May 12, 2010

நோ.. ஐயாம் பாவம்...

ரொம்ப நாளாச்சே.. கொஞ்சம் நம்ம ப்ளாக் பக்கம் யாரெல்லாம் ஒதுங்கி இருக்காங்கன்னு வேடிக்கைப் பார்க்கலாம்னு தோணுச்சி.. காசாப் பணமா.. பார்த்துடுவோம்.. எந்த மாசத்துல எவ்ளோ பேர் எங்க இருந்து எப்டி வந்திருகாங்கன்னு பார்த்து முடிச்சதும், எதை எல்லாம் தேடி வந்திருக்காங்கன்னு பார்த்தேன். இருக்கிறதுலையே இதான் ரொம்ப இண்ட்ரஸ்டிங் ஏரியா.. :

  • சுற்றுலாவைத் தேடி போன வருஷம் 24 பேர் இந்த வருஷம் 83 பேர்..
  • ப்ரியாவைத் தேடி போன வருஷம் 13 பேர் இந்த வருஷம் 81 பேர்.. கிடைச்சாங்களா ஜனங்களே? :)
  • புதிய தலைமுறையத் தேடி 89 - 57.. நாங்கல்லாம் புதிய தலைமுறை ஆளுங்களாக்கும்..
  • சுற்றுலாத்தலங்களைத் தேடி 35 பேராம்..
  • நெல்லைத் தேடி 10 - 25
  • முத்தம் கேட்டு 12 - 17 ( இதை எல்லாமாடா இணையத்துல தேடுவீங்க.. பயலுக ரொம்பக் காஞ்சிப் போய் இருக்கானுங்க போல.. :))
  •  அம்மாவைத் தேடி 2 - 12 .. 
  • குற்றம்னு தேடி கொஞ்சம் பேர் வந்திருக்காங்க.. இங்க வந்து தான் ஃபீல் பண்ணி இருப்பாங்க.. தேடினது எவ்ளோ பெரிய குற்றம்னு..
  • நட்சத்திரம்னு தேடி இருக்காங்க.. கூகுள் கரெக்டா வழி காட்டி இருக்கு.. :)
  • கதறக் கதறத் தேடி 2 பேர் வந்திருக்காங்க.. :)
  • நன்றி, நெல்பயிர், காடு, விவசாயம் இன்னும் என்னென்னவெல்லாமோ தேடி வந்திருக்காங்க.. மொத்தம் 465 வார்த்தைகளைத் தேடி வந்திருக்காங்க...
எல்லாம் சரி தான்.. ஆனா இன்னொன்னைத் தேடியோ அல்லது அதை செய்யவோ இங்க கொஞ்சம் பேர் வந்திருக்காங்க..அது..........

”தற்கொலை” என்று தேடி இருக்காங்க.. கொய்யால சாவுங்கடான்னு இங்க அனுப்பி வச்சிருக்கு கூகுள்.. போன வருஷம் 12 பேரும் இந்த வருஷம் 8 பேரும் இப்டி தற்கொலைப் பண்ணிக்க வந்திருக்காங்க.. பாவம் யாரு பெத்த புள்ளைங்களோ..:((

19 comments:

தமிழ் பிரியன் said...

முக்கியமான குறிச் சொற்கள் சிலவற்றைக் காணவில்லையே?... ;-)))
ஜெ.மோவின் சில வாரங்களுக்கு முந்திய பதிவில் அதை எல்லாம் கொடுத்து இருந்ததாக நினைவு.. ;-) வாடை அடிக்குதோ?

ராமலக்ஷ்மி said...

நல்ல தலைப்பு நல்ல பதிவு:)))!

கபீஷ் said...

ரொம்ப பிஸியா சஞ்சய்?

வால்பையன் said...

இதெல்லாம் எப்படி பார்க்குறது சொல்லி கொடுங்களேன்!

செந்தழல் ரவி said...

ரூம் போட்டு யோசிப்பியா மாமா ? என்ன ஒரு அறிவு..

மயில் said...

கூகுள்க்கு கூட தெரிஞ்சிருக்கு, ஈஸியா எப்படி தற்கொலை பண்ண வைக்கறதுன்னு :)) து

ஷர்புதீன் said...

:)

அன்புடன் அருணா said...

ஹாஹாஹாஹா! கலக்கல்ஸ்!

மாதேவி said...

:)))

சந்தனமுல்லை said...

:))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹிஹி.. சரியாத்தான் வந்துருக்கானுவோ..

ஆமா இதெல்லாம் எப்பிடி பாக்குறது மாமா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தற்கொலை..

பொருத்தமானதுதான்..!

ஆனா கொஞ்சம் பேர்தானா..?

Chitra said...

”தற்கொலை” என்று தேடி இருக்காங்க.. கொய்யால சாவுங்கடான்னு இங்க அனுப்பி வச்சிருக்கு கூகுள்.. போன வருஷம் 12 பேரும் இந்த வருஷம் 8 பேரும் இப்டி தற்கொலைப் பண்ணிக்க வந்திருக்காங்க.. பாவம் யாரு பெத்த புள்ளைங்களோ..:((


....ha,ha,ha,ha,ha.....

முகிலன் said...

// மயில் said...
கூகுள்க்கு கூட தெரிஞ்சிருக்கு, ஈஸியா எப்படி தற்கொலை பண்ண வைக்கறதுன்னு :)) து
//

kanna pinnaanu repeatttttttuuuuuuuu

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொய்யால சாவுங்கடான்னு இங்க அனுப்பி வச்சிருக்கு கூகுள்//

:)))))

SanjaiGandhi™ said...

வால் & ஆதி மாமனுக்கு,

கூகுள் அனலிடிக்ஸ் டூல் பயன்படுத்தி இதைப் பார்க்கலாம்.. கடந்த ஆண்டே இதைப் பற்றி எழுதி இருக்கிறேன்.. வால் அந்தப் பதிவை படிச்சி கமெண்டும் போட்டிருக்கிறார்..
மீள்பதிவு இங்கே
http://www.blog.sanjaigandhi.com/2010/05/google-analytics.html

Heam said...

சில பேர் தற்கொலைக்கு கூகுளே தேடி வராங்க .. நம்ம எல்லாம் நேர இங்கயே வந்துடுறோம் அவ்ளோ தான் .. டிக்கெட் வாங்கி விஜய் படம் பார்க்குறது இல்லையா அப்படி தான் இதுவும்

கொல்லான் said...

//கொய்யால சாவுங்கடான்னு இங்க அனுப்பி வச்சிருக்கு கூகுள்..//

ஐயோ ஐயோ...

//சில பேர் தற்கொலைக்கு கூகுளே தேடி வராங்க .. நம்ம எல்லாம் நேர இங்கயே வந்துடுறோம் அவ்ளோ தான் .. டிக்கெட் வாங்கி விஜய் படம் பார்க்குறது இல்லையா அப்படி தான் இதுவும்//

சூப்பருங்கண்ணா.

*இயற்கை ராஜி* said...

:-)

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget