விஸ்வநாதன் ஆனந்த்...
சதுரங்க ராஜா.. செஸ் விளையாட்டில் இந்தியாவின் பெருமையை உலகளவில் அறிய செய்தவர்.. தன் அபார திறமையால் இன்னும் தொடர்ந்து உலக செஸ் மகுடத்தை சூடிக் கொண்டே இருக்கிறார்.. சில நாட்களுக்கு முன்( மே 11) நடந்து முடிந்த உலக சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக வென்று இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி இருக்கிறார்..வாழ்த்துகளும் பாராட்டுகளும் திரு ஆனந்த் அவர்களே..ஆங்கில ஊடகங்கள், செஸ் விளையாட்டு ராஜா என அவரைக் கொண்டாடின. தமிழ் ஊடகங்கள் செக்ஸ் விளையாட்டு ராஜா நித்தியானந்தனைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன இன்னும்..
ஆனந்தின் சில சாதனைகளின் பட்டியல் :
- 6 வயதில் செஸ் விளையாட ஆரம்பித்த ஆனந்த் தேசிய சப் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.(1983 - 84)
- 1984ல் உலக சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம்.
- 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆசிய சாம்பியன்.
- 1987 சர்வதேச கிராண்ட் மாஸ்டரானார்.
- 1998ல் உலகத் தரவரிசைப் பட்டியலில் 2வது இடம்.
- 2000ல் முதல் உலக் சாம்பியன் பட்டம்.
- 6 கம்ப்யூட்டர்களுடன் ஒரே நேரத்தில் விளையாடி 4 க்கு 2 என்ற அளவில் வென்றார்.
- 3 முறை செஸ் ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.
- இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதை முதலில் பெற்றவர்.
- அர்ஜுனா, பத்மஸ்ரீ( மிக இளம் வயதில் பெற்றவர்), பத்ம பூஷன், ஸ்போர்ட் ஸ்டாரின் “ 1995ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர்” ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
- ஆனந்தின் ”My best games of Chess" என்ற புத்தகம் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் வெளியிடப் பட்டது.
- உலக சாம்பியன் பட்டம்- 2000, 2007, 2008, 2010
- கோரஸ் சூப்பர் கிராண்ட்மாஸ்டர் டோர்னமண்ட் - 1989, 1998, 2003, 2004, 2006)
- கோர்சிகா மாஸ்டர்ஸ் - 2000, 2001, 2002, 2003, 2004
- செஸ் உலக்க் கோப்பை - 2000, 2002
- இன்னும் ஏராளமான போட்டிகளையும் விருதுகளையும் வென்றுள்ளார்..

16 comments:
நல்ல பகிர்வு, பாராட்டுக்கள் சஞ்சய்
வாழ்த்துக்கள் ஆனந்த்ஜி! நன்றி சஞ்சு!
ஓ.. மனித குலத்தை உய்விக்க வந்த செங்கொடி மாணிக்கங்களே எங்கே சென்று விட்டீர்கள்? ஆனந்த் ஒரு கார்பரேட் பினாமி போன்ற கமெண்ட்களை இங்கே வந்து கொட்டிச் செல்லுங்கள்.. வருக! வருக!
ஆனந்துக்கு பாராட்டு.. நன்றாக தொகுத்த சஞ்சய்க்கும் என் நன்றிகள்..
ஒரு பார்ப்பனர் கண்டுபிடித்த விளையாட்டு , இது பார்ப்பனர் வெற்றிபெறவே கண்டுபிடிக்கப்பட்டது என்பது இந்தப்பார்பனரின் வெற்றி உறுதிப்படுத்துகிறது. இப்படிக்கு கமில் மாமியா
பாலோ அப்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கமில் மாமியா
சுருக்கமாக சுருக்கென்று சொல்லியுள்ளீர்கள் சஞ்சய்..
ஆனந்த் என்ற அற்புத வீரனுக்கு வாழ்த்துக்கள்.. :)
வாழ்த்துக்கள் ஆனந்த்
நல்ல பகிர்வு, பாராட்டுக்கள் சஞ்சய்.
congrats Grand Master Anand .. pagirvukku nandri sanjai , enna kodumaina intha news a irutadippu senchu , cricket la thotha news a perusa poduranga namma newspaper la.
நாம் பெருமைபடவேண்டிய வெற்றி
வாழ்த்துக்கள்
விஜய்
நல்ல பகிர்வுக்கு நன்றி சஞ்சய்.
WISHES ANAND!
and one article about ANAND in my blog too...
:)
நல்ல பகிர்வு, பாராட்டுக்கள் சஞ்சய்
நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படக்கூடிய விடயம்......
உங்கள் பகிர்வுக்கு நன்றிகள்.
ஒவ்வொரு தமிழனையும் சாதனையாளராக்குவோம்.
Post a Comment