April 9, 2010

IYC- ஒரு மாற்றத்தின் ஆரம்பம் -1


மாலை 6.05 மணி. கண்கள் முழுதும் நம்பிக்கையுடனும் எதிர்கால இந்தியா பற்றிய கனவுகளுடனும் ஒரு தகுதியான தலைவர் கிடைத்த சந்தோஷத்துடனும் அந்த உயரதிகாரியின் வீட்டில் நுழைகிறார்கள் சில இளைஞர்கள். இன்முகத்துடன் கூடிய வரவேற்பிலும் உபசரிப்பிலும் திக்குமுக்காடிப் போகிறார்கள்.

அடுத்து என்ன? . வந்த வேலையை கவனிக்க வேண்டியது தான் என்றெண்ணி பேச முற்படுகையில் ,

“ சரி, நீங்கள் புறப்படலாம்” என்ற வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிடுகிறார்கள் அந்த இளைஞர்கள். காரணம் புரியாமல் தவித்தவர்களிடம் அந்த உயரதிகாரியே தொடர்கிறார். “ நான் சரியாக 6 மணிக்கு வர சொன்னேன். உங்களுக்கு வேண்டுமானால் 5 நிமிடம் என்பது சாதாரனமாக இருக்கலாம். எனக்கு மிக முக்கியமானது. என்னால் உங்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது”.

எதுவும் அவரிடம் பேச முடியவில்லை. தங்கள் தலைவரிடம் என்ன சொல்வதென புரியாமல் வெளியேறுகிறார்கள். அலுவலகம் வந்து நடந்தவற்றை சொல்கிறார்கள். உடனே அந்த உயரதிகாரிக்கு தொலைபேசி அழைப்பு செல்கிறது.

“ மாலை வணக்கம் சார். நான் ராகுல்காந்தி பேசுகிறேன். எங்கள் இளைஞர்கள் செய்த தவறுக்கு வருந்துகிறேன். உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு மன்னிக்கவும்”.

அவ்வளவு தான் முடிந்தது. இனி வேறு வழிகளை பார்க்க வேண்டும். ஒரு பெரும் ஜனநாயகப் புரட்சியின் ஆரம்பம் இவ்வளவு மோசமாக உடனே முடிவுக்கு வரும் என ராகுல்காந்தி எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் இதை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவருக்கு உடன்பாடு இல்லை. எப்படியும் நடத்தியே முடிக்க வேண்டும். தன் அணியுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் வந்தது அந்த தொலைபேசி அழைப்பு.
“வணக்கம் மிஸ்டர் ராகுல்காந்தி. நான் KJ.ராவ் . உங்களுடன் பணியாற்ற முடிவு செய்திருக்கிறேன். சந்திக்கலாம்”. எதோ ஒன்று அந்த உயரிதிகாரியின் மனதை மாற்றி இருந்தது. தன் அணியினரின் தாமதத்ததிற்கு மன்னிப்புக் கேட்ட ராகுல்காந்தியின் பண்பாடும் ஒரு ஜனநாயக புரட்சியை நடத்திக் காட்டுவதென்ற ஆர்வமும் தவிர வேறு எதுவும் இருக்காது.

2008ஆம் ஆண்டின் ஒரு சுப தினத்தில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளருமான ராகுல்காந்தியும் முன்னாள் தேர்தல் ஆணையரும் FAME(Foundation for Advanced Management of Elections) அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவருமான திரு கேஜே ராவ் அவர்களும் சந்திக்கிறார்கள். ராகுல்காந்தி தன் லட்சியத்தை முழுமையாக விவரிக்கிறார். அதன் முக்கிய அம்சங்கள்.

  •  இந்தியாவின் மனித வளத்தில் 70 சதவீதமாக உள்ள 35 வயதிற்குள் இருக்கும் இளைஞர்களில் ஏராளமானோரை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும்.
  •  புதுமையாகவும் நேர்மையாகவும் சிந்தித்து வேகமாக செயல்படும் அவர்களின் உழைப்பில் இந்தியாவின் வளர்ச்சி மிக வேகமானதாக இருக்க வேண்டும்.
  • அரசியலை நம்பிக்கையானதாக மாற்ற வேண்டும். அதற்கான, அமைப்பை வெளிப்படையானதாகவும் ஜனநாயகப் பூர்வமானதுமாக மாற்ற வேண்டும்.
  • சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அரசியலில் அங்கீகரம் கிடைக்க வேண்டும்.
  • சாதி, மதம், பொருளாதாரம் போன்றவற்றை எல்லாம் கடந்து யாருக்கும் அரசியலில் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக இளைஞர் காங்கிரசின் உறுப்பினர் சேர்க்கையும் தேர்தலும் நடைபெற வேண்டும். இதில் உங்கள் உதவி வேண்டும்.ராகுல் மனதில் இருந்ததை இறக்கிவைத்துவிட்டார்.

சிறிது நேர யோசனைக்குப் பின் ராவ் ஒரே வரியில் தன் பதிலை சொல்லிவிட்டார்.
“சரி. செய்துவிடலாம். ஒரே நிபந்தனை. இதற்கான அனைத்து அம்சங்களையும் FAME தான் தீமானிக்கும். FAME எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்க வேண்டும்”.

சிறிதும் யோசிக்கவில்லை ராகுல் “ காங்கிரஸ் கட்சி எந்த சூழ்நிலையிலும் இதில் தலையிடாது. உங்கள் தேவைகள் பூர்த்தி செய்வது மட்டுமே எங்கள் வேலையாக இருக்கும். வேறு தலையீடுகள் இருக்காது

அவ்வளவு தான்.. சர சரவென வேலைகள் ஆரம்பிக்கப் படுகின்றன.
* IYC - Indian Youth Congress
* FAME  Foundation for Advanced Management of Elections 
மாற்றம் தொடரும்...

9 comments:

என்.ஆர்.சிபி said...

அட! நல்லா இருக்கே!

தம்பி.... said...

ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது, சுய நல கிழட்டு அரசியல்வாதிகளின் கொட்டம் இனியாவது முடிவுக்கு வரட்டும், எதிர்கால வல்லரசு இந்தியாவை ராகுல் , இளைய இரத்தங்களோடு இணைந்து வெற்றிகரமாக வழிநடத்துவார் என நம்பலாம்

Robin said...

Good one!

SanjaiGandhi™ said...

நன்றி சிபி..

மிக்க நன்றி தம்பி..

நன்றி ராபின்..

ராகுலின் வெற்றிப் பயணம் தொடரும்.. அடுத்த பாகம்.. திங்கள் வரும்.. :)

*இயற்கை ராஜி* said...

ம்ம்.. நடக்கட்டும். நடக்கட்டும்

SanjaiGandhi™ said...

நன்றி ராஜி

periyar said...

எல்லாம் சரி தான் சஞசய்.இப்பேற்பட்ட ராஹுல், ஏன் ஒரு போன் போட்டு இந்த அயோக்யர்களான, மதுரை எரித்த மாவீரன்,ஸ்பெக்ட்ரம் கிங் போன்ற கேவலமான மந்திரிகளை அவங்க ஊருக்கே பார்சல் செய்திருக்கக் கூடாது.இப்படி ஜால்ரா போட்டே ராஹுலை இங்கு இறக்குமதி செய்ய முடியும் என்று நம்புகிறீர்களா?தன்னுடைய கன்ட்ரோலுக்கு உட்பட்ட நல்ல காரியங்களையே செய்ய முடியாத.செய்யத் துணியாத இவரை ஏன் இந்த ரேஞ்சுக்கு தூக்கி வைக்கிறீர்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது.

ஆனால் ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும்.காங்கிரசில் இருக்கும் திக் விஜய் சிங்,மணி சங்கர் அய்யர், போன்ற ஒன்றுக்கும் உதவாத கிழபோல்டுக்க்களை விட ராஹுல் ஒரு நேர்மையானவராக,கண்ணியம்மிக்கவராக காட்சி அளிக்கிறார் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.நம்ம ஊரிலும் இருக்கிறதே;சோழ மன்னன் போட்ட அரை டஜன் குட்டிகளில் (லெஜிடிமேட்/இல்லெஜிடிமேட் உட்பட)ஒன்றாவது உருப்படியாக இருக்கிறதா?மானம் போகிறது.

SanjaiGandhi™ said...

பெரியார்( இந்தப் பெயரை வைத்துக் கொண்டு ஏன் அடையாளம் இல்லாம வரிங்க? )

ராகுல் தன் செல்வாக்கை எப்போதும் தவறாகப் பயன்படுத்தியது இல்லை. நீங்கள் சொல்பவர்கள் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பிரதமர், ஜனாதிபதி மற்றும் அவர்களின் தலைவருக்கு தான் அதிகம் உண்டு. ராகுல் சாதாரன எம்பி மட்டுமே. அவர் எல்லை அவருக்குத் தெரியும்.

அவருக்கு ஜால்றா போட வேண்டிய கட்டாயம் எனக்கு எப்போதும் இல்லை. அவருக்கு ஜால்றா போடுபவர்களை சுத்தமாக பிடிக்காது. அவர் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளில் உடன் கலந்துக் கொள்பவர்களை கவனித்தாலே இது புரியும். மேலும், ராகுல் பொறுப்பேற்றிருக்கும் இளைஞர் காங்கிரசின் உறுப்பினர் என்ற வகையிலும் உரிமையிலும் அவரை ஆதரிப்பது என் விருப்பமான செயல்.. நீங்கள் குறிபிட்டிருக்கும் திக்விஜய்சிங் மற்றும் மணிசங்கர் ஐயர் இருவருமே திறமைசாலிகள். பெட்ரோலியத் துறை மணி சங்கரிடம் இருந்த போது சர்வதேச அளவில் விலை உயர்ந்தும் இங்கு விலை உயர்த்தாமலே சமாளித்தார். எதிர்கால சவால்களை அறிந்து சமாளிக்கும் குழுவின் தலைவராக இருப்பவர் திக்விஜய்சிங்.

SanjaiGandhi™ said...

இந்தத் தொடர், இளைஞர் காங்கிரசின் தேர்தலையும் அது தொடர்பான ராகுலின் செயல்பாடுகளையும் பொதுவில் வைப்பதற்காகவே எழுதப் படுகிறது. தயவு செய்து அதை ஒட்டியே விவாதிக்கவும்.. திசை திருப்பும் அரசியல் வேண்டாம். நன்றி..

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget