May 10, 2010

ஜெயமோகனை ரவுண்டு கட்டிய பதிவர்கள்






From கவிஞர் கலாப்ரியா பாராட்டு விழா
எங்க ஊர்ல இப்டி தான் ரவுண்டு கட்டுவோம்.. உங்க ஊர்ல? :-)


நேற்று ( 09.05.2010) கோவையில் விஷ்ணுபுரம் வாசகர் பேரவை சார்பில் கவிஞர் கலாப்ரியாவுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியை செல்வேந்திரன் தொகுத்து வழங்கினார். பதிவரும் கவிஞருமான வா.மணிகண்டன் , கவிஞர் சுகுமாறன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் வெண்ணிலா, எழுத்தாளர் ஜெயமோகன், மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்வின் சிறப்பம்சங்கள்

  • மாண்புமிகு சஞ்சய்காந்தி அவர்கள் கலந்துக் கொண்டார்..
  • ஜெயமோகன் மிகக் குறைவாகப் பேசினார்.. ( நீயெல்லாம் இருந்தா எப்டிடா அதிகம் பேசத் தோனும்?).தூக்கக் கலக்கத்திலேயே கலந்துக் கொண்டார் போல.. 
  • என் ப்ரார்த்தனை பலித்தது.. பெரியவர் ஞானி வரவில்லை.. காலாவதியான கம்யூனிசம் பற்றி பக்கம் பக்கமாக பேசி இருப்பார்.. அவ்வ்வ்..
  • கவிஞர் வெண்ணிலா, ரயில்நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொன்னார். ஒரு பெரியவர், காதல் மணம் முடித்து பின் பிறந்த வீட்டிற்கே வந்துவிட்ட தன் மகளை எதோ ஒரு ஆசிரமத்தில் விட சென்றுக் கொண்டிருந்தாராம். அந்தப் பெண்ணிற்கு சிறுவயதில் ஒரு மகன். பெரியவர் அவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவாராம். அந்த சிறுவனுக்கு இனி தன் தாயைப் பார்க்கும் சூழல் கிட்டுவது சந்தேகம் என்றான். நேற்று அன்னையர் தினம். 
  • மணிகண்டன் கொஞ்சம் பதட்டமாக காணப்பட்டார். வேகமாக பேசினார். பேசுவது மனதில் நிற்கவில்லை. ஏராளமாக எழுதி வந்திருப்பார் போல. அவ்வளவும் பேசி விட வேண்டும் என மிக வேகமாக பேசிக் கொண்டிருந்தார். மணி, கவனம். கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களிடம் பில்டப் கொடுப்பதற்காகவே பல கவிஞர்கள் பெயரை சொல்லிக் கொண்டிருப்பாராம். ;)
  • செல்வெந்திரன் பதட்டம் இல்லாமல் இயல்பாய் தொகுத்து வழங்கினார். டிவிக்கு போங்க பாஸ்..
  • செம்மொழி மாநாட்டில் கோவைக்காரர்களுக்கு விருப்பம் இல்லை என்பது நாஞ்சில்நாடன் பேச்சிலும் தெரிந்தது. சில நாடுகளில் “ நீங்கள் இனனர்ர் பிறந்த நாட்டிற்கு வந்துள்ளீர்கள்” என விமான நிலையங்களில் பேனர் இருக்குமாம். நம் நாட்டில் அது போல் இல்லை என வருத்தப் பட்டார். வண்ணதாசன், நாவல் எழுத சொல்லி தனக்கு 6 கடிதம் எழுதிய பின்னரே முதல் நாவல் எழுதினாராம்.
  • மரபின் மைந்தன் முத்தையா மிக சுவாரஸ்யமாக இயல்பாய் பேசினார். மேடைப் பேச்சு விளையாடுகிறது நாவில்.
  • கிட்டத்தட்ட அனைவருமே கலாப்ரியாவின் இரண்டு கவிதைகளை குறிப்பிட்டார்கள். 1. அவள் அழகாய் இல்லை என்பதால் எனக்கு தங்கையானாள் . 2. பறவைகளின் பாஷை தெரியவில்லையே என வருத்தப் படுவது போல் ஒரு கவிதை.
  • இவை இரண்டையும் பெரும்பாலும் எல்லாராலும் பேசப்படும் கவிதை என கலாப்ரியா குறிப்பிட்டார். தன் மனைவிக்கு நன்றி சொன்னார். நேற்று சரியான நாள் தான்.
  • 1972 அக்டோபரில் ஒரு நாள் கோவிலுக்கு சென்றாராம் கலாப்ரியா. அப்போது ஒரு குறுகிய இடைவெளியில் எதிரில் ஒரு பெண் வந்தாராம். அவரை இடித்து விடக் கூடாது என்பதற்காக முடிந்தவரை விலகி நின்றாராம். அந்தப் பெண் அழகாக இல்லையாம். ஒருவேளை அழகான பெண்ணாக இருந்தால் இடித்திருப்பாராம். இந்த நிகழ்வு தான் அந்த கவிதை எழுத காரணமாம். :)
  • திருப்பூரிலிருந்து 2 லாரிகளில் வெயிலான் தலைமையில் பதிவர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அனைத்துப் பதிவர்களுடன் ஜெயமோகன் மிக நட்பாய் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். 
விவரமாக இலக்கிய சிங்கங்கள் எழுதுவார்கள்.. நான் சென்ற போது ஒரு பெண் வரவேற்புரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். யாரெனத் தெரியவில்லை.

பிஸ்கி: இரும்படிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலை எனக் கேட்கும் எதிர்கட்சியினருக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 9 மனி முதல் 12 மணி வரை மின் தடை. ஊட்ல குந்திகினு இன்னா தான்யா செய்றது?



குசும்பனுக்கு எச்சரிக்கை: இந்த படங்களில் இருக்கும் பதிவர்களை வைத்து எதும் கிண்டல் செய்ய நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

26 comments:

Cable Sankar said...

நல்ல கவரேஜ்..

Chitra said...

////மாண்புமிகு சஞ்சய்காந்தி அவர்கள் கலந்துக் கொண்டார்.. ////



..... நிகழ்ச்சியின் சிறப்புக்கு வேறு என்ன வேண்டும். வாழ்க! வாழ்க! வாழ்க!
புகைப்படங்களும் தொகுப்பும் நல்லா இருக்குதுங்க. :-)

முகிலன் said...

//குசும்பனுக்கு எச்சரிக்கை: இந்த படங்களில் இருக்கும் பதிவர்களை வைத்து எதும் கிண்டல் செய்ய நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்//

இது தான் சொந்தக்காசுல சூனியம் வச்சிக்கிறதா பாஸ்?

Jo Amalan Rayen Fernando said...

ஏன் பெண்கள் ஒரு சிலரே?

ஜெயமோகன் என்ன பேசினார்?

Mitr Friend - Bhushavali said...

Good coverage!!!

In search of Sanjeevani herb to Konganar Cave
The White Dress to Work

மயில் said...

மாண்புமிகு சஞ்சய்காந்தி அவர்கள் கலந்துக் கொண்டார்.//

இதுக்குமேல இதை படிச்சுதொலையனுமா?

மயில் said...

செல்வெந்திரன் பதட்டம் இல்லாமல் இயல்பாய் தொகுத்து வழங்கினார். டிவிக்கு போங்க பாஸ்..//

இப்படி ஒரு வழி இருக்கா? ஊரை விட்டு துரத்த?

மயில் said...

குசும்பனுக்கு எச்சரிக்கை://

இதுக்கு பேருதான் புள்ளையும் ஆட்டி, கிள்ளியும் விடரது :)))

மயில் said...

ரொம்ப தேடினேன், உங்க போட்டா ஒண்ணு கூட இல்லை :(

ஜாக்கி சேகர் said...

குசும்பனுக்கான எச்சரிக்கை டாப்..

காயத்ரி சித்தார்த் said...

//மாண்புமிகு சஞ்சய்காந்தி அவர்கள் கலந்துக் கொண்டார்.. //

த்தூ...

காயத்ரி சித்தார்த் said...

இந்த தடவையும் முதல் வரிசைல துண்டைப் போட்டு எல்லாந் தெரிஞ்சவன் மாதிரியே மூஞ்ச வெச்சிட்டு உக்காந்திருப்பீங்களே?? பாவம் ஜெமோ.. :)

காயத்ரி சித்தார்த் said...

"அந்திக் கருக்கலில்
திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை."

- கலாப்ரியா

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஈயால் எந்த‌ அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு நிகழ்ச்சி கவனிக்கப்பட்டிருக்கிறது. :-) தாங்ஸ் பார் தி போட்டோஸ் சஞ்சய்.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

காயத்ரி சித்தார்த் said...
இந்த தடவையும் முதல் வரிசைல துண்டைப் போட்டு எல்லாந் தெரிஞ்சவன் மாதிரியே மூஞ்ச வெச்சிட்டு உக்காந்திருப்பீங்களே?? பாவம் ஜெமோ.. :)
//

ROTFL.!

☼ வெயிலான் said...

// இந்த தடவையும் முதல் வரிசைல துண்டைப் போட்டு எல்லாந் தெரிஞ்சவன் மாதிரியே மூஞ்ச வெச்சிட்டு உக்காந்திருப்பீங்களே?? //


அதே! அதே! அதே!
அதெப்படி கரெக்டா சொல்றீங்க காயத்ரி? :)

குசும்பன் said...

மாம்ஸ் கலாப்பிரியா என்பது பெண் இல்லையா மாம்ஸ்?

சின்ன அம்மிணி said...

காயத்ரி கமெண்டுக்கு நல்லா சிரிச்சேன் :)

அன்புடன் அருணா said...

/9 மனி முதல் 12 மணி வரை மின் தடை. ஊட்ல குந்திகினு இன்னா தான்யா செய்றது/
அதானே பார்த்தேன்!

அஹமது இர்ஷாத் said...

தலைப்பு பார்த்து வந்தேன்....

தாரணி பிரியா said...

இலக்கியவாதி ஆகிட்டே வரும் சஞ்சய் இப்படி கூட தலைப்பு வச்சு இருக்கலாம்

செல்வேந்திரன் said...

இலக்கிய சிங்கங்கள் எழுதுவார்கள் // யோவ், என்னைய சீண்டறதே உங்க குரூப்புக்கு வேலையாப் போச்சி... ஏற்கனவே அடிச்சது பத்தாதா :))

வரவேற்புரை நிகழ்த்தியது நமது நம்பிக்கையின் உதவி ஆசிரியர் கனகலெட்சுமி. அவரும் பிளாக்குகிறார். http://kanagalakshmanan.blogspot.com/

கோவை வலைத் தொகுப்பில் இவரையும் மரபின் மைந்தன் முத்தைய்யாவையும், வா.ஸ்ரீனிவாசனையும் இணைக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

அருமையான விழாத் தொகுப்பு!

SanjaiGandhi™ said...

நன்றி கேபிள்ஜி

நன்றி சித்ரா.. இதுக்கே அடுத்த வருஷம் உங்க பேர் டைம்ஸ் லிஸ்ட்ல வர வச்சிடலாம்ங்க :)

நன்றி முகிலன்.. சொந்த செலவுல நமக்குத் தான் சூனியம் வச்சிக்கக் கூடாது.. அடுத்தவங்களுக்கு வைக்கலாம்ல :)

நன்றி ஜோ.. ஜெமோ, கலாப்ர்யாவை வாழ்த்திப் பேசினார்.. பெண்கள் வருகை பற்றி விழா ஏற்பாட்டாளர்களைத்தான் கேட்கனும்..

நன்றி புஷா..

நன்றி மயில் :)

நன்றி ஜாக்கி.. கடமை முக்கியம் அல்லவா? :)

SanjaiGandhi™ said...

காயத்ரி, வர வர உனக்கு பயமே இல்லாம போய்டிச்சி.. கவனிச்சிக்கிறேன்.. :) முன்னாடி உட்காரலைனா எப்டி போட்டோ எடுத்து குசும்பனுக்கு அனுப்பி இருக்க முடியுமாம்? :)) அந்தக் கவைதைக்கு நன்றி.. அனைவருமே அதைக் குறிப்பிட்டார்கள்..

நன்றி ஆதி.. :) காயத்ரி கமெண்டுக்கு சிரிப்பா? அந்தம்மாவை கைல பிடிக்க முடியாதே.. :(

வெயிலான்.. பப்ளிக்.. பப்ளிக்.. :)

குசும்பன், மாமா, பெண்ணாவே இரும்ந்தாலும் கூட 60 வயசு ஆகுது மாம்ஸ்.. ஓவர் இமேஜினேஷன் ஒடம்புக்கு ஆகாது.. :))

நன்றி சின்ன அம்மினி அக்கா.. கிர்ர்ர்ர்ர்ர்..

நன்றி அருணாக்கா.. :)

நன்றி இர்ஷாத்.. அதுக்குத்தானே இப்டி தலைப்பே :)

நன்றி தாரணி அக்கா :)

நன்றி செல்வா.. இணைச்சிடுவோம்..

கோவை அரன் said...

உங்கள் போட்டோக்கள் கைவசம் உள்ளன , குசும்பனின் மெய்ல் ஐடியும் :)

கொல்லான் said...

எங்க ஊர்ல புல்லா பவர் கட். நாங்க இன்னாப்பா பண்றது?

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget