May 22, 2010

ஏர் இந்தியா - மங்களூர் விமான விபத்து!



படம் உதவி: நன்றி என் டி டிவி

துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 158 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் காயம் இல்லாமல் தப்பித்துவிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய விமான விபத்து இது. 160 பயணிகள், 2 விமான கேப்டன்கள், 4 விமான பணிப்பெண்கள் பயணித்துள்ளனர்.
158 பேர் குடும்பத்தை நினைத்தால் கொடுமையாக இருக்கிறது. என்ன சொல்லன்னு தெரியல. இதில் 19 சிறுவரகளும், 4 சின்ன குழந்தைகளும் அடக்கம். தீக்கிரையாகி சாகறது ரொம்ப கொடுமை இல்லயா.
:-(((




15 comments:

குசும்பன் said...

எத்தனை கனவுகளோடு வெளியில் அவர்களின் சொந்தகள் காத்துக்கொண்டு இருந்திருக்கும், எத்தனை ஆசையோடு இவர்கள் இங்கிருந்து சென்று இருப்பார்கள்:(((

கபீஷ் said...

அதே தான் குசும்பன். யோசிச்சு கூட பாக்க முடியல அவங்க நிலைமையை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குசும்பன் said...

எத்தனை கனவுகளோடு வெளியில் அவர்களின் சொந்தகள் காத்துக்கொண்டு இருந்திருக்கும், எத்தனை ஆசையோடு இவர்கள் இங்கிருந்து சென்று இருப்பார்கள்:(((///

hm :((

Chitra said...

May their souls rest in peace.

Its a very sad news.

ர‌கு said...

ரொம்ப‌வும் வ‌ருத்த‌மான‌ விஷ‌ய‌ம், இனிதான் blame-games ஆர‌ம்பித்து கேவ‌ல‌மான‌ அர‌சிய‌ல் வெளிப்ப‌ட‌ ஆர‌ம்பிக்கும்

அமைதி அப்பா said...

தொலைக்காட்சியில் பார்த்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

மங்களூர் சிவா said...

மிகுந்த துயருடன்

மங்களூர் சிவா

முகிலன் said...

ரொம்ப கஷ்டமா இருக்கு..

அவங்க குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

மயில் said...

அவங்க குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

ரோகிணிசிவா said...

காதல் கணவன்,
பரம்பரையின் பேர் சொல்லப்பிறந்த பேரன் முகம் ,பொம்மை வாங்கி வரும் தாயும் தந்தையும் ,அண்ணன் கொண்டு வரும் வரதட்சணை ,கொள்ளிவைக்க வரும் மகன் ,எப்படி பல கனவுகளின் விலை இரண்டு லட்சம் மட்டும்தான்,பரவாயில்லை நல்ல விலை தான் ,வாழ்க நமது அரசாங்கம்,வளர்க ஜனநாயகம்

Jennifer said...
This comment has been removed by the author.
UFO said...

இந்த துயரமான சூழ்நிலையில் கனத்த மனநிலையில் இதுவரை யாருமே விவாதிக்காத ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி அவசியம் சொல்ல வேண்டி உள்ளது.

ஏர் இந்தியா பற்றி அனைவருக்குமே தெரியும். இதுவரை அது அரியான நேரத்தில் கிளம்பியதும், வந்தடைந்ததும் மிக மிக அரிது. சரியான நேரத்தில் கிளம்பினாலும் சரியான நேரத்தில் சேர்வது மிக அரிது. பலமுறை "ஒரு நாள் தாமதமெல்லாம்" அதற்கு சர்வசாதாரணம். திடீரென்று ரூட் மாத்தி விடுவது, 'திடீர் ரத்து' இதுவும் அடிக்கடி நடப்பதுதான். ஆறு மாதங்களுக்கு முன்னால் தமாமில் முப்பத்து எட்டு பேர் போர்டிங் பாஸ் வாங்கியவர்களுக்கு சென்னை விமானத்தில் சீட் இல்லை!!! காரணம் : வந்தது சிறிய விமானம்.(??!)
பல முறை பல நாட்கள் விமானிகள் வேலை நிறுத்தம்... விமானத்தில் சில சமயம் எ/சி வேலை செய்யாமல் போய்விடுதல்... சரியான உபசரிப்பிண்மை... வயதான ஏர் ஹோஸ்டஸ்(?) என்று எவ்வளவோ பேருக்கு ஏர் இந்தியாவின் மீது வெறுப்பு இருகிறது. இவை எல்லா வற்றையும் சகித்துக்கொள்ளலாம்.... சொல்லப்போனால் இவைஎல்லாமும் ஒன்றுமே இல்லை...

ஆனால்...

ஒன்றே ஒன்றை மட்டும் மன்னிக்கவே முடியாது... அதை சகித்துக்கொள்ளவே முடியாது... கை மீறி போய் விட்ட அதை யாராலுமே தடுக்க முடியாதா? அது விமானிகள் நினைத்தால் மட்டுமே முடியும்...

அது என்ன?

அது...

விமானிகள் குடித்து விட்டு போதையில் விமானத்தை ஓட்டுவது... (???!!!)

ஆம்..! கொடுமை...!
இதை யாரிடம் போய் சொல்லி அழுவது..?

இப்போது சொல்லுங்கள்:

"""அவ்வளவு அனுபவம் வாய்ந்த விமானிகள், 'இது சிறிய டேபிள் டாப் ரன்வே என்று தெரிந்தும்- பிரேக் கண்ரோல் கிடைக்காது என்று நன்கு அறிந்தும்' பாதி ரன்வேயில் இறக்குவார்களா?"""

நம்பவில்லையா?

இந்த சுட்டியில் சென்று படியுங்கள்: http://thatstamil.oneindia.in/news/2009/10/20/india-drunk-pilot-delays-ai-fight-to-new-york.html
முக்கியமாய் செய்தியின் கடைசி வரி... தயவு செய்து சிரிக்காதீர்கள்... என் நெஞ்சு வெடித்து விடும்...

*இயற்கை ராஜி* said...

:-((

இராமசாமி கண்ணண் said...

(-:

SanjaiGandhi™ said...

எத்தனை கனவுகளோடு வெளியில் அவர்களின் சொந்தகள் காத்துக்கொண்டு இருந்திருக்கும், எத்தனை ஆசையோடு இவர்கள் இங்கிருந்து சென்று இருப்பார்கள்:(((

:(

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget