கோவையில், போலீஸ் முன்னிலையிலேயே இன்ஜி., மாணவர் மீது, ரவுடிக்கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. சம்பவ இடத்திலிருந்த போலீஸ்காரர், அவசர உதவி கோரி போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்ட போது, 'எல்லை பிரச்னையை' காரணம் காட்டி, உதவி மறுக்கப்பட்டது. அதன் பின் நிகழ்ந்த களேபரமும், போலீஸ் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்களும், போலீஸ் மீதான மக்களின் நம்பிக்கையை நிலைகுலைய செய்துள்ளன.
நேற்று முன்தினம் இரவு 11.00 மணி(இன்று 08.05.2010). கோவை நகரில், மசக்காளிபாளையம் ரோட்டிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடை பாரில் 50க்கும் மேற்பட் டோர் போதை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த ஒரு கும்பல், திடீரென அருகிலிருந்த வாலிபரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்க துவங்கியதும், பலரும் அலறியடித்து ஓடினர். தாக்குதலுக்குள்ளான வாலிபர் உயிர்தப்ப மசக்காளிபாளையம் ரோட்டில் அரை கி.மீ.,தொலைவுக்கு ஓட, விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் மரக்கட்டை, கற்களால் மூர்க்கத்தனமாக தாக்கியது.மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கடையின் ஷட்டர் மீது சரிந்த பிறகும், பலரது முன்னிலையிலும் தாக்குதல் தொடர்ந்தது. அதிர்ச்சியடைந்த சிலர், போலீஸ் 'கன்ட்ரோல் ரூமுக்கு' போனில் தெரிவித்ததும், அடுத்த 15வது நிமிடத்தில் ரமேஷ் என்ற போலீஸ்காரர் ரோந்து பைக்கில் வந்தார்.
அப்பகுதி களேபரமாக காட்சியளிக்க, அடிபட்ட வாலிபர் ரத்தம் சொட்ட, சொட்ட உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை சுற்றிநின்றிருந்த கும்பல், அப்போதும் தாக்கிக்கொண்டே இருந்தது.கும்பலை தடுக்கமுயன்ற போலீஸ்காரர் ரமேஷ் தள்ளப்பட்டு, அவரிடம் இருந்த'வாக்கி - டாக்கி'யும், மொபைல் போனும் தவறி விழுந்தது. பதற்றமடைந்த போலீஸ்காரர் 'வாக்கி - டாக்கி'யை தேடி எடுத்து கன்ட்ரோல் ரூம் போலீசாரை தொடர்பு கொள்ள முயன்ற போது, அது இயங்கவில்லை. அருகிலிருந்த ஒருவர் தனது மொபைல் போனை போலீஸ்காரரிடம் கொடுத்தார். பீளமேடு போலீஸ் ஸ்டேஷனை போனில் தொடர்பு கொண்ட போலீஸ்காரர் ரமேஷ், உதவிக்கு போலீசாரை அழைத்தார். மறுமுனையில் பேசிய போலீஸ்காரர், 'அது எங்க 'லிமிட்' இல்லை; நீ சிங்காநல்லூர் போலீசுக்கு போன் போடு...' எனக்கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார். மறுபடியும் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்த போலீஸ்காரர் விஷயத்தை சொல்ல, அடுத்த நிமிடமே 'ஒயர்லெஸ்' தகவல் பரிமாற்றம் அலறியது. அதன் பிறகும் கூட அப்பகுதிக்கான இரவு ரோந்துப்பணி உதவிக்கமிஷனர் முத்துராஜ் மற்றும் அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவில்லை. எல்லாம் முடிந்து அரை மணி நேரம் கழித்து, பீளமேடு எஸ்.ஐ.,முத்துசாமியும், சிங்காநல்லூர் பெண் எஸ்.ஐ., பிரபாவதியும் சம்பவ இடத்துக்கு 'சினிமா போலீசாக' கடைசியில் வந்தனர்.
அதற்குள், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வாலிபரின் தந்தை, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு ஓடிவந்தார்; அவர், ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார்.இவர் வந்த பிறகு தான், அடிபட்ட வாலிபர் சி.ஐ.டி., கல்லூரியில் பி.இ.,இறுதியாண்டு படிக்கும் மாணவர் பிரகாஷ்(19) என்பது தெரியவந்தது. தனது மகன் உயிருக்கு போராடுவதை கண்ட தந்தை, போலீசிடம் வாக்குவாதம் செய்து மகனை காப்பாற்ற கெஞ்சினார். ஆத்திரமடைந்த போலீசார், அவரை கழுத்தை பிடித்து தள்ளி ஜீப்பில் ஏற்றினர்; தாக் குதலில் ஈடுபட்டவர்கள் 'ஹாயாக' அருகிலேயே நின்றிருந்தனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், போலீசுடன் வாக்குவாதம் செய்தனர். அதன்பின் வேறுவழியில்லாமல், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த சிலரையும் போலீசார் ஜீப்பில் ஏற்றினர். அப்போது, சிங்காநல்லூர் எஸ்.ஐ., பிரபாவதியுடன் மொபைல் போனில் பேசிய இரவு ரோந்து இன்ஸ்பெக்டர், தாக்குதலில் ஈடுபட்ட ரவுடி கும்பலின் தலைவனை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். அடுத்த விநாடியே ஜீப்பில் இருந்த தாக்குதல் கும்பல் விடுவிக்கப்பட்டது;
இத்தனையும், பலரது சாட்சியாகவே அரங்கேறியது. தாக்கிய நபர்களை விடுவித்தது தொடர்பாக அங்கிருந்த சிலர் போலீசிடம் கேள்வி எழுப்ப, 'அவர்கள் எங்கே போய்விடுவார்கள்; காலையில் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரிக்கிறோம்' என, பெண் எஸ்.ஐ., 'பொறுப்புடன்' பதிலளித்துள்ளார். இத்தனையும் நடக்கும் வரை, அடிபட்ட நபர் உயிருக்கு போராடியபடியே தரையில் சரிந்து கிடந்தார். அருகிலிருந்தோர் அவரை அரசு மருத் துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதை தடுத்த ஒரு எஸ்.ஐ., அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்குமாறு மிரட்டல் தொணியில் கூறினார் (அரசு மருத்துவமனையில் சேர்த் தால், வழக்குப்பதிவு செய்ய நேரிடும் என்பதால்). அவ் வாறே அந்த வாலிபர் தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், பின்னர் அவர் பீளமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வளவுக்கு பிறகும் நேற்று மதியம் வரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இச்சம்பவம் குறித்து, கமிஷனர் அலுவலக அதிகாரிகளுக்கு கூட தகவல் தெரிவிக்கப்படாதது ஆச் சரியமளிக்கிறது; இது தான், மாநகர போலீஸ்.
கேள்விக்கு என்ன பதில்? :
- போலீஸ்காரர் சம்பவ இடத்திலிருந்து அவசர உதவி கோரிய நிலையில், எல்லை பிரச்னையை காரணம் காட்டி வேறு போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொள்ளுமாறு, பீளமேடு போலீசார் கூறியது சரியா?
- ஒரு சம்பவம் நடந்திருப்பதாக 'ஒயர்லெஸ்' தகவல் பரிமாற்றம் அலறிய போது, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவிக்கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்துக்கு வரவேண்டாமா? வராத நிலையில், அவர்களது அந்நேர பணி என்ன?
- சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த எஸ்.ஐ.,க்கள், தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அருகிலேயே இருந்தும் கைது செய்யாமல், உயிருக்கு போராடிய வாலிபரின் தந்தையின் மீது ஆத்திரப்பட வேண்டிய அவசியம் என்ன?
- பொதுமக்களின் எதிர்ப்பால், தாமதமாக கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றிய ரவுடிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரிக்காமல், சம்பவ இடத்திலேயே விடுவித்தது எந்த சட்டத்தின்படி சரி?
- பலர் முன்னிலையிலும் பிடிபட்ட ரவுடி கும்பலை விடுவிக்குமாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் போனில் உத்தரவிட வேண்டிய அவசியம் என்ன? பின்னணி என்ன?
- தாக்கப்பட்ட வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகும் கூட, வழக்குப்பதிவு செய்யாமல் போலீசாரை தடுத்தது யார்?
- 'தாக்குதலுக்கு உள்ளான நபர் புகார் தரவில்லை; அதனால் வழக்குப்பதிவு செய்யவில்லை' என போலீசார் 'சாக்கு போக்கு' கூறலாம். அவ்வாறே இருந்தாலும், சம்பவத்தை நேரில் கண்ட போலீஸ்காரர் ரமேசிடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?
- 'இரவு 10.00 மணிக்கு 'டாஸ்மாக்' கடைகளை மூடிவிட வேண் டும்' என்ற அரசு உத்தரவை மீறி, நள்ளிரவு வரை நகரில் 'டாஸ்மாக்' பார்கள் போலீசுக்கு தெரியாமலா செயல்படுகின்றன?
- இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்காதவாறு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
குறிப்பு : கோவையில் மரங்களோடு சேர்ந்து மனித நேயமும் கடமையும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. மரங்களை இழந்ததும் வாகன நெரிசலும் உடன் இது போன்ற அசாதாரான சூழலும் விரைவில் கோவை “வாழத்தகுதியற்ற” நகரமாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. நேர்மையான சுறுசுறுப்பான மாவட்ட ஆட்சித்தலைவர், நினைத்த நேரத்தில் தொடர்பு கொள்ளும் நிலையில் மிக எளிமையான மாநகர மேயர், மிக நேர்மையான மாநகராட்சி ஆணையர் மற்றும் செயல்திறனும் நம்பிக்கையும் நேர்மையும் கொண்ட மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் இருந்தும் இந்த நிலை.. திரு. சைலேந்திர பாபு , கோவையின் காவல்துறை ஆணையராக பதிவியேற்ற போது கோவைவாசிகள் சந்தோஷமடைந்தார்கள். அவருக்கே இது சவால் தான்..
40 comments:
மாமா நியாயமான கோவம்!
வடகரைவேலன் வீட்டில் ஒரு பிரச்சினை என்றதும் ஒரு போன் காலில் பிரச்சினையை சரி செய்த அந்த எஸ்.ஐ எங்கே போனார் மாமா?:)))))))
அச்சச்சோ...அநியாயமா இருக்கே..
//அவருக்கே இது சவால் தான்..//
ஏற்பாரா?
அடக் கடவுளே !
அவர் இல்லை அதுதான் இப்படி . சிறப்பாக பகிர்வு நன்றி !
கொடுமையடா சாமி... போலீஸே இப்படி நடந்தா... ஒன்னும் சொல்லுவதற்கில்லை.
கொங்கு ஏரியாவும் அண்ணன் axyz கன்ட்ரோல்ல வருதுன்னு சொல்லிகிட்டு இருந்தாங்களே, நிசமாங்களா????
நியாயமான கோபம்தான்.. உங்களுக்கு வந்தமாதிரி எல்லோருக்கும் வருமா..?
ம்ம். கொடுமை
//குசும்பன் said...
மாமா நியாயமான கோவம்!
வடகரைவேலன் வீட்டில் ஒரு பிரச்சினை என்றதும் ஒரு போன் காலில் பிரச்சினையை சரி செய்த அந்த எஸ்.ஐ எங்கே போனார் மாமா?:)))))))
//
அந்த ஏசி இப்போல்லாம் பிரச்சினைகளை பிளாக்குலகும்,இமெயில்லயும் தீர்க்க முயற்சிப்பதாய் கேள்விப்பட்டேன்:-)
திரு. சைலேந்திர பாபு ,கோவையின் காவல்துறை ஆணையராக பதிவியேற்ற போது சொன்ன "போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்" இது தானோ ?
ithu thaanda police. ! sattam kadamaiyai seiyum enbarkale athu ithu thaanaa.? ithu avar thurai avar pathil tharuvaaraa ungkalukku...? mmmmm
என்ன இது இவ்வளவு அக்கிரமமா இருக்கு..?
கமிஷனர்கிட்ட புகார் கொடுக்கச் சொல்லுங்கப்பா..!
அப்படியும் முடியலைன்னா கோர்ட்டுக்குத்தான் போகணும்..!
நம்ம தலையெழுத்து..!
:))
என்ன கொடுமைங்க இது? யாரும் கண்டுக் கொள்ளவே மாட்டாங்களா?
போலீசுக்கே இப்படியா....என்ன சொல்றது..
:(
இந்த லட்சணத்துல "செம்மொழி மாநாடு எலவு வேற"
சமூக அக்கறையுள்ள பதிவு சஞ்சய்...நடந்த கொடுமைகளை "வீடியோ"எடுத்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.இப்போ தான் எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறதே.
இதை காலையில தினமலர்ல படிச்சேன் ரொம்ப வருத்தமான நிகழ்வு.
//அப்படியும் முடியலைன்னா கோர்ட்டுக்குத்தான் போகணும்..!
நம்ம தலையெழுத்து..!//
கோர்ட்டுக்குப் போயி?
உயிருக்குப் போராடுனவரோட பேரன் வந்து தீர்ப்பு என்னன்னு பாக்கவா? அடப்போங்கய்யா...
மறுபடியும் சொல்லவேண்டியதாயிருக்கு.. இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்.
இது எல்லாம் நம்ம இளைய தலைவர் ராகுல் காந்தி வந்து சரி பண்ணிடுவாரு கவலைய விடுங்க
தனிமனித உரிமைகள் காக்க, நீதி பரிபாலனம் வெகு முக்கியம்... அதுக்கும் நம்ம நாட்டுக்கும் வெகு தூரமுங்கோ! :-(
19 வயசு பி.இ படிக்கறவன் எதுக்கு டாஸ்மார்க் போகனும் ?
குடிபோதையில் கண்டிப்பாக ஆபாச வார்த்தைகள் வர இதுபோன்ற சண்டை மூள வாய்ப்புண்டு. படிக்கறவன் காலேஜ் முடிஞ்சதும் வீட்டுக்கு போகவேண்டிய அளவில் அறிவை வளர்த்துக்கொண்டிருக்கும் நல்ல மனிதர்களே இந்த நாட்டுக்கு தேவை. குடிச்சு மூத்திரம் விட்டு பொறுக்கித்தனதனம் செய்யும் இது போன்ற அல்லாதவைகளுக்கு இது தேவைதான். இது எந்த சாதனையும் செய்துவிடப்போவதில்லை வருங்காலத்தில். இன்னொரு பொறுக்கியாக மாறுவதை தவிர.
சட்டம் ஒழுங்கை பராமரிக்கவேண்டிய காவல்துறை சினிமா போலிசானதை மொபைல் கேமராவிலாவது எடுத்து போடவேண்டியதுதானே மாமா ?
To பாலபாரதி
ஸ்மைலிய திருப்பி போட்டிருக்கீங்க. சோகத்துக்கு நகுதல். இதுதான் இடுக்கன் வருங்கால் நகுதலோ ? பாகச
நன்றி குசும்பன் மாமா.. அந்த ஏசி ரொம்ப பிசி ஆய்ட்டார்.. சம்மராச்சே :)
ரொம்பவே அநியாயம் அருணாக்கா
தெரியலையே பாலாசி
நன்றி சங்கர்
நன்றி ராகவன் அண்ணே
அண்ணன் போஸ்டர் மின்ன ஆரம்பிச்சி ரொம்ப காலம் ஆய்டிச்சி வெண்பூ..
நன்றி இர்ஷாத்..
நன்றி ராஜி
நன்றி உதயம்
நன்றி மதுரை சரவணன்.. எனக்கு எந்த பதிலும் வேண்டாம்ங்க.. இனி இதுமாதிரி நடக்காம பார்த்துகிட்டால் போதுமே
நன்றி உ.தமிழன் அண்ணாச்சி
என்ன பாலபாரதி சிரிக்கிறிங்க.. இந்த போலிஸ்காரய்ங்களே இப்டிதான்னு சொல்ல வறிங்களா? :(
நன்றி சித்ரா. கண்டுக்கிட்ட மாதிரி தெரியலைங்க
போலிஸ் கேட்டாலும் எல்லை பிரச்சனை இருக்கு பாருங்க.. நன்றி பாசமலர் அக்கா.. நலமா? ரொம்ப நாளா பார்க்க முடியலை..
நன்றி ஷர்புதின்
நன்றி ஜெரி வாத்தியாரே.. செம்மொழி மாநாடு மிகப் பெரிய துக்கம்ங்க.. அதனால நாங்க படுற அவஸ்தைக்கு அளவே இல்ல.. :(
நன்றி மங்களூர் மாம்ஸ்
நன்றி முகிலன்..
நன்றி வாய்க்கொழுப்பு.. உங்களுக்கு வேற பேர் வச்சிருக்கலாம்.. பொருத்தமா இருக்கும்
நன்றி பழமைபபேசி
ரவி மாம்ஸ், மேட்டர் அந்த பையனோட குடிப் பழக்கம் பற்றியில்லை.. காவல்துறையின் அலட்சியமும் பணியாற்றும் லட்சனமும் தான்.. பள்ளி, கல்லூரி அருகில் சாராயக் கடை திறந்திருக்கும் அரசாங்கத்துக்கே அறிவு இல்லையே.. அதுவும் இரவு 12 மணிவரை.. 19 வயசு பையனிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
:(
காவல் துறை படு கேவலமாக உள்ளது என்பதுக்கு இது ஒரு சாட்டைஅடி .....
இதுல வீடு தேடி வருமா F.I.R.......கேவலமாக உள்ளது .....
S.M.S.ல வருமாம் ........வாக்கி டாக்கி ல கூபிடும் போதே எல்லை பிரச்சினை ....சாதாரண மக்கள் சொன்னால் அதோ கதி தான் ...
இன்றைய விபரம்
கமிசனர் உத்தரவு பேரில் வரவழைக்க பட்டு வழக்கு தொடப்பட்டு உள்ளது துறை சார்ந்த விசாரணையும் தொடங்க பட்டு உள்ளது ..
நன்றி கமிசனர் அவர்க்களுக்கு .....
எங்களது அண்ணன் அஞ்சா நெஞ்சன் அழகிரி அய்யாவுக்கு, இந்த விஷயம் தெரிந்தால் போதும், போலீஸ்காரர்கள் எல்லாம் பஞ்சாகி விடுவார்கள். தமிழகத்தின் தேவை - அண்ணன் அழகிரி. அதிரடி, புதுவழி என்று கலந்து கட்டி அடிப்பவர். பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நியாயம் கேரண்டி
என்ன சொல்றதுன்னே தெரியல..
ஆணையர்கள் அடிக்கடி மாற்றப்படுவது, பதவி ஏற்றதும் அறிக்கை விடுவதும்.....
அவங்க பொழுது அப்படி போகுது :(
இதைப்போன்ற செய்திகள் படிக்கவே எரிச்சலைத்தருகின்றன.
ஊர மறந்துட வேண்டியதுதான பாஸு.
இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்.
Meyyalume Tamil nattula than irukkiya mamu? Tamil nattula Ithelam periya mattera?(vendapattavangalo) Thinam 1000 sambavam ithu pola nadakuthu ,minister munnadiye si ya bomb potu vettinanga,high court la cm pesitu irukkum pothe adi thadi oduthu, sathya moorthy bhavanla royapuram mano and koshti vettikuthu ,ellathaium police vedikkai than pakkuthu. Neengalam vilakku vaikkurathukulla vootuku poi tv parkiravanga pola nightla cityla nadanthu poi parunga ithu ratha boominu therium.
நன்றி மாதேவி..
தகவலுக்கு நன்றி சிங்கம்ல..
நன்றி பாலகிருஷ்ணன்
நன்றி கலகலப்ரியா
நன்றி மயில்
நன்றி ஆதி
நன்றி அதிஷா.. ஆமாம் பாஸ்.. நிலவரம் அப்டி தான் போய்ட்டிருக்கு..
நன்றி கொல்லான்.. நாடு என்பது நாம் தான்..
நன்றி வவ்வால்.. நான் இந்த கட்டுரயை இங்க குறிப்பிட்டிருப்பதற்கு காரணம், அந்த தாக்குதல் சம்பவம் இல்லை. போலிஸ்காரரே உதவி கேட்டும் எல்லைப் பிரச்சனையை காரணம் காட்டிய காவல்நிலையமும் மேலும் சில காவல்துறையினரின் அலட்சியமும் தான். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உங்கள் மனநிலை புரியவில்லை எனக்கு. எதிர்ப்புகள் வலுக்கும் போது நிச்சயம் இது போன்ற அலட்சியங்கள் குறையும்.
சைலேந்திர பாபு செய்வார்ங்க!
// செம்மொழி மாநாடு மிகப் பெரிய துக்கம்ங்க.. அதனால நாங்க படுற அவஸ்தைக்கு அளவே இல்ல.. // repeate... daily 5 hours power cut , weekly twice shutdown .. sanjai apdiyea evening 7 maniku mela namma area pakkam vanthu paarunga innum niraiya matter kidaikum..
நன்றி ரகு... நல்லது செஞ்சா நல்லது..
நன்றி ஹேமந்த்.. அட போங்க.. எல்லா ஏரியாவும் அப்டி தான் இருக்கு.. வெளிய போறதுக்கே எரிச்சலா இருக்கு.. இதுல தினம் 7 , 8 மணி நேரம் மின் தடை.. நேத்து நைட் 8 மணியில் இருந்து 11.30 வரை மின் தடை.. பல இடங்களில் அடிக்கடி இரவு முழுதும் மின் தடை :(
Post a Comment