------------------------------------------------------

http://www.google.com/analytics/ என்ற இணையதளத்துக்கு போய் கூகுள் கணக்கை வைத்து லாகின் பண்ணுங்க. அல்லது ஏற்கனவே கூகுள் கணக்கில் லாகின் செய்து இருந்தால் , http://www.google.com/analytics/ முகவரிக்கு சென்றதும் கிடைக்கும் பக்கத்தில் Access Analytics என்பதை தேர்வு செய்யவும். கூகுள் கணக்கு இல்லாதவர்கள் ஒன்றை ஆரம்பித்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதில் வலது பக்கம் + Add new account என்பதை தேர்வு செய்யவும். அடுத்து தெரியும் பக்கத்தில் உள்ள ”You are just a few steps from Google Analytics. Click on the Sign Up button to get started.” என்பதன் கீழே இருக்கும் Sign Up பொத்தானை அமுக்கினால் அடுத்தடுத்து வரும் பக்கங்களில் கேட்கும் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள். பிறகு ஒப்பந்தத்தை எற்றுக் கொள்வதாக உறுதி அளித்து தொடருங்கள்.
அடுத்தப் பக்கத்தில் கிடைக்கும் நிரலியை வெட்டி உங்கள் வலைப்பக்கத்தின் நிரலிகளுக்குள்.../body.. ;என்பதற்கு மேல் ஒட்டி விடவும். அம்புட்டு தான்.சரியாக சேர்த்திருக்கிறீர்களா என்பதை அறிய
http://www.google.com/support/analytics/bin/answer.py?hl=en_US&answer=55480&utm_id=ad
அப்பாலிக்கா வித விதமா விவரங்கள் பார்க்க வேண்டியது தான்.. :)


நிரலியை(script) உங்கள் தளத்தில் சேர்த்த 24 மனி நேரங்களுக்குப் பின் உங்கள் தளம் பற்றிய பல்வேறு தகவல்கள் இங்கு சேமிக்கப் படும். எதைத் தேடி வந்திருக்கிறார்கள் என்ற பகுதி ரொம்பவே சுவாரஸ்யமானது.. :) எஞ்சாய்..
Posted by...
4 comments:
நல்ல பகிர்வு சஞ்சய். நன்றி.
பலருக்கும் உபயோகமாகும் இப்பகிர்வு.
முன்னர் பதிவிட்ட போதும் பார்த்த நினைவு:)! ஆனால் அப்போது செய்து பார்க்கவில்லை. இனிதான் முயற்சிக்கப் போகிறேன். நன்றி!
நல்ல பதிவு.
லே அவுட்-ல் சைட் பார் சொல்லிக்காம கீழே போயிருக்கே ? அது ஏன்? என்னுடைய தளத்திலும் அவ்வாறே அதை எப்படி சரி செய்வதெனத் தெரியுமா ?
நன்றிங்க முயன்று பார்க்கிறேன்
Post a Comment