April 12, 2010

IYC- ஒரு மாற்றத்தின் ஆரம்பம் -2

முந்தைய பகுதி - [Part1]

ஏன் இளைஞர்களை நோக்கி?

இன்றைய வேகமான நவீன யுகத்தில் பழைய சித்தாந்தங்களையே கடைபிடித்துக் கொண்டிருந்தால் இந்தியா பின்தங்கிவிடும். சீர்திருத்தங்களை மேற்கொள்ள புதுமையான திட்டங்களை இப்போதுள்ள மூத்தத் தலைவர்களிடம் சொல்லி செயல்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பெரும்பாலும் எல்லாவற்றுக்கும் முட்டுக் கட்டை, செயலுக்கு உதவாத அறிவுரைகள், கால தாமதம் என அவர்களால் முடிந்த வரை தடைபோடுவார்கள். ஆண்டுக்கணக்கில் அவர்களுக்குப் புரியவைத்து புதுமைகளை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதை விட , மாற்றங்களை உடனே ஏற்கும் பக்குவமுள்ள இளைஞர்களை அரசியலுக்கு அழைந்து வந்து அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க செய்தால், அரசியல் பெருமளவு நேர்மையாகவும் , சுறுசுறுப்பானதாகவும், சீர்திருத்தவாதிகளின் கூடாரமாகவும் மாறும். உலகில் எந்த தேசத்துக்குமே கிடைக்காத சொத்தான , மக்கள் தொகையில் 70% இளைஞர்களைக் கொண்ட ஒரு தேசத்தில் இளைஞர்களில் ஆதிக்கத்தால் மாற்றம் என்பது சாத்தியமே. எனவே , ராகுல்காந்தி இளைஞர்களை நோக்கித் தன் பயணத்தை ஆரம்பித்தார்.

ராகுல்காந்தியின், இந்தியாவை அறிந்துக்கொள்ளும் (Discover India) சுற்றுப் பயணத்தின் அங்கமாக பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடல். அப்போது ஒரு மாணவர் குழு ராகுலிடம் ஒரு கேள்வி கேட்டது.

“ ஏன் இதுவரை ஒரு முஸ்லிம் இந்தியாவின் பிரதமர் ஆகவில்லை?”

இந்தியாவில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப் படுவதாகவும் அதனால் தான் ஒரு சில முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதம் நோக்கி செல்கிறார்கள் எனவும் பரவலாக பேசப்படும் ஒரு தேசத்தில் இந்தக் கேள்வியும் இதற்கான பதிலும் மிக முக்கியமானதே. கேள்வி வந்துவிட்டது.. பதில்?

ராகுல் பதில் சொல்லவில்லை. அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்களுக்குத் தெரிந்த 5 இளம் முஸ்லிம் தலைவர்கள் பெயரை சொல்லுங்கள்”
சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு மாணவர் காங்கிரஸ் தலைவர்களுல் ஒருவரான சல்மான் குர்ஷித் பெயரை சொல்கிறார்.

அவர் பார்க்க இளமையாக இருந்தாலும் அவருக்கு வயது அதிகம்” என சிரிக்கிறார் ராகுல்காந்தி. இன்னொரு மாணவர் காஷ்மிர் முதல்வர் ஓமர் அப்துல்லாவை சொல்கிறார்.

“அவர் இளைஞர்தான். ஆனால் அவரும் என்னைப் போலவே அரசியல் குடும்பத்து வாரிசுதானே. வேறு யாரும் இருக்கிறார்களா?” என்கிறார் ராகுல்.

வேறு யாரும் அவர்களுக்குத் தெரியவில்லை. உடனே ராகுல் சொன்னார். “அதனால் தான் உங்களைப் போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என அழைக்கிறேன்.” தற்போதைய பிரதமர் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதையும் அவர்களுக்கு நினைவுபடுத்தி சென்றார்.

சஞ்சய்காந்தி காலத்தில் மிக வலிமையான இயக்கமாக இளைஞர் காங்கிரஸ் செயல்பட்டது. இன்று காங்கிரசில் இருக்கும் பல மூத்தத் தலைவர்களும் சஞ்சய்காந்தி காலத்தில் இளைஞர் காங்கிரசில் தீவிரமாக பணியாற்றியவர்கள். அதில் பலரும் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் தங்கள் செயல்பாட்டால் முன்னுக்கு வந்தவர்கள். அவருக்குப் பின் ராஜிவ்காந்தியின் பொறுப்பில் ஓரளவு நன்றாக செயல்பட்டது. ராஜிவுக்குப் பின் இளைஞர் காங்கிரஸின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. அந்தந்த மாநிலத் தலைமை தங்களுக்கு வேண்டியவர்களை நிர்வாகிகளாக நியமித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களில் பலரும் அந்தந்தப் பகுதியில் செல்வாக்குள்ள தலைவரின் வாரிசாக இருப்பார்கள். சாதாரன தொண்டர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிக அரிதாகவே இருந்தது. அதிலும் தலித், சிறுபான்மை இனம் மற்றும் பெண்கள் சார்பில் மிக அரிதானவர்களே நியமிக்கப் பட்டிருந்தார்கள். இவர்களின் செயல்பாடு என்று பார்த்தால் பத்தில் இருவர் தான் செயல்திறம் மிக்கவர்களாக இருந்தார்கள்.

இந்திய இளைஞர் காங்கிரசின் பொது செயலாளர் மற்றும் தேர்தல் குழு தலைவர் பதவி வரை உயர்ந்து MPஆன மாணிக்கத் தாகூர், கட்சியில் செயலாளராக உள்ள மத்திய பிரதேஷில் வசிக்கும் தமிழச்சி மீனாட்சிMP மற்றும் கரூரை சேர்ந்த தேசிய செயலாளர் ஜோதிமணி போன்ற சிலர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களுக்கான அங்கீகாரத்தையும் பெற்றார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் இருந்தும் சிலர் மட்டுமே சிறப்பாக செயல்படுவதென்பது பெருமைப் படும் விஷயமில்லை. இது தொடர்ந்தால் இப்போதைய முன்னணித் தலைவர்களுக்குப் பின் காங்கிரசை வழி நடந்த சரியான தலைவர்கள் கிடைக்க மாட்டார்கள். அனைத்து பிரிவினருக்கும் அரசியல் அங்கீகாரம் கிடைக்காமலும் போகும். அலிகார் பல்கலைக் கழக மாணவர்களைப் போல் தொடர்ந்துக் கேள்விகள் வந்துக் கொண்டே இருக்கும். இதை எல்லாம் மாற்றி அனைத்துப் பிரிவையும் சேர்ந்த திறமையுள்ள இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவர வேண்டும். எதிர்காலத் தலைவர்களாக அவர்களை உறுவாக்க வேண்டும்.

இந்த சூழலில் தான் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரசின் பொறுப்பாளராவும் நியமிக்கப் பட்டார். இளைஞர் காங்கிரசின் மொத்த அமைப்பையும் ஆராய்ந்தார். அதில் வாரிசுகள் மற்றும் இளமையைக் கடந்தவர்களின் ஆதிக்கத்தையும் தலித், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பங்கு மிகக் குறைவாக இருப்பதையும் கண்டு அதிருப்தி அடைகிறார். மக்கள் பிரச்சனைக்கான போராட்டம், பேரணி என பெரிதாக எதுவும் செய்யாத ஒரு அமைப்பு எதற்கு?. அனைத்துப் பிரிவினரும் பங்கு கொள்ளாத ஒரு அமைப்பால் இவ்வளவு பெரிய தேசத்தில் என்ன பெரிய பயன்?. இதை எல்லாம் மாற்ற வேண்டும். ஏராளமான இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க செய்ய வேண்டும். இதற்கு ஒரே வழி இளைஞர் காங்கிரசை பலப்படுத்துவது தான். இதில் ஏராளமான இளைஞர்களை புதிதாக சேர்க்க வேண்டும். அவர்கள் நிச்சயம் இளைஞர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கானத் தலைவர்களை அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.

தங்கள் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என தைரியமாக வெளிப்படையாக அறிவித்த ஒரே அரசியல் தலைவர் ராகுல்காந்தி மட்டுமே. காங்கிரஸ், பிஜேபி போன்ற எந்தக் கட்சியிலும் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று சொல்லி ஒரு பெரும் தேசிய அளவிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். (ராகுலில் வெளிப்படையான செயல்பாட்டில் பீதி அடைந்த அப்போதைய பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங், ராகுலை ”சின்ன பையன். அவரைப் பார்த்து தாங்கள் கவலைப் படவில்லை” என்றார். ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதைப் பற்றி ராகுலிடம் கேட்ட போது “ அவர் ஒரு மூத்தத் தலைவர். அனுபவசாலி. அவருடன் ஒப்பிட்டால் நான் சின்னப் பையன் தானே..” என்றார் வழக்கம் போல் சிரித்துக் கொண்டே.)

எனவே உறுப்பினர் சேர்க்கையும் தேர்தலும் மிக மிக ெளிப்படையானதாகவும் ஜனநாயகப் பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். முன்பைப் போல் சிபாரிசில் உறுப்பினராவதோ சிபாரிசில் பதவியயைப் பெறுவதோ கூடாது. விருப்பமுள்ள யார் வேண்டும்னாலும் உறுப்பினர் ஆகலாம். உறுப்பினர் படிவத்திற்காக கட்சி அலுவலகங்களில் அலையவும் வேண்டாம். இணையத்தில் கிடைக்கும் படிவத்தை நிரப்பினாலே போதுமானதாக இருக்க வேண்டும். இதை எல்லாம் ஒரு தனியார் அமைப்பின் வசம் ஒப்படைக்க வேண்டும். கட்சியின் குறுக்கீடு இருக்கக் கூடாது. எனவே தான் முன்னாள் தேர்தல் ஆணையர்களால் நடத்தப் படும் FAME அமைப்பினரிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்க விரும்பினார் ராகுல்காந்தி.

மாற்றம் தொடரும்..


11 comments:

மயில் said...

இன்னும் தெளிவா சொல்லுங்க, அதாவது தனித்தனி பிரிவு இருக்குமே அதைப்பற்றியும், செயல்பாடுகள் பற்றியும்.

Robin said...

ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய செல்லுமிடமெல்லாம் காங்கிரசிற்கு தோல்விதான் என்று எதிர்கட்சியினர் நையாண்டி செய்த காலம் ஒன்றுண்டு. உத்தர பிரதேசத்தில் காங்கிரசின் மகத்தான வெற்றிக்கு பிறகு கேலி செய்தவர்கள் ராகுலை பார்த்து பயப்பட ஆரம்பித்துவிட்டனர். ராஜிவிற்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப சரியான தலைவர் இல்லை, ராகுலின் செயல்பாடுகளை பார்க்கும்போது விரைவில் அந்த இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கலாம்.

Yuva said...

I just visited here and will post my detailed comment once go though them. At first look, seems to be nice writing and posts.

அன்புடன் அருணா said...

ஒரு மாற்றத்தின் ஆரம்பம் நல்லதாகவே தெரிகிறது.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)))

SanjaiGandhi™ said...

இந்த தொடர் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பற்றி மட்டுமே விஜி.. இன்னொரு நாள் மத்தது பற்றி எல்லாம் எழுதறேன்..

ராபின் நன்றி.. ராகுல் நிர்பந்தத்தால் தான் அரசியலுக்கு வந்தார்.. விருப்பத்தால் அல்ல. பின்னர் அதை சிறப்பாக செய்ய தொடங்கிவிட்டார்.. அவர் அரசியலுக்கு வந்த காலகட்டத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அவர் பிரச்சாரம் செய்த ஒரே காரணத்திகாகவே அதன் தோல்விக்கு அவரை காரணமாக்கி விட்டார்கள். அப்போ வேட்பாளர் தேர்வு உட்பட எதிலுமே அவர் பங்களிப்பு இல்லை.. உபி தேர்தலில் தான் அனைத்து பொறுப்பையும் தானே எடுத்துக் கொண்டு உழைத்தார். அமோக வெற்றி பெற்றார். முலாயமின் மகன் அகிலேஷ் வெற்றி பெற்ற தொகுதியை சில வாரங்களில் காங்கிரஸ் வசமாக்கியது ராகுலின் பெரும் சாதனை.

நன்றி யுவா.. உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

நன்றி அருணாக்கா

எப்போ வேணாலும் வாங்க சங்கர் :)

எதுக்கு இம்புட்டு பெரிய சிரிப்பு ஜோதி சார்? வலிக்காத மாதிரியே எம்புட்டு நாள் தான் நடிப்பிங்கன்னு பார்க்கிறேன்.. :))

கே.ஆர்.பி.செந்தில் said...

நல்லா எழுதுறீங்க தம்பி, மொத்தத்தையும் படிச்சுட்டு அப்புறம் மெயில் பண்றேன்

ஷர்புதீன் said...

:)

அன்புடன் மலிக்கா said...

மிக அழகாய் தெளிவாய் எழுதியிருக்கீங்க.மாற்றங்களுக்காக காத்திருப்போரில் ஒருத்தியாய்..

Krithick said...

good work daa... :) _ Annan

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget