பி தெரிவிப்பார். பலரும் இதை செய்கிறார்கள் என்றாலும் , சர்ஃபுதீன் மட்டும் கீழே ஒரு குறிப்பை எழுதி அனுப்புவார். இந்த மெயில் யாருக்காவது தொந்தரவாக இருந்தால் தெரிவிக்கவும். இனி உங்களுக்கு அனுப்ப மாட்டேன். மன்னிக்கவும் என்று அதில் இருக்கும். இத்தனைக்கும் அவ்ர் எழுதுவது மதரீதியிலான பதிவுகள் இல்லை.

ஆனால் இந்த அதிரை ஃபரூக் அவ்வாறு குறிப்பு அனுப்புவதும் இல்லை. நாம் வேண்டாம் என சொன்னாலும் நிறுத்துவதும் இல்லை. அவர் எந்த கல்வியை வைத்து என்னை இம்சிக்கிறாரோ அதே கல்வியை வைத்து அவருக்கு பாடம் புகட்ட வேண்டிய நிர்பந்தத்தை அவரே ஏற்படுத்தி இருக்கிறார். குற்றவாளி அவர் தான். நானில்லை. இனியும் இதை நீங்கள் எப்படி புரிந்துக் கொண்டாலும் எனக்கு கவலை இல்லை. கவலைப் படுவது என் வேலையும் இல்லை. நன்றி.

SanjaiGandhi™ said...

இப்போது ஜாகிருக்கு,

அட மதவெறி பிடிச்ச அரைலூசே, கழுதைக்கு கற்பூர வாசனைத் தெரிந்து அது என்ன செய்யப் போகிறது? கற்பூரக் கடையா வைக்கப் போகிறது?. மேலும் கழுதை மனிதருக்கு பலவகையிலும் உதவுகிறது. சமையத்தில் உதைக்கவும் செய்யும் என்பது இங்கு கூடுதல் தகவல் மட்டுமே. அதனால் என்னை உன்னைப் போல் பன்றியுடன் ஒப்பிடாமல் கழுதையுடன் ஒப்பிட்டமைக்கு நன்றிகள். :) ஆனால் பன்றிகள் தான் சகதியிலும் சாக்கடையிலும் மலத்திலும் உருண்டு பிரண்டு ஊரை நாறடிக்கும் உன்னை மாதிரி.

நீ கொடுத்திருக்கும் இணையதளத்தை எனக்கு முன் பின் தெரியாதது போல் சுட்டி கொடுத்திருக்கிறாயாக்கும். கிராதகா.. அதைப் போல் இன்னும் ஆயிரமாயிரம் இணைதளங்கள் இருக்கு. அவர்கள் கருத்தை அங்கே எழுதுகிறார்கள். பிடித்தவர்கள் படிக்கிறார்கள். பிடிக்காதவர்கள் ஒதுங்கிவிடுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் விவாதிக்கிறார்கள். அவர்கள் யாரும் விருப்பமில்லாதவனுக்கு மெயில் அனுப்பு டார்ச்சர் செய்வதில்லை. அப்படி இருக்கும் போது அவர்களை நான் ஏன் கண்டுக் கொள்ள வேண்டும் மூடனே.

உனக்கு இன்னும் காட்டமாக பதில் சொல்லத்தான் ஆசை. ஆனால் இங்கே பின்னூட்டமிட்டிருப்பவர்கள் முகம் சுளிக்கக் கூடாதென்று இதோடு விடுகிறேன்.. ஓடிப் போய்டு.. அடையாளம் இல்லாமல் ஒளிந்துக் கொண்டு கருத்து சொல்லும் கம்னாட்டிக்கே இவ்ளோ திமிரா?

SanjaiGandhi™ said...

நன்றி வெள்ளிநிலா வாத்தியாரே.. :)

நன்றி கயல்.. என்ன இது பெருமூச்சி? :)

நன்றி அம்பி

நன்றி இண்டியன்

எஞ்சாய் சதிஷ்குமார் :)

வானம்பாடிகள், என்ன பண்றது பாலா சார். பொது வாழ்க்கைக்கு வந்துட்டா மக்கள் நலனை பற்றியே சிந்திக்க வேண்டி இருக்கே.. ;)

நன்றி தாரணி அக்கா :)

நன்றி ஜோதி சார்.. பொது சிவில் சட்டத்துக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன தொடர்பு? :(

கபீஷ், ஒடம்பு எப்டி இருக்கு..

ரவி மாம்ஸ், டார்ச்சர் தாங்க முடியல..

அருணாக்கா, நீங்க அதிர்ஷ்டசாலி..

SanjaiGandhi™ said...

ரோமியோ, உஷாரா இருக்கிங்க போல..

கார்த்திக், இதை செய்ங்க.. உங்களுக்கு வராமல் அவருக்கே போய்டும்..

சந்தோஷ், சீக்ரமே அனுப்ப சொல்றேண்..:)

நன்றி மாயவரத்தான்.. லூஸ்ல விடுங்க.. :)

vaaalpaiyan said...

Innum enaku indha madhiri mails varala.. avaru ennamo kirukkan illai correctaana aalungala thedi pudichi dhaan mail anupuraaro nu thonudhu.. unakku venumdii..

வால்பையன் said...

அதிரை ஃபாருக் என் பதிவுகளை படித்து எனக்கு மெயில் அனுப்புவதை நிறுத்தி விட்டார்!

தயவுசெய்து குல்லா தோழர்கள் அவரிடம் சொல்லி எனக்கு மெயில் அனுப்ப சொல்லுங்கள், கூடவே பீ.ஜே.யிடமும் சொல்லி மெயில் அனுப்ப சொல்லுங்கள்!

உங்கள் டவுசரை கிழித்து தொங்க விட நான் ரெடி!

இன்னும் வேறு யார் இருந்தாலும் சரி, தாராளமா அனுப்பலாம், ஆனா நான் பதிவில் போட்டு கிழிக்கும் போது ஒழுங்கா வந்து பதில் சொல்லனும்,

ரெடி ஜூட்!

கும்க்கி said...

சஞ்சூஸ்..,

மிக்க நன்றி..

பாதிக்கப்பட்டவர்களில் நானும்..

ஜாகிர் said...

ஹஹஹஹஹ
ஐய்யோ,ஐய்யோ.கோப படாத தலை.யோசி,யோசி!!!!!!!.

அதிரைக்காரன் said...

சஞ்சய் அண்ணாச்சி,

அதிரை ஃபாருக் "கண்டவருக்கெல்லாம்' மெயில் அனுப்புவது தப்பு.ஃபாருக் என்பதற்குப் பதில் ஆயிஷா என்று இருந்தாலும் இதையே செய்வீர்களா?

இதையேதான்டா செய்வேன்னு சொன்னீங்கன்னா ஆயிஷா என்ற இடத்தில் ஆமினா அல்லது வேறு பெயர் வைத்து பதில் சொல்லுங்கள்.

டேய் எந்தப்பெயராக இருந்தாலும் இதையே தாண்டா செய்வேன்னு நீங்க சொன்னால் உங்களுக்கு வருன்காந்தி சிம்டம்ஸ் இருக்கக்கூடும்.;-(

ஜீமெயில் கொடுக்கற அளவற்ற மெயில் கொள்ளலவை நம்பி பலருக்கும் சகட்டுமேனிக்கு அனுப்புகிறார். எத்தனையோ என்லார்ஜ்மெண்ட் XXX மெயில்களும் வருகின்றன.அதோடு Knowledge என்லார்ஜ்மெண்ட்டாக அதையும் கருதி, பெரியமனசு பண்ணி
அவரை மன்னிச்சுடுங்க.

கோவி.கண்ணன் said...

ஜிமெயில் இன்பாக்ஸுக்கு வரும் வேண்டாத மெயில்களை ஸ்பேமாக திருப்பிவிட முடியும்.

SanjaiGandhi™ said...

vaalமச்சி, நீ ரொம்ப நல்லவன் தான்.. ஒத்துக்கிறேன்.. :)

வால், இவங்கன்னு இல்ல.. எல்லா மத வெறியர்களும் எப்டி விவாதிப்பாங்கன்னு தெரிஞ்சும் எதுக்கு கூப்டறிங்க.. டைம் வேஸ்ட் பாஸ்..

கும்கி, உங்கள மாதிரி நெறைய பேருங்க..

ஜாகிர், கோவப்படனும்னு எனக்கு எதும் வேண்டுதல் இல்லை.. உங்களோட மட்டமான கமெண்ட்க்கு இதை விட மட்டமா பேச முடியலையேன்னு வருத்தமா தான் இருக்கு..

அதிரைக்காரரே, நீங்கள் பின்னூட்டங்களை முழுமையாக சரியாக படிக்கவில்லை என நினைக்கிறேன்.. சர்ஃபுதீனுக்கு சொன்ன பதிலை ஒரு முறை படிச்சிடுங்க..

//இது போல் நடந்துக் கொள்வது முஸ்லிமாக இருந்தாலும் கிருஸ்துவ , இந்துவாக இருந்தாலும் நான் இதை தான் செய்வேன். அதிரை ஃபரூக் என்ற பெயர் இருப்பதாலேயே இஸ்லாமியர்கள் இதற்கு வக்காலத்து வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரை நான் இஸ்லாமியராக பார்க்கவில்லை. ஒரு மதவெறியராகத்தான் பார்க்கிறேன். அதனால் தான் இந்தப் பதிவு.//

என் பிரச்சனை பெயர் இல்லை.. அவர் செய்யும் விஷமத்தனம் தான்.. வேண்டாம் என்றால் விட்டுவிட வேண்டியது தானே..

கோவியாரே, அவர் முதலில் ஒரு ஐடியில் அனுப்பினார்.. பின்னர் 2 எழுத்துகள் மாற்றி இன்னொரு ஐடியில் அனுப்பினார்.. பின்னர் islamicplanet என்ற ஐடியில் இருந்தும் வருகிறது.. தினமும் Spamக்கு திருப்பி விட்டுட்டு இருக்கிறது தான் வேலையா? இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.. அனுப்ப வேண்டாம்னா நிறுத்த வேண்டியது தானே.. இப்போ யாருக்கு நஷ்டம்.. அவர் அனுப்பும் மெயில்கள் எல்லாம் அவருக்கே போகும்.. தேவையா இது?

SanjaiGandhi™ said...

//ஜீமெயில் கொடுக்கற அளவற்ற மெயில் கொள்ளலவை நம்பி பலருக்கும் சகட்டுமேனிக்கு அனுப்புகிறார். எத்தனையோ என்லார்ஜ்மெண்ட் XXX மெயில்களும் வருகின்றன.அதோடு Knowledge என்லார்ஜ்மெண்ட்டாக அதையும் கருதி, பெரியமனசு பண்ணி
அவரை மன்னிச்சுடுங்க. //

அதிரைக்காரரே, எனக்கு எந்த XXXமெயிலும் வருவதில்லை.. எனக்கு பல முக்கியமான பணிகளுக்கு மின்னஞ்சல் தேவைப்படுகிறது.. வீடு பெரிதாக இருப்பதால் நடு வீட்டில் உச்சா போக முடியாது.. எனக்கு மதவெறி மெயில்களும் XXX மெயில்களும் ஒன்று தான்..

நட்புடன் ஜமால் said...

நன்மையை ஏவி தீமையை தடு

என்று சொல்கின்றது இஸ்லாம்.

அதுக்காக இப்படியா,
இப்படி வண்டி வண்டியா மெயில் அனுபிச்சா கொஞ்ச நெஞ்சம் இருக்கும் இஸ்லாம் மீதான அபிமானமும் போய்டும், ஒரு வித வெறுப்பும் தோன்றும்.

இந்த இடுக்கையில் ஒருவரின் செயல் மட்டுமே வெறுப்புணர்வை உண்டாக்கி அதை தடுக்கும் செயலில் ஈடு பட செய்ய வைத்திருக்கின்றது, இதனால் ஏற்பட்ட மனக்கசப்புகள் தான் ஏராளம்.

இனியாவது அவரும் அவர் போன்றோரும் இப்படி செய்யாமல் இருத்தல் நலம்.

இஸ்லாம் என்பதை இப்படி கொண்டு சேர்க்க தேவையில்லை, அதை முழுமையாக ஏற்று கொண்டவர்கள் அங்கே சொல்லப்பட்டிருக்கும் கட்டளைகளை முழுமையாக பின்பற்றினாலே இஸ்லாம் மீதான துவேஷமும் தவறான புரிதல்களும் விலகிடும்.

தயவு செய்து இப்படி மெயில் அனுப்பி தொந்தரவுதை நிறுத்துங்கள்.

அதிரைக்காரன் said...

சஞ்சய்,

அதிரை ஃபாருக் அவர்கள் உங்களை எப்படியாவது சொர்க்கத்துக்கு அனுப்ப திட்டம் போட்டு செய்கிறார். :)

அவரை நேரில் பார்க்கமுடிஞ்சா உங்க சார்பில் நான் அவரிடம் கெஞ்சிக் கேட்டு அந்த முயற்சியை மறுபரிசீலனை செய்யச்சொல்வேன்.

எங்களூர் தளத்திலும் (http://adiraixpress.blogspot.com) ஓர் வேண்டுகோளை வைக்கிறோம். ஒக்கே!

வால்பையன் said...

//அதிரை ஃபாருக் அவர்கள் உங்களை எப்படியாவது சொர்க்கத்துக்கு அனுப்ப திட்டம் போட்டு செய்கிறார். :)//

சஞ்சய் அங்கிளுக்கு நித்தியகன்னிகைகள் வேணாமாம்!
நீங்களே வச்சுகோங்க, எங்களை ஆளைவிடுங்க என்கிறார்!

SanjaiGandhi™ said...

அதிரைக்காரரே, இப்போ நான் நரகத்துலையா இருக்கேன்? இன்னாத்துக்கு என்னை சொர்கத்துக்கு அனுப்பனும்?

வால் சொன்னது தான் என் பதிலும்.. :))

ரம்பா ஊர்வசி மேனகா மும்தாஜ் எல்லாம் நீங்களே வச்சிக்கோங்க.. நேக்கு வேணாம்.. :)

vaaalpaiyan said...

//ரம்பா ஊர்வசி மேனகா மும்தாஜ் //a??

unaku yaaru mail anupittu irukuraanga nu sonna?

ஜாகிர் said...

நண்பரே
நான் அனுப்பிய அந்த லிங்க் யாருடைய்ய லிங்க் என்று தங்களை பார்க்க சொல்லவில்லை அது ஒரு அறிவியல் சம்மந்த பட்ட புத்தகம்.அதில் உள்ள அறிவியல் உண்மையை பாருங்கள் என்று தான் நான் சொல்கிறேன்.
அடுத்த தாக நான் ஒளிந்து கொண்டும் உங்களுக்கு எழுத வில்லை நீங்கள் எப்படி சஞ்சய் என்ற பெயரில் எழுதுகிறீர்களோ அதேபோல நான் ஜாகிர் என்ற எனது பெயரில் தான் பின்னூட்டமிட்டேன்.
தாங்கள் ஒரு படித்தவர் எதையும் யோசித்துணர்வீர்கள் என்று நினைத்தேன்.
அந்த கழுதை விசயம் கூட நம் தமிழ் மொழியின் பழமொழியே தவிற தங்களை திட்ட வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை.
அதை ஏன் அவர் எனக்கு அனுப்ப வேண்டும் என்பது நியாயமான கேள்வி.
அதை ஏன் அவர் செய்தார் என்பது இப்போது உங்களுக்கு விளங்காது.உங்கள் பார்வையில் அதை சொன்னாலும் இப்போது புரியாது.
அடுத்து நான் செய்த தவறு என்னவெனில் தங்கள் தலையை விமர்சித்தது தான்.தங்கள் தலையை பற்றி கொஞ்சம் கூடுதல் தகவல் தெரிந்ததால் போட்டுவிட்டேன், அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

//வெள்ளிநிலா ஷர்புதீன் said...

:)

March 25, 2010 10:17 AM
Blogger கயல்விழி நடனம் said...

hmmmmmmmmmmmmm

March 25, 2010 10:46 AM
Blogger ambi said...

:)))

March 25, 2010 11:16 AM
Blogger Indian said...

:)///

சார் பஸ்ட்டு இவனுகளுக்கு அந்த மெயில் எல்லாம் திருப்பி விடுங்க , இவுக கமண்ட்ஸ பாரு

கார்த்திக் said...

தல என்ன செஞ்சும் மெய்ல்வர்ரது நிக்கல
பாருங்க நேத்தும் கூட அவர் மெய்ல அனுப்பியிருக்கார்

இனிமே அவர்கிட்ட சொல்லப்போரதில்லை நானும் அவருக்கு மெய்ல் அனுப்பப்போறேன்.

காரணம் எனக்கு அதிகமா யார் யார் மெய்ல அனுப்புராங்களோ அவங்களுக்கு நானும் மெய் பண்ணூரது வழக்கம்

நானும் இவருக்கு இனிமே அனுப்புவேண் :-))

மங்குனி அமைச்சர் said...

please visit to my blog

..:: Mãstän ::.. said...

ம்ம்ம்ம்ம்....

இமெயிலை பொதுப்படையாக கொடுப்பதினால் வரும் தொந்தரவுதாகள்தான் இவைகள்... இதற்காகவே மிகவும் மிகவும் தெரிந்தவர்களுக்காக ஒன்றும் மற்ற ஒன்று அனைவருக்காகவும்... ரெம்ப பர்சனலா இருக்கிறதை அதாவது கண்டிப்பா எல்லாத்தையும் பாக்கனும் என்று நினைப்பதை பொதுவாக கொடுக்காமல் இருப்பதே மிகவும் நல்லது.

நீங்கள் ஏன் இமெயில் கிளைன்ட் யூஸ் செய்ய கூடாது? மைக்ரோசாப்டே ஹாட்மெயில்க்காக லைவ் இமெயில் கிளைன்ட் கொடுக்கிறது... அது மிகவும் உபயோகமா இருக்கும்.

சஞ்சை, நீங்கள் பாருக்கிடன் முன்பே பேசி பார்த்திருக்கலாம்... தொடர்ந்து தொல்லை தறுவதும்... கொடுமையான ஒன்றுதான்...

சரி, பாருக் இல்லாட்டா வேற யாராவது, அனைத்து இமெயில் ஐடியும் இப்படி செய்ய முடியுமா??? வேறு வழி யோசிங்கள்...

SanjaiGandhi™ said...

மஸ்தான், இதெல்லாம் எனக்கு பிடிக்கலை.. வேண்டாம் என அவருக்கு மின்னஞ்சல் அனுப்பிய பின்னரே இதை செய்கிறேன்.. அது ஒரு சைக்கோ குழுவாகவே தெரிகிறது.. சுமார் 10 மின்னஞ்சல் முகவரிகளை வைத்திருக்கிறார்கள்.. தினம் ஒன்றில் வருகிறது.. நானும் செய்ய வேண்டியதை செய்து விட்டேன்.. :)

செல்வேந்திரன் said...

என்னா ஒரு வில்லத்தனம் :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

உனக்கு எப்படி மாமா இம்மா அறிவு வந்தது?

மங்களூர் சிவா said...

/
ஆதிமூலகிருஷ்ணன் said...

உனக்கு எப்படி மாமா இம்மா அறிவு வந்தது?
/

very nice question

repeattttttu
:)

செந்தழல் ரவி said...

அட மதவெறி பிடிச்ச அரைலூசே, கழுதைக்கு கற்பூர வாசனைத் தெரிந்து அது என்ன செய்யப் போகிறது? கற்பூரக் கடையா வைக்கப் போகிறது?. மேலும் கழுதை மனிதருக்கு பலவகையிலும் உதவுகிறது. சமையத்தில் உதைக்கவும் செய்யும் என்பது இங்கு கூடுதல் தகவல் மட்டுமே. அதனால் என்னை உன்னைப் போல் பன்றியுடன் ஒப்பிடாமல் கழுதையுடன் ஒப்பிட்டமைக்கு நன்றிகள். :) ஆனால் பன்றிகள் தான் சகதியிலும் சாக்கடையிலும் மலத்திலும் உருண்டு பிரண்டு ஊரை நாறடிக்கும் உன்னை மாதிரி.

நீ கொடுத்திருக்கும் இணையதளத்தை எனக்கு முன் பின் தெரியாதது போல் சுட்டி கொடுத்திருக்கிறாயாக்கும்.

கிராதகா..

இந்த கடைசி வார்த்தையை படித்தவுடன் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டேன்...!!

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget