தக்காளியை நேரடியாக விற்கும் வாய்ப்புக் குறைவு. உழவர் சந்தைகளிலும் கூட ஓரளவு தான் விற்பனை செய்ய முடியும். எனவே ஆங்காங்கே இருக்கும் காய்கனி கமிஷன் மண்டிகளில் தான் விற்க வேண்டும். அவர்கள் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்கள். விற்பனைத் தொகையில் கமிஷன் பெற்றுக் கொள்வார்கள். ஏலம் மூலம் விற்பனை நடைபெறும். விற்பனைக்குப் பின் வியாபாரிகளிடம் பணம் பெற்று தினமுமோ, வாரம் ஒருமுறையோ பணம் வழங்குவார்கள்.
எங்கள் ஊருக்கு அருகில் 2 நகரங்களில் இந்த வகை மண்டிகள் உண்டு. ஒன்று 3 கிமீ தொலைவிலும் இன்னொன்று 10கிமீ தொலைவிலும் இருக்கின்றன. இரண்டிலும் ஒரே மாதிரி விலை கிடைக்காது. 3 கிமீ தொலைவில் இருப்பது சிறிய நகரம் அல்லது சற்று பெரிய கிராமம். அங்கே மிகக் குறைவான அளவில் தான் வியாபாரிகள் வருவார்கள். அவர்களுக்கானத் தேவையும் குறைவாகவே இருக்கும். எனவே அதிக விலையில் ஏலம் கோர மாட்டார்கள். 10கிமீ தொலைவில் இருப்பது 3 கிமீ தொலைவில் இருப்பதை விட சற்று பெரிய நகரம். சேலம், திருப்பத்தூர் போன்ற நகரங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவார்கள். மண்டி வைத்திருப்பவர்களும் வாங்கி தினமும் சென்னைக்கு அனுப்புவார்கள்.எனவே தக்காளிக்கானத் தேவையும் அதிகமாக இருக்கும். போட்டிப் போட்டுக் கொண்டி ஏலம் கோருவார்கள். அதிலும் தரமான பழங்களாக இருந்தால் நல்ல விலை கிடைக்கும். அதிக விலை சொல்லும் வியாபாரிக்கு விற்பனை செய்துவிடுவார்கள். விற்பனைக்கு செல்லும் முன் கூடைகளில் பழங்களை அடுக்குவதில் சில அஜால் குஜால் வேலைகள் செய்வதன் மூலம் நல்ல விலைக்கு விற்க முடியும்.ஆகவே சுமார் 15 கிமீ தொலைவிற்குள்ளே வேறு வேறு விலைகள் கிடைக்கும்.. :)
அதே போல் பருத்தி விலையும் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபடும். சில நூறுகள் வித்தியாசம் இருக்கும். பருத்தியைப் பொருத்தவரை பெரும்பாலும் கூட்டுறவு சங்கங்களின் மூலமே ஏலம் நடைபெறும். எந்த கூட்டுறவு சங்கத்திற்கு அதிக வியாபாரிகள் வருகிறார்களோ அங்கு நல்ல விலை கிடைக்கும். எங்கள் ஊருக்கு மிக அருகில் 2 சங்கம் இருந்தும் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கொங்கனாபுரம் ஏல மையத்தில் தான் பருத்திலைக் கொண்டு செல்வோம். அங்கு தான் வியாபாரிகள் அதிகம் வருவார்கள். விலையும் சற்று கூடுதலாக இருக்கும். வியாபாரிகள் பருத்தியை வாங்கிச் சென்று மில்களுக்கு விற்றுவிடுவார்கள். சேலம் மண்டலத்தில் அவ்வளவாக பஞ்சாலைகள் இல்லாததாலோ என்னவோ வியாபாரிகள் மூலம் தான் விவசாயிகள் பருத்திலை விற்க முடிகிறது. பஞ்சாலை அதிகம் உள்ளப் பகுதிகளில் ஆலை நிர்வாகமே விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்கிறதா எனத் தெரியவில்லை. அதே போல் மஞ்சளும்..
இப்போ கரும்புக்கு வாரேன்..கரும்பு பயிரிடுவதில் 2 வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. அதைப் பொருத்து தான் விலையும் கிடைக்கும்.
1. நம் எல்லையில் இருக்கும் கூட்டுறவு அல்லது தனியார் சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டு பயிரிடுவது. இதில், கரும்பு நடவு செய்தவுடன் குறிப்பிட்ட ஆதாரங்களுடன் அருகில் இருக்கும் ஆலையுடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ளவேண்டும். 5 ஏக்கரில் ஒருவர் கரும்பு பயிரிட்டால் முழுமையாகவோ அல்லது குறிப்பிட்ட அளவுக்கோ ஆலையுடம் ஒப்பந்தம் செய்துக் கொள்ளலாம்.தனியார் ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்துக் ஒள்வதன் முழுமையான பலன்கள் எனக்குத் தெரியாது. கூட்டுறவு ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டால், ஒப்பந்தம் செய்துக் கொண்ட பரப்பளவுக்கு தேவையான உரம், விவசாயக் கூட்டுறவு வங்கியில் கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும். உரத்திர்கான முதலீட்டுக்கு கவலைப் பட வேண்டி இருக்காது. கரும்பு விளைந்த உடன் வெட்ட வேண்டிய காலத்தில் அந்தப் பகுதியில் இருக்கும் ஃபீல்ட் ஆபிசரிடம் தெரிவித்துவிட வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில் ஒப்பந்தம் செய்துக் கொண்ட பரப்பளவுக்கு மட்டும் “Cutting Order" கொடுப்பார். ஆலையில் செயல் திறனையும் அதிக விளைச்சலையும் பொருத்து பல சமயங்களில் நீண்ட நாட்களுக்கும் காத்திருக்க வேண்டி இருக்கும். ஒப்பந்தம் செய்த கரும்பை தனியாருக்கும் விற்க முடியாது. லாரி வாடகை, வெட்டுக் கூலி செலவெல்லாம் போக டன்னுக்கு 1100 முதல் 1250 வரை கிடைக்கும்.
தனியார் ஆலையுடன் ஒப்பந்தம் போட்டிருந்தாலும் இதே நடைமுறைகள் தான். தனியார் ஆலையுடன் ஒப்பந்தம் செய்துக்க் கொண்டவர்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். சேலம் பகுதியில் தனியார் ஆலைகள் இல்லை. கூட்டுறவு ஆலைகள் மட்டுமே கதி. அவர்களிடம் அரசாங்கம் அறிவித்தபடி தான் விலை கிடைக்கும். வாகன வாடகை மற்றும் வெட்டுக் கூலி விவசாயிதான் கொடுக்க வேண்டும். மெலும் பிழிதிறன் எல்லாம் கணக்கிட்டு விவசாயியை பிழிந்துவிடுவார்கள். ஈரோடு போன்ற பகுதிகளில் தனியார் ஆலைகள் உண்டு. அவர்கள் சில நேரங்களில் வெட்டுக் கூலி மற்றும் வாகன வாடகையும் அளிப்பதுண்டு. சக்தி சுகர்ஸ் நிறுவனம் லாரி வாடகைக் கொடுத்துவிடுகிறார்களாம். வெட்டுக் கூலிக் கொடுபப்தில்லையாம். டன்னுக்கு 1750 வரை கொடுக்கிறார்கள் போலும். வெட்டுக் கூலி டன்னுக்கு 250 முதல் 350 ரூபாய் வரை வாங்குகிறார்கள். பொன்னி சுகர்ஸ் நிறுவனம் unseasonல் விவசாயி இடத்திற்கே வந்து லாரி வாடகை, வெட்டுக் கூலி எல்லாம் கொடுத்து டன்னுக்கு 1700 ரூபாய் வரை கொடுக்கிறார்களாம். ஈரோட்டுக்காரகள் கொஞ்சம் குடுத்து வச்ச விவசாயிகள். :)
2. எந்த ஆலையுடனும் ஒப்பந்தம் செய்யாமல் தனியாருக்கு விற்பது. ஒப்பந்தம் போடாத கரும்பை ஆலைகள் வாங்குவதில்லை. பல சமயங்களில் கூட்டுறவு ஆலைகளை விட தனியார் ஆலைகள் அதிக விலை கொடுப்பதால் சிலர் ஒப்பந்தம் போடாமல் இருப்பதுண்டு. அதிக விளைச்சல் இருக்கும் பருவத்தில் தனியார் ஆலைகளில் ஒப்பந்தம் போடாத கரும்புக்கு குறைந்த விலையே கிடைக்கும். அது போன்ற அசம்பாவிதங்களும் நடப்பதுண்டு. கூட்டுறவு ஆலையில் ஒப்பந்தம் செய்யாமல் 2 ஆண்டுகளுக்கு முன் காலம் கடந்து, டன் வெறும் 300 ரூபாய்க்கு தனியாருக்கு விற்க வேண்டி இருந்தது. :) . ஒப்பந்தம் செய்யாத கரும்பை தனியார் ஆலைகளுக்கு நேரடியாக விற்க முடியாது என்பதால் ஏஜெண்டுகள் மூலம் தான் விற்க முடியும். 1750 ரூபாயில் இவர்களுக்கான லாபம், வெட்டுக் கூலி, லாரி வாடகை எல்லாம் கணக்கிட்டு 1300 ரூபாய் வரை நமக்குக் கிடைக்கும். நேரடியாக விற்கும் போது 1550 ரூபாய் வரை கிடைக்கிறது. எப்படிப் பார்த்தாலும் கூட்டுறவு ஆலைகளைவிட அதிகம் தான்.
வெல்லத்துக்கு வாங்குபவர்கள் 1700 ரூபாய் வரைக் கொடுத்து வாங்கிக் கொள்வதாக நண்பர் ஈரோடு கதிர் சொல்கிறார். ஆனால் வெல்லம் தயாரிப்பவர்களின் தேவை மிகக் குறைவே. அவர்களால பரவலாக எல்லாருக்கும் பலன் கிடைக்க வாய்ப்பில்லை. வெல்லம் அதிகம் பய்ன்படுத்தப் பட்டது கிராமங்களில் தான். எங்கள் வீட்டில் எப்போதும் வெல்ல உருண்டை இருக்கும். இப்போதெல்லாம் கிராமத்தினர் பலகாரத்திலிருந்து Sweetக்கு மாறிவிட்டார்கள். வெல்லம் உபயோகிப்பதும் குறைந்துவிட்டது. டவுசர் போட்டுத் திரிந்த காலத்தில் எங்கள் வீட்டில் நூற்ற்க் கணக்கான வெல்ல உருண்டைகள் அடுக்கி வைத்திருந்ததும் தினம் அதை உடைத்துத் தின்றதும் ஊர் மக்கள் அடிக்கடி வந்து வாங்கிச் சென்றதும் நினைவில் இருக்கு. வெல்ல ஆலைகளில் பெரிய கொப்பரைகளில் கரும்புப் பாகுக் கொதித்துகொண்டிருக்கும் போது வரும் வாசனை வினோதமானது. மிகவும் பிடிக்கும்.
ரொம்ப பெரிய பதிவாக போய்ட்டிருக்கு. நிறுத்திட்டேன். :) இந்தப் பதிவை எழுத காரணமாக இருந்த நண்பர் ஈரோடு கதிருக்கு நன்றிகள். வழக்கம் போல் எழுத்துப் பிழைகளை பொறுத்தருள்க. :)



21 comments:
மிக அருமையான பதிவு சஞ்சய். பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
வெல்லம் முன் போல உபயோகிக்கப் படுவதில்லைதான்! ஆனாலும் சிலவகைப் பணியாரங்கள் வெல்லத்தோடு மட்டுமே கூட்டணி வைக்க முடியும்:)!
வாட் இஸ் வெல்லம்... ??? போட்டோ ப்ளீஸ்!!
சஞ்சய்...
வெல்லம் (குண்டு வெல்லம் / ஜாக்கரி) முழுக்க முழுக்க வட நாட்டிற்கு அனுப்பப்படுகிறது. வட நாட்டில் இனிப்பு வகைகளுக்கு வெல்லம்தான் பயன்படுத்தப்படுகிறது. இனிப்பு வகை மட்டுமல்ல, சரக்கு(!!) தயாரிப்பிற்கும் நாட்டுச் சக்கரைதான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.
மொத்தத்தில் மிக அருமையான அலசல் சஞ்சய்...
எழுத்து மட்டுமில்லை...கருத்தும் பிழையே...
கேள்விப்பட்ட உறுதியில்லாத தகவல்களை வைத்து இப்படித்தான் பொத்தாம் பொதுவாக எழுத முடியும்.
கிராமிய சூழ்நிலைகளில் உள்ள பல தகவல்களை, புகைப்படங்களுடன் கொடுத்திருப்பது அழகு.
அருமையான பதிவு. கிராமிய மணம் கமழும் உங்கள் பதிவை, இன்று முதல் follow பண்றேன்.
:-)
மிக்க நன்றி ராமலக்ஷ்மியக்கா.. வெல்லத்தின் உபயோகம் பெரிய அளவில் குறைந்துவிட்டது. தீபாவளி பலகாரங்களுக்கு எல்லாரும் 2, 3 வெல்ல உருண்டைகள் வாங்கி வருவார்கள். இப்போது படையில் இனிப்புகள் வாங்கி வந்துவிடுகிறார்கள்..
புனிதா, வெல்லம் என்பது கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் பொருள். பழுப்பு நிறத்தில் இருக்கும். கரும்புச்சாறை கொதிநிலைக்கு காய்ச்சி சிலவற்றை சேர்த்து பதப் படுத்தி தயாரிப்பார்கள். என்னிடம் போட்டோ இல்லை.
வெல்லம் தயாரிக்கும் முறை இங்கே..
http://www.amproexports.com/sugar-jaggery.html
வெல்லம் படம் இங்கே
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Sa-indian-gud.jpg
புதிய தகவலுக்கு நன்றி கதிர். நம்ம ஊர்களில் வெல்லத்தின் பயன்பாடு குறைந்துவிட்டது. ஏராளமான வெல்லம் தயாரிப்பாளர்களும் வேறுத் தொழிலுக்கு மாறிவிட்டார்கள்.
கும்கி, பொத்தாம் பொதுவாக பிழை என்று சொல்வதை விட சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ள வசதியாக இருக்குமே. மேலும் இது ஒரு சாதாரன அனுபவக் குறிப்பு மட்டுமே. இங்கே கருத்து இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. இதில் இடம் பெற்றுள்ள படங்கள் அனைத்தும் எங்கள் நிலத்தில் விளைந்தவயே. கரும்புப் பூ தவிர மற்றவை எல்லாம் சில மாதங்களுக்கு முன் எடுக்கப் பட்ட படங்கள். ஆகவே கேள்விப்பட்டதன் அடிப்படையில் என்ற உங்கள் குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன். தவறை சுட்டிக் காட்டுவது தான் சிறந்த பண்பு. பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவது இல்லை. விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன்.
நன்றி சித்ரா..
பெரிய விவசாயிடா மாப்ளை நீயி...
நல்ல தகவல்கள் நண்பரே. கூட்டுறவு சக்கரை ஆலைகளுடன் ஒப்பந்தம் போடுவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு ரெகமெண்டேஷன் எல்லாம் தேவைங்க.
கட்டிங் ஆர்டர் கொடுக்க தாமதமானால், பிழிதிறன் பாதிக்கப்படும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். கட்டிங் ஆர்டர் வாங்குவது அவ்வளவு சுலபமல்ல.
விவசாயி கணக்குப் பார்த்தா ஆழாக்கு கூட மிஞ்சாதுங்க.
மிக அருமையான பதிவு சஞ்சய் அண்ணா.
நம்ம ஊரில் இருக்கிற தகவல்களை பற்றி அறிய செய்தமைக்கு மிக்க நன்றி!
இம்முறை மாங்கா விலையும் டாப் கியர்ல போயிட்டிருக்கு.....
என்ன்னு விசாரித்துப்பார்த்தா சரியா மாம்பூ பூக்கிற நேரத்துல மழை பெய்து நாசப்படுத்திடுச்சு.... வேற வழி... நம்ம வழியை பயன்படுத்தி மாங்காயை சாப்பிட வேண்டிய கட்டாயமாயிடுசு்சு.. அதுவும் ஒரு ஏக்கர்க்கு குடும்பே காவலுக்கு இருக்கு. அவங்க கஷ்டம் அவங்களுக்கு ,நம்ம கஷ்டம்நம்மளுக்கு :)
புதிய தகவல்கள்.
வெல்லம் வீட்டுல பலகாரம் செய்ய உபயோகப்படுத்தறது குறைஞ்சிருந்தாலும், பலகார கடைகள்ல தேவைப்படும்.
கரும்பு,மஞ்சள் மாதிரியான பணப்பயிர்கள்ல நமக்கு நஷ்டமில்லதானே #சந்தேகம்
அருமையான பதிவு!!
பஸ்ஸுல பதிவு போட்டால் பஸ்ஸுல தான் பின்னூட்டம் போடுவோம்
நல்லா சொல்லி இருக்கீங்க மினிஸ்டர்..
சூப்பர்!
@கும்க்கி
விளக்கம் பிளீஸ்
Sanjay,unga aarvam puriyuthu . Vazhthukal. Pathivu, kurithu ethuvum solrathkillai.paddy spacing pathi vilakam uchakauam ponga!
மணிஜி, இல்ல மாம்ஸ் ரொம்ப சின்ன விவசாயி தான்.. :)
நன்றி ராகவன் அண்ணாச்சி. நீங்க சொல்றதும் சரி தான்.. இப்போ விலை கொஞ்சம் பரவால்ல..
நன்றி செல்வமுரளி.. போன வருஷமும் இதே நிலைதான்னு நினைக்கிறேன்..
நன்றி கபீஷ்.
கரும்பு முன்னாடி எல்லாம் அவ்ளோ லாபமான பயிரா இல்லை.. இப்போ பரவால்லை.. இந்த வருஷ பட்ஜெட்ல டன்னுக்கு 2000 ரூபாய் அறிவிச்சிருக்காங்க..
மஞ்சளாஆஆஆஆஆஆஆஆஆ? இப்போதைக்கு மஞ்சள் தங்கத்தை விட விலை அதிகம் :) 2, 3 ஆண்டுகளுக்கு முன் 4000 ரூபாய் என்பது மஞ்சளுக்கு மிகப் பெரும் விலை.. இப்போ 13000 ரூபாய்க்கு கீழ் இல்லை.. சென்ற வாரத்தில் 15500 ரூபாய்க்கு விற்றதாம்.. செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம ரேட்டு.. :)
நன்றி மேனகா சிஸ்டர்..
நன்றி கோவியாரே.. பஸ்ஸில் இணைப்பு மட்டுமே.. முழுப் பதிவும் அங்க இல்லை.. அந்த கமெண்ட் பார்த்தப்போவே தெரியும், நீங்க பதிவை படிக்கலைனு :))
நன்றி கலகலப் ப்ரியா.. ப்ரைம் விட்டுட்டிங்க :)
( இந்தியன்ல செந்தில் கவுண்டமணிகிட்ட ர்ர்ர்ர்ர் விட்டுட்டிங்கன்னு சொன்ன மாதிரி பொலம்ப வச்சிட்டிங்களே ஆத்தா :)) )
நன்றி மங்களூராரே.. கும்க்கி காலைல அண்ணிக்கிட்ட தலைல வாங்கினதுல கொஞ்சம் குழம்பி எதோ சொல்லிட்டார்ன்னு நினைக்கிறேன் :)
நன்றி வவ்வால்.. :)))
சேலம்,ஈரோடு,கொங்கனாபுரம்,பருத்தி, கரும்பு.. ஊர் ஞாபகத்தை கிளறி விட்டு விட்டீர்கள் நல்ல பதிவு
நன்றி சபரிநாதன்.. நீங்களும் நம்ம ஏரியாங்களா?
Post a Comment