April 7, 2010

M.S உதய மூர்த்தி



முன்குறிப்பு: என்னுடைய பழைய பதிவில் போட்ட இடுகை. மீள்பதிவு செய்கிறேன், மாற்றம் இல்லாமல்.
எனக்கு நிறைய தலைவர்களைப் பிடிக்கும், ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு காரணத்துக்காக. அதுல ஒவ்வொருத்தர பத்தியும், அப்பப்போ எழுதலாம்னு நினைக்கிறேன்.நான் இத எழுதறதுக்காக எந்த வாழ்க்கை வரலாறு புத்தகத்தையும் படிக்கல. அவங்களப் பத்தி எனக்குத் தோணறத முன்னாடி படிச்ச ஞாபகத்த வச்சு எழுதப் போறேன்முதல்ல இன்னிக்கு டாக்டர் எம் எஸ் உதய மூர்த்தி( நிறுவனர், தலைவர், மக்கள் சக்தி இயக்கம்) பத்தி எனக்கு தோணறத எழுதறேன்.


அனேகம் பேருக்கு இவரைப் பத்தி தெரிஞ்சிருக்கும், இருந்தாலும் எழுதறேன்.தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.(மயிலாடுதுறையின்னு நினைக்கறேன்) அடிப்படையில் கெமிக்கல் இஞ்சினீயர்படிச்சது, எம்எஸ், பிஹெச்டி(விஸ்கான்சின் பல்கலைக்கழகம், அமெரிக்கா)பல வருடங்கள் அமெரிக்காவில் கெமிக்கல் துறையில் வேலை பாத்துட்டு அப்புறமா அங்கேயே, அதே துறையில் தொழிலும் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தினார். அமெரிக்காவில் தொழில்,பொருளாதார டைரக்டரியான ஹு இஸ் ஹு -ல் 1987-ல் இடம் பெற்றார்இது பெரிய விஷயம்னு நினைக்கறேன்.அப்புறமா இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆயிட்டார். நதிநீர் இணைப்புக்காக, அதுல நிபுணத்துவம் இருக்கற அறிஞர்களோட சேர்ந்து நல்ல திட்டம் எல்லாம் போட்டு நிறைய முயற்சி பண்ணினார். அது ஏன் நடக்கலன்னு நமக்குத்தான் தெரியுமேஇவர் நிறைய நடைமுறையில் கடைபிடிக்க முடியற சுய முன்னேற்ற புத்தகங்கள் எழுதியிருக்கார். அதுல எண்ணங்கள் ன்ற புத்தகம் நிறைய பேருக்கு பரிச்சயமாயிருக்கும்னு நினைக்கறேன். அந்த புத்தகம் சில பல்கலைகழகங்கள்ல பாடபுத்தகமா இருக்கு. நம்மோட எண்ணங்கள் தான் நம்மோட வாழ்வை நிர்ணயிக்குதுன்னு அதாவது நாம எதை நினைக்கறோமா அதுவா ஆகுறோம்னு நம்புறவர், அவரது புத்தகத்தை படித்த சென்ற தலைமுறை இளைஞர்களை நம்ப வைத்தவர்.


அவர் எழுதனதுல எனக்குப் பிடிச்ச ஒரு புத்தகத்தில (பேரு ஞாபகமில்ல), நாம ஏன் ஜப்பான் மாதிரி பொருளாதாரத்துல வளரல்லுன்னு நம்ம மக்களோட Attitude, ஐயும், ஜப்பானியர்களோட Attitude ஐயும் ஒப்பிட்டு ரொம்ப அருமையா எழுதியிருப்பார்நம்மால் முடியும் தம்பி! நம்பு, இன்னொரு புத்தகம் இவர மாதிரியா வச்சுதான் பாலசந்தர் உன்னால் முடியும் தம்பி படம் எடுத்தார்.நிறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கும் இவர் ஒரு சிறந்த இயற்கை ஆர்வலர், சுற்றுச் சூழ்நிலையியல்வாதின்னு இவர் மக்கள் சக்தி இயக்கம்-னு ஒரு இயக்கத்தைத் தொடங்கினார்

நம்ம நாட்டோட முன்னேற்றம் கிராமப்புறத்திலருந்து தொடங்கணும்னு கிராம வேள்வி(Village Rejuvenation) அப்படின்ற பேருல ஒருங்கிணைந்த கிராம பொருளாதார திட்டத்தை உருவாக்கி, செயல் படுத்திக்கொண்டிருக்கிறார்.2003-ல தமிழ்நாடு முழுவதும் 200 கிளைகள், 3000 உறுப்பினர்கள் இருந்தாங்க.சில/ பல வருஷங்களுக்கு முன்னாடி இந்த இயக்கத்தைச் சேந்தவங்க தேர்தல்ல போட்டியிட்டாங்க. அந்த கட்சியில இருக்கற/இருந்தவங்க சமூகத்துல நல்ல நிலைமையிலுள்ள, பொறுப்பான மக்கள். நல்ல நிலைமைன்னு நான் சொல்றது பொருளாதாரத்தை அடிப்படையா வச்சு இல்லநாம பொதுவா நல்லவங்க அரசியலுக்கு வரதில்ல அதான் நாடு இப்படி இருக்குன்னு சொல்லுவோம்.ஆனா இந்த இயக்கம் தேர்தல்ல வெற்றி பெறவில்லை( எனக்குத் தெரிந்த வரை) .

இந்த இயக்கத்தோட அலுவலக முகவரி
ப. எண் 17-A, சௌத் அவென்யூ,காமராஜ் நகர்,திருவான்மியூர்சென்னை600 041 ,தொலைபேசி: 24421810
மக்கள் சக்தி இயக்கத்தோட ஸ்லோகன்
Together We Can!
Mission : Bring out the needed change in the society by changing the way people think ('As a man thinketh so is he')
Message to individuals :1- Self Development: Enrich your Mental Power, values in life, creativity, leadership qualities.
2- Economic Self Reliance: Enrich your economic and material status
3- Social Service: Get involved in society's growth, progress and emancipation


எனக்கு ஏன் அவர பிடிக்கும்னா, வெளிநாட்டுல தொழில் தொடங்க அவருக்கு இருந்த ம்ன திடம். இது ஒரு காரணமான்னு நினைச்சா, கேளுங்க, பதில் சொல்றேன். அவரு எந்த தொழில் தொடங்கணும்னு நினைச்சாரோ அதிலேயே தொழில் கத்துக்க தேவையான வருஷங்கள் வேலை பாத்துட்டு, அப்புறம் தொழில் தொடங்கி அதுல வெற்றிகரமான தொழில் அதிபரானது. அப்புறமா அமெரிக்காவில sophisticated வாழ்க்கை வாழ்ந்துட்டு, நம்ம நாட்டுக்கு வந்து தன்னால முடிஞ்சத மத்தவங்களோட சேந்து செய்யணும்னு நினைச்ச, எந்த விளம்பரமும் இல்லாம செய்துட்டு இருக்கற அந்த நல்ல மனசு. அப்புறம் நம்ம நாட்டோட அரசியல் தெரிஞ்சும், தேர்தல்ல மக்கள் சக்தி இயக்கம் போட்டியிட்ட துணிச்சல். அப்புறம், உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச தலைவர மறக்காம சொல்லுங்க
பி.கு: உங்களுக்குத் தெரியாதது எதுவும் எழுதியிருக்க மாட்டேன். தமிழ் புத்தகம் படித்து பழக்கமில்லாத இந்தக்கால சின்ன பசங்களுக்கு ஒரு வேளை இது ஓர் அறிமுகமாக இருக்கலாம்.

24 comments:

என்.ஆர்.சிபி said...

நான் இவரை நாமக்கல்லில் பார்த்திருக்கிறேன்!

எண்ணங்களின் வலிமை ன்னு புத்தகம் கூட எழுதி இருக்காரு!

கிரேட் மேன்!

Bharath said...

//தமிழ் புத்தகம் படித்து பழக்கமில்லாத இந்தக்கால சின்ன பசங்களுக்கு ஒரு வேளை இது ஒரு அறிமுகமாக இருக்கலாம்.//

Very True. He is definitely a role model

மயில் said...

சஞ்சய் ஒரு முனை, நீ ஒரு முனை.. :)) இனிமேல் இதில் மொக்கையே வராதா :((

SK said...

இவரோட ஒரு புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன். அதுல பல உதாரணங்கள் வெளிநாடு அரசியல் தலைவர்களை வெச்சு கொடுத்து இருந்தார். அதுனால என்னால நிறையா புரிஞ்சுக்க முடியலை. அதாவது நினைவு வெச்சுக்க முடியலை. திரும்ப ஒரு முறை படித்தால் புரியும்னு நினைக்கிறேன்.

நன்றி பதிவுக்கு.

ராஜ நடராஜன் said...

கபிஷ்!எனது வாழ்க்கையிலேயே இணையம் தவிர்த்த கடிதாசி ஒருவருக்கு எழுதியதென்றால் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களுக்கே.இப்போதைய கட்சிகளுக்கப்பாலான ஒரு மாற்றுப்பாதையில் தமிழகம் நடைபோடுமென எதிர்பார்த்தேன்.ஆனால் நிகழவில்லை.

ராஜ நடராஜன் said...

மயில் சொன்னதை கவனிச்சீங்களா:)

ராஜ நடராஜன் said...

இடுகையை படிச்சு முடிச்சிட்டேன்.ஓட்டும் போட்டாச்சு.

கபீஷ் said...

@சிபி
@பரத்
@மயில்
@SK
@ராஜநடராஜன்

இந்த பக்கம் வந்ததுக்கு நன்றீஸ்:-):-)

பழமைபேசி said...

_/\_

SanjaiGandhi™ said...

ஆரம்பிச்சிட்டாடா ஆட்டோக்காரி.. :)

தன்னம்பிகை கட்டுரைகளை ஜனரஞ்சகமாக்கியவர்.. வேதியியல் பட்டதாரி என்பதற்காகவே கொஞ்சம் கூடுதலாய்ப் பிடித்துப் போனவர். :) உன்னால் முடியும் தம்பி படத்தில் கமலுக்கு இவர் பெயரைத்தான் வைத்தார் பாலசந்தர். மறந்துவிட்டவரை நினைவுபடுத்தியது நல்ல செயல்..

விக்னேஷ்வரி said...

நல்ல பதிவு கபீஷ். நல்ல மனிதர் அவர். எனக்கும் பிடிக்கும்.

ஜோசப் பால்ராஜ் said...

பள்ளியில் படிக்கும் போது ஒரு முறை உரையாற்ற வந்திருந்தார். அப்போது எனக்கு தெரிந்து முதன் முதலாக எங்கள் பள்ளியில் உரையாற்ற வந்த ஒருவர் மாணவர்களை பார்த்து கேள்விகள் கேட்கலாம் என சொன்னது இவர்தான். நான் காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை செயல்படுத்தாத கர்நாடக அரசு, அதை உறுதிசெய்யாத மத்திய அரசு, எதையுமே கண்டுகாத உச்சநீதிமன்றம் குறித்து கேள்வி எழுப்பினேன்.

அமெரிக்காவில் ஏதோ ஒரு மாகாண கவர்னரை உதாரணமாக கொண்டு அருமையான பதில் அளித்தார்.
மிக நல்லப் புத்தகங்கள் எழுதியவர்.
( இந்த கமெண்ட்டை அவர் படித்த மேடிசன்ல இருந்து எழுதுறது ஒரு நல்ல கோ இன்சிடென்ஸ்)

அன்புடன் அருணா said...

எனக்கும் ரொம்பப் பிடிக்கும் இவர் புத்தக்ங்கள்.பூங்கொத்து.

அன்புடன் அருணா said...

ஓ கபீஷ் எழுதினதா????அட! யாருப்பா அது சஞ்செய்?????

ரங்கன் said...

சிபி வீட்டில் திருடிய (பர்மிஷனோடு) இவரது புத்தகங்களை படித்திருக்கிறேன்.

அவர் ஒரு வாழ்நாள் சாதனையாளர் என்றே கூற வேண்டும்.

அந்த அளவுக்கு அவரின் சமூக அக்கறை பாராட்ட தக்கது..!!

அவரின் நெஞ்சமே அஞ்சாதே நீ புத்தகம் இன்னும் எனக்கு வழிகாட்டி..!!

பகிர்வுக்கு நன்றி கபீஷ்..!!
வாழ்க வளமுடன்.

grs said...

இவரது பிள்ளைகள் அமெரிக்காவில் உள்ளனர். ஒரு பிள்ளை என் நண்பர். அவர் மனைவி கலிபோர்னியா தமிழ் அகாடெமியில் வகுப்பு ஆசிரியை

தாரணி பிரியா said...

இந்த பிளாக்குலயும் உருப்படியா எழுத ஆரம்பிச்சுட்டாங்களே இனி எங்க போயி கும்மி அடிக்க :).

//Blogger ஜோசப் பால்ராஜ் said...

இந்த கமெண்ட்டை அவர் படித்த மேடிசன்ல இருந்து எழுதுறது ஒரு நல்ல கோ இன்சிடென்ஸ் //

இங்கயுமா சி.இ.ஓ. நாங்க எல்லாம் பாவம்ப்பா :(.

*இயற்கை ராஜி* said...

ம்ம்... நல்ல மனிதரைப் பற்றிய நல்லதொரு பதிவு.. தொடருங்கள்

*இயற்கை ராஜி* said...

சஞ்சய்ன்னு ஒருத்தரோட மொக்கை பிளாக் இருந்திச்சே.. அது எங்க? காக்காச்சி தூக்கிப் போச்சா:-)

தமிழரசி said...

நானும் கேள்விப்பட்டு இருக்கேன் புத்தகத்திலும் படித்ததாய் நினைவு...மேலும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி..

கபீஷ் said...

மயிலு! மொக்கை கேட்டீங்க இல்ல இப்போ சஞ்செய் ரெண்டு போஸ்ட் போட்டுருக்கார்

பழமைபேசி,

பதிலுக்கு கும்பிடறேனுங்க


ராஜநடராஜன்,
ஏன் அவரால அரசியல்ல ஜெயிக்க முடியலன்னு முடிஞ்சா ஒரு இடுகை போடுங்க. மயிலு அப்படிதாங்க கண்டுக்காதீங்க, நான் எழுதுனாலே மொக்கை தான்

ஓய் சஞ்செய்,
படிக்காமலே கமெண்ட் போட்டிருக்கீங்க, பயிற்சி தேவை இத கண்டுபிடிக்காத மாதிரி கமெண்ட் போட

கபீஷ் said...

விக்னேஷ்வரி,

ரொம்ப நன்றிங்க.

ஜோஸப்
ரொம்ப நன்றிங் தம்பீய். அமெரிக்கா எல்லாம் போயிருக்கீங்க:)

அன்புடன் அருணா,
ரொம்ப நன்றிங்க

ரங்கன்
சொல்லிட்டு எடுத்தா எப்படி திருட்டு புத்தகமாகும்:) என்னமோ போங்க

GRS
ரொம்ப நன்றிங்க GRS அவங்க பையன் உங்க நண்பர் என்பதறிந்து மகிழ்ச்சியடைகிறேன்

தாரணி,
கவலைப்படாதீங்க, சஞ்செய் அரசியல் பதிவு எழுதிட்டுருக்கார் அங்கே தாராளமா கும்மி அடிக்கலாம். ரொம்ப நன்றி தாரணி

ராஜி,

அடுத்த ரெண்டு இடுகை பாக்கலையா, காமிடி:) ரொம்ப நன்றி ராஜி

தமிழரசி,

ரொம்ப நன்றிங்க.

தாமதமான பதிலுக்கு மன்னிங்க மக்களே! ரொம்ப சோம்பேறித்தனம் காரணமாக :)

ramalingams said...

nobody has understands his thinkings he has acted/adjusted as politician so he has failed he is good man he is first person to open self improvement speaches etc we are unlucky.we have not utilised him nobody has supported

velumani1 said...

இவரோட 'எண்ணங்கள்' புத்தகத்தின் பாதிப்பு எனக்கு இன்னும் இருக்கு. அதை நான் படித்தது 1985-ல். நல்ல ஒரு எழுச்சிகரமான எழுத்தாளர்.

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget